திங்கள், 31 அக்டோபர், 2016

இந்திய தொழிலாளிவர்க்க இயக்கம் : அன்றும், இன்றும் எழுதியது ஹேமா

இந்திய தொழிலாளிவர்க்க இயக்கம்: அன்றும் இன்றும்

அறிமுகம்
இந்திய தொழிலாளி வர்க்க இயக்கம் இன்று ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளதுதாராளமய உலகமயமாக்கலின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியுள்ளதுஇந்தியாவில் இந்துத்வா சக்திகளின் வெறியாட்டத்தையும் அடையாள அரசியலின் பிளவுபடுத்தும் முயற்சிகளையும்இனம் மற்றும் சதி அடிப்படையில் உழைப்பாளி மக்களை பிரிக்க முயலும் சக்திகளையும் சந்திக்கிறதுஇத்தருணத்தில் அது கடந்துவந்த பாதையையும் எதிர்நோக்கும் சவால்களையும் அலசிப் பார்க்க வேண்டியுள்ளதுஇக்கட்டுரையில்இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் தொழிலாளி வர்க்க இயக்கம் ஆற்றிய பங்கையும் அதன் சமகால சவால்களையும் சுருக்கமாக காண்போம்.
பிரட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியா முழுமைக்கும் பரவியது 1757பிளாசி யுத்தத்திலிருந்து என்று பொதுவாக கருதப்படுகிறது.அடுத்த நூறு ஆண்டுகளில் காலனி ஆதிக்கத்தின் தாக்கம் இந்தியாவிலிருந்து வளங்களை நிலவரி மூலமும் வேறு பல வழிகளிலும் சுரண்டி பிரிட்டிஷ் முதலாளித்வ வளர்ச்சிக்கு பயன்படுத்தியதும்இங்கிலாந்தில் தொழில்புரட்சி மூலம் உருவாகிய நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்தி பிரிட்டிஷ் முதலாளிகள் இந்திய சந்தையை கைப்பற்றி உள்நாட்டு தொழிலை அழித்ததும் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டிருந்ததுஆயிரத்து எண்ணூற்று ஐம்பதுகளில் தான் ரயில்வே கட்டுமானம் துவங்கி பரவியதுஇதையொட்டி பிரிட்டிஷ் முதலாளிகள் இந்தியாவில் உற்பத்திசார் முதலீடுகளை (ஜவுளி ஆலைகள்தேயிலை மற்றும் காபி தோட்டங்கள்ரப்பர் எஸ்டேட்டுகள்ரயில்வே கட்டுமானத்துடன் இணைந்த இன்ஜினியரிங் தொழில்கள் போன்றவற்றில்கூடுதலாக மேற்கொண்டனர்இதனை தொடர்ந்து இந்திய முதலாளிவர்க்கம் ஒன்றும் உருவாகியதுடாடா 1870 இல் நாக்பூர் நகரில் அன்றைய பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவின் பெயரில் ஜவுளி அல்லை ஒன்றை நிறுவினார்இதற்கான மூலதனம் ஏற்கெனவே டாடா செய்து வந்த வணிக நடவடிக்கைகளில் இருந்து திரட்டப்பட்டது.வளர்ந்துவந்து கொண்டிருந்த இந்திய முதலாளிவர்க்கத்தின் அரசியல் கட்சியாக 1885 இல் இந்திய தேசீய காங்கிரஸ் உருவானது.
இவ்வாறு 1885 இல் நிகழ்ந்த முதலாளி வர்க்கத்தின் அரசியல் பிரவேசத்திற்குப்பின் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தான் – 192௦இல் தான் – அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் (ஏ ஐ டி யு சி )முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. 1860களில் ரயில்வே துறையிலும் 1870களில் துவங்கி ஜவுளி ஆலைகளிலும் அங்கும் இங்குமாக மிகுந்த போர்க்குணத்துடன் பல தொழிலாளர் போராட்டங்கள் நிகழ்ந்து வந்தனசொல்லப்போனால்எட்டு மணி நேர வேலை நாளுக்காக நிகழ்ந்த வீரமிக்க சிகாகோ நகர கிளர்ச்சிக்கு இருபத்திநான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கிழக்கு ரயில்வே தொழிலாளிகள் அதே கோரிக்கைக்காக சிறப்பான போராட்டத்தை நடத்தினர்ஆனால் இத்தகைய போராட்டங்கள் பெரும்பாலும் தன்னுணர்வு அடிப்படையில் நிகழ்ந்தனஒரு நவீன தொழிற்சங்கம் உருவானது முதல் உலகப்போர் காலத்தில் சென்னையில் பக்கிங்க்ஹாம் அண்ட் கர்நாடிக் மில்ஸ் தொழிற்சாலையில் தான். 1917 அக்டோபரில் வெடித்த ரஷ்ய புரட்சியின் தாக்கம் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பிரவேசத்திற்கு ஒரு உந்து சக்தியாக விளங்கியதுநாடு முழுவதும் ஆங்காங்கு இருந்த கம்யூனிஸ்டுகளும் இதர தொழிலாளிவர்க்க ஆதரவாளர்களும் இணைந்து எடுத்த முயற்சிகளின் விளைவாக 1920 இல் அகில இந்திய தொழிற்சங்க அமைப்பு உருவானது.
விடுதலைப்போராட்டத்தில் பங்கு
20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தேதொழிலாளர் இயக்கம்,அன்றைய விடுதலைப் போராட்டத்தின் தாக்கத்திற்கு உள்ளாயிற்றுசுதேசி இயக்கம் முழு வீச்சில் நடைபெற்றபோது தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களை பால கங்காதர திலகர் போன்ற தலைவர்கள் ஆதரித்துதொழிலாளர் கூட்டங்களில் உரையாற்றினர். 1908-ல் காலனி அரசு திலகருக்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்ததுஇதை எதிர்த்துபம்பாய்த் தொழிலாளர்கள் நாட்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.இதைப்பற்றிக் குறிப்பிட்ட லெனின்இந்திய உழைக்கும் வர்க்கம் உணர்வு பூர்வமாக மக்களைத் திரட்டிஅரசியல் போராட்டத்தை நடத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டதுஇனி பிரிட்டிஷாரின் ஆட்சி வீழ்ச்சி அடையும் நாள் நெருங்கிவிட்டது என்று பாராட்டினார்இந்த வேலை நிறுத்தத்தின்போதுபம்பாய் பஞ்சாலைத் தொழிலாளர்களோடு பம்பாய் நகர முனிசிபல் தொழிலாளர்களும் இணைந்து போராடினர்சிறிய கடை வைத்திருந்த கடைக்காரர்கள்பேராடும் தொழிலாளர்களுக்குக் குறைந்த விலையில் பொருட்களை விற்றனர்ஆனால்பெரு முதலாளிகளோ இந்தப் போராட்டத்தை எதிர்த்தனர்சிலர் ஆட்சியாளர்களுக்கு உதவியாகவே இருந்தனர்பெரு முதலாளிகளின் வர்க்கக் கண்ணோட்டத்தை இது தெளிவாகவே காட்டுகிறது.
1917-ல் நடந்த ரஷ்யப் புரட்சிசோவியத் குடியரசுகளில் தொழிலாளர் அரசை நிறுவியதுஇந்நிகழ்ச்சிஇந்தியா உட்பட உலகெங்கும் இருந்த தொழிலாளர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது.இதன்பின்னர்தொழிலாளர்களின் நிலைமையை மேம்படுத்தும் நோக்கத்துடன்கட்டுக்கோப்பான அணியுடன் கூடிய தொழிற் சங்கங்கள் உருவாயினஇவ்வாறு முதன் முதலாக உருவான தொழிற்சங்கம் “தி மெட்ராஸ் லேபர் யூனியன்”இது 1918-ல் சென்னயில் வாடியாசிங்கார வேலர் முதலானவர்களால் தொடங்கப்பட்டதுஇதைப் போலவே பம்பாயிலும் தொழிற்சங்கவாதிகள் சங்கங்களைத் தொடங்கினார்கள்.
ரஷ்யப் புரட்சியின் தாக்கமும்அதனால் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியும் சர்வதேச அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதுதொழிலாளர்களின் புரட்சிகரமான போக்கிற்கு ஒரு வடிகாலாய் அமையும் வகையில் அன்றைய சர்வதேச சங்கம்சர்வதேசத் தொழிலாளர் அமைப்பைஉருவாக்கியதுஇந்நிறுவனம் தொழிலாளர் நிலையை மேம்படுத்தும் நெறிமுறைகளையும் பரிந்துரைகளையும் உருவாக்கவும் உலகம் முழுவதும் உழைப்பாளி மக்களின் நிலைமைகள் குறித்து கவனம் ஈர்க்கவும் பயன்படும் என்று பலரால் கருதப்பட்டதுசர்வதேசத் தொழிலாளர் அமைப்பிற்கு,இந்தியாவிலிருந்து பிரதிநிதிகளை பிரிட்டிஷ் அரசு பரிந்துரை செய்தபோதுஅதற்கு நாட்டில் கடுமையான எதிர்ப்புக்குரல் எழுந்ததுஇதன் பின்னர் தான் இந்தியா முழுவதையும் மையப்படுத்திய தொழிலாளர் அமைப்பு தேவை என்ற நோக்கத்துடன் “அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்” 1920-ல் மும்பையில் துவங்கப்பட்டதுஇதன் முதல் கூட்டத்திற்கு லாலா லஜபதிராய் தலைமை தாங்கினார் மற்றும் பல விடுதலைப் போராட்டத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
முதலாளி வர்க்கம் முப்பதாண்டுக்கும் அதிகமான அரசியல் அனுபவம் பெற்று விடுதலை இயக்கத்தில் தலைமை வகித்துவந்த போதிலும்அதன் இரட்டை தன்மை காரணமாகபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒருபுறம்குறிப்பாக காந்திஜி அவர்களின் வருகைக்குப்பிறகுமக்களை திரட்டும் பணியில் களம் இறங்கினாலும்மறுபுறம் தனது வர்க்க நலன் காக்கவும் உழைப்பாளி மக்களுக்கு எதிராகவும் அவ்வப்போது பிரிட்டிஷ் அரசுடன் சமரசமும் செய்து வந்ததுநீண்ட காலம் முழு விடுதலை என்ற கோரிக்கையைக் கூட காங்கிரஸ் இயக்கம் முன்வைக்கவில்லைஆனால் தொழிலாளிவர்க்கம் தனது அரசியல் பிரவேசத்தின் துவக்கத்திலேயே காலனி ஆதிக்கத்திலிருந்து இந்திய மக்களுக்கு முழு சுதந்திரம் என்ற முழக்கத்தை முன்வைத்தது. 1922 கயாவில் கூடிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கூட்டத்தில் கம்யூனிஸ்டுகள் (192௦இல் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டிருந்ததுஇந்தியாவில் சிறு சிறு கம்யூனிஸ்ட் குழுக்களே இருந்தனர் என்ற போதிலும்) “பூரண விடுதலைக்கான மேடை” என்ற ஆவணத்தை விநியோகித்தனர்.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கம்யூனிஸ்ட் இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறியும் நோக்குடன் அடுத்தடுத்து 1923 இல் பெஷாவர் சதி வழக்கு, 1924 இல் கான்பூர் சதிவழக்கு, 1929 இல் மீரட் சதி வழக்கு என்று கம்யூனிஸ்ட் இயக்கத்தலைவர்கள் மீது தொடுத்ததுஅவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.ஆனாலும்அரசின் அடக்குமுறையை எதிர்கொண்டு தொழிற்சங்க இயக்கம் வளர்ந்தது. 1929 முதல் 1939 வரையிலான பத்து ஆண்டுகளில் உலக முதலாளித்வ வல்லரசு நாடுகளில் பெரும் பொருளாதார வீழ்ச்சி நிலவியதுஇது காலனி நாடுகளையும் கடுமையாக பாதித்ததுஇச்சூழலில் தொழிற்சங்க இயக்கமும் விவசாயிகள் இயக்கமும் வலுப்பெற்றனஇதே காலத்தில் சோஷலிச சோவியத் ஒன்றியம் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறியதும் தொழிற்சங்க இயக்கத்தையும் தொழிலாளிவர்க்க அரசியலையும் முன்னெடுத்துச் செல்ல உந்துசக்தியாக இருந்தது.
மூவகை சுரண்டல்
19-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பிரிட்டனில் தொழிற்புரட்சி உச்சகட்டத்தை அடைந்ததுஐரோப்பிய கண்டத்திலும் உலக அளவிலும் பிரிட்டனுடன் போட்டியிடும் அளவிற்கு பிறநாடுகள் அன்று இல்லைஇதனால் பிரிட்டிஷ் முதலாளிகள் ஏராளமான உபரிகளை ஈட்ட முடிந்ததுஇந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளில் இருந்தும் உபரிகள் கொள்ளையடிக்கப்பட்டு பிரிட்டிஷ் முதலாளித்வ வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினஇந்தியாவில் இருந்து பண்டங்களை குறைந்த விலைக்கு வாங்கி பிற நாடுகளில் கூடுதல் விலைக்கு விற்பதற்கும்பிரிட்டிஷ் நாட்டு ஆலைகளில் நவீன தொழில்நுட்பத்தில் மலிவாக உற்பத்தி செய்யப்பட பண்டங்களை இந்திய சந்தைகளில் விற்பதற்கும் போக்குவரத்துவசதிகள் தேவைப்பட்டனகாலனி அரசு ரயில்வே கட்டுமான வசதிகளை 1850களில் உருவாக்கத் துவங்கியது.இவ்வளர்ச்சி போக்குகளை தொடர்ந்து தம்மிடம் இருந்த ஏராளமான உபரிகளின் ஒரு பகுதியை பிரிட்டிஷ் முதலாளிகள் இந்தியாவில் முதலீடு செய்ய துவங்கினர்பின்னர் இந்திய முதலாளிவர்க்கமும் உருவாக்கி தொழில் முதலீடுகளை மேற்கொண்டதுஇவற்றின் விளைவாக இந்தியாவில் ஒரு நவீன உழைக்கும் வர்க்கம் உருவாயிற்றுபொதுவாகப் பெருந்தொழில்கள் அன்றைய துறைமுகங்களான பம்பாய்,சென்னைகல்கத்தாஆகிய நகரங்களை ஒட்டியே இருந்ததால்,இப்பெருநகரங்களை ஒட்டியே இந்தியாவின் நவீன உழைக்கும் வர்க்கமும் உருவாயிற்று.
தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர்குறைந்த கூலி,மோசமான சூழலில் பணிபுரியும் கட்டாயம்நீண்ட நேரப்பணிஎந்த விதமான நியாயமான சலுகைகளோநஷ்ட ஈடோஎதுவுமே இல்லாத நிலை – இதுதான் அன்றைய பணி நிலைஇந்தக் கொடுமைகள் தாங்காமல்தொழிலாளி தப்பி ஓட நினைத்தால்,சவுக்கடி போன்ற கடுமையான தண்டனைஇத்தகைய கொடுமைகளைபிரிட்டிஷ் அரசு நியமித்த குழுக்களே விமரிசித்துள்ளனஇந்தச் சூழலில்தான்உழைப்பாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டுத் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டன.
துவக்க காலத்தில் தொழிலாளர் போராட்டங்கள் தன்னிச்சையாக,முன்னேற்பாடுகள் ஏதுமின்றி வெடித்தனவேலை நிறுத்தங்கள் மிகக் குறுகிய காலத்திற்குத்தான் நீடித்தனஇவை மிகக் கொடூரமாக அடக்கப்பட்டனசில சமயங்களில் ஓரிரு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் நாடு முழுதும் நிலவரி விதித்தும் இந்திய கைத்தொழில்களை ஆலை உற்பத்தியால் அழித்தும் ஏராளமான உபரிகளை ஆண்டு தோறும் அபகரித்துச் சென்றது.அதே சமயம் ஜமீன்தார்களுடனும் பெரும் நிலக்கிழார்களுடனும் சிறு குறு மன்னர்களுடனும் நல்ல உறவை வைத்துக்கொண்டு,நிலப்பிரபுத்வ சுரண்டலை தாராளமாக அனுமதித்ததுபிரிட்டிஷ் முதலாளிகளும்வளர்ந்து வந்து கொண்டிருந்த இந்திய முதலாளிகளும் இந்திய உழைப்பாளி மக்களை சுரண்டுவதில் முனைப்பாக இருந்தனர்இவ்வாறாகஇந்திய தொழிலாளி வர்க்கம் நிலப்ரபுத்வ சுரண்டல்காலனீய சுரண்டல்முதலாளித்வ சுரண்டல் ஆகிய மும்முனை சுரண்டலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.நவீன ஆலைகளுக்கு ஆள் எடுப்பதில் இருந்த கங்காணி முறை சாதிமதமொழி மற்றும் பிரதேச அடிப்படையில் உழைப்பாளி மக்களை வலுவாக பிரித்து வைக்க உதவியதுஇப்பெரும் தடைக்கற்களுக்கு எதிராகத்தான் இந்திய தொழிலாளி வர்க்க இயக்கம் எதிர் நீச்சல் போட வேண்டியிருந்தது.
192௦களில் கம்யூனிஸ்டுகள் அமைப்பு ரீதியாக வளரத் துவங்கினர்.விடுதலைப் போராட்டத்தில் முழு மூச்சுடன் ஈடுபடத் துவங்கினார்கள்இதே காலத்தில் லெனினால் துவங்கப்பட்ட கம்யூனி°டு அகிலம் அவர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்ததுவிடுதலைப் போராட்டத்தைப் பற்றிக் கம்யூனி°டுகளுக்குத் தெளிவான பார்வை இருந்ததுகாங்கிர°நினைத்ததைப்போல்அமைதியான போராட்டங்களின் மூலம்,சுதந்திரம் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்உழைக்கும் மக்களின் வறுமையும்அவர்கள் மீதான ஒடுக்குமுறையும்நாடு விடுதலை பெற்றவுடன் தானாக மறைந்துவிடாது என்பதையும் உணர்ந்திருந்தனர்மேலும்விடுதலை என்பது சிறிது சிறிதாகக் கிடைக்கும் பொருளல்லவிடுதலைப் போராட்டம் ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக மாற்றப்பட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தனர்உழைக்கும் மக்களின் போராட்ட குணத்தை அறிந்திருந்த கம்யூனிஸ்டுகள்புரட்சிகரமான போராளிகளாக அவர்களை உருவாக்க முடியும் என்று நம்பினார்கள்இதனால்தான் நகர்புறத் தொழிலாளர்களையும்கிராமப்புற உழைக்கும் மக்களையும் திரட்டி தொழிலாளர் அமைப்புகளை அமைக்க முனைந்தனர்உழைக்கும் மக்களின் அமைப்புகள் நாட்டு விடுதலை மட்டுமின்றிஅனைத்து விதமான பிற்போக்கான நிலப்பிரபுத்துவ உறவுகளையும் உடைத்தெறியும் போராட்டத்தையும் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அம்மக்களைத் திரட்ட முனைந்தனர்.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல்உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளான கம்யூனிஸ்டுகள் 1921-லேயேநாடு முழு விடுதலை அடைய வேண்டும்டொமினியன் அந்த°து தேவையில்லை என்ற கோஷத்தை முதன் முதலில் உரத்துக்கூறினர்இதைத் தொடர்ந்து,விடுதலைப் போராட்டத்திலும்வர்க்கப் போராட்டத்திலும் அனைத்துப் பகுதி மக்களையும் இணைக்கும் வகையில், “செயல்பாட்டுக்கான பொது மேடை” அமைக்கப்பட்டு போராட்டத்திற்கான அறை கூவல் விடப்பட்டதுஇவற்றைத் தொடர்ந்து நடந்த வேலை நிறுத்தப் போராட்டங்களைக் கண்டு அதிர்ந்த பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறைகளை ஏவியதுதொழிற் சங்கங்களின் மீது முன்பு நாம் குறிப்பிட்ட சதி வழக்குகளைத் தொடுத்ததுதலைவர்கள் சிறையில் அமைக்கப்பட்டனர் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
தொடர்ந்து வந்த காலகட்டத்தில்தொழிற் சங்க இயக்கத்தில் பல பிளவுகள் ஏற்பட்டனஇவை இயக்கத்தைப் பலவீனப்படுத்தினாலும்வர்க்கப் போராட்டங்கள் தொடர்ந்தன.நாட்டின் விடுதலையில்தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பங்கு மிக முக்கியமானதுஅதிலும் 1945 முதல் 47 வரையில் நடைபெற்ற போராட்டங்கள் முக்கியமானவைஅப்போது இந்தியக் கப்பற்படை எழுச்சி நடந்தபோதுபம்பாய்த் தொழிலாளர்கள் அந்தப் போராட்டத்தை ஆதரித்தனர்.
மிக முக்கியமாகபோராட்டத்தில் பங்கு எடுக்காமல்மதவாத கருத்துக்களை பிரச்சாரம் செய்துமக்கள் ஒற்றுமையை குலைத்து காலனி அரசுக்கு சேவகம் செய்துவந்த ஆர் எஸ் எஸ் அமைப்பினருக்கு நேர்மாறாக தொழிலாளிவர்க்க இயக்கம்,உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் போராடிக்கொண்டேஏகாதிபத்திய எதிர்ப்பை முதன்மைப்படுத்தியதுபல்வேறு தேசீய இனங்களைபல மொழிகளைபன்முக பண்பாட்டை கொண்ட நாடு இந்தியா என்பதை அழுத்தமாக கூறியதுஅன்று முதல் இன்றுவரை தொழிலாளிவர்க்க தேசீயம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பையும்,அனைத்து தேசீய இனங்களின் சம உரிமைகளையும்மத சார்பற்ற அரசு அமைப்பையும் உயர்த்தி பிடித்துவந்துள்ளதுஇந்த பாரம்பர்யம் இன்று நாட்டுக்கு மிக அவசியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும்.
விடுதலைக்குப்பின்
விடுதலை போராட்ட காலத்தில் தொழிலாளர் நலனுக்கான இயக்கங்கள் காலனீய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை என்ற இலக்கோடும் இயக்கத்தோடும் கணிசமான அளவிற்கு இணைந்திருந்தனஎனவே தொழிலாளர் இயக்கங்களுக்கு இயல்பாக ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை இருந்தது.சீர்திருத்தவாத தொழிற்சங்க இயக்கங்கள் கூட ஓரளவிற்காவது இந்த விழுமியங்களைக் கொண்டிருந்தனஆனால் நாடு விடுதலை அடைந்த பின்னர்ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளும் சக்திகளும் தொழிலாளர் ஒற்றுமையை தமது வர்க்க நலனுக்காக உடைப்பதிலும் தமது அரசியல் நோக்கங்களுக்கான கருவியாக பயன்படுத்துவதிலும் முனைப்பாக இருந்தனர்.
விடுதலைக்கு முன் ஒரே அகில இந்திய மையத்தின்கீழ் தொழிற்சங்க இயக்கம் செயல்பட்ட நிலை மாறியதுஆளும் காங்கிரஸ் கட்சி விடுதலை நாள் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் ஏ ஐ டி யு சி யில் இருந்து பிரிந்து தனது தலைமையில் ஐ என் டி யு சி அமைப்பை ஏற்படுத்திஅதற்கு அரசின் ஆதரவையும் நல்கியதுவேறு சில அரசியல் கட்சிகளும் ஏ ஐ டி யு சி யில் இருந்து பிரிந்து சென்று தத்தம் தொழிற்சங்க மையங்களை ஏற்படுத்திக்கொண்டன.
நாட்டு விடுதலைக்குப் பின்னர்விடுதலை போராட்ட காலத்தில் தொழிலாளிவர்க்கத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில்தொழிலாளர் நலனுக்கான பல சட்டங்கள் இயற்றப்பட்டனகுறைந்த பட்ச கூலி சட்டம்இந்திய தொழிற்சாலை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் போன்றவை சில உதாரணங்கள்ஆனால் தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களின் அமலாக்கம் மிக பலவீனமாகவே இருந்ததுதொழிலாளர்களின் சம்பளம் மிகக் குறைவாகவே இருந்தது.
விடுதலைக்குப்பின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அப்போதைய மத்திய அரசுஐந்தாண்டுத் திட்டங்களை வகுக்கத் தொடங்கியதுபல பெருந்தொழில்களைத் தொடங்கஅரசு முதலீடு முக்கியப் பங்காற்றியதுவரையறைக்குட்பட்ட சில நிலச் சீர்திருத்தங்கள் (உம்ஜமீன்தாரி ஒழிப்புகுத்தகைவிவசாயி பாதுகாப்புமேற்கொள்ளப்பட்டனஇவற்றின் விளைவாக நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டதோடு குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியும் காணப்பட்டதுஇது காலனிய காலத் தேக்க நிலையைவிட மேலான வளர்ச்சியாகும்.இதே காலகட்டத்தில் உழைக்கும் மக்களின் இயக்கங்களும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்தனகாலனீய ஆதிக்க காலத்தில் அதிகரித்ததை விட கூடுதல் வேகத்தில் ஆலை தொழிலாளர் எண்ணிக்கை பொதுத்துறைதனியார் துறை ஆகிய இரண்டிலும் முதல் மூன்று ஐந்தாண்டு திட்ட காலத்தில் அதிகரித்ததுமேலும்,முதலில் காப்பீட்டுத்துறையும் பின்னர் வங்கித்துறையின் கணிசமான பகுதியும் நாட்டுடமையாக்கப்பட்டு, 197௦களில் நிதிசார் துறைகளில் பணிபுரிவோர் மத்தியில் தொழிற்சங்க இயக்கம் வளர்ந்ததுஎழுபதுகளிலும் எண்பதுகளிலும் வேகமாக வளர்ந்ததால்இன்று இந்திய தொழிலாளிவர்க்கத்தின் ஒரு முக்கிய பகுதியாக நிதித்துறை உழைப்பாளி மக்கள் உள்ளனர்.
மேலே குறிப்பிட்ட தொழில் துறை வளர்ச்சி ‘60 களின் பிற்பகுதியில் இருந்தே மந்த நிலை அடையத் தொடங்கியதுஇதற்கு ஒரு முக்கிய காரணம்இந்திய முதலாளி வர்க்கம்நிலப்பிரபுத்துவத்தோடு சமரசம் செய்து கொண்டதாகும்இதனால் நிலச் சீர்திருத்தங்கள் முழுமையாக நடைபெறவில்லைநில ஏகபோகம் தகர்க்கப்படவில்லைவேளாண் உற்பத்தி உறவுகளில் முற்போக்கான முறிப்பு ஏற்படவில்லைஉள்நாட்டுச்சந்தை வளர்ச்சி தடைபட்டதுபெருமுதலாளிகளின் தலைமையிலான அரசின் முதலாளித்வநிலப்ரபுத்வ வர்க்கத்தன்மை காரணமாக,வளர்ச்சிக்கான வளங்களை அரசால் தக்க வரிக்கொள்கை மூலம் திரட்ட இயலவில்லைஅதே சமயத்தில்முதலாளித்தவ வளர்ச்சிப் பாதையில் இந்திய பெருமுதலாளிகள் படிப்படியாக ஏகாதிபத்திய நாடுகளின் பன்னாட்டு மூலதனங்களுடன் தங்கள் உறவுகளை வளர்த்துக்கொண்டனர்இதன் பகுதியாக தொழிற்கொள்கைகளில் அந்நிய மூலதனத்தின் பாத்திரத்திற்கு கூடுதல் முக்கியத்வம் அளிக்கப்பட்டதுஇப்பின்புலத்தில் 196௦களின் பிற்பகுதியில் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள ஏகாதிபத்திய அமைப்புகளை இந்திய ஆளும் வர்க்கம் அணுகியது.
1970களில்
197௦களில் ஏற்பட்ட கச்சா எண்ணய் விலை உயர்வு உள்ளிட்ட பொருளாதார எதிர்வினைகள் மந்தநிலை தொடரவும் பணவீக்கம் அதிகரிக்கவும் வழிவகுத்தனதொழில் மந்தம்பணவீக்கம்,வேலையின்மை ஆகிய பிரச்சினைகள் தொழிலாளிவர்க்க போராட்டங்கள் வெடிக்க காரணமாயினஆனால் முன்பு கூறியதுபோல் விடுதலைக்குப்பின் பல தொழிற்சங்க மையங்கள் உருவாகி இருந்த சூழலில் தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்குவது சவாலாக இருந்தது. 196௦களில் பொது உடமை இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு தொழிற்சங்க இயக்கத்தை தற்காலிகமாக மேலும் பலவீனப்படுத்தியதுஎனினும் 1964இல் உதித்த மார்க்சிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலில் 197௦இல் உருவான சிஐடியுதொழிற்சங்க ஒற்றுமையை கட்டிவெடித்துவரும் தொழிலாளர் போராட்டங்களுக்கு வலு சேர்க்க களம் இறங்கியது.இந்தக் காலகட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களை இணைத்துப் போராடுவதற்கான முயற்சிகளை சிஐடியு மேற்கொண்டதுதொழிற்சங்கங்களின் ஐக்கிய கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தி பல தொழிற்சங்க மையங்கள் இணைந்து செயல்பட வழி வகுத்ததுபடிப்படியாக எழுபதுகளில் தொழிற்சங்க இயக்கம் பல்வேறு முக்கியப் போராட்டங்களை நடத்தியதுஆளும் வர்க்க நலன் காக்கும் வகையில் பொருளாதாரச் சிக்கல்களை எதிர் கொள்வதற்காக ஊதிய முடக்கம் போன்ற நடவடிக்கைகளை மத்திய காங்கிரஸ் அரசு மேற்கொண்டதுஅரசின் ஊதிய முடக்க திட்டத்தை சிஐடியு அம்பலப்படுத்தியதுஆளும் வர்க்க தாக்குதல்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன.குறிப்பிடத்தக்க போராட்டம்நாடு தழுவிய அளவில் நடந்த ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தமாகும்இம்முயற்சிகள் தொழிற்சங்க இயக்கத்தை தூக்கி நிறுத்தவும் அவற்றிற்கு ஊக்கமளிக்கவும் உதவினஎனினும் ஆளும் வர்க்கத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 1975-77 நெருக்கடி நிலை காலத்தில் ஜனநாயக உரிமைகளும் முடக்கப்பட்டனஅதிலிருந்து நாடு மீண்டு வந்தது.ஆனால் அதன்பின் அமைந்த ஜனதா கட்சி ஆட்சியும் அதே கொள்கைகளை பின்பற்றியது. 1978இல் ஜனதா கட்சி பொதுத்துறையின் மாணிக்கமாக விளங்கிய பெல்  நிறுவனத்தை ஜெர்மன் கம்பனி சீமன்சுக்கு தாரை வார்க்க முயன்ற பொழுது,ஒப்பற்ற தோழர் பி ராமமூர்த்தி தலைமையில் சிஐடியு இச்சதியை அம்பலப்படுத்தி பெல் நிறுவனத்தை பாதுகாத்தது.
1980களில் தொழிலாளர் இயக்கம்
1980களில் பன்னாட்டு நிதி மூலதனம் பெரும் வலுவோடு எழுந்தது.உலக வங்கி மூலமும் பன்னாட்டு நிதியம் மூலமும் வளரும் நாடுகளை ஏகாதிபத்தியம் மீண்டும் தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவர முனைந்தது. 1980களில் இத்தகைய சூழலில் இந்திய அரசு உள்நாட்டு வளர்ச்சியை மையப்படுத்திய பாதையிலிருந்து முற்றாக விலக ஆரம்பித்ததுஇந்திய அரசு உலக வங்கியிடமும்,பன்னாட்டு நிதியத்திடமும் பெருமளவில் கடன் பெற்றுஅதன்பின் பன்னாட்டு வணிக கடன்களையும் வாங்கியதுஇதையொட்டி பல கடுமையான நிபந்தனைகளையும் இந்திய அரசு ஏற்றது.தாராளமய கொள்கைகளை அமலாக்கத்தொடங்கியதுஇதன் விளைவாக உழைக்கும் மக்களின் கூலியை வெட்டுவது,அத்தியாவசியப் பொருட்களின் மானியங்களைக் குறைப்பது,விலைவாசி உயர்வை பயன்படுத்தி உழைப்பாளி மக்களின் உண்மை வருமானத்தை வெட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதுஇந்தக் கட்டத்திலும் அரசின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்தும், “எஸ்மா” போன்ற உரிமை பறிப்புச் சட்டங்களை எதிர்த்தும் கடுமையான போராட்டங்கள் நடந்தன.இவற்றில் சிஐடியு பெரும் முன்முயற்சி எடுத்து முன்னணி பாத்திரம் வகித்தது.
1990களில் இருந்து
1989-90இல் பல கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளில் அரசுகள் கவிழ்க்கப்பட்டு முதலாளித்தவ அரசுகள் ஆட்சிக்கு வந்தன. 1991இல் சோவியத் யூனியன் உடைந்ததுஇந்நிகழ்வுகள் உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினஏகாதிபத்தியத்தின் கை ஓங்கி,சோசலிசம் பின்னடைவை சந்தித்ததுஇந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையில் 1980-களில் அரசு பின்பற்றிய கொள்கைகளின் விளைவாக 1991இல் இந்தியாவிற்கு கடும் அந்நியச் செலவாணி நெருக்கடி ஏற்பட்டதுநரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு பன்னாட்டு நிதியத்திடமும் உலகவங்கியிடமும் பெரும் கடன்களை பெற்று நிலைமையை சமாளிக்க முயன்றதுஅவை விதித்த நிபந்தனைகளை ஏற்று தாராளமயதனியார்மயஉலகமய கொள்கைகளை அமல்படுத்த துவங்கியதுபின்னர் இது தான் நாட்டுக்குத்தேவை என்றும் நியாயப்படுத்தியதுதொடர்ந்து வந்த மத்திய அரசுகள் இதே கொள்கைகளை இன்றுவரை அமலாக்கிவருகின்றனஇவை பன்னாட்டுஇந்நாட்டு பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு வழிவகுத்துள்ளனஇந்தக் கொள்கைகள்கல்விசுகாதாரம் – போன்ற துறைகளில் தனியார் நுழைவை அனுமதித்து அவற்றையும் சரக்காக மாற்றியதுடன்,உழைக்கும் வர்க்கத்தினருக்கு கல்விசுகாதாரம் போன்றவை எட்டாக்கனியாக்குகின்றன.
1990களில் இருந்து தொடரும் மூன்று முக்கிய மாற்றங்கள் தொழிலாளிவர்க்க இயக்கத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளனஒன்றுஉலக அளவில் சோசலிச அமைப்புகள் பலவீனப்பட்டு ஏகாதிபத்தியத்தின் கை ஓங்கியிருப்பது.இரண்டாவதுஇங்கு அமலாகிவரும் நவீன தாராளமய கொள்கைகளின் தாக்கம்மூன்றுஇந்திய அரசியலிலும் சமூகத்திலும் இந்துத்வா சக்திகளின் செல்வாக்கு வேகமாக வளர்ந்து வரும் போக்குஇச்சவாலை நாம் எதிர்கொள்ளவேண்டும்.
சமகால சவால்கள்
நவீன தாராளமயக் கொள்கைகள் நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்கள் பெரும் தாக்குதல்களை எதிர் கொண்டிருக்கின்றனஆனால் இந்த நிலையிலும் கடுமையான தொழிலாளர் போராட்டங்கள் நடைபெறுகின்றனஎனினும் ஆளும் வர்க்க அரசாங்கங்கள் நவீன தாராளமயக் கொள்கைகளை விட்டுவிடவில்லைஅந்நிய முதலீடுகளை வரவேற்பதற்காகவும் பெருமுதலாளிகள்,நிலப்ரபுக்கள் நலம் காக்கவும் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறிக்க அரசு தயங்காதுஇந்திய வேளாண்குடி மக்களும் அனைத்து சிறு உற்பத்தியாளர்களும் வணிகர்களும் கூட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்உழைக்கும் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களையும்உரிமைகளையும் தக்க வைத்துக் கொள்வதற்கே பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.
கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் நாம் ஏராளமான அகில இந்திய வேலை நிறுத்தங்களை நடத்தியுள்ளோம்மிக விரிவான தொழிற்சங்க ஒற்றுமையை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளோம்.
ஆனாலும் ஒரு சிக்கலான சூழலை சந்திக்கிறோம்இந்தியாவில் உழைக்கும் மக்களில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளவர்கள் “சுய தொழில்” செய்பவர்கள்தேசீய மாதிரி ஆய்வு கணக்கின்படி2004-05 இல்இந்தியாவின் மொத்த உழைப்புப் படை 46 கோடிஇதில் 26கோடி சுயவேலை செய்வோர்இவர்கள் மிகச் சிறு உற்பத்தியாளர்கள்பெரும்பாலும்இவர்கள் சிறுகுறு விவசாயிகள்,கைவினைஞர்கள் சிறுகுறு வணிகர்கள் தம் சொந்த முயற்சியால்,சொற்ப வருமானத்தை ஈட்டி வாழ்க்கையை நடத்துபவர்கள்.இவர்களுக்கு எந்தவிதமான சமூகப் பாதுகாப்பும் கிடையாது.
நிலப்ரபுத்வ உறவுகள் சில மாற்றங்களோடு தொடரும் நிலையில் சாதீயம்அறிவியலுக்குப் புறம்பான கண்ணோட்டம் போன்றவை உழைப்பாளி மக்களின் உணர்வுகளிலும் சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.ஆளும் வர்க்கம் பின்பற்றி வரும் தாராளமய கொள்கைகளால் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் உழைப்பாளி மக்கள் ஒன்று பட்டுப் போராடுவதை தடுக்க இத்தகைய தாக்கம் உதவுகிறதுஎனவே ஆளும் வர்க்கம் சாதீயத்தையும் மதவெறி பிற்போக்கு சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் எதிர்ப்பதற்குப் பதில் சில சமயம் கண்டு கொள்ளாமலும் பல நேரங்களில் ஊக்குவித்தும் செயல்படுகிறதுஉழைப்பாளர்களில் கணிசமான எண்ணிக்கையினர் கிராமப்புறங்களில் விவசாயத்தோடு இனணந்தவர்கள்இவர்கள் இன்னமும் நிலப்பிரபுத்துவத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்மதம்இனம்மொழி – போன்ற வேறுபாடுகளின் தாக்கம்இவர்களுடைய வர்க்க உணர்வுகளை வளரவிடாமல் தடுக்கின்றனஅடையாள அரசியலின் தாக்கமும் உழைப்பாளி மக்களிடையே உள்ளதுபல்லாண்டுகளாகப் பாடுபட்டு வளர்த்த ஜனநாயக இயக்கங்களும்முற்போக்குச் சிந்தனைகளும் தற்போது பிற்போக்குச் சக்திகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
தாராளமய பொருளாதாரக் கொள்கைகள்ஒரு புறம் உழைக்கும் மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கின்றனமறுபுறம் மக்களைச் கூறுபோடும் பிற்போக்குத்தனங்களையும் ஊக்குவிக்கின்றன.இதனால் உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் கட்டுவதும் கடினமாகிறதுசாதிமதம்இனம்– இவற்றைக் காட்டி அவர்களுடைய ஒற்றுமையை உடைக்க முற்படுகிறது ஆளும் வர்க்கம்இதனால் தாராளமயக் கொள்கைளை எதிர்த்துப் போராடுவது என்ற பெரும் சவாலுடன் தொழிற்சங்க இயக்கம் எதிர் கொள்ள வேண்டிய வேறு பல சவால்களும் உள்ளன.எல்லாவிதமான பிற்போக்குத்தனங்களையும் – சாதி,மதவேற்றுமை உணர்வுகள்பெண்ணடிமைத்தனம் உள்ளிட்டவைகளையும் எதிர்க்க வேண்டியது அவசியம்.இத்தகைய சவால்களை வாய்ப்புக்களாக – சமூகமாற்றத்திற்கான ஜனநாயக இயக்கங்களை வளர்க்கும் வாய்ப்பாக – மாற்றும் பணியை தொழிலாளிவர்க்க இயக்கம் மேற்கொள்ளவேண்டியுள்ளதுகுறிப்பாக இந்துத்வா சக்திகளின் கோரத்தாண்டவத்தை எதிர்த்து நிற்பதுமத சார்பின்மை கலாசாரத்தை மக்களிடையே வலுவாகக் கொண்டுசெல்வது என்ற பணிகளை உழைப்பாளி மக்களின் வாழ்வில் இரண்டறக்கலப்பதின் மூலம் தான் செய்ய இயலும்கடந்த காலங்களில் இந்திய தொழிற்சங்க வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்வம் நமது தொழிலாளிவர்க்க இயக்கம் அளித்ததோஅதே கவனத்தைஅத்தொழிற்சங்கப்பணிகளைத் தொடர்ந்துகொண்டே,
  • தாராளமய கொள்கைகளை எதிர்ப்பதற்கும்
  • இந்துத்வா மதவெறி தத்துவத்தையும் நடைமுறைகளையும் எதிர்ப்பதற்கும்
  • அமைப்பு ரீதியாக திரட்டப்படாத பகுதி உழைப்பாளி மக்களை திரட்டுவதற்கும்
  • சமூகத்தில் நிலவும் சாதி ஒடுக்குமுறை கொடுமைகளை எதிர்ப்பதற்கும்
  • பாலின ஒடுக்குமுறைக்கு எதிராக செயல்படவும்
சமகாலத்தில் நாம் செலுத்தவேண்டும்இது நமது வரலாற்றுக் கடமையாகும்.
உழைப்பாளி மக்களின் அரசியல்வர்க்க உணர்வை வளர்க்காமல்,நமது தொழிலாளர் இயக்கப்பணிகளை அரசியல் பார்வையுடன் கூடியதொழிலாளிவர்க்க அரசியலை உழைப்பாளி மக்களிடம் கொண்டு செல்கின்ற பணி என்ற புரிதல் இல்லாமல் நாம் மேற்கூறிய சவால்களை எதிர்கொள்ள முடியாதுஇத்திசைவழியில் இயக்கத்தை கொண்டு செல்ல அனைவரும் உறுதி ஏற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக