புதன், 11 டிசம்பர், 2013

ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மும்பை விழித்தெழு இயக்கம்.



ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மும்பை விழித்தெழு இயக்கம்.

/எமது ஐந்து வருட செயல்பாடுகள், மற்றும் கற்று உணர்ந்துவைகளை தொகுத்து உள்ளோம்.

படித்து உங்கள் கருத்துகளை , விமர்சனகளை எழதவோம்..உங்கள் கருத்து எங்களை பண்படுத்த செய்யும். 
=============================================
#டிசம்பர் 6,2008 புரட்சியாளர் பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மஜீத் இடிப்பு நாளில் த்தான் எமது அமைப்பை தொடங்கினோம்.

#தை ௧, 2009 (சனவரி 14) அன்று சமுத்துவ பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை தமிழர்களை சாதி, மத, மொழிகளை கடந்து ஒருங்கிணைக்கும் விழாவாக, தமிழரின் சாதி மத சார்பற்ற இயற்கை விழாவாக, தமிழர் விழாவாக தமிழர்களுக்கும், மற்ற தேசியஇன மக்களுக்கு தெரிவிக்கவே இவ்விழாவே முன்னெடுக்க தொடங்கினோம். (அதாவது அலிமினிய பானை,கரும்பு, மஞ்சள்,அரிசி,பழம்,கிழங்கு,இலை போன்றவர்களை அடங்கிய பொங்கல் பொருள்களை இலவசமாக நூறு குடும்பங்களுக்கு வழங்கி சாலைகளில் இருவரிசையாக பொங்கல் வைத்தோம்.எந்த வகை மூடநம்பிக்கை அற்ற விழாவாக மும்பையில் முதன் முதலில் தமிழர் விழாவாக கொண்ட ப்பட்ட விழா இதுவே. இரண்டாம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையான 247 எழுத்துகளை உள் அடக்கி ஒவ்வாரு பானைக்கு ஒரு எழத்து என 247 பானைகளை வைத்து பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பானைக்கு ஆகும் பாதி பணத்தை மக்களிடம் பெற்றுகொள்கிறோம் நாங்கள் விரும்பியது போன்றே இன்று மும்பையில் இருபதுக்கு மேற்பட்ட பல பகுதிகளில் கொண்டாட ப்பட்டு வருகிறது )

#சனவரி 29, 2009 அன்று அண்ணன் முத்துக்குமார் தீ யால் தன்னை எரித்து எங்களை போன்றவர்களை விவகமாக போராட வைத்தார். அவருக்காக அமைப்பு சார்ப்பு இல்லமால் பெப்ரவரி முதல் வாரத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்து நினைவு ஊர்வலம் நடத்தினோம்.

#பெப்ரவரி மாதம், 2009 ஈழ மக்களை இனப் படுகொலை செய்த காட்சிகளை மக்களிடம் முதன் முறையாக திரையிட்டு காட்டின இயக்கம். தீவிரவாததக்கு எதிரான போர் என்று அறிவித்து ஈழ மக்களை இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் செய்த இனப்படுகொலைகளை . பல தமிழ் கட்சிகளை,தமிழ் ஆர்வலர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்தினோம். (இலங்கை அரசும் மற்றும் விடுதலை புலிகளும் சனவரி 2002 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தன பின்பு சனவரி 2008 இல் இலங்கை அரசு ஒப்பந்ததை முறித்து போரை தொடங்கின என்பது குறிப்பிட்ட தக்கது.)

#மார்ச் 1, 2009 சாதி , மத , கட்சி பாகுபாடு இன்றி பல பகுதி தமிழ் பிரமுகர்கள் குமணராசன், முருகசீலன், ஏ பி சுரேஷ், தமிழ் செல்வன், ராஜேந்திர சாமி,தேவதாசன், நாடோடி தமிழன், உதவியுடன் , தமிழ் அமைப்புகள், கட்சிகள், மக்கள்களை ஒருங்கிணைத்து இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என 25 கிலோ மீட்டர் பகுதியில் 35000- 40,000 ஆயிரம் மக்களை கொண்டு மனித சங்கலி ஒருங்கிணைத்தோம். (ஒருங்கிணைத்த எங்களால் மக்களை செயல்பட, வழிநடத்த வைக்க முடியவில்லை)

#ஏப்ரல் 14, 2009 இல் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினோம்.

#ஏப்ரல் 2009 , மகிந்த ராஜபக்சே இந்தியா வருகையை கண்டித்து அவரின் உருவ படத்தை எரித்து முதன் முதலாக இயக்க தோழர்கள் நான்கு பேர் கைதானோம்.

#மே மாத இறுதியில் 2009, ஈழ போரில் படுகொலை செய்யபட்ட மக்களுக்கு மெழக்கு ஊர்தி எய்ந்தி நினைவுஞ்சலி செய்தோம்.
அக்டோபர் மாதம் 2009, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் முப்பெரு விழா வை முன்னெடுத்தோம். தமிழகத்தில் இருந்து கொளத்தூர் மணி அண்ணன், சீமான் அண்ணன் (நாம் தமிழர் கட்சியை தொடங்குவதற்கு முன்), வே மதிமாறன் அண்ணன் களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்தோம். இதில் சென்னையில் இருந்து பெ.தி.க தோழர்கள் 60க்கு மேற்பட்டோர் மற்றும் ஐந்து Save tamil thozhargal கலந்துகொண்டனர். (15 க்கு மேற்பட்ட புகார் மனுக்கள் காவல் துறையில் எங்கள் மீது பதிவு செய்யப்பட்டு கூட்டம் நடத்த கூடாது என பல செயல்கள் நடத்தன அதை எல்லாம் மீறி கொட்டும் மழையில் நனைந்த படி முதன் முறையாக திறந்த வெளி மைதானத்தில் “நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை” என்று பனியனில் பதித்த அண்ணல் அம்பேத்கரின் பனியன் வெளியிடப்பட்டன. முதன் முறையாக இணையத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பட்டன. (அண்ணன் பிரபாகரன் படம் போதித்த பனியன் தோழர்களிடம் கொடுத்து போட சொன்னோம். ஆனால் பிரபாகரன் பனியன் போன அளவுக்கு அம்பேத்கர் பனியன் போக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது, சீமானை அழைத்த நாங்கள் அவர் மும்பையில் பிஜேபி ஆதரித்த போது நாங்கள் சீமானுக்கு எதிரான கருத்தியல் தளத்தில் பிரச்சாரம் செய்தோம்..தமிழக பத்திரிக்கை, சமூக தளத்தில் பரபரப்பாக பேச வைத்தோம்.)

#Save Tamil அமைப்பு தயாரித்து வெளியிட்ட “வெடித்த நிலையத்தில் வேர்களை தேடி “ ஆவணப்படம், பொன் சுதா தயாரித்த “நடந்த கதை”, ம க இ க தயாரித்த “தில்லை நடராஜ சிதம்பரம் கோவில் தீடசகர்களுக்கு எதிரான அய்யா ஆறுமுக சாமி போராட்ட ஆவணப்படம், சோமிதரன் தயாரித்த முல்லைத்தீவு சாக, எரியும் நூலகம், தமிழக பொதுப்பணித்துறை தயாரித்த “முல்லைபெரியார்” பழங்குடி மக்களின் வரலாற்றை சொல்லும் “நாளி”, சேனல் 4, போன்ற ஆவணப்படங்களை Bombay IIT, ஆரே காலனி, வாஷி, தாராவி, செம்பூர் போன்ற பகுதிகளில் திரையிட்டோம்,

#IIFA-FICCI ஜுன் 2010, இலங்கை மாநாடுக்கு எதிரான பல போராட்டங்களை (தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிளில் பிரச்சாரத்தை) நடத்தினோம். கலந்துரையாடல் நிகழ்வுக்கு மே பதினேழு இயக்க தோழர் திருமுருகன் கலந்துக்கொண்டார். நடிகர் அமிதாப் பச்சான் வீடு முன்னால் நாம் தமிழர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினோர். அதற்கு பின்னல் நாங்கள் முக்கிய பாலிவுட் நடிகர்களை சந்தித்து கலந்துக்கொள்ள கூடாது என வலியுறுத்தினோம்.அமீர் கான்,ஷாருக்கான் போன்ற பலரை தடுத்து நிறுத்தினோம். சல்மான் கான் வீடு முன் ஆர்ப்பாட்டம், கேட் ஒப் இந்தியா முன் ஆர்ப்பாட்டம், சல்மான் கான் உருவ பட்ட எரிப்பு போன்ற பல நிகழ்வுகளை நடத்தி இரண்டு முறை கைதானோம், மும்பை உலக தமிழர் பேரமைப்பு, மதிமுக, தி க ஒத்துழைத்தனர். 

#பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் மும்பையில் பத்தாம் வகுப்பில் முதல், இரண்டாம் மற்றும் முன்றாம் இடம் வந்த தமிழ் மாணவ –மாணவிகளுக்கு எம்மால் முடிந்த பணம் உதவி செய்தோம்.
நவம்பர் மாதம், 2010,,வெளிச்சம் மாணவர்கள் அமைப்பை சார்ந்த செரின் அக்காவை அழைத்து மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்க விதத்தில் பேச வைத்தோம்.

#சனவரி 2011, சென்னையில் இல் ஆசிரியர் பிரபாகரனின் “என்ன செய்யலாம் இதற்காக”? புத்தகம் விழாவில் கலந்துக்கொண்டு .அந்த புத்தகத்தை சுவாமி அகினவாஷ், வர வர ராவ், மேதா பட்கர், அருந்ததி ராய், ராஜ்தாக்ரே கட்சி நிர்வாகிகள் என பல தரப்பட்ட பிரமுகர்களிடம் கொடுத்தோம். (வாய்ப்பு கிடைக்கும் போது சிவசேனா உத்தவ் தாக்கரே , பிஜேபி நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் சரத் பவர் ,பகுஜன் சமாஜ் பார்டி மாயாவதி, அன்னா ஹசாரே, அருணா ராய், லாலு பிரசாத் யாதவ், ஜெகன் மோகன் ரெட்டி, போன்ற தலைவர்களிடம் முயற்சித்தும் சந்திக்க முடியவில்லை..முயற்சித்து வருகிறோம் )

#மூவர் தூக்கு தண்டனை - பேரறிவாளன் அண்ணன் எழதிய " தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் – என்கிற புத்தகம் தோழர் ராஜேந்திரன் சரவணனால் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, மும்பையில் 26 செப்டம்பர் 2011 அன்று தோழர் சம்பத் (மரணதண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு) மற்றும் எமது அமைப்பு சார்பாக வெளியிடப்பட்டது .

#2011,சமுத்துவ பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவுக்காக ..மாணவர்களிடம் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் என்கிற தலைப்பில் கட்டுரை போட்டிகளை நடத்தினோம்.(மாணவர்கள் தமிழர் பண்டிகை குறித்து பல முரண்பாடான தகவல்களை தந்தனர். மாணவர்களிடம் கடுமையாக பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையை அறிந்தோம் )

#ஏப்ரல் மாதத்தில் 2011, தாராவியில் இருந்து அண்ணல் அம்பேத்கர் நினைவு இடம் சையத் பூமி வரை அண்ணல் அம்பேத்கர் கொள்கை விளக்க நடைபயணம் செய்தோம்.

#2011 கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் படுகொலைகளை கண்டித்து போராட்டங்களை முன்னெடுத்தோம்..கச்சத்தீவு மீட்புக்கான ஆவணப்படத்தை பல பகுதிகளில் திரையிட்டோம்,பின்பு கச்சத்தீவு மீட்பு இயக்கம் சிதையின் மைத்தன் உடன் இணைத்து மொழி மாற்றம் செய்து பிரச்சாரத்தை முன்னெடுத்தோம். அதிகமான பணி கள் காரணமாக பாதியில் நின்றன. 

#பெ.தி.க கோவை தோழர்களை அழைத்து அம்பேத்கரிஸ்ட்டுகள், பெரியாரிஸ்ட்டுகள், மார்க்ஸிட்களை ஒரு அணியில் சேர அழைக்கிறோம் என்ற தலைப்பில் அரங்க கூட்டத்தை நடத்தினோம். மும்பை பெ.தி.க கதிரவன் எங்களோடு சேர்ந்து ஒருங்கிணைத்தார். மும்பை மராத்திய தலித் அமைப்புகள் கலந்துக்கொண்டன.
மற்ற தேசிய இன அமைப்புகளிடம் சேர்ந்து பல போராட்டங்களில் கலந்துக்கொண்டோம் எ.கா... பினாயக் சென் விடுதலை போராட்டம், ஜைத்பூர் அணு உலைக்கு எதிரான போராட்டம், கபீர் கல மன்ச் உறுப்பினர்கள் விடுதலை, தபால்கர் கொலைக்கு பின்னால் அவரது கொள்கையை எடுத்து செல்லும் யுவ சேவா சங்க, மராத்திய பவத்த அமைப்புகள்- ரிப்பபலிக் பந்தர், நாலந்தா போன்ற அமைப்புகள்.

# கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை மும்பையில் முதன் முதலாக நடத்தினோம். மற்ற தேசிய இன மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களையும் ஒருங்கிணைத்து போராடினோம். பூனே ரயில் நிலையம் அருகில் உண்ணாவிரதம் , தாதர் ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் , தாராவியில் விழுப்புணர்வு ஊர்வலம் போன்றவைகளை நடத்தினோம். 

#மார்ச் மாதம் , தோழர் தியாகு மேற்கொண்ட ஈழத்திற்கு ஆதரவான ஆயிரம் கிலோ மீட்டார் நடைபயணத்தில் தஞ்சாவூரில் கலந்துகொண்டோம்.(கிராமம் பகுதி மக்களிடம் ஈழம் குறித்த பரவலான செய்திகள் போகவில்லை என்றும்,.தமிழக மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அறிந்தோம் ) 

#ஏப்ரல் 2011, பாரதிதாசன் பிறந்த நாள் விழா மற்றும் சென்னையில் 30 க்கு மேற்பட்ட அமைப்புகளை ஒருங்கிணைத்து ஆரம்பிக்கபட்ட இனப்படுகொலை மற்றும் போர் குற்றத்திற்கு எதிரான இளைஞர்கள் கூட்டமைப்பைக்கு ஆதரவாகவும், மும்பையில் பல தமிழ் அமைப்புகள், மற்ற மொழிகளை சார்ந்த மராத்திய அமைப்புகளை ஒருங்கிணைத்தோம்.

#மே மாத 18 ,ஈழ மக்கள் இனப்படுகொலை நாளில் “பொதுசன வாக்கெடுப்பு மற்றும் சர்வேதச விசாரணை” “சர்வேதச அரசியல், உலக பார்வையில் ஈழம் “ “மலையக தமிழர்களும் –ஈழ அகதிகளும்” என்கிற தலைப்பில் அரசியல் கருத்தரங்கம் நடத்தினோம். 
கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு வை மும்பைக்கு அழைத்து தமிழ் சிந்தனையாளர்கள் சங்கத்தில் பேச வைத்தோம்.

#அக்டோபர் 29, 2010, பரமக்குடி மக்கள் மீதான காவல் துறையின் போலி துப்பாக்கி சூடு கண்டித்து வழக்குரைஞர் மதுரை பகத் சிங் கை அழைத்து “பரமக்குடி கலவரம் 1957 முதல் 2011 வரை” கௌதம மீனா அக்கா, தோழர் மாயாண்டிவை அழைத்து “புரட்சியும் அதன் சாத்தியமும்” என்கிற தலைப்பில் கருத்தரங்கத்தை நடத்தினோம். (இந்த கூட்டம் நடத்தி பின்பு எங்கள் மீது தலித் முத்திர ஆனால் எங்கள் இயக்கத்தில் பிறப்பால் சாதி, மதத்தை சார்ந்த அனைவரும் எமது இயக்கத்தில் உள்ளனர் , பெரியாரை விமர்சிக்கிறோம் என்று தாக்குதல் தொடங்கின)

#அம்பேத்கர் நினைவு தினம்,வெண்மணி நினைவு தினம், பெரியார் நினைவு தினத்தை அம்பேத்கர் விடுதியில் கலந்துரையாடல் செய்தோம்.மும்பை மராத்திய அமைப்புகள் எங்களோடு ஒருங்கிணைத்து நடத்தின. (பல அறிய தகவல்களை அவர்களிடம் இருந்து பெற முடிந்தது)

# தருமபுரி (தலித்)பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல் வன்னிய –பா.ம க யால் நவம்பரில் நடந்தறின. தருமபுரி சென்று மக்களுக்கு அறுதல் சொன்னோம். டெல்லி சென்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் பா.ம.க தடை செய்ய வேண்டும் என்றும் பரமக்குடி துப்பாக்கி சுடு விசாரணை செய்த சம்பந்தன் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என புகார் மனு அளித்துள்ளோம் 

#2012, பொதிகை தொ.கட்சியில் ஒளிபரப்பான மம்மூட்டி நடித்த புரட்சியாளர் அம்பேத்கர் குறுந்தகடை தமிழில் கொண்டு வந்தோம். முதன் முதலில் சனவரி மாதத்தில் மும்பையில் வெளியிட்டோம். பின்பு தமிழ்நாட்டில் முதன் முதலாக பெப்ரவரி மாதத்தில் திராவிட விடுதலை கழக “ஜாதி-மத ஒழிப்பு மாநாட்டில் வெளியிட்டோம், திராவிட கழக தலைவர் கி.வீரமணி,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நல்லகண்ணு, புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி, பகுஜன் சமாஜ் பார்ட்டி கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ரோங், வழக்குரைஞர் சத்திய சந்திரன், எடிட்டர் லெனின் , இயக்குனர் பாலாஜி சக்தி வேல், தமிழ்நாடு முற்போக்கு எழத்தாளர் சங்கம், தமிழ் புலிகள் அமைப்பு, ஆதி தமிழர் பேரவை ..சொல்லி கொண்டே போகலாம் தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள அமைப்புகளிடம் இலவசமாக கொடுத்தோம், மேலும் பாண்டிச்சேரி , பெங்களூர் போன்ற பல பகுதிகளில் திரையிட்டு , இலவசமாக குரந்தகடை கொடுத்தோம். மேலும் வெளிநாடுகளில் உள்ள தோழர் யமுனா ராஜேந்திரனிடம் சேர்த்தோம். கலைப்பட்டறை அமைப்பு தோழர் இயக்குனர் முகிலன் முயற்சியால் தமிழக முழவதும் திறந்த வெளியில் திரையிட்டு காட்டப்பட்டன.

#பெப்ரவரி மாதம், 2012, ஐ.நா வுக்கு எதிரான போராட்டத்தை மும்பையில் உள்ள ஐ.நா அலுவலகம் முன் அடையாள போராட்டமாக நடத்தினோம். 

#மார்ச் மாதம், 2012, “இந்தியாவின் வெளிவிகார கொள்கையும், மாணவர் போராட்டமும்”, “அமெரிக்க தீர்மானமும் – சர்வேதச அரசியலும்” என்கிற தலைப்பில் கலந்துரையாடல் மேலும் காமன்வெல்த் மாநாடுக்கு எதிரான போராட்டம் குறித்து கலந்துரையாடல் நடத்தினோம். IIT மாணவர்கள், marine மாணவர்கள் கலந்துகொண்டனர்.

#மும்பையில் மாணவர்கள் ஒருங்கிணைத்து தமிழக மானவர்களுக்கு ஆதரவாகவும், ஈழ இனப்படுகொலைக்கான சர்வேதச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழர்களை அணி திரட்ட உண்ணாநிலை போரட்டத்தை முன்னெடுத்தோம்..(எங்களை தொடர்ந்து மும்பையில் பல பகுதிகளில் போராட்டம் நடந்தன)

#மார்ச் மாதம்,தமிழ் ஈழத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் சட்டமன்றத்தில் , நாடாளுமன்றத்தில் இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்றும், ஐ.நா மேற்பார்வையில் பொது சன வாக்கெடுப்பு நடத்த வேடனும் என்கிற தீர்மானம், மற்ற தேசிய இன மக்கள், மாநில தலைவர்களிடம் எடுத்த செல்வது குறித்து கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினோம்.

#அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் “அண்ணல் திரைப்பட”த்தை ரே ரோடில் திரையிட்டோம் 

#மே மாத 18 ,ஈழ மக்கள் இனப்படுகொலை நாளில் “பொது சன வாக்கெடுப்பு –ஈழ விடுதலைக்கான ஒரு அரசியல் பாதை ” என்ற நூலையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தயாரித்த “ஈழ மண்ணில் எரியும் நெருப்பாய்—தமிழீழ பெண்கள் என்கிற ஆவணப்படத்தை திரையிட்டோம், தமிழர்களும் –சாதியும் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த வில்லை. பேச்சாளர் அன்று வரவில்லை.
மும்பையில் தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்யும் நபர்களை மக்களிடம் அமபலப்படுத்தி உள்ளோம்.. எ.கா:- மராத்திய தமிழ் சங்க என்கிற பெயரில் காங்கிரஸ் தலைமையில் வருகிற மாநில தேர்தலை கணக்கில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டை எதிர்த்தோம்..நாம் தமிழர் கட்சி, உலக தமிழர் பேரமைப்பு, தமிழ் காப்போம், மதிமுக, தமிழ் உணர்வாளர்கள் இயக்கம் போன்றோர்களுடன் சேர்ந்து செய்தோம். 

#மும்பை பெண்களுக்கு தற்காப்பு பயற்சி அளிக்க வெண்புறா அறக்கட்டளை யுடன் இணைந்து நடத்த முன்வந்தோம்.(இரண்டு வகுப்புகள் மட்டுமே நடந்தன. பெண்கள் தொடர்ந்து வராததால் பயற்சி நின்று போயின)

#பட்டியல் இன மக்களுக்கான வங்கி, தொழில் பயற்சி போன்றவைகளை நடத்த ஆலோசனை செய்தது ..வேலைகளை தொடங்கியுள்ளோம்.

#ஜூன் 2013,பஞ்சமி நிலங்கள் குறித்து ஆவணப்பட தயாரிப்பை தொடங்கினோம். ஆறு மணி நேரம் பேட்டிகளை எடுத்துள்ளோம்.
நவம்பர் 2013, இலவச திரைப்பட பயற்சி வகுப்பை தமிழ் ஸ்டுடியோ அருண் உடன் இணைந்து இரண்டு நாள் நடத்தினோம். 

#தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் 1.களத்தில் நேரிடையாக போராடுவதற்காக (கூத்துபட்டறை, பத்திரிக்கை துறை, கலைத்துறை) ஒரு அணி (Tactical ). 2. ஆதரவு தந்து பண பலம், ஆயுத பலம், சட்டம் பலம்(lawyer) கொடுக்க ஒரு அணி (Operational ) 3. கல்வி, வேல்வாய்பு, அரசியல் பயிற்சி கொடுத்து தொடர்பை ஏற்படுத்துவது, (Strategic ). 4. கொள்கைகளை வரையறுபதற்கு ஒரு அணி (policy) என செயல்திட்டங்களை வரைந்து வேலைகளை ஆரம்பித்துள்ளோம்.

# ஒவ்வாரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மாலையில் ஒரு சிறந்த குறும்படம், ஆவணப்படம் திரையிட்டு விவாதம் செய்ய உள்ளோம்.

#அரசியல் கருத்தரங்கம், நாடக பயற்சி, தமிழகம் இணையதள நண்பர்கள் உடன் இணைந்து தமிழ் கணினி பயற்சி, பத்திரிக்கை துறைக்கான பயற்சியை ஏப்ரல் மாதத்தில் நடத்தள்ளோம். மாணவர்களுக்கு தொழில் பயற்சி, தலைவர்கள் குறித்து கட்டுரை போட்டி மற்றும் தமிழ், மாராத்தி மொழி வகுப்புகளை எடுக்க திட்டமீட்டுள்ளோம்.

# “என்ன செய்யலாம் இதற்காக “ ஈழ இனபடுகொலை ஆவண புத்தகத்தை இந்தியில் மொழி மாற்றம் செய்ய தொடங்கியுள்ளோம்.
மீனவர்களுக்கு என தனி தொகுதி, பஞ்சமி நில மீட்பு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலிமை படுத்த வேண்டும் என பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளோம்.

#சாதி மத அற்றவர்கள் என்ற பெயரில் தனி பிரிவு உருவாக்கி (எ,கா :- தமிழர் மதம், தமிழ் பவத்தம் ..மற்ற மதங்கள் இருப்பது போல் அல்ல பகுத்தறிவு கொள்கைகளை பின்பற்றுகிற ) அவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்கும் நடைமுறை மூலமே நாம் சாதி மதமற்ற சமுதாயம் என்கிற இலக்கை அடைய முடியும்.


#MVI – மும்பை விழித்தெழு இயக்க குறுஞ்செய்தி வட்டம் என்கிற கைபேசி மூலம் செய்திகளை கடந்த ஆறு வருடமாக தமிழகத்தில் உள்ள KSV , TKOV குறுஞ்செய்தி வட்டத்தை நடத்தி வருகிறோம்.. TKOV கடந்த ஒரு வருடமாக நின்று விட்டன. ஒரு கைபேசி மூலம் நூறு குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும் என்கிற சட்ட விதி இருப்பதால். அதை பழைய படி வேகத்துடன் கொண்டு செல்ல செயல் திட்டங்கள் வகுத்து வருகிறோம். 

#வளரும் குழந்தை தடுக்கி விழுவதுபோல, ஆரம்ப காலங்களில் நாங்களும் சில தவறுகளை செய்து உள்ளோம்.. சரி செய்து வருகிறோம்.. (சமூக மீது அக்கறையுள்ளவர்கள் என்று நம்பி பல நல்ல ஆதரவாளர்களை சொல்லி கேட்காமல் பிரபலங்களை அழைத்து கூட்டம் நடத்தி உள்ளோம், பரபரப்பு அரசியல் , பிரச்சனைகள் அடிப்படையில் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை உள்வாங்கி உருவப்பட எரிப்பு , பேனர் வைத்து கோசம் விடுவது என ஒரு அடையாள போராட்டத்தை நடத்தி பிரச்சனைக்கான தீர்வுகளை நோக்கி நீண்ட நெடிய போராட்டத்தை எடுக்கமால் சில வருடம் இருந்து உள்ளோம். வருந்துகிறோம். இப்போது இதை எல்லாம் சரி செய்து கொள்ள முயற்சிக்கிறோம். செய்திதாளில் பெரிய விளம்பரம் அதை எல்லாம் நாங்கள் செய்தது கிடையாது. தோழமை சக்திகளை கண்டு அறிந்து அவர்களுடன் சேர்ந்து செயல்பட தொடங்கியுள்ளோம்.
#வளரும் குழந்தை தடுக்கி விழுவதுபோல, ஆரம்ப காலங்களில் நாங்களும் சில தவறுகளை செய்து உள்ளோம்.. சரி செய்து வருகிறோம்
இயக்கம் என்ற சொல்லுக்கு செயல்பாடு என்ற அர்த்தம் உள்ளது.
மேலும்... 1 சமூக இயக்கம்; 2 அரசியல் இயக்கம்; 3 கலை இயக்கம்; 4 இலக்கியஇயக்கம் என்று இருந்தாலும்.
எமது இயக்கம், சமூக இயக்கம்.
சமூக வேர்களின்றி அரசியல் இயக்கம் தோன்ற முடியாது என புரட்சியாளர் பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் சொன்னதே நினைவில் கொள்கிறோம்.
சாதியற்ற , மதமற்ற, வர்க்க வேறுபாடுகளற்ற சமுதாய உருவாக வேண்டும் அந்த சமூக மாற்றத்தை விரும்பிகிற இயக்கம்.
படித்த, சமூக மீது அக்கறையுள்ள நபர்களை ஒருங்கிணைத்து உருவான இயக்கமே நாங்கள். எமது அமைப்பை கற்றுணர்ந்தோர், முற்போக்கு சிந்தனைவுடையோர் ஆதரிக்கின்றனர், தவறுகளை சுட்டி காட்டி வழி காட்டுகிறனர்.
சாதியால், மதத்தால், மொழியால் ஒடுக்கப்படும் மக்களாகவே எமது அமைப்பு. பொது குறிக்கோள்களை முன்வைத்து ஒழுங்கமைக்கப்படும் ஒரு சமூக இயக்கமாக முயற்சித்து வருகிறோம்.

#இயக்க தொடங்கவதற்கு முன் ஈழ போர் நடந்து கொண்டு இருந்து போது சில உண்ணாநிலை போராட்டம், ராஜபக்சே உருவ படம் எரிப்பு, பிரச்சாரம் என்ற முறையில் பல தமிழ் அமைப்புகள் நடத்திய நிகழ்வுகளில் கலந்துக்கொண்டோம். பின் நவம்பர் 27,2008 அன்று தமிழர்கள் எல்லோரையும் சங்கங்கள் , கட்சிகள், அமைப்புகளை ஒருங்கிணைந்து ஒரு அரங்க கூட்டம் நடத்த வேண்டும் என்ன திட்டமிட்டோம். மும்பையில் தாஜ் ஹோட்டல் , ரயில் நிலையம் முன் நடந்த தீவிரவாத தாக்குதலால் கூட்டம் காவல் துறையால் முன் எச்சரிக்கை யாக நிறுத்தி வைக்க ப்பட்டன. ஒரு கூட்டம் நடத்த முடியாத நம்மால் ஈழ மக்களுக்கு என்ன செய்து விட முடியும் என்று நினைத்தே தமிழர்களை விழித்தெழு வைக்க விழித்தெழு இளைஞர் இயக்கம் என்கிற பெயரில் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் இயக்கத்தை நான்கு நபர்கள் மூலமாக உருவாக்கினோம். செயல்ப்பாடு சரி இல்லாத உறுப்பினர்களை நீக்கி உள்ளோம்..பலரை சேர்க்க மறுத்துள்ளோம்.

மும்பையில் சாதி அமைப்பு , மத அமைப்பு ,கடவுளை கொண்டுவதற்க்கான விழா கமிட்டி, சிவசேனா கட்சி, நவநிர்மா சேனா, தேசிய வாத காங்கிரஸ் பிஜேபி கட்சி, காங்கிரஸ் கட்சி போன்றவை குறித்து சமூக பார்வை வருவதற்கு முன் மும்பையில் இவைகளை கடந்து வருவது கடினம் அதுவும் அவர்களிடம் சமூக பார்வை கொண்டு சென்று இயங்குவது என்பது மிக கடினம்.
35 உறுப்பினர்கள், பல ஆதரவாளர்களை கொண்டு இயங்கி வருகிறோம்.


தோழமையுடன்
மும்பை விழித்தெழு இயக்கம் /MVI

இலங்கை அரசினை இனப்படுகொலை அரசு என அறிவித்த ஜெர்மனியிலுள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தை (Permanent People's Tripunal ) மும்பை விழித்தெழு இயக்கம் வரவேற்கிறது.

இலங்கை அரசினை இனப்படுகொலை அரசு என அறிவித்த ஜெர்மனியிலுள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தை
(Permanent People's Tripunal ) மும்பை  விழித்தெழு இயக்கம்  வரவேற்கிறது.

ஜெர்மனி நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு! 
 இலங்கையில் நடை பெற்றது இனப்படுகொலைகள்தான்..!  ஜெர்மனியின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நேற்று (10/12/2013) வழங்கியுள்ள இலங்கை இனப்படுகொலை தொடர்பான ஓர் தீர்ப்பில், இலங்கையில் 20௦9 இல் நடை பெற்றது  இனப்படுகொலைகள்தான் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

11 பேர்கள் அடங்கிய நீதி மன்றத்தின் இந்த வழக்கு விசாரணை கடந்த மூன்று நாட்களாக ஜெர்மனியில் நடந்து வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

 இந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முதல் அமர்வு அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் நடந்தது. இது ஜெர்மனியீல் நடை பெற்ற இரண்டாவது அமர்வாகும். அந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மற்றும் ஒருபகுதியாக  விடுதலைப் போராளிகளான புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று கூறிய ஐ.நா அதிகாரிகள், அமெரிக்க அரசாங்கம், டேவிட் கேமரூனின் இங்கிலாந்து அரசாங்கம், இந்திய அரசாங்கம் ஆகியவை தமிழீழ இனப்படுகொலையில் இலங்கைக்கு துணை செய்த பயங்கரவாத செயலை செய்துள்ளன எனும் தீர்ப்பினை வழங்கி ஐ.நா மற்றும் இந்திய,அமெரிக்க,இங்கிலாந்து அரசுகளின் முகத்தில் அறைந்து அளித்துள்ளது.

 இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும், இலங்கைப் படுகொலைகளில் பங்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்த தீர்ப்பு எத்தனை தூரம் பிரதிபலிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.. 
ஆனால் ,மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகள் இந்த தீர்ப்பின் முக்கியத்துவத்தை நிச்சயம் பதிவு செய்திருப்பார்கள் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை..! 
சர்வதேச அமைப்பின் ஜெனிவாக் கூட்டத்தில் எதிர்வரும் மார்ச்சில் இந்த தீர்ப்பும் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதில் ஐயம் இல்லை!

ஆகவே மும்பை தமிழர்களான நாம் தமீழீழ இனப்படுகொலைக்கான நீதி, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பே என்பதை வலியுறுத்தி கருத்தியல் தளத்திலும்,சமூக தளத்திலும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் 
மிக விரைவில் அனைத்து தமிழ் அமைப்புகள், அமைப்பு சாரத சமூக ஆர்வலர்களை  , மராத்திய தமிழர் அமைப்புகளின் கூட்டமைப்பு, மராத்திய மாநில தமிழர் சங்கத்தை  ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுக்கம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம், சிறிதர் , மும்பை விழித்தெழு இயக்கம் .
புகைப்படம்: இறுதி நேரத்தில் என்ன நடந்தது ? புதிய போர்குற்ற ஆதார வீடியோ வெளியானது ! http://aathavan2.com/2013/12/10/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8/



தொடர்புக்கு து. சிரிதர் -09702481441, தங்க பாண்டியன் -9821072848 , பன்னிர் செல்வம் 9619888966ஒருங்கிணைப்பாளர்  
விழித்தெழு இயக்கம் ,மும்பை

http:// vizhithezhuiyakkam.blogspot.com
 
http://www.facebook.com/groups/vizhithezhuiyakkam/


வியாழன், 21 நவம்பர், 2013

இலவச திரைப்பட பயற்சிப் பட்டறை

மும்பை விழித்தெழு இயக்கம் மற்றும் தமிழ் ஸ்டுடியோ இணைந்து நடத்திய இலவச திரைப்பட பயற்சிப் பட்டறை கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்றது.
===============================
1) #ஒவ்வொரு மாதம் இரண்டாம் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு குறும்படங்கள் /ஆவணப்படங்கள் திரையிட்டு ,அதை குறித்து விவாதிப்பது என முடிவு செய்துள்ளோம்..(அதன் முதல் நிகழ்வு வருகிற டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை).
2) ஏப்ரல் மாதத்தில் , பத்திரிக்கை துறைக்கான பயற்சி நடத்த முயற்சித்து வருகிறோம்...

#பயற்சியில் கலந்துக்கொண்ட நாளைய சமூக கலைஞர்களுக்கும் (இதில் 50க்கு மேற்பட்டோர் விடுமுறை எடுத்து வந்தனர்), உதவி இயக்குனர் மதியழகன், பணம் வேண்டாம் என்று தெரிவித்து இடம் தந்த திரு.சூசை மற்றும் பல பணிகளையிடையே நேரம் ஒதுக்கி கலந்துக்கொண்டு சிறப்பான பயற்சி அளித்த தமிழ் ஸ்டுடியோ அருண், அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..
/மும்பை விழித்தெழு இயக்கம்/MVI