புதன், 11 டிசம்பர், 2013

இலங்கை அரசினை இனப்படுகொலை அரசு என அறிவித்த ஜெர்மனியிலுள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தை (Permanent People's Tripunal ) மும்பை விழித்தெழு இயக்கம் வரவேற்கிறது.

இலங்கை அரசினை இனப்படுகொலை அரசு என அறிவித்த ஜெர்மனியிலுள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தை
(Permanent People's Tripunal ) மும்பை  விழித்தெழு இயக்கம்  வரவேற்கிறது.

ஜெர்மனி நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு! 
 இலங்கையில் நடை பெற்றது இனப்படுகொலைகள்தான்..!  ஜெர்மனியின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நேற்று (10/12/2013) வழங்கியுள்ள இலங்கை இனப்படுகொலை தொடர்பான ஓர் தீர்ப்பில், இலங்கையில் 20௦9 இல் நடை பெற்றது  இனப்படுகொலைகள்தான் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

11 பேர்கள் அடங்கிய நீதி மன்றத்தின் இந்த வழக்கு விசாரணை கடந்த மூன்று நாட்களாக ஜெர்மனியில் நடந்து வந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

 இந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் முதல் அமர்வு அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் நடந்தது. இது ஜெர்மனியீல் நடை பெற்ற இரண்டாவது அமர்வாகும். அந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மற்றும் ஒருபகுதியாக  விடுதலைப் போராளிகளான புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று கூறிய ஐ.நா அதிகாரிகள், அமெரிக்க அரசாங்கம், டேவிட் கேமரூனின் இங்கிலாந்து அரசாங்கம், இந்திய அரசாங்கம் ஆகியவை தமிழீழ இனப்படுகொலையில் இலங்கைக்கு துணை செய்த பயங்கரவாத செயலை செய்துள்ளன எனும் தீர்ப்பினை வழங்கி ஐ.நா மற்றும் இந்திய,அமெரிக்க,இங்கிலாந்து அரசுகளின் முகத்தில் அறைந்து அளித்துள்ளது.

 இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும், இலங்கைப் படுகொலைகளில் பங்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்த தீர்ப்பு எத்தனை தூரம் பிரதிபலிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.. 
ஆனால் ,மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகள் இந்த தீர்ப்பின் முக்கியத்துவத்தை நிச்சயம் பதிவு செய்திருப்பார்கள் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை..! 
சர்வதேச அமைப்பின் ஜெனிவாக் கூட்டத்தில் எதிர்வரும் மார்ச்சில் இந்த தீர்ப்பும் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதில் ஐயம் இல்லை!

ஆகவே மும்பை தமிழர்களான நாம் தமீழீழ இனப்படுகொலைக்கான நீதி, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பே என்பதை வலியுறுத்தி கருத்தியல் தளத்திலும்,சமூக தளத்திலும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் 
மிக விரைவில் அனைத்து தமிழ் அமைப்புகள், அமைப்பு சாரத சமூக ஆர்வலர்களை  , மராத்திய தமிழர் அமைப்புகளின் கூட்டமைப்பு, மராத்திய மாநில தமிழர் சங்கத்தை  ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுக்கம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம், சிறிதர் , மும்பை விழித்தெழு இயக்கம் .
புகைப்படம்: இறுதி நேரத்தில் என்ன நடந்தது ? புதிய போர்குற்ற ஆதார வீடியோ வெளியானது ! http://aathavan2.com/2013/12/10/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8/



தொடர்புக்கு து. சிரிதர் -09702481441, தங்க பாண்டியன் -9821072848 , பன்னிர் செல்வம் 9619888966ஒருங்கிணைப்பாளர்  
விழித்தெழு இயக்கம் ,மும்பை

http:// vizhithezhuiyakkam.blogspot.com
 
http://www.facebook.com/groups/vizhithezhuiyakkam/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக