புதன், 27 ஏப்ரல், 2016

தன்மானத்தலைவர் சத்தியவாணி முத்து‬

தன்மானத்தலைவர் _சத்தியவாணி_முத்து‬ ..
பெப்ரவரி 14,1923 - நவம்பர் 11,1999
அன்னை சத்தியவாணி முத்து ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் செல்வாக்கான ஒடுக்கபட்ட மக்கள் தலைவர்.
இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், ராஜ்ய சபை உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.
குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
தமிழக அரசின் இலவச தையல் எந்திரம் வழக்கும் திட்டத்துக்கும் சத்தியவாணி முத்து பெயர் சுட்டப்பட்டுள்ளது.
முதன்முதலில் மத்திய அமைச்சரைவில் இடம் பெற்ற காங்கிரஸ் அல்லாத திராவிட கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு அரசியல்வாதி மற்றோவர் பாலா பழையனூர் .
திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையத் தொடங்கிய இவர் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்று சொந்தக் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அக்கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து விட்டது.
அன்னை சத்தியவாணி முத்து 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கபட்ட காலத்திலிருந்து அதன் உறுப்பினராக இருந்தார்.
’’அரசியலில் தி.மு.க. இயக் கத்தில் பெண்கள் ஈடுபடுவது அந்த கால கட்டத்தில் சரியா இல்லையா என்ற விவாதத்துக்கு இடையே சத்தியவாணி முத்து தி.மு.க. வில் தன்னை ஈடுபடுத்தி பெண்களுக்காக புரட்சிகர கருத்தை எடுத்துச் சொன்னார்.
1953 இல் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
1959-1968 கால கட்டத்தில் திமுகவின் கொள்கை விளக்கச் செயலாளராகப் பதவி வகித்தார்.
அன்னை என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் இருந்து 1957 இல் சுயட்சையாகவும் 1967 மற்றும் 1971 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சார்பிலும் போட்டியிட்டு மூன்றுமுறை வெற்றிபெற்றார்.
1962 இல் பெரம்பூர் தொகுதியிலும் 1977 இல் உளுந்தூர்பேட்டைத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோற்றுப் போனார்.
இவர் 1967 முதல் 1969 வரை தமிழ்க முதல்வர் அண்ணாதுரை அமைச்சரைவில் அரிஜன நலத்துறை மற்றும் செய்திதுறை அமைச்சராகப் பதவி வகித்தார். தொடர்ந்து 1974 தமிழ்க முதல்வர் கருணாநிதியின் அமைச்சரைவில் அரிஜன நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அதை ஆண்டில் திமுகவிலிருந்து விலகினார்.
விலகிய காரணம் ..
அண்ணாதுரையின் மரணத்துக்குப்பின் தாழ்த்தப்பட்டோர் நலனில் யாரும் அக்கறை காட்டவில்லை, புதிய திமுக தலைவர் கருணாநிதி பாரபட்சம் காட்டுகிறார் என்ற குற்றசாட்டுடன் சத்தியவாணி முத்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவிலிருந்து 1974 இல் விலகினார்
இவர் 1974 இல் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்று சொந்தக் கட்சியை ஆரம்பித்தார்.
ம்பேத்கர் பெயரில் ஒரு கல்லூரி பெரம்பூரில் தொடங்கப்பட்டது. அதுவும் தனது தொகுதியான பெரம்பூரில் தான் தொடங்க வேண்டும் என்று சத்தியவாணி முத்து வாதாடி பெற்றார்.
அந்த கால கட்டத்தில் கல்லூரி தொடங்க அரசுக்கு ஓரளவு பணம் கொடுக்க வேண்டும். அந்த பொறுப்பையும் அவர் ஏற்று ஏ.எல்.சீனிவாசனிடம் 5 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுத்தந்து அம்பேத்கர் கல்லூரி உருவாக வழிவகை செய்தார்.
இந்தியாவில் அம்பேத்கர் பெயரில் உருவான முதல் கல்லூரி தமிழ்நாட்டில் தான் அதுவும் பெரம்பூரில் தான் அமைந்தது. நான் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது சத்தியவாணி முத்துவின் வற்புறுத்தல் காரணமாகத்தான் இதுவும் வந்தது.
மராட்டியத்தில் அம்பேத்கர் பல்கலைக்கழகம் உருவாக்க 12 ஆண்டுகளுக்கு முன்பே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமுலுக்கு வராததால் தலித் மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள்.
இன்று யார் யாரோ? புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை பயன் படுத்தி நாட்டில் அரசியல் நடத்துகிறார்கள். அந்த கால கட்டத்தில் அம்பேத்கர் பெயரில் . குரல் கொடுத்து அதற்கு அனுசரணையாக இருந்து போராட்டங்களை ஊக் குவித்து ஊர் ஊராக சென்று பாடுபட்டவர் சத்தியவாணிமுத்து.
அம்பேத்கருக்கு புகழ்சேர்க்க அனைத்து இடங்களிலும் பேசினார்.
தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் புதுக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அம்பேத்காருக்குப் பின் யாரும் தாழ்த்தப்பட்டோர்களுக்காகப் முழுமனதாகப் போராடவில்லை... நாம் புதுக்கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சியாக அமர்ந்து தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடுவோம். அவர்கள் முடிவில்லாமல் நம்மை சுரண்டுவதையும் அவமானப்படுத்துவதையும் இனியும் அனுமதிக்க முடியாது.
சென்னை புறநகர்ப் பகுதியான ஒரகடத்தில் பெற்றோரை இழந்த சிறுமியருக்கான காப்பகம் ஒன்றை நடத்தச் சிலர் முன்வந்தனர். அதன் பின்னணியில் இருந்தவர், கருணாநிதியின் அமைச்சரவையில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்தவர் சத்தியவாணி முத்து. காப்பகத்துக்குக் கனிமொழியின் பெயர் சூட்ட விரும்பினார் சத்தியவாணி முத்து. அப்போதுதான் கனிமொழி யார் என்று தெரிய வந்தது. கருணாநிதியை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் கனிமொழியின் பெயரைக் காப்பகத்திற்குச் சூட்ட சத்தியவாணி முத்து திட்டமிட்டார்
பின்னர் 1977 இல் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தனது கட்சியை இணைந்து விட்டார்.
அன்னை சத்தியவாணி முத்து ஏப்ரல் 3, 1978 முதல் ஏப்ரல் 2, 1984 வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜா சபை உறுப்பினராக இருந்தார்.
1979 இல் இந்தியப் பிரதமர் சரண் சிங்கின் அமைச்சரைவில் பதவி வகித்தார்.
இவரும் பாலா பழையனூரும் தான் முதன்முதலில் மத்திய அமைச்சரைவில் இடம் பெற்ற காங்கிரஸ் அல்லாத திராவிட கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு அரசியல்வாதிகள்.
எண்ணூரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்கு அன்னை சத்தியவாணி முத்து நகர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இலவச தையல் எந்திரம் வழக்கும் திட்டத்துக்கும் சத்தியவாணி முத்து பெயர் சுட்டப்பட்டுள்ளது.
1970-களில் சென்னை,அண்ணாநகர் கிழக்குப்பகுதியில், இன்றைய காந்திநகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக்கு அருகே காங்கிரஸ் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள பகுதி (புதிய ஆவடி சாலை மற்றும் அண்ணாநகர் கிழக்கும் சந்திக்கும் இடம்) மணிவர்மா காலனி என்றும், அதையொட்டிய அண்ணாநகர் கிழக்குச் சாலையில் சத்தியவாணிமுத்து காலனி ( இது தி.மு.க. சார்பானது) என்றும் இரண்டு பகுதிகள் இருந்தன. அந்தக் காலனிகளை அப்புறப்படுத்திய இடத்தில்தான் இப்போது அரசினர் மருத்துவமனை இயங்கி வருகிறது.

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஆதிதமிழர்கள் எப்படி ஆதிதிராவிடர்கள் ஆனார்கள்‬ ??...



தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் ‘ஆதித் தமிழர்’ என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என்றே அழைக்கப்பட்டு, தமிழர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டனர்.
............................................................................................
சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் தொன்மையான நகர் நாகரிகத்துக்கு திராவிடர்கள் தான் சொந்தக்காரர்கள் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடுவது ஆதி திராவிடர்களையேச் சாரும். ‘தமிழ் பேசும் தாழ்த்தப்பட்ட மக்கள்’ தமிழாதற்குதி (ஆதித் தமிழர்) என்று அழைக்கப்பட்டனர். (தமிழாதி – உயர்குல வகுப்பினர் எனக் கூறிக் கொள்வோர், தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்க இந்தச் சொல்லை கையாள்கின்றனர்).
மத்திய காலத்தில் எழுதப்பட்ட தமிழ் நூலாகிய ‘ஞான வெட்டியான்’ என்ற நூலில் ஆதி திராவிடர்கள் தங்கள் புலன்களை அடக்கி மனத்தை ஆண்டதற்கும் அதன் மூலம் ஆத்ம ஞானம் பெற்று உயர்ந்து நின்றதற்கும் ஆதாரமாக வெள்ளைக் குடையையும், வெண்சாமரத்தையும், கற்கள் பதித்த காதணிகளையும், வாளையும் பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது. இவை அனைத்தும் ஆதிதிராவிடர்கள் ஒரு காலத்தில் மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்பதை எடுத்துக்காட்ட வந்தவை எனக் கருதப்படுகிறது.
சுதந்தர இந்தியாவில் தீண்டாமை என்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டு வந்த போதிலும் இன்றளவும் ஆதி திராவிடர்கள் ஒதுக்கப்பட்டே வாழ்ந்து வருகின்றனர். மரபு வழியில் இவர்களைப் ‘பறையர்’ என்றும் அழைக்கின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் நலன் கருதி பண்டிதர் அயோத்திதாசர் தான் அமைத்திருந்த ‘பறையர் மகாசன சபை’ என்ற பெயரை 1910ம் ஆண்டுக்குப் பின்னர் ‘ஆதிதிராவிடர் மகாசன சபை’ என மாற்றினார். திராவிடர் என்னும் சொல் தென் இந்தியாவில் வாழ்ந்த அத்தனை மக்களையும் குறிக்கும் பொதுப்பெயராகக் கருதப்பட்டதால் பழங்குடி மக்கள் என்பதனைக் குறிக்கும் ‘ஆதி’ என்னும் அடைமொழியை இணைத்து ஆதிதிராவிடர் எனக் குறிக்கத் தொடங்கினார்கள்.
ஆதிதிராவிடர் மகாசன சபை 1918ல் அன்றைய சென்னை மாகாண அரசுக்குக் கொடுத்த கோரிக்கையில் மக்கள் கணக்கெடுப்பிலும் மற்ற அரசு ஆவணங்களிலும் ‘பறையர்’, ‘பஞ்சமர்’ என்னும் பெயர்களுக்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ எனும் பெயர் பெற்றது. ஆனால் அப்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி இதனை ஏற்கவில்லை. ஆந்திரத்திலும், கன்னடத்திலும் ‘ஆதி திராவிடர்’ என்னும் பெயரை ஏற்கத் தாழ்த்தப்பட்டோரில் எவரும் முவரவில்லை. இந்த நிலையை அந்த அதிகாரி சுட்டிக் காட்டினார். ஆனால், ஆதி திராவிடர் மகாசன சபை, பெயர் மாற்ற கோரிக்கையிலே பிடிவாதம் காட்டியது. தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மத்தியில் பொதுக்கூட்டங்கள் போட்டு, இதற்காக தனது கோரிக்கைக்கு அவர்களுடைய ஆதரவைத் திரட்டியது. நீதிக்கட்சியினரும் அந்த மகாசனசபைக்கு உதவியாக இருந்தனர்.
அக்கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான டாக்டர் சி. நடேச முதலியார், ஆதி திராவிடர் மகாசன சபையின் கோரிக்கையை ஏற்குமாறு அரசினருக்குப் பரிந்துரை வழங்கும் தீர்மானம் ஒன்றை சென்னை மாநகராட்சிக் கூட்டம் ஒன்றில் முன்மொழிந்து அதை நிறைவேற்றுமாறு செய்தார். 1921ம் ஆண்டுக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தமிழ்நாட்டளவில் பரவலாக சுமார் 15,025 பேர் தங்களை ஆதி திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டு, குடி மதிப்பீட்டுக் கணக்கேட்டில் அதை ஏறும்படி செய்தனர். 1921ம் ஆண்டு குடிமதிப்புக் கணக்கெடுப்பின்படி, சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை 63,72,074 ஆகும். இவர்களில் சுமார் 15,000 பேர்தான் ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள முன்வந்தனர். இது, தமிழக தாழ்த்தப்பட்டோரும் ‘திராவிடர்’ என்னும் பெயரை விரும்பவில்லை என்பதையே புலப்படுத்தியது. சென்னை மாகாணத்தின் இந்தப் பகுதிகளில் தங்களை ஆதிதிராவிடர் என்று பதிவு செய்து கொள்ள எவரும் முன் வரவில்லை..
1922ம் ஆண்டு மார்ச் திங்கள் 25ம் நாள் பஞ்சமர் என்ற இழி பெயர் நீக்கப்பட்டது. (ஆனால் பஞ்சமி நிலம் என்ற சொற்றொடரில் உள்ள பஞ்சமி என்ற சொல் மட்டும் இன்னும் நீக்கப்படாமல் பஞ்சமி நிலம் என்றே வழங்கப்படுகிறது). சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் ஆதி திராவிடர் என்னும் பெயரை அதிகாரபூர்வமாக ஏற்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்யும் தீர்மானம் ஒன்று நீதிக்கட்சியினரால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றி வைக்கப்பட்டது. ‘பஞ்சமர்’ அல்லது ‘பறையர்’ என்பதற்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ என்னும் பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அரசு ஆணை பிறப்பித்தது.
இட ஒதுக்கீட்டு ஆணை, கல்லூரிக் குழுக்கள் ஆகியவற்றால் கல்வித்துறையிலும் அரசுப்பணியிலும் பார்ப்பனர்களின் ஏகபோகத்தைத் தடுத்தும், பஞ்சமர் பெயர் மாற்றத்தால் வைதீக சாதி அமைப்புகளைத் தகர்த்தும் செயல்பட்டது நீதிக்கட்சியின் அரசு. ஆனால் இந்தப் பெயர் மாற்றம் தமிழ் மாவட்டங்களில்தான் அமலில் இருக்குமென்றும் அரசு தெளிவுப்படுத்தியது. மற்றபடி, தெலுங்கு மாவட்டங்களில் ‘ஆதி திராவிடர்’ என்றும், கன்னட மாவட்டங்களில் ‘ஆதி கன்னடர்’ என்றும் வழங்கிவரும் என்பதாகவும் அரசு உறுதிப்படுத்தியது.
ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் ‘ஆதித் தமிழர்’ என அழைக்கப்படாமல் ஆதி திராவிடர் என்றே அழைக்கப்பட்டு, தமிழர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டனர்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் ஆதி திராவிட நலத்துறை மூலமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் உதவித் தொகையில் பல கொடிகள் மோசடி நடந்திருக்கிறது. இந்த மோசடியால் ஆதிதிராவிடரின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் தடைபடும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தகவல் : தமிழ்பேப்பர் இணையத்தளம்

‎டாக்டர் பூவை மு.மூர்த்தியார்_வரலாறு‬



எம்.ஏ., எம்எல்ஏ ., பி எச் டி . (10/04/1953 - 02/09/2002)

தமிழக சாதி வெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் டாக்டர் பூவை மூர்த்தியர் ..

டாக்டர் பூவை மு.மூர்த்தியார், போன்ற முன்னோடிக்களின் வரலாறும், உரிமை போராட்டமும் & போராட்ட குணமும் மறைந்து விடக்கூடாது..


‪‎பூவையாரின்_வரலாறும்_இயக்கமும்_செயல்பாடும்‬ ..

திருவள்ளுவர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், ஆண்டரசன் பேட்டை என்னும் குக்கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் திரு முனுசாமி - திருமதி ருக்மணி அம்மையார் என்பவருக்கு 10/04/1953 ஆம் ஆண்டு மூர்த்தியார் பிறந்தார்.
1958 ஆம் ஆண்டு ஆண்டரசன் பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து, 1963 ஆம் ஆண்டில் ஐந்தாம் வகுப்பு முடித்தார். 1964 ஆம் ஆண்டு திருமழிசையிலுள்ள திரு சுந்தரமுதலியார் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து 6 ஆம் வகுப்பை தொடர்ந்தார். 1970 ஆம் ஆண்டு பள்ளி இறுதி வகுப்பில் வெற்றி பெற்று பட்டாபிராமில் உள்ள இந்துக் கல்லூரியில் PUC படிப்பை தொடர்ந்தார்.
1970 ஆம் ஆண்டு கல்லூரி மாணவத் தலைவராக நின்று வெற்றி பெற்று கல்லூரி மாணவர்கள் மத்தியில் படிப்பில் சிறந்தவராகவும் பேச்சில் சொல்வன்மை மிக்க புரட்சியை தட்டி எழுப்பும் பேச்சாளராகவும் விளங்கினார். 1971ல் ஆம் ஆண்டு PUC முடித்தார்.
சிறுவயத்திலே தாய் மொழியும் சமூகம் ஆகியவற்றின் மீது ஆளவிலாபற்றும் கொண்டவர்.
1971 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் B .A Economics படித்தார். குடும்ப வறுமை காரணமாக புரசைவாக்கம் அரசு விடுதியில் தங்கி அங்கு இருந்தே மாநில கல்லூரிக்கு நடந்து சென்றே படித்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவத்தலைவர் தேர்தலில் நின்று வெற்றி வாகை சூட்டினர்.
1973 ஆம் ஆண்டு கல்லூரியிலே இரண்டாவது மாணவராக வெற்றி பெற்றதன் காரணமாக சென்னை பல்கலைகழத்தின் மூலமாக தகுதி அடிப்படையில் 1974 ஆம் ஆண்டு தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் சேர்ந்து MA Economics படிப்பை 1975 ஆம் ஆண்டு முடித்தார்.
1978 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டப் படிப்பை முடித்தார். தத்துவ படிப்பான Ph .D பட்டமும் பெற்று திகழந்தார்.
ஒடுக்கப்பட்ட இனமக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்,டாக்டர் அம்பேத்கர் மன்றம் 1978 ஜனவரி 26-ல் பூவையில் டாக்டர்.பூவை.M. மூர்த்தியார் அவர்களால் துவங்கபட்டது. டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் வரலாறு என்பது முதலில் சென்னையில் உள்ள ஒடுக்கபட்ட மக்களிடையே பகுத்தறிவு உண்டாக்கவும், அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கவும் உருவாக்கபட்ட ஒரு மன்றமாகும்.
தென் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளிலும் இயக்கங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், பிராமணர் அல்லாதாரின்சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாப்பதே டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் நோக்கம்.
மன்றம் தொடங்கிய சில மாதங்களில் அசுர வளர்ச்சி பெற்று சிரு இயக்கமாக இருந்தாலும் பல ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவுடன் பூவை ஒன்றிய டாக்டர் அம்பேத்கர் மன்றம் என்று பெயர் மாற்றபட்டது. சென்னை பூவிருந்தவல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பல ஒடுக்கப்பட்ட மக்களின் படிபுக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும், பிறந்த மண்ணின் சொந்தக்காரர் என்ற உரிமையுடன் வாழ உறுதுனையாய் நின்றது.
பல ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு பெருகவும் மற்றும் திருவள்ளுர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆதரவு பெருகவே செங்கை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மன்றம் என்று பெயர் மாற்றபட்டது.
சிறு சிறு குழுக்களாக இயங்கபட்ட இயக்கம் பிறகு, பல போராட்டங்கள் நடத்தி, பல ஆதிக்க சமூகங்களின் எதிர்புகளை மீரி கர்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்ற கோட்பாடுகளோடு, சுதந்திரம், சமத்துவம், சகோதர்துவம் என்ற கொள்கைக்ளோடு அனைவருக்கும் பொதுவாக டாக்டர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னனி (APLF) அக உருவெடுத்தது.
14.4.1984 ஆம் அண்டு டாக்டர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி (APLF ) என்ற மாபெரும் இயக்கத்தை ஏற்படுத்தி மாநிலத்தலைவராக பொறுப்பு ஏற்று சட்டரீதியாக சமாதனத்தை எங்கெல்லாம் நிலா நாட்ட முடியுமோ அங்கெல்லாம் சமாதானமாக போக தம் தொண்டர்களுக்கு கட்டளையிட்டார்.
சட்ட விரோதமாக தம் சமுதய்ததுக்கு எங்கெல்லாம் கொடுமைகள் நடக்கிறதோ அங்கு எல்லாம் ஆயதத்தை பயன்படுத்தி மக்களுக்கு ராணவ பலமாக அரணாக இருந்தார்.
1991 ஆம் ஆண்டு பூந்தமல்லியில் பூவையார் தலைமையில் அன்றையே மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் சிங் அவர்களால் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது.
அமெரிக்க கலிபோர்னிய பல்கலைகழகம் பூவையாரின் சமுக சேவைகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது.
29/9/1998 டாக்டர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி யை புரட்சி பாரதம் என்ற அரசியல் இயக்கமாக மாற்றினர்.
2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற‪#‎தமிழக_சட்டமன்ற_தேர்தலில்‬ புரட்சிபாரதம் தேர்தல் களத்தில் தனித்து போட்டியிட்டது.
பல மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்களாக நின்று கணிசமான வாக்குகளை பெற்று அரசியல் கட்சிகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
திருமழிசை அருகே, பெப்சி தொழிற்சாலை ஒன்று உண்டு. இத்தொழிற்சாலையின் முதலாளி, காமராஜின் நெருங்கயி நண்பர். இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு, ஒப்பந்தப் படி ஊதியம் தரவில்லை என்று போராட்டம் தொடங்குகிறது. இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித்துகள். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக பூவை மூர்த்தி களம் இறங்குகிறார். பூவை மூர்த்தி களத்தில் இறங்கி தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியதும்..பிரச்சனை முடிவுக்கு வந்தது..
பா.ம.க. அரசியல் கட்சியாக உருவெடுத்து விஸ்வரூபமாக வடமாவட்டங்களில் வளர்ந்து வந்த காலக்கட்டம் அது. 'அந்த' சாதிக்காரர்கள் ஒன்று சேருகிறார்கள் என்றதுமே, அப்பகுதியில் பெரும்பான்மையானவர்களாக வசித்து வந்த ஒடுக்கப்பட்ட மக்கள், தங்களுக்கும் ஒரு அமைப்பினை எதிர்நோக்கி இருந்தார்கள். தங்களுக்குள் ஒரு தலைவன் தோன்ற மாட்டானா என்று ஏங்கிப் போய் கிடந்தார்கள். அம்மக்களது விருப்பத்தைப் புரிந்துகொண்டு திடீரென்ற களத்தில் குதித்தவர் பூவை மூர்த்தியார். புரட்சியாளர் அம்பேத்கர் பாணியில் இவரும் வக்கீல். எப்போதும் கோட்டு, சூட்டு போட்டு ஜம்மென்றிருப்பார். அரசியலுக்கு வாகான, களையான கருப்பு முகம்.
02/09/2002 ஆம் நாள் இயற்கை எய்தினர்.
“பூவை மூர்த்தியார் இறந்தபோது பாடிய மரண கானாவைத்தான் மெட்ராஸ் படத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர்
.............................................................................................................
பல கட்சியில் மேல் சமூகத்தினரின் ஆதிக்கத்திலும் அவர்களின் தீவிர இந்து சனாதன கோட்பாடுகளிலும் வெறுப்புற்ற டாக்டர்.பூவை.M.மூர்த்தியார், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு போராட நமக்கும் அரசியல் உரிமையும் பங்கும் வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி (PBK) 1998ல் துவங்கபட்டது.
டாக்டர் பூவை மு.மூர்த்தியார் MA.ML.Phd மறைவுக்கு பிறகு புரட்சிபாரதம் கட்சியின் தலைவராக டாக்டர் பூவை மு.ஜெகன்மூர்த்தி இருந்து வருகிறார். ஒரு முறை தமிழக சட்டபேரவை உறுப்பினராக இருந்தவர்..
1978
பூவிருந்தவல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடக்கும் சாதி கொடுமைகளை களைய சென்னை பூவிருந்தவல்லி மேல்மாநகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் டாக்டர் அம்பேத்கர் மன்றம் தொடங்கபட்டது.
1978
அதே வருடம் நாகை முன்னாள் பாரளமன்ற உருப்பினர் S.முருகையன் படுகொலையை கண்டித்து பூவிருந்தவல்லியில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தபட்டது மற்றும் மக்கள் மனதில் அம்பேத்கர் மன்றம் நம்பிக்கை உண்டாக்கியது.
1978
தொடர்ந்து விழுப்புரம் பெரிய காலனியில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு எதிரான வன்னியர் இன கலவரம் குறித்து வெகுண்டு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மூலமாக பூவிருந்தவல்லியில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தபட்டது.
1978
அதே வருடத்தில் டாக்டர் அம்பேத்கர் மன்றம் பெரும் வளர்ச்சி பெர தொடங்கியது மற்றும் நாடெங்கிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த சாதிக்கலவரங்களைக் கண்டித்து பூவை மாநகரில் மாபெறும் கண்டனக்கூட்டம் நடத்தபட்டது.
1979
நடைபெற்ற நாடாளுமன்றத்திற்கு நடை பெற்ற இடை தேர்தலில் திரு.பூவை.M.மூர்த்தியார் அவர்கள் தனது 27வது வயதில் தனித்து நின்று போட்டியிட்டு பல தடைகளையும் மீரி 6000 வாக்குகள் பெற்று பலருக்கு அதிர்ச்சி அளித்தார்.
1979
பூவிருந்தவல்லி ஒன்றியம் குத்தம்பாக்கம் கிராமத்தில் வேளான்மை தொழிலாளர்கள் கூலி உயர்வை கோரியும் அவர்களின் நியாயமான உரிமைகளை மீட்டு தர கோரியும் மாபெரும் கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தபட்டது.
1980
மன்றம் தொடங்கிய சில மாதங்களில் அசுர வளர்ச்சி பெற்று சிரு இயக்கமாக இருந்தாலும் பல தலித் மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் ஆதரவுடன் பூவை ஒன்றிய டாக்டர் அம்பேத்கர் மன்றம் என்று பெயர் மாற்றபட்டது.
1984
பல தலித் மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் படிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும், பிறந்த மண்ணின் சொந்தக்காரர் என்ற உரிமையுடன் வாழ்ந்திடவும் பல பகுத்தறிவு கூட்டங்கள் நடத்தபட்டது.
1984
இந்த ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திரு.பூவை.M.மூர்த்தியார் அவர்கள் தனது 32வது வயதில் தனித்து நின்று போட்டியிட்டு பல தடைகளையும் மீரி 60000 வாக்குகள் பெற்று பலருக்கு பீதி அளித்தார்.
1984
சென்னையில் APLF-ன் முதல் மாநாடு.
1990
"ஒரே ஒரு ஊரிலே" - திரைப்படம் எதிர்ப்புப் பேரணி.
1991
ஆந்திர மாநிலம், குண்டூர் கிராமத்தில் தலித் மக்கள் படுகொலையைக் கண்டித்து பேரணி.
1992
பஞ்சமி நில மீட்புப் பேரணி.
1996
அரகோணத்தில் அன்றய முதலவர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களை சிறப்பு அழைப்பாளராக வரவேற்று APLF-ன் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது.
1996
மேலவளைவு முருகேசன் படுகொலையைக் கண்டித்துக் கண்டனக்கூட்டம்.