செவ்வாய், 29 ஜூலை, 2014

MVI/ மும்பை விழித்தெழு இயக்கம் :- ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக உழைத்த தலைவர்கள் (BANNER ) ..





மும்பையில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உள்ள சங்கங்களிடம் (தென் இந்திய ஆதி திராவிட மகா சபை ; தேவந்திர குல வேளாளர் சங்கம் , மும்பை அருந்ததியர் சங்கம் ) கீழே இணைத்து உள்ள மாதிரி பேனரை கொடுக்க உள்ளோம் .
முயற்சிக்கிறோம் ...

இதில் நமது MVI  (மும்பை விழித்தெழு இயக்க  ) பெயர் இல்லாத பேனர் மற்றும் புகைப்படம் கொடுக்க உள்ளோம்...நமக்கு விளம்பரம் தேவை இல்லை..

மறைக்கப்பட , புறக்கணிக்கப்பட்ட தலைவர்களின் படங்களை வரலாறுகளை ,சிந்தனைகளை  மும்பையில் உள்ள  ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களிடம் , மக்களிடம் , இளைஞர்களிடம் கொண்டு செல்ல முயற்சிகளை தொடங்கி இருக்கிறோம்.. 

குறிப்பு : (மேலே குறிப்பிட்டுள்ள தலைவர்களின் படங்கள் , சிந்தனைகள் செய்திகள் மும்பையிலும் மற்றும்  தமிழகத்திலும் பரவாலாக இல்லை ..இது வரை மிக சிலரே கொண்டு சென்று உள்ளனர் )

மும்பை விழித்தெழு இயக்கம் 
DESIGN BY VELMURUGAN,
CORRECTION DONE BY FRANCIS, MADHAN , MAKIZHAN

ஞாயிறு, 27 ஜூலை, 2014

எமது செயல்திட்டங்களை அறிவிக்கிறோம்...மும்பை விழித்தெழு இயக்கம் / MVI



MVI:-#தமிழர் காமராஜர் -தமிழர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் பிறந்த மாதமான ஜூலை மாதத்தில் எமது செயல்திட்டங்களை அறிவிக்கிறோம்..#மும்பை விழித்தெழு இயக்கம் 
===========================================================
மதிப்பிற்குரிய மும்பை வாழ் தமிழ் மக்களே !!
வணக்கம்...

தமிழர்களே, தயவு கூர்ந்து உங்கள் பெயர்களுக்கு பின்னாடி சாதி பெயர்களை போடுவதை தவிர்க்கவும் மற்றும் தகப்பன் பெயர் (initial ) ஆங்கிலத்திலும் பின் வரும் பெயரை தமிழில் போடாமல்..முழவதையும் தமிழில் எழதுங்கள்.

#செயல்திட்டங்கள் ......

1. தாராவியில் நூலகம் - படிப்பகத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் .

2. தாராவி -90 அடி சாலைக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர்..
தாராவி- குறுக்கு சாலை – Cross Road க்கு தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அல்லது பண்டித அயோத்திதாசர் பெயர் ,
தாராவி செக்டர் (தற்போது வரை தாராவி செக்டர் திட்டத்தை எதிர்க்கிறோம் மக்களை விரட்டும் திட்டமாக இது இருக்கிறது ) -தாராவி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யபட்டு திட்டம் நிறைவேற்று பட்சத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பெயர் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இது இந்த சட்டமன்ற தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வரும் பல கட்சிகளின் தேர்தல் அறிக்கையாக கொண்ட வர வலியுறுத்த உள்ளோம்.

3. நமது தமிழ் சமூகத்தில் 1௦, 12 வது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அல்லது குறைந்த மதிப்பெண் பெற்று படிக்க ஆர்வமுள்ள பொருளாதரத்தில் பின் தங்கிய ஏழை மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி பெறுவதற்கான உதவித்தொகை, கல்வி ஆலோசனை வழங்கவது அல்லது வருடத்திற்கு ஒரு மாணவ மாணவியை தேர்ந்தெடுத்து சமூகத்திற்கு பயன்படும் படிப்புக்கு உதவி செய்தல்.

4. IAS , IPS, IRS , IFS போன்ற முதல் தர உயர் அதிகாரிக்கான படிப்புக்கு Coaching Class /academy; உருவாக்க முயற்சித்து மேற்கொள்ளப்படும்.

5. பத்து வகுப்பு மற்றும் பன்னிரெண்டும் வகுப்புக்கு தனியார் மூலமாக நடந்த வரும் வகுப்புக்கு முப்பது ஆயிரத்திற்கு மேல் கொடுத்த மாணவர்கள் படித்த வருகிறார்கள். பள்ளியில் சேர்க்க போது அதிகபட்சமான நன்கொடை என்கிற பெயரில் பணம் கொள்ளை நடந்து வருகிறன இதை அகற்றி சிறந்த கல்வியை பள்ளிகளை கொடுக்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஒருங்கிணைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

6. மும்பையில் தமிழ் மற்றும் தமிழ் அல்லாத உழைக்கும் மக்கள் பலர் தெருவோர தொழில் செய்யும் உழைப்பாளர்களாக இட்லி தொழில், உடை விற்பவராக, சிறு உணவு விற்பவராக, ஓட்டுனராக -டிரைவர்களாக, கார்மென்டில் வேலை செய்பவராக, கட்டிட தொழிலாளராக, இருந்து வருகிறனர். இவர்களுக்கு சமூக பாதுகாப்பும், சட்ட வழங்கி உள்ள அடிப்படை உரிமைகள் பெற்று தர முய்ற்சிகள் மேற்கொள்ளப்படும்.

7. பெயர்களுக்கு பின்னாடி சாதிய பெயர்களை தமிழர்கள் வைப்பதை தவிர்க்க தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் .

8. மும்பையில் தமிழ் வானொலி, தமிழ் பவன், மும்பையில் படிக்கும் நபர்கள் உயர் கல்விக்காக தமிழகத்திற்கு செல்லும் போது சேர்க்கை கிடைக்கமால் மிகவும் சிரமப்படுகிறனர் (இரண்டு தலைமுறையாக மும்பையில் இருந்தாலும் மும்பையிலும் & தமிழகத்திலும் இவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது ..தனது திறமையால் மட்டுமே கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்து வருகிறனர் ) தமிழகத்தில் இவர்களுக்கு 2% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் இது போன்ற கோரிக்கைகளை தமிழக அரசிடம் கொண்ட செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

9. தாராவி என்.சிவராஜ் மாநகராட்சி மைதானத்தை, பூங்காவாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன (நகர்ப்புறங்களில் வாழும் மக்கள், நெருக்கமான வீடுகளுக்கு மத்தியில் இறுக்கமான சூழ்நிலையில் இருப்பதால், ஒரு காற்றோட்டமான, மரம் செடிகளுடன், இயற்கையோடு இளைப்பாற, பேசி மகிழ என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது பூங்கா. ஆனால் தாராவி என்.சிவராஜ் மாநகராட்சி மைதானம் பராமரிப்பு இல்லமால் சுற்ற சுழல் பாதிக்கப்பட்டு இருக்கிறன)

10. தாராவியில் உள்ள பள்ளிகளுக்கு, சிறந்த பத்திரிகை /புத்தகத்தை மாததொரும் இலவசமாக வழக்கப்படும், சுற்று சுழல் குறித்து மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தல், சமூகத்திற்கு உழைத்த தலைவர்களின் கருத்துகளை , வரலாறுகளை கேள்வி பதில் போட்டி , கட்டுரை போட்டி, ஆவணப்படும் திரையிடல், அறிவியல் கண்காட்சி மூலமாக மாணவ மாணவிகளுக்கு சமூக தலைவர்களின் கருத்துகள் கொண்ட செல்லப்படும்.ஏதேனும் ஒரு அரசுப்பள்ளியைத் தேர்ந்தெடுத்து, அதன் அடிப்படை வசதி மற்றும் கல்வித்திறனில் (தமிழ் மற்றும் ஆங்கிலப்புலமையை பெருக்க, அறிவியல் மற்றும் கணித நுண்ணறிவுத்திறன்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.)

11. வேலைவாய்ப்புகென ஒரு அமைப்பை உருவாக்கி ஆண்டுக்கு ஒருமுறை தொழில் பயற்சி முகாம் நடத்துவதும், கோ அப்பெரடிவே கூட்டறவு வங்கி உருவாக்குவது என திட்டமிட்டு உள்ளோம்.

# சிறீதர் தமிழன்
ஒருங்கிணைப்பாளர்.

# பன்னிர் செல்வம் & தங்க பாண்டியன்
முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள்

#மனித நேயமும், உழைக்கும் மக்கள் மீது இரக்கம் கொண்டவர்களால் தான் சுரண்டப்படுவதை முழமனதுடன் எதிர்க்க முடியும் ஆனால் அடிப்படையிலே மனிதன் சுயநலம் மிக்கவன் இது மரபுக்கூறுகளின் வழியாகவும் உண்மைதான். எல்லா உயிர்களும் அப்படித்தான் இயங்கி வருகின்றன.
சிந்திக்கத் தெரிந்த காரணத்தால் சுயநலத்தைக் குறுக்கிக்கொண்டு அதைப் பொதுநலமாக ஆக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்
சமூக அதிகமான பகுத்தறிவு சிந்தனையூடும், சுதந்திரத்தோடும் இருக்க வேண்டும் என்பது எமது விருப்பம். உழைப்பவர்கள் ஓய்வேடுத்துக்கொள்ளும்போது வசதி படைத்தவர்கள் வாளெடுத்துக் கொண்டதால் ஏற்பட்ட செயற்கை சரித்தரத்தை மாற்றுவோம். சமூகத்தின் உழைப்பால் விளைந்த நாங்கள், எங்களுக்கு கிடைக்கபெற்ற ஆற்றல்களை இச் சமூகத்தின் நீடித்த வளர்சிக்கு உதவ நினைக்கிறோம். அதன் ஒரு பகுதியாக துண்டறிக்கையை தயார் செய்து உங்களிடம் ஒரு கருத்துருவாக்கம் செய்யவதும் . உங்கள் மனசாட்சியின் கதவுகளைத் தட்டுவதற்க்காவே இத்துண்டறிக்கை வெளியிடப்படுகிறது..

இதுவரை #மும்பை விழித்தெழு இயக்கம் இலங்கையில் நடந்த போரை நிறுத்துங்கள் –தமிழர்களை காப்பாற்றுகள் என்ற முழக்கத்தோடு மனித சங்கலி, கருத்தரங்கம், போராட்டம் என பல நடத்தப்பட்டு உள்ளன,, தமிழர்களை ஒருங்கிணைக்க தை-தமிழ் புத்தாண்டு –சமுத்துவ பொங்கல் நடத்தப்பட்டு வருகிறன, வாழ்வாதார பிரச்சனைக்கு மக்கள் மத்தியில் ஆவணப்பட திரையிடல், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக கருத்தரங்கம், ஆணுஉலை அமைப்பதற்கு எதிராக பிரச்சாரம், ஊர்வலம், உண்ணாவிரதம், மீதேன் அமைப்பதற்கு எதிராக ஆவணப்பட பிரசாரம் மீனவர்களுக்கான ஆதரவு போராட்டம், மரண தண்டனைக்கு எதிராக போராட்டம், நூல் வெளியீடு, ஆவணப்பட வெளியீடு மூலமான பிரச்சாரம், ஒவ்வொரு மாதம் ஆவணப்பட திரையிடல் & புத்தகம் வெளியீடு/அறிமுகம் செய்து தொடர்ந்த வருகிறன, மாணவ மாணவிகள் மத்தியில் கட்டுரை போட்டி போன்றவை நடந்துள்ளன, சமூக புரட்சியாளர் அம்பேத்கர் திரைப்பட குறுந்தகடை தமிழில் கொண்டு வந்தது,

மும்பை விழித்தெழு இயக்கம்

vizhithezhu.org@gmail.com

http://vizhithezhuiyakkam.blogspot.in/2014/07/blog-post.html 

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக உழைத்த தலைவர்கள்

தமிழ்க்கடல் - பகுத்தறிவு மேதை  

பண்டித க, அயோத்திதாசர்  (20-05-1845 To 05-05-1914)
ஆதிதிராவிடர் மகாசன சபையை தோற்றுவித்தவர்.  

பகுத்தறிவுக் கொள்கையை முதன் முதலில் தமிழகத்தில் பரவச் செய்தவர்.
தமிழினத்தை முதன்முதலாக தேசிய இனமாக அறிவித்தவர்.
மதத்திலுள்ள பல கட்டுக்கதைகளையும், அறுவறுக்கத்தக்க சடங்குகளையும், மிகவும் வன்மையாக அதுவும் ஆதாரப்பூர்வமாக கண்டித்தவர்.
பல பள்ளிகளை அமைத்தவர் . தமிழ் மருத்துவத்தை பேணி வளத்தவர். குடிமதிப்பீட்டுக் குறிப்பில் சாதி, மதம், தவிர்த்து தமிழன் என பதிவு செய்ய போராடியவர்.
சமுதாயத்திலிருந்து அறியாமையை நீக்கவும் ,    உயர்வு - தாழ்வு மனப்பான்மையைக் கண்டித்தும், மக்களைச் சிந்திக்க  தோண்டும்  வகையில் பல நூல்களை எழுதினர்.      
1902 இல் தென்னிந்திய சாக்கிய சங்கத்தை நிறுவினார்.
1907 இல் தமிழன் என்கிற பத்திரிகையைத் துவக்கினர்.  
===============================================================
இரட்டை மலை    சீனிவாசன்       
(07-07-1860 To 18-09-1945)

1891 இல் பறையர்  மகாஜன சபையைத் தோற்றுவித்தவர் .
சமூக சீர்திருத்தவாதி, வழக்குரைஞர்,     பறையர் என்ற மாத இதழை நடத்தியவர். சட்டமன்றத்தில் அவர் முன்மொழிந்த தீர்மானங்கள், மது ஒழிப்பு, ஆலய நுழைவு முதலானவை முக்கியமானது. வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்காருடன் பங்கு பெற்று, இந்தியாவின் தீண்டாமைக் கொடுமையை உலகிற்கு காட்டியவர். 


==========================================================
பேரறிஞர் பி .ஆர். அம்பேத்கர்

14-04-1891 To 06-12-1956

அம்பேத்கர் அமெரிக்க சென்று பொருளாதரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் படித்த முதல் இந்தியர். உலகப்புகழ் பெற்ற அமெரிக்க கொலம்பியா, லண்டன் கிரே இன், ஜெர்மனி போர்ன், ஆகிய மூன்று பல்கலைக் கழுகங்களில் பயின்ற பெருமை இந்தியத் தலைவர்களில் இவர் ஒருவருக்கே உரியதாகும்.    



இவர் எழதிய இந்தியாவில் சாதிகள் என்ற கட்டுரை மிகப்பெரிய புரட்சி செய்தது. மேலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியது, பட்டியல் இன மக்களுக்கு (ஓடுக்குப்பட்ட மக்களுக்கு  )  தனி வாக்குரிமைக்கு போராடியது,    மக்கள் பயனடைய பியூப்பிள்ஸ் எஜெகேஷுன் சொசைட்டி என்ற பெரியதோர் கல்விக்கூடத்தை நிறுவி உயர்நிலைப்பள்ளி, கலைக்கல்லூரி   , தொழிற்கல்லூரி போன்ற பல நிறுவனங்கள்  ஏற்பட வழி செய்தார். 1920 இல் அரசியலில்  நுழைந்தார்
ஆயிரக்கணக்கான கூட்டங்கள், மாநாடுகள் வாயிலாக மக்களை விழிப்படையச் செய்தார்.
1927 இல் சௌதார் குளத்தில் நீர் எடுக்கும் போரடத்திலும் மற்றும் காலாராம் கோயில் நுழைவுப் போராட்டத்திலும் வெற்றி கண்டார்.
"ஒதுக்கப்பட்ட பாரதம்", "மூத்தத் தலைவர்"  போன்ற பத்திரிகைகளைத் துவக்கினர்.
சிறுபிள்ளைகள்  கல்வி, தாய்மார்களின் மகப்பேறு கால உதவி, விவசாய தொழிலாளர் ஊதியம் போன்றவைகளை நிறைவேற்றினார்.  விவசாய அடிமை முறையை ஒழித்தார், தீண்டாமை ஒழிப்புக்கான சட்டங்களை கொண்டு வந்தார். தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, அவசரகால -ஓய்வுகால உதவி போன்றவைகளுக்கு வழி வகுத்தார். இந்திய சமுதாய அரசியல் நிலைமைகளை ஆராய வந்த எல்லா குழுக்களுக்கும் தம் ஆய்வுரைகளை வழங்கினார். பழங்குடி மக்களுக்கு அரசியல் உரிமையாக தனிபிரிதிநிதித்துவத்தைப் பெற்றார். அரசியல் சட்டத்தை எழுதினர்.

1956 இல் 5 லட்ச மக்களை பௌத்த மார்க்கத்தை ஏற்கச்செய்தார்.
===========================================================

மாவீரன் இம்மானுவேல் சேகரன்
9-10-1924 To 11-9-1957

தமிழகத்தில் குறிப்பாக தென்தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதியத்திற்கு எதிராக -ஒடுக்குமுறைக்கு எதிராக தன உயிரை பணயம் வைத்துப் போராடிய வரலாற்று நாயகன்.


1942 இல் அண்ணல் அம்பேத்கர் தாய்நாட்டை காக்க இந்திய இளைஞர்களை போரில் ஈடுபட கேட்டுக் கொண்டதற்கிணங்க ஏறானவதில் சேர்ந்தார்.
ஒடுக்கப்பட்ட (பட்டியல் இன மக்கள் ) சாதி இந்து வீட்டில் இழவுக்கு ஒப்பாரி பாடுவதை தடுத்து நிறுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்கள் ஊர் கோயில்களில் திருவிழாக் காலங்களில் ஊழியம் செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத  சட்டத்தை  உடைத்தெறிந்தார்.

1957 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பின் ஏற்பட்ட கலவரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில்     மாவீரன் இம்மானுவேல் சேகரன் நின்று   போராடிய   அவர்களை   பெரும்   சேதத்திலிருந்து   காத்தார். 

==========================================================
எல்  .சி . குருசாமி
1885 To 1966

மக்களின் தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டுமாயின், ஆதிக்குடிமக்கள் வெளியரங்குக்கு வந்து தங்கள் தங்கள் பிறப்பினால் பெருமை அடைவதாகச் சொல்ல வேண்டும்.



கர்ம வீரர் காமராஜர்க்கு முன்பே தமிழ் நாட்டில் தலைவர்,ராவ்சாகேப், எல்.சி. குருசாமி சட்டமன்ற் உறுப்பினராக இருந்து பல கல்வி நிறுவனகளை நிறுவி பலர் கல்வி கற்க அடிக்கல் நாட்டிவர்.

1921 இல் இரண்டு இரவுப்பள்ளிகளை அவர் நிறுவினார்.
சென்னை சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில் பகல்நேரப் பள்ளிகளையும் ஆரம்பித்தார்.

· 1921 இல் பல நூறு குடும்பங்கள் தாங்கள் வாழும் நிலத்தை உரிமையாகப் பெற அவர் வழி கண்டார்.
· 1937 இல் நிகழ்ந்த ஆலயங்களில் துணிந்து பிரவேசித்தல் என்ற போராட்டத்துக்காக அவர் பலரைத் திருவாங்கூருக்கு ஆழைத்துச் சென்றார். பல மாணவர் விடுதிகளை நிறுவினார்.

==============================================================
அன்னை மீனாம்பாள்  சிவராஜ்

26-12-1904 To 30 -11 -1992

பழங்குடி மக்களுக்கு மாதர் தரப்பில் கிடைத்த தாய் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள்


பல்வேறு மகளிர் போராட்டங்களில் தலைமை ஏற்று வழி நடத்தியவர் அன்னை மீனாம்பாள் .
திராவிட  கழக தலைவர்  ஈ. வெ. ராமசாமிக்கு "பெரியார்" என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர் அன்னை மீனாம்பாள்.
சைமன் குழு வருகையை ஆதரித்து முதல் மேடை பேச்சில் 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர்.
இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர்.
1930 இல் இருந்தே அண்ணல் அம்பேத்கரின் பணிகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறியவர்.
இணையர் தந்தை சிவராஜுடன் இணைந்து பவுத்த நெறியினை மக்களிடம் பரப்பினார் அன்னை மீனாம்பாள்.
டாக்டர் அம்பேத்கரின் தங்கை என செல்லமாக அழைக்கப்பட்டவர் அன்னை மீனாம்பாள் .

சென்னை மாநகராட்சியின் துணை மேயர் ,கவுன்சிலராக 6 ஆண்டுகள், கவுரவ மாகாண நீதிபதியாக 16 ஆண்டுகள், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக 6 ஆண்டுகள், சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினராக 9 ஆண்டுகள், தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர் , சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர், சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினராக 13 ஆண்டுகள் , போருக்குப்பின் புணரமைப்புக்குழு உறுப்பினர், S.P.C.A உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், அண்ணாமலை பல்கலை கழக செனட் உறுப்பினராக 6 ஆண்டுகள் , சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவராக 6 ஆண்டுகள், சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் போன்ற பொறுப்புகள் வகித்து மக்கள் பணி ஆற்றியவர்.

31 -1 -1937   இல் திருநெல்வேலில் ஆதிதிராவிடர் மாநாட்டில் அன்னை மீனாம்பாள்  பேசியது :-
" ஒற்றுமையில்லாக் குடும்பம், ஒருமிக்க கெடும் என்பார்கள். அதுபோல ஒரு குடும்பமோ, ஒரு சமுதாயமோ, ஒரு தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் ஒற்றுமை மிகவும் அவசியம். நாம் தேசத்தில் சாதிப்பிரிவினை அறவே ஒழிய இன்னும் பல ஆண்டுகள் செல்லுமாயினும் நம் சமூகத்தினர், நாம் முன்னேற்றமடைய நாங்களும் மனிதர்கள்தான்; எல்லா உரிமைகளும் எங்களுக்கும் உண்டு என்று நிருபிப்பான் வேண்டி நாம் யாவரும் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆதிதிராவிடர்களின் கடைசி தலைவியான அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள்
=============================================================
தந்தை,(பேராசிரியர் ) என் .சிவராஜ். B.A., B.L.,Ex.MP.,Ex.Mayor
(29-9-1892 To 29-9-1964)

மக்கள் சொந்த நிலா விவசாயிகளாக மாறாத வரையில், அவர்களுடைய  அடிமைமுறை மாறாது என்ற கொள்கையே உடையவர்.
 

தனக்கு துணை நீதிபதி பதவி தந்ததை ஏற்காமல் மக்கள் பணி செய்வதை உயர்வாக கருத்தியவர்.. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழக்காட தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

மாணவர் விடுதிகள் நகரில் பல இடங்களில் தோன்றக் காரணமாயிருந்தார்.
ஆதிதிராவிட மக்கள் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது என்பவை மனித உரிமைக்கு துரோகமானது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட தனி அதிகாரியினை நியமிக்க வேண்டுமென சட்ட சபையில் முழங்கியவர்
 தாத்தா, இரட்டை மலை சீனுவாசனாருடன் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் அமைத்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்திற்கு (A.I.S.C.F) 1942 முதல் தலைவராக இருந்தவர்.
சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் கலந்துக்கொண்டு இந்திய ஏழை மக்களின் இடர்பாடுகளை விளக்கினார்.
1946 இல் மக்களின் இழிவுகளை நீக்கி இன்னல்களை போக்க ஏதும் நடவடிக்கை எடுக்காததால் ஆங்கில அரசை எதிர்த்து அவர்கள் தந்த திவான் பகதூர் என்ற பட்டத்தை உதறித்தள்ளினார்...இந்தியர்களையும், ஆங்கிலயேர் களையும் தட்டிக்கேட்கும் வகையில் 1946 இல் ஜெய் பீம் என்ற ஆங்கில வார இதழை துவக்கி நடத்தினார்.நம் பூர்வீக பவுத்த நெறியினை மக்களிடையே பரப்பினார்.
1945-46 ல் சென்னை மாநகர மேயராக பதவி வகித்தார். அப்போது கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்படுத்தி, இலவச உணவும் அளிக்கச்செய்தார்.
பட்டியல் இன மக்கள்  சமுதாயம் முன்னேற பொதுவாக கல்வியும் குறிப்பாக சட்ட அறிவும் இருக்க வேண்டுமென்றார்.
========================================================================
அய்யன்காளி: ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி!
(28-8-1863 To 18-6-1941)

பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிமுறைகள் அந்த மக்களிடமிருந்தே உருவாகின்றன. விடுதலைக்கான சமூக இயக்கங்களின் துவக்கம் மக்களின் பிரச்சனைகளிலிருந்தே பிறந்திருக்கிறது.


திருவிதாங்கூரில் பார்ப்பனீய அடிமைத்தனத்திலிருந்து தலித் மக்களை மீட்ட மாபெரும் மக்கள் தலைவன் அய்யன்காளி.

28 ஆகஸ்டு 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்தை அடுத்த வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார்.

எது மறுக்கப்பட்டதோ அந்த உரிமையை பெற தடையை மீற எழுந்தார். அந்த எழுச்சி தான் தனியொருவனாக நடத்திய மாட்டுவண்டிப் போராட்டம். முதல் முறையாக அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை நிலைநாட்டினார். தொடர்ந்து அந்த சாலையில் மாட்டுவண்டியின் மணிசத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி எந்த தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டதோ அதே தெருக்களின் வழியாக புத்தன் சந்தைக்கு 'விடுதலை ஊர்வலம்' போனார். ஊர்வலம் பாலராமபுரத்தில் சாலியார் தெருவை அடைந்ததும் மறைந்திருந்த ஆதிக்கசாதி கும்பல் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களது மேல் தொடுக்கப்பட்ட தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதலை தொடுத்தனர். திருவிதாங்கூரின் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் ஆயுதப்போராட்டத்தில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் காயமடைந்தனர். தளராமல் அய்யன்காளி தலைமையில் போராடி ஆதிக்க சாதியினருக்கு பயத்தை ஏற்படுத்தினார்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.
=============================================================
பி. எம்  மதுரைப் பிள்ளை (1858 To 1913)

1880 இல் வாணிபத்தில் நன்னடத்தையும் நம்பிக்கையாளராகவும் இருந்து சொந்தமாகக் கப்பல் துபாஷ் ஸ்டீவ்டேன் என்ற ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நிறுவனத்தை ஆரம்பித்துத் திறமையாக நடத்தினார். இங்கிலாந்த் , ஸ்காட்லான்ட் ,வேல்ஸ்,ஜெர்மனி, டென்மார்க்,பிரான்ஸ்,நோர்வே, இத்தாலி, எகிப்த ஆகிய மேலைநாடுகளுக்கு சுற்றுபயனத்தை அந்த காலகட்டத்திலேயே   செய்தவர்.
===========================================================
  டி . ஜான்  ரத்தினம்   (1846 To 1942) 

1885 இல் "திராவிட  பாண்டியன் "    என்ற தமிழ்   வெளியிட்டை   துவங்கித்    திறமையான   வாதங்களால்  மக்களை  விழிப்படையச் செய்தவர்.


1892 இல் "திராவிடர் கழகம்"  என்ற அமைப்பை துவங்கினார்.

கலைக்கல்வி, தொழிற்கல்வி ஆகியவைகளால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றமே நல்ல மாற்றமாகயிருக்கும் என்று எண்ணி 1886 இல் ஒரு மாதிரி பள்ளியை நிறுவி பயனிருப்பதை அறிந்து 1892 இல் ஆண் -பெண் இருபாலரும் படிக்க சென்னை ஆயிரம் விளக்கத்தில் பெரியதொரு கல்விக்கூடத்தை  அமைத்தார் மேலும் சித்திரம், தச்சு, தையல் போன்றவைகளைக் கற்கும் தொழிற்கல்வி கூடம் ஒன்றையும் மாணவர் விடுதியையும் 1889 இல் தோற்றுவித்தார்.  
.
பழங்குடி  மக்களின்    வாழ்விலும்    வளத் திலும்   அக்கறை  கொண்டிருந்த  இவர்  அவர்களை ஓரணியில் திரட்ட இணைப்புப்  பாலமாக கூடுமிடம் ஒன்றை சுமார் நூறு ஏக்கர் நிலத்தில் சமூகக் கூடம்  அமைக்க முயன்றார். பழங்குடி மக்களுள் எழுந்த  கிறிஸ்தவர் , பௌத்தர், சைவர், வைணவர் போராட்டங்களால்  இது  தடைபட்டு விட்டது.
   
==========================================================
பி.வி.சுப்பிரமணியம் (1859 To 1936)

தமிழ் மக்களுள்  இருக்கும் பிளவுகளையும் பிணக்குகளையும் ஒழிக்க வேண்டுமானால் ஒரே பெயரின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்று எண்ணி 1922 இல் திராவிடர் -ஆதிதிராவிடர் ஆகிய இருபெரும் வகுப்பினரையும் மாநாட்டின் வாயிலாக ஒன்று கூட்டி அறிவுரை வழங்கினார்.
 தமிழகத்தின் கோடீஸ்வரர்களில் ஒருவராவார்.
ஊறுகாய்  மன்னர் என்று பலராலும் உலகமெங்கும் புகழப்பட்டார். அவர் தம் ஊறுகாய் வகைகளை இங்கிலாந்த் பேரரசர் குடும்பத்தினர் முதல் உலகத்தின் எல்லைப்பகுதி மக்களும் அதனை பெரிதும் விரும்பினர். 
================================================================
வி.ஜி . வாசுதேவப்பிள்ளை (1878 To 1938)

1920 இல் பழங்குடி மரபிலே இந்தியாவிலேயே  முதல் மாநகராட்சி உறுப்பினராக ஆக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
================================================================
 தாதா  சாகேப்
பி.கே கெய்க்வாட் (1901 To 1971)

1901 இல் மராட்டிய மாநிலத்திலுள்ள நாசிக் மாவட்டத்தில் பிறந்தார்.


இந்திய  நாட்டிலுள்ள    மக்களில் வேறுபாடு தோன்றுவதற்கு  மனுஸ்மிருதி போன்ற வேத  நூல்களே  காரணம் என்பதனால்  அதை பகிரங்கமாக  எரிப்பதற்கு  உறுதுணையாக     நின்றவர். 1930 இல் நாசிக்கிலுள்ள காலாராம்   கோயில்    நூழவு   போராட்டத்தில்   பெரும்   பங்கு   கொண்டு சிறையேகினார்

கேரளாவிலுள்ள  குருவாயூர்   கோயில்  நுழைவுப்  போராட்டங்களிலும்   அவர் பங்கு பெற எண்ணினார். இடையில் பூனாவில் இருக்க வேண்டியவரானார். 1938 இல் பூனா ஒப்பந்தத்தின்போது மாமேதை  அம்பேத்கருடன்  இணைந்து  பணியாற்றினார்   .

1937 இல்  செட்யூல்டு வகுப்பினருக்கு ஹரிஜன் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று முயற்சித்தார்கள். இப்பெயரை குஜராத்  கவிஞர் ஒருவர் தன கவிதையில் முதல் முறையாக பயன்படுத்தினார். இதனை காந்தியடிகள்   முதல்முறையாக பயன்படுத்தினர். விளம்பரம்  செய்தார் . பம்பாய் சட்டமன்றத்தில்    தலைவர்    கெய்க்வாட் இதனை பலமாக எதிர்த்தார்.

ஹரிஜன்கள்      கடவுளுடைய    மக்களானால்  சாதி  இந்துக்கள் எப்படி அவர்களுடைய  எஜமானர்களாக ஆக முடியும் என்று கூறி வெளியிறனர்.


1964 இல் செட்யூல்டு வகுப்பினரின் தீண்டாமை , பொருளாதாரம், கல்வி  ஆகியவற்றில் முன்னேறுவதற்குரிய சாத்தியகூறுகளை ஆராய வந்த குழுவின் துணைத்தலைவராக பங்கேற்று நாடு முழுவதிலும் சுற்றுபயணம் செய்து விரைந்த முன்னேற்றத்திற்கு  சிறப்பான   திட்டங்களை  வகுக்க  உறுதுணையாக இருந்தார் .