தமிழ்த் தேசியம் கருத்து தொகுப்பு ... மும்பை விழித்தெழு இயக்கம்
தமிழ்த் தேசியம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மனிதரோ, அமைப்போ, பிரிவினைவாதியோ, இனவெறியரோ வலிந்து முன்னிறுத்தும் கருத்து இல்லை. அது வரலாற்று வழிப்பட்டுப் புறநிலை மெய்ம்மையிலிருந்து விளைந்த சமூக அறிவியல் கருத்தாகும்.
‘வட வேங்கடம் தென் குமரி வரை ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழரின் தேசத்துக்கு எல்லை குறிக்கிறார் தொல்காப்பியர்.
==============================================================
தேசியம் என்பது என்ன ?
1. தேசியம் என்பது என்ன ?
தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.
2. தேசம் என்றால் என்ன ?
சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.
ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம";, 'நம்மவர்" என்ற தேசிய இன ஒருமை உணர்வு.
ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.
பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது. இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு.
3. தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா ?
இல்லை. தேசம்( (Nation ) ) வேறு; நாடு (Country ) வேறு. ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம். ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு. ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும். ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.
ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம். வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம். எ-டு: கொரியா.
தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition ) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.
'ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்".
நாடு என்பதற்கு அந்த அகரமுதலி கூறும் விளக்கம்:
'ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்"
மேலும் அது கூறுகிறது: பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும்.
நாம் முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும். சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல@ அது ஒரு நாடு. அதில் செர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( ( Swiss confederation )) என்பதாகும்.
எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும். சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல@ அது ஒரு நாடு. அதில் செர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( ( Swiss confederation )) என்பதாகும்.
இந்தியா ஒரு நாடு@ ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல. இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன. அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது. (Article 1(1) India, that is Bharat shall be a Union of States )
ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக ( Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, காலவளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும்.
இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. முதல் கட்டம் மரபு இனம் ( Race )அடுத்த கட்டம் தேசிய இனம்( Nationality). ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம்.
எடுத்துக்காட்டாக ஆரியர்கள் ஒரு மரபினம். ஆரிய மரபு இனம் ஐரோப்பிய தேசிய இனங்களிலும் இந்திய தேசிய இனங்களிலும் கலந்துள்ளது. தேசிய இனங்களில் கலந்தும் மனதளவில் ஒருங்கிணையாமல், தங்களை ஆரியர்களாகவே கருதிக் கொள்ளும் பார்ப்பனர்களின் மனக்கோணல், இந்தப் பொதுவரையறைக்கு விதிவிலக்கே தவிர அது உலகப் பொது நிலை அல்ல.
தமிழர் என்பது ஒரு மரபினம். அது இன்று தமிழ்த் தேசிய இனமாகவும் உள்ளது@ இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்து உள்ளது. திராவிடர் என்பது ஒரு மரபினம் அல்ல@ அது ஒரு தேசிய இனமும் அல்ல. அது ஒரு மொழியும் அல்ல.
ஆரியர்கள் இந்திய மண்டலத்திற்கு வந்த போது தமிழ் பேசிய மக்களைக் கொச்சையாகத் 'திராவிட" என்று அழைத்தனர். 'தமிழ்" என்பதை ஒலிக்கத் தெரியாமல் 'த்ரமிள்" என்று உச்சரித்து அதுவே பின்னர் 'த்ரமிள",'த்ராவிட" என்று மாறியது என்றும் ஆய்வாளர்கள்(பாவாணர் உள்ளிட்டோர்) கூறுகின்றனர்.
இந்தியாவில் சமஸ்கிருத மொழிக் குடும்பம் மட்டுமே இருக்கிறது@ இந்தியாவின் மொழிகள் அத்தனையும் சமஸ்கிருத மூலத்திலிருந்தே பிறந்தவை என்ற கருத்து ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் இருந்தது. சமயப்பணிக்காகத் தமிழகம் வந்த கால்டுவெல், சமஸ்கிருதத் துணையின்றி இயங்கக்கூடிய மொழி தமிழ் என்பதைக் கண்டறிந்தார்.
அதுகுறித்து மேலும் ஆய்வு செய்த போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார். இந்த மொழிக் குடும்பத்தில் தமிழ் மூத்தமொழி என்றும் ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு மூலமொழி( ( Proto Language ) ) இருந்திருக்க வேண்டும் என்றும் கருதினார். அந்த மூலமொழி எது என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதிலும் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
சமஸ்கிருத நூல்களில், சமஸ்கிருதம் அல்லாத மொழிக்கும், ஆரியர் அல்லாத இனத்திற்கும் ஆரியர்கள் வைத்த பெயரான "த்ராவிட" என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு "திராவிடம்" என்று பெயர் சூட்டிக் கொண்டார்.
திராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை. ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்.
பிரித்தானிய ஆட்சியில் தமிழக, ஆந்திர, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் தோன்றிய பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு 'திராவிடர் கழகம்" என்று பெயர் சூட்டிக் கொண்டது அன்றைய சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்ததே ஆகும். அதற்கு மேல் அப்பெயரில் முக்கியத்துவம் எதுவும் இல்லை@ தனித்தன்மை எதுவுமில்லை. அப்பெயருக்கான மொழி, இன அடிப்படையில் அமைந்த வரலாற்றுக் காரணங்கள் எதுவுமில்லை.
ஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களில் "திராவிட" என்ற பெயருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.
'இந்தியர்" என்பது மரபினமும் அல்ல@ தேசிய இனமும் அல்ல. அது ஒரு புவி அரசியல் பெயர்( Geo political name). ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்வோரை 'ஐரோப்பியர்" என்று சொல்வது போல், இந்திய மண்டலத்தில் வாழ்வோரை 'இந்தியர்" என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல@ இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்துக்கள்( Hindoos) என்றே மேற்கத்திய ஆய்வாளர்கள் அழைத்தனர். இந்துக்கள் என்று அவர்கள் அழைத்தது மத அடிப்படையில் அல்ல. புவிசார் அடிப்படையிலேயே. எ-டு: முதல் இந்திய விடுதலைப் போர்- காரல் மார்க்ஸ்.
இந்திய அரசமைப்புச் சட்டம், 'இந்தியர்" என்று ஒரு தேசிய இனம்( Nationality) இருப்பதாகக் கூறவில்லை. ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை( (Citizenship ) பற்றி மட்டுமே பகுதி2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன. 'இந்தியாவின் குடிமகன்"( Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.
இந்தியப் பெருமுதலாளிய-இந்தி ஆதிக்க-பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் 'இந்தியன்" என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்டவிரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். அதே போல் இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். இவையெல்லாம், சுரண்டல் சக்திகளும், ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப் பரப்பல் முறையாகும்.
சமூக அறிவியலைப் பின்பற்றும் நேர்மையாளர்கள், மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்ட நேர்மையான கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை ஒரு தேசம் என்று கூறமாட்டார்கள். 'இந்தியர்" என்று ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் கூற மாட்டார்கள். இந்திய தேசிய இனம், இந்திய தேசம் என்று மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்டோர் பேசினால் அவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள் ஆவர்@ கவரிங் தங்க நகை போல!
அரசு விண்ணப்பங்களில் தேசிய இனம் எது என்று கேட்பதும், அதற்கு 'இந்தியர்" என்று எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையாகும். ஆதிக்க சக்திகளும் சுரண்டல் சக்திகளும் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக 'இந்தியர்" என்ற இல்லாத தேசிய இனத்தைத் திணிக்கின்றனர்.
'தமிழர்", 'தெலுங்கர்", 'வங்காளி" என்பன போன்ற இயற்கையான தேசிய இனங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. 'இந்தியக் குடியுரிமை" என்று மட்டுமே அது கூறுகிறது. 'தமிழர்" போன்ற இயற்கையான- நடைமுறையில் நிலவுகின்ற தேசிய இனங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.
லெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், ரசியர், பைலோ ரசியர், ஜார்ஜியர் போன்ற தேசிய இனங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைத் தேசங்களின் ஒன்றியம் ( (Union of nations )) என்றே அழைத்தனர்.
இந்திய அரசமைப்புச் சட்டம் விதி 371A(1) நாகர்களைத் தனிச்சமூகமாக ஏற்று அதற்கான தனிஉரிமைகளை அங்கீகரிக்கிறது.
5. சமூகம், மக்கள், தேசிய இனம் ஆகியவை வௌ;வேறா ?
இவை மூன்றிற்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் மூன்றும் அச்சாக ஒன்றே அல்ல.
சமூகம் என்பது ஒர் இனக் குழுவின் விரிவாக்கமே. குறிப்பான நில எல்லைகளுக்குள் வாழ்ந்து, மொழி, பண்பு மற்றும் குணநலன்களைப் பொதுவாகப் பெற்றிருக்கும் ஒரு மக்கள் குழு சமூகம் ஆகும்.( ( Webster's Pocket dictionary ))
அரசியல் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டம் அல்ல. ஒரே மொழி, ஒரே பண்பாடு ஆகியவற்றைக் கொண்டு, ஒரு தேசத்தில் அல்லது ஒர் அரசின் கீழ் உள்ள மனிதர்கள் மக்கள் ஆவர்.The People என்று ஆங்கிலத்தில் சொல்லும் போது அது ஒரு தேசத்திற்குரிய மக்களைக் குறிக்கிறது. ஐ.நா.உரிமை அட்டவணையில் தேசிய இனம் The People என்றே குறிக்கப்படுகிறது.
நடைமுறையில் சாதாரணப் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டத்தைக் குறிக்கிறது.
உலகம் ஒன்று, உலக மக்களின் ஒருமைப்பாடு உண்டாக வேண்டும் என்ற உயர்ந்த மனித நேயக் கருத்துகள் வளர்ந்து வரும் காலத்தில் தேசிய இனம் பேசி மனித குலத்தைப் பிரிக்கலாமா ?
உலகம் ஒன்று@ மனித குலம் ஒன்று என்ற மனித நேயப் பார்வை மிகச் சரியானது. ஆனால் இன்று உலகமும், உலக மனித குலமும் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை என்ற நடைமுறை உண்மையைப் பார்க்க வேண்டும். ஏன் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை? இதற்கான புவியியல், சமூகவியல், வரலாற்றியல் காரணங்கள் மனித மனநிலைக்குப் புறத்தே இருக்கின்றன.
புவிக்கோளம் வேறுபட்ட புவி அமைப்பு உள்ளிட்ட இயற்கை நிலைகளைக் கொண்டு ஐந்து கண்டங்களாகப் பிரிந்துள்ளது. இதில் வாழும் மக்களுக்கு ஒரே மொழி இல்லை@ ஒரே பண்பாடு இல்லை. உணவு வகை வேறுபடுகிறது. உடை வேறுபடுகிறது. செடிகொடிகளும் விலங்குகளும் கூட வேறுபடுகின்றன.
வௌ;வேறு நாடுகளாக இருக்கிறது. கடவுச்சீட்டு அனுமதி இல்லாமல் ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டிற்குள் நுழைய முடியாது. இந்த நாடுகளில் வௌ;வேறு கொள்கை உடைய அரசுகள் இருக்கின்றன. வலிமையுள்ள நாடுகள் வலிமைக் குறைவான நாடுகளையும், ஏமாந்த மக்களையும் ஆக்கிரமித்துச் சூறையாடுகின்றன. எடுத்துக்காட்டாக, சர்வதேச பயங்கரவாத அரசு அமெரிக்காவில் இருக்கிறது. அந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் அப்படிப்பட்ட அரசை ஆதரிக்கின்றனர். அதற்கான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
உலக நிலையில் மனித சமத்துவத்திற்கான மாற்றம் வர இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. நாம் விரும்புவதால் மட்டுமோ, நமது கற்பனையினால் மட்டுமோ மனிதகுலச் சமத்துவத்தை உடனே படைத்துவிட முடியாது.
புவிக்கோளம் வேறுபட்ட புவி அமைப்பு உள்ளிட்ட இயற்கை நிலைகளைக் கொண்டு ஐந்து கண்டங்களாகப் பிரிந்துள்ளது. இதில் வாழும் மக்களுக்கு ஒரே மொழி இல்லை@ ஒரே பண்பாடு இல்லை. உணவு வகை வேறுபடுகிறது. உடை வேறுபடுகிறது. செடிகொடிகளும் விலங்குகளும் கூட வேறுபடுகின்றன.
வௌ;வேறு நாடுகளாக இருக்கிறது. கடவுச்சீட்டு அனுமதி இல்லாமல் ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டிற்குள் நுழைய முடியாது. இந்த நாடுகளில் வௌ;வேறு கொள்கை உடைய அரசுகள் இருக்கின்றன. வலிமையுள்ள நாடுகள் வலிமைக் குறைவான நாடுகளையும், ஏமாந்த மக்களையும் ஆக்கிரமித்துச் சூறையாடுகின்றன. எடுத்துக்காட்டாக, சர்வதேச பயங்கரவாத அரசு அமெரிக்காவில் இருக்கிறது. அந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் அப்படிப்பட்ட அரசை ஆதரிக்கின்றனர். அதற்கான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
உலக நிலையில் மனித சமத்துவத்திற்கான மாற்றம் வர இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. நாம் விரும்புவதால் மட்டுமோ, நமது கற்பனையினால் மட்டுமோ மனிதகுலச் சமத்துவத்தை உடனே படைத்துவிட முடியாது.
6. இந்தியாவில் தேசிய இனங்களின் சமத்துவம் இருக்கிறதா? சாதி ஆதிக்கமற்ற, வர்க்கச் சுரண்டலற்ற சமத்துவம் இருக்கிறதா? தமிழ்நாட்டில் சாதி ஆதிக்கமற்ற, வர்க்கச் சுரண்டலற்ற சமத்துவம் இருக்கிறதா ?
இல்லை.
உலகத்தில் வாள் வலிமைக்கேற்ப அரசுகள் உருவாகக்கூடாது, ஒரு தேசிய இனத்திற்கு ஒரு தேசம் அமையவேண்டும் என்ற முதலாளிய ஜனநாயகக் கருத்து ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தை ஒட்டி எழுந்தது. தேச அரசு உருவாக்கம் ( (Nation State formation )) என்று இதை அழைத்தார்கள். தேச அரசு உருவாக்கம் இன்னும் உலகில் முழுமை அடையவில்லை. விடுதலையின்றி வேற்றார் ஆதிக்கத்தில் இருந்த தேசிய இனங்கள் ஒவ்வொன்றாக இப்பொழுது விடுதலைபெற்று சொந்த தேச அரசை உருவாக்கி வருகின்றன.
தேச அரசு நிறுவும் பணி நிறைவடைந்த பின், ஒரு தேசத்தின் உள்விவகாரத்தில் இன்னொரு தேசம் தலையிடக்கூடாது என்ற சனநாயகம் முழு அளவில் மலர்ச்சியடைந்த பிறகு, முடிந்தவர் முடியாதவரையும் ஏமாந்தவரையும் சுரண்டலாம், ஆதிக்கம் செய்யலாம் என்ற வர்க்க ஆதிக்கம், இனஆதிக்கம், சாதி ஆதிக்கம் ஆகியவை ஒழிந்த பிறகு உலக மனித குல ஒற்றுமை மெய்யாக உருவாகிடக் கதவு திறக்கும்.
அதற்க்குள் உலக ஒற்றுமை விரைவான எதிர்காலத்தில் உருவாகிவிடும் என்று கற்பனை செய்வது, நடைபழகும் குழந்தையை மோட்டார் சைக்கிள் ஒட்டச் சொல்வது போல் ஆகிவிடும். மிதிவண்டியைக் கண்டுபிடித்தவன் ஏன் விமானத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்று கேட்பது போல் ஆகிவிடும்.
உலக ஒற்றுமைக்கு முதல் தேவை ஒரு தேச மக்களின் ஒற்றுமை. உலக நாடுகள் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முதல் தேவை தேசங்களின் விடுதலை.
உலகத்தில் வாள் வலிமைக்கேற்ப அரசுகள் உருவாகக்கூடாது, ஒரு தேசிய இனத்திற்கு ஒரு தேசம் அமையவேண்டும் என்ற முதலாளிய ஜனநாயகக் கருத்து ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தை ஒட்டி எழுந்தது. தேச அரசு உருவாக்கம் ( (Nation State formation )) என்று இதை அழைத்தார்கள். தேச அரசு உருவாக்கம் இன்னும் உலகில் முழுமை அடையவில்லை. விடுதலையின்றி வேற்றார் ஆதிக்கத்தில் இருந்த தேசிய இனங்கள் ஒவ்வொன்றாக இப்பொழுது விடுதலைபெற்று சொந்த தேச அரசை உருவாக்கி வருகின்றன.
தேச அரசு நிறுவும் பணி நிறைவடைந்த பின், ஒரு தேசத்தின் உள்விவகாரத்தில் இன்னொரு தேசம் தலையிடக்கூடாது என்ற சனநாயகம் முழு அளவில் மலர்ச்சியடைந்த பிறகு, முடிந்தவர் முடியாதவரையும் ஏமாந்தவரையும் சுரண்டலாம், ஆதிக்கம் செய்யலாம் என்ற வர்க்க ஆதிக்கம், இனஆதிக்கம், சாதி ஆதிக்கம் ஆகியவை ஒழிந்த பிறகு உலக மனித குல ஒற்றுமை மெய்யாக உருவாகிடக் கதவு திறக்கும்.
அதற்க்குள் உலக ஒற்றுமை விரைவான எதிர்காலத்தில் உருவாகிவிடும் என்று கற்பனை செய்வது, நடைபழகும் குழந்தையை மோட்டார் சைக்கிள் ஒட்டச் சொல்வது போல் ஆகிவிடும். மிதிவண்டியைக் கண்டுபிடித்தவன் ஏன் விமானத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்று கேட்பது போல் ஆகிவிடும்.
உலக ஒற்றுமைக்கு முதல் தேவை ஒரு தேச மக்களின் ஒற்றுமை. உலக நாடுகள் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முதல் தேவை தேசங்களின் விடுதலை.
பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற தொடர், அனைத்துத் தேசங்களின் ஒற்றுமை என்பதைத்தான் குறிக்கிறது. தேசங்களற்ற உலக ஒற்றுமையை அது குறிப்பிடவில்லை. தனது சொந்த தேச அரசை அமைத்துக் கொள்ளாத பாட்டாளி வர்க்கம் சர்வதேச ஒற்றுமைக்குப் பாடுபடும் ஆற்றலற்றது என்றார் எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முன்னுரை).
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் சிக்குண்ட ஐரிஷ் தேசிய இனம் நடத்திய விடுதலைப் போராட்டத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஐரிஷ் தேசிய இன விடுதலையை ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும் என்றார்.
ஒரு தேசிய இனம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகக் கொண்டுள்ளது என்றார் லெனின். அந்த உரிமையைத் தன்னுரிமை(சுயநிர்ணய உரிமை) என்றார். ஜார் மன்னனால் வலுக்கட்டாயமாக ரசியாவில் இணைக்கப்பட்டிருந்த தேசிய இனங்களுக்கு ரசியப் புரட்சி வெற்றி பெற்ற பின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை( Right to Self determination with the right to secede ) வழங்கினார். விரும்புகின்ற தேசிய இனங்கள் சோவியத் கூட்டாட்சி ஒன்றியத்தில் இணையலாம்@ விரும்பாதவை தனி நாடாகப் பிரிந்து போய் விடலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது. பின்லாந்து பிரிந்து போக வேண்டும் என்றது. லெனின் அது பிரிந்து போக அனுமதித்தார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வுதான் நடத்த வேண்டும். பட்டப்படிப்பிற்கான தேர்வை எழுதச் சொல்லக்கூடாது. பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அமைவதற்கு முதல் தேவை சொந்த தேசியம் ஆகும்.
8. இந்தியாவில் எல்லா தேசிய இன மக்களிடமும் வறுமை, வேலை இன்மை, சாதி ஒடுக்குமுறை போன்றவை உள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தேசிய இனங்களையும் ஒன்று திரட்டி புரட்சி நடத்தி, தேசிய இனங்களுக்கு முழு உரிமை வழங்கக்கூடிய ஒர் அரசை நிறுவிட போராடக்கூடாதா ?
வறுமை, வேலையின்மை, சாதி ஒடுக்குமுறை அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டியவையே. இவற்றை ஒழிக்கப் போராடும் இதர தேசிய இனமக்களுக்குத் தமிழ்த் தேசிய இனம் ஆதரவு கொடுக்க வேண்டும்.
ஆனால், இங்குள்ள முதன்மையான சிக்கல் தேசிய இனஒடுக்குமுறையே! அதற்குத் தீர்வு கண்டால் தான் வறுமை, வேலையின்மை, சாதி ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கும் தீர்வு காணமுடியும்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒர் ஏழை அல்லது தலித், தமிழ்நாட்டில் உள்ள ஒர் ஏழை அல்லது தலித் இருவரும் வறுமை மற்றும் சாதி ஒடுக்குமுறைக்கு உள்ளாவதில் ஒற்றுமை உண்டு. ஆனால் இந்திமொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாகத் திணிப்பதில் இருவர்க்குமிடையே முரண்பாடு உள்ளது. உ.பி.காரர்களுக்கு அது சொந்த மொழி@ தமிழர்க்கு அது அயல்மொழி. இந்தி அல்லது ஆங்கிலத்தில் ரயில்வே போன்ற இந்திய அரசு நிறுவனங்களின் வேலைக்குத் தேர்வு நடக்கிறது. இரண்;டுமே தமிழர்க்கு அயல்மொழி. உ.பி.காரர்களுக்கோ இவற்றுள் ஒன்று சொந்த மொழி.
இந்திய தேசியம் என்ற கருத்தியல் உ.பி.காரர்களுக்கு பெருமிதத்தையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது. தமிழர்க்கு அடிமைத் தனத்தை வலுப்படுத்துகிறது. இது போல் பலவற்றுள் தமிழராய் உள்ள ஏழை அல்லது தலித்துக்கும் இந்தி ஏழை அல்லது தலித்துக்கும் இடையே பாகுபாடு நிலவுகிறது.
வர்ண-சாதிக் கோட்பாடுடைய பார்ப்பனியத்தை வீழ்த்த வேண்டுமெனில் தமிழ்நாடு தில்லியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றார் பெரியார். பார்ப்பனியத்தின் அதிகாரத் தலைமை பீடமாகவும், அதன் வற்றாத ஊற்றுக் கண்ணாகவும் இருப்பது தில்லி அதிகார மையமே! இந்தி மாநிலங்களே! தமிழ்நாட்டில் எவ்வளவு தான் பார்ப்பனிய எதிர்ப்பு இருந்தாலும் தில்லி அதிகாரம் பார்ப்பனியத்திற்கு மீண்டும் மீண்டும் புத்துயிர் கொடுத்துவிடும்.
அடுத்து பல தேசிய இனங்களிடையே ஒரே நேரத்தில் ஒரே இலக்குகாகப் புரட்சி நடந்ததாக இதுவரை வரலாறு இல்லை. 1917 நவம்பர் 7-இல் வெற்றி பெற்ற ரசியப்புரட்சி ரசியதேசத்தில் ரசிய தேசிய இனத்தில் தான் நடந்தது. ஜார் மன்னனால் வெற்றி கொள்ளப்பட்டு இணைக்கப்பட்டிருந்த மற்ற தேசிய இனங்களில் நடைபெறவில்லை. ரசியப்புரட்சி வெற்றி பெற்றபின் இதர தேசிய இனங்களில் தனி நாட்டிற்கான போராட்டங்கள் நடந்தன. காலப்போக்கில் அவை இணைக்கப்பட்டு 1922-ஆம் ஆண்டுதான் சோவியத் ஒன்றியம் நிறுவப்பட்டது.
சீனப்புரட்சி சீன தேசிய இனத்தில்தான் நடந்தது. அந்நாட்டில் 96 விழுக்காட்டினர் சீன தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களே. கொரியப்புரட்சி கொரிய தேசிய இனத்தில் தான் நடந்தது. வியட்நாம், கியூபா நாடுகளில் நடந்த புரட்சியும் அந்தந்த தேசிய இனத்தில் தான் நடந்தது. பல தேசிய இனப் புரட்சி இதுவரை நடைபெறவில்லை.
அனைத்திந்தியப் புரட்சி என்று சொல்வது பல தேசிய இனப்புரட்சியைக் குறிப்பதாகும். அப்படி ஒரு புரட்சி நடக்கவே நடக்காது. என்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் இன்றும் சமச்சீர் வளர்ச்சி கொண்ட அனைத்திந்தியக் கட்சியாக வளர முடியவில்லை. அது மேற்குவங்க, கேரள, திரிபுராக் கட்சியாகவே உள்ளது.
இந்தியாவில் இன்று ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் தேசிய விடுதலைக்கான ஆயுதப்புரட்சி நடந்து கொண்டுள்ளது. நக்சல்பாரி இயக்கம் வளர்ச்சியடைந்துள்ள ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கட், ஜார்கண்ட் போன்ற மாநிங்களில் அவ்வியக்கம் முதன்மையாக பழங்குடி மக்களைச் சார்ந்துள்ளது. பழங்குடி மக்களுக்கான சிக்கல், இனக்குழு சமூகச் சிக்கலின் ஒரு பகுதியே. ஏதோ ஒரு வகையில் அங்கு தேசிய இனச் சிக்கல் தான் கையாளப்படுகிறது.
இந்தியாவில் முதலில் தேசிய இன விடுதலைப் புரட்சிகளே நடை பெறவுள்ளன. தமிழர்கள் அனைத்திந்தியப் புரட்சி நடத்த விரும்பினால், அது நடக்காது. காரணம், அதற்கான அனைத்திந்திய பல தேசிய இன அமைப்பு உருவாகாது.
நடுவர்மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கி, அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பின்னும், கன்னடர்களின் அனைத்துக்கட்சிகளும் காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரைத் தர மறுக்கின்றன. பெங்களுர் அல்சூர் ஏரிக்கரையில் கன்னடர் எதிர்ப்பினால் திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் 14 ஆண்டுகளாகக் கோணிப்பை போட்டு மூடப்பட்டுள்ளது.
999ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் இருந்தும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் 142 அடி தண்ணீர் தேக்க விடாமல் தடுக்கிறது கேரளம். பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் இந்தியத் தேசியமும் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உள்ள கேரள அரசு தான் இவ்வாறு தடுக்கிறது. இதற்கு முன், இந்திய தேசியம் பேசும் காங்கிரஸ் கூட்டணி அரசு 142 அடி தேக்க விடாமல் தடுத்தது.
இவர்களுடன் எல்லாம் சேர்ந்து தான் அனைத்திந்தியப் புரட்சி நடக்கப்போகிறதா? ஒருக்காலும் நடக்காது. புரட்சியைக் கைவி;ட்டு விட்டோம் என்று நேரடியாகச் சொல்லாமல், அதைக் கைவிடுவது தான் அனைத்திந்தியப் புரட்சி பேசுவது.
இன்னொரு அடிப்டையான செய்தி சொந்த தேசத்தை நிறுவிக் கொள்ளாத எந்தப் பாட்டாளி வர்க்கமும் அல்லது மக்களும் சோஷலிசப் புரட்சி நடத்தவே முடியாது. சுதந்திரமான, ஜனநாயகமான தேச அரசுகளை நிறுவுவதன் ஊடாகத் தான் சமூக மாற்றங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.
1789-இல் நடந்த பிரஞ்சுப்புரட்சி ஜனநாயக தேசியக் குடியரசுக்கான முதல் புரட்சி. அந்த ஜனநாயகம் முதலாளிய ஜனநாயகம். நிலக்கிழார்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த மன்னராட்சியை வீழ்த்திட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முற்போக்கான முழக்கங்களின் கீழ் அப்புரட்சி நடந்தது. மன்னராட்சி வீழ்த்தப்பட்டு வாக்குரிமை அடிப்படையில் அமையும் முதலாளிய ஜனநாயக ஆட்சி நிறுவப்பட்டது.
1917-இல் ரசியப் பாட்டாளி வர்க்கம், ஜார் மன்னராட்சியை வீழ்த்தி, ஜனநாயகக் குடியரசுக்கான புரட்சியைத் தான் நடத்தியது. அதன் ஊடாகத்தான் வளர்ச்சிப் போக்கில் சோஷலிசம் நிறுவப்பட்டது. சீன, கொரிய, வியட்நாமியப் புரட்சிகள் சாரத்தில் தேசிய விடுதலைப் புரட்சிகளே. கிய+பப் ;புரட்சி ஜனநாயகத்திற்கான தேசியப் புரட்சியே.
9. தமிழ்ப் பாட்டாளி வர்க்கம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் தேசியப் புரட்சியை நடத்தும் விழிப்புணர்ச்சியும் ஆற்றலும் அற்றிருந்தால், அதற்கு சோஷலிசப் புரட்சியை நடத்தும் ஆற்றல் மட்டும் எப்படி வந்துவிடும்?
தனது தாயகத்தை அடையாளம் காண முடியாமலும், அதன் மீதுள்ள அடிமை நுகத்தடியை நொறுக்க முடியாமலும் பலவீனமாய் உள்ள பாட்டாளி வர்க்கம் சோஷலிப் புரட்சி நடத்திடுமா? இந்த வினா, இந்தியாவில் அடிமை நிலையில் வைக்கப்பட்டுள்ள எல்லாத் தேசிய இனங்களுக்கும் பொருந்தும்.
ஏகாதிபத்தியத்திடமிருந்து காலனி நாடுகள் விடுதலை பெறத்தான் தன்னுரிமையை(சுயநிர்ணய உரிமையை) பயன்படுத்த வேண்டுமே தவிர, இந்தியா போன்ற விடுதலை அடைந்த நாடுகளில் தன்னுரிமையைப் பயன்படுத்தக்கூடாது என்று சில கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுவது சரியா?
இந்தக் கருத்து சரியல்ல. ஒரு தேசிய இனம் தனக்கான தேச அரசை நிறுவிக் கொள்வது அதற்குள்ள அடிப்படை உரிமையும் கடமையும் ஆகும். ஒரு மக்கள் சமுதாயம் ஒரு தேசிய இனமாக இருக்கும் காலம் வரை அது தனக்கான சுதந்திர அரசை அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகப் பெற்றுள்ளது. ஏகாதிபத்தியத்திடமிருந்து மட்டுமல்ல ஒடுக்குகின்ற ஒரு பெருந்தேசிய இனத்திடமிருந்தும் விடுதலை பெற வேண்டும். தனது அரசியல், பொருளியல், பண்பியல் உரிமைகளையும் மொழியையும் ஒடுக்குகின்ற எந்த அரசிடமிருந்தும் ஒரு தேசிய இனம் விடுதலை பெறுவதற்கான தன்னுரிமை அதனிடம் எப்போதும் உள்ளது.
அது மட்டுமல்ல, 'ஏகாதிபத்தியம்", 'காலனி" என்ற வரையறுப்புகளில் ஏற்பட்டுள்ள இக்கால வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். லெனின் காலத்தில் இருந்த ஏகாதிபத்தியங்களும் காலனிகளும் அதே வடிவத்தில் இன்றில்லை.
இந்தியா காலனியாக இருந்தது மட்டுமே காரல் மார்க்சுக்குத் தெரியும். இந்தியாவில் வளர்ச்சியடைந்த பல தேசிய இனங்கள் இருப்பது அவருக்குத் தெரியாது என்று இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு கூறினார். காலனியாக இருந்த இந்தியாவில் இருந்த தேசிய இனங்கள் பற்றி லெனின் எதுவும் சொல்லவில்லை.
ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையடைந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெரும்பான்மை தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்குகின்றன. இதற்கு வசதியாக வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஜனநாயகப்படி தான் ஆட்சி நடக்கிறது என்று பெருந்தேசிய இன ஒடுக்குமுறையாளர்கள் கூறுக்கொள்கின்றனர். தமிழர்களும் இந்திக்காரர்களும் இன்னபிற இனத்தாரும் ஒரே அரசின் கீழ் யாரால் பிடித்து வைக்கப்பட்டார்கள்? தமிழர்களையும் சிங்களர்களையும் ஒரே அரசின் கீழ் கட்டிப் போட்டவர்கள் யார்? தனித்தனி அரசு நடத்திக் கொண்டிருந்த வௌ;வேறு தேசிய இனங்களை ஒரே ஆட்சியின் கீழ் பிடித்துவைத்தவர்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமைப்பாளர்கள் தாம். ஏகாதிபத்தியம் போனபின், பற்பல தேசங்கள், தங்கள் ஒப்புதலின்றி ஒரே ஆட்சியில் நீடிக்க வேண்டிய கட்டாயம் என்ன? மெய்யான சம உரிமை நிலவி, தேசிய இனங்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தி, அவை தம் சொந்த விருப்பத்தின் பேரில் சேர்ந்திருந்தால் தவறில்லை.
காலனிய நிலையிலிருந்து விடுதலை பெற்ற பின், பெருந்தேசிய இனம் தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி சட்டதிட்டங்களை உருவாக்கிக் கொண்டு, தனது பெரும்பான்மையின் காரணமாகத் தேர்தல்களில் கூடுதல் இடங்களைப் பிடித்துக் கொண்டு சிறுபான்மைகளை அடக்கிவைக்கிறது. அடையாளம் தெரியாமல் வைக்கிறது. அதுமட்டுமல்ல இந்தியர், இலங்கையர் என்ற தனது முகமூடியைத் தமிழர்களுக்கு மாட்டிவிட்டது. இது புதுவகைக் காலனியம் ஆகும்@ புதுவகை ஏகாதிபத்தியம் ஆகும்@
முன்னது அயல் ஏகாதிபத்தியம்( Foreign Imperialism)@ பின்னது அண்டை ஏகாதிபத்தியம்((Neighbour Imperialism )) முன்னது பீரங்கிகளை வைத்துக் காலனி பிடித்தது. பின்னது வாக்குச்சீட்டுகளை வைத்து காலனியம் நடத்துகிறது.
அயல் பிரித்தானிய ஏகாதிபத்தியம் அப்போது இந்தியாவிற்கு நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்தது. அண்டை இந்திய ஏகாதிபத்தியம் இப்போது மார்வாடி குசராத்தி சேட்டுகள் மூலம் நிதி மூலதனத்தைத் தமிழ்நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது.
இன்று அயல் ஏகாதிபத்தியங்களும், அண்டை ஏகாதிபத்தியமும், கூட்டு சேர்ந்தே இருக்கின்றன. ஏகாதிபத்தியமும், இந்திய தேசியமும் தவிர்க்க முடியாத கூட்டாளிகள், ஏனெனில் இந்த இருவகை ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நலனும் ஒருங்கிணைந்தவைதாம்.
அயல் ஏகாதிபத்தியத்திய ஆட்சியில் இந்தியக் காலனிக்கு ஒரே எஜமானன். அண்டை ஏகாதிபத்திய ஆட்சியில் தமிழ்நாட்டுக் காலனிக்கு பல எஜமானர்கள். ஒரு எஜமானன் இந்திய அரசு@ மற்ற எஜமானர்கள் அமெரிக்கா உள்ளிட்ட அயல் ஏகாதிபத்தியங்கள்.
ஏகாதிபத்தியக் காலனிகளுக்கு தான் தன்னுரிமை பொருந்தும் எனில், அண்டை ஏகாதிபத்தியக் காலனியாக அடிமைப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கும் அது பொருந்தும். ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் முன்வைக்க வேண்டியது தமிழ்த் தேசத் தன்னுரிமையே.
இக்கருத்து இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறைகளே இல்லை என்று மறுக்கிறது. ஒரு சமூகத்தில் செயல்படும் அனைத்து முரண்பாடுகளையும் கவனிக்காமல், தாம் வரித்துக் கொண்ட சில முரண்பாடுகளை மட்டும் பார்க்கும் அரைகுறைப் பார்வை இது. இப்படிபட்ட அரைகுறைப் பார்வையை வர்க்கச் சுருக்கவாதம் ;( Class reductionism ) என்று மார்க்சியம் சாடுகிறது. மேலும் இது போன்ற பார்வை வறட்டுப் பொருளாதார வாதம் என்றும் விமர்சிக்கிறது.
பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், அசாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் இங்கெல்லாம் நடந்த, நடக்கின்ற போராட்டங்கள் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரானவையே. தமிழ்நாட்டில் தி.மு.க கோரிய தனிநாட்டுக்கு மிகப்பெரும் அளவில் தமிழர்கள் ஆதரவு கொடுத்ததும் தேசிய இன ஒடுக்குமுறைக்கான எதிர்வினையே!
இந்தி தேசிய இனம் இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனமாக உள்ளது. மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தங்கள் சுரண்டல் நலனுக்காக இந்தி தேசிய இனத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இந்தியப் பெருமுதலாளிகளும், பார்ப்பனிய சக்திகளும் தங்களை இந்தி தேசிய இனத்தோடு இணக்கப்படுத்திக் கொண்டுள்ளன.
11. தமிழ்த் தேசியத்தில் தமிழர்கள் மட்டும் தான் வருவார்களா? மற்றவர்களும் வருவார்களா?
தமிழர்கள் மட்டுமின்றி, நெடுங்காலமாகத் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டுள்ள மக்கள் அனைவரும் தமிழ்த் தேசிய சக்திகளே. குறிப்பாக முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகம் வந்து இங்கேயே தங்கி, தமிழ்நாட்டைத் தாயகமாகவும், தமிழைத் தங்கள் தேசிய மொழியாகவும் ஏற்றுக் கொண்டு, வீட்டில் தெலுங்கு பேசும் மக்களும், அதே போல் தமிழகத்தைத் தாயகமாக ஏற்றுக் கொண்டுள்ள கன்னடம் பேசும் மக்களும் தமிழ்த் தேசிய சக்திகளே. தமிழ்த் தேசம் அவர்களுக்கும் உரியதே. இதே போல், உருது பேசும் மக்களும் தமிழ்த் தேசிய சக்திகளே.
தமிழகத்தின் வடக்கெல்லையில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், தெற்கெல்லையில் மலையாளத்தைத் தாய் மொழியாகவும், வடமேற்கில் கன்னடத்தைத் தாய் மொழியாகவும் கொண்டுள்ள மக்கள் சிறுபான்மைத் தேசிய இனங்களாகும். தமிழ்த் தேசக் குடியரசில் இவர்களுக்கு சமஉரிமையும் சிறப்புப் பாதுகாப்பும் இருக்கும்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பார்ப்பனர்கள் தமிழர்களே. ஆனால் அவர்களில் மிகப்பெரும்பான்மையோர் தமிழைவிட சமஸ்கிருதமே உயர்வானதென்றும், தாங்கள் ஆரியப் 'பெருமைகளுக்குச்" சொந்தக்காரர்கள் என்றும் கருதிக் கொள்கின்றனர். கோயில் வழிபாடு, சடங்குகள் ஆகியவற்றில் தமிழைப் புறக்கணித்து, சமஸ்கிருதத்தையே முன்னிறுத்துகின்றனர். இந்த வகையில் தமிழர்கள் என்று இவர்கள் தங்களைக் கருதிக்கொள்வதில் உளவியல் ஊனம் உள்ளது. பார்ப்பனர்களும் பார்ப்பனிய சக்திகளும் இந்திய அரசுக் கட்டமைப்பில் ஆளும் சக்திகளாக இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கையும் தமிழ்த் தேசியத்திற்குத் தேவை.
கொள்கை, நடைமுறை இரண்டிலும் பார்ப்பனியத்தை மறுத்து, தமிழ் உணர்வோடு செயல்பட முன்வரும் பார்ப்பனர்களைத் தமிழ்த் தேசியம் அரவணைக்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசிய இயக்கத்திற்கு இன்று தனி நபர்கள் சிலரே வரக்கூடும்.
பிறப்பிலேயே மனிதர்களின் குணங்களும் தகுதிகளும் நிரந்தரமாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டன என்பது வர்ணாசிரம தர்மம். தமிழ்த் தேசியம் அதை மறுக்கிறது. ஆதலால், தமிழ்த் தேசியம் பிறப்பை அடிப்படையாக வைத்து பார்ப்பனர்களைப் புறக்கணிக்காது. அதே வேளையில் அவர்களிடம் உள்ள,(மேலே சுட்டிக் காட்டப்பட்ட) உளவியல் ஊனத்தையும், அவர்கள் ஆளும் சக்தியாக உள்ளார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது தமிழ்த் தேசியம்.
ஒரு தேசிய இயக்கம், அத்தேசக் குடிமக்கள் அனைவர்க்கும் உரியதாகவும் இருக்க வேண்டும். தனக்கான சமூகவியல், பொருளியல் கொள்கைகளை விட்டுவிடாமல் அனைவரையும் தழுவியதாக அது செயல்பட வேண்டும். தென்னாப்பிரிக்கா, அசாம், ஈழம் போன்றவற்றின் தேசிய இயக்கங்கள் இந்த அணுகுமுறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளை இன வெறியை எதிர்த்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், வெள்ளை இனத்தவரின் குடியுரிமையை மறுக்காமல் அவர்களில் உள்ள சனநாயக சக்திகளையும் இயக்கத்தில் ஏற்றுக் கொண்டது. அசாமில் உல்ஃபா, பல்வேறுபட்ட பழங்குடிகளையும், பார்ப்பனர் உள்ளி;ட்ட பல்வேறு வகுப்பாரையும் இணைத்துச் செயல்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழப்பகுதிகளில் வாழும் சிறுபான்மை சிங்களர் உரிமைக்கும் உறுதியளித்து அவர்களையும் விடுதலை இயக்கத்திற்கு அழைக்கிறது. சிங்களர்கள் வருவார்களா மாட்டார்களா என்பது வேறு செய்தி. ஒரு தேசிய இயக்கம் இவ்வாறான பார்வை கொண்டிருக்க வேண்டும்.
தமிழ்த் தேசியம் இட்லரின் பாசிச இனவாதக் கொள்கை கொண்டதல்ல. அதே வேளை தமிழர்களின் தாயகத்தையே தம் வசப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு அயல் இனத்தார் மிகை எண்ணிக்கையில் தமிழகத்திற்குள் புகுந்து தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றுவதை எதிர்க்கிறது.
12.'வெளியாரை வெளியேற்றுவோம்" எனத் த.தே.பொ.க முழங்குவது இனவாதப்பாசிசம் இல்லையா? பிறமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு இது ஆபத்தை உண்டாக்காதா?
'வெளியாரை வெளியேற்றுவோம்" என்ற நமது முழக்கமும் அதற்கான போராட்டமும் பாசிசம் ஆகாது. மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட 1956-க்குப் பின், தமிழ்நாட்டில் மிகை எண்ணிக்கையில் குடியேறி தமிழ்மக்களின் தாயக உரிமை, தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பறித்து ஆக்கிரமிக்கும் வேற்று இனத்தாரைத் தான் வெளியேற்றக் கோருகிறோம். மற்றபடி தமிழகத்தில் நூற்றுக்குநூறு தமிழர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறவில்லை.
குறிப்பாக மார்வாடி-குசராத்தி சேட்டுகள், மலையாளிகள், ஆந்திரர்கள் ஆகியோர்தாம் அன்றாடம் மிகை எண்ணிக்கையில் தமிழகத்தில் குடியேறி மண்ணின் மக்களின் எண்ணிக்கையை சிறுபான்மை ஆக்குமளவிற்கு ஆக்கிரமிக்கிறார்கள். இவ்வாறான அயலாரின் மிகை வருகையை ( Abnormal migration ) தாராளமாக அனுமதித்தால் தமிழர் தாயகம் பறிபோய் விடும். தமிழ்த் தேசிய இனம் சிறுபான்மை ஆகிவிடும்.
தமிழ்நாட்டை ஒரு தேசம் என்று பார்க்காமல், இந்தியாவின் ஒரு மாநிலம் என்ற அளவில் மட்டும் பார்ப்பவர்கள் தாம் வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். அசாமில் நடந்த வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தில் இந்திய அரசு ஒர் உடன்பாடு கண்டு ஒப்பந்தம் போட்டதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்கள், அங்கெல்லாம் உடலுழைப்புத் தொழிலாளிகளாகவே பெரிதும் இருக்கிறார்கள். அவர்கள் அம்மாநிலங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். கேரளத்தில் ஏர் உழுதல், நடவுநடுதல், தேங்காய் பறித்தல், கட்டட வேலைகள் செய்தல் போன்ற கடின உடலுழைப்பு வேலைக்குப் பெரிதும் தமிழர்களையே அமர்த்துகிறார்கள். அவ்வேலைகளைச் செய்ய விரும்பாத அளவிற்கு மலையாளிகளின் பொருளியல் அங்கு உயர்ந்துள்ளது. இதற்கு அவர்கள் வெளிநாடுகளில் ஈட்டும் பணமும் ஒரு காரணம்.
தமிழ்நாட்டில் தமிழ் இன உணர்ச்சியும் தமிழர் பாதுகாப்பு அமைப்பும் உறுதியாக இருந்தால் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு அது மதிப்பையும் பாதுகாப்பையும் வழங்கும். தமிழகம் பதிலடி கொடுக்கும் என்ற எச்சரிக்கை உணர்வும் அயல் இனத்தார்க்கு உண்டாகும்.
13. இன்றைய உலகச் சூழ்நிலையில் வல்லரசுகளின் இராணுவத் தலையீடு பெருகிவருகிறது. சிறிய தமிழ்த் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா? வல்லரசிய எதிர்ப்பிற்கு பெரிய இந்திய நாடு வாய்பபானதில்லையா?
பெரிய இந்தியா வல்லரசுகளின் கூட்டாளியாகி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாசல் கதவையும் பிடுங்கி எறிந்துவிட்டு வரவேற்புக் கொடுக்கிறது. ஒரே இடத்தில்-தில்லியில்- மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு இந்தியா முழுவதையும் சூறையாடும் பொன்னான வாய்ப்பு இப்பொழுது அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு உள்ளது.
ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு, கொள்கை வழிப்பட்ட தமிழ்த் தேசியமே சிறந்த வடிவம். சின்னஞ்சிறு கியூபா, வடகொரியா, வியட்நாம் போன்ற நாடுகள் அமெரிக்காவை முறியடித்து கம்பீரமாக உலக அரங்கில் நிற்கின்றன. அவற்றை விட பெரியது தமிழ்த் தேசம்.
தமிழ்த் தேசிய சனநாயகப் பொருளியல் கொள்கை வல்லரசிய எதிர்ப்புக் கொண்டது. தமிழ்த் தேசம் எந்த ஏகாதிபத்தியத்தையும் முறியடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இறுதியாக வெல்வது இலட்சிய வழிப்பட்ட மக்கள் சக்தியே! ஆயுதங்கள் அல்ல.
இந்திய தேசியத்தை ஆதரிப்பது என்பது தெரிந்தோ தெரியாமலோ ஏகாதிபத்தியங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதாகும்.
14. தமிழ்த் தேசியத்தின் தொழில், வேளாண் கொள்கைகள் என்ன? சமூகவியல் கொள்கைகள் என்ன?
தொழில்துறையில் அரசுத்துறை மேலோங்கியிருக்கும். சிறிய, நடுத்தர, ஏகபோகமற்ற தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுவர். வரம்புக் குட்பட்டு தனியார் தொழில்துறைக்கு நல்வாய்ப்புகள் வழங்கப்படும். இவர்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும்.
ஏகாதிபத்திய-பன்னாட்டு-தொழில் நிறுவனங்களுக்கான தாராளமயம், உலகமயம் கைவிடப்படும். வெளியேற்ற வேண்டிய வெளியார் நிறுவனங்கள் வெளியேற்றப்படும். கட்டுதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படக்கூடிய நமக்கு இன்றியமையாத் தேவையாய் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.
வேளாண்துறையில், தற்சார்பு வேளாண்மை கொள்கைக் கடைபிடிக்கப்படும். மான்சாண்டோ போன்ற வெளிநாட்டு வேளாண் நிறுவனங்கள் வெளியேற்றப்படும். நிலச் சீர்திருத்தம் முழுமை அடையும். சிறிய, நடுத்தர, பெரிய விவசாயிகளின் நிலவுடைமை உரிமை பாதுகாக்கப்படும். அவர்களுக்கு அரசு மானியங்கள் அதிகரிக்கப்படும். வெளிநாட்டுச் சந்தையில் போட்டியிடக் கூடியவகையில் வேளாண்மைக்கு மானியம் வழங்கப்படும்.
மொத்தத்தில் தமிழ்த் தேசிய சனநாயகப் பொருளியல் கொள்கை கடைபிடிக்கப்படும். தமிழகச் சூழலுக்கேற்ற ஒரு நிகரமை(சோஷலிசம்) இலக்கு அதற்கு இருக்கும்.
வர்ண-சாதி ஒழிப்பு, தீண்டாமை முறியடிப்பு, பெண்ணுரிமை, சூழலியல் பாதுகாப்பு, அனைவர்க்கும் வேலை, வேலையில்லாக்கால வாழ்வூதியம், மெய்யான மதச்சார்பின்மை, வழிபாட்டுரிமை, தமிழே ஆட்சிமொழி-தமிழே பயிற்று மொழி-தமிழே தொடர்பு மொழி என்ற ஒரு மொழிக் கொள்கை, விருப்பத்திற்கேற்ப ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளைக் கற்க முழுவாய்ப்பு, அறிவியல் வளர்ச்சிக்கு முன்னுரிமை, பழந்தமிழர்களின் அறச்சிந்தனை-பெரியாரிய-அம்பேத்கரியக் கருத்தியல்கள் ஆகியவை ஒருங்கிணைந்த மண்ணுக்கேற்ற மார்க்சியத் தத்துவம் போன்றவை சமூகவியலில் இருக்கும்.
15. தமிழ்த் தேசியப் புரட்சி எவ்வாறு நடக்கும்?
மாபெரும் மக்கள் எழுச்சியாகவே தமிழ்த் தேசியப் புரட்சி நடக்கும். போர்க்குணம் மிக்க அமைப்பு அப்புரட்சிக்குத் தலைமை தாங்கும். கொரில்லாக் குழு வடிவமாகவோ அல்லது நாடாளுமன்ற சட்டமன்றப் பாதையாகவோ தமிழ்த் தேசியப் புரட்சிப்பாதை இருக்காது.
16. முடிவாக, தமிழ்த் தேசியம் எது ?
எமது தேசம் தமிழ்த்தேசம்
எமது தேசிய இனம் தமிழர்
எமது தேசிய மொழி தமிழ்
எமது இலக்கு தமிழ்த்தேசக் குடியரசு அமைத்தல்
என்பதே தமிழ்த் தேசியம்.
-----பெ.மணியரசன்
===================================================================================
தமிழக உரிமைகளை அடைய தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்! -
புதிய முயற்சியில் பழ.நெடுமாறன்
சனிக்கிழமை, 05 ஜூலை 2014
காவிரி நதிநீர் பங்கீட்டில் ஓரவஞ்சனை, முல்லை பெரியாறில் தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகம், தமிழக மீனவர்களின் உரிமைகளும் உடமைகளும் உயிரும் பறிக்கப்படும் கொடுமை என்று அனைத்துத் திசைகளிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்தும் தேசியமும் திராவிடமும் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கவில்லை.
இந்த நிலையில், புதிய குரல்கள் புறப்பட்டு வருகின்றன. "தமிழகத்துக்கான தேவைகளை அடைய ஒரே தீர்வு தமிழ்த் தேசிய அரசியலை வலுப்படுத்துவது மட்டுமே. அதற்கு, இப்போது உதிரிகளாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும்'' என்கிறார் பழ.நெடுமாறன். அதற்காக வருகிற 29-ஆம் தேதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ்த் தேசிய இயக்கங்கள் அனைத்தையும் ஒன்றுகூட்டி கலந்தாலோசிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த நிலையில் அவரிடம் பேட்டி கண்டோம்.
"தமிழ்த் தேசிய இயக்கங்களை ஒன்றிணைக்கும் திடீர் முயற்சி எதற்காக?'
"தமிழகத்தில் நிறைய தமிழ்த் தேசிய இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அனைவருக்கும் ஒரே நோக்கம் இருந்தாலும் உதிரி உதிரியாக செயல்படுகின்றனர். தமிழ்த் தேசியம் என்பதில் ஒரே கருத்து நிலவும்போது ஏன் தனித்தனி அமைப்புகள்? தனித்தனிக் கொடிகள்? இப்படிப் பிரிந்து கிடப்பதால் அவர்களுடைய கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் வலு ஏற்படுவது இல்லை. இவர்கள் ஒன்றுசேர்ந்து போராடினால் மட்டுமே அந்தப் போராட்டத்துக்கு ஒரு வலு ஏற்படும். ஆட்சியில் இருப்பவர்களிடம் இவர்களின் குரல் எட்டும். அதனால்தான் இப்போது இந்த முயற்சி.'
"இப்போது அதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கருதுகிறீர்களா?'
"தமிழ்த் தேசியவாதிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம், முன் எப்போதையும்விட இப்போது அதிகரித்துள்ளது. காரணம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பிறகும் கூட காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் நம்முடைய உரிமைகளைப் பெற முடியவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இப்போதும் அந்தத் துயரம் நீடிக்கிறது. தமிழக மீனவர்களுடைய உரிமை, உடமை, உயிர் என அனைத்தும் பறிக்கப்படுகின்றன. அதற்கு இதுவரை ஒரு விடிவு ஏற்படவில்லை.'
உலக மயமாக்கலுக்குப் பிறகு உலகின் பல மொழிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து யுனெஸ்கோ அளித்துள்ள அறிக்கையில், ‘அழியும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கக் கூடும்’ என்று சொல்லி உள்ளது. மொழி அழிந்தால் இனம் அழியும். நாடு அழியும். அதை நாம் தடுத்தாக வேண்டும். அதற்காக நாம் ஒன்றுபட்டே ஆக வேண்டிய நிர்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. அப்படி முன்பே ஒன்றுபடாமல் போனதால்தான், 2009-இல் இலங்கையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, பக்கத்தில் நாம் ஏழரைக் கோடி தமிழர்கள் இருந்தும் அதைத் தடுக்க முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம் நாம் ஒன்றுபடாததுதான். ஒன்றுபட்டு இருந்தால் இந்திய அரசை நிர்பந்தப்படுத்தி அதைத் தடுத்திருக்க முடியும்.'
"தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குள் பிளவு ஏற்பட என்ன காரணம்?'
"தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குள் பிளவு என்பது உருவான ஒன்றல்ல. ஒன்றாக இருந்தவர்கள் உடையவில்லை. மாறாக, உருவாகும்போதே தனித்தனி அமைப்புகளாக உருவானார்கள். இப்போது அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை முன்னெடுத்துள்ளேன்.'
"இதற்கு முன்பு இப்படிப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டதா?'
"2004-ஆம் ஆண்டு அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பிறகு நிறைய தமிழ்த் தேசிய அமைப்புகள் உருவாயின. அவற்றையும் இப்போது ஒன்றுபடுத்த வேண்டிய அவசியமும் கடமையும் இருப்பதால் இந்த முயற்சி. அதற்கான காலம் இப்போது கனிந்துள்ளது. என்னிடம் பலர் தொடர்ந்து இதுபற்றி வற்புறுத்தி வந்தார்கள். அப்படி வற்புறுத்தியவர்கள் இணைந்து செயல்படவும் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. அப்படி இணையும் போது தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வது யார் என்ற ஒரு கேள்வியும் எழும். என்னைப் பொறுத்தவரையில் நான் தெளிவாக இருக்கிறேன். யார் வேண்டுமானாலும் தலைமைக்கு வரட்டும். ஆனால், ஒற்றுமையாக இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இளைஞர்கள், துடிப்பாகச் செயல்படுபவர்கள் தலைமைக்கு வர வேண்டும். என்னைப் போன்றவர்கள் அவர்களுக்கு ஆலோசனையும் வழிகாட்டுதலும் செய்வோம்.'
"அகண்ட பாரதத்தை வலியுறுத்தும் கட்சி மத்தியில் ஆட்சியில் உள்ளது. திராவிடத் தத்துவத்தை முன்னிறுத்தும் கட்சிகள் தமிழகத்தில் வலுவாக இருக்கின்றன. இந்தச் சூழலில் தமிழ்த் தேசிய இயக்கங்களின் ஒற்றுமையை நீங்கள் வலியுறுத்துவது பற்றிச் சொல்லுங்கள்?'
"மொழி வழியின் அடிப்படையில்தான் ஒரு தேசியம் உருவாக முடியும். மதம், மரபினம் என்ற அடிப்படையில் ஒருநாளும் ஒரு தேசியம் உருவாக முடியாது. ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் மங்கோலிய மரபினத்தில் வந்தவர்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக அந்த நாடுகளில் மங்கோலிய தேசியம் உருவாகவில்லை. மாறாக, அவர்கள் பேசும் மொழியின் அடிப்படையில் சீனர்கள், ஜப்பானியர்கள் என்றுதான் தங்களின் தேசியத்தை உருவாக்கி அடையாளப்படுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இதுதான் நிலை.
மத அடிப்படையில் முஸ்லிம்களை ஒன்றிணைத்து ஒரு தேசத்தை உருவாக்கி மத தேசியத்தை அமைக்க முடியும் என்று சொல்லித்தான் ஜின்னா பாகிஸ்தானைப் பிரித்தார். ஆனால், அங்கிருந்து கிழக்கு வங்காளம் சில ஆண்டுகளிலேயே பிரிந்து விட்டது. அவர்களும் முஸ்லிம்கள்தான். ஆனால், மொழியின் அடிப்படையில் பிரிந்து போனார்கள். அதுதான் இயல்பு. மத வழியில் ஒரு தேசியம் அமைய முடியும் என்றால், மேற்கே அல்ஜீரியாவில் இருந்து இந்தோனேஷியா வரை முஸ்லிம் தேசியம் உருவாகி இருக்க வேண்டுமே? ஏன் உருவாகவில்லை? ஆப்கானிய முஸ்லிம், ஈராக்கிய முஸ்லிம், பாகிஸ்தான் முஸ்லிம் என்று மொழி அடிப்படையில் பிரிந்துதானே இருக்கிறார்கள். தேசியம் அப்படி மொழி அடிப்படையில்தான் உருவாக முடியும்.
இந்திய தேசியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது எங்கே இருக்கிறது? மொழி அடிப்படையில் எப்போது மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ அன்றே இந்திய தேசியம் என்பது அர்த்தமற்றதாகிவிட்டது. பாஞ்சாபி, பஞ்சாபியர்களாகத்தான் இருக்கிறார்கள். குஜராத்தி, குஜராத்திதான். வங்காளி, வங்காளிதான். நாம் ஒரு நிலப்பரப்புக்குள் சில சமரசங்களுடன் ஒன்றாக வாழ்கிறோம். அவ்வளவுதான்! அனைவரும் இந்தியர்கள் என்றால், மலையாளியும் கன்னடர்களும் தண்ணீர் பிரச்னையில் நம்மை ஏன் வதைக்கிறார்கள்? உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும்கூட, இரண்டு மாநில முதலமைச்சர்களும் அதை எதிர்க்கிறார்கள் என்றால், அவர்கள் நம்மை வேறாக நினைப்பதால்தானே?
அதுபோலத்தான் திராவிட அரசியலும். வெறும் உதட்டளவில் மட்டுமே இருக்கிறது. திராவிட அரசியலுக்குள்ளும் கேரளாவும் கர்நாடகமும் இருக்கிறது. ஆனால், அவர்கள் நம்மை வேறாகத் தானே பார்க்கிறார்கள். திராவிட அரசியல் பேசும் திராவிடத் தலைவர்கள்கூட தங்களை மனத்தளவில் தமிழ்த் தேசியத் தலைவர்களாகத்தான் இருக்கிறார்கள். திராவிட இன உணர்வை இழக்கவிட மாட்டோம் என்று சொல்லும் கலைஞர், தனக்குப் பட்டமாக திராவிடர் இனத் தலைவர் என்றா போட்டுக் கொள்கிறார்? தமிழினத் தலைவர் என்றுதான் போடுகிறார். எனவே, திராவிட அரசியல் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற வேலை.'
"தமிழ்த் தேசியத்தை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள்? அப்படி தமிழ்த் தேசியம் அமைந்தால், இப்போது உள்ள பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடுமா?'
"தேசிய இன உருவாக்கத்துக்கு ஆறு அம்சங்கள் அடிப்படை. 1. நில எல்லை, 2. அரசு, 3. ஒருபடித்தான வாழ்க்கை முறை, 4. இலக்கியச் செழுமை, 5. பொது வாழ்க்கை பழக்கவழக்கங்கள் 6. சமூக மரபுநிலை. இந்த ஆறு அம்சங்களும் சங்க காலத்தில் இருந்து தமிழர்களுக்கு சரியாக அமைந்துள்ளன. ஆக தமிழ்த் தேசியம் அமைவதற்குத் தடையேதும் இல்லை. அப்படி அமைந்தால் இப்போது உள்ள பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடுமா என்று கேட்டீர்கள் அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் சிந்து மாகாணத்துக்கும் பஞ்சாப்புக்கும் சிந்து நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்னை இருந்தது. அதை பிரிட்டிஷ் அரசு தீர்க்கவில்லை. சுதந்திரத்துக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் பிரிந்ததும், இரண்டு மகாணங்களுக்கு இடையிலான அந்தப் பிரச்னை இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையாக மாறியது. அப்படி மாறியதும் உலக வங்கி அதில் தலையிட்டு உடனடியாக அந்தப் பிரச்னையைத் தீர்த்துவைத்தது. அதற்காக தமிழகத்தை உடனடியாக இந்தியாவில் இருந்து பிரிக்கச் சொல்லவில்லை. ஆனால், காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் சிந்து நதிப் பிரச்னையில் ஏற்பட்ட நிலை ஏற்படக்கூடும்!'
நன்றி : ஜூனியர் விகடன் 18-06-14
http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=category&layout=blog&id=39&Itemid=38
============================================================================================================
|
தமிழ்த் தேசியம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மனிதரோ, அமைப்போ, பிரிவினைவாதியோ, இனவெறியரோ வலிந்து முன்னிறுத்தும் கருத்து இல்லை. அது வரலாற்று வழிப்பட்டுப் புறநிலை மெய்ம்மையிலிருந்து விளைந்த சமூக அறிவியல் கருத்தாகும்.
‘வட வேங்கடம் தென் குமரி வரை ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழரின் தேசத்துக்கு எல்லை குறிக்கிறார் தொல்காப்பியர்.
‘செப்பும் வினாவும் வழால் ஓம்பல்’ எனத் தொடங்கும் நூற்பாவில் கேள்வியும் பதிலும் குழப்பமின்றியும் பிழையின்றியும் இருக்க வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். இந்தச் செய்யுளுக்கு 11ஆம் நூற்றாண்டில் பொருள்விளக்கம் அளிக்க வந்த இளம்பூரணர் குழப்பமற்ற விடைக்கு எடுத்துக்காட்டாக ஒரு வாக்கியத்தைக் குறிப்பிடுகிறார். ‘உன் நாடு எது? என்று கேட்டால் தமிழ்நாடு என்று சொல்’ என்கிறார்.
‘இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய’ எனத் தொடங்கும் சிலப்பதிகார வரியின் வாயிலாகச் சோழ நாடு, பாண்டிய நாடு என்பதெல்லாம் தற்காலிகமானவை, தமிழ்நாடு என்பதே நிரந்தரமானதென உணர்த்துகிறார் இளங்கோவடிகள். தொல்காப்பியரோ இளம்பூரணாரோ இளங்கோவடிகளோ பிரிவினைவாதிகள் இல்லை. அன்று தமிழ்நாடு என்ற ஒற்றைத் தேசக் கருத்தியல் வளராததற்கு முன்பே அது பின்பு படிமலர்ச்சி அடையவிருப்பதைக் கணித்துச் சொன்ன மேதைகள் அவர்கள்.
சுமார் நாலாயிரம் ஆண்டுகளாகத் திருவேங்கடம் (இன்றைய திருப்பதி) முதல் குமரி வரையிலான எல்லையில் தமிழ் ஒன்றையே பேசி, ஒரே பண் பாட்டுத் தளத்தில் நாம் தமிழர்கள் என்ற உளவியல் உருவாக்கத்துடன் வாழ்ந்து வரும் மக்களைக் கொண்ட ஒரு புவிப் பரப்பு தேசம் என்னும் வரையறையில் அடங்காது என்றால், பிறகு உலகின் எந்தப் பரப்பும் தேசம் என்னும் தகுதியை அடையாது.
இதில் இன்றியமையாச் செய்தி என்னவென்றால், தமிழ் இலக்கியங்கள் தமிழ் நாடு என்றும், தமிழர்கள் என்றும் கூறி வந்துள்ளனவே தவிர, அவை எந்த ஓரிடத்திலும் இந்தியா என்றோ, பாரதம் என்றோ குறிப்பிட்டது இல்லை.
மாணிக்கவாசகப் பெருமான் கூட திருவாசகத்தில் ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்றுதான் பாடினார். பாரத நாட்டுடைய சிவனே போற்றி எனப் பாடவில்லை.
ஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் நுழைந்து அவர்களின் நிர்வாக வசதிக்காக இந்தியா என்னும் செயற்கைப் பரப்பை உருவாக்கிய பின்னர்தான் தமிழகம் தன் வரலாற்றில் முதல் முறையாக பாரத மாதா பஜனையைக் கேட்கத் தொடங்கியது.
வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் உள்ளிட்ட பல இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் தமிழ், மலையாளம், குஜராத்தி, அசாமி எனப் பல மொழி பேசும் தேசிய இனங்களையும் இந்தியம் என்னும் ஒற்றைச் சிமிழுக்குள் அடைத்தனர்.
குறிப்பாக மாண்டேகுசெம்ஸ்ஃபோர்டு சீர்த்திருத்தத்தின்படி தில்லியில் மையப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற அமைப்பு உருவாகி, அதன் கீழ் பல அடிமை மாகாணங்கள் அமைக்கப்பட்டு, அங்கு அம்மக்கள் பேசும் மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள் என்ற நிலையிலிருந்து வட்டார மொழிகளாகச் சுருக்கப்பட்டது. இந்தியம் இன்னும் கெட்டிப்பட்டது.
சமூக அறிவியலுக்குப் புறம்பான இந்தியா, இந்தியர்கள் என்னும் இந்தச் செயற்கைப் புனைவை அன்றைய இந்தியாவில் தோலுரித்துக் காட்டிய ஒரே தலைவர் பெரியார் ஈவெரா ஆவார். ராஜாஜி இந்திய ஒற்றுமை என்ற பெயரில் 1937இல் இந்தியைத் தமிழர் தலையில் அரைத்தபோது அதற்கு எதிராக வெகுண்டெழுந்து போராடினார் பெரியார்.
பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னை நோக்கி இந்திக்கு எதிரான பெரும் நடைப்பயணம் நடைபெற்றது. பெரியார், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் சிறைக் கொட்டடியில் அடைபட்டனர். நடராசன், தாளமுத்து ஆகியோர் சிறைக் கொடுமையில் மாண்டு போயினர். இறுதியில் இந்தியை விலக்கிக் கொண்டார் ராஜாஜி. இதற்கான வெற்றி விழாவாகச் சென்னைக் கடற்கரையில் செப்டெம்பர் 11, 1938 அன்று ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் முதல் முறையாக முன் வைக்கப்பட்டது. இந்த முழக்கத்தைப் பெரியார் தமிழக வீதிகள் எங்கும் கொண்டு சென்றார். தொல்காப்பியர், இளங்கோவடிகளின் தொடர்ச்சியைத் தமிழகம் பெரியாரிடம் கண்டது.
1947 ஆகஸ்டு 15ம் நாள் இந்தியா விடுதலை பெறும் என்ற அறிவிப்பு வெளியான போது அந்நாளை ‘துக்க நாள்’ என்று அறிவித்தார் பெரியார். இது தமிழர்களுக்கான விடுதலை இல்லை, இந்தி வெறி பிடித்த பார்ப்பனபனியா ஆதிக்கக் கூட்டத்துக்குக் கிடைத்த விடுதலை என்றார் பெரியார். டயர் போனான், படேல் வந்தார் எனப் போட்டுடைத்தார்.
நீங்கள் வரும் போது நான் தில்லிக்காரன் கீழ் இல்லை, இப்போது போகும்போது எங்களை அவனிடம் ஒப்படைத்துவிட்டுப் போவது என்ன நியாயம் என வெள்ளையனிடம் கேட்டார் பெரியார். வேண்டுமானால் தமிழ்நாட்டுக்கு லண்டன் தலைநகராக இருக்கட்டும். பிறகு எங்கள் விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார். தாங்கள் இந்தியர்கள் இல்லை என்பதைத் தமிழர்களுக்குத் தெளிவாக உணர்த்தியது பெரியாரின் துணிச்சலான விடுதலை நாள் அறிவிப்பு.
தமிழர்களை இந்தியர்கள் என அழைப்பது பொருத்தமற்றது எனத் தெளிவாக உரைத்த பெரியார் திராவிடர் என்னும் பதத்தைக் கொண்டு அவர்களைக் குறித்தார். அவர் விடுதலை கேட்ட அன்றைய காலகட்டத்தில் தமிழகமும் கேரளமும் ஆந்திரமும் கர்நாடகமும் அடங்கிய பகுதி சென்னை மாகாணத்துக்கு உட்பட்டதாக இருந்தது. இந்த மக்களையே திராவிடர்கள் என்று அவர் அழைத்தார். எனவே இந்தியாவுக்கு எதிரான அவர்களின் விடுதலையை திராவிட நாடு விடுதலை என்றே பல இடங்களிலும் குறிப்பிட்டார். மேலும் ஆரியப் பார்ப்பனர்களுக்கு எதிராகவும் திராவிடர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
பிற்பாடு 1956 நவம்பர் 1 அன்று மொழி அடிப்படையில் தமிழகம் பிரிந்ததைத் தொடர்ந்து பெரியார் முன்வைத்த திராவிடர் விடுதலை என்பது தமிழர்களின் விடுதலை என்பதாகவே அமைந்தது.
வருணாசிரமம் காக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தும் மாபெரும் போராட்டத்தை 1957 நவம்பர் 27 அன்று நடத்தினார் பெரியார். தமிழ்நாடு இல்லாத இந்திய வரைபடத்தை 1960ல் கொளுத்தினார். பெரியாரின் இந்தத் தமிழர் விடுதலை நிலைப்பாடு அவர் சாகும் வரை தொடர்ந்தது.
செப்டெம்பர் 17, 1973 அன்று வெளியிட்ட தமது 95ஆவது பிறந்த நாள் அறிவிப்பில் இப்படி கூறினார்.‘நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும் பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ பெற ஒவ்வொருவரும் முடிவு செய்துகொண்டு முன் வர வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதற்குப் பொது மக்களே! இளைஞர்களே! பள்ளி, கல்லூரி மாணவர்களே! மாணவிகளே! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்! உறுதி கொள்ளுங்கள்!’
பெரியார் முன் வைத்த தமிழர் விடுதலை அல்லது திராவிடர் விடுதலை முழக்கத்தில் தமிழ்த் தேசியக் கருத்தியலுக்குரிய வித்து ஆழப் புதைந்திருந்தாலும், அதில் குறையில்லாமல் இல்லை. அவர் தமிழக விடுதலைக்குச் சாதி விடுதலை என்னும் ஒற்றைக் காரணத்தை மட்டுமே பெரிதும் முன்வைத்தார். வருணாசிரமத்துக்கு வால் பிடிக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என அவர் கூறியது உண்மைதான். ஆனால் அதே சட்டம் தமிழை வட்டார மொழி எனச் சிறுமைப்படுத்தியதை அவர் கண்டுகொள்ளவில்லை. மாறாக இந்தியம் திணிக்கும் ஆங்கிலத்தைத் தமிழர்கள் படிப்பதே நலம் எனப் பிழையாகக் கருதினார்.
பெரியாரின் தமிழினப் பார்வையில் குறைகள் இருந்தாலும், தமிழ்த் தேசியக் கருத்தியலின் மூல வித்து அவரிடமிருந்துதான் புறப்படுகிறது. அதுதான் இன்று ஆழ வேர் விட்டுத் தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது. பெரியாரின் பார்வையில் இருந்த குறைகளைப் போக்கி இன்றைய தமிழ்த் தேசியக் கருத்தியல் தனது தெளிவான குறிக்கோளை முன்வைக்கிறது.
வரலாற்றுப் பாடம் கற்றுக்கொண்டு இன்று புதுப் பொலிவுடன் எழுந்து வரும் தமிழ்த் தேசியக் கருத்தியல், தமிழ் ஒரு வட்டார மொழியன்று, உள்ளபடியே அது தமிழர்களின் தேசிய இன மொழி எனக் கூறுகிறது. தமிழர்களின் கல்வி மொழியாக, நிர்வாக மொழியாக, நீதி மொழியாக, இறை மொழியாகத் தமிழ் திகழ்வது ஒன்றே தமிழர்களின் சனநாயகத்தை உறுதி செய்யும் என்றும், அயல்மொழிகளாம் ஆங்கிலமோ இந்தியோ தமிழர்களை ஆள்வது சமூக அநீதிக்கே வழிவகுக்கும் என்றும் தெளிவான ஒருமொழிக் கொள்கையை முன்வைக்கிறது. நாம் இந்தியர்களும் அல்லர், திராவிடர்களும் அல்லர், நாம் தேசிய இனத்தாலும், மொழியாலும், மரபினத்தாலும் தமிழர்களே என்ற சமூகவியல் உண்மையை விண்டுரைக்கிறது.
வள்ளுவர், சித்தர்கள் தொடங்கி அயோத்திதாசர், பாரதியார், பாரதிதாசன், பெரியார் வரை முன் வைத்த சாதி மறுப்பே தமிழர்களின் மெய்ப் பண்பாடு என வரையறுக்கிறது. கன்னடர்கள் தமிழர்களுக்குக் காவிரி நீர் தர மறுப்பதை, மலையாளிகள் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முனைவதை, தமிழ்த் தேசிய இனத்தின் மீது அயல் தேசிய இனத்தவர் நடத்தும் நீர் முற்றுகை எனத் தமிழ்த் தேசியம் வர்ணிக்கிறது.
தமிழர் வரலாறு தொடங்கியது தொட்டே தமிழகத்தில் வாழ்ந்து வரும் பார்ப்பனர்களும், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்து இங்கேயே காலூன்றித் தமிழர்களுள் தமிழர்களாகக் கலந்துவிட்ட தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தமிழர்களே என்பதுதான் தமிழ்த் தேசியத்தின் தெளிவான பார்வையாகும். ஆனாலும் எந்த ஒரு விடுதலை பெற்ற தேசத்துக்கும் உள்ள உரிமை போன்றே, தமிழகத்தில் எவர் நுழையலாம், எவர் வணிகம் செய்யலாம் என முடிவு செய்யும் உரிமை தமிழர்களுக்கே வேண்டும். ராஜீவ் காந்தியுடன் மகந்தா ஒப்பந்தம் செய்து 1971க்குப் பிறகு அசாமில் குடியேறிய வங்காளிகளை வெளியேற்றியது போன்ற ஓர் ஏற்பாடு, எவரும் நுழைந்து நிலம் வாங்குவதற்குத் தடை விதிக்கும் காஷ்மீரின் 370ஆவது சட்டப் பிரிவு போன்ற ஓர் அதிகாரம் தமிழகத்துக்கு வேண்டும்.
அதேபோது, காஷ்மீரிகளும், அசாமியர்களும், நாகர்களும் இந்திய ஆதிக்கத்துக்கு எதிராக நடத்தி வரும் விடுதலைப் போராட்டங்களுக்குத் தமிழ்த் தேசியம் முழு ஆதரவு நல்குகிறது. இந்தியாவின் எந்தத் தேசிய இன விடுதலைப் போராட்டத்தையும் தனது போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தமிழ்த் தேசியம் கருதுகிறது.
உலகமயம், இந்தியமயம் என்ற பெயரில் எந்தப் பகாசுரக் குழுமங்களும் தமிழகத்தில் நுழைந்து இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதைத் தமிழ்த் தேசியம் எதிர்க்கிறது. அது சுற்றுச்சூழலுக்கு ஏதுவான தற்சார்பான பொருளியல் கொள்கையை முன்வைக்கிறது. எனவே தமிழ்த் தேசியம் அதன் பிறப்பிலேயே உலகமயம் என்ற பெயரில் உலகத்தை ஒரு கிராமமாக்க முயலும் ஏகாதிபத்தியப் போக்கை மறுக்கிறது.
தமிழர்களைத் தமிழ் ஆள்வதற்கோ, தமிழக எல்லைகளைக் காப்பாற்றிக் கொடுப்பதற்கோ, தமிழகத்தில் சாதியொழிப்புக்கு வித்திடும் சட்டங்கள் இயற்றவோ, அயலார் நுழைவைக் கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லாத அமைப்பே தமிழகச் சட்ட மன்றம் ஆகும். 234 தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தும் கச்சத்தீவைத் தூக்கி இலங்கைக்கு தில்லி கொடுத்தது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. சாதியில் பின்தங்கியவர்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒரு சில இடங்களைப் பெற்றுத் தரக் கூடிய 69% இடஒதுக்கீட்டைக் கூட காப்பாற்றித் தர முடியாத சட்டமன்றம் இது என்பதை நாம் அறிவோம்.
ஏனென்றால் இதற்குச் சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது. இது இயற்றும் மசோதாக்களை இந்திய நாடாளுமன்றம் ஏற்றால்தான் அவை சட்டமாகும். எனவே இதனைத் தமிழ்நாடு மசோதா மன்றம் என்றும், அதன் உறுப்பினர்களை மசோதா மன்ற உறுப்பினர்கள் என்றும் கூறுவதே சாலப் பொருத்தம்.
ஆக, தங்கள் மொழியையும் பண்பாட்டையும் எல்லைகளையும் பொருளாதாரத்தையும் இன அடையாளத்தையும் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை தமிழர்களுக்கு வேண்டும் எனக் கேட்பது அடிப்படை சனநாயகக் கோரிக்கை ஆகும். உலகத் தேசங்கள் அனைத்தும் அனுபவித்து வரும் இந்த அடிப்படை உரிமையைக் கேட்கும் தமிழ்த் தேசியக் கருத்தியல் பிரிவினைவாதம் ஆகாது. தமிழர்களின் இறையாண்மையைக் காத்துத் தரும் தகுதியுடன் ஓர் உண்மையான தமிழகச் சட்டமன்றத்தை இந்தியா சமைத்துக்கொடுத்தால் பிரிவினை தேவையில்லை. தமிழ்த் தேசியக் கருத்தியல் பிரிவினையை வலியுறுத்துகிறதா இல்லையா என்பது தமிழ்த் தேசியர்களின் கையில் இல்லை. இந்தியாவின் கையில்தான் உள்ளது!
http://www.aazham.in
==========================================================================
ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் -- கோவை ஞானி
ஜூ.வி. நூலகம்
பார்வையற்ற கோவை ஞானி, தமிழ்த் தேசியத்துக்கு வெளிச்சம் பாய்ச்சுவதற்காக எழுதிய புத்தகம் இது.
தமிழ்த் தேசியம் என்ற சொல், இன்று அரசியல் மற்றும் அறிவுச் சூழலில் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது. 'தமிழகத்தை தமிழன்தான் ஆளவேண்டும்’, 'இங்கு வாழும் மற்ற மொழிக்காரர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே... பங்கேற்பாளர்கள் ஆகக்கூடாது’, 'திராவிடன் என்று சொல்லிச் சொல்லித்தான் தமிழன் அதிகாரத்தை அடையாமல் போனான்’, 'பெரியார் தமிழர் அல்ல...’ என்பது மாதிரியான பல்வேறு முழக்கங்கள் இப்போது ஒலிக்க ஆரம்பித்து இருக்கின்றன. சகட்டுமேனிக்கு வைக்கப்படும் இத்தகைய விமர்சனங்களாக இல்லாமல், ஆக்கப்பூர்வமாக தமிழ்த் தேசியத்தை எப்படிப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் குறிப்புகளாக கோவை ஞானி இதை எழுதி இருக்கிறார். கடந்த 40 ஆண்டு காலமாக இலக்கியம், அரசியல், சமூகம் குறித்த ஆழமான படிப்பு மற்றும் அனுபவப்பட
http://books.vikatan.com/
====================================================================
ஞானியும் தமிழ்த் தேசியக் கருத்தாக்கமும் - க.பஞ்சாங்கம்
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/24981-2013-09-20-03-41-36
தேசியம்’ என்ற கருத்தாக்கம் மேற்குலகில் முதலாளியச் சமூகம் உருவான பின்னணியில்தான் தோன்றியது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு வரலாற்றுச் சூழலில் இது வேறுவிதமாக அமைந்துள்ளது என்றே கருதத் தோன்றுகிறது. ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்’ என்று ஓர் எல்லையை வகுத்துக் கொண்டு, அந்த எல்லைக்குள் பேசப்பட்ட ஒரு மொழியைத் ‘தமிழ்’ மொழி என இலக்கணப்படுத்தி ஒழுங்குப்படுத்துவதன் மூலம் நிலைநிறுத்த முயலும் போதே பிறமொழி ஆதிக்கத்திலிருந்தும் தன்மொழியைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுகிற முயற்சியிலும் ஈடுபடுகிற தன்மையைப் பார்க்கிற போது இங்கே ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தாக்கம் மிகப் பழமையானது எனச் சொல்லத் தோன்றுகிறது. தொடர்ந்து ஆக்ரமிப்பிற்கு இடையில் வாழ நேர்ந்த ஒரு மொழி பேசும் இனத்திற்குள் இது அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகவும் இயங்கி உள்ளது என்றும் தமிழக வரலாற்றில் பார்க்க முடிகிறது.
மார்க்சியத்திலிருந்து தமிழ்த் தேசிய கருத்தாக்கத்திற்குள் வந்தடைந்த ஞானி, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தேசியம் குறித்துப் பல்வேறு கோணத்தில் வகைவகையான உரையாடலைப் பெரிதும் நிகழ்த்திக் கொண்டிருப்பவராக விளங்குகிறார். அதன்பொருட்டுத் ‘தமிழ்நேயம்’ பத்திரிக்கையையும் நடத்தி வருகிறார். ‘மனிதர்களின் மனநிறைவான வாழ்விற்கு அவர்களின் தாய்மொழி வழியாக அமைந்த தேசிய வாழ்வு ஒரு சிறிதும் பங்கமில்லாமல் கட்டமைக்கப்பட வேண்டும். மனித விடுதலைக்கு இத அடிப்படை’ என்கிற சிந்தனையின் மேல் இயங்குகிறார். அடிப்படையில் அன்றும் இன்றும் மார்க்சியவாதியான ஞானி ‘தேசிய இனம்’ குறித்துத் தாய்மொழி அடிப்படையில் விளக்கம் தரும் ஸ்டாலின் வரையறைகளைப் பல இடங்களில் சொல்லிச் செல்லுகிறார். அவற்றை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்வதும் நல்லது.
1. தொடர்ந்து ஒரே மொழி பேசும் ஒரு மக்கள் கூட்டம்.
2. குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் தொடர்ச்சியாக வாழும் மக்கள் கூட்டம்.
3. இதன் விளைவாக அவர்களுக்கே ஆன வரலாறு ஒன்று வந்தமைதல்.
4. இதன் தொடர்ச்சியாக அவர்களுடைய பண்பாட்டு அடிப்படையிலான உளவியல் தன்மைகள்.
2. குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் தொடர்ச்சியாக வாழும் மக்கள் கூட்டம்.
3. இதன் விளைவாக அவர்களுக்கே ஆன வரலாறு ஒன்று வந்தமைதல்.
4. இதன் தொடர்ச்சியாக அவர்களுடைய பண்பாட்டு அடிப்படையிலான உளவியல் தன்மைகள்.
இந்த நான்கு கூறுகளும் ‘ஒரு தேசிய இனம்’ என்கின்ற அடையாளம் உருவாகி நிலைபெற காரணமாகி விடுகின்றன. ஸ்டாலின் கூறும் இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தாலும், ஞானி ஓரிடத்தில் குறிப்பிடுவது போல,
“ஒரு தேசிய இனம் என்ற முறையில் தனக்கென ஒரு நாடு அமைத்துக் கொள்ளும் உரிமை கொண்டது தமிழ்த் தேசிய இனம்” (ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், ப.34)
இவ்வாறு ஒரு தேசிய இனமாக குறிப்பிட்ட எல்லைக்குள் தன்க்கான ஒரு தேசத்தோடு வாழ்ந்த தமிழினம் இன்றைக்கு என்னவாகி இருக்கிறது? இதன் உட்பகையும் வெளிப்பகையும் இதன் ஆன்மாவை எவ்வாறெல்லாம் தின்று தீர்க்கின்றன? இந்த இனத்திற்கு எதிர்காலம் இருக்கிறதா? இதற்கு விடுதலை சாத்தியம்தானா? இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? நமக்கான வரலாற்றை எப்படி மீட்கப் போகிறோம்? இவ்வாறு ஞானியே கூறுவது போல ‘இருளில் துளாவுகிறவர்களாக வெளிச்சங்களுக்காக காத்திருப்பவர்களாக’ (தமிழியம், தமிழ்த் தேசியம் - ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் - 1, ப.51) நம்முடைய தமிழ்த்தேசியம் குறித்த மொழியாடல் பெரிதும் அமைந்து கிடக்கின்றது. அவற்றை இனி காணலாம்.
***
முதலில் தேசிய இனச்சிக்கல் என்பது தமிழினத்திற்கேயான தனியொரு பிரச்சனை இல்லை. அது எல்லா நாடுகளிலும், இந்தியாவிற்குள்ளே பல மாநிலங்களிலும் நெருப்பாய்க் கனன்று கொண்டு இருக்கிற ஒன்றுதான் என்பதை ஞானி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே போகிறார். “கனடாவிலிருந்து கியுபெக் மாநிலம் பிரிந்து செல்ல முயல்கிறது. ஸ்பெயினிலிருந்து காட்டலோனியா மாநிலம் பிரிவினை வேண்டுகிறது. பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து தன்னாட்சி கோருகிறது. சோவியத் யூனியனிலிருந்து பல்வேறு தேசிய இனங்களும் பிரிந்து தனிநாடாகி விட்டன. இரசியக் குடியரசில் இருந்து பிரிய சச்சன்யா போராடுகிறது. செக்கோஸ்லேவியாவும் இரண்டு தேசங்களாகப் பிரிந்து விட்டன. சீனாவிலிருந்து திபெத் பிரிய விரும்புகிறது” இப்படிச் சொல்லிக் கொண்டே போகிற ஞானி,
“ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட தேசம் எதுவும் இனி அமைதியாக இருக்க முடியாது” (மெய்யியல் கட்டுரைகள் - 1, ப.203)
எனச் சொல்லி முடிக்கிறார். இந்தியாவிற்குள்ளும் “சிவசேனை” (இங்கே சொந்த மாநிலத்தவர்க்கே வேலை என்று சட்டம் இயற்றப்பட்டு விட்டது), கர்நாடக மாநிலத்தில் ‘கன்னட சேனை, தமிழ்நாட்டில் ‘தமிழர் பாதுகாப்புப் படை’, ‘தமிழ்த் தேசியப் பொதுடைமைக் கட்சி’, பஞ்சாபில் காளிஸ்தான் இயக்கம், காஷ்மீரின் விடுதலை இயக்கம், வடகிழக்கு மாநிலங்களில் உல்ஃபா, போடோ, அஸ்ஸாம் மாணவர் இயக்கம், நாகலாந்து விடுதலை இயக்கம், (தெலுங்கானா போராட்டம்) எனப் பல்வேறு தேசிய இனப் போராட்டங்கள் உருவாகிய வண்ணம் இருக்கின்றன.
தமிழ்த் தேசிய இன வாழ்விற்கு எதிராக இருப்பவர்களை வெளிப்பகைவர்கள், உட்பகைவர்கள் என இரண்டாக வகுத்துக் கொள்ளலாம். வெளிப் பகைவர்களாக ஞானி முதலில் கருதுவது அதிகார மையமாக விளங்கும் மைய அரசைத்தான். மொழி வழியிலான மாநில அரசுகளின் கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும் பிடுங்கித் தனக்குள் சுருட்டிக் கொள்ள எப்பொழுதும் முயன்ற வண்ணம் இருக்கிறது. நிதி ஆதாரங்களின் மையப்புள்ளியாக விளங்கும் மைய அரசிற்கு மாநிலங்களைப் பகடைக்காய் போலப் பயன்படுத்துவது மிக எளிய செயலாக இருக்கிறது. கூடவே இராணுவத்தையும் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் வருமானத்தின் பெரும் பகுதியை அதிலே அள்ளிக் கொட்டிப் பெருக்கி வைத்துக் கொண்டுள்ளது. அடுத்தது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள ஏகபோக முதலாளித்துவம். முதலாளிகள் சுரண்டிச் செழித்து வளர, பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கி உள்ளடக்கிய ‘இந்தியா’ போன்ற பெரும் எல்லைப் பரப்புள்ள ஒரு நாடு அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நிகர வருமானத்தைப் பன்மடங்குப் பெருக்கிக் கொண்டே போவதன் மூலம், அரசு அதிகாரத்தைத் தங்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகக் கையாளுவதில் அவர்களுக்கான சிரமம் குறைந்து கொண்டே போய் விடுகிறது. இவர்களுடன் அரசு ஊழியர்களையும், நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரையும் தேசிய இன வாழ்விற்கு எதிரானவர்களாக அடையாளம் காணுகிறார் ஞானி (மே.நூ.ப.202)
***
உட்பகை என்று பார்த்தால் தமிழ்த் தேசிய இன வாழ்விற்கு முதல் தடையாக இருப்பது, தமிழின மக்களைப் பிரித்து வேரறுக்கும் இதன் சாதிய அமைப்புதான். கலப்புத் திருமணம், காதல் திருமணம், அகமண ஒழிப்பு, சீர்திருத்த திருமணம் முதலியவைகள் மூலமாகவும், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு மூலமாகவும் தீண்டாமை ஒழிப்புச்சட்டம் மற்றும் பிரச்சாரங்கள் மூலமாகவும், இச்சாதி உணர்வை நீக்கிவிடலாமென்று முயற்சி செய்யப்பட்டது. ஆனால் நாட்டில் அரசியல்வாதிகள் - ஓட்டுவங்கிகளை நம்பும் மக்களாட்சி அரசியல்வாதிகள் - தேர்தல் வரும் போதெல்லாம் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவது இந்தச் சாதி உணர்வைத்தான். விடுதலைக்குப் பின்பு நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலிலேயே (1951) காங்கிரஸ் கட்சி, வட்டார ரீதியாக எந்தச் சாதி மேலோங்கி இருக்கிறது என்ற அடிப்படையிலேயே தனது தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்தது என்பது வரலாறு. கூடவே இந்த நாட்டின் மதம் சாதியைப் புனிதமாகக் கொண்டாடுகிறது. விளைவு, இந்த ஒன்றினாலேயே ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஞானி போல, “சாதிகளைக் கைவிடுவோம் தமிழராய் இணைந்திடுவோம்” என்று முழக்கமிட்டு முயற்சி செய்தும், ‘தமிழினம், தமிழ்த்தேசியம்’ என்கிற ஒன்றை இங்கே இன்னும் உருவாக்க முடியாத நிலையே நீடிக்கிறது. கூடவே மதத்தின் அடிப்படையில் “இந்துமதத் தேசியம்” என்கிற அரசியலும் இங்கே மேலெழுந்து, மத அடிப்படையிலும் தமிழின உணர்வு உருவாகி விடாமல் பார்த்துக் கொள்கிறது. இந்தச் சாதி அரசியல், இந்துமத அரசியல் முதலிய இன உணர்விற்கு எதிரான அரசியல் அனைத்திற்கும் “பார்ப்பனர்கள்தான்” காரணம் என்றும், அவர்களை அழித்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றும் ஒற்றைவாதம் பேசும் கருத்தாடலையும் ‘ஞானி’ ஏற்கத் தயாராக இல்லை. பார்ப்பனியம் எல்லாச் சாதியினருக்குள்ளேயும் பரவி ஆழமாக ஊடுருவித் தங்கி விட்டது என்கிறார். பிறகு தீர்வுதான் என்ன? ஞானி எழுதுகிறார்:-
“சோசலிசம் இங்குச் செயல்பட்டிருக்குமானால், தொழில் வளர்ச்சி இங்கு சேர்ந்து வேலை வாய்ப்புகள் பெருகியிருக்குமானால், சாதி என்ற பிசாசின் கோரத் தாண்டவம் எழுந்திருக்க முடியாது. துரமான கல்வி அனைவருக்கும் என்ற முறையில் தரப்பட்டிருக்குமானாலும் சாதியின் ஆதிக்கம் குறைந்திருக்குமென்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லலாம்”. (மே.நூ.ப.198)
ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு (2003) எழுதிய கட்டுரைகயில் இப்படி எழுதியுள்ளார்:- இன்றைக்கு அந்த அளவிற்கு அறுதியிட்டு உறுதியாகக் கூறுவாரா என்பது எனக்கு ஐயமாகவே இருக்கிறது. ஏனென்றால் தமிழ்ச் சூழலில் ‘சாதியம்’ எந்த அளவிற்கு எளிமையாக விலகிக் கொள்ளக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை. காரணம், அவரே சொல்வது போல இது இனக்குழச் சமுதாயத்தின் தொடர்ச்சியாக வருகிறது (மே.நூ.ப.199). இனக்குழுச் சமூகம் போலவே இன்றும் இது மோதிக் கொள்கிறது. வெட்டிச் சாய்த்துக் கொள்கிறது. அச்சமூகம் போலவே இது “தனது குழுவின் பெருமையை மேல்”, “மானத்தின் மேல்” இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் “பெருமையைத் தள்ளிவிட்டு, அந்த இடத்தில் “தமிழ்ப் பெருமையைப்” பொருத்துவதென்பது தமிழ்இனத் தேசிய அரசியலின் முன்நிற்கும் மிகப்பெரிய சவாலெனப் படுகிறது. இதனாலேயே இங்கே தோன்றிய தமிழ்த் தேசிய இயக்கங்களான “நாம் தமிழர் இயக்கம்”, “தமிழரசுக் கழகம்”, “தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி” முதலியன பலவும் வளர்வதற்கு வாய்ப்பிழந்து போய்விட்டன எனக் கருதலாம்.
***
தமிழ்த் தேசியம் என்பது அடிப்படையில் “தமிழ்மொழி என்ற ஒன்றிலிருந்து உருவானது. ஆனால் சாதி, மதம் என்பவை அந்தத் தமிழ்மொழி பேசுபவர்களுக்குள் இருந்து, இந்த மனித வாழ்வை வாழ்ந்து தீர வேண்டிய நெருக்கடியில் பிறந்தவை. எனவே சாதி, மதம் பற்றிய புனைவுகள், ஒரு தேசிய இனத்திற்குள்ளே எழுப்பும் சமூகப் பிரச்சனைகளாகத்தான் கருதித் தீர்க்கப்பட வேண்டுமேயொழிய, அவற்றையே அரசியல் இயக்கமாக முன்னிறுத்தி, அரசியல் அதிகாரத்தை அவற்றின் மேல் கட்ட முயல்வது அந்தத் தேசிய இனத்தின் அழிவிற்குத்தான் இட்டுச் செல்லும். ‘நண்டு வலைக்குள் எது கிழக்கு எது மேற்கு’ என்று மோதிச் சிதைகிற நிலைதான் ஏற்படும். எனவே தேசிய இனப் பிரச்சனைகளுக்கு முதன்மை கொடுத்துப் பெருவாரி மக்களைத் திரட்டத் தென்படுகிற ஒரு வழியாக, அந்தத் தேசிய இன மக்களின் மொழி குறித்த உணர்வுதான் தென்படுகிறது. எனவே ஞானி ‘தமிழ்மொழி’ குறித்த உணர்வை மக்களிடம் வளர்த்தெடுக்க முயல வேண்டும் என்கிறார்.
இந்த முயற்சியில் கவனமாக மேற்கொள்ள வேண்டிய ஒன்று, இந்தத் தமிழ் உணர்வையும், அதன் பெருமையையும் வாயளவில் சொல்லாடி, அதையும் தங்களின் பிழைப்பு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீயசக்திகளிடமிருந்து இந்தத் தமிழ் உணர்வை மீட்கிற வேலையாகும். தமிழுக்கு எதிரான இந்தத் தீயசக்திகளை ஞானி ஆதிக்க அரசியல்வாதிகளிடம் மட்டும் அடையாளம் காணவில்லை. தமிழைத் தங்கள் பணம் தேடும் புத்திக்குப் பயன்படுத்தும் படைப்பாளிகள், பதிப்பாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பரிசு, பாராட்டுக்களைத் தேடித் தங்களைத் தாழ்த்திக் கொள்பவர்கள், கவியரங்கு, பட்டிமன்றம், கோவில் திருவிழா என்று தமிழை மலினப்படுத்துபவர்கள், பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள், தமிழாய்வு நிறுவனங்கள் என்று தமிழுக்கு எதிரான தீயசக்திகளைப் பலவற்றிலும் அடையாளம் காணுகிறார். இவர்களிடம் இருந்தெல்லாம் தமிழை மீட்கும் போதுதான் உண்மையான தமிழ் உணர்வும், தமிழ்;த் தேசிய உணர்வும் ஊற்றெடுக்க வாய்ப்புகள் ஏற்படும்.
இவ்வாறு தீயசக்திகளை அடையாளம் காணும் ஞானி, தமிழ் உணர்வை ஊட்டி வளர்க்கப் பாரதிதாசனிடம் செல்லுமாறு வழிகாட்டுகிறார். இந்த இடத்தில் அவர் எழுத்தை அப்படியே தருவது பொருத்தமாக இருக்குமெனப் படுகிறது.
‘பாரதிதாசன் அவர்களைப் பொறுத்தவரை தமிழ் என்றால் காதல் மற்றும் வீரம். தமிழ் என்றால் அன்பு, அறிவு, ஆண்மை, பெண்மை, தாய்மை. துமிழ் என்றால் அழகு, கலை, இயற்கை. தமிழ் என்றால் நாடு, நிலம், தமிழ் ஆட்சி. துமிழ் என்றால் தவம், விடுதலை. இப்படித் தமிழுக்கு நாறு பொருள் கண்டவர் பாரதிதாசன்… பாரதிதாசனுக்குள் தமிழ் உணர்வின் திரட்சியை, உச்சத்தைக் காண்கிறோம்.
பாரதிதாசன் அவர்களுக்குள் இருந்த தமிழ் உணர்வை நமக்குள்ளும் திரட்டிக் கொள்ள வேண்டும். நமக்குள்ளிலிருந்து எழுப்பிக் கொள்ள வேண்டும்’. (மே.நூ.ப.39)
இவ்வாறு தமிழ்த் தேசிய உணர்வை, தமிழர்களின் இதயத்தில் கொண்டு போய்ப் பொருத்துவதற்கு மொழி உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும் என்று ஞானி சொல்லும் போது, தமிழுக்கு எதிரக வந்த இந்திக்கு எதிரான (1965-ஆம் ஆண்டு) போராட்டக் காலத்தில் தமிழ் நிலத்தில் நிலவிய தமிழ் உணர்வையும் தமிழ்த் தேசிய உணர்வின் பெருக்கத்தையும் நினைத்துப் பார்த்தால் அவருடைய வாதத்திலுள்ள வலுவை அறியமுடியும். மேலும் ‘மனிதர் என்பவர் அவரது மொழியைத் தவிர வேறில்லை. ‘உண்மை’ என்பதே மொழியை யார் கைப்பற்றி வைத்திருக்கிறார்களோ அவர்கள் கட்டமைப்பதுதான்’ என்கிற புரிதல்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கிற நமது காலகட்டத்தில் மொழி உணர்வின் அருமை மேலும் கூடுதலாக நமக்குப் பிடிபடுகிறது.
***
மொழி உணர்வை வளர்க்கத் தனித்தமிழ் இயக்கம் வேண்டும் ஆரிய எதிர்ப்பு தேவை இல்லை. (ப.313) அதைவிட ஆங்கில மொழி எதிர்ப்பு வேண்டும் என்றெல்லாம் பேசும் ஞானி, மிகவும் இன்றியமையாத ஒரு கருத்தாக்கத்தை முன்மொழிகிறார். காரல் மார்க்ஸின் மருமகனாக அறியப்படும் லபார்க்கே என்ற பிரெஞ்சு மார்க்சிய அறிஞர் சிந்தனையில் வெளிப்பட்டுள்ள அன்றாட மார்க்சியம் என்ற ஒன்றைக் குறித்துப் பேசுகிறார்:-
“உலகளவில் வல்லரசு அதன் போக்கு முதலியவற்றை அழித்தொழிக்க வேண்டுமென்பது பேருருவ அரசியல். இது போதாது. வல்லரசியமோ முதலாளியமோ நம் அன்றாட வாழ்வியலுக்குள்ளும் ஊடுருவி நம்மை வசப்படுத்தி வைத்திருப்பதன் மூலமே அவை நமக்குள் வெற்றி பெறுகின்றன என்று சொல்லுவது அன்றாட மார்க்சியம்” (மே.நூ.ப.205)
என அக்கருத்தாக்கத்தை விளக்குகிறார் ஞானி. ஆளும் அதிகார சக்திகள், மக்களுக்கு எதிரானவைகளை, அந்த மக்களின் சம்மதத்தோடு ஆனால் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் அதை எல்லாம் செய்து கொண்டிருக்கும் படி உச்சகட்ட தந்திரத்தோடு இயங்கக் கூடிய ஒன்று. எனவே ஒவ்வொரு கணமும் நம்மை நாம் விழிப்பாக வைத்துக் கொண்டு நம்மை பேணிக் கொள்வது என்பது பெரிய சவாலாக இருக்கிறது. எனவேதான் சமூக வெளியில் பெரிய பெரிய இயக்கங்களைக் கட்டமைத்துப் போராடுகிற அதே வேளையில், நமது சிக்கலான மனவெளியிலேயும் பெரிய பெரிய வேலைகளை நிகழ்த்திக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை ஞானி, தனது எழுத்து முழுவதிலும் தொடர்ந்து வலியுறுத்துபவராக இயங்குகிறார். இப்படி எழுதுகிறார்:-
“நாம் ஒவ்வொரு நாளும் என்ன உணவு உட் கொள்கிறோம்? என்ன உடை களிக்கிறோம்? நமது நம் குழந்தைகளுக்கு எந்த மொழியைக் கற்பிக்கிறோம்? நமது பொழுதுபோக்கு என்ன? நமது திருமண முறை என்ன? எந்த வகை மருந்துகளை நாம் பயன்படுத்துகிறோம்? பெண்களோடு நமது உறவு எப்படி? நமது வீட்டின் அமைப்பு என்ன? நாம் தேர்ந்தெடுக்கும் போக்குவரத்துச் சாதனங்களின் தன்மை என்ன? நாம் எங்கெல்லாம் பயணம் செய்கிறோம்? நமக்கு மேல் உள்ளவர்களோடு அல்லது கீழ் உள்ளவர்களோடு நாம் கொள்ளும் உறவு என்ன? நாம் படிக்கும் பத்திரிகை எது? நாம் கற்ற கல்வி எது? நாம் பயன்படுத்தும் கருவிகள் எத்தகையவை?” (மே.நூ.ப.205)
இவ்வாறு ஒவ்வொரு நாளும் நூறு கேள்விகளோடு கவனமாக இயங்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்கான பதிலில் தெரிந்து விடும். உண்ணும் உணவு, இருக்கும் இடம், உடுத்தும் உடை, கற்கும் கல்வி, பேசும் மொழி, நோய்க்கான மருந்து, வாசிப்பதற்கான பத்திரிக்கை, வாழ்வதற்கான மனித உறவு முதலிய அனைத்திலும் நாம் நம்மை அறியாமலேயே எப்படி ஆதிக்க வர்க்கத்தினரின் மற்றும் ஆதிக்க தேசிய இனவாதிகளின் பிடிக்குள் சிக்கிக் கிடக்கிறோம் என்கிற தெளிவு. இந்தத் தெளிவு இல்லாததனால்தான் இந்தியாவில் 90% மக்கள் முட்டாளாக இருக்கிறார்கள் என்கிறார் நீதிபதி என்றால், எனவே ஞானி சொல்லுகிறார் இப்பொழுது நமக்குத் தேவை அன்றாடத் தமிழ்த் தேசியம்.
***
தமிழ்த் தேசியம் குறித்த பிரச்சனை இன்றைய சந்தைப் பொருளாதாரம், உலகமயமாதல் சூழலில் புதிய பல பரிமாணங்களைப் பெற்றுள்ளது. பெரும்பெரும் பன்னாட்டு வணிகக் குழுக்களின் கொள்ளைக் காடாகத் தமிழ் நிலமும், மனித வளமும், கனிம வளங்களும் மாறியுள்ளன. இந்தச் சூழலில் உலக அரசியலையும் நடக்கிற நிகழ்வுகளையும் வலிகளோடு உற்று நோக்கும் போது “தேசியம்” மட்டுமே இக்காலகட்டத்து மூன்றாம் உலக மனிதர்களுக்கான அரசியல் உண்மையாக விளங்க முடியும். இந்த ‘உண்மையை’ உணர்ந்து ஒன்று திரளாத எந்தவொரு தேசிய இனமும் எதிர்காலத்தில் அடையாளமே இல்லாமல் போவதற்கான சாத்தியப்பாடுகள் பன்மடங்கு கூடியுள்ளன. இதை ஞானி இவ்வாறு வலியுறுத்துகிறார்:-
‘அண்மைக் காலத்தில் நேர்ந்த சில நெருக்கடிகள் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக ஹவரலாற்றிலிருந்து வெளியேற்றக் கூடியனவாகத் தெரிகின்றன. சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் தமிழ் மக்களின் நிலம், காடுகள், கடல் வளம் முதலியவை அன்னியர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. ஆறுகளும் பிற நீர் நிலைகளும் நச்சுப்படுத்தப்படுகின்றன… முதலாளிகள் அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் மத்திதர வர்க்கத்தினர் அனைவரும் நுகர்வெறிக்கு ஆளாகியுள்ளனர். அன்னியப் பொருட்களின் மீது மோகம் அதிகரிக்கிறது. (குறிப்பாக ஆங்கில மொழி மீது என்பதையும் சேர்க்க வேண்டும் - பஞ்சு) தமிழ் மொழிக்கு மதிப்பில்லை. தமிழ் உணர்வு மதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் இயற்கை அழிந்த பிறகு தமிழர்களுக்கு வாழ்வில்லை என்ற உண்மை இங்கு உரைக்கவில்லை’ (மே.நூ.பக்.50-51)
இவ்வாறு தமிழ்த் தேசியத்தைச் சூழலியல் உணர்வோடும் ஞானி அணுகியிருப்பது நமது காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு மொழி அழியும் போது ஒரு தேசிய இனம் அழிகிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்குத் தொல்காப்பியரால் முதற் கருப்பொருள் எனப்படும் நிலமும் பொழுதும் உணவும் விலங்குகளும் மரங்களும் பூக்களும் பறவைகளும் நீர்நிலைகளும் தொழில்களும் கலைகளும் தெய்வங்களும் அழிக்கப்படும்போதும் அந்த இனம் அழிவை நோக்கித்தான் போகிறது என்றுதான் பொருள். ஞானி மிகச் சரியாக முன் வைக்கிறார்.
***
இவ்வாறு நவீன முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை இன்று தேசிய இன எழுச்சியின் மூலமே எதிர்கொள்ள முடியும் (மே.நூ.ப.165) என்கிற ஞானி, அந்தத் தேசிய எழுச்சிக்கு வேண்டிய மெய்யியல் என்ன என்பதை நோக்கியும் சிந்தித்துள்ளார். அடிப்படையில் மார்க்சியவாதி என்பதனால் எந்தவொரு இயக்கமும் தனக்கானத் தத்துவப் பின்னணியின் மேல் இயங்க வேண்டும், அப்படித் தத்துவத்தை முதன்மைப் படுத்தாத இயக்கம் இறுதியில் அதுவுமொரு ஆதிக்க அரசியலுக்கு இடம் கொடுத்துவிட்ட ஒன்றாகத்தான் போய் முடியும் என்கிறார் (மே.நூ.ப.167). சரி! தமிழ்த் தேசிய இன எழுச்சிக்கான மெய்யியல் புலம் என்னவாக இருக்க முடியும்? சித்தர் மெய்யியல் அசலான தமிழ் மெய்யியல். இது கணியன் பூங்குன்றனார் தொடங்கி இன்று ஜெயகாந்தன் வரை தமிழ் வரலாறு நெடுகிலும் வேரோடி உள்ளது. எனவே சித்தர் மெய்யியல்தான் தமிழ்த் தேசிய இயக்கத்தின் மெய்யியலாகn இருக்க முடியும் என்கிறார். கூடவே இன்றைய சூழலில் பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்காரியம் ஆகியவை இயைந்து ஒரு முனையில் குவிந்து தமிழ்த் தேசிய இயக்கத்திற்கான தத்துவப் பின்புலமாக இயங்க முடியும் எனக் கருதுகிறார். இப்படிக் கருதுவதற்கான அடிப்படை என்ன என்று பார்த்தால், இத்தகைய தத்துவப் பின்புலத்தில் தமிழ்த் தேசியம் - தமிழ்நாடு – அமைந்தால்தான் இங்கே உழைக்கும் பெருவாரி மக்களுக்கான தேசியம் மலருமென நம்புகிறார். எனவேதான் இப்படி எழுதுகிறார்:-
“வாழ்க்கையில் என்னதான் இந்த மக்கள் தாழ்ந்திருந்தாலும் இவர்கள்தான் அசலான தமிழர்கள். உழவர்களாகவும் கைவினைஞர்களாகவும் கலைஞர்களாகவும் உழைக்கும் இவர்களைக் கொண்டுதான் தமிழ் வரலாறு, தமிழ் அரசியல் முதலியன இயங்குகின்றன. இவர்களுக்குத்தான் முதல் உரிமை உடையது இந்தத் தமிழ்த் தேசம்” (மே.நூ.ப.211)
இவ்வாறு தமிழ்த் தேசிய இன உணர்வைக் கட்டமைக்கும் போதே அதற்கான மெய்யியலையும் பழந்தமிழ் வாழ்விலிருந்தே மீட்டுருவாக்கம் செய்து கொள்ள வேண்டும் என்ற முக்கியமான ஒரு கருத்தை முன் வைக்கிறார்.
***
தமிழ்த் தேசியம் பேசும் போது இதற்கே உரிய தனிச் சிறப்பான ஒரு சிக்கல் இருக்கிறது. “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா எழுப்பிய சிக்கல்தான் அது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1956-இல் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது, தென்னிந்தியாவைப் பொருத்தவரை மலையாளிகளுக்குக் கன்னடர்களுக்குத் தெலுங்கர்களுக்கு முறையே திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதரபாத் ஆகிய தலைநகரங்களோடு கூடிய தனித்தனி மாநிலம் கிடைத்தது. ஆனால் தமிழர்களுக்குக் கிடைத்ததா? இல்லை என்பதுதான் யதார்த்தம்.
இன்றுவரை சென்னை மாகாணம் என்று அன்று பிரிக்கப்படாத நாளில் அழைக்கப்பட்டது போலவே, எல்லோருக்குமான மாகாணமாகவே ‘தமிழ்நாடு’ இருக்கிறது. எல்லோருக்கும் என்று நால்வரையும் சேர்த்துக் கூடச் சொல்லமுடியாதபடி, தமிழர்களை விடுத்த மற்ற மூன்று மாநிலத்தவர்களுக்கான கூடுதலொரு மாநிலமாகவே தமிழ்நாடு இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பேச வேண்டிய நெருக்கடி இன்னும் அடர்த்தியாகத் தேவைப்படுகிறது. இதற்குப் பெரிய புள்ளி விவரங்கள் தேவையில்லை. விடுதலைக்குப் பிறகு தமிழ் மாநிலத்தை ஆண்டவர்கள் யார் யார்? மற்ற மாநிலத்தில் இப்படி நடந்துள்ளதா? ஏன் நடக்கவில்லை? என்பதற்கான பதில்களே போதும். மேலும் தந்தை பெரியார் தமிழ்நாட்டில் நீதிபதி உட்பட உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் வகித்த எண்ணிக்கையைக் கணக்கிட்டது போல, பிறமொழியாளர்கள் வகித்த எண்ணிக்கையைக் கணக்கிட்டால் தெரியும், தமிழ்நாடு, தமிழ்மக்கள் கைக்குள் இல்லை என்கிற உண்மை. ம.பொ.சி.யின் ‘தமிழகத்தில் பிறமொழியினர்’ என்ற நூல் சிறந்ததொரு சான்று.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வை எப்படி முன்னெடுப்பது? குணா, பெ.மணியரசன் போன்றவர்கள் இப்பிறமொழியாளர்கள்தான் தமிழ்த் தேசிய உணர்விற்குப் பெருந்தடையாக இருக்கிறார்கள். எனவே இவர்களைத் தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். அல்லது முதலில் இவர்களின் ஆதிக்கப்பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். அதற்குப் பிறகே தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க முடியும் என்றொரு முக்கியமான அதே நேரத்தில் மிகவும் சிக்கலான கருத்தாடலை முன்வைக்கிறார்கள். ஞானி இந்த இடத்தில் குணா கூறுகிற வரலாற்று உண்மைகளை ஏற்றுக் கொள்ளுகிறார். ஆவைகளை மறுக்க இயலாது என்கிறார். அதேநேரத்தில் அந்தப் பிறமொழியாளர்களைத் தமிழர்களாகவே நாம் ஏற்க வேண்டும். காரணம், அவர்கள் பல்லாண்டு இந்த நிலத்தோடும் மொழியோடும் கலை இலக்கியங்களோடும் மனிதர்களோடும் ஒட்டி உறவாடி வாழ்ந்து விட்டார்கள்.
மற்றொன்றையும் குறிப்பாகச் சுட்டி எச்சரிக்கிறார் ஞானி. அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக அவர்களைத் தெலுங்கர்களாக, கன்னடர்களாக உணர வைக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. அவர்களும் அதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி எதிர்கொள்வது? ஞானி இதை மிகவும் எளிமைப்படுத்தி, பல்லாண்டு இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் தெலுங்கர்களும் கன்னடர்களும் “நாங்கள் தமிழர்கள்”, எங்களை மீண்டும் கன்னடர் ஆக்க வேண்டாம், தெலுங்கர் ஆகக் வேண்டாம்” என்று குரல் கொடுக்க வேண்டுமாம். தமிழகத்தில் மேலும் ஒரு தெலுங்கு தேசத்தை உருவாக்க முயற்சி வேண்டாம் என்று இவர்கள் சொல்ல வேண்டுமாம் (ப.148). ஞானி சில இடங்களில் இப்படி குழந்தை போல ஒரு கற்பனாவாதியாக நிலத்தில் காலூன்றாமல் பறப்பதைப் பார்க்க நேர்வது நமக்குப் புதிதல்ல. ஆனால் பிரச்சனை இருக்கிறது. தமிழ்த் தேசிய உணர்வைக் கட்டமைக்க இதை மேலெடுத்துப் பேச வேண்டியது இருக்கிறது. வேறு வழியில்லை. விளைவு என்னவாக இருந்தாலும் என்றே நான் கருதுகிறேன்.
‘பிறமொழியாளர் ஆதிக்கம்’ என்ற அரசியலை முன்னெடுக்காமல் தமிழ்த் தேசிய உணர்வை ஒரு சிறிதும் மேலெடுத்துச் செல்ல முடியாது என்றே நான் கருதுகிறேன். தமிழ்த் தேசிய உணர்வை முளைக்க விடாமல் சீரழிக்கும் மிகப்பெரிய ஆதிக்க அரசியல் சக்திகளாக நான் அவர்களைக் கருதுகிறேன். வங்காளிகளின் பேரின ஆதிக்கத்திற்கு முன்னால் கிழக்கு இந்திய மாகாணங்களில் அஸ்ஸாம் போன்ற மாநில மக்களின் வாழ்வும் பண்பாடும் எப்படி ஆதிக்கத்திற்கு உள்ளாகியிருந்ததோ அதே மாதிரிதான் தமிழ் மாநிலமும் பிறமொழியாளர்களின் ஆதிக்கப்பூமியாகத்தான் உள்ளது. அஸ்ஸாம் மாநிலப் பொதுமக்கள், மாணவர்கள் முதலியோர் வங்காளிகளின் ஆதிக்கத்தை உணர்ந்து கொண்டிருக்கிற அளவிற்கு இங்கே தமிழர்கள் பிறமொழியாளர்களின் ஆதிக்கத்தை உணர்ந்திருக்கிறார்களா? என்பது சந்தேகமே! தமிழ்ச் சினிமாவின் வரலாற்றைப் புரட்டினாலே போதும், இவர்கள் எத்தகைய அடர்த்தியான கும்மிருட்டில் கண் புதைத்துக் கிடக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள. ஞானி இந்தப் பிரச்சனையில் இன்னும் ஆழமாக, விரிவாகப் பயணித்திருக்க வேண்டும் எனச் சொல்லத் தோன்றுகிறது.
***
இவ்வாறு தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவை குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும், பல்வேறு கோணத்தில் உரையாடும் ஞானி, தமிழ்த் தேசியத்தின் அரசியல் முழக்கம், எப்படி இருக்க வேண்டும் என்ற சிக்கலையும் பலவாறு பல இடங்களில் பேசுகிறார். தனிநாடா? சுயநிர்ணய உரிமையோடு கூடிய கூட்டாட்சியா? நாம் எதை முன்னிறுத்துவது? சுய நிர்ணய உரிமை என்ற சொல்லுக்குப் பதிலியாக ‘தன்னுரிமை’ என்ற சொல்லைக் கையாள விரும்பும் ஞானி, அதை இப்படி விளக்குகிறார்:-
“மக்கள் தம் ஆக்கத்திற்கான அரசியல், பொருளியல், வேளாண்மை, கல்வி, மருத்துவம் முதலியவற்றைத் தாமே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்… மக்கள் என்று குறிப்பிடும் போது உழைக்கும் மக்களைத்தான் முதன்மையாக நாம் பொருள் படுத்துகிறோம்”.
என்று சுயநிர்ணய உரிமையை விளக்கி விட்டு, இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் அனைவரும் ஒரே குரலில், எப்பொழுதும் விரும்பினால் எந்தவொரு இந்தியத் தேசிய இனமும் பிரிந்து செல்ல உரிமையோடு கூடிய கூட்டாட்சியை நோக்கி ஒலிக்க வேண்டும். அதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளுமாறு முயற்சி எடுக்க வேண்டும். இப்போதைக்கு இதுதான் சாத்தியமென்று ஒரு போராட்ட உத்திமுறையை முன்வைக்கிறார்:-
“ஒரே அடியாக விடுதலை இன்றைக்குச் சாத்தியமில்லை. சுயநிர்ணய உரிமை என்ற முறையில் எல்லாத் தேசிய இனங்களினுள்ளும் மக்களைப் பெருமளவு திரட்டுவதுதான் இன்றைய முதற் கடமையாக இருக்க முடியும்” (மே.நூ.ப.169)
இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிற சூழல் உருவாகியுள்ள நிலையில் அதை நாம் பயன்படுத்திச் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, ‘கூட்டாட்சி முறைக்கு’ இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறார். ஆயுதப் போராட்டங்களுக்குக்கான வாய்ப்பு இல்லாத நிலையில் (ப.169) தமிழ் மக்களைத் திரட்ட இதுதான் சிறந்த வழிமுறை என்கிறார். இப்படி ஒரு பத்தாண்டுக்கேனும் செயல்பட்டால் ஒழிய விடுதலை பற்றிப் பேசுவது பொருள் இல்லை’ (மே.நூ.ப.169) என்கிறார். மக்களைத் திரட்ட கிராமப்புறங்களுக்குச் செல்லுங்கள் என்கிறார். நகரங்கள் நம்மைப் பாழ்படுத்துபவை. ‘தமிழ்த் தேசியம்’ என்று சொல்லி, ஒன்று கூடுவதற்குப் பதிலாக, அதே பெயரில் பல திசைகளுக்குள் சென்று முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு மோதிக் கொள்வதில் அர்த்தமில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார். (ப.170)
***
ஈழப் போராட்டத்தின் எழுச்சி, இந்தியாவிலும் தமிழ்த் தேசியம் குறித்த குரல் மீண்டும் உரத்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு ஈழத் தமிழர்களுக்குத் தமிழ் மக்கள் நன்றி சொல்ல வேண்டும் (ப.176) என்று ஈழப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது எழுதிய ஞானி இந்தியர் உட்படப் பன்னாட்டு அரசியல் தலைவர்களின் சூழ்ச்சியால் அது மிகக் கொடூரமான முறையில் வீழ்த்தப்பட்ட சூழலில் மிகவும் நம்பிக்கை இழந்த குரலில் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுகிறார் இப்படி:-
தமிழ்த் தேசியம் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாம் பேசி வந்த போதிலும் இக்கொள்கை பற்றிய உறுதியான தெளிவு நம்மிடையே இல்லை.
காஷ்மீர் பற்றி, வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்கள் பற்றி நமக்கு அக்கறையில்லை.
காவிரி, முல்லைப் பெரியாறு இல்லாமல் நமக்கு முடியாது என்பதில் நமக்கு உறுதியில்லை.
மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது நாம் இழந்த பகுதிகளை மீட்கும் திட்டம் நமக்கு இல்லை.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது வளங்களைத் தாரை வார்க்கும் மைய, மாநில அரசியல்வாதிகள் மீது நமக்கு ஆத்திரம் ஏற்படவில்லை.
இந்திக்கு எதிராக ஆங்கிலத்தை நிறுத்தித் தமிழை முழுமையாக நாமே கைகழுவ வேண்டிய நிலைக்கு நம்மை ஆளாக்கிய முதலாளிய கொள்ளையருக்கு எதிராக நாம் போர்க்குரல் எழுப்பவில்லை.
தமிழ்த் தேசியம் பற்றிப் பேசும் தமிழ் உணர்வாளர்களும், தங்களுக்கு வந்து வாய்த்த வாழ்க்கை வசதிகளை இழக்கத் தயாராக இல்லை. அச்சம் காரணமாகத் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியம் என்பதன் பல்வேறு பரிமாணங்களை ஒன்றிணைத்துப் பார்க்கின்ற கோட்பாட்டுத் தெளிவு இல்லை.
இன்றைய உலக அரசியல் பற்றிய பார்வை இல்லை. அதாவது உலக அரசியலில் நிகழ்ந்துள்ள புதிய புதிய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்வு இல்லை.
மார்க்சியம் பற்றிய புரிதல் தமிழ்த் தேசியவாதிகளிடம் இல்லை.
தேசிய இன விடுதலை என்று எங்குக் குரல் எழுந்தாலும் அதைப் ‘பயங்கரவாதம்’ என்று தலைப்பிட்டு ஒடுக்குவதில் உலகளவிலான பொருளியல் ஆதிக்கங்கள் ஒன்றுபடுகின்றன. இத்தகைய ஆதிக்கங்களின் கைப்பாவையாகி விட்டது ஐ.நா.வும்.
தமிழ்த் தேசியத்திற்குக் குழி தோண்டும் கட்சிகளும் முதலாளிகளும் அந்நியர்களும் தமிழகத்திற்குள்ளேயே இந்திய அரசின் பாதுகாப்போடு பத்திரமாக உள்ளன.
ஈழத் தமிழகம் இனியும் மீண்டும் விழித்து எழ வாய்ப்புக்கள் நேரலாம். ஆனால் இந்தியத் தமிழர்களுக்கு இத்தகைய வாய்ப்புகளுக்கு வழி இல்லை. (ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், பக்.60-62)
இப்படிப் பேசுகிறார் ஞானி. “வரலாறு நம் விடுதலைக்கான வாய்ப்பை வழங்குமா?” – என்று விதியின் மேல் பாரத்தைப் போடுவது போல வரலாற்றின் மேல் பாரத்தைப் போட்டு அமைதி அடைகிறார். ஆனாலும் நம் குறைகளை சுட்டிக் காட்டுகிற பாணியில் நாம் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க இனி என்னென்ன செய்ய வேண்டும் என்றும் சொல்ல முயலுகிறார். அதன் மூலம் மிகத் தூரத்தில் தெரியும் மிகச் சின்ன ஒரு நம்பிக்கை ஒளியோடுதான் அவரது ‘தமிழ்த்தேசியம்’ குறித்த பார்வை இருப்பதாக எனக்குப் படுகிறது. காரணம் ஞானி, அடிப்படையில் ஒரு மார்க்சியவாதி.
- பேராசிரியர் க.பஞ்சாங்கம்
அடிக்குறிப்பு:
1.கூட்டாட்சி என்பதை ஞானி இப்படி விளக்குகிறார்:-
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சி என்ற கோட்பாடு இடம்பெறவில்லை. அரசியல் அமைப்புச் சட்டமன்றத்தில் தொடக்கத்தில் கூட்டாட்சி பற்றிச் சில நம்பிக்கைகள் எழுந்த போதிலும் இறுதி வடிவில் கூட்டாட்சி என்பது ஒதுக்கப்பட்டது. கூட்டாட்சி என்ற அமைப்பில் மாநிலங்கள் என்பவை தனிக் கொடியோடும், தனி அரசியல் அமைப்புச் சட்டத்தோடும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். மொழி என்ற அடிப்படையில் அமைந்த தேசிய இனங்கள் கூட்டாட்சியின் உறுப்புக்களாக இடம் பெற்றிருக்கும். இறையாண்மை உடைய தேசிய இனங்கள் தம் இறையாண்மையின் ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பதன் மூலமே மைய அரசு உருவாகும். அனைத்துத் தேசிய இனங்களின் மொழிகளும், மைய அரசின் அலுவல் மொழிகளாக அமைந்திருக்கும். ஆளுநர் என்பவர் மைய அரசின் முகவராக இருக்க முடியாது. வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய அரசுப் பணியாளர்களாகத் தமிழகத்திற்கு வர வேண்டியதில்லை. தமிழகத்தின் எல்லைகளுக்குள் செயல்படுகிற மைய அரசின் அலுவலகங்கள் தமிழில்தான் நடைபெறும். மாநிலங்களும் மைய அரசம் முற்றான சமத்துவம் உடைய அரசுகளாகத்தான் அமைந்திருக்கும். எந்த மாநிலமும் தேவைப்படும் பொழுது மைய அரசிலிருந்து ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் பிரிந்து செல்ல முடியும்” (மே.நூ.பக்.171-172)
பயன்பட்ட நூல்கள்
1. ஞானி, தமிழியம், தமிழ்த் தேசியம் - ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் - 1, (2007) காவ்யா, சென்னை – 24.
2. ஞானி, ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், (2012), புதுபுனல், சென்னை – 5.
2. ஞானி, ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், (2012), புதுபுனல், சென்னை – 5.
கட்டுரை
1. பஞ்சாங்கம்.க, ஐம்பது ஆண்டுகாலச் சுதந்திர இந்தியாவும் தேசிய இனப் பிரச்சனைகளும், க.பஞ்சாங்கம் கட்டுரைகள் - நவீன இலக்கியக் கோட்பாடுகள், (2008), காவ்யா, சென்னை – 24.
======================================================================
விடுதலைப் புலிகளின் சாதி:அ.மார்கஸ், ரவிக்குமார்,ஷோபாசக்தி | ||||
| ||||
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1793 யாழ்ப்பாணத்தில் சாதிய அமைப்பு பற்றி ஈழ மார்க்சியரான கா.சிவத்தம்பி முதல் தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த (Casteless or Caste-blind?: Dynamics of Concealed Caste Discrimination, Social Exclusion and Protest in Sri Lanka : 2009)1 ஆய்வுகள் வரை நிறைய கல்வித்துறை சார் நெறியுடன் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. மேற்கத்தியர்களும் காலனியக் காலம் முதல் விடுதலைப் புலிகளின் காலம் வரை வடகிழக்கில் சாதி குறித்த ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். தமிழ்ச் சூழலில் விடுதலைப் புலிகளின் சாதி பற்றிய அரசியல் கேள்விகளை முதன் முதலில் எழுப்பியவர் (அன்றைய நிறப்பிரிகை வட்டம் சார்ந்த தலித்தியக் கோட்பாட்டாளரும், இன்றைய விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினருமான) பா.ரவிக்குமார்தான் (Himal South Aasia : Auguest 2002)2. விடுதலைப் புலிகள் சாதி காப்பவர்கள், சாதி வெறியர்கள், இந்துத்துவவாதிகள் என அ.மார்க்ஸ், ஷோபாசக்தி, அப்புறமாக ஆதவன் தீட்சண்யா வரை எழுப்பும் கூக்குரல்களின் துவக்கம் ரவிக்குமாரின் கட்டுரைதான் என்று தயங்காமல் சொல்லலாம். புகலிட புலி எதிர்ப்பாளர்களின் தலித்தியக் கோட்பாட்டு வரையறை கூட ரவிக்குமாரை மேற்கோள் காட்டியே கட்டமைக்கப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் இன்றைய சட்டமன்ற உறுப்பினரான, விடுதலைப் புலிகள் ஆதரவு அரசியல் கொண்ட ரவிக்குமாரது அபிப்பிராயங்களும் காலமாற்றத்தில் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது என நாம் கொள்ள வேண்டிய அவசியமும் இன்று இல்லை. 2009 ஆம் ஆண்டு, தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த நூலில் விடுதலைப் புலிகளின் சாதியம் குறித்து விவாதிக்கிற (pages in between 50 to 78)3 ஒரு அத்தியாயம் இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அதிகாரத்தின் கீழ் சாதியப் பிரச்சினை அல்லது யுத்த காலத்தின் இடையில் யாழ்ப்பாணத்தில் சாதியப் பிரச்சினை பற்றி புள்ளியியல் அடிப்படையில் (statistically) ஆய்வு செய்வதில் ஆய்வாளர்கள் இரண்டு விதமான இடர்களை எதிர்கொள்கிறார்கள். முதல் இடர் ஏராளமான இடப்பெயர்வுகள் நடந்து கொண்டிருக்கும் போர்ச் சூழலில் அந்த மக்களுக்கிடையில் ஆய்வுகளின் சாத்தியமின்மை. இரண்டாவது இடர் விடுதலைப் புலிகள் 1980 ஆம் ஆண்டு துவக்கம் தமது கட்டப்பாட்டுப் பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை (banned caste descrimination and criminalised it)தடைசெய்திருந்த காரணத்தினால் சாதி தொடர்பான எந்த விவாதங்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. எண்பதுகளிலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரையிலும் சாதி-நிலம்-பெண்ணொடுக்குமுறை தொடர்பாக உள்ளுர் மத்தியஸ்த குழுக்களின் உதவியுடன் வழக்குகளைக் கவனித்து வந்த விடுதலைப் புலிகள், 1994 ஆம் ஆண்டு தமிழீழ தண்டனை வழிகாட்டு நெறிகளையும், குடிமைச் சமூக நெறிகளையும் உருவாக்குகிறார்கள். சட்டரீதியாக விடுதலைப் புலிகள் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை குற்றச்சட்டத்தின் கீழ் கொண்டு வருகிறார்கள் (The Tamil Eelam Penal Code and the Tamil Eelam civil code 1994 : Tamil Net : 30 October 2003)4. விடுதலைப் புலிகளின் சாதி குறித்த பார்வைகளை ஆய்வு செய்வதற்கு முன்பாக புலிகளின் அமைப்பின் சாதிப் பண்பு (caste character like class character) என்ன என்ற கேள்வி எழுகிறது. புரட்சித் தலைமையின் வர்க்கப் பண்பு என்ன என்று ஆய்வு செய்வதைப் போன்ற கேள்வி இது. இதற்கும் முன்பாக, விடுதலைப் புலிகள் ஆளுகையின் கீழ் வடகிழக்குப் பிரதேசங்கள் அல்லது குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசம் வருவதற்கு முன்னால், அங்கு சாதியக் கட்டமைப்பு எவ்வாறு இருந்தது எனும் கேள்வியும் எழுகிறது. தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த நூலில் இது குறித்த வரலாற்றுரீதியான தரவுகள் தெளிவாகப் பதியப்படுகின்றன. இந்திய பார்ப்பனர்களைப் போல் அல்லாமல், யாழ்ப்பாண சாதியக் கட்டமைப்பில் நிலத்தைத் தம் வசம் வைத்திருந்த வெள்ளாளர்களே ஆதிக்க சாதியினராக இருந்தனர் இந்தியாவிலிருந்து கோயில் ஆகம காரியங்களுக்காக வெள்ளாளர்களால் அழைத்துவரப்பட்ட பார்ப்பனர்கள் வெள்ளாளர்களுக்குக் கீழாகவே சாதியப் படிநிலையில் இருந்தனர். வெள்ளாளர்களுக்குக் கீழான சாதியினை அவர்கள் குடிமக்கள் சாதியினராகவும் அடிமைகள் சாதியினராகவும் பிரித்திருந்தனர். குடிமக்கள் சாதியினர் வெள்ளாளர் வீடுகளில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். அடிமைச்சாதியினர் தீண்டத்தகாதவர்களாக இருந்தனர். பறையர், பள்ளர், நளவர் என இவர்களே அடிமைச்சாதியினர் எனத் திட்டவட்டமாக அறியப்பட்டனர். இவர்களுடன் அம்பட்டர், வண்ணார் ஆகியோர் சேர்ந்து பஞ்சமர், ஐந்து சாதியினர் என்பதைக் குறிக்கும் பொதுப்பெயரில் அறியப்பட்டனர். ஆய்வாளர்களும் இலங்கையில் தலித் எனும் பதம் அங்கீகரிக்கப்பட்டதாக இல்லாததால் பஞ்சமர் எனும் சொல்லிலேயே தலித் அடையாளத்தைக் குறிப்பிடுகிறார்கள். பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதை மறுப்பது, பள்ளிக் கூடங்களில் படிப்பிக்க மறுப்பது, இரட்டைக் குவளை முறை போன்ற இந்திய பார்ப்பானிய சமூகத் தீண்டாமையின் வடிவங்கள் யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலைபெற்றிருந்தன. 1920 வரையிலும், பஞ்சமர் என யாழ்ப்பாணத்தில் வழங்கப்படுகிற தலித் மக்கள் இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடாமலேயே இருந்து வந்த நிலை இருந்தது. 1920 துவக்கம் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. என்.எஸ்.கந்தையா, பிற்பாடாக சண்முகதாசன் போன்ற கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் கோயில் நுழைவுப் போராட்டம், பஞ்சமர்களுக்கெனப் பள்ளிக் கூடங்கள் அமைத்தல், இரட்டைக் குவளைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு, வெள்ளாள ஆதிக்கத்திற்கு எதிராகத் திரட்டப்பட்ட எதிர்ப்பை (organised resistence) தலித் சமூகத்தினர் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் முன்னெடுத்து வந்திருக்கின்றனர். எழுபதுகளில் ஆயுதமேந்திய விடுதலை இயங்கங்களின் தோற்றம் என்பது அதுவரையிலான யாழ்ப்பாண அரசியல் தலைமையை வெள்ளாளர்களிடமிருந்து ஆயுதமேந்திய குழுக்களிடம் கொண்டு வந்தது. விடுதலைப் புலிகள் பிற இயக்கங்களை அழித்த பின்னால், வெள்ளாள அரசியல் தலைமை என்பது, விடுதலைப் புலிகளின் ஆரம்பக்காலத் தலைமையில் அதிகமும் இடம்பெற்ற இடைநிலைச் சாதியினரான கரையார்களிடம் வந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கரையார் சாதியைச் சேர்ந்தவர். கரையார்களிலும் இந்துக்களும் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் இருந்தனர். விடுதலைப் புலிகளிடம் யாழ்ப்பாணத்தின் அரசியல் தலைமை வந்ததன் வழி வெள்ளாளர்களின் அரசியல் ஆதிக்கம் என்பது தகர்ந்தது. விடுதலைப் புலிகள் தலைமையேற்றதிலிருந்து சாதியப் போராட்டம் தொடர்பான இரண்டு பண்புகள் வெளிப்படலாயின. முதலாவதாக விடுதலைப் புலிகள் சாதிய ஒதுக்குதலை தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் தடை செய்தனர். இந்தத் தடையில் உள்ளார்ந்திருந்த பிறிதொரு அம்சம், சாதிப் பிரச்சினை என்பது தமிழீழ தேசிய ஒற்றுமையை முதன்மையாகக் கொண்டு இரண்டாம் பட்சமானது என அவர்கள் கருதி, சகல சாதியினரதும் மதத்தினரதும் ஒற்றுமையை வலியுறுத்தியதால், சாதியம் தொடர்பான எந்தவிதமான உரையாடல்களையும் விடுதலைப்புலிகள் மௌனிக்கச் செய்தார்கள். அவ்வகையில் கம்யூனிஸ்ட்டுகளால் திரட்சியாக வெளிப்பட்டிருந்த சாதிய எதிர்ப்பு இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் பின்தள்ளப்பட்டன. தொடர்ந்து விடுதலைப் புலிகள் உருவாக்கிய சாதிய ஒதுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்கள் சாதிச்சார்பற்ற மதச்சார்பற்ற (secular) தன்மையினையே கொண்டிருந்தன. வரதட்சணை தடைசெய்யப்பட்டது. கருக்கலைப்பு பெண்ணின் உரிமை ஆகியது. பெண்ணுக்கு சொத்துரிமை நிலைநாட்டப்பட்டது. சாதி ஒதுக்குதல் குற்றமாக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் கீழிருந்த சட்டமுறைகளையும் சமூக மதிப்பீடுகளையும் ஒரு வகையில் ஸதாம் ஹுசைனின் கீழிருந்த ஈராக்குடன் நாம் பல வகைகளில் ஒப்பிட முடியும். ஸதாம் ஹுசைனின் சமூகம் ஒரு மதச்சார்பற்ற சமூகமாகவே இருந்தது. ஈரான், சவுதி அரேபியா போன்ற பிற அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈராக்கியப் பெண்கள், கல்வி, சிவில் சமூகப் பங்கேற்பு போன்றவற்றில் விடுதலை பெற்றவர்களாகவே திகழ்ந்தனர். சியா-சன்னி என்ற இரு இஸ்லாமியப் பிரிவுகளின் மதச் சடங்குகள் பொதுவெளிகளில் நடத்தத் தடைசெய்யப்பட்டிருந்தது. ஸதாம் ஹுசைனின் சன்னி இனக்குழு அதிகாரத் தன்மையிலும், விடுதலைப் புலிகளின் இயல்பாக அமைந்த கரையார் இனக்குழு அதிகாரத்தன்மையிலும் நாம் ஒப்புமைகளைக் காணமுடியும். மேம்போக்காக சிவில் சமூகத்தில் ஜனநாயக மரபுகளை இவர்களது சட்டங்கள் பிரதிபலிப்பதாகத் தோன்றினாலும், இரண்டு விதங்களில் மிகக் கடுமையான ஒடுக்குமுறைச் சமூகங்களாகவே இவை இரண்டும் இயல்பில் இருந்தன. எடுத்துக்காட்டாக நீதித்துறையின் மீதோ, சட்டநிறுவனச் செயல்பாட்டின் மீதோ ஸதாம் ஹுசைனின் பாத் கட்சியினருக்கும், பிரபாகரனின் விடுதலைப் புலிகளுக்கும் இருக்கும் ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் ஒரு வரையறுக்குள் கொண்டுவருவதற்கான கடிவாளம் என்ன? அதைப் போலவே தாம் பிற சமூகக் குழுவொன்றினால் ஒடுக்கப்படுகிறோம் எனக்கொண்டு, பிறிதொரு சமூகக் குழு ஒன்றுதிரண்டு போராடுவதற்கான வாய்ப்பு இந்தச் சட்டவரம்புக்குள் இருக்கிறதா? இரண்டு கேள்விகளுக்கும் இல்லை என்பதுதான் பதில். ஸதாம் ஹுசைன் ஈராக்கிய ஒற்றுமையின் பெயரிலும், விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய ஒற்றுமையின் பெயரிலும் எந்தவிதமான எதிர்ப்பையும் ஒடுக்கி, தமது அமைப்பின் கட்டுப்பாட்டையே நிலை நிறுத்த முனைவர். ஸதாமின் ஈராக்கில் அதுதான் நிகழ்ந்தது. விடுதலைப் புலிகளின் இடைக்கால அரசின் நிலைமையை ஈராக்கைப் போல நாம் இப்படிக் கறுப்பு வெள்ளையாக மதிப்பிட முடியாது. அடுத்ததான கேள்வி : விடுதலைப் புலிகள் அமைப்பின் சாதியத் தன்மை(caste character) குறித்த கேள்வி. விடுதலைப் புலிகள் அமைப்பு என்கிற போது, தலைமை மற்றும் கீழ்மட்ட அணிகள் இரண்டும் இணைந்ததாகவே அமைகிறது. உள்நாட்டுப்போரின் காரணத்தினால், பொருளாதாரரீதியில் வளம் கொண்டவர்கள் பெரும்பாலுமானோர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்கிறார்கள். இயல்பாகவே அவர்கள் வெள்ளாளர்களாக இருக்கிறார்கள். நாட்டில் தங்கிவிட்டவர்களில் பெரும்பாலுமுள்ளவர்களில் கணிசமானோர் பஞ்சமர் அல்லது தலித்தியர்களாகவே இருக்கிறார்கள். மரபான யாழ்ப்பாண சமூகத்தில் 18 சதவீதமான பஞ்சமர்கள்தான் அதிகமும் விடுதலைப் புலிகளின் அமைப்பில் போராளிகளாகச் சேர்கிறார்கள். விடுதலைப் புலிகளின் நோக்கம் என்பது தமிழ் தேசிய ஒற்றுமையாக இருக்கிறது. சாதி ஒதுக்கத்தை அவர்கள் தடைசெய்கிறார்கள். சமவேளையில் தமது அமைப்பின் பெரும்பாலுமான போராளிகள் தலித்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படையாக அவர்கள் அறிவிப்பதை விரும்புவதும் இல்லை. இவ்வகையிலான குறிப்பிட்டுக் காட்டல் யாழ் பல்கலைக்கழக ஆய்வு அமர்வொன்றில் யத்தனிக்கப்பட்டபோது விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பான மாணவர்கள் அந்த நிலைப்பாட்டை திரும்பப் பெறச் செய்தார்கள் என்பதனை நூலின் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். விடுதலைப்புலிகள் அமைப்பைக் குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் பிணைப்பதை விடுதலைப்புலிகள் விரும்பவில்லை. ஏற்கனவே தலைமை யாழ் வெள்ளாளர்களிடமிருந்து இடைநிலைச் சாதியினரான கரையார்களிடம் வந்துவிட்டது. மரபாக வெள்ளாளர்கள் சாதி எனும் அளவில் யாழ்ப்பாணத்தின் 50 சதவீதமானவர்கள் எனும் அளவில், பொருளியல் ரீதியில் அனைவருமே செல்வந்தர்கள் இல்லை. அவர்களிலும் பொருளியல் ரீதியில் மேல்-இடை-கடைத் தட்டுகளில் இருந்தவர்களும் இருந்தார்கள். தமிழ் விடுதலைக் கூட்டணியின் ஆனந்தசங்கரி போன்றவர்கள் கரையாரான பிரபாகரனைக் கடுமையாக எதிர்ப்பதற்கு, அவர்தம் யாழ் மேல்குடி வெள்ளாளப் பின்னணியும் காரணமாகச் சுட்டப்படுவது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது. விடுதலைப் புலிகளின் தலைமை சார்ந்தும் சரி, போராளிகள் சார்ந்தும் சரி, ஆய்வாளர்கள் தாம் ஆய்வில் ஈடுபடும் காலகட்டத்தில் திட்டவட்டமான சாதியப் புள்ளிவிவரங்கள் பெறுவது சாத்தியமாயிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். யுத்த நிலைமையும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் இவ்வகையில் தமது ஆய்வை மட்டுப்படுத்துகிறது என்பதனையும் அவர்கள் பதிவு செய்கிறார்கள். புலிகளின் பதவிகளும் சரி, பொறுப்புகளும் சரி படைப் பயிற்சி, தேர்ச்சி போன்றவற்றின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறதேயொழிய, சாதியப் பிரதிநிதித்துவம், பிரதேசப் பிரதிநிதித்துவம் போன்றவற்றின் அடிப்படையில் அல்ல என்பதனையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஈழத்தில் சாதியப் பிரச்சினையின் வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் மீது தமிழக தலித்தியக் கோட்பாட்டாளர்கள் முன்வைக்கிற விமர்சனம் ஒன்றுதான் : விடுதலைப் புலிகள் தலைமையேற்பதற்கு முன்பாகத் தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான, திரட்டிக் கொண்ட இயக்கத்தை நடத்துவதற்கான சூழல் இருந்தது. விடுதலைப் புலிகள் அதனை முற்றிலும் மௌனமாக்கிவிட்டார்கள். இயக்கரீதியிலான தலித்துக்களின் செயல்பாட்டை விடுதலைப் புலிகள் மௌனமாக்கிவிட்டார்கள் எனும் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். ரவிக்குமார் முன்வைத்த பிறிதொரு விமர்சனம் விடுதலைப் புலிகள் இஸ்லாமியத் தமிழர், மலையகத் தமிழர் என இரு வேறுபட்ட சமூகத்தின் பிரதிநிதிகளோடு உரையாலை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான பிரதிநிதித்துவத்தையோ அல்லது உலையாடலையோ தலித் சமூகத்தைப் பொறுத்து விடுதலைப் புலிகள் வழங்கவில்லை என்று குறிப்பிடுகிறார். சாதியப் பிரச்சினை தொடர்பான விடுதலைப் புலிகளின் பார்வை தொடர்பாகவும், அவர்களின் மீது வைக்கப்படும் விமர்சனம் தொடர்பாகவும் இதிலிருந்து நாம் சில நிலைப்பாடுகளுக்கு வந்து சேரலாம். புலிகள் தமது அமைப்புக்குள் சாதிய ஒடுக்குமுறையைக் கடைப்பிடித்தார்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை. தொண்ணூறுகளிலிருந்து 2009 மே வரையிலுமான இரண்டு தசாப்தங்கள் விடுதலைப் புலிகளின் தலைமை ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைமையாக அல்லது வெள்ளாளர்களின் அல்லது கரையார்களின் தலைமையாக இருந்தது என்பதற்கான புள்ளிவிரங்களோ சான்றுகளோ இல்லை. அவ்வாறே இருந்தாலும் அவர்கள் விடுதலைப் புலிப்போராளிகளை சாதியரீதியில் ஒடுக்கினார்கள் என்பதற்கும் சான்றுகள் இல்லை. சாதிய ஒதுக்குதலை தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் தடைசெய்து அதனைக் குற்றத்தன்மை வாய்ந்ததாக ஆக்கியதன் பின், அவர்கள் திட்டமிட்டு தலித்தியர்கள் மீதான வெள்ளாளர்களின் ஒடுக்குமுறைக்குத் துணைபோனார்கள் என்பதற்கும் சான்றுகள் இல்லை. இதுவன்றி ஆய்வாளர்கள் குறிப்பிடுகிற ஒரு முக்கியமான விடயம், மாவீரர்களின் கல்லறை அமைக்கப்பட்ட விதம். அனைவருக்கும் ஒரே மாதிரியான நினைவு மண்டபங்கள்தான் அமைக்கப்பட்டன. சாதிய அடையாளங்கள் அங்கு துப்புரவாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மத அடையாளங்களும் அங்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்து மதம் இறந்தவர்களை எரிக்கச் சொல்கிறது. விடுதலைப் புலிகள் போராளிகளைப் புதைத்திருக்கிறார்கள். இவ்வாறாக விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சாதிய அமைப்பு என்று சொல்வதற்கோ, அது சாதியத்தைக் கடைப்பிடித்த அமைப்பு என்று சொல்வதற்கோ, அது உருவாக்க விரும்பிய அமைப்பு - அது சர்வாதிகார அமைப்பே ஆயினும் - அது சாதிய அமைப்பு என்று சொல்வதற்கான எந்தவிதமான சான்றுகளும் இல்லை. விடுதலைப் புலிகளை தலித்தியப் பெருஞ்கதையாடலுக்குள் கொணரப் பிரயத்தனப்படும் புகலிட புலி எதிர்ப்பாளர்களுக்கும் சரி, அவர்களது பிரயத்தனங்களுக்குக் கோட்பாட்டு அடிப்படைகளையும், அரசியல் அடிப்படைகளையும் தமிழகத்தில் உருவாக்கிக் கொடுக்கும் அ.மார்க்சுக்கும் சரி, ஆதவன் தீட்சண்யாவுக்கும் சரி, இருக்கிற ஒரே காரணமெல்லாம், விடுதலைப் புலிகள் தமது ஆளுகையைத் ஸ்தாபிப்பதற்கு முன்னால் திரட்டிக் கொள்ளப்பட்ட வகையில் நடத்தபட்ட தலித்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வாய்ப்பை, அவர்கள் முற்றிலும் இல்லாதாக ஆக்கினார்கள் என்ற காரணம் மட்டும்தான் எஞ்சி நிற்கிறது. விடுதலைப் புலிகள் அவ்வாறான நிலைப்பாடு மேற்கொண்டதற்கான அவர்களுக்கான காரணங்கள் தெளிவாக இருக்கின்றன. சாதிய முரண்பாடுகள் வெளிப்படையாகக் கிளம்புவதற்கான வாயப்புகளைத் தாங்கள் தருவதனால், சிங்கள பௌத்த பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்த்தேசிய இனத்தின் ஒற்றுமை பாதிக்கப்படும் என அவர்கள் கருதினார்கள். ஒரு வகையில் வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து சகலமுரண்பாடுகளையும் இரண்டாம்பட்சமாக முன்வைத்த மரபான மார்க்சிய நிலைப்பாட்டை ஒத்தது விடுதலைப் புலிகளின் இந்த நிலைப்பாடு. II தேசியமும் மார்க்சியமும் பிற முரண்பாடுகளும் தொடர்பான இந்த விவாதவெளிக்குப் போவதற்கு முன்னால், ஈழ விடுதலைப் போராட்டமும், உள்நாட்டு இடப்பெயர்வும், புகலிட நாடுகள் நோக்கிய மக்களின் வெளியேற்றமும் யாழ்ப்பாணத்தின் சாதியக் கட்டமைப்பில் ஏற்படுத்திய மாற்றம் குறித்தும் ஆய்வாளர்களின் சில அவதானங்களை ஞாபகப்படுத்திக் கொள்வோம். விடுதலைப் புலிகளின் சாதிய ஒதுக்குதலின் மீதான தடையால் வெளிப்படையாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாத நிலை வெள்ளாளர்களுக்கு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளிடம் இத்தகைய குற்றச்சாட்டுகள் வரும்போது அவர்கள் திட்டவட்டமாக பஞ்சமர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கிறார்கள். நிலங்கள் தொடர்பான சில தகராறுகள் தங்களிடம் வந்தபோது, தலித்துகளுக்கு அனுசரணையாகவே புலிகள் செயல்பட்டிருக்கிறார்கள். உள்நாட்டின் இடப்பெயர்வு காரணமாக கறாரான சாதிஒதுக்குதலையும் தீண்டாமையையும் பஞ்சமர்களின் மீது சுமத்தமுடியாத சூழலுக்குப் பிற சாதியினர் தள்ளப்பட்டார்கள். எனினும் இடைத்தங்கலாகத் தங்கிய நிலங்கள் வெள்ளாளருடையதாக இருந்தால், அங்கு முன்னுரிமைகள் வெள்ளாளருக்குத் தரப்பட்டிருக்கின்றன. நலவாழ்வு முகாம்கள் (welfare camps) என அமைக்கப்பட்ட இடங்களிலேயே தலித்துகள் தங்கமுடிந்தது. வெள்ளாளர்கள் இத்தகைய சந்தர்ப்பங்களிலும் தீண்டாமை முறைகளைக் கடைப்பிடிக்க முயன்றனர். கோயிலில் நுழையத் தடை, பொதுக் கிணற்றில் நீரெடுக்கத் தடை என்பனவற்றை அச்சூழலிலும் தலித் மக்கள் எதிர்கொள்ளவே நேர்ந்தது. இத்தகைய சூழலில் புலிகளிடம் இந்நிலைமை முறையிடப்பட்டபோது பஞ்சமர்களுக்கு ஆதரவாகவே விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். பெரும்பாலுமான வெள்ளாளர்கள் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துவிட்டதால், யாழ்ப்பாணத்திலுள்ள நிலங்களை தலித்மக்கள் வாங்குவதற்கான சூழலும் கூடவே தோன்றியது என்கிறார்கள் ஆய்வாளர்கள். விடுதலைப் புலிகள் சாதிவாதிகள் என்பதை நிரூபிப்பதற்காக புகலிட தலித்தியர்கள் முன்வைக்கும் சில விவாதங்கள் விநோதமானவை. யாழ்ப்பாண மத்தியக் கல்லூரியின் முதல்வர் ராஜதுரை கொல்லப்பட்டபோது, விடுதலைப் புலிகள் அவரை தலித் என்ற காரணத்திற்காகத்தான் சுட்டுக் கொன்றார்கள் என்றார்கள். தலித்தியரும் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளருமான தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படைக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டபோது தமிழ்ச்செல்வனை தலித் என்பதால் (தமிழ்ச் செல்வன் அம்பட்டர்) திட்டமிட்டுத்தான் விடுதலைப் புலிகள் சாகக் கொடுத்தார்கள் எனப் ‘பேசிக்கொள்கிறார்கள்’ என்றும் வியாக்கியானப்படுத்தினார்கள். முதல்வர் கொல்லப்பட்டதற்கான காரணமாக அவர் விடுதலைப் புலி எதிர்ப்பாளரான டக்ளஸ் தேவானந்தாவுடன் உறவு கொண்டிருந்த காரணங்களே இருந்திருக்குக்கூடும் என எழுதுகிறார் பத்திரிகையாளரான டிபிஎஸ். ஜெயராஜ். டக்ளஸ் தேவானந்தா தொடர்பாக முதல்வருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமரசப் பேச்சுகள் நடந்திருப்பதையும் அவர் பதிவு செய்கிறார். பிரச்சினை சாதிய வடிவம் எடுத்துவிடாத அவதானம் விடுதலைப் புலிகளுக்கு வேண்டும் எனவும் அவர் எழுதுகிறார்5. இலங்கை ராணுவம் திட்டமிட்டு பொதுமக்கள் கூடும் இடங்களிலும் மருத்துவமனைகளின் மீதும் குண்டு போடுகிறது. அதன் பகுதியாகவே விடுதலைப் புலிகளின் தலைமையையும் அழிக்கிறது. தமிழ்ச்செல்வன் அதனது பகுதியாகவே கொல்லப்பட்டார். அவரது மரணத்தைக் கூட புலி எதிர்ப்பாளர்கள் தமது தலித்தியக் கோரலுக்குப் பாவித்த வக்கிரம்தான் அரங்கேறியிருக்கிறது. சாதி, மத, இனக்குழு பேதமின்றி தமிழ் மக்களைக் கொல்லும் சிங்கள இனவாத ராணுவம், இதனை எதிர்த்து ராணுவ ரீதியில் போராடும் ஏகப்பிரதிநிதித்துவவாதிகளாகப் புலிகள், அந்தப் போராட்டத்தின் ஒற்றுமைக்காகச் சகலமுரண்பாடுகளையும் மௌனமாக்கும் சிந்தனைப் போக்கு என மிகச் சிக்கலான ஒரு செயல்போக்கை, எழுந்த மேனியாக விடுதலைப் புலிகள் தலித் விரோதிகள் எனத் திரித்ததாகவே புகலிட (தலித்தியரல்லாத) தலித்தியர்களதும், அவர்களுக்கு முண்டுகொடுக்கும் தமிழக (தலித்தியரல்லாத) தலித்தியப் பின்நவீனத்துவரான அ.மார்க்சினதும், தலித்தியரான ஆதவன் தீட்சண்யாவினதும் நிலைப்பாடுகள் இருக்கின்றன. விடுதலைப் புலிகளை இந்துத்துவவாதிகள் என நரேந்திரமோடியினுடனும் பிஜேபியினுடனும் சமப்படுத்துவதும் இத்தகைய அபத்தம்தான். அத்வானியோ அல்லது நரேந்திரமோடியோ பாபர்மசூதி இடிப்பையோ அல்லது குஜராத் இஸ்லாமிய மக்கள் படுகொலைகளையோ தவறு எனச் சொன்னதில்லை. இஸ்லாமியர்களுடன் அவர்கள் ஒருபோதும் உரையாடலில் ஈடுபட்டதில்லை. விடுதலைப் புலிகள் திரும்பத் திரும்பத் தமது தவற்றை, யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர் வெளியேற்றப்பட்ட தவற்றை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்தியக் கண்ணோட்டத்திலிருந்து ஈழத் தேசிய இனப் பிரச்சினையை எப்படிப் புரிந்து கொள்ள முடியாதோ, அதைப்போலவே ஈழத்தின் சாதியப் பிரச்சினையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தமிழக தலித்தியக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பதால் புரிந்து கொள்ள முடியாது. III ஆதவன் தீட்சண்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து பேசுவதாலும், அ.மார்க்ஸ் (ஈழப் பிரச்சினை தொடர்பான ‘புத்தகம் பேசுகிறது’ நேர்முகம்), ஷோபா சக்தி (‘புதுவிசை’ நேர்முகம்), சசீந்திரன் (‘புதுவிசை’ நேர்முகம்) போன்ற புலியெதிர்ப்பு (தலித்தியரல்லாத) தலித்தியர்களின் குரலை தமிழகச் சூழலில் ஆதவன் முன்வைப்பதாலும், ஈழத் தேசியப் பிரச்சினை குறித்த இரு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டிலிருந்தே நாம் பிரச்சினையைப் பேசத்துவங்க வேண்டியிருக்கிறது. 1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழகத்திற்கு ஈழத்தமிழ் மக்கள் வந்தபோது அவர்களுடன் உறவைப் பேணுவதிலும் சரி, அவர்களுடன் உரையாடல்களை நிகழ்த்துவதிலும் சரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகளும் தமிழகத் தலைமையினரும் எடுத்த நிலைப்பாட்டினை ஒப்பிட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தத் தோழர்களிடம் தோழமை உணர்வையும் கொண்டிருக்கவில்லை. உரையாடலையும் மேற்கொள்ளவில்லை. அ.மார்க்ஸ், ஈழவிடுதலை இயக்கங்களின் பாலான அவரது அனுசரணையான செயல்பாட்டுக்காகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற நேர்ந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அன்றிலிருந்து இன்று வரை மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது. காலத்தின் கோலம் அ.மார்க்ஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை வந்தடைந்திருக்கிறார். விளைவாக ஷோபாசக்தி, சசீந்திரன் போன்றவர்கள் கூட ஆதவன் தீட்சண்யாவின் ஊடே தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடன் பயணிகள் ஆகியிருக்கிறார்கள். என்னால் திட்டவட்டமாகச் சொல்ல முடியும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையினருக்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை ஈழத் தமிழ்த் தேசியப் பிரச்சினை சார்ந்த எந்தவிதமான ஆழ்ந்த அறிதலும் இல்லை. இதற்கான மிகக் கடுமையான சான்று : சென்ற அகில இந்திய மாநாட்டில்தான் அவர்கள் ஜேவிபியைத் தமது மாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்து தவிர்த்திருக்கிறார்கள். ஜேவிபி சுத்தியல் அரிவாள் கொடிவைத்த ஒரு சிங்கள இனவாத அமைப்பு. அதனது கட்சியின் வகுப்புகளில் போதிக்கப்பட்ட ‘ஐந்தாவது கருதுகோள் (fifth thesis) மலையகத் தமிழர்களை (ஆதவன் தீட்சண்யா கூர்ந்து கவனிக்க வேண்டும்) இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கைக்கூலிகளாகப் பார்த்தது. 2009 மே, இலங்கை ராணுவ வெற்றியின் பின் தமிழ்மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் என்று ஏதுமில்லை, ஆகவே எந்தவிதமான அரசியல் தீர்வுத்திட்டமும் தமிழர்களுக்குத் தேவையில்லை என்று சொல்லும் கட்சி இது. இது வரையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துலகத்தை உருவாக்கிய கூறுகள் இரண்டு. ஒன்று : ஜேவிபி எனும் ஒரு இனவாத இயக்கம். இரண்டாவது கூறு : இலங்கை அரசாங்கத்தின் உற்ற தோழனான இந்து ராம். இதனை வைத்துக்கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இனவாதக் கட்சி என முடிவுக்கு வருவதற்கு ஒப்பானதுதான், விடுதலைப் புலிகள் இயக்கத்தை சாதிய வெறியர்களாகவும் இந்துத்துவவாதிகளாகவும் சித்தரிக்கிற பார்வை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக அணிகள் ஷோபா சக்தி, சுசீந்திரன், அ.மார்க்ஸ் போன்றவர்களின் வழியில் ஈழப் பிரச்சினையை அணுக நேர்ந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. . இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எண்பதுகளில் ஈழவிடுதலை இயக்கங்களில் மார்க்சியப் போக்குகளைத் தமது அணிகளில் கொண்டிருந்த ஈழப் புரட்சி அமைப்பு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் போன்றவற்றுடன்தான் தனது தோழமையை வெளிப்படுத்தியது. தமிழ்த்தேசியத்தைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழீழ விடுதலை இயக்கமும் இடதுசாரிகளை அணுகவில்லை. அவர்கள் திமுகவையும் அண்ணா திமுகவையும்தான் அணுகினார்கள். அதே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பிற்காலத்தில் எந்தவிதமான விமர்சனமும் அற்றவகையில் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்மட்ட அணிகளிடம் தமிழகத் தலைமையின் இந்தத் தலைகீழ் மாற்றம் உற்சாகமாக வரவேற்கப்படவில்லை. இவ்வகையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே ஈழத்தின் அரசியல் வாலாற்றையும் நிகழ்ந்து வந்திருக்கும் மாற்றங்களையும் அவதானிக்கத் தவறின. IV தலித் அரசியலினதும் மார்க்சியர்களதும் செயல்பாடுகளிலிருந்து நாம் துவங்குவோம். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம் சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அம்பேத்கர் எனும் ஆளுமையும் பெரியார் எனும் ஆளுமையும் கம்யூனிஸ்ட் அணிகளால் சுவீகரிக்கப்படுவதற்கும், தலித்தியப் பார்வை வர்க்கப் பார்வைக்கு இணையானது எனும் நிலைப்பாட்டுக்கு இவர்கள் வந்து சேர்வதற்கும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கிறது. என்ன காரணம்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பார்ப்பனியத் தலைமையாக இருந்தது என அதனது தலித்திய விமர்சகர்கள் சொல்கிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலித்தியரல்லாதவர்களின் தலைமையைக் கொண்டிருந்தது என அதனது விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஏன், ஷோபா சக்தியின் ‘சத்தியக் கடதாசி’ இணையத்தளத்தில் மோனிகாவின் ஒரு கட்டுரையில் கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும்தான் இந்தியாவிலேயே அதிகமான பார்ப்பனர்களைக் கொண்ட அரசியல் தலைமை இருக்கிறது எனச் சொல்லப்பட்டது. சாதியப் பிரச்சினையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்காததற்குக் காரணம் பார்ப்பனியத் தலைமைதான் என்பதை ஒரு மார்க்சியனாக நான் ஏற்கவில்லை. நீங்கள் ஏற்கிறீர்களா ஆதவன்? தலித்தியம் மட்டுமல்ல, ஆண்கள் தலைமையில் அதிகமாக இருப்பதாலேயே பெண்நிலைவாதத்தை மார்க்சியர்கள் ஏற்கவில்லை என்ற விமர்சனமும், ஆண்பெண் பாலுறவுப் பழக்க வழக்கம் கொண்டவர்கள் அதிகமாக இருப்பதால்தான் சமப்பாலுறவாளர்களை மார்க்சியர்கள் ஏற்காது இருந்தார்கள் என்றெல்லாம் விமர்சனம் வரும்போது, ஆமாம், அதுதான் காரணம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா ஆதவன்? மரபான மார்க்சியர்கள் இவைகளை ஏற்காததற்கான காரணங்கள் நாம் அனைவரும் சர்வதேசியவாதிகளாக இருந்ததுதான். மார்க்சிய அனுபவங்களை ரஷ்யாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் இறக்குமதி செய்து பாவித்ததுதான் காரணம். வர்க்கப் போராட்டம் நடந்து முதலில் சோசலிசம் வரட்டும். அதன் பின் பெண்விடுதலை, சாதிநீக்கம் வரும் என நம்பினோம். சகலமும் அதன்பின் சமப்பட்டுவிடும் என நாம் நம்பினோம். இட்லரிடமிருந்து சோவியத் யூனியனைக் காப்பதற்காக ஆங்கில ஏகாதிபத்தியத்தை நாம் ஆதரிக்கத்தான் வேண்டும் எனவும் நிலைப்பாடு எடுத்தோம். பிரிட்டிசாரை எதிர்த்து இந்தியாவில் நாடு தழுவிய அளவில் ஆயுதவிடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கவில்லை. ஜனநாயக அரசியல் செய்யக் கூடிய அந்தச் சூழலிலும், அப்போதும் அம்பேத்கரின் நிலைப்பாட்டை நாம் ஏற்கவில்லை. தமிழகத்தில் பெரியாரை நாம் ஏற்கவில்லை. திராவிட இயக்கத்தினரின் மொழிவழிப்பட்ட ஜனநாயகக் கோரிக்கைளை நாம் இட்லரோடு ஒப்பிட்டு, பாசிசத்தோடு ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். பி.ராமமூர்த்தியும் ஜீவாவும் இப்படித்தான் பேசினார்கள். கே. பாலதண்டாயுதம் இப்படித்தான் பேசினார். காரணம் ஒன்றே ஒன்றுதான் : வர்க்க மையவாதம். அதற்காக அனைத்து முரண்பாடுகளையும் நாம் கீழ்மைப்படுத்தினோம். இதற்காக நாம் அனைவருமே கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும். தேசிய இனப் பிரச்சினை, பெண்ணிலைவாதம், சூழலியல், சமப்பாலுறவு, மனித உரிமை அக்கறை, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக விழுமியங்கள், விளிம்புநிலைக் கலாச்சாரங்கள் இவையெல்லாம் பற்றியும் மார்க்சியர்கள் அக்கறைப்பட வேண்டும் என நாம் சிந்திப்பதற்கு, கலாச்சாரப் புரட்சியின் வீழ்ச்சி, சோவியத் யூனியனின் வீழ்ச்சி, செப்டம்பர் சம்பவங்கள், புதிதாக இனத்தேசங்கள் அமைந்தமை, முதலாளித்துவத்தின் சாதனைகள் பற்றிய மறுபரிசீலனை, குடிமைச் சமூகம், மக்கள்நல அரசு, மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு என அத்தனையையும் நாம் சுவீகரிக்க வேண்டியிருந்தது. புகலிடச் சூழலை அறிந்தவர்களுக்குத் தெரியும். சோசலிசத் தமிழீழம் என நம்பிப் புறப்பட்டவர்களுக்கு, சகோதரப் படுகொலைகள் நிகழ்ந்த ஈழப் போராட்டத்தின் திசை மாற்றத்தின் பின், ஒரு மிகப் பெரிய நம்பிக்கை வெற்றிடம் தோன்றியிருந்தது. தொண்ணூறுகளில் சோவியத் யூனியன் வீழ்ந்த போது அவர்களது கோட்பாட்டு நம்பிக்கைகளும் சிதைந்து போயின. தமிழகத்தில் தலித்தியத்தைக் கோட்பாட்டுருவாக்கம் செய்வதற்கு அ.மார்க்சுக்கும் ரவிக்குமாருக்கும் பின்நவீனத்துவம்தான் அப்போது கைகொடுத்தது. அ.மார்க்ஸ் மார்க்சியத்தின் பெயரால் நடந்தவைகளைப் பட்டியலிட்டுப் புத்தகமாக ஆக்கியிருந்தார். இந்த அலை புகலிடத்திற்கும் வந்தது. விடுதலைப்புலி எதிர்ப்பாளர்களுக்குத் தமது எதிர்ப்பைக் கோட்பாட்டுருவாக்கத்திற்குள் கொண்டு வரவேண்டிய தேவை இருந்தது. நிறப்பிரிகை தொகுத்த ‘தேசியம் ஒரு கற்பிதம்’ அவர்களுக்குக் கச்சிதமான சட்டகம் ஆகியது. தேசியம் கற்பிதம் எனக் கொண்டு, தமிழக தலித்தியத்தினால் ஈழத் தேசியப் போராட்டத்தை அவர்களை மறுவரைவு செய்ய எத்தனித்தார்கள். இதுவன்றி இஸ்லாமிய அரசியலின் காவலராகத் தன்னை வரித்துக் கொண்ட (இது பற்றி எழுத்தாளர் ஸல்மாவும் குறிப்பிட்டிருக்கிறார் என்பது மட்டுமல்ல, தமிழக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் ஊர்விலக்கம் செய்யப்பட்ட இடதுசாரி எழுத்தாளர் ஹெச்.சி.ரசூல் குறித்த எந்த நிலைப்பாட்டையும் அ.மார்க்ஸ் இதுவரையிலும் எடுக்கவில்லை) அ.மார்க்ஸ்சின் இஸ்லாம்-இந்துத்துவம் பற்றிய இருதுருவ வாய்ப்பாட்டையும் இவர்கள் எடுத்துக் கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப்பட்டதற்கான அடிப்படையான காரணமாக விடுதலைப் புலிகள் சொன்னது என்ன? வடகிழக்கில் நிலைகொண்டிருந்த இலங்கை ராணுவத்தில் அவ்வேளை இஸ்லாமிய உயரதிகாரிகளும் இருந்தனர், இவர்களது தொடர்பிலிருந்து சில இஸ்லாமிய மதம் சார்ந்த தனிநபர்கள் விடுதலைப் புலிகளைக் குறித்த உளவுத் தகவல்களை இலங்கை ராணுவத்தினருக்குத் தெரிவித்தனர். இவ்வாறான சில தனிநபர்கள் இலங்கை ராணுவத்தினருக்கான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதனை இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப்பட்டதனைக் கண்டித்த ஈழத்து இஸ்லாமிய அரசியல்வாதிகள் முன்வைத்ததில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்திலுள்ள சில தனிநபர்களைத் தண்டிப்பது என்பதற்கு மாறாக, முழு இஸ்லாமிய சமூகத்தினதும் சொத்துக்களையும் கையகப்படுத்திக் கொண்டு, 24 மணித்தியாலங்களுக்குள், வெறும் 500 ரூபாயுடன் அம்மக்கள் கூட்டத்தினை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியது இனப்படுகொலை முஸ்தீபை ஒத்த கொடூரமான செயல் எனவே அவர்கள் விமர்சனத்தை வைக்கிறார்கள். ‘யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய செயல் விடுதலைப் புலிகளின் இந்துத்துவ நிலைப்பாட்டில் இருந்து எடுத்த நடவடிக்கை எனத் தான் இப்போதும் கிஞ்சிற்றும் சிந்தித்துப் பார்க்கவில்லை’ என நான் இது குறித்துப் பேசியபோது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட புகலிடத்தின் முக்கியமான ஊடகவியலாளரும் இஸ்லாமியரும் ஆன இளைய அப்துல்லா என்னிடம் பகிர்ந்து கொண்டார். அ.மார்க்சும் அவரது புகலிட சீடரான ஷோபாசக்தியும் யாழ்ப்பாண இஸ்லாமிய மக்கள் வெளியேற்றத்தை தமிழக இந்துத்துவவாதிகளின் மனப்பான்மையுடன் முடிச்சுப் போட முனைகின்றனர். அப்பட்டமான பொய். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காகச் சமராடி மரணமுற்ற இஸ்லாமியப் போராளிகளையும் - இளைஞர்களையும் யுவதிகளையும் - விடுதலைப் புலிகள் தமது முள்ளியாவளை மாவீரர் நினைவில்லத்தில் ஒன்றாகவே புதைத்தனர். இஸ்லாமிய முறையின்படி, இஸ்லாமிய சமாதியில் அப்போராளிகள் புதைக்கப்படவில்லை எனும் வருத்தம் கூட ஈழத்து இஸ்லாமிய மக்களிடம் இருக்கிறது. ஆனால் சாதி மதம் கடந்தவர்களாகத் தம்மை வரித்துக் கொண்ட விடுதலைப் புலிகள் அனைவரையும் போலவே தமது அமைப்பின் இஸ்லாமியப் போராளிகளையும் ஒரே மாவீரர் சமாதியில் புதைப்பது தவிர வேறு விதமாகச் செயல்பட்டிருக்க முடியாது. யாழ்ப்பாண இஸ்லாமியர் வெளியேற்ற விடயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களான பானுவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கரிகாலனும் கருணாவும்தான் முக்கிய பங்காற்றினார்கள்6. அதே கருணா தற்போது ஷோபா சக்தியால் ஜனநாயகவாதியாக முடிசூட்டப்படுவது வரலாற்றின் முரண்நகை அன்றி வேறென்ன? அ.மார்க்சும் ஷோபா சக்தியும் தமிழகத்தில் அவிழ்த்துவிட்டிருக்கும் இன்னுமொரு நச்சுப் பிரச்சாரம், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்பது அப்பட்டமான பொய். 2002 ஆகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சர்வதேச ஊடகவியலாளர்களின் சந்திப்பின்போது இது குறித்த கேள்விகளுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் பதில் சொல்லியிருக்கிறார். தாம் முஸ்லீம்களிடம் ஏற்கனவே மன்னிப்புக் கோரியிருக்கிறோம் என்பதனையும், இஸ்லாமியர்களுக்கு தமிழர் தாயக நிலத்தில் உரிமை உண்டு எனவும் பாலசிங்கம் அந்த உரையாடலில் தெரிவித்திருக்கிறார்7. விடுதலைப் புலிகளின் தமிழக ஆதரவாளர் நெடுமாறன் பொள்ளாச்சி மகாலிங்கத்திற்குப் புகழ்மாலை சூட்டினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பிஜேபி இல.கணேசனுக்கு தேர்தல் வேலை செய்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அத்வானியைச் சந்தித்தனர். விடுதலைப் புலிகளின் போதாத காலமாக பால்தாக்கரே ஈழத் தமிழர்களின் உடம்பில் ஓடுவது இந்து ரத்தம் என்றார். இவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள், ஆகவே விடுதலைப் புலிகள் இந்துத்துவவாதிகள். ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் என்றனர் ஷோபா சக்தி வகையினர். சாதியத்தையும் இந்துத்துவத்தையும் கடுமையாக எதிர்க்கிற இன்குலாப்பும் தியாகுவும் விடுதலை. ராசேந்திரனும் கொளத்தூர் மணியும் கோவை கு.ராமகிருட்டிணனும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்களே, ஆக விடுதலைப் புலிகள் பெரியாரினது வாரிசுகள் அல்லவா? தலித்தியக் கோட்பாட்டாளரான ரவிக்குமாரும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரான தொல்.திருமாவளவனும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்களே, ஆக விடுதலைப் புலிகள் அம்பேத்கரின் வழித்தோன்றல்கள் அல்லவா? பல்வேறு சாதிகளும் பல்வேறு மதங்களும் இயங்குகிற ஒரு புவிப்பகுதியில் நடக்கிற இனத்தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெறும் சக்திகள் ஒற்றைப்பட்டைத் தன்மையுடன் இருப்பது எவ்வாறு சாத்தியம்? ஏன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இந்திய சமூகத்தில் எதிரொலிக்கிற எல்லா முரண்பாடுகளும் அவர்களது தலைமையிலும் அணிகளிடமும் எதிரொலிக்காமலா இருக்கிறது? புலிகள் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்கிறீர்கள். இந்துத்துவவாதிகள் என்கிறீர்கள். முதலாளித்துவவாதிகள் என்கிறீர்கள். சாதி வெறியர்கள் என்கிறீர்கள். கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற முரண்பாடுகளும் சிக்கலும் கொண்ட ஒரு உலக நிகழ்வுப்போக்கில், அரசியலில் திசை மாறிவிட்டது என்பதற்காக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்கத்தின் மீது இவ்வாறான முத்திரைகள் குத்துவது கொடுமையிலும் கொடுமை. வியட்நாம் அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறது. சீனா அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இருவரும் ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளா? தொண்ணூறுகளில் விடுதலை பெற்ற எந்த நாடும், சுமார் 30 நாடுகள், சோசலிசத்தைத் தேறவில்லை. என்ன செய்யப் போகிறோம்? மாவோவின் காலத்தில் மாபெரும் பாய்ச்சலில் இலட்சக் கணக்கில் பட்டினியால் மக்கள் இறந்தனர். அவரை எப்படி அழைப்பது? தலித்தியப் பிரதிநிதித்துவம் என்பது மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையில் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலித் விரோதக் கட்சியா? இந்துத்துவக் கட்சியா? முத்திரைகள் குத்துவது எளிது. முத்திரை குத்தும் பழக்கத்தை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்திய மகானுபாவர் அ.மார்க்ஸ். கோவை ஞானிக்கு, எஸ்.என்.நாகராசனுக்கு, தன்னை விமர்சிக்கிற அல்லது தான் விமர்சிக்க நேர்கிற எல்லோருக்கும் முத்திரை குத்துவது அவரது மரபு. அவரது முத்திரை குத்தலுக்கு அவரது முன்னாள் தலித்திய நண்பர் ரவிக்குமார் கூடத் தப்பவில்லை. புகலிடத்தில் அவரது வழித்தோன்றல்கள் அவர்களுடன் முரண்படுகிற, அவர்களுக்கு ஒவ்வாத அனைவருக்கும் சாதிய முத்திரைகள் குத்துவார்கள். ரயாகரனுக்கு உயிருடன் கல்வெட்டு அடிப்பார்கள். யமுனா ராஜேந்திரனை காணாமல் போக வைப்பார்கள். சபா.நாவலனுக்கு வாயில் சர்க்கரைக்குப் பதில் சயனைடைப் போடவா என்பார்கள். இந்தப் புரட்சிகர நடவடிக்கைகளைச் செய்தவர் உங்கள் தலித்திய ஜனநாயக நண்பர் ஷோபா சக்திதான். ஷோபா சக்தியிடம் துவக்கு மட்டும் இருந்திருந்தால் இப்போது புகலிடத்தில் மூவர் நிஜமாகவே காணாமல்தான் போயிருப்பார்கள். அவ்வளவு வக்கிரமும் வன்முமம் அவருக்குள் குடி கொண்டிருக்கிறது. சிங்கள திரைப்பட இயக்குனர் துசரா பிரீசை அடிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போகவில்லை. தோழர்.தா.பாண்டியனும் அதனை ஆதரிக்கவில்லை. ஆனால் ஷோபா சக்திக்குத் தோழர். தா. பாண்டியனை அடிக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. லண்டன் மேடையில் இப்படித்தான் இவர் ‘அறம்’ பேசுகிறார். ஈழவிடுதலைப் போராட்டம் துவங்கியபோது அனைத்து இயக்கங்களதும் எதிர்காலக் கனவு சோசலிசத் தமிழீழம்தான். விடுதலைப் புலிகளது கனவும் சோசலிசத் தமிழீழம்தான். அந்தக் கனவைத் தொடர்ந்தும் காவி வருவதற்கான நம்பிக்கையை இன்று ‘நிலவும்’ சோசலிச நாடுகளில் இருந்து எவரும் பெற முடியாது. இந்தியாவில் இருக்கிற தொழிற்சங்க உரிமைகள் கூட சீனாவில் இல்லை. கிராமப்புறத்துச் சிறுவர்கள் அதிக அளவில் படிப்பை நிறுத்திவிட்டு குழந்தைத் தொழிலாளர்களாக நகரப்புறத்துக்கு வருகிறார்கள். இந்திய ஜனநாயகத்தோடு சீனாவை ஒப்பீட்டளவில் கூட போற்றிப் பேச முடியாது. வியட்நாமிய ‘தேசிய’ சோசலிசம், முதலாளித்துவம்-சோசலிசம் என இரண்டின் நல்லவைகளையும் எடுத்துக் கொள்ளும் என்கிறார் ஜெனரல் நிகுயன் கியாப். இந்த நோக்கில் விடுதலைப் புலிகளின் எதிர்கால அரசு, அவர்கள் முன்பு சொன்ன டிட்டோவின் யுகோஸ்லாவிய மாதிரியிலிருந்து, சந்தைப் பொருளாதார சமூகமாக மாறியதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பு வடிவம் ஸ்டாலினிய, போல்பாட்டிச, ஸதாம் ஹுசைன் வகையிலான அமைப்பு வடிவம்தான். சதாம் ஹுசைனைப் போற்றுகிற அ.மார்க்ஸ் வகையறாக்கள் பிரபாகரனைக் கடுமையாக விமர்சிப்பது முரண்நகை. தலிபான்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இஸ்லாமின் அழிவுச் சிந்தனைகள் பற்றியோ, காஷ்மீரத்திலிருந்து இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் பற்றியோ, ஈரானில் அரங்கேறும் பெண்கொலைகள் பற்றியோ, அல்லது தஸ்லிமா சுட்டுகிற மாதிரி பங்களாதேசில் இடிக்கப்பட்ட இந்துக் கோயில்களைச் சூறையாடிய இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியோ அ.மார்க்ஸ் வாய்திறக்க மாட்டார். ஆனால், வெனிசுலாவின் சேவாசையும், சேகுவேராவையும், பகத்சிங்கையும் பற்றி மட்டும் திரு உருவைக் கலைத்துக் கட்டுடைத்துக் கொண்டேயிருக்கிற ‘தேர்ந்தேடுத்த ஞாபகமறதிப் பேராசிரியர்‘தான் அ.மார்க்ஸ். கடந்த இரு தசாப்தங்களில் அ.மார்க்சின் எழுத்துகளை எடுத்துப் பார்த்தோமானால் அதில் கணிசமானவை கம்யூனிஸ்ட்டுகளையும் விடுதலை இயக்கங்களையும் இடதுசாரிகளையும் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள்தான். உலகெங்கிலும் தகவல்களைத் திரட்டி இவை பற்றி எழுதிக் குவித்திருக்கிறார். அடுத்தாக எந்த ஆக்கத்தன்மையுமற்று, அழிவை மட்டுமே முன்வைத்து உலகளாவிய அரசியலாகி வரும் அரசியல் இஸ்லாம் எனும் மனிதவிஷம் பற்றி, அதனது இடதுசாரி எதிர்ப்புத்தன்மை பற்றி அவர் மௌனம் காப்பார். வஹாபி இஸ்லாமியரை விடவும் அடிப்படைவாத இஸ்லாமியக் கோட்பாட்டாளர்களின் மௌனம் போன்றது இவ்விஷயத்தில் அ.மார்க்சின் மௌனம். இந்த மௌனமும் அவரது எழுத்துகளாகக் குவிந்திருக்கிறது. இந்த இரு வகையிலான எழுத்துகளோடு ஒப்பிட, உலகின் ஒடுக்குமுறை அமைப்புகள், அரசுகள் குறித்த அவரது எழுத்துகள் மிகவும் சொற்பம். இந்த அளவில்தான் ஜெயமோகனுக்கும் அ.மார்க்சுக்குமான சந்திப்பு முனை தோன்றுகிறது. பேராசிரியர் அ.மார்க்ஸ் முன்வைக்கிற, மார்க்சியம் காலாவதியாகிவிட்டது அல்லது புரட்சிகரக் கட்சிக்குப் பதிலாக வானவில் கூட்டணி என, ஒடுக்குமுறைக்குள்ளான சக்திகளுக்குள் குறைந்தபட்சப் புரிதலின் அடிப்படையில் ஒற்றுமை என்பதற்கு மாற்றாக, அடையாள அரசியலை முன்வைத்து பன்முகத்துவம் என்பதனைப் பேசியபடி, அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான சக்திகளைப் பிளவுபடுத்தும் அவரது அரசியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கிறதா? ஈழப் பிரச்சினையில் அ.மார்க்ஸ், ஷோபா சக்தி, ஆதவன் தீட்சண்யா கூட்டு ஒரு மிகமோசமான சந்தர்ப்பவாத அரசியலின் துவக்கம். அ.மார்க்சின் பன்மைத்துவத்திற்கும் அடையாள அரசியலுக்கும் தமிழக தலித்தியக் கட்சிகளின் இன்றைய நிலை ஒரு சாட்சி. தத்தமது குறுகிய சாதிய அடையாளங்களை முன்வைத்து, பன்முகத்துவத்தை முன்வைத்துக் கூர்தீட்டியபடி, திசைக்கு ஒன்றாக நிற்கிற தலித்திய சக்திகளை பார்ப்பானியத்திற்கும், இந்திய அரசின் பார்ப்பனிய கருத்துருவ இயந்திரத்திற்கும் எதிராக நிறுத்த தனது பின்நவீனத்துவ அரசியல் சார்ந்து கத்தை கட்டிவிட்டு, பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு உள்ளான ஈழத்தின் மக்களிடம் தனது அடையாள அரசியலை அ.மார்க்ஸ் பேசட்டும். தலித்திய இயக்கங்கள் வேறாகவும் அதனது பூர்வீகத் தத்துவ ஆசான் வேறாகவும் பிரிந்து கிடப்பதுதான் தமிழக தலித்திய அரசியல் யதார்த்தம். இந்த இலட்சணத்தில் ஈழத்து தலித்திய அரசியலின் பிதாமகனாக அ.மார்க்ஸ் வேஷந்தரித்திருப்பது படு அபத்தநாடகம். V இந்தியாவில் பிரித்தானிய ராணுவத்தின் கீழ் வாழ்ந்த இந்திய மக்கள், சிங்கள இனவாதிகளின் ராணுவத்தின் கீழான ஈழ மக்கள் எதிர்கொண்டிருக்கும் மனித அவலத்தைப் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஈழத்தில் நடந்து கொண்டிருப்பது உள்நாட்டு யுத்தம். கொடிய ராணுவத்தை எதிர்த்து அங்கே போர்நிகழ்ந்து கொண்டிருந்தது. அம்பேத்கர் காங்கிரசுக்கும் பிரித்தானிய அரசுக்கும் இடையில் நிலைப்பாடு எடுப்பதற்கான சூழல் இந்தியாவில் நிலவியது. இருவருடனும் உரையாடல் நிகழ்த்தக் கூடிய வாய்ப்புகளும் இருந்தது. மார்க்சியர்களுக்கும் தலித்தியர்களுடன் உரையாடல் மேற்கொள்ளக் கூடிய சூழல் நிலவியது. இலங்கையில் தலித்திய உரையாடலை மேற்கொண்டிருக்கக் கூடிய சூழல், உள்நாட்டுப் போர் உக்கிரம் பெற்ற நிலைமையில் இல்லாது போனது. உயிர்வாழ்தலும் இடப்பெயர்வும் அங்கு அன்றாட வாழ்வுப் பிரச்சினையாக ஆனது. சாதியைத் தாங்கள் ஒழித்துவிட்டதாக விடுதலைப் புலிகள் எங்கும் பிரகடனம் செய்யவில்லை. சாதி ஒதுக்குதலைக் குற்றமாக்கியிருக்கிறோம், சாதிய ஒதுக்குதலைத் தடை செய்திருக்கிறோம் என்றுதான் அவர்கள் சொன்னார்கள். சாதிய ஒதுக்குதலுக்குத் தண்டனை அளிப்போம் என்றுதான் அவர்கள் சொன்னார்கள். குறிப்பிட்ட சாதியைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகத் தமது அமைப்பை அவர்கள் அடையாளப்படுத்த விரும்பவில்லை. அவர்களது அமைப்பு சார்ந்த கருத்தியலை அவர்கள் ஸ்டாலினிடம் இருந்துதான் சுவீகரித்தார்கள். வர்க்கப் போராட்டத்தை முன்னிறுறுத்தி சகலவற்றையும் இரண்டாம் பட்சமாக ஆக்கிய சிந்தனையமைப்பின் தொடர்ச்சியாகத்தான் அவர்கள் வர்க்கத்திற்கு மாற்றாக தேசியத்தை அந்த இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். சாதி பாட்டாளிவர்க்க ஒற்றுமையைப் பிளந்துவிடும் என இந்திய மார்க்சியர்கள் விவாதித்து வந்திருக்கிறார்கள். அவ்வகையில் சாதியப் பிரச்சினைகளை அவர்கள் மௌனமாக்கி வந்திருக்கிறார்கள். அரசியல் ரீதியில் சாதிய ஒடுக்குமுறைக்கு கருத்தளவில் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தே வந்திருக்கிறார்கள். இதற்காக எவரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சாதிய வெறியர்கள் என்றோ இந்துத்துவவாதிகள் என்றோ சொன்னதில்லை. விடுதலைப் புலிகளும் இவ்வாறு தேசியத்தை முன்னிறுத்தி, சாதியப் பிரச்சினையை இரண்டாம் இடத்திற்கு நகர்த்தியதால் அவர்களைச் சாதி வெறியர்கள் எனச் சொல்ல முடியாது. அவர்களது அமைப்பில் அவர்கள் திட்டமிட்ட வகையில் கலப்புத்திருமணங்களை ஆதரித்து வந்திருக்கிறார்கள். திருமணச் சடங்குகளில் தாலியை நிராகரித்திருக்கிறார்கள். சாதிகடந்த வகையில் மாவீரர்களின் கல்லறைகளை அமைத்திருக்கிறார்கள். நடைமுறையில் தேசிய ஒற்றுமை கருதி சாதியப் பிரச்சினையில் மௌனம் காத்தினரே ஒழிய, அமைப்பில் சாதியையும் சாதி வெறியையும் அவர்கள் ஒரு போதும் கட்டிக் காக்கவில்லை. இஸ்லாமியர் தொடர்பாக அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் ஒரு போதும் நியாயப்படுத்தியதில்லை. மலையகத் தமிழர்களின் சாதிய அடையாளம் ஒற்றைப்பட்டைத் தன்மையானது இல்லை. மலையகத் தமிழரிடையேயும் தமிழகம் போலவே சாதிய ஒதுக்கலும் ஒடுக்குமுறையும் உண்டு. அதனை அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் காவிக் கொண்டுதான் போனார்கள். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்குப் போனவர்கள் அனைவரும் தலித்துகளும் இல்லை. மலையகத் தமிழரின் பாலான எழுபதுகளுக்கு முன்னான யாழ்ப்பாண சமூகத்தவரின் சாதிய தடித்தனத்திற்கு விடுதலைப் புலிகளை பொறுப்பாக்க முடியாது. மலையகத் தமிழ் இளைஞர்கள் விடுதலைப் புலிகளாகப் போராடி மடிந்திருக்கிறார்கள். யாழ் மேட்டுக்குடி வெள்ளாளரின் செயல்களுக்கு விடுதலைப் புலிகளைக் குற்றம் சுமத்த முடியாது. மரபுரீதியான யாழ்ப்பாண சமூகம் வெள்ளாள மேட்டுக்குடி சமூகம்தான். சாதிய ஒதுக்குதல் சமூகம்தான். விடுதலைப் புலிகள் தமது ஆளுகையின் கீழ் இதனை மாற்றியமைத்தனர். தமிழ் சமூகத்தின் தலைமையைத் தாம் ஏற்றதன் வழி வெள்ளாளத் தலைமையை அவர்கள் அகற்றினார்கள். சாதிய ஒதுக்குதலைத் தமது சட்ட உருவாக்கலில் குற்றச் செயலாக ஆக்கினார்கள். விடுதலைப் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவப் பார்வையே அவர்களது எல்லாத் தவறுகளுக்கும் காரணமாக அமைந்தது. சாதியப் பிரச்சினை குறித்த விவாதம் மட்டுப்படுத்தப்பட்டமையும் அவர்களது அந்த நிலைப்பாட்டின் கீழ்தான் வருகிறது. மாறாக பிரக்ஞைபூர்வமாக விடுதலைப் புலிகள் சாதி காப்பாளர்கள், சாதி வெறியர்கள், இந்துத்துவவாதிகள் என்பதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. தமிழகச் சூழலில் அ.மார்க்சும் அவரது புகலிடச் சீடர்களும் இரண்டு வார்த்தைகளை வரலாறு கடந்து, விமர்சனமற்ற வகைகளில் புனிதமாக்கி வைத்திருக்கிறார்கள். தலித்தியம் மற்றும் இஸ்லாம் என்பது அந்த இரண்டு புனித வார்த்தைகள். தலித்தியப் பார்வையிலிருந்து பேசுவதாகவோ அல்லது இஸ்லாமிய நோக்கிலிருந்து நீங்கள் பேசுவதாகவோ காட்டிக் கொள்வீர்களானால் நீங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுளர்கள். முரண்படுபவர்கள் சாதியவாதி என்றோ இந்துத்துவவாதி என்றோ முத்திரை குத்தப்படுவார்கள். அவர்களது உயிர்க்கூற்று ஆராய்ச்சியை இவர்கள் உடனடியாகத் துவங்கிவிடுவார்கள். பிறப்பிலேயே தலித்தியரோ அல்லது இஸ்லாமியரோ அல்லாதவர்கள் இந்தத் தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் எதிரிகளை இப்படித்தான் கட்டமைக்கிறார்கள். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் சாதியம் பற்றிப் பேசுகிற அ.மார்க்ஸோ அல்லது புகலிட நாடுகளில் தலித்தியம் பற்றிப் பேசுகிற ஷோபா சக்தியோ அல்லது சுசீந்திரனோ இவர்களில் எவருமோ தலித்தியரும் இல்லை, இஸ்லாமியரும் இல்லை. ஈழ தலித்தியத்தை புலி எதிர்ப்பு வெள்ளாளர்கள் எப்போதோ தமது அரசியல் நலன்களுக்காகக் கடத்திவிட்டார்கள் என்று வளர்மதி (keetru.com) சொல்வதுதான் நிஜம். புகலிட தலித்தியர்கள் தமது விடுதலைப் புலிகள் எதிர்ப்புக்குத் தலித்திய முலாம் பூசினார்கள். அந்த முலாமைக் கொண்டு வந்து தமிழகத்திலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் ஒரு பிரிவினரது சமூக நடவடிக்கைகளோடு பொருத்தி அ.மார்க்ஸ் சரிபார்த்துச் சொல்ல, புலிகளின் மீது இந்துத்துவச் சாயத்தையும் அவர்கள் ஏற்றினார்கள். அந்தச் சாயத்தை இரத்தச் சிவப்பில் குழைத்து அழுத்தமாக ஆதவன் தீட்சண்யா புதுவிசையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகளினிடையில் வீசினார். விடுதலைப் புலிகள் இயக்கம் வெள்ளாளத் தலைமையைக் (அது அவ்வாறாக இல்லை) கொண்டதால், அது தலித் விரோத இயக்கம் என்றால் தலித்தியரைத் தலைமையில் கொண்டிராத, பார்ப்பனியர்களைத் தலைமையில் அதிகம் கொண்டிருக்கிற ஆதவன் சார்ந்த மார்க்சிஸ்ட் இயக்கம்தான் இந்தியாவின் முதன்மையான தலித் விரோத இயக்கம், சாதி வெறி இயக்கம் என்பதனை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். புலிகள் சாதி விரோதிகள் என்றால், ஆதவன் சார்ந்த மார்க்சிஸ்ட் இயக்கம்தான் சாதி ஒதுக்குதலின் பிரதான காவலர்கள் என்பதனை அவர் ஒப்புக் கொண்டே தீர வேண்டும். விடுதலைப் புலிகள் இந்துத்துவவாதிகள் என்றால் அவர் சார்ந்த இயக்கம்தான் இந்தியாவில் இந்துத்துவத்தின் மொத்த வடிவம் என்பதனையும் ஆதவன் ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய அவப்பெயரை அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் இயக்கத்தின் மீது முத்திரை குத்துவதனை ஒத்ததுதான், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சாதிய இயக்கம் என முத்திரை குத்துவதற்கு முயன்ற ஆதவனின் செயல்பாடு. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்ற எழுபதுகளோடு ஒப்பிட, அவர்களது தலைமை முற்றிலும் கொன்றொழிக்கப்பட்ட 2009 மே முடிய 35 ஆண்டுகளில் உலகம் தலைகீழாக மாறிவிட்டது. திசைதேடித் திரிந்த எல்லா விடுதலை இயக்கங்களும் போலத்தான் அவர்கள் உலகின் சகல மூலைகளிலும் முட்டிமோதினார்கள். கடைசிவரையிலும் அமெரிக்காவை நம்பியிருந்து மரணமுறும் அவல நிவையில்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்தார் எனும் செய்தி, தென் ஆசியாவும் இந்தியாவும், இந்தியாவுடன் அணுஒப்பந்தம் போட்ட அமெரிக்காவும் குறித்த அவரது அரசியல் தரிசனமின்மைக்கு ஒரு சான்று. முன்னாள் மார்க்சியர்களான கிழக்கு திமோர் ஜனாதிபதி குசமா சனானாவும், குர்திஸ் விடுதலை இயக்கத்தின் அப்துல்லா ஒச்சலானும் தமது தேசங்களின் விடுதலைக்காக அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் ஐக்கிய நாட்டுப் படைகளையும் தான் நாடினார்கள். விடுதலைப் புலிகளும் அதைத்தான் நாடினார்கள். துரதிருஷ்டவசமாக குசாமாவுக்கு அருகில் அமெரிக்க நண்பனான ஆஸ்திரேலியா இருந்தது. ஆஸ்திரேலியா குசாமாவை ஆதரித்தது. கிழக்கு திமோர் தப்பித்தது. ஒச்சலானைப் பொறுத்து அமெரிக்காவின் நண்பனான துருக்கிக்கு ஒச்சலானை ஒழிக்க வேண்டும். ஒச்சலான் ஆயுள் சிறையில் இருக்கிறார். பிரபாகரன் விடயத்தில் என்ன நடந்தது? அமெரிக்காவின் நண்பனாக இந்தியா இருக்கிறது. இந்திய அரசின் அறிவிக்கப்பட்ட பகைவனாக பிரபாகரன் இருந்தார். அமெரிக்கா சாவகாசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க பிரபாகரன் திட்டமிட்டபடி கொல்லப்பட்டார். இந்தக் குறைந்தபட்ச தரிசனமும்கூட இல்லாது பிரபாகரன் அமெரிக்காவுக்காகக் காத்திருந்திருக்கிறார். இதுதான் அவரது அரசியல் தரிசனம். இந்தப் புதிய உலக யதார்த்தங்களைக் கணக்கில் கொண்டுதான், எழுபதுகளையும் (10 ஆண்டுகள் : கெடுபிடிப் போர்க்காலம்) எண்பதுகளையும்-தொண்ணூறுகளையும் (20 ஆண்டுகள் : சோசலிச முகாம் வீழ்ச்சியின் காலம்) இருபத்தியோராம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகள் (9 ஆண்டுகள் : செப்டம்பர் 11 இன் பின்னான பயங்கரவாத உரையாடல் காலம்) என இப்படி மூன்று கட்டங்களாகத்தான், விடுதலைப் புலிகளிடம் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ள முயலவேண்டும். அதை விட்டுவிட்டு புகலிட தலித்தியர்களின் சிறுபிள்ளைக் கோளாறுகளையெல்லாம் (infantile disorder) தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுவீகரித்திருப்பது, அதனது தத்துவார்த்த பலத்திலிருந்தல்ல, பலவீனத்திலிருந்தே வருவதாகும். VI ஈழத்தில் விடுதலைப் புலிகளும் சாதிய ஒழிப்பும் குறித்து இதுவரையிலுமான ஆய்வுகள் அவதானங்களிலிருந்து நாம் அந்தச் சமூகம் குறித்தும், அதில் ஈடுபாடுள்ள புலிகள் ஆதரவாளர்களதும், புலி எதிர்ப்பாளர்களதும் கோருதல்கள் (claims) குறித்தும் நிர்ணயமான அல்லது திட்டவட்டமான முடிவுகளுக்கு வருதல் சாத்தியமில்லை. சாதி குறித்த புள்ளிவிவரங்கள், சாதிய முரண்பாடுகள் அல்லது எழுச்சிகள் அல்லது மோதல்கள் அல்லது ஒடுக்குமுறைகள் என நிகழ்வுகளின் மீதான தரவுகள் என்பது இத்தகைய முடிவுகளுக்கு வருவதற்கு மிகவும் அடிப்படையானதாகும். கடந்த 35 ஆண்டுகளாக வடகிழக்கு மக்கள் அரசபடைகளின் கட்டுப்பாடு அல்லது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வாழ்ந்து வருகிறார்கள். உள்நாட்டு யுத்தத்தினிடையிலும் இடப்பெயர்தலினிடையிலும் தான் வாழ்ந்து வருகிறார்கள். முதலில் நிகழ்வுகளும் தரவுகளும் புள்ளிவிவரங்களும் சம்பந்தப்பட்ட மக்களிடம் இருந்து திரட்டப்பட வேண்டும். இதுவன்றி அரசியல் ரீதியான வியாக்கியானங்களிலிருந்தோ அல்லது கருதுகோள்களிலிருந்தோ சாதி தொடர்பான உண்மைகளை நிர்ணயமாக வைக்க முடியாது. கடந்த 35 ஆண்டுகளில் சாதி குறித்த சுயாதீனமான ஆய்வுகள் எதுவும் இல்லை. புள்ளிவிவரங்களும் இல்லை. குறைந்தபட்சம் அத்தகைய நெறிகளுடன் எழுதப்பட்டுள்ள அடிப்படையான கட்டுரைகளும் கூட இல்லை. விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களால் எழுதப்பட்டவை ஒன்று அரசியல் கருதுகோள்கள் அல்லது உணர்ச்சிவசமான எதிர்வு கூறல்கள் என்பதைத் தாண்டிவரவில்லை. அதுபோலவே விடுதலைப்புலிகள் தமது ஆளுகையின் கீழான பிரதேசத்தில் தாம் பிரகடனப்படுத்திய சாதி ஒதுக்குதல் குறித்த தண்டனைகளும் தடைகளும் எவ்வாறு நிஜத்தில் செயல்பட்டன என்பதனை அவர்களது கோருதல்களில் இருந்து அல்லாமல், சுயாதீனமான கல்வித்துறை ஆய்வுகளிலிருந்தே நாம் பெறுதல் சாத்தியம். சட்டங்களோ தடைகளோ போட்டு விடுவதால் சாதி ஒழிந்து விடாது. வன்கொடுமை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என நிறைய சட்டங்கள் இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் பெரிய சாதனைகள் ஏதும் நிகழவில்லை என்பது நிதர்சனமாக இருக்கிறது. எனில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் சாதியற்ற சொர்க்கம் இருந்தது என்று கொள்ள வேண்டிய அவசியமேயில்லை சாதி ஒழிப்பு என்பது கருத்தியல் மட்டத்திலும் உளவியல் மட்டத்திலும் சட்டமுறையின் மட்டத்திலும் ஒரே சமயத்தில் நடத்த வேண்டிய போராட்டம். நிறவெறி ஒழிப்பு, அடிமை முறை ஒழிப்பு போன்றவற்றை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சட்டஆக்கலின் மூலம்தான் நடைமுறைப்படுத்த முடிந்தது. சோசலிச நாடுகளிலும் கட்சியின் அதிகாரம் என்பதனை விடவும் சட்டத்தின் ஆட்சியைத்தான் அதனது விமர்சகர்கள் கோருகிறார்கள். அம்பேத்கரும் பெரியாரும் சாதியை ஒழிப்பதில் சட்டமுறைகளின் முக்கியத்துவம் பற்றிப் பேசுவதையும் நாம் இங்கு கவனம் கொள்ள வேண்டும். இந்த வகையில்தான் அதனது நடைமுறைப் பண்புகளுக்கும் கோருதல்களுக்கும் அப்பால் விடுதலைப் புலிகளின் சட்ட ஆக்கலையும், தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த குறைந்தபட்சமான சுயாதீன ஆய்வையும் கூட நாம் ஆக்கபூர்வமாகப் பார்க்க வேண்டியுள்ளது. ஆதாரங்கள் : * கட்டுரையின் தலைப்பு ‘ஹிமல் சவுத் ஆசியா : ஆகஸ்ட் 2002’ இதழில் வெளியான ரவிக்குமாரின் ஆங்கிலக் கட்டுரையில் இருந்து எழுத்தாளப்படுகிறது. ரவிக்குமாரின் கட்டுரை 2005 ஆம் ஆண்டு எழுதப்பட்டதென்றும், அது பிரசுரிக்கப்படாத அறிக்கை என்றும் தலித்திய ஆய்வுகளுக்கான நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட, இலங்கையில் சாதி தொடர்பான ஆய்வு நூலின் ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பில் சாதி குறித்துப் பேசிய ரவிக்குமாரின் இந்த முன்னோடிக் கட்டுரை, எனது அறிவுக்கெட்டிய வரையில், தமிழகத்திலோ அல்லது புகலிடத்திலோ அல்லது இலங்கையிலோ அசலாக எழுதப்பட்ட தமிழ் மொழி மூலத்தில் பிரசுரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஹிமல் இதழில் வெளியான, அழகரசனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இக்கட்டுரை, சமகாலத்தில் இலங்கையிலிருந்து வெளியாகும் ‘தி ஐலன்ட்’ பத்திரிக்கையில் மறுபிரசுரம் செய்யப்பட்டது என்பதனை இங்கு ஒரு தகவலாகப் பதியவேண்டியது முக்கியம் எனவே நான் கருதுகிறேன். இதுவன்றி இக்கட்டுரையின் பூர்வாங்க வடிவத்தை என்னுடன் விவாதித்து திருத்தங்கள் சொல்லி கட்டுரையை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள உதவிய 'தேசம்நெற்' ஆசிரியர் குழுவைச் சேர்ந்த நண்பர் தா.ஜெயபாலனுக்கு எனது அன்பும் நன்றியும் உரியது. 1. Casteless or Caste-blind?: Dynamics of Concealed Caste Discrimination, Social Exclusion and Protest in Sri Lanka : Editors : Kalinga Tudor Silva -P.P. Sivapragasam - Paramsothy Thanges : International Dalit Solidarity Network, Copenhagen : Indian Institute of Dalit Studies, New Delhi : 2009. 2. Caste of the Tiger: Dalits among Sri Lankan Tamils by Ravi Kumar : Translated from Tamil by R Azhagarasan in Himal South Asia : August 2002 : reproduced in Island of Srilanka : 2002.ரவிக்குமாரின் கட்டுரை தற்போது தொழில்நுட்பக் காரணங்களால் ‘ஹிமல்’ இதழ் தொகுப்பில் கிடைப்பதில்லை எனினும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்பெறும் ‘தமிழ்நேசன்’ (tamilnation.org) வலைப்பக்கத்தில் இக்கட்டுரை வாசகர்களுக்குக் கிடைக்கிறது. 3. Caste Discrimination in War-affected Jaffna Society by Paramsothy Thanges & Kalinga Tudor Silva : pages 50 to 78 . 4. The Tamil Eelam Penal Code and the Tamil Eelam civil code, which were enacted in 1994 : criminalise caste descrimination : Tamil Eelam:A-De-Facto-State : Tamil Eelam Legal System : E.Pararajasingham, Head of Tamil Eelam Judicial Division : Tamil net : 30 October 2003. 5. Tigers face community wrath over Rajadurai killing by D.B.S. Jeyaraj : Tamil Week : October 23-29 : 2005. 6. பின்னாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறியாமல் களத்திலிருந்த தளபதிகளால் நேர்ந்த பிழை இது என விடுதலைப் புலிகளின் தரப்பில் சாட்டு சொல்லப்பட்டாலும், மத்தியத்துவப்படுத்தப்பட்ட புலிகளின் அமைப்பின் தலைவரான பிரபாகரனுக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லையெனவும், விடுதலைப் புலிகளே முழுமையாக இதற்குப் பொறுப்பானவர்கள் எனவும் அவருடனான உரையாடலின் போது இளைய அப்துல்லா என்னிடம் தெரிவித்தார். குறிப்பிட்ட விவரங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டமைக்காக மறுபடியும் இளைய அப்துல்லாவுக்கு எனது நன்றி உரியது. 7. Question : You have apologized to the Muslims but not made an open invitation for their return. Anton Balasingham : We have already apologized to them. If we invite them, there should be some conducive set up for them to live. Our leader will certainly extend an invitation for them to come to the north and live with us. Question : There are reports about Muslims in the East being harassed. It is reported that they have no rights to the land. Anton Balsingham : We have called the service commanders from the east to discuss the alleged harassment of Muslims. We have called Karikalan for a meeting and asked him what has gone wrong. He has assured us that he has made no such statement and it is a distortion. We believe that the Tamil homeland belongs to the Muslim people and we believe that there is no dispute that Muslims have a right to own land. When Mr. Hakeem comes we will discuss the matter Press Conference at Killinochi : Sri Lanka Sunday Times, 14 April 2002.
உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
|
=====================================================================
தமிழ்த் தேசியத்தின் மீதான அவதூறுகளும், போலித் தமிழ்த் தேசியர்களும் -- க.அருணபாரதி
- தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலையும் கருத்து ரீதியாக எதிர்கொண்டு பதில் கூறாமல், அவரது பிறப்பை இனங்கண்டு, அவரை ‘கன்னடர்’ எனத் தூற்றுகின்றனர்.
பெரியாரை மட்டுமின்றி, தமிழினத் துரோகிகளாக விளங்கும் கருணாநிதி, தங்கபாலு உள்ளிட்ட பலரையும் ‘தெலுங்கர்கள்’ எனத் தூற்றி, அவர்கள் செய்த துரோகங்கள் அனைத்தும் அவர்களது பிறப்பினால் மட்டுமே வருவது போலப் பேசுகின்றனர். ‘தமிழ்ச்’ சாதியில் பிறந்த ப.சிதம்பரம், பா.ம.க. இராமதாசு, தனியரசு, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழராய்ப் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே என்ன செய்து கிழித்துவிட்டனர் என அவர்கள் யாரும் அலசி ஆராய முற்படுவதில்லை.
ஒருவரின் நடைமுறைச் செயல்பாடுகளில் உள்ள தமிழினத் துரோகச் செயல்களைப் பட்டியலிட்டு விமர்சிக்காமல், அவர் பிறந்த சாதி எது என ஆராய்ச்சி செய்து தூற்றுகின்ற ‘மனுதர்மப்’ போக்கு சிலரால் முன்வைக்கப்படுகிறது. மனுதர்மப் பார்வையுடன் பேசித் திரியும் இப்போக்காளர்களை, தமிழ்த்தேசியர்கள் என பொதுமைப்படுத்தி அடையாளப்படுத்துபவர்கள் உள்நோக்கம் கொண்டவர்களாகவே இருக்க முடியும்.
ஏனெனில், ஆரியப் பார்ப்பனிய மனுதர்மத்தையும், சாதியையும், அதன் இன்றைய கருத்தியல் வடிவமான இந்தியத் தேசியத்தையும் தன் பிறப்பிலேயே மறுதலிப்பது தான் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல் ஆகும். தமிழ்–தமிழினம் என பேசிக் கொண்டு திரிபவர்கள் எல்லோரும் தமிழ்த் தேசியர்கள் என பொதுமைப்படுத்தி அடையாளப்படுத்தத் தொடங்கினால், தமிழினத் துரோகி கருணாநிதியைக் கூட எளிதில் “தமிழ்த்தேசியர்” என அடையாளப்படுத்தி விடலாம்.
ஆக, வெறும் மொழிப்பற்றையும், இனப்பற்றையும், ஒரு விடுதலைக் கருத்தியலாகக் கருதுவது முற்றிலும் தவறானது. தமிழ்த் தேசியம் என்ற விடுதலைக் கருத்தியல் வெறும் மொழி - இனப் பற்று கொள்வதை மட்டும் கொண்டதல்ல. மாறாக, முழுமையான மொழி – இன விடுதலைக்குப் பாடுபட மக்களை அணிதிரட்ட முன்வைக்கப்படும் கருத்தியலே தமிழ்த் தேசியம் ஆகும்.
திராவிடக் கருத்தியலை கடுமையாக எதிர்க்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியாரின் சமூகப் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், அவரது தவறான கருத்துகளை சுட்டிக் காட்டி திறனாய்வு செய்கின்றது. இந்தி எதிர்ப்பை மேற்கொண்ட பெரியார், தமிழகத்தில் தமிழை முதன்மைப்படுத்துவதை விட்டுவிட்டு ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தினார். பகுத்தறிவுவாதம் என்ற பெயரில், தமிழர்களின் மரபார்ந்த அறிவியலையும், அறத்தையும் கொச்சைப்படுத்தி மேற்கத்தியவாதத்தை முன்வைத்து செயல்பட்டார். இவ்வாறு பெரியாரின் செயல்பாடுகள் மீது திறனாய்வுகளை முன்வைக்கும் நாம், ஒருபோதும் பெரியாரைக் 'கன்னடர்' என பிறப்பு அடிப்படையில் ஆய்ந்து, இத்திறனாய்வுகளை முன்வைப்பதில்லை.
வரலாற்றுப் போக்கி்ல் தமிழகத்தில், அயல் இனத்தாரின் படையெடுப்பால் பல்வேறு அயல் இனத்தவர்கள் குடியமர்த்தப்பட்டது உண்மையே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இக்குடியேற்றத்தால், இங்கு வசிக்கத் தொடங்கிய அயல் இனத்தார் பல்வேறு சமூகங்களாக, தமிழ்ச் சமூகத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.
தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை வீட்டு மொழியாகக் கொண்டும், தமிழைத் தம் வாழ்வியல் மொழியாகவும் ஏற்றுக் கொண்டவர்கள் இவர்கள். பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் இவ்வகைச் சமூகத்தினர், தங்களது தாயகத்துடன் முற்றிலும் தொடர்பை இழந்து, தமிழகத்தைத் தம் தாயகமாக ஏற்றுக் கொண்டவர்கள்.
அதேபோல், தம் வழிபாட்டு மொழியாக உருது, ஆங்கிலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், முகமதியர், கிறித்துவர்களை 'கவனத்துடன்' கையாள வேண்டுமென்கிறது நாம் தமிழர் கட்சியின் ஆவணம். இது இந்துத்துவத்திற்கு நெருக்கமானப் போக்காகும். ஈழ விடுதலையை வலியுறுத்துவது, இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொள்வது, முகமதியர்கள் மற்றும் கிறித்துவர்களை சந்தேகப் பட்டியலில் வைப்பது ஆகிய நாம் தமிழர் கட்சியின் மூன்று செயல்திட்டங்களை மட்டும் நாம் இணைத்துப் பார்த்தால், இம்மூன்றையும் தங்களது செயல்திட்டமாக ஏற்றுக் கொண்டு ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டுள்ள, இந்திய மற்றும் இந்துத்துவ வெறியர்களின் கூடாரமான இந்து மக்கள் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் குறைவான வேறுபாடுகளையே நாம் காண முடியும்.
நாம் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல், எம்மதத்தவரையும் விலக்கி வைப்பதாகவோ, சந்தேகப் பட்டியலில் வைப்பதாகவோ இயங்கும் கருத்தியல் அல்ல. அனைத்து மதத்தவரையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசிய இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத் தரும் கருத்தியலே ஆகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழுந்த பல போராட்டங்களிலும், இவ்வாறு போலித் தமிழ்த் தேசியர்களால் வேறுபடுத்திப் பார்க்கப்படும் சமூகத்தினர் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர். வீட்டில் தெலுங்கு பேசினாலும், தமிழைத் தம் வாழ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்ட ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததியர்களின் அமைப்பான ஆதித்தமிழர் பேரவையினர், ஈழ விடுதலையை முன்வைத்துப் போராடுகின்றனர். பல முசுலிம் மற்றும் கிறித்தவ மத அமைப்புகள் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி போராடியிருக்கின்றன. அதேபோல, தெலுங்கு நாயுடு, நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இன்றும் தமிழர் உரிமை பேசும் பல்வேறு அமைப்புகளில் உறுப்பு வகிக்கின்றனர்.
இச்சமூக மக்களின் பங்களிப்புகளை ஏற்றுக் கொண்டு, அவர்களை அரவணைத்து, தமிழ்த் தேச விடுதலை என்ற உயரிய இலட்சியத்தின்பால் அவர்களை அணிதிரட்ட வேண்டியதே உண்மையான தமிழ்த் தேசியர்களின் கடமை. ஆனால், அதைச் செய்யாமல் அச்சமூக மக்களையும், இயக்கங்களையும் அவர்களது பிறப்பு வழி சாதியைக் கண்டுபிடித்து, அதன் காரணமாகவே அவர்கள் மீது வெறுப்பைக் கக்குவது தமிழ்த் தேசிய விடுதலைக்கு எதிரானது.
தம் வீட்டு மொழியாக அயல் மொழியைக் கொண்டிருந்தாலும், சமூக மொழியாக தாய்தமிழை ஏற்றுக் கொண்ட இச்சமூக மக்களை ஒட்டுமொத்தமாக ‘வடுகர்’ எனக் குறிப்பிட்டு, அவர்களை பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் வைத்து எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை அறிஞர் குணா முதலில் முன்வைத்தார். தமிழ்ச் சமூகத்தின் வானியல் அறிவு குறித்த பல சீரிய ஆய்வுகளை முன்வைத்த, அறிஞர் குணாவின் இப்பார்வை தவறானது. ஒரு தேசிய இனத்தின் தாயகப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக தங்கி, அம்மக்களோடு பிணைந்த உளவியலையும், வாழ்வியலையும் பெற்ற மக்களை முழுவதுமாக வெளியேற்றுவது பாசிசமே ஆகும்.
இப்பாசிசக் கருத்தை ஏற்றுக் கொண்ட தமிழர் களம், நாம் தமிழர் கட்சி, பா.ம.க. உள்ளிட்ட அமைப்புகளும், “எழுகதிர்” அருகோபாலன் போன்ற சிலரும் தான் “தமிழ்த் தேசியம்“ என்ற பெயரில் இத்தவறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆரியத்தின் தென்னாட்டுக் கிளையான திராவிடத்தை மட்டுமே இவர்கள் குறிவைத்து சாடுகிறார்களே ஒழிய, தமிழர்களின் முதன்மையான எதிரியான ஆரியப் பார்ப்பனிய இந்தியத் தேசியத்தை விட்டுவிடுகிறார்கள்.
‘தமிழனை தமிழனே ஆள வேண்டும்’ என்று கூறும் இவர்கள், தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியில் தம்மை அமர வைக்கக் கோருகிறார்கள். இந்திய அரசுக்குத் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிப் பதவியான தமிழக முதல்வர் பதவியில், ‘தமிழ்ச் சாதியில்’ பிறந்த இவர்களை அமர்த்தக் கோரும் பதவி அரசியலைத் தான் இவர்கள், ஏதோ இனவிடுதலை அரசியல் போல் முன்வைத்து படம் காட்டுகிறார்கள். இதற்குப் பதில், அப்பட்டமாக, “எங்களை முதல்வராக்குங்கள்” என தே.மு.தி.க., ம.தி.மு.க., போன்ற தேர்தல் கட்சிகளைப் போல் இவர்கள் பரப்புரை செய்யலாம். அதைவிடுத்து, தமிழர் - தமிழ்த் தேசியம் என பேசுவதெல்லாம் வெறும் ஓட்டுகளுக்காகவே ஆகும்.
தமிழ்நாட்டு முதல்வர் பதவியில், “மானத்தமிழன்” அமர்ந்தாலும், மார்வாடி அமர்ந்தாலும் அதன் விளைவாக தமிழ் இனத்திற்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. தமிழீழச் சொந்தங்களை அழித்தொழிக்கும் இலங்கைப் போரை நிறுத்த வேண்டுமென கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரும் தீர்மானம், இலங்கை மீது பொருளியல் தடை கோரும் தீர்மானம் என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு இந்திய அரசின் குப்பைத் தொட்டிக்குள் விழுந்த தீர்மானங்களைப் போல, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து வெறும் தீர்மானங்கள் மட்டுமே போடுவதைத்தான் தமிழக சட்டமன்றம் செய்ய முடியுமே தவிர, ஒருக்காலும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.
பெ.தி.க., ம.தி.மு.க., போன்ற அமைப்புகள் “திராவிடம்” என்ற தவறான சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் தமிழீழ விடுதலைக்கும் தமிழக உரிமைகளுக்கும் செய்த பங்களிப்புகளையும் நாம் மதிக்க வேண்டும். அவர்களது தவறான கருத்தியலின் காரணமாக, அவர்களது உண்மையான ஈகங்கள் பெருமையிழப்பதை நாம் தோழமை உணர்வுடன் சுட்டிக்காட்ட வேண்டும். பெரியாரின் ‘திராவிட’ கருத்தியலை ஏற்றுக் கொள்ளும் இவ்வமைப்பினர், அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு என்ற இலக்கை தங்களது வேலைத் திட்டமாக இன்னும் ஏன் அறிவித்துச் செயல்படவில்லை என்பதும் நமது கேள்வியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, தமிழ் – தமிழினம் என முழங்கி செயல்படும் அமைப்புகள் மற்றும் உணர்வாளர்களின் தத்துவ அடித்தளத்தையும், நடைமுறை வேலைத் திட்டங்களையும் தான் நாம் விமர்சிக்க வேண்டுமே தவிர, அவர்களது பிறப்புவழிச் சாதியை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துத் தூற்றுவது மனுதர்மப் போக்கே ஆகும். இதுவே, இப்போலித் தமிழ்த் தேசியர்களுக்கு பெரும் வேலையாகி விட்டது.
சாதியை முன்வைத்து வெளியிடப்படும், இவ்வகை பதவி சுகம் தேடும் போலித் தமிழ்த் தேசியவாதிகளின் கருத்துகளை, உண்மையான “தமிழ்த் தேசியம்” எனக் கூறி, தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களும், இந்தியத் தேசிய வெறியர்களும் உள்நோக்கத்துடன் வெளியிட்டு அவதூறு செய்து மகிழ்கிறார்கள்.
திராவிடத்திற்கு மாற்றாக, தமிழ்த் தேசியக் கருத்தியலின் வலிமையை கருத்தியல் ரீதியாக எடுத்துரைக்க வேண்டுமே தவிர, தமிழ்ச் சமூகத்தின் இழிவான சாதியை வைத்து அதை நிறுவக் கூடாது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 1956ஆம் ஆண்டு இந்திய அரசால், மொழிவழி மாநிலமாக தமிழகம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு தமிழகத்திற்குள் குடியேறி, பொருளியல் – பண்பாட்டு ஆதிக்கங்கள் புரியும், தெலுங்கர்கள், மார்வாடி-குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் உள்ளிட்ட அனைத்து அயல் இனத்தாரையும் வெளியேற்ற வேண்டும் எனக் கோருகிறது. தற்போது, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் குடியேறி வரும் வடவர்களையும், மலையாளிகளையும் வெளியேற்றக் கோருவதும் இந்த அடிப்படையில் தான்.
தமிழீழத் தாயகப்பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றி, தமிழ் மக்களை சிறுபான்மையாக்க முயலும் சிங்கள அரசின் இனவெறியைக் கண்டிக்கும் அதே அடிப்படையில் தான், த.தே.பொ.க., தமிழ்நாட்டுத் தமிழர்களை சிறுபான்மையாக்கும் விகிதத்தில் மிகை எண்ணிக்கையில் குடியேறும் வடவர்கள், மலையாளிகள் உள்ளிட்ட அயல் இனத்தாரை வெளியேற்றக் கோருகிறது. திராவிட இயக்கமான ம.தி.மு.க., போன்ற அரசியல் கட்சிகள் சிங்களக் குடியேற்றத்தைக் கண்டிக்கின்றனவே தவிர, தமிழகத்தில் மலையாளிகளையும், வடவர்களையும் வெளியேற்றக் கூடாது என்பதையும் நாம் விமர்சிக்கிறோம்.
தமிழகத்தில் மிகை எண்ணிக்கையில் உள்ள அயல் இனத்தாரை வெளியேற்றுகின்ற அதே வேளையில், தமிழக எல்லையோரங்களில் உள்ள பிற தேசிய இன மக்கள் மொழிச் சிறுபான்மையினராகக் கருதப்பட்டு, அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் நாம் கூறுகிறோம்.
இது உலகெங்கும் இன்றைக்கும் உள்ள 'விசா நடைமுறையைப் போன்றதாகும். ஆனால், அறிஞர் குணா பாதையில், தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்து குடியேறி, தமிழ் மக்களாக வாழுகின்ற சமூகத்தினரை வெளியேற்றவது என்பது நடைமுறைச் சாத்தியம் இல்லாத பாசிசத் தன்மையுடன் முன்வைக்கப்படும் திட்டமாகும். ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் முழுவதுமாக ஒரே இனம் தான் வாழ வேண்டும் என்ற இனத்தூய்மையாக்கல் கொள்கை ஒருக்காலும் சாத்தியம் ஆகாது.
ஏனெனில், ஒரு தேசிய இனத் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில், அண்டைத் தேசிய இன மக்கள் குடியேறுவதும், பிறநாட்டினர் சிறு அளவில் குடியேறுவதும் இன்றைய நடைமுறையில் தவிர்க்க இயலாது. ஆனால், ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவே, பிற தேசிய இன மக்கள் குடியேறலாமேத் தவிர, அத்தேசிய இன மக்களை விட அதிகளவிலான பிற தேசிய இன மக்கள் குடியேறக் கூடாது என கட்டுப்பாடு விதிப்பது பாசிசமாகாது. இந்த அளவுகோல் வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்கள ஆதிக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்ள வேண்டுமென தமிழீழ மக்களைத் திரட்ட, தமிழீழத் தமிழர்களால் வழங்கப்படுகின்ற கருத்தியலே, அவர்களால் ‘தமிழ்த் தேசியம்’ என முன்வைக்கப்படுகிறது. அதே போல், இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ள தமிழ்நாடு தம்மை விடுவித்துக் கொண்டு தனித் தமிழ்த் தேசமாக மலர வேண்டும் என்பதே தமிழகத்தில் ‘தமிழ்த் தேசியம்’ ஆக இருக்க முடியும்.
ஆனால், இந்திய அரசியலமைப்பையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டு நடைபெறும் தேர்தல்களில் பங்கேற்பதும், தமிழ் இனத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் மசோதா மன்றமாகத் திகழும் தமிழக சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவதும் தான் ‘தமிழ்த் தேசியம்’ என நாம் தமிழர் கட்சி, தமிழர் களம், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினர் பேசுகின்றனர்.
தேர்தல் அரசியல் மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியம் என்ன இடஒதுக்கீடு போன்ற சீர்திருத்தக் கொள்கையா என்று கூட இவர்கள் சிந்திப்பதில்லை. ‘அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ எனப் பேசி தேர்தல்களில் பங்கேற்று மக்களை ஏய்த்த தி.மு.க.வின் வழித்தோன்றல்களாகவே இவர்கள் மக்களிடம் தென்படுவார்கள். ம.தி.மு.க., பா.ம.க., கொ.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி, தமிழர் களம் என எத்துணை அமைப்புகள் வந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல.
தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிகள் பெறலாம், தமிழ்ச் சமூகத்திற்கு சில கூடுதல் உரிமைகளைக் கூடப் பெற்றுத் தரலாம் என்றாலும், ஒருபோதும் தமிழ்த் தேசிய விடுதலையைப் பெற்றுத் தர முடியாது. ஏனெனில், தமிழ்த் தேசியம் என்பது நாம் கேட்டுப் பெற வேண்டிய சலுகையல்ல; அது ஒர் தேசிய இனத்தின் விடுதலை இலக்கு. அதனை மக்கள் எழுச்சிப் போராட்டங்களே பெற்றுத் தரும், அதில் தேர்தல் கட்சிகளுக்கு இடமில்லை.
(கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்)
=========================================================================
தமிழ்த் தேசியம் X இந்தியத் தேசியம் - முரண்பாடுகளும், நம்முன் உள்ள தெரிவுகளும்
- விவரங்கள்
- எழுத்தாளர்: சுப.உதயகுமார்
- தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
- பிரிவு: கட்டுரைகள்
தமிழர் ஒரு தெளிவான தேசிய இனம் என்பதும், இந்தியர் என்பது ஒரு பரந்துபட்ட தேச அடையாளம் மட்டும்தான் என்பதும் நாம் அறிந்ததே. விடுதலைக்கு முன்னர் விநாயக் தாமோதர் சவர்கர் போன்ற இந்துத்துவவாதிகள்
“ஒரு தேவன், ஒரு தேசம், ஒரு பாசை;
ஒரு சாதி, ஒரு சீவன், ஓர் ஆசை”
(Ek dev, ek desh, ek bhasha;
ek jaati, ek jeev, ek aasha)
ஒரு சாதி, ஒரு சீவன், ஓர் ஆசை”
(Ek dev, ek desh, ek bhasha;
ek jaati, ek jeev, ek aasha)
எனும் முழக்கத்தோடு புதிய இந்து/இந்தியத் தேசியம் படைக்க முற்பட்டார்கள். இந்தியரெல்லாம் இந்தி மொழி பேசுகின்ற, இந்து மதத்தை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பின்பற்றுகின்ற இந்துஸ்தானியர்கள் எனக் கொண்டு “இந்தி-இந்து-இந்துஸ்தான்” எனும் கோஷத்தை இந்து/இந்தியத் தேசியம் முன்வைத்தது. இந்தத் திட்டம் எங்கேயும் போய் கரை சேரவில்லை என்பதை நாமறிவோம்.
ஆனால் அதே நேரம், இந்தியன் எனும் பரந்துபட்ட அடையாளத்தை இந்தியாவிலுள்ள பெரும்பாலான தேசிய இனங்கள் ஏற்றுக்கொள்கின்றன, அல்லது குறைந்தபட்சம் பெரிதாக எதிர்க்கவில்லை. காஷ்மீர் முஸ்லீம்களும், வடகிழக்கு மாநிலங்களிலுள்ள ஒரு சில தேசிய இனங்களும் எதிர்த்தாலும் அவர்களால் பெரிதாக வெற்றியடைய முடியவில்லை. தமிழர்களும் இந்த தேச அடையாளத்தை முழுமூச்சாக எதிர்க்கவில்லை என்றாலும், இந்திய தேசிய நீரோட்டத்தால் தலைகுப்புற அடித்துச் செல்லப்படுவதை எதிர்த்து நின்றோம், நிற்கிறோம். திராவிட தேசியத்தின் பங்களிப்பு இதில் கணிசமாக உண்டு என்றாலும் 1962-ம் ஆண்டு சீனப் போருக்குப் பிறகு தி.மு.க. தனது பிரிவினைவாத நிலைப்பாட்டைக் கைவிட்டது. கருணாநிதியின் தி.மு.க. “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியைத் தருக” என்று தேசிய நீரோட்டத்தின் நடுவே குதித்து, நீந்தித் திளைத்தது. எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. “அகில இந்திய” எனும் முன்ஒட்டை தன் பெயரோடு இணைத்துக் கொண்டு தனது இந்தியத் தேசிய விசுவாசத்தை நிரூபித்தது. எனினும் வலுவான இந்தி எதிர்ப்புப் போக்கும், சன்னமான இந்தி(ய) ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளும் தமிழ் சமுதாயத்தில் இன்றும் இழையோடிக் கொண்டுதானிருக்கின்றன.
மூன்று தெரிவுகள்:
இந்தியத் தேசியம் மற்றும் தமிழ்த் தேசியம் ஆகியவற்றின் ஊடாடுதலைப் பொருத்தவரை, தமிழர்களாகிய நம் முன்னால் மூன்று தெரிவுகள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். ஒன்று, இப்போது இருப்பது போலவே காலத்தை ஓட்டுவது. இந்தித் திணிப்பு, நதிநீர் பங்கீடு, கட்சத் தீவு, மூன்று தமிழர் தூக்கு, மீனவர் படுகொலை, கூடங்குளம்-கல்பாக்கம் அணுஉலைகள், தமிழக வளம் அழிப்பு, தமிழர் நலம் ஒழிப்பு என நாம் முறையிட்டுக் கொண்டே இருப்போம்; தில்லி தான் நினைத்ததை செய்துகொண்டேயிருக்கும். நாம் கையைப் பிசைந்துகொண்டு கருவிக் கொண்டேயிருப்போம்; தில்லி நம்மை சந்தேகக் கண்ணோடு பார்த்துக்கொண்டே சங்கடங்களுக்கு உள்ளாக்கிக் கொண்டேயிருக்கும். தமிழ்க் கடலுக்கு அப்பால் நமது தொப்புள்கொடி உறவுகள் கொல்லப்படும் போது கூட, தில்லி சிவசங்கர மேனன்களையும், நாராயணன்களையும் தான் அனுப்புமே தவிர, நம்மவரைப் பங்கேற்க அனுமதிக்காது. தனது அண்மைக் கட்டுரை ஒன்றில், புகழேந்தி தங்கராஜ் அவர்கள் கேட்கிறார்:
ஆனால் அதே நேரம், இந்தியன் எனும் பரந்துபட்ட அடையாளத்தை இந்தியாவிலுள்ள பெரும்பாலான தேசிய இனங்கள் ஏற்றுக்கொள்கின்றன, அல்லது குறைந்தபட்சம் பெரிதாக எதிர்க்கவில்லை. காஷ்மீர் முஸ்லீம்களும், வடகிழக்கு மாநிலங்களிலுள்ள ஒரு சில தேசிய இனங்களும் எதிர்த்தாலும் அவர்களால் பெரிதாக வெற்றியடைய முடியவில்லை. தமிழர்களும் இந்த தேச அடையாளத்தை முழுமூச்சாக எதிர்க்கவில்லை என்றாலும், இந்திய தேசிய நீரோட்டத்தால் தலைகுப்புற அடித்துச் செல்லப்படுவதை எதிர்த்து நின்றோம், நிற்கிறோம். திராவிட தேசியத்தின் பங்களிப்பு இதில் கணிசமாக உண்டு என்றாலும் 1962-ம் ஆண்டு சீனப் போருக்குப் பிறகு தி.மு.க. தனது பிரிவினைவாத நிலைப்பாட்டைக் கைவிட்டது. கருணாநிதியின் தி.மு.க. “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியைத் தருக” என்று தேசிய நீரோட்டத்தின் நடுவே குதித்து, நீந்தித் திளைத்தது. எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. “அகில இந்திய” எனும் முன்ஒட்டை தன் பெயரோடு இணைத்துக் கொண்டு தனது இந்தியத் தேசிய விசுவாசத்தை நிரூபித்தது. எனினும் வலுவான இந்தி எதிர்ப்புப் போக்கும், சன்னமான இந்தி(ய) ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளும் தமிழ் சமுதாயத்தில் இன்றும் இழையோடிக் கொண்டுதானிருக்கின்றன.
மூன்று தெரிவுகள்:
இந்தியத் தேசியம் மற்றும் தமிழ்த் தேசியம் ஆகியவற்றின் ஊடாடுதலைப் பொருத்தவரை, தமிழர்களாகிய நம் முன்னால் மூன்று தெரிவுகள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். ஒன்று, இப்போது இருப்பது போலவே காலத்தை ஓட்டுவது. இந்தித் திணிப்பு, நதிநீர் பங்கீடு, கட்சத் தீவு, மூன்று தமிழர் தூக்கு, மீனவர் படுகொலை, கூடங்குளம்-கல்பாக்கம் அணுஉலைகள், தமிழக வளம் அழிப்பு, தமிழர் நலம் ஒழிப்பு என நாம் முறையிட்டுக் கொண்டே இருப்போம்; தில்லி தான் நினைத்ததை செய்துகொண்டேயிருக்கும். நாம் கையைப் பிசைந்துகொண்டு கருவிக் கொண்டேயிருப்போம்; தில்லி நம்மை சந்தேகக் கண்ணோடு பார்த்துக்கொண்டே சங்கடங்களுக்கு உள்ளாக்கிக் கொண்டேயிருக்கும். தமிழ்க் கடலுக்கு அப்பால் நமது தொப்புள்கொடி உறவுகள் கொல்லப்படும் போது கூட, தில்லி சிவசங்கர மேனன்களையும், நாராயணன்களையும் தான் அனுப்புமே தவிர, நம்மவரைப் பங்கேற்க அனுமதிக்காது. தனது அண்மைக் கட்டுரை ஒன்றில், புகழேந்தி தங்கராஜ் அவர்கள் கேட்கிறார்:
ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்கள் கொல்லப்பட்டதற்கு எங்கள் காந்தி தேசமான இந்தியா காரணமாய் இருந்திருக்கிறதே - என்று இங்கேயிருக்கிற நாம் கோபப்படுகிறோம். தமிழினப் படுகொலையைத் தடுத்துநிறுத்தத் தவறிய தலைவர்களைக் கண்டிக்கிறோம். இந்த உண்மை தெரிந்தும், ஒன்றுமே தெரியாதவர்களைப் போல், புலிகளைத் தோற்கடித்ததற்காகத்தான் நீங்கள் கோபப்படுகிறீர்கள் - என்று ஆட்சியிலிருப்பவர்கள் போக்குக் காட்டினால், ஒன்றரை லட்சம் உயிர்களை மதிக்காத கிராதகர்களின் பிடியில்தான் இந்தியா இன்னும் இருக்கிறதா . என்கிற வேதனையையும் வெறுப்பையும் தவிர தமிழினத்துக்கு வேறெது மிஞ்சும்? எங்களிடையே இப்படியெல்லாம் விரோதத்தை விதைப்பவர்களால், ஒருமைப்பாட்டை எப்படி அறுவடை செய்ய முடியும்?:
நாம் நடத்தப்படும் விதம் பற்றி நமக்குள் மனக்குமுறல் இருந்தாலும், நமது பலத்தை அதிகரிக்கவோ, நமது நிலையை உறுதியாக்கிக் கொள்ளவோ நாம் எதுவும் செய்யவில்லை. நம்மவரை மதிக்கவோ, விரும்பவோ எந்த முயற்சிகளையும் நாம் இன்னும் எடுக்கவில்லை. தமிழர் என்று ஒப்புக்குச் சொல்லிக்கொண்டாலும், உள்ளுக்குள் சாதி, மதம் பார்த்து வேற்றுமையைக் கண்போலக் காத்து வருகிறோம். “இரண்டு டம்ளர்” வைத்துக்கொண்டு “நான் இதில் குடிக்கிறேன், அவன் அதில் குடிக்கட்டும்” என்று தண்ணீர் குடிப்பதில்கூட சாதி பார்க்கிறோம். குறிப்பிட்ட சாதியினர் எங்கள் அருகே இருந்தால், காட்டில் போய் வாழ்ந்தாலும் வாழ்வோமே தவிர, அவர்களோடு வாழமாட்டோம் என்று குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறோம். நமது தாழ் நிலைக்கு நாம் பொறுப்பேற்காமல், இந்தி பேசுபவனையும், இந்துத்துவாகாரனையும், மலையாளியையும் காட்டியே காலம் தள்ளுகிறோம்.
பெரும்பான்மையான நம் அரசியல் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள் தமிழ் சமூகத்தின் எந்தப் பிரச்சினையிலும் ஒன்றுபட்டுப் போராட முன்வர மாட்டார்கள். தமிழக முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்து வெறுமனே ஒரு வணக்கம்கூட சொல்லிக்கொள்ள மாட்டார்கள் நம் இன்பத் தமிழ் நாட்டிலே. மக்கள் பிரச்சினைகளைவிட தங்கள் அகங்காரம்தான் அதிமுக்கியம் வாய்ந்தது என்று நடந்து கொள்வார்கள் அவர்கள் எல்லாம். நாமும்கூட திராவிடத் தேசியம், தமிழ்த் தேசியம் என்று அர்த்தமின்றி, அவசியமின்றி சண்டையிட்டுக் கொள்வோம். கேரளாவைப் பாருங்கள்; முக்கியமான பிரச்சினைகளில் எல்லாம் அங்குள்ள கட்சிகள், தலைவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்டுகளும், காவிகளும் ஒரே அணியில் ஒன்று திரள்வார்கள். தமிழகத்திலோ காவிரி நதிநீர்ப் பிரச்சினை என்றால் காவிரிப் படுகை மக்கள் போராடட்டும்; பாலாறுப் பிரச்சினை என்றால், வட தமிழக மக்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம். நாம் நம்மை இன்னும் தமிழர்களாய் பார்க்கத் துவங்கவில்லை. தமிழகம் தழுவிய நோக்கு, பார்வை நமக்கு இன்னும் வரவில்லை.
அதே போல இந்தியத் தேசத்தின் அதிகாரக்குவிப்புக் கட்டமைப்பை எதிர்க்கும் நாம், மாநில அளவில் அதே மையப்படுத்தல் போக்கையும், சிறுபான்மை மறுப்புப்போக்கையுமே கடைபிடிக்கிறோம். “எங்களுக்கு அதிக உரிமை தா” என்று தில்லியிடம் கோரும் நாம், மாநில அரசின் கீழ் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எக்காரணம் கொண்டும் எந்த உரிமையும் கொடுக்க முன்வரமாட்டோம். எங்களுக்குத் தன்னாட்சி வேண்டும் என்று கோரும்போது, எங்கள் கீழே இருக்கிறவர்களுக்கு எந்த தன்னாட்சியும் கொடுக்க மாட்டோம் என்பதுதான் நமது முரண்பாடான நிலை. வீட்டிலே மனைவிக்கும், குழந்தைகளுக்கும் உரிமைகள் கொடுக்க மாட்டோம். ஊரிலே பெண்களுக்கு, இளைஞர்களுக்கு எந்த அங்கீகாரமோ அல்லது அதிகாரமோ கொடுக்க மாட்டோம். ஆனால் இந்திக்காரனை மட்டும் எப்போதும், எதற்கும் திட்டுவோம். இப்படிப்பட்ட முரண்பாடுகளோடு, பொறுப்பற்றத் தன்மையுடன், மற்றவர்களைப் பழித்து, தன்னை அழித்துக்கொண்டு வாழ்ந்து முடிப்பது நம் முன்னிருக்கும் ஒரு தெரிவு. “அடிக்கிற வழியில் போகவில்லை என்றால், போகிற வழியில் அடிப்போம்” என்கிற இந்த நிலை முற்றிலும் புறந்தள்ளப் படவேண்டியது.
இரண்டாவது தெரிவு இந்தியாவோடு ஒட்டோ, உறவோ வேண்டாம், எங்களுக்கு தனிநாடு –தமிழ்நாடு- கொடு எனக்கேட்பது. எடுத்துக்காட்டாக, பாவலரேறு பெருஞ்சித்திரனார் கடைசிவரை இந்த நிலையில் மிக உறுதியாக இருந்தார். “தமிழக விடுதலைதான் நம் முழு மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர்கள் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்” எனும் முழக்கம் அவர் நடத்திய தென்மொழி மாத இதழின் முன் பக்கத்தில் ஓங்கி ஒலித்தது. தன்னுடைய தனிநாடு நிலையை ஆணித்தரமாக அவர் எடுத்துவைத்தார்:
பெரும்பான்மையான நம் அரசியல் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள் தமிழ் சமூகத்தின் எந்தப் பிரச்சினையிலும் ஒன்றுபட்டுப் போராட முன்வர மாட்டார்கள். தமிழக முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்து வெறுமனே ஒரு வணக்கம்கூட சொல்லிக்கொள்ள மாட்டார்கள் நம் இன்பத் தமிழ் நாட்டிலே. மக்கள் பிரச்சினைகளைவிட தங்கள் அகங்காரம்தான் அதிமுக்கியம் வாய்ந்தது என்று நடந்து கொள்வார்கள் அவர்கள் எல்லாம். நாமும்கூட திராவிடத் தேசியம், தமிழ்த் தேசியம் என்று அர்த்தமின்றி, அவசியமின்றி சண்டையிட்டுக் கொள்வோம். கேரளாவைப் பாருங்கள்; முக்கியமான பிரச்சினைகளில் எல்லாம் அங்குள்ள கட்சிகள், தலைவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்டுகளும், காவிகளும் ஒரே அணியில் ஒன்று திரள்வார்கள். தமிழகத்திலோ காவிரி நதிநீர்ப் பிரச்சினை என்றால் காவிரிப் படுகை மக்கள் போராடட்டும்; பாலாறுப் பிரச்சினை என்றால், வட தமிழக மக்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம். நாம் நம்மை இன்னும் தமிழர்களாய் பார்க்கத் துவங்கவில்லை. தமிழகம் தழுவிய நோக்கு, பார்வை நமக்கு இன்னும் வரவில்லை.
அதே போல இந்தியத் தேசத்தின் அதிகாரக்குவிப்புக் கட்டமைப்பை எதிர்க்கும் நாம், மாநில அளவில் அதே மையப்படுத்தல் போக்கையும், சிறுபான்மை மறுப்புப்போக்கையுமே கடைபிடிக்கிறோம். “எங்களுக்கு அதிக உரிமை தா” என்று தில்லியிடம் கோரும் நாம், மாநில அரசின் கீழ் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எக்காரணம் கொண்டும் எந்த உரிமையும் கொடுக்க முன்வரமாட்டோம். எங்களுக்குத் தன்னாட்சி வேண்டும் என்று கோரும்போது, எங்கள் கீழே இருக்கிறவர்களுக்கு எந்த தன்னாட்சியும் கொடுக்க மாட்டோம் என்பதுதான் நமது முரண்பாடான நிலை. வீட்டிலே மனைவிக்கும், குழந்தைகளுக்கும் உரிமைகள் கொடுக்க மாட்டோம். ஊரிலே பெண்களுக்கு, இளைஞர்களுக்கு எந்த அங்கீகாரமோ அல்லது அதிகாரமோ கொடுக்க மாட்டோம். ஆனால் இந்திக்காரனை மட்டும் எப்போதும், எதற்கும் திட்டுவோம். இப்படிப்பட்ட முரண்பாடுகளோடு, பொறுப்பற்றத் தன்மையுடன், மற்றவர்களைப் பழித்து, தன்னை அழித்துக்கொண்டு வாழ்ந்து முடிப்பது நம் முன்னிருக்கும் ஒரு தெரிவு. “அடிக்கிற வழியில் போகவில்லை என்றால், போகிற வழியில் அடிப்போம்” என்கிற இந்த நிலை முற்றிலும் புறந்தள்ளப் படவேண்டியது.
இரண்டாவது தெரிவு இந்தியாவோடு ஒட்டோ, உறவோ வேண்டாம், எங்களுக்கு தனிநாடு –தமிழ்நாடு- கொடு எனக்கேட்பது. எடுத்துக்காட்டாக, பாவலரேறு பெருஞ்சித்திரனார் கடைசிவரை இந்த நிலையில் மிக உறுதியாக இருந்தார். “தமிழக விடுதலைதான் நம் முழு மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர்கள் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்” எனும் முழக்கம் அவர் நடத்திய தென்மொழி மாத இதழின் முன் பக்கத்தில் ஓங்கி ஒலித்தது. தன்னுடைய தனிநாடு நிலையை ஆணித்தரமாக அவர் எடுத்துவைத்தார்:
"இந்தியன் இந்து என்ற அடையாளம் இருக்கும் வரை தமிழர்களும் இந்தியனாகவும் இந்துவாகவும் இருக்கவேண்டும். தமிழினமும் தமிழ் மொழியும் இந்தியன் இந்து என்ற வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய இந்தியன் இந்து என்ற அடையாளத்திலிருந்தும் பிடிப்புகளிலிருந்தும் தமிழன் மீளாதவரை, தமிழ் மொழி தூய்மையுறாது, தமிழினம் தலைதூக்காது, தமிழர் நாடு அடையவே அடைய முடியாது. ஆகவே நம் தமிழர்கள் இந்து மதத்திலிருந்தும் இந்தியன் என்ற அடையாளத்திலிருந்தும் விலகவேண்டும்."
பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றே தமிழ் மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுகிறார்:
வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்
போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்!
சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;
சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்
போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே!
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே!
ஈழப் பிரச்சினையில் இந்தியா கடைபிடிக்கும் இரண்டுங்கெட்டான் நிலைப் பற்றி பேசும் புகழேந்தி தங்கராஜ் தெளிவாக வாதிடுகிறார்:
"விடுதலைப் புலிகளுக்குத் தோல்வி - தமிழ் ஈழத்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்றெல்லாம் புருடா விடுவதன் மூலம் சிங்கள மிருகங்களைக் காப்பாற்ற தொடர்ந்து முயல்வதாக இருந்தால், வெளிப்படையாக அதை அறிவித்துவிடுங்கள். உங்களுடனான உறவை ஒட்டுமொத்தமாகத் துண்டிப்பதென்று நாங்களும் முடிவெடுத்து விடுகிறோம். சட்டத்தையும் நியாயத்தையும் வளைப்பதென்று நீங்கள் முடிவெடுக்கலாம்... அந்த இரண்டையும் நிமிர்த்த வேண்டுமென்று நாங்கள் முடிவெடுக்கக் கூடாதா? தடை.. எச்சரிக்கை... என்றெல்லாம் சீன் போடாமல், எது சௌகரியம் என்பதை உடனடியாகத் தீர்மானியுங்கள்."
தனிப்பட்ட அறிஞர்கள், செயல்வீரர்கள் போல, பல தமிழ் அமைப்புக்களும், இயக்கங்களும் தனிநாடு கோரிக்கையை முன்வைக்கின்றன. முன்னாள் நக்சலைட் அமைப்பினரான புலவர் கலியபெருமாள், தமிழரசன், அன்பழகன் (எ) சுந்தரம் போன்றோர் 1980களில் ‘தமிழ் நாடு விடுதலைப் படை’ எனும் ஒரு வன்முறை இயக்கத்தைக் கட்டமைத்து தனிநாடு பெற முயன்றனர். பின்னர் 2002-ம் ஆண்டு அந்த அமைப்பு தடை செய்யப்பட்டபோது, பலர் ‘தமிழர் விடுதலை இயக்கம்’ என்ற அமைப்பின்கீழ் பணியாற்றினர். வன்முறையிலோ, பயங்கரவாதத்திலோ நம்பிக்கையற்ற பல சனநாயக அமைப்புகளும் கூட தனிநாடு கோரிக்கையை முன்வைக்கின்றன. “இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு” அமைப்பதே தமது இலக்கு என தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்துகிறது. தமிழர் களம் அமைப்பு, "தமிழ் இனத்தின் விடுதலை என்பதை நோக்கும்போது பண்பாட்டுத் தளங்கள், இலக்கியம், மொழி, உள்ளம் உட்பட்ட பொருளியல் சமூகவியல் அரசியல் விடுதலையாகத்தான் நோக்க வேண்டும்” என வாதிடுகிறது.
ஆனால் விடுதலைக்குத் தன்னை அணியமாக்கிக் கொள்ளாத ஓர் இனத்தை சுபிட்சத்துக்கு அழைத்துச் செல்வது எப்படி? ஒரு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு தேசிய இனம் தான் விரும்பினால் பிரிந்து போகவும், தனது அரசியல் சுயநிர்ணய உரிமையை தக்கவைத்துக் கொள்ளவும் முழு உரிமை கொண்டிருக்கிறது, கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அந்த அமைப்புக்குப் பெயர் கூட்டமைப்பு அல்ல, கொத்தடிமைத்தனம். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இம்மாதிரியான அடிமைத்தனத்துக்கு ஆட்படமுடியாது. கூட்டுக் குடும்பத்தில், கூடிவாழ்வதில் பல சிரமங்கள், தடைகள், இக்கட்டுகள் இருக்கின்றன என்பது உண்மை. இந்தக் கூட்டமைப்பில் பிரச்சினை என்றால், எப்படி மற்றவருக்கு துன்பம் தராமல், உண்மையில் சொல்லப்போனால், இன்பம் தந்து, தனது நலன்களையும் காத்துக் கொள்வது என்று சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும். அதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே தனிநாடு எனும் இரண்டாவது நிலை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுதான்.
இந்தியா என்பது வரலாற்றின் துவக்கம் முதலே இருந்து வருவது போலவும், அதைக் கேள்விக்குள்ளாக்குவது பெரும்பாவம் என்பது போலவும் சிந்திப்பது, பேசுவது வேடிக்கையானது. ஆனால் “தமிழ்த் தேசியம்--இந்திய தேசியம்” உறவு என்பது மிகவும் நுட்பமான, சிக்கலான ஒரு பிரச்சினை. இந்தப் பிரச்சினையின் ஆழ, அகலங்களைப் புரிந்து கொள்ளாமல் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ எனக் கருத்துச் சொல்வதும், செயல்படுவதும் அபத்தமானது, ஆபத்தானது. ஒன்றுபட்ட இலங்கை வேண்டாமென்று சொல்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. நாம் ஈழத் தமிழர்கள் போலக் கொடுமைப் படுத்தப்படவில்லை, கொல்லப்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆனாலும் நாம் பிரித்தாளப்படுகிறோம், வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஈழத் தமிழர் பிரச்சினையும் இப்படித்தான் ஆரம்பித்தது என்பதும் நமக்குத் தெரியும்.
தனிமரம் தோப்பாகாது; தனிநபர் தீவாக இரார். தனிநாடு அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது என்பதை அறிவோம். தனிநாடு வாங்கிவிட்டாலும், தமிழகத்தை அப்படியே வெட்டி எடுத்துக் கொண்டுபோய் ஆஸ்திரேலியா அருகே வைத்துவிட முடியாது. நமதருகே உள்ள மக்களோடு இணைந்து பணியாற்றியே தீர வேண்டும்.
ஆனால் விடுதலைக்குத் தன்னை அணியமாக்கிக் கொள்ளாத ஓர் இனத்தை சுபிட்சத்துக்கு அழைத்துச் செல்வது எப்படி? ஒரு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு தேசிய இனம் தான் விரும்பினால் பிரிந்து போகவும், தனது அரசியல் சுயநிர்ணய உரிமையை தக்கவைத்துக் கொள்ளவும் முழு உரிமை கொண்டிருக்கிறது, கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அந்த அமைப்புக்குப் பெயர் கூட்டமைப்பு அல்ல, கொத்தடிமைத்தனம். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இம்மாதிரியான அடிமைத்தனத்துக்கு ஆட்படமுடியாது. கூட்டுக் குடும்பத்தில், கூடிவாழ்வதில் பல சிரமங்கள், தடைகள், இக்கட்டுகள் இருக்கின்றன என்பது உண்மை. இந்தக் கூட்டமைப்பில் பிரச்சினை என்றால், எப்படி மற்றவருக்கு துன்பம் தராமல், உண்மையில் சொல்லப்போனால், இன்பம் தந்து, தனது நலன்களையும் காத்துக் கொள்வது என்று சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும். அதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே தனிநாடு எனும் இரண்டாவது நிலை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுதான்.
இந்தியா என்பது வரலாற்றின் துவக்கம் முதலே இருந்து வருவது போலவும், அதைக் கேள்விக்குள்ளாக்குவது பெரும்பாவம் என்பது போலவும் சிந்திப்பது, பேசுவது வேடிக்கையானது. ஆனால் “தமிழ்த் தேசியம்--இந்திய தேசியம்” உறவு என்பது மிகவும் நுட்பமான, சிக்கலான ஒரு பிரச்சினை. இந்தப் பிரச்சினையின் ஆழ, அகலங்களைப் புரிந்து கொள்ளாமல் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ எனக் கருத்துச் சொல்வதும், செயல்படுவதும் அபத்தமானது, ஆபத்தானது. ஒன்றுபட்ட இலங்கை வேண்டாமென்று சொல்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. நாம் ஈழத் தமிழர்கள் போலக் கொடுமைப் படுத்தப்படவில்லை, கொல்லப்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆனாலும் நாம் பிரித்தாளப்படுகிறோம், வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஈழத் தமிழர் பிரச்சினையும் இப்படித்தான் ஆரம்பித்தது என்பதும் நமக்குத் தெரியும்.
தனிமரம் தோப்பாகாது; தனிநபர் தீவாக இரார். தனிநாடு அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது என்பதை அறிவோம். தனிநாடு வாங்கிவிட்டாலும், தமிழகத்தை அப்படியே வெட்டி எடுத்துக் கொண்டுபோய் ஆஸ்திரேலியா அருகே வைத்துவிட முடியாது. நமதருகே உள்ள மக்களோடு இணைந்து பணியாற்றியே தீர வேண்டும்.
யதார்த்தம் பெரிதாக மாறிவிடப் போவதில்லை. இந்தியாவில் வெள்ளையன் போய் கொள்ளையன் வந்தது போல, தனிநாடானத் தமிழ்நாட்டில் இந்திக்காரன் போய் ஓர் ஈட்டிக்காரன் வந்தால் என்ன செய்வது? இந்தியாவிடமிருந்து மதத்தின் பெயரால் பிரிந்த பாகிஸ்தானும், அவர்களிடமிருந்து மொழியின் பெயரால் பிரிந்த வங்காளதேசமும் இன்னும் தத்தளித்துக் கொண்டுதானிருக்கின்றன.
இந்த நிலையில் நமது நிலை என்னவாக இருக்க முடியும்? ஏகாதிபத்தியம், அடக்குமுறை எந்த உருவத்தில் வந்தாலும் அதை எதிர்ப்பது, தட்டிக்கேட்பது எனும் நமது இலட்சியக் கொள்கையை உறுதியாக்கிக் கொள்வோம். ஒரு தொடர் கருத்துப் பரிமாற்றத்தில் சிரத்தையுடன் பங்கேற்போம். ஒரு தாய்-மகன் (தாய்நாடு-“நீரதன் புதல்வர்”) சொந்தம் போல பாசம்/கடப்பாடு என்ற அடிப்படையில் அல்லாமல், மைய-மாநில உறவை கணவன்-மனைவி உறவாக கடமை/உரிமை அடிப்படையில் பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும். மணமுறிவு எனும் ஆபத்து இருந்தாலும், அல்லது இருப்பதால், ஒருவரையொருவர் அன்புடனும், மரியாதையுடனும் நடத்துகிறோம்.
இந்தக் குழப்பமான, சிக்கலான நிலையில் உடனடியாக தனிநாடு கோருவது என்பது சற்று விவாதிக்கப்பட வேண்டிய விடயம். “எண்ணித் துணிக கருமம்” என்பதுதான் இப்போது நமது நிலையாக இருக்க வேண்டும், இருக்க முடியும் என்பது எனது எண்ணம். இந்தப் பிரச்சினை குறித்து உகந்த முடிவெடுக்க, வள்ளுவர் அற்புதமாக உதவுகிறார்:
இந்த நிலையில் நமது நிலை என்னவாக இருக்க முடியும்? ஏகாதிபத்தியம், அடக்குமுறை எந்த உருவத்தில் வந்தாலும் அதை எதிர்ப்பது, தட்டிக்கேட்பது எனும் நமது இலட்சியக் கொள்கையை உறுதியாக்கிக் கொள்வோம். ஒரு தொடர் கருத்துப் பரிமாற்றத்தில் சிரத்தையுடன் பங்கேற்போம். ஒரு தாய்-மகன் (தாய்நாடு-“நீரதன் புதல்வர்”) சொந்தம் போல பாசம்/கடப்பாடு என்ற அடிப்படையில் அல்லாமல், மைய-மாநில உறவை கணவன்-மனைவி உறவாக கடமை/உரிமை அடிப்படையில் பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும். மணமுறிவு எனும் ஆபத்து இருந்தாலும், அல்லது இருப்பதால், ஒருவரையொருவர் அன்புடனும், மரியாதையுடனும் நடத்துகிறோம்.
இந்தக் குழப்பமான, சிக்கலான நிலையில் உடனடியாக தனிநாடு கோருவது என்பது சற்று விவாதிக்கப்பட வேண்டிய விடயம். “எண்ணித் துணிக கருமம்” என்பதுதான் இப்போது நமது நிலையாக இருக்க வேண்டும், இருக்க முடியும் என்பது எனது எண்ணம். இந்தப் பிரச்சினை குறித்து உகந்த முடிவெடுக்க, வள்ளுவர் அற்புதமாக உதவுகிறார்:
அழிவதூம் ஆவதூம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
தனித் தமிழ்நாடு கோரிக்கை நிறைவேறும்போது அழிவது எவ்வளவு, ஆவது எவ்வளவு என்று கணக்கிடுவது போல “வழி பயக்கும் ஊதியம்” பற்றி நாம் ஆழமாக சிந்தித்தாக வேண்டும். காஷ்மீரத்து மக்கள் படும் துன்பங்களும், காலிஸ்தானிகள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் பட்ட இன்னல்களும் நினைவுக்கு வருகின்றன. இந்தியத் தேசியம் அவ்வளவு எளிதில் நம்மைப் பிரிந்து போகவிடாது. அப்படியே நாம் பிரிந்து போக எத்தனித்தால் நம்மை அடக்கி ஒடுக்கவும், ஒழிக்கவும் தயங்காது. இந்த அடக்குமுறைக்கு அஞ்சி, வன்முறைக்கு பயந்து ஒதுங்கி வாழ்வோம் என்பதல்ல எனது வாதம். தனிநாடு அடையும் முயற்சி ஏராளமான மக்களைக் கொன்று குவிக்கும்போது, எண்ணிறந்த இன்னல்களை நம் மக்களுக்கு இழைக்கும்போது, சுபிட்சமான வாழ்வு எனும் முடிவும், கொன்றொழிக்கப்படும் வழிமுறையும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றனவே என்பதுதான் எனது ஆதங்கம். ஈழத்தில் நிலவுவது போன்ற ஓர் அச்சுறுத்தல், அத்துமீறல், அடக்குமுறை இங்கே நடக்காதபோது, மேற்குறிப்பிட்டத் துன்பங்களை, தியாகங்களை, சமரை, சாவை, சங்கடங்களை எப்படி நியாயப்படுத்த முடியும்? எனவே மூன்றாவது தெரிவாக, எங்கள் வாழ்வை நாங்களே தீர்மானிக்கிறோம்; அதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றால், நாங்கள் விடை பெறுகிறோம் என உறுதி பூணலாம். இன்றையச் சூழலில் “தன்னாட்சி அல்லது தனியாட்சி” என்ற முழக்கத்தை வைத்து செயல்படலாம்.
இன்றைய நிலைமை:
தெற்காசியாவில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதும், தற்போது நிலவுவது இடைக்கால, தற்காலிக ஏற்பாடுதான் என்பதும் வெள்ளிடைமலை. எடுத்துக்காட்டாக, வங்காளிகள், பஞ்சாபிகள், காஷ்மீரிகள், தமிழர்கள் வெவ்வேறு நாட்டு குடிமக்களாகப் பிரிந்திருக்கிறோம். எந்தத் தேசிய இனமும் அங்கீகரிக்கப் படவுமில்லை, அவர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்படவுமில்லை. தெற்காசிய மக்களின் நிலைத்து நிற்றல் (survival), சுகவாழ்வு (wellbeing), அடையாளம் (identity), சுதந்திரம் (freedom) அனைத்தையும் செயற்கையான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற கற்பனை தேசங்கள் கவனித்து வருகின்றன. ஒருவித நிலையற்றத் தன்மைதான் நிலவுகிறது.
இதற்கு மாற்று என்னவாக இருக்கும் என்பது பற்றி நாம் சிந்தித்து ஆகவேண்டும். சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ஜப்பான் நாட்டின் கியோட்டோ நகரில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் ஓர் இளைஞனுக்கே உரிய இலட்சிய தாகத்துடன் நான் முன்வைத்த கருத்து என் நினைவுக்கு வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளை தேசிய இனங்கள் அடிப்படையில் பிரிப்பது; பின்னர் அவற்றை ஒரு கூட்டமைப்பாக (federation) இணைப்பது என்பதுதான் அது. ஒவ்வொரு தேசிய இனமும் தன் நிலைத்து நிற்றல் (survival), சுகவாழ்வு (wellbeing), அடையாளம் (identity), சுதந்திரம் (freedom) அனைத்தையும் கவனித்துக் கொள்ளட்டும். எல்லோருமாகச் சேர்ந்து தெற்காசியப் பேரவை (confederation) ஒன்றை நிறுவி ஒட்டுமொத்த பாதுகாப்பை (defense), நிதி நிர்வாகத்தை (finance), நல்வாழ்வை மேலாண்மை செய்து கொள்ளலாம். இப்படிச் செய்து கொள்ளும்போது காஷ்மீரம், காலிஸ்தான், ஈழம் எனப் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும். குறைப் பிரசவங்களான இன்றையத் தேசங்கள் மாற்றியமைக்கப்பட்டு, நிறைகள் மிக்க நிம்மதி தருகின்ற குட்டிக் குடியரசுகள் பிறக்கும். ஆயுதப் போட்டி, படைபலப் போட்டி, இராணுவச் செலவு குறைக்கப்பட்டு, மக்களின் வளர்ச்சி, தன்னிறைவு முன்னிறுத்தப்படும். ஏழ்மையும், வறுமையும் மாறி ஏற்றமும், பெருமையும் பிறக்கும்.
அந்த உயரிய நிலை வரும் வரை என்ன செய்வது? இந்தியத் தேசியம் என்று எதுவும் இல்லை, இந்தியத் தேசத்தைப் பற்றித்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது தெளிவு. தமிழ்த் தேசியம், இந்தியத் தேசம் இரண்டும் மூச்சும், பேச்சும் போன்றவை எனக் கொள்வோம். மூச்சின்றி பேச்சில்லை; ஆனால் பேச்சில்லாமல் மூச்சு விட முடியும். மூச்சை நிறுத்திக் கொண்டு உயிர் வாழ முடியாது; ஆனால் பேச்சை நிறுத்திக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம். மூச்சு உயிரின் அங்கம், அடிப்படையானது; ஆனால் பேச்சு உயிர்வாழ்வின் பல அம்சங்களுள் ஒன்று. ஆழமாக மூச்சு விட்டால், அர்த்தமுள்ள பேச்சு வரும்; மேலோட்டமாக மூச்சு விட்டால், நிலை தடுமாறி வீழ்ந்து விடுவோம்.
தமிழர்களாகிய நம்மிடையே சில விடயங்களை நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. நம்மிடையே நிலவும் ஒற்றுமையின்மை; சாதி, மத வேறுபாடுகள்; இயற்கை வளங்களைப் பேணாமை; நாம் எங்கேப் போகிறோம், நமக்கு என்ன வேண்டும் என்பவற்றை அறியாமை; அவற்றை அறிய முயற்சி செய்யாமை --- போன்றவை நமது உடனடி கவனத்தைப் பெறவேண்டும். நமக்குள்ளும், நம்மோடிருப்பவரோடும் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோம். தெளிவாகச் சொல்வோம். இந்தியத் தேசம் எனும் கூட்டுக்குடும்ப வீட்டின் எங்கள் பகுதியை நாங்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து உங்களோடிருந்து வாழ்கிறோமா, அல்லது இடையே குறுக்குச் சுவர் கட்டுகிறோமா என்பது உங்கள் கைகளில் இருக்கிறது. விட்டுக்கொடுத்து வாழ்வதா அல்லது கட்டுப்படுத்தி உறவை அழிப்பதா என்பதை முடிவு செய்யவேண்டியது நீங்கள். கேள்வி நாங்கள் பிரிவினை வேண்டுகிறோமா என்பதல்ல; நீங்கள் எங்களை நிம்மதியாக, கௌரவமாக, உரிமைகளுடன், மாண்புகளுடன் இங்கே வாழ அனுமதிக்கிறீர்களா என்பதுதான்.
உதவிய கட்டுரைகள்:
ஊதியமும் சூழ்ந்து செயல்.
தனித் தமிழ்நாடு கோரிக்கை நிறைவேறும்போது அழிவது எவ்வளவு, ஆவது எவ்வளவு என்று கணக்கிடுவது போல “வழி பயக்கும் ஊதியம்” பற்றி நாம் ஆழமாக சிந்தித்தாக வேண்டும். காஷ்மீரத்து மக்கள் படும் துன்பங்களும், காலிஸ்தானிகள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் பட்ட இன்னல்களும் நினைவுக்கு வருகின்றன. இந்தியத் தேசியம் அவ்வளவு எளிதில் நம்மைப் பிரிந்து போகவிடாது. அப்படியே நாம் பிரிந்து போக எத்தனித்தால் நம்மை அடக்கி ஒடுக்கவும், ஒழிக்கவும் தயங்காது. இந்த அடக்குமுறைக்கு அஞ்சி, வன்முறைக்கு பயந்து ஒதுங்கி வாழ்வோம் என்பதல்ல எனது வாதம். தனிநாடு அடையும் முயற்சி ஏராளமான மக்களைக் கொன்று குவிக்கும்போது, எண்ணிறந்த இன்னல்களை நம் மக்களுக்கு இழைக்கும்போது, சுபிட்சமான வாழ்வு எனும் முடிவும், கொன்றொழிக்கப்படும் வழிமுறையும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றனவே என்பதுதான் எனது ஆதங்கம். ஈழத்தில் நிலவுவது போன்ற ஓர் அச்சுறுத்தல், அத்துமீறல், அடக்குமுறை இங்கே நடக்காதபோது, மேற்குறிப்பிட்டத் துன்பங்களை, தியாகங்களை, சமரை, சாவை, சங்கடங்களை எப்படி நியாயப்படுத்த முடியும்? எனவே மூன்றாவது தெரிவாக, எங்கள் வாழ்வை நாங்களே தீர்மானிக்கிறோம்; அதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றால், நாங்கள் விடை பெறுகிறோம் என உறுதி பூணலாம். இன்றையச் சூழலில் “தன்னாட்சி அல்லது தனியாட்சி” என்ற முழக்கத்தை வைத்து செயல்படலாம்.
இன்றைய நிலைமை:
தெற்காசியாவில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதும், தற்போது நிலவுவது இடைக்கால, தற்காலிக ஏற்பாடுதான் என்பதும் வெள்ளிடைமலை. எடுத்துக்காட்டாக, வங்காளிகள், பஞ்சாபிகள், காஷ்மீரிகள், தமிழர்கள் வெவ்வேறு நாட்டு குடிமக்களாகப் பிரிந்திருக்கிறோம். எந்தத் தேசிய இனமும் அங்கீகரிக்கப் படவுமில்லை, அவர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்படவுமில்லை. தெற்காசிய மக்களின் நிலைத்து நிற்றல் (survival), சுகவாழ்வு (wellbeing), அடையாளம் (identity), சுதந்திரம் (freedom) அனைத்தையும் செயற்கையான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற கற்பனை தேசங்கள் கவனித்து வருகின்றன. ஒருவித நிலையற்றத் தன்மைதான் நிலவுகிறது.
இதற்கு மாற்று என்னவாக இருக்கும் என்பது பற்றி நாம் சிந்தித்து ஆகவேண்டும். சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ஜப்பான் நாட்டின் கியோட்டோ நகரில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் ஓர் இளைஞனுக்கே உரிய இலட்சிய தாகத்துடன் நான் முன்வைத்த கருத்து என் நினைவுக்கு வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளை தேசிய இனங்கள் அடிப்படையில் பிரிப்பது; பின்னர் அவற்றை ஒரு கூட்டமைப்பாக (federation) இணைப்பது என்பதுதான் அது. ஒவ்வொரு தேசிய இனமும் தன் நிலைத்து நிற்றல் (survival), சுகவாழ்வு (wellbeing), அடையாளம் (identity), சுதந்திரம் (freedom) அனைத்தையும் கவனித்துக் கொள்ளட்டும். எல்லோருமாகச் சேர்ந்து தெற்காசியப் பேரவை (confederation) ஒன்றை நிறுவி ஒட்டுமொத்த பாதுகாப்பை (defense), நிதி நிர்வாகத்தை (finance), நல்வாழ்வை மேலாண்மை செய்து கொள்ளலாம். இப்படிச் செய்து கொள்ளும்போது காஷ்மீரம், காலிஸ்தான், ஈழம் எனப் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும். குறைப் பிரசவங்களான இன்றையத் தேசங்கள் மாற்றியமைக்கப்பட்டு, நிறைகள் மிக்க நிம்மதி தருகின்ற குட்டிக் குடியரசுகள் பிறக்கும். ஆயுதப் போட்டி, படைபலப் போட்டி, இராணுவச் செலவு குறைக்கப்பட்டு, மக்களின் வளர்ச்சி, தன்னிறைவு முன்னிறுத்தப்படும். ஏழ்மையும், வறுமையும் மாறி ஏற்றமும், பெருமையும் பிறக்கும்.
அந்த உயரிய நிலை வரும் வரை என்ன செய்வது? இந்தியத் தேசியம் என்று எதுவும் இல்லை, இந்தியத் தேசத்தைப் பற்றித்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது தெளிவு. தமிழ்த் தேசியம், இந்தியத் தேசம் இரண்டும் மூச்சும், பேச்சும் போன்றவை எனக் கொள்வோம். மூச்சின்றி பேச்சில்லை; ஆனால் பேச்சில்லாமல் மூச்சு விட முடியும். மூச்சை நிறுத்திக் கொண்டு உயிர் வாழ முடியாது; ஆனால் பேச்சை நிறுத்திக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம். மூச்சு உயிரின் அங்கம், அடிப்படையானது; ஆனால் பேச்சு உயிர்வாழ்வின் பல அம்சங்களுள் ஒன்று. ஆழமாக மூச்சு விட்டால், அர்த்தமுள்ள பேச்சு வரும்; மேலோட்டமாக மூச்சு விட்டால், நிலை தடுமாறி வீழ்ந்து விடுவோம்.
தமிழர்களாகிய நம்மிடையே சில விடயங்களை நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. நம்மிடையே நிலவும் ஒற்றுமையின்மை; சாதி, மத வேறுபாடுகள்; இயற்கை வளங்களைப் பேணாமை; நாம் எங்கேப் போகிறோம், நமக்கு என்ன வேண்டும் என்பவற்றை அறியாமை; அவற்றை அறிய முயற்சி செய்யாமை --- போன்றவை நமது உடனடி கவனத்தைப் பெறவேண்டும். நமக்குள்ளும், நம்மோடிருப்பவரோடும் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோம். தெளிவாகச் சொல்வோம். இந்தியத் தேசம் எனும் கூட்டுக்குடும்ப வீட்டின் எங்கள் பகுதியை நாங்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து உங்களோடிருந்து வாழ்கிறோமா, அல்லது இடையே குறுக்குச் சுவர் கட்டுகிறோமா என்பது உங்கள் கைகளில் இருக்கிறது. விட்டுக்கொடுத்து வாழ்வதா அல்லது கட்டுப்படுத்தி உறவை அழிப்பதா என்பதை முடிவு செய்யவேண்டியது நீங்கள். கேள்வி நாங்கள் பிரிவினை வேண்டுகிறோமா என்பதல்ல; நீங்கள் எங்களை நிம்மதியாக, கௌரவமாக, உரிமைகளுடன், மாண்புகளுடன் இங்கே வாழ அனுமதிக்கிறீர்களா என்பதுதான்.
உதவிய கட்டுரைகள்:
[1] புகழேந்தி தங்கராஜ், “தடையை நீட்டிப்பதாக அறிவிக்கும் பாரதமே.....எங்கள் இனத்தின் அடையாளம் விடுதலைப் புலிகள்தான்!” தமிழக அரசியல். யூலை 23, 2012.
[2] தமிழ்ச்சிட்டு, குரல்-8, இசை-12.
[3] பெ. மணியரசன், “இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் இரண்டையும் மறுக்கிறது தமிழ்த் தேசியம்,” கீற்று.காம், ஏப்ரல் 24, 2012.
[4] S. P. Udayakumar, "Disintegrate and Integrate: Educating for an Interdependent World through Three Stages." Presented at the 15th IPRA General Conference, Kyoto, Japan, July 27-31, 1992.
[2] தமிழ்ச்சிட்டு, குரல்-8, இசை-12.
[3] பெ. மணியரசன், “இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் இரண்டையும் மறுக்கிறது தமிழ்த் தேசியம்,” கீற்று.காம், ஏப்ரல் 24, 2012.
[4] S. P. Udayakumar, "Disintegrate and Integrate: Educating for an Interdependent World through Three Stages." Presented at the 15th IPRA General Conference, Kyoto, Japan, July 27-31, 1992.
- சுப.உதயகுமார்
=======================================
பெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் தியாகு
பெரியாரின் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் 2014 செப்டெம்பர் 20ஆம் நாள் சென்னை எழும்பூரில் ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கூட்டத்தில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” எனும் தலைப்பில் தோழர் தியாகு ஆற்றிய கருத்துரை
தந்தை பெரியாரைப் பற்றியும் தமிழ்த் தேசியத்தைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு, நாம் நம்முடைய தலைவர்களை எவ்வாறு புரிந்து கொள்வது? பெரியாரைப் போன்று நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரராய் இருந்தவரை, அவர் பல்வேறு முரண்பாடுகளின் ஊடாக வளர்ச்சி கண்டு ஒரு நிலைப்பாட்டை முன்வைத்ததை, எவ்வாறு புரிந்து கொள்வது? என வரையறை செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
பெரியாரைப் பற்றி அரசாங்கம் கூட நூல் வெளியிட்டுள்ளது. தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டனாகத் திகழ்ந்து, உடனிருந்து வளர்ந்த மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள் இப்போது அடிக்கடி சொல்லக் கூடிய ஒரு வாசகம் பெரியாரை உலகமயமாக்க வேண்டும் என்பது. பெரியாரை உலகமயமாக்குவது என்று சொல்வதின் மூலமாக, பெரியாரின் சிந்தனையை, கருத்துகளை, குறிப்பாக அவரது கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றை உலகு தழுவிய சிந்தனையாக மாற்றுவது, பெரியார் பெயரை உலகறியச் செய்வது என்ற முயற்சியாக அது நடந்து கொண்டுள்ளது.
இதற்கு நிகராக இன்னொரு பக்கம் ஒரு முயற்சி நடந்து கொண்டுள்ளது… அது திருவள்ளுவரை இந்திய மயமாக்குவது. இப்போது சில தமிழ் அமைப்புகளும், தமிழ் அறிஞர்களும் திருவள்ளுவரைப் பெருமைப்படுத்துகிறோம், திருக்குறளைப் பெருமைபடுத்துகிறோம் என்ற எண்ணத்தோடு, ‘திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக்க வேண்டும், திருவள்ளுவரை இந்தியாவின் தேசியப் புலவராக அறிவிக்க வேண்டும்’ என்று கோரி வருகின்றனர். இதையே ஒரு பாசக நாடாளுமன்ற உறுப்பினர் கூட கேட்டிருக்கிறார். இதற்காக அவரைப் பராட்டுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.
இதற்கு நிகராக இன்னொரு பக்கம் ஒரு முயற்சி நடந்து கொண்டுள்ளது… அது திருவள்ளுவரை இந்திய மயமாக்குவது. இப்போது சில தமிழ் அமைப்புகளும், தமிழ் அறிஞர்களும் திருவள்ளுவரைப் பெருமைப்படுத்துகிறோம், திருக்குறளைப் பெருமைபடுத்துகிறோம் என்ற எண்ணத்தோடு, ‘திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக்க வேண்டும், திருவள்ளுவரை இந்தியாவின் தேசியப் புலவராக அறிவிக்க வேண்டும்’ என்று கோரி வருகின்றனர். இதையே ஒரு பாசக நாடாளுமன்ற உறுப்பினர் கூட கேட்டிருக்கிறார். இதற்காக அவரைப் பராட்டுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.
ஒரு நாட்டில் பிறந்து வளர்ந்து, தன்னாட்டு மக்களுக்கு, தன் இனத்துக்குப் பாடுபட்ட ஒருவரை நாடறியச் செய்வது, கண்டமறியச் செய்வது, உலகறியச் செய்வது என்பதிலே பிழை ஒன்றும் இல்லை. ஆனால் இதற்குப் பின்னால் வேறொரு பொருள் மறைந்திருப்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வோர் அறிஞனையும், ஒவ்வொரு போராளியையும், ஒவ்வொரு தலைவனையும் அவன் வாழ்ந்து பணியாற்றிய களத்திலிருந்தும் காலத்திலிருந்தும் பிரித்தெடுத்து, வானில் உலவும் தேவர்களாக்கி விடுவது, அமரர்களாக்கி விடுவது எனும் முயற்சியாக இது அமைந்து விடக் கூடாது.
திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்கிற போதும், அது உலகிற்கே வழிகாட்டி என்று சொல்கிற போதும், திருக்குறளின் களமும் காலமும் மறைக்கப்படுகின்றன. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது உலகெங்கும் பொருந்துகின்ற உண்மைதான். ஆனால் வள்ளுவர் அந்தக் குறளை எழுதியது எந்த அமைப்புக்கு எதிராக, எந்த மெய்யியலுக்கும் கருத்தியலுக்கும் எதிராக என்பதோடு இணைத்துப் பார்க்காமல், இதை எல்லாக் காலத்துக்கும் பொதுவானதாக, எல்லா இடத்துக்கும் பொதுவானதாக மாற்றுவது குறளை வீரியமிழக்கச் செய்து விடும். அதனை நாம் இன்றைக்கு ஒரு போர்க் கருவியாகக் கையாள முடியாத நிலை ஏற்படும். கல்வி கற்கிற உரிமை அனைவருக்கும் இல்லை என்று ஆணையிடுகிற ஒரு சட்டத்திற்கு எதிராகத்தான்,
திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்கிற போதும், அது உலகிற்கே வழிகாட்டி என்று சொல்கிற போதும், திருக்குறளின் களமும் காலமும் மறைக்கப்படுகின்றன. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது உலகெங்கும் பொருந்துகின்ற உண்மைதான். ஆனால் வள்ளுவர் அந்தக் குறளை எழுதியது எந்த அமைப்புக்கு எதிராக, எந்த மெய்யியலுக்கும் கருத்தியலுக்கும் எதிராக என்பதோடு இணைத்துப் பார்க்காமல், இதை எல்லாக் காலத்துக்கும் பொதுவானதாக, எல்லா இடத்துக்கும் பொதுவானதாக மாற்றுவது குறளை வீரியமிழக்கச் செய்து விடும். அதனை நாம் இன்றைக்கு ஒரு போர்க் கருவியாகக் கையாள முடியாத நிலை ஏற்படும். கல்வி கற்கிற உரிமை அனைவருக்கும் இல்லை என்று ஆணையிடுகிற ஒரு சட்டத்திற்கு எதிராகத்தான்,
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்று எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. அது உலகப் பொதுமறை என்பதற்காக அல்ல, வருணாசிரமத்தை, மனு தர்மத்தை எதிர்த்து எழுப்பிய போர்க் குரல் என்பதற்காகவே நமக்குப் பொருத்தப்பாடு உடையதாகிறது. இதிலிருந்து நீங்கள் அதைப் பிரித்து எடுத்து விட முடியாது. எவ்வளவு காலத்திற்கு இந்த ஏற்றத்தாழ்வு, கல்வியிலான இந்தச் சிறுபான்மையினர் முற்றுரிமை புதுப்புது வடிவங்களில் புதுப்புது சாயல்களில் தொடர்கிறதோ, அவ்வளவு காலத்திற்கும் இந்தக் குறள் நமக்குத் தேவை. அவ்வளவு காலத்திற்கும் அனைவருக்குமான கல்வியுரிமையை வலியுறுத்துகிற இலக்கியம் நமக்குத் தேவை.
நாங்கள் சிறு அகவையில் ஊர்வலங்களில் முழக்கமிட்டுக் கொண்டு போயிருக்கின்றோம். பெரியாரியவாதிகளின் கூட்டங்களுக்குச் சென்ற போது – தென்னாட்டு இலெனின் பெரியார், இந்நாட்டு சாக்ரடீசு பெரியார் என்றெல்லாம் முழக்கமிட்டிருக்கின்றோம். இப்போது நம் இளந்தமிழகம் இயக்கம் சார்பில் பெரியாரின் பிறந்தநாளையொட்டி ஒரு சிறு சுவரொட்டி ஒட்டியிருக்கிறீர்கள். அது யுனெசுகோவினுடைய பெரியாரைப் பற்றிய ஒரு மதிப்புரை. அரசாங்கம் பெரியார் பற்றி வெளியிட்டிருக்கும் நூலிலும் இது இடம் பெற்றிருக்கிறது:
‘புத்துலகத் தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடீசு;
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை;
அறியாமை, மூடநம்பிக்கைளின் கடும் எதிரி.’
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை;
அறியாமை, மூடநம்பிக்கைளின் கடும் எதிரி.’
இதில் ஒன்றும் பிழையில்லை. ஆனால் இந்தப் பார்வை பெரியாரைத் தூல நோக்கில் அணுக மறுத்து, அவரை அவருடைய களம், காலத்திலிருந்து பிரித்தெடுத்துப் பொதுமைப்படுத்தி விடுகின்றது. நீங்கள் இதில் உள்ள குறையை அறிய வேண்டுமென்றால் இரண்டாவது வாசகத்தை எடுத்துக் கொள்ளலாம்.
‘தென்கிழக்காசியாவின் சாக்ரடீசு’ – கிரேக்க சாக்ரடீசு பற்றி நமக்கு என்ன தெரியும்? அவர் நாத்திகர், மெய்பொருள் காண்பதறிவு என்பதைக் கடைப்பிடித்தவர், பகுத்தறிவாளர், இளைஞர்களிடையே பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்பியவர். அதற்காக உயிரை ஈகம் செய்வதற்கும் அணியமாய் இருந்தவர், ஈகம் செய்தவர்.
‘தென்கிழக்காசியாவின் சாக்ரடீசு’ – கிரேக்க சாக்ரடீசு பற்றி நமக்கு என்ன தெரியும்? அவர் நாத்திகர், மெய்பொருள் காண்பதறிவு என்பதைக் கடைப்பிடித்தவர், பகுத்தறிவாளர், இளைஞர்களிடையே பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்பியவர். அதற்காக உயிரை ஈகம் செய்வதற்கும் அணியமாய் இருந்தவர், ஈகம் செய்தவர்.
இப்படிப் பல கிரேக்க அறிஞர்கள் அவர் காலத்திலும், அவருக்குப் பிறகும் வந்தார்கள் – சாக்ரடீசு, பிளேட்டோ, அரிசுட்டாட்டில். இதில் பிளேட்டோ பெரிய அரசியல் அறிஞராகவும் இருந்தார், குடியரசு படைத்தார். அரிசுட்டாட்டில் பெரிய அறிவியல் அறிஞராகவும் இருந்தார்.
எப்படியிருந்தாலும் சரி, இந்த அறிஞர்கள் யாரும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கருத்தை முன்மொழிந்தவர்கள் இல்லை. இதுதான் முதன்மையான செய்தி. இவர்கள் எல்லோரும் அடிமையுடைமைச் சமூகத்தில் வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல, அந்த அடிமையுடைமைச் சமூகத்தை நியாயப்படுத்தியவர்கள். அதை எதிர்த்தவர்கள் அல்ல. பிளேட்டோவின் குடியரசு அனைத்து மக்களுக்குமான குடியரசு அல்ல, அடிமைகளின் குடியரசு அல்ல. அது மேட்டுக்குடிகளின் குடியரசு, அவர்களுக்கு மட்டும் வாக்குரிமையும் மக்களாட்சியும் வழங்கும் குடியரசு. ஒரு வாய்ப்பு வேண்டுமானால் அங்கு இருந்தது. அடிமைகள் அடிமைமுறையிலிருந்து சில கட்டுப்பாடுகள் அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுபடலாம், அடிமையல்லாத மேட்டுக்குடிகள் சில காரணங்களால் அடிமைகளாக மாற்றப்படலாம். நமது சாதியத்திற்கும் அதற்கும் உள்ள வேறுபாடு இதுதான். இங்கே சாதியை மாற்றிக் கொள்ளவே முடியாது, அங்கே சமூகநிலை மாறலாம். இந்த அடிமைமுறையை நியாயப்படுத்திய அறிஞர்கள் அவர்கள்.
மார்க்சியம் பற்றிய ‘இயங்கியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்’ நூலில், ஸ்டாலின் எழுதுகிறார் – அடிமை முறை என்பது, ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடிமைப்படுத்துவது என்பது, அவனை ஒரு விலங்காக நடத்துவது, வேலை வாங்குவது, விலைக்கு விற்பது-வாங்குவது, அடிப்பது, உதைப்பது, சாகடிப்பது என்பதையெல்லாம் இன்றைக்கு நாம் சீர்தூக்கிப் பார்க்கும் போது அருவருப்பானதாகத் தோன்றலாம், கசப்பாக இருக்கலாம். ஆனால் மனிதச் சமூக வரலாற்றில் அடிமைச் சமூகம் என்பது ஒரு பெரிய முன்னோக்கியப் பாய்ச்சலைக் குறித்தது.
ஏனென்றால் ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தில் ஏடும் எழுத்தும் கல்வியும் இலக்கியமும் கலைகளும் இல்லை. மொத்தத்தில் இல்லை. வானியல், கணிதவியல், மெய்யியல் போன்றவை தோன்றி வளர்வதற்கான புறச்சூழலை அடிமைச் சமூகம்தான் தோற்றுவித்தது. ஏனென்றால் அடிமைகள் கடும் உடலுழைப்பில் ஈடுபட்டதால், சமூகத்தில் ஒரு பிரிவினர் உடல் உழைப்பிலிருந்து விடுபட்டு, அறிவுசார்ந்த பணிகளில் ஈடுபடுகிற வாய்ப்பு கிடைத்தது.
ஏனென்றால் ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தில் ஏடும் எழுத்தும் கல்வியும் இலக்கியமும் கலைகளும் இல்லை. மொத்தத்தில் இல்லை. வானியல், கணிதவியல், மெய்யியல் போன்றவை தோன்றி வளர்வதற்கான புறச்சூழலை அடிமைச் சமூகம்தான் தோற்றுவித்தது. ஏனென்றால் அடிமைகள் கடும் உடலுழைப்பில் ஈடுபட்டதால், சமூகத்தில் ஒரு பிரிவினர் உடல் உழைப்பிலிருந்து விடுபட்டு, அறிவுசார்ந்த பணிகளில் ஈடுபடுகிற வாய்ப்பு கிடைத்தது.
அதனால்தான், வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்று முதலில் எழுதியதைத் திருத்தி, ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்று மார்க்சு-எங்கெல்சு எழுதினார்கள். எழுதப்பட்ட வரலாறு எப்போது தொடங்குகின்றது என்றால் அடிமைச் சமூகத்திலிருந்துதான் தொடங்குகின்றது. எழுதுவது, இலக்கியம் படைப்பது, கலைகள், அறிவியல் ஆய்வு எல்லாமே இப்படித்தான். இந்தியத் துணைக்கண்டத்தை எடுத்துக்கொண்டாலும், உலகின் எந்தப் பகுதியை எடுத்துப் பார்த்தாலும், கிரேக்கமானாலும், உரோமாபுரியானாலும், அடிமைச் சமூகம்தான் மெய்யியலின் தொடக்கம். அந்த மெய்யியல் சரியோ தவறோ, அதுதான் தொடக்கம். அந்த மெய்யியலர்கள், தாங்கள் மெய்யியலர்களாக விளங்குவதற்கு, அப்படித் தம் வாழ்க்கையை நடத்துவதற்கு என்ன தேவைப்பட்டது என்றால், அடிமைச் சமூகம் தேவைப்பட்டது. எனவேதான் அவர்கள் அதனை நியாயப்படுத்தினார்கள்.
கிட்டத்தட்ட அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த போதிலும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று மானிட சமத்துவத்தை வலியுறுத்திய ஒரே அறிஞர் இந்த உலகத்திலேயே திருவள்ளுவர் மட்டுந்தான்.
இந்த இடத்தில், திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து எழுதியவர் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் விருப்பம்போல் அவர் கருத்தை நாத்திகவாதம் என்று வாதிட்டுப் பார்க்கலாம், சைவர்கள் சைவம் என்று வாதிட்டுப் பார்க்கலாம், சமணர்கள் சமணம் என்று வாதிட்டுப் பார்க்கலாம் ஆனால் அதல்ல முதன்மையானது. வேறு எது முதன்மையானது என்றால், திருக்குறள் முழுவதிலும் இழையோடி நிற்கும் அறக் கோட்பாடு, சமூகநீதிக் கோட்பாடு, மனுதர்ம எதிர்ப்புக் கொள்கை – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் கருத்து – இதுவே முதன்மையாகிறது.
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
செத்தாருள் வைக்கப் படும்
என்றார் வள்ளுவப் பெருந்தகை. உண்மையில் இதன் தொடர்ச்சியாகத்தான், வடக்கே பௌத்தம், தெற்கே வள்ளுவம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகத்தான், இடையிலே வந்த வருணாசிரம, மனுதர்மக் கோட்பாடுகளுக்கு எதிராக மீண்டும் நம் காலத்தில் எழுந்த கலக எழுச்சியின் பேராளராகத்தான் நீங்கள் பெரியாரைப் பார்க்க வேண்டும். நீங்கள் பெரியாரை சாக்ரடீசு ஆக்குகிற பொழுது, இந்த சாரமான கூறு அடிபட்டுப் போய் விடும்.
இதேபோலத்தான், பெரியாரைப் பற்றிப் பாவேந்தர் பாடியதைத் தோழர் தமிழேந்தி சொன்னார். பெரியாரைப் பற்றி ஒரு நான்கு வரி எழுதி இவர்தான் பெரியார் என்றார் பாவேந்தர்:
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்.
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்.
எல்லாம் மறுப்பிற்கிடமில்லாத செய்திகள். ஆனால் இந்த வரிகள் பெரியாரைத் தூலப்படுத்தவில்லை. இவை எந்தவொரு சிந்தனையாளனுக்கும் எந்தவொரு போராளிக்கும் பொருந்தும். தூய தாடி மார்பில் விழும் என்று சொல்லும்படியான தோற்றத்தில் நிறைய பேர் நம்மிடையே இருக்கிறார்கள். நானும் தமிழேந்தியும் மழிப்பதை நிறுத்தினால் விரைவில் தூய தாடி மார்பில் விழும். ஆனால் பெரியாரை இப்படி வருணிப்பதில் ஓர் அழகிருக்கிறது. ஏனென்றால் மக்களுக்குக் கொள்கைகளைக் குருதியும் சதையுமாகக் காட்டவேண்டியது கட்டாயம். அருவமாக இருந்தால் புரியாது.
உண்மையில் திருவள்ளுவர் எப்படியிருந்தார், யாருக்காவது தெரியுமா? ஏதோவொரு கணிப்புதான், ஊகந்தான்! ஆனால் திருக்குறளைப் பரப்ப ஒரு திருவள்ளுவர் உருவம் நமக்குத் தேவைப்படுகிறது அல்லவா?
மனக் குகையில் சிறுத்தை எழும் என்பது போர்க்குணம் வாய்ந்த ஒரு சிந்தனையாளனை நமக்குக் காட்டுகின்றது. ஆனால் அவரது வாழ்நாள் பணியின் சாரம் என்ன?
ஒரு முறை ஒரு விவாதம் எழுந்தது. நான் பாலம் ஏட்டில் ‘கற்பூரச் சொற்கோ’ எனும் தலைப்பில் பாவேந்தரைப் பற்றி ஒரு தொடர்க் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன். முதலில் இப்பொருள் குறித்து ஆய்வுக் கோள்கள் எழுதினேன். அப்போது நான் மார்க்சியக் கட்சியில் இருந்ததால், எனக்கென்று சொல்லாமல் இதற்கொரு மறுப்பை செம்மலர் ஏட்டில் எழுதினார்கள்.
பாவேந்தர் இந்திய தேசியத்தைத்தான் வலியுறுத்தினாராம்! பாவேந்தர் காங்கிரசில் இருந்தார், கதர் சுமந்து விற்றார், இந்தியத் தேசியத்தைப் பற்றி இப்படியெல்லாம் பாடினார், பாரதியாருக்கு மாணவனாக இருந்தார் என்றெல்லாம் சொல்லிக் கடைசியாக இப்படி முடித்திருந்தார்கள்: இடையில் சிலகாலம் பிரிவினை மயக்கத்திற்கு ஆளாகியிருந்த போதிலும் எப்போதும் அவர் இந்தியப் பற்றுமிக்க கவிஞராகவே இருந்தார்! செம்மலரில் இப்படி எழுதியவர் தோழர் கே. முத்தையா.
இதற்கு நான் எழுதிய மறுப்பை செம்மலரில் வெளியிட மறுத்து விட்டதால் பாலத்தில் வெளியிடச் செய்தேன். அவர் தமிழ்த் தேசியத்தின் தலைக் கவிஞர் என்பதை, இடையில் சில காலம் வழுவிப் போயிருந்தாலும் இறுதி நோக்கில் அவர் தமிழ்த் தேசியப் பாவலரே என்பதை உரிய சான்றுகளோடு மெய்ப்பித்தேன். பாரதியின் தொடர்ச்சியாகப் பார்ப்பதால், பாரதி இந்தியத் தேசியக் கவிஞர், எனவே பாரதிதாசனும் இந்தியத் தேசிய கவிஞரே என்கிறார்கள். அப்படி இருக்க வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் பாரதியின் இந்திய தேசியத்திற்குள்ளேயே தமிழ்த் தேசியத்தின் வித்துக்கள் இருந்தன.
ஒவ்வொரு தேசிய இயக்கத்திற்கும் ஒரு சனநாயக உள்ளடக்கம் உண்டு என்று இலெனின் சொன்னார். சனநாயக உள்ளடக்கம் கொண்ட எந்தவோர் இயக்கமும் மக்களைச் சென்றடைவதற்கு மக்களின் மொழியில் மக்களின் பண்பாட்டோடு இணைந்து வந்தாக வேண்டும். அதனால்தான் வ.உ.சிதம்பரனார் ஆகட்டும், திரு.வி. கல்யாணசுந்தரனார் ஆகட்டும், பாரதியார் ஆகட்டும்… இவர்கள் ஒரு பக்கம் இந்தியத் தேசிய அரசியல் செய்து கொண்டிருந்தாலும், மறு பக்கம் தமிழ்த் தேசியத்திற்கான விதையைத் தூவிச் சென்றனர். ஆனால் அந்த விதையானது ஓட்டை உடைத்துக் கொண்டு முளைத்து வெளியே வந்து தமிழ்த் தேசிய விருட்சமாக வளர்ந்து நிற்கும் போதும், நீங்கள் பழையதைக் காட்டியே பேசிக் கொண்டிருந்தால் எப்படி? இந்தக் குஞ்சு முட்டையிலிருந்து வந்தது, எனவே அது இன்னும் முட்டைதான் என்று சொல்ல முடியாது அல்லவா?
ஒவ்வொரு தேசிய இயக்கத்திற்கும் ஒரு சனநாயக உள்ளடக்கம் உண்டு என்று இலெனின் சொன்னார். சனநாயக உள்ளடக்கம் கொண்ட எந்தவோர் இயக்கமும் மக்களைச் சென்றடைவதற்கு மக்களின் மொழியில் மக்களின் பண்பாட்டோடு இணைந்து வந்தாக வேண்டும். அதனால்தான் வ.உ.சிதம்பரனார் ஆகட்டும், திரு.வி. கல்யாணசுந்தரனார் ஆகட்டும், பாரதியார் ஆகட்டும்… இவர்கள் ஒரு பக்கம் இந்தியத் தேசிய அரசியல் செய்து கொண்டிருந்தாலும், மறு பக்கம் தமிழ்த் தேசியத்திற்கான விதையைத் தூவிச் சென்றனர். ஆனால் அந்த விதையானது ஓட்டை உடைத்துக் கொண்டு முளைத்து வெளியே வந்து தமிழ்த் தேசிய விருட்சமாக வளர்ந்து நிற்கும் போதும், நீங்கள் பழையதைக் காட்டியே பேசிக் கொண்டிருந்தால் எப்படி? இந்தக் குஞ்சு முட்டையிலிருந்து வந்தது, எனவே அது இன்னும் முட்டைதான் என்று சொல்ல முடியாது அல்லவா?
பெரியாரே கூட காந்தி மறைந்த போது உணர்ச்சி மேலிட்டு இந்த நாட்டை காந்தி தேசமென்று அழைக்கச் சொன்னவர்தான். காமராசரைப் பச்சைத் தமிழர் என்று ஆதரித்தவர்தான். பெரியாரின் அரசியல் நிலைப்பாடுகளில் எத்தனையோ முரண்பாடு காணலாம். எல்லாவற்றையும் மீறி, அவரை எப்படி நாம் புரிந்து கொள்வது? நான் ஒரு முறை சுருக்கமாக நாலே வரியில் பெரியாரைப் பற்றி எழுதினேன். இப்படி ஒரு சுவரொட்டி கூட அச்சிட்டு ஒட்டினோம்: அவரைத் தூலப்படுத்தும் நோக்கில் நான் எழுதிய வரிகள்:
தமிழினத்தின் தன்மான அடித்தளம்
சமூகநீதிப் புத்தமைப்பின் உலைக்களம்
தந்தை பெரியார்
விடுதலைச் சிந்தையின் விளைநிலம்
சமூகநீதிப் புத்தமைப்பின் உலைக்களம்
தந்தை பெரியார்
விடுதலைச் சிந்தையின் விளைநிலம்
இந்த வரிகளைத்தான் பெரியார் பற்றிய என் பார்வையின் சாரமாக உங்கள்முன் படைக்கிறேன்.
நீங்கள் அவரை சாக்ரடீசு என்று சொல்வதைக் காட்டிலும், மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று சொல்வதைக் காட்டிலும், நம்முடைய காலத்தின் தேவைக்கேற்ப, நம்முடைய போராட்டத்தில் அவரை ஒரு கருவியாக்குவது எப்படி என்றுதான் பார்க்க வேண்டும்.
நீங்கள் அவரை சாக்ரடீசு என்று சொல்வதைக் காட்டிலும், மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று சொல்வதைக் காட்டிலும், நம்முடைய காலத்தின் தேவைக்கேற்ப, நம்முடைய போராட்டத்தில் அவரை ஒரு கருவியாக்குவது எப்படி என்றுதான் பார்க்க வேண்டும்.
திராவிட இயக்க வரலாறு பற்றிய கருத்தில் ஒரு சின்ன மாறுபாடு. நீதிக் கட்சியை அல்லது தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தை திராவிட இயக்கத்தின் தொடக்கமாகக் கருதுவதில் நான் மாறுபடுகிறேன். உண்மையில் 1925ஆம் ஆண்டில் பெரியார் ’குடியரசு’ ஏட்டைத் தொடங்கியதைத்தான் திராவிட இயக்கத்தின் தொடக்கமாகக் கருத வேண்டும். அப்படிக் கருதும் போதுதான் திராவிட இயக்கம் பெரியாரால் நிறுவப்பட்டது என்று நாம் சொல்ல முடியம்.
திராவிட இயக்கத்தை நிறுவியவர்கள் பெரியாருக்கு முந்தைய நீதிக் கட்சித் தலைவர்கள் அல்ல. அவர்களைப் பற்றி அறிஞர் அண்ணா 1946ஆம் ஆண்டில் தெட்டத் தெளிவாகச் சொல்கிறார். பெரியாரும் அம்பேத்கரும் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளில் பிரித்தானிய ஆட்சியாளர்களை ஆதரித்த தருணங்கள் உண்டு. ஆனால் அவர்கள் இதற்காக இராவ்பகதூர் பட்டமும் சர் பட்டமும் வாங்கிக்கொண்டவர்கள் அல்ல. ஆனால் அண்ணாவின் சொற்களில் இந்த நீதிக்கட்சித் தலைவர்கள் இராவ்பகதூர் சர் பட்டந்தாங்கிய சரிகைக் குல்லாய்க்காரர்கள், அரண்மணை அரசியல்வாதிகள்! நீதிக்கட்சியினர் மக்களிடம் செல்வாக்கிழந்த போது, அடியோடு ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒரு நேரத்தில், புகழ்மிக்க தலைவராக வேறு காரணங்களுக்காகக் காங்கிரசை எதிர்த்துக் கொண்டிருந்த பெரியாரைத் தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டு அவரிடம் நீதிக் கட்சியை ஒப்படைத்து விட்டார்கள்.
எனவே குடியரசு ஏட்டின் தொடக்கம்தான் சுயமரியாதை இயக்கத்தின், அதாவது திராவிட இயக்கத்தின் தொடக்கம். இந்தத் தொடக்கம் எதைக் குறிக்கிறது? மார்க்சு 17 வயதுப் பள்ளி மாணவனாக இருந்த போது எழுதிய கட்டுரையில் சொன்னார் – நீ யார் என்பது நீ உன்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்பதைப் பொறுத்ததன்று. நீ யாராக அல்லது எதுவாக இருக்கிறாய் என்பதை நீ வாழும் புறச் சூழல்தான் தீர்மானிக்கிறது.
குடியரசு ஏட்டின், சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பது அப்போதிருந்த அரசியல் புறச் சூழலில் எதைக் குறிக்கும்? தேசாபிமானம், பாசாபிமானம், சமயாபிமானம் – அதாவது நாட்டுப் பற்று, மொழிப் பற்று, மதப் பற்று – இன்னும் மற்ற கருத்துக்களை வளர்க்கும் நோக்குடன் குடியரசு ஏட்டைத் தொடங்கியதாக பெரியாரே எழுதுகிறார். முதல் இதழில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளின் வாழ்த்துரை இடம்பெறுகிறது. இதை மட்டும் வைத்து அந்த இயக்கத்தை மதிப்பீடு செய்துவிட முடியுமா என்றால், முடியாது.
வரலாற்று நோக்கில் சமூக ஆற்றல்களுக்கிடையே நடைபெறுகிற, நீதிக்கும் அநீதிக்குமான போராட்டத்தின் அன்றைய கட்டத்தில் எந்தச் சமூக ஆற்றல்களின் பக்கம் குடியரசு நின்றது, பெரியார் நிற்கிறார் என்பதை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். குடியரசு ஏட்டின் தொடக்கம் என்பது தமிழ்த் தேசிய இனம் தன்னைத்தானே இனங்கண்டு கொள்ளும் போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது என்கிறார் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.
1937ஆம் ஆண்டிற்குப் பிறகு, 1938ஆம் ஆண்டு மொழிப் போராட்டக் காலத்தில்தான் பெரியார் மொழியை முன்னெடுக்கிறார். எல்லோரும் சேர்ந்து அவரைத் தமிழர் தலைவர் என்று அழைக்கிறார்கள். அப்படித் தமிழர் தலைவர் என்று அவரை அழைத்தவர்களில் கி.ஆ.பெ. விசுவநாதமும், மறைமலையடிகளும், சோமசுந்தர பாரதியாரும், தியாகராயரும் இருந்தார்கள். அந்த முதல் மொழிப் போரில் களம் கண்டவர்களில் அனைத்துப் பிரிவுத் தமிழர்களும் இருந்தார்கள். தமிழறிஞர்கள் இருந்தார்கள். நம் தெய்வநாயகம் இருந்தார். நீதிக் கட்சியினர் மட்டுமல்ல, காங்கிரசாரும் இருந்தார்கள். சுயமரியாதைக்காரர்கள் மட்டுமல்ல, இறையன்பர்களும் இருந்தார்கள். இசுலாமியர்கள் இருந்தார்கள். பார்ப்பனர்களும்கூட இருந்தார்கள். பழைய நீதிக்கட்சிக்காரர்கள் இருந்தார்கள், நீதிக்கட்சியை எதிர்த்த காங்கிரசுக்காரர்களும் இருந்தார்கள்.
சென்னை மாகாணச் சட்ட மன்றத்தில் விவாதம் நடக்கிறது, பன்னீர்செல்வம் அவர்கள் இராசாசியின் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசுகிறார். அதற்கு இராசாசி சொல்கிறார் – இந்தியை யார் எதிர்க்கிறார்கள்? இது நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று. நீங்கள் இங்கே உள்ளே இருந்து எதிர்க்கின்றீர்கள். வெளியே இருந்து சோமசுந்தர பாரதியார் எதிர்க்கிறார். வேறு யார் எதிர்க்கிறார்கள்? அப்போது பன்னீர்செல்வம் சொல்கிறார் – நீங்கள் ஒருவர் ஆதரிக்கிறீர்கள், நாங்கள் இரண்டு பேர் எதிர்க்கிறோம்; எனவே நாங்கள்தான் பெரும்பான்மை, நீங்கள் சிறுபான்மை.
இங்கே தோழர் கொளத்தூர் மணி எடுத்துக் காட்டியதைப் போல, 1956 மொழிவழி மாநில அமைப்புக்குப் பிறகு திராவிடம் என்ற சொல் எதைக் குறிக்கும்? இந்தச் சொல் இல்லாமல் வேறு சொல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றால், நன்றாகத்தான் இருந்திருக்கும். இன்றைக்கும் அதே சொல்லைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதே சொல்லைப் பிடிவாதமாகப் பயன்படுத்திய ஒரு காரணத்தினாலேயே உள்ளடக்கம் திரிந்து போகாது.
பல சொற்கள் காலத்திற்கேற்பப் பொருள் மாற்றம் பெறுகின்றன. குடிகள் என்றால் என்ன? ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்பது அப்பர் வாக்கு. குடியல்லோம் என்றால் அடிமையில்லை என்று பொருள். இப்போது நாம் குடியுரிமை கேட்கிறோமே, குடியியல் உரிமை பற்றிப் பேசுகிறோமே, நல்ல குடிமகனாக இருக்க விரும்புகிறோமே, என்ன பொருள்? இந்தக் குடிக்கு அடிமை என்று பொருளில்லை, வேறு நல்ல பொருளில்தான் இந்தச் சொல்லை ஆள்கிறோம்.
உருசியாவில் போல்சுவிக் என்ற பெயர் எப்படி வந்தது? 1903ஆம் ஆண்டு கட்சி மாநாட்டில் உறுப்பினர் தகைமை குறித்துத் தீர்மானம் கொண்டுவந்த போது, ஆதரித்த பெரும்பான்மையினர் போல்சுவிக்குகள் ஆனார்கள். எதிர்த்து வாக்களித்த சிறுபான்மையினர் மென்சுவிக்குகள் ஆனார்கள். ஏனென்றால் உருசிய மொழியில் போல்சுவிக் என்றால் பெரும்பான்மை, மென்சுவிக் என்றால் சிறுபான்மை. இப்போது போல்சுவிசம் என்கிறோம், இது வேறு பொருளில். விட்டுக்கொடுக்காமல் உறுதியாகப் புரட்சியை முன்னெடுக்கிற கொள்கைக்கு போல்சுவிசம் என்ற பெயர் வந்து விட்டது. உருசிய பொதுவுடைமைக் கட்சி – போல்சுவிக் என்று இருந்தது. இங்கு தமிழ்நாட்டில் கூட ஒரு கட்சியின் பெயரில் போல்சுவிக் உள்ளது. இப்படிப் பெயர் வைத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. இதற்காக, நீங்கள் போல்சுவிக் என்றால் பெரும்பான்மை எங்கே என்று கேட்கக் கூடாது. நாம் சொற்களைப் பிடித்துக் கொண்டு வாதிடக் கூடாது.
தொடக்கத்திலேயே திராவிடம் என்று சொல்லாமல் தமிழ், தமிழர் என்றே சொல்லியிருந்தால், அல்லது பிறகாவது அப்படி மாற்றியிருந்தால், நன்றாகத்தான் இருந்திருக்கும். அப்படி நடக்கவில்லை, அதற்காக இப்போது என்ன செய்வது? நாளை மாற்றிக் கொண்டாலும் வரவேற்போம். ஆனால் அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்காகவே, உள்ளடக்கத்தைப் பார்க்காமல் ஒதுக்கித் தள்ளி விடப் போகிறோமா?
“எங்கள் திராவிடப் பொன்னாடே” என்கிற பாட்டில், தமிழ்நாட்டிற்கு வெளியே ஏதாவது அடையாளம் காட்டப்படுகிறதா? இல்லை. தமிழ்த் தேசியப் பண் அது. எங்கள் தமிழகப் பொன்னாடே என்று பாடியிருந்தால் நாங்கள் கூடுதலாக மகிழ்ந்திருப்போம். ஆனால் அந்தப் பாட்டை இப்போது நாம் திருத்த முடியாது.
“எங்கள் திராவிடப் பொன்னாடே” என்கிற பாட்டில், தமிழ்நாட்டிற்கு வெளியே ஏதாவது அடையாளம் காட்டப்படுகிறதா? இல்லை. தமிழ்த் தேசியப் பண் அது. எங்கள் தமிழகப் பொன்னாடே என்று பாடியிருந்தால் நாங்கள் கூடுதலாக மகிழ்ந்திருப்போம். ஆனால் அந்தப் பாட்டை இப்போது நாம் திருத்த முடியாது.
திராவிடம் என்பது தமிழியத்தின் உருத்திரிந்த வடிவம். உள்ளடக்கம் தமிழியம்தான். இந்த உள்ளடக்கத்தைச் சரியாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தடை இல்லை என்கிற வரைக்கும், உருத்திரிபுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தடையாக வரும் போது உடைத்துக் கொண்டு முன்செல்வோம்.
பெரியாரைப் பொறுத்த வரை முதன்மையாகச் சொல்ல வேண்டிய ஒரு செய்தி உள்ளது: 1938ஆம் ஆண்டில் தமிழுக்காகப் போராடினார், தமிழர் தலைவர் என்று பெயர் பெற்றார். ஆனால் 1965ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்திற்கு எதிராக இருந்தார் என்பது பெரியாரின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய சறுக்கல் என்பதில் ஐயமில்லை. இதை மூடிமறைத்துப் பேசத் தேவை இல்லை.
நான் அப்போதெல்லாம் மாணவன். என்ன நடந்தது என்று நேரிலேயே பார்த்தேன். பெரியார் எந்த அளவுக்குப் போனார் என்றால், பக்தவத்சலத்தின் காட்டாட்சியை நியாயப்படுத்தித் துப்பாக்கிச் சூடுகளை ஆதரிக்கும் அளவிற்குப் போனார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்து எழுதுகிற ஏடுகளுக்கு பெட்ரோல் ஊற்றித் தீவைக்கச் சொன்னார். சட்டத்திற்குட்பட்ட கத்தியும் பெட்ரோல் கலனும் வைத்துக் கொள்ளச் சொன்னார். காவல் துறையின் அடக்குமுறை மிகுந்து போய் அதற்கு எதிரடியாக நடந்த சில வருந்தத்தக்க நிகழ்வுகளில் காவல் துறையினர் ஓரிருவர் கொல்லப்பட்ட போது அதை வன்மையாகக் கண்டித்து, காலித்தனம் என்று சாடினார். ஆனால் அரசுப் படைகள் நிகழ்த்திய படுகொலைகளைக் கண்டித்தாரில்லை.
நான் அப்போதெல்லாம் மாணவன். என்ன நடந்தது என்று நேரிலேயே பார்த்தேன். பெரியார் எந்த அளவுக்குப் போனார் என்றால், பக்தவத்சலத்தின் காட்டாட்சியை நியாயப்படுத்தித் துப்பாக்கிச் சூடுகளை ஆதரிக்கும் அளவிற்குப் போனார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்து எழுதுகிற ஏடுகளுக்கு பெட்ரோல் ஊற்றித் தீவைக்கச் சொன்னார். சட்டத்திற்குட்பட்ட கத்தியும் பெட்ரோல் கலனும் வைத்துக் கொள்ளச் சொன்னார். காவல் துறையின் அடக்குமுறை மிகுந்து போய் அதற்கு எதிரடியாக நடந்த சில வருந்தத்தக்க நிகழ்வுகளில் காவல் துறையினர் ஓரிருவர் கொல்லப்பட்ட போது அதை வன்மையாகக் கண்டித்து, காலித்தனம் என்று சாடினார். ஆனால் அரசுப் படைகள் நிகழ்த்திய படுகொலைகளைக் கண்டித்தாரில்லை.
தந்தை என்று நாம் போற்றுகிற ஒரு தலைவர், தமிழ்த் தேச வரலாற்றிலேயே மிகப் பெரிய எழுச்சியாகிய 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அதற்கு எதிராக நின்றார் என்பது வருந்தத்தக்க உண்மை. அவரது மொழிக் கொள்கை தவறானது, ஆங்கிலம் படிக்கச்சொன்னார், பேசச் சொன்னார், உன்னிடம் யார் இந்தியைத் திணிக்கிறார்கள் என்று கேட்டார் என்பதெல்லாம் தனிச் செய்தி. 1938ஆம் ஆண்டில் காட்டிய தெளிவு இதில் இல்லை. பெரியாரின் இந்த நிலைப்பாட்டிற்குப் பல காரணங்கள் சொல்லி விளக்கமளிக்கலாம். ஆனால் நியாயப்படுத்த முடியாது. திமுக மீதான எதிர்ப்பு, காமராசர் மீதான பற்றுதல் எனப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இங்கே முதன்மையானது – மொழிக் கொள்கையின் அடிப்படையில் அவரை நாம் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நிற்பவராகக் காட்ட முற்பட வேண்டிய தேவையில்லை.
தேசியம் என்ற சொல்லை அதற்குரிய வரலாற்றுச் சமூகவியல் பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அல்லது தேசிய இனத்தினுடைய ஆக்கக்கூறுகளாக இருப்பவற்றைச் சுருக்கமாகச் சொன்னால் – “மொழி, பண்பாடு, நிலம், பொருள், வரலாறு”. பண்பாடு என்பது ‘நாம்’ என்கிற மனநிலை, அது வெளிப்படுகிற கருத்தியலைச் சொல்கிறது. இதுதான் தேசியத்தின் அடிப்பொருள். அதன் வளர்ச்சி பெற்ற அறிவியல் பார்வை என்பதெல்லாம் பிறகு. அது தனித் தமிழ்நாடா, தன்னாட்சியா, தன்தீர்வுரிமையா (சுயநிர்ணய உரிமையா) என்பதெல்லாம் பிறகு.
தேசியம் என்பதன் அடிப்பொருளை எடுத்துக் கொண்டால் அது மொழிவழிப்பட்ட தேசியமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மொழிவழிப்பட்ட தேசியம் எல்லாமும் முற்போக்கானதாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. சிங்களப் பேரினவாதம் கூட ஒரு தேசியம்தான். அது ஆதிக்கத் தேசியம். ஒரு கட்டத்தில் முற்போக்கான பங்கு வகிக்கும் ஒரு தேசியம் பிறிதொரு கட்டத்தில் பிற்போக்கானதாக மாறலாம்.
தேசியம் என்பதன் அடிப்பொருளை எடுத்துக் கொண்டால் அது மொழிவழிப்பட்ட தேசியமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மொழிவழிப்பட்ட தேசியம் எல்லாமும் முற்போக்கானதாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. சிங்களப் பேரினவாதம் கூட ஒரு தேசியம்தான். அது ஆதிக்கத் தேசியம். ஒரு கட்டத்தில் முற்போக்கான பங்கு வகிக்கும் ஒரு தேசியம் பிறிதொரு கட்டத்தில் பிற்போக்கானதாக மாறலாம்.
இந்தியத் தேசியம், நாம் இந்தியர் என்கிற உணர்ச்சி ஒரு பொதுப் பகைவனுக்கு எதிராக, வெவ்வேறு தேசிய இன மக்களை ஒன்றுபடுத்திய அளவில், வெவ்வேறு மதத்தவரை ஒன்றுபடுத்திய அளவில் வரலாற்றில் ஒரு முற்போக்கான பாத்திரம் வகித்தது. இந்தியத் தேசியம் ஒரு எதிர்வகைத் தேசியமேத் தவிர, பொய்த் தேசியம் அன்று. ஒரு கருத்தியல் பொய்யா மெய்யா என்பதற்கு எந்தப் பெரிய ஆய்வுக் கூடத்தை விடவும், எந்தப் பெரிய ஆய்வு நூல்களை விடவும் வெகுமக்கள் இயக்கங்கள்தான் இறுதியான சான்று. ஒரு பொய்த் தேசியத்தால் கோடிக்கணக்கான மக்களைத் தெருக்களில் இறக்கியிருக்க முடியாது. காந்தியாரின் மிகப் பெரிய வரலாற்றுப் பங்கே பெருந்திரளான மக்களைக் களத்தில் இறக்கியதுதான். திலகரால் முடியாதது, இலாலா இலசபதிராயால் முடியாதது… காந்தியால் முடிந்தது. என்ன காரணம்? தென்னாப்பிரிக்கப் போராட்டத்தின் பட்டறிவு கற்றுத் தந்த கொள்கைகளும் அணுகுமுறைகளுமே காரணம் எனலாம். இது குறித்துத் தனியாகப் பேச வேண்டும், இப்போது நேரமில்லை.
காந்தியாரைச் சுட்டுக்கொன்றதை நியாயப்படுத்துகிற கோபால் விநாயக் கோட்சே [நாதூராம் விநாயக் கோட்சேவின் தம்பி] காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலை ஆனவர், 1976ஆம் ஆண்டு தன் கடைசிப் பேட்டியில், இந்திய மக்களின் சிறை அச்சத்தைப் போக்கிய தலைவர் காந்தி என்கிறார். கோபால் கோட்சேயின் வாசகம் இது. இந்திய மக்களின் சிறை அச்சத்தைப் போக்கியவர் காந்தி.
கணம் நீதிபதி அவர்களே, இந்தச் சட்டத்தின்படி எனக்கு அதிகபட்சத் தண்டனை விதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நின்று கேட்டவர்கள் காந்தியாரும் பெரியாரும். 1918இல் காந்தி, 1938இல் பெரியார். சிறைக்கஞ்சாத மனவுறுதியை அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பெரியார் பற்றிய விவாதத்தில் அவரின் அறிவு நாணயம், நேர்மை, ஈகம், உழைப்பு இவற்றையும் கூட சில நண்பர்கள் வினாவிற்குட்படுத்தக் காண்கிறோம். இது வீண் வேலை. அவருடைய கருத்து என்ன, நடைமுறை என்ன, அவற்றின் சரி தவறுகள், நிறைகுறைகள் பற்றிப் பேசுவோம். உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது பொருளற்றது.
இர்பான் அபீப் ஒருமுறை சொன்னார் – பிரித்தானிய வல்லாதிக்கத்தின் பொருளியல் சுரண்டலைப் பற்றி அந்தக் காலத்தில் ஒரு பெரிய ஆய்வுநூலை எழுதியது மட்டுமல்ல, அதற்கெதிரான போராட்டத்தில் மண்டை உடைபட்டுச் செத்த இலாலா இலசபதிராயைக் குறைகூறும் தகுதி நான் எவ்வளவு பெரிய பேராசிரியராக இருந்தாலும் எனக்குக் கிடையாது. காந்தி, அம்பேத்கர், பெரியார் என்று யாரையும் திறனாய்வு செய்யலாம். யாரும் கடவுள் கிடையாது. இவர்களைக் கடவுளராக்குவது அவர்தம் சிலைகளை அவரவர் கொள்கைகளின் கல்லறைகளாக மாற்றி விடுவதாகும், அவர்களை உயிர்ச் சாரமற்ற பொம்மைகள் ஆக்குவதாகும். இராசபக்சேவிடமும் புத்தரின் பல் இருக்கிறது, கொள்கை இல்லை என்பது போன்ற ஒரு நிலை ஏற்படலாகாது. நபிகளுடைய முடியைப் பேழையில் பூட்டி வைத்துக் கொண்டு, அவரின் சமத்துவ நெறியைக் காற்றிலே பறக்க விட்டால் எப்படி இருக்கும்?
எனவே, நான் இங்கு சொல்ல வருவது, பெரியாரின் சாரமான பணி, முழுதாகப் பார்த்தால் – ‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்ற வள்ளுவனின் எடைத் தட்டிலே வைத்து நிறுத்தால் – பெரியார் தமிழ் மொழியை ஆதரிக்கிறவர் என்று பார்த்து அவர் தமிழ்த் தேசியர் என்று நாம் அடையாளங்காண விரும்பவில்லை.
எனவே, நான் இங்கு சொல்ல வருவது, பெரியாரின் சாரமான பணி, முழுதாகப் பார்த்தால் – ‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்ற வள்ளுவனின் எடைத் தட்டிலே வைத்து நிறுத்தால் – பெரியார் தமிழ் மொழியை ஆதரிக்கிறவர் என்று பார்த்து அவர் தமிழ்த் தேசியர் என்று நாம் அடையாளங்காண விரும்பவில்லை.
வேறு யாரென்று பார்க்கிறோம்? பெரியார் எதற்காக நின்றார்? எதில் விட்டுக்கொடுக்காமல் நின்றார்? எதில் முன்பின் முரணற்று உறுதியாக வளர்ந்து சென்றார்? இந்தியக் குடியரசின் முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றபோது நீதிக்கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான பி.டி.இராசன் மதுரைத் தொகுதியில் போட்டியிட்டார். பி.டி. இராசனை எதிர்த்து பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட பார்ப்பனரான பி.இராமமூர்த்தியைப் பெரியார் ஆதரித்தார். தோழர் கொளத்தூர் மணி சொன்னதைப் போல, பெரியார் பிறப்புப் பார்த்து ஆதரிப்பவரோ எதிர்ப்பவரோ அல்ல என்பதற்கு வேறு பலவும் எடுத்துக்காட்டலாம். ஒருசில பார்ப்பனர்களை ஒருசில நேர்வுகளில் ஆதரித்ததுண்டே தவிர எவர்க்கும் அரசகுரு ஆனதில்லை.
அந்த 1952 தேர்தலின் போது பெரியாரிடம் கேட்கிறார்கள், நீங்கள் தமிழ்நாட்டுப் பிரிவினை கேட்கிறீர்கள், ஆனால் பொதுவுடைமைவாதிகள் இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்துள்ளார்கள், இந்தியா முழுதும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்கிறார்கள், நீங்கள் போய் அவர்களை ஆதரிக்கலாமா?
பெரியார் சொன்னார் – எனக்கு வேண்டியது என்ன? சாதி ஒழியணும். இந்தத் தமிழ்நாட்டில் சாதியை ஒழித்து விடலாம் என நினைத்தேன். ஆனால் இந்தத் தோழர்கள் சொல்கிறார்கள், தமிழ்நாட்டில் என்ன, இந்தியா முழுக்கவே சாதியை ஒழித்து விடலாம் என்று; அப்படி இந்தியா முழுதும் சாதியை ஒழித்தால் நல்லதுதானே என்றார். எனவே சாதி ஒழிப்பு என்பதில்தான் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். அதுவே அவர் குறி.
இன்னுமொரு சான்றைச் சொல்கிறேன் – இராசாசி 1937ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் தலைமையமைச்சராகப் பொறுப்பேற்ற போது, மாகாண அரசைக் கொண்டு காங்கிரசின் ஒவ்வொரு கொள்கையாகச் செயல்படுத்தப் பார்த்தார். ஒன்று இந்தித் திணிப்பு, மற்றொன்று மதுவிலக்கு. மதுவிலக்குக் கொள்கையில் கூட மற்றவர்களின் அணுகுமுறைக்கும் பெரியாரின் அணுகுமுறைக்கும் வேறுபாடு இருந்தது. பெரியார் சொன்னார், மதுவிலக்கைக் கொண்டுவந்து, அரசிற்கு வருமான இழப்பு என்று கூறி, நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தை மூடி விடுவார்கள், நம் குழந்தைகள் கல்வி கெட்டுப் போய் விடும். எனவே பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் கல்வியைக் கெடுப்பதற்காகவே இந்த மதுவிலக்கைக் கொண்டுவருகிறார்கள் என்றார். எல்லா இடத்திலும் அவருடைய அளவுகோல் இதுதான். கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின் போது, தனக்குச் சொந்தமாக இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்த பெரியார், அவர் ஒன்றும் மதுவிலக்கின் எதிரி அல்ல. கள்ளுக்கடை மறியலைக் கைவிடுமாறு காந்தியைக் கேட்ட போது, இதை முடிவு செய்ய வேண்டியது நான் அல்ல, ஈரோட்டிலிருக்கும் இரண்டு பெண்களே என்றார். பெரியாரின் மனைவி நாகம்மையும் தங்கை கண்ணம்மையும்தான் அந்தப் பெண்கள். அதே பெரியார் இராசாசியின் மதுவிலக்கை வேறு கோணத்தில் அணுகுவதைப் பாருங்கள்.
எமது தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தமிழ்த் தேசம் திங்களேட்டின் நடப்பு (2014 செப்டெம்பர் இதழில் மொழிச் சிக்கல் குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளது. ‘செம்மொழித் தமிழே எப்போதும் வேண்டும்’ என்ற தலைப்பில் தோழர் நலங்கிள்ளி எழுதியுள்ளார். பெரியார், இராசாசி இருவரும் சேர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்தார்கள். ஆங்கிலத்திற்காக வாதிட்டார்கள். நேரு ஆங்கிலம் நீடிப்பதற்கு வாக்குறுதி கொடுத்ததன் உள்நோக்கம் தேசிய மொழிகளை மறுத்துக் கொஞ்சம் கொஞ்சமாய் இந்தியைத் திணிப்பதுதான் என்பதற்கான சான்றுகளைத் திரட்டிக் கொடுத்திருக்கிறார். இங்கெல்லாம் ஒன்றுபட்டார்கள் எனில் எங்கு அவர்கள் அடியோடு வேறுபட்டு நின்றார்கள் என்றால், இட ஒதுக்கீடா? சாதி ஒழிப்பா? சமூக நீதியா? அங்குதான் இருவரும் வேறுபடுகின்றார்கள். காமராசரை ஏன் ஆதரிக்கிறார் என்றால் அதற்கும் இதுதான் அளவுகோல். கல்வித் துறையில் சமூக நீதி என்று பார்க்கிறார். எங்குமே இதுதான் அளவுகோல்.
பெரியார் 1952ஆம் ஆண்டுக்கும் 1973ஆம் ஆண்டுக்கும் இடையில் வேறுபடுகிறார். ஏனெனில் வயது கூடுகிற போது பட்டறிவு கூடுகிறது. அந்தப் பட்டறிவை உள்வாங்கித் தனது கருத்துகளைச் செழுமைப்படுத்திக் கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் அவர் அணியமாக இருந்த காரணத்தினாலேதான், தாம் கொடுத்த அந்த ‘தமிழ்நாடு தமிழர்க்கே!’ என்ற முழக்கத்தை, உயிர்ப்பித்தெடுத்து இறுதி முழக்கமாக எழுப்பிப் பேசும் போது என்ன சொல்கிறார் கேளுங்கள். 1952இல் சொன்னார் அல்லவா, இந்தியா முழுதும் சாதி ஒழிந்தால் நல்லதுதானே என்று, இப்பொழுது சொல்கிறார் – இந்தியா இருக்கும் வரைக்கும் சாதியை ஒழிக்க முடியாது; இந்தியா ஒழிய வேண்டும்; தனித் தமிழ்நாடு வந்தால்தான் பார்ப்பான், பணக்காரன், பதவிக்காரன், படிப்புக்காரன் அனைவரையும் ஒழிக்க முடியும். இதுதான் பெரியாரின் இறுதியும் உறுதியுமான நிலைப்பாடு. இதற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் என்ன தொடர்பு? தமிழ்த் தேசியம் என்பது ‘நாம் தமிழர்’ என்ற மனப்பாங்கை, அதனடிப்படையில் எழும் பண்பாட்டை ஓர் அடிக்கூறாகக் கொண்டது.
தமிழ்த் தேசியம் ஒரு சனநாயகக் கருத்தோட்டம் என்ற முறையில் சமூகநீதிக்கு அடிப்படையானது, இன்றியமையாதது. இந்தச் சமூகநீதிக்கும் சமத்துவத்திற்கும் உள்ள தொடர்பை இப்படிச் சொல்லலாம். எவ்வளவு உயர்ந்த சனநாயகக் குடியரசாய் இருந்தாலும் முதலாளியச் சனநாயகம் வடிவ அளவிலான சனநாயகமே என்றார் இலெனின். ஏனென்றால் அது தனியுடைமைச் சமூகத்தையே அடித்தளமாகக் கொண்டு நிற்கிறது. சான்றாக, இந்து நாளேட்டை எடுத்துக் கொண்டால், இலட்சக்கணக்கில் விற்பனையாகும், விளம்பர வருமானமே போதும், இலவசமாகக் கொடுத்தாலும் இழப்பில்லை. மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு இங்கிலீசு பேசுவார், தமிழும் பேசுவார். அவருக்குள்ள ஏட்டுரிமை சட்டப்படி நமக்கும் உள்ளது. ஆனால் நம்மால் அவருக்கு ஈடுகொடுக்க முடியாது. புரட்சிப் பெரியார் முழக்கம், தமிழ்த் தேசம் போன்ற ஏடுகளை சில ஆயிரம் படிகள் அச்சிட்டு விற்பதற்குள் முட்டி தேய்ந்து போகிறது. முதலீட்டிற்கு எங்கே போவது? விளம்பரத்துக்கு எங்கே போவது? வேறுவிதமான அடக்குமுறையும் பாகுபாடுகளும் இல்லை எனக் கொண்டாலும், தனிச் சொத்துடைமைக்கு உட்பட்ட சனநாயகம் தன்னளவிலேயே வரம்புகளுக்குட்பட்டதுதான்.
அப்படியானால் சனநாயகம் முழுமையடைவது எப்போது? தனிச் சொத்துடைமை ஒழியும் போதுதான், சமூகவுடைமை மலரும் போதுதான்! அதாவது உண்மையான சோசலிச அமைப்பில்தான் சனநாயகம் முழுமையடைகிறது. சோசலிசத்தை நிகரமை என்றோ நிகரியம் என்றோ வைத்துக் கொள்வோம். சனநாயகமும் சோசலிசமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. சனநாயகத்தின் நிறைவாக்கமே சோசலிசம் (Socialism is the consummation of democracy). சனநாயகமற்ற சோசலிசம் சோசலிசமே ஆகாது.
தேசியப் போராட்டத்தை சனநாயக உரிமைப் போராட்டமாக வரையறுத்த இலெனின், சோசலிசக் கட்டத்தில் அது பொருந்தாது என்ற கருத்தை மறுதலித்தார். பாட்டாளி வர்க்கம் ஆளுமை செலுத்தும் சோசலிச அமைப்பிலும் தேசியத் தன்தீர்வு உரிமையின் தேவையை வலியுறுத்தினார். பிற்காலத்தில் சோவியத்து ஒன்றியம் இந்தக் கொள்கையை மீறியதால் சிதறிப் போனது.
சனநாயகத்தின் தமிழ் வடிவமே சமூகநீதி. அது நிகரமைச் சமூகத்தின் முதற்படி. தேசியத்துக்கு ‘நாம்’ என்ற மனப்பாங்கு இன்றியமையாதது. ஏற்றத் தாழ்வானவர்கள் எப்படித் தம்மை ‘நாம்’ என்று உணர முடியும்? ஒன்று, சமமானவர்களாய் இருக்க வேண்டும், அல்லது சமத்துவம் நோக்கிய போராட்டத்தில் ஒன்றுபட்டவர்களாய் இருக்க வேண்டும். இப்படித்தான் தமிழ்த் தேசியத்துக்கும் சமூகநீதிக்குமான போராட்டங்கள் ஒன்றையொன்று சார்ந்து இடையுறவு கொண்டு நிற்கின்றன. எனவேதான் நாங்கள் ‘தமிழர் விடுதலைப் போர்முழக்கம் – சமூகநீதித் தமிழ்த் தேசம்’ என்று முழங்குகிறோம்.
சுருக்கமாக முடிப்பதென்றால், இறுதி நோக்கில், பெரியாருக்கு உயிர் சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியத்திற்கு உயிரும் சாதி ஒழிப்பு. இந்தப் பொருளில்தான் பெரியாரையும் தமிழ்த் தேசியத்தையும் உறவுபடுத்திப் புரிந்து கொள்கிறோம். பெரியாருக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் நேர் முடிச்சுப் போட இயலாது. இவ்விரு கண்ணிகளுக்கும் நடுவில் இடைக் கண்ணியாக இடம்பெறுவது சாதியொழிப்பு, அதாவது இவ்வொழிப்புக்கு அடிப்படையான சமூகநீதி. அதிலே அவர் உறுதியாக நின்ற காரணத்தினால், அதற்கான முழக்கமாகத்தான் தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தை எழுப்பினார்.
அவர் திராவிடநாடு கேட்டபோதும், தமிழ்நாடு கேட்ட போதும், அதில் முரண்பாடுகள் கண்டபோதும், அண்ணாவின் வளர்ச்சியைக் கடுமையாக எதிர்த்து, கண்ணீர்துளிப் பசங்கள் என்று திட்டி விட்டுக் கடைசியாக அண்ணா வந்தவுடனே இன்றைக்குத்தான் திராவிட ஆட்சி மலர்ந்தது என்று மகிழ்ந்த போதும், கருணாநிதிக்குச் சிலை வைக்கச் சொன்ன போதும், எல்லோரும் அர்ச்சகராகச் சட்டம் வந்தால் என் நெஞ்சில் தைத்த முள் அகன்று போகும் என்று சொன்ன போதும், உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதியரசர்களுக்கான இடம் காலியாக இருந்தால்கூட ஆட்சியாளர்களை அழைத்து அந்த இரண்டு இடத்திலேயும் பார்ப்பனரைப் போட்டு விடாதீர்கள் என்று கேட்கிற அளவுக்கு அக்கறை காட்டிய போதும், கல்லூரியில் முதல்வர் பதவி காலியாக இருப்பது தெரிந்தால்கூட பெரியார் உடனே சொல்வார், அந்த இடத்தில் பிற்படுத்தப்பட்டவரைப் போடு, தாழ்த்தப்பட்டவரைப் போடு என்பார்… இவை எல்லாம் செய்த போதும், இதெல்லாம் சின்னச் சின்னச் சீர்திருத்தங்கள், இவை போதும் என்று அவர் கருதவேயில்லை.
தன் வாழ்நாளில் ஒருசிலவற்றைச் சாதிக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பியது போல அவரும் விரும்பியிருக்கிறார். ஆனால் அந்த உடனடி விருப்பங்கள்தாம் அம்பேத்கரும் பெரியாரும் என்ற முடிவுக்கு வருவீர்களானால், அவர்களின் பெயர் சொல்லிப் பிழைப்பவர்களுக்கும், பதவி வேட்டையாடுகிறவர்களுக்கும் அவர்கள் பயன்படுவார்களே தவிர, விடுதலையை குறியிலக்காகக் கொண்டு போராடுகிறவர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக மாட்டார்கள். இருவருக்கும் அந்த உடனடிக் கோரிக்கைகளைக் கடந்த ஒரு நிலை இருக்கிறது. இந்துச் சமூகக் கட்டமைப்பை உடைத்து நொறுக்குவதற்கான கொள்கைக் கருவி அம்பேத்கரின் கருத்தியல். சாதியொழிப்புக்கு அடிப்படையான சமூகநீதி வழிப்பட்ட தமிழ்த் தேசிய ஓர்மைக்குப் பெரியார் தேவை. காலத்திற்கேற்ப அதில் கொஞ்சம் பட்டை தீட்ட வேண்டும், நீங்கள் தீட்டிக் கொள்ளுங்கள். யாரும் வருத்தப்பட மாட்டார்கள். பெரியார் வருத்தப்பட மாட்டார். வருத்தப்படுகிறவர்கள் பெரியாரியவாதிகளாகவும் இருக்க முடியாது.
நான் ஒன்று கேட்கிறேன் – 50 அகவைப் பெரியாருக்கும் 93 அகவைப் பெரியாருக்கும் வேறுபாடு இருந்ததா, இல்லையா? 93 அகவைப் பெரியாருக்கும் 140 அகவைப் பெரியாருக்கும் வேறுபாடு இருக்க வேண்டுமா, வேண்டாமா? யார் அவரை 140 அகவைக்கு வளர்த்துக் கொண்டு போவது, நாம்! நாமேதான்! வளராத பயிர் வாடி அழிந்து போகும், வளராத தத்துவம் காலத்துக்கு ஒவ்வாமல் மலடாகிப் போகும். வளரும் தத்துவமாக நீங்கள் கருதினால், காலத்திற்கேற்ப, கழிவன கழித்து, கொள்வன கொண்டு அதை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டும். பெரியாரைக் காப்பது மட்டுமல்ல, வளர்த்தெடுக்கவும் வேண்டும். அப்போதுதான் அவரைத் தமிழ்த் தேசியம் சொந்தம் கொண்டாடவும், தன் வளர்ச்சிக்கு அவரை உரமாக்கிக் கொள்ளவும் கூடும். இப்படித்தான் பெரியாருக்கும் தமிழ்த் தேசியத்திற்குமான உறவைப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன். நன்றி! வணக்கம் !
வினா-விடை – உரை முடிவில் அவையோர் கேட்ட வினாக்களும், தோழர் தியாகு அளித்த விடைகளும்
வினா: 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்தார் என்பதற்குக் காரணம் அந்தப் போராட்டம் வன்முறையை நோக்கி வளர்ந்து சென்றதாக இருக்குமா?
விடை: இருக்க முடியாது. ஏனென்றால் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே பெரியார் எதிர்த்தார். வன்முறை என்பது போராட்டம் தொடங்கிய பிறகுதான் வந்தது. அந்த வன்முறையும் கூட முதலில் காங்கிரசாரிடமிருந்துதான் வந்தது. குறிப்பாக மதுரையில் மாணவர் ஊர்வலத்தின் மீது காங்கிரசுக்காரர்கள் கொடுந்தாக்குதல் தொடுத்ததுதான் வன்முறையின் தொடக்கம். பல ஊர்களிலும் காங்கிரசுக்காரர்கள் இப்படி வன்முறைத் தாக்குதல் நடத்தினார்கள். காங்கிரசின் வன்முறையைப் பெரியார் கண்டிக்கவில்லை.
1965 சனவரி 26 குடியரசு நாள் – இந்திய அரசமைப்பின் 17ஆம் பகுதியின்படி இந்தி அரியணை ஏறும் நாளைத் துக்க நாள் எனக் குறித்து அந்த நாளில் அவரவர் வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றுவது என்பது திமுக அறிவித்த போராட்டத் திட்டம். இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கென்றே காங்கிரசார் ஒரு படை அமைத்தார்கள். அதற்குப் பெயர் சு.கா. படை. அதாவது சுதந்திரம் காக்கும் படை! இதன் தலைவர் சுப்புராமன் என்று நினைவு. குடியரசு நாளில் கறுப்புக் கொடி ஏற்றிய திமுகவினரின் வீடுகள் மீது சு.கா. படையினர் கல்வீசினார்கள். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். வீடு மோசமாகத் தாக்கப்பட்டது. திமுக அறப் போராட்டத்துக்கு எதிரான காங்கிரசாரின் இந்த வன்முறையையும் பெரியார் கண்டிக்கவில்லை.
மாணவர்களும் பொதுமக்களும் நடத்தியப் போராட்டத்தில் வன்முறை என்பது பெரும்பாலும் அரச வன்முறைதான். காவல்துறையினரும் இராணுவத்தினரும் ஏவிய அடக்குமுறையின் வன்முறைதான். மாணவர்கள் -மக்கள் தரப்பிலிருந்து நிகழ்ந்த வன்முறை என்பது ஒப்பளவில் மிகக் குறைவு. அதுவும் அரச வன்முறைக்கு எதிர்வினையாகத் தன்னெழுச்சியாக நிகழ்ந்ததே.
மாணவர்களும் பொதுமக்களும் நடத்தியப் போராட்டத்தில் வன்முறை என்பது பெரும்பாலும் அரச வன்முறைதான். காவல்துறையினரும் இராணுவத்தினரும் ஏவிய அடக்குமுறையின் வன்முறைதான். மாணவர்கள் -மக்கள் தரப்பிலிருந்து நிகழ்ந்த வன்முறை என்பது ஒப்பளவில் மிகக் குறைவு. அதுவும் அரச வன்முறைக்கு எதிர்வினையாகத் தன்னெழுச்சியாக நிகழ்ந்ததே.
பிப்ரவரி 10ஆம் நாள் போராட்டம் புயல் வேகம் கொண்டபோது, ஒரே நாளில் தமிழகம் எங்கும் ஏழு இடங்களில் காவல் துறை துப்பாக்கிச்சூட்டை நடத்தியது. அரசின் அறிவிப்புப்படியே 25 பேர் உயிரிழந்தனர். திருப்பூரில் மட்டும் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாகக் காவல் நிலையம் தாக்குண்டதும், காவல் துறையினர் இருவர் உயிரோடு எரிக்கப்பட்டதே போராட்ட வன்முறையின் உச்சம் எனலாம். இந்த வன்முறை வருந்தத்தக்கதுதான். இதைக் கண்டிப்பதிலும் தவறில்லை. ஆனால் அந்த ஒரே நாளில் திருப்பூர், பொள்ளாச்சி, குமாரபாளையம், திருச்செங்கோடு, கோவை, கரூர், மணப்பாறை, வெள்ளக்கோவில் போன்ற ஊர்களில் அரசப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் தொகைக்கு அரசு சரியான கணக்குத் தரவே இல்லை.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 500க்கு மேற்பட்டவர்கள் அரசின் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டார்கள். தமிழகத்தில் முதன்முதலாக ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டதும் இந்திய இராணுவம் கொண்டுவந்து இறக்கப்பட்டதும் இந்தப் போராட்டத்தின் போக்கில்தான். போராட்டத்தை நசுக்குவதற்காக பக்தவத்சலத்தின் காட்டாட்சி நடத்திய இந்தக் கொலைகார வன்முறையைக் கண்டிக்காத பெரியார், போராட்ட வன்முறையை மட்டுமே கண்டித்தார்.
மொழிச் சிக்கலில் இந்திய அரசின் பிடிவாதப் போக்கையும் பெரியார் கண்டித்தாரில்லை. இந்தி படிக்கச் சொல்வதில் என்ன தவறு? இந்தியை யார் எங்கே திணித்தார்கள்? என்றெல்லாம் கேட்கவும் செய்தார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது அரசமைப்புச் சட்ட விதிகளின்படி இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்த்து நடைபெற்றதே தவிர, இந்தி படிப்பது தொடர்பாக அல்ல. இந்தி படிப்பது தொடர்பான 1938 மொழிப் போராட்டத்துக்குத் தலைமையேற்ற பெரியார், இந்தியை ஆட்சிமொழியாகத் திணிப்பதற்கு எதிரான 1965 மொழிப் போராட்டத்தை எதிர்த்ததை என்னென்பது!
வினா: மொழிக் கொள்கையில் பெரியார் அண்ணாவிடமிருந்து மாறுபட்டாரா? அதனால்தான் போராட்டத்தை எதிர்த்தாரா?
விடை: 1965 போராட்டம் ஆட்சிமொழி தொடர்பானது. போராட்ட அணுகுமுறையில் வேறுபாடு இருந்தாலும் ஆட்சிமொழிக் கொள்கையில் இருவருக்கும் வேறுபாடு இல்லை என்பதுதான் உண்மை. இதில் அண்ணாவிடமிருந்து மட்டுமின்றி, இராசகோபாலாச்சாரியாரிடமிருந்தும் பெரியார் மாறுபடவில்லை.
இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை வலிந்துரைப்பதுதான் திராவிட இயக்கத்தின் பொது நிலைப்பாடு. எனவேதான் சவகர்லால் நேருவின் மோசடியான உறுதிமொழியை அவர்கள் நம்பி ஏற்றுக் கொண்டார்கள். இந்திதான் ஆட்சிமொழி, இந்தி பேசாத மக்கள் இதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் துணை ஆட்சிமொழி என்பதுதான் அந்த உறுதிமொழி. அதாவது தமிழும் பிற தேசிய மொழிகளும் ஒருநாளும் ஆட்சிமொழியாக முடியாது என்று பொருள். இந்திக்குத் துணையாக ஆங்கிலத்தை ஏற்க மறுத்தால் மாநில மொழிகள் வந்து விடும் பேராபத்து இருப்பதாக நேருவே சொல்லியிருப்பதற்கு நாம் சான்று கொடுத்துள்ளோம்.
உண்மையில் மாணவர் போராட்டத்தின் உணர்வு இந்திக்கு பதிலாக ஆங்கிலம் என்பதன்று. தமிழ் வாழ்க என்பதுதான் போராட்ட முழக்கமே தவிர ஆங்கிலம் வாழ்க என்பதன்று. ஆனால் இராசாசியும் அண்ணாவும் தங்கள் ஆங்கில ஆதரவு நிலைப்பாட்டுக்கு இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் பெரியாரின் எதிர்ப்பு இந்தக் காரணத்திற்காக அல்ல.
வினா: பெரியாரின் போராட்டத்தில் வன்முறை இடம்பெற்றதுண்டா?
விடை: இல்லை. பெரியார் மட்டுமல்ல, அம்பேத்கரும் போராட்டத்தில் வன்முறை கூடாது என்றே கருதினார். நிராயுதபாணியான மக்களை ஆயுதபாணியான அரசுடன் மோத விடுவதால் மக்களுக்கே இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து மக்களைப் பொறுப்புடன் வழிநடத்திய தலைவர்கள் அவர்கள். வன்முறை தவிர்த்த அறப் போராட்டங்களை காந்தியப் போராட்டம் என்று அழைப்பது வாடிக்கையாக உள்ளது. நீங்கள் அவற்றை பெரியாரியப் போராட்டங்கள், அம்பேத்கரியப் போராட்டங்கள் என்றும் அழைக்கலாம்.
ஆனால் மக்களின் தன்னெழுச்சிப் போராட்ட வன்முறைக்கான பழி அரசையே சாரும். அரசின் பிடிவாதப் போக்கும் கொடிய அடக்குமுறையுமே மக்களின் வன்முறைக்குப் பொறுப்பு.
ஆயுதப் போராட்டமும்கூட உண்மையான மக்கள் போராட்டமாக இருக்குமானால், அந்த வன்முறைக்கும் அரசே பொறுப்பு. வன்முறையைக் காரணங்காட்டி மக்கள் போராட்டங்களைக் காலித்தனம் என்று சாடுவதை ஏற்பதற்கில்லை.
ஆயுதப் போராட்டமும்கூட உண்மையான மக்கள் போராட்டமாக இருக்குமானால், அந்த வன்முறைக்கும் அரசே பொறுப்பு. வன்முறையைக் காரணங்காட்டி மக்கள் போராட்டங்களைக் காலித்தனம் என்று சாடுவதை ஏற்பதற்கில்லை.
வினா: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர் என்று மாற்றினால் என்ன?
விடை: மாற்றினால் நல்லது என்றே நாமும் கருதுகிறோம். திராவிடர் கழகம் தொடங்கிய நேரத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நேரத்திலும் இப்படிச் சிலர் முன்மொழிந்தனர் என்றும், அது பெரும்பான்மையினரால் ஏற்கப்பட வில்லை என்றும் அறிகிறோம்.
திமுக முதல் பொதுக்குழுவில் திராவிடத்துக்குப் பதில் தமிழகம் என்று பெயரிடுமாறு தான் கேட்டதாகவும், இதைச் சொல்லியே பெரியார் நம்மை ஒழித்து விடுவார் என்று சொல்லி அண்ணா மறுத்து விட்டதாகவும் கோவை செழியன் ஒரு முறை என்னிடமே சொன்னார்.
ஆனால் பெரியாரே ஒரு முறை ‘நாம் தமிழர்’ இயக்க ஆதித்தனாருடன் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமை தொடர்பான போராட்டம் அறிவிக்கும் போது, மொழிவழி மாநில அமைப்புக்குப் பிறகு திராவிட நாடு என்பது மோசடி, தமிழ்நாடு என்பதே சரி என்று அறிவித்தார்.
ஈ.வெ.கி. சம்பத் திராவிடத்தைப் புறந்தள்ளி தமிழ்த் தேசியக் கட்சி என்று பெயர் வைத்தார். பெயரைச் சரியாக வைத்தவர் காலப்போக்கில் உள்ளடக்கத்தில் கோட்டை விட்டு இந்திய தேசியச் சோதியில் கலந்து விட்டார்.
மறுமலர்ச்சி காணப் புறப்பட்ட வைகோவும் தன் கட்சிப் பெயரில் திராவிடத்தைத் தமிழகமாக்கத் தவறி விட்டார். இதைச் சொல்லியே கலைஞர் தங்களை ஒழித்து விடுவார் என்று அஞ்சியிருக்கக் கூடும்.
பெயரை மாற்றிக் கொண்டால் நல்லதுதான். ஆனால் அது மட்டுமே போதாது. மறுபுறம், பெயர் மாற்றம் செய்யாதவர்கள் எல்லாம் அதனாலேயே நமக்கு வேண்டாதவர்கள் ஆகி விட மாட்டார்கள்.
பெயரை மாற்றிக் கொண்டால் நல்லதுதான். ஆனால் அது மட்டுமே போதாது. மறுபுறம், பெயர் மாற்றம் செய்யாதவர்கள் எல்லாம் அதனாலேயே நமக்கு வேண்டாதவர்கள் ஆகி விட மாட்டார்கள்.
வினா: நாம் என்ற தமிழ்த் தேசியப் பண்பாட்டுக்குச் சாதியை ஒழிக்க என்ன வழி?
விடை: சாதியம் என்பது ஒருங்கே பொருளியல் அடித்தளத்திலும் பண்பாட்டு மேற்கட்டுமானத்திலும் இடம்பெற்றிருப்பது. பொருளாக்கத்திலும், செல்வப் பகிர்விலும் ஒருவரின் பங்கு என்ன, உழைப்பில் என்ன பங்கு, பெருமைக்குரிய உழைப்பா, சிறுமைக்குரிய உழைப்பா என்பதையெல்லாம் சாதி தீர்மானிக்கிறது. இந்த வகையில் சாதி வர்க்கமாக உள்ளது. ஆனால் அது பண்பாட்டு மேற்கட்டுமானத்திலும் இடம் பெற்றுள்ளது. சொந்த சாதிக்குள் மணம் செய்து கொள்ளும் அகமணமுறைதான் இந்தப் பண்பாட்டின் முதன்மைக் கூறு. சேர்ந்து உண்ணாமை, சாதிப் பட்டம், குலதெய்வ வழிபாடு போன்ற வேறு பல கூறுகளும் உண்டு என்றாலும் அகமணமுறையை இறுக்கமாகக் காப்பதில்தான் சாதியத்தின் வெறித்தனம் ஆகக் கொடூரமாக வெளிப்படுகிறது.
சாதி ஒழிப்புக்கான திட்டம் இந்தக் கூறுகள் அனைத்தையும், இவற்றுக்கிடையிலான அகத் தொடர்பையும் கணக்கில் கொள்ள வேண்டும். பொருளியல் அடித்தளத்தை மாற்றுவதற்கு நிலவுடைமைச் சீர்திருத்தம், அனைத்தளாவிய இட ஒதுக்கீடு, முதலாளியச் சுரண்டலைக் கட்டுக்குட்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இவற்றை மேற்கொள்ள அரசதிகாரம் தேவைப்படுகிறது. அதாவது ஒரு சமூகநீதி வேலைத்திட்டத்தை செயலாக்குவதற்கு தேசிய விடுதலை தேவைப்படுகிறது. அடிமைப்பட்ட தேசத்தால் தனக்குள்ளான உட்பட்ட அடிமைத்தனத்தைப் போக்கிக் கொள்ள முடியாது. அரசியல் தளத்தில் இதையே தமிழ்த் தேசியத்துக்கும் சாதி ஒழிப்புக்குரிய அடித்தளமாகிய சமூகநீதிக்குமான இடையுறவாகப் பார்க்கிறோம்.
சாதி ஒழிப்புக்கான திட்டம் இந்தக் கூறுகள் அனைத்தையும், இவற்றுக்கிடையிலான அகத் தொடர்பையும் கணக்கில் கொள்ள வேண்டும். பொருளியல் அடித்தளத்தை மாற்றுவதற்கு நிலவுடைமைச் சீர்திருத்தம், அனைத்தளாவிய இட ஒதுக்கீடு, முதலாளியச் சுரண்டலைக் கட்டுக்குட்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இவற்றை மேற்கொள்ள அரசதிகாரம் தேவைப்படுகிறது. அதாவது ஒரு சமூகநீதி வேலைத்திட்டத்தை செயலாக்குவதற்கு தேசிய விடுதலை தேவைப்படுகிறது. அடிமைப்பட்ட தேசத்தால் தனக்குள்ளான உட்பட்ட அடிமைத்தனத்தைப் போக்கிக் கொள்ள முடியாது. அரசியல் தளத்தில் இதையே தமிழ்த் தேசியத்துக்கும் சாதி ஒழிப்புக்குரிய அடித்தளமாகிய சமூகநீதிக்குமான இடையுறவாகப் பார்க்கிறோம்.
சமூகநீதி மட்டுமே சாதி ஒழிப்பன்று, ஆனால் சமூகநீதி இல்லாமல் சாதி ஒழிப்பு நடவாது. சமூகநீதி அடித்தளத்தின் மீது நிற்கும் போது சாதியப் பண்பாட்டுக்கு எதிராக, குறிப்பாக அகமணமுறைக்கு எதிராகப் போராடுவது எளிதாகிறது.
சுருங்கச் சொன்னால், சாதி ஒழிப்புப் போராட்டத்தில் மூன்று கட்டங்கள் உண்டு: தீண்டாமை ஒழிப்பு அல்லது சாதிய இழிவுகளுக்கு எதிரான போராட்டம், சமூக நீதிக்கான போராட்டம், அகமணமுறை உள்ளிட்ட சாதியப் பண்பாட்டுக்கு எதிரான போராட்டம். இவை ஒன்றன் பின் ஒன்றாக வரும் கட்டங்கள் அல்ல, ஒருங்கே தொடங்கி ஒன்றுக்கொன்று துணை செய்து, ஒவ்வொன்றாக நிறைவடையும் கட்டங்கள். முதல் கட்டத்தில் சூத்திரர்கள் உள்ளிட்ட சாதி இந்துக்கள் எதிர்நிலையில் இருக்கின்றார்கள். இந்தப் போராட்டத்தின் ஊடாகத்தான் பஞ்சமரும் சூத்திரரும் ஓரணியில் சேர இயலும். இதைத்தான் பெரியார் ‘பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது’ என்றார். தலித்தியம் என்பதும் சாதி ஒழிப்பையே குறிக்கும்.
சமூக நோக்கில் தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை இல்லாமல் இரண்டாம் கட்டமான சமூகநீதிக்கான போராட்டம் வெற்றி பெறாது. இதற்கான அரசியல் புரட்சியாகவே தேசிய விடுதலை மலர்கிறது.
தமிழ்த் தேசிய விடுதலை வழியாகக் கிடைக்கும் அரசதிகாரத்தைக் கொண்டு பொருளியல் அடித்தளத்தில் அடிப்படைச் சீர்த்திருத்தங்கள் செய்து சமூக நீதியை நிறுவவும், சமூகநிதியைத் தளமாகக் கொண்டு நீண்ட பண்பாட்டுப் புரட்சியை நடத்தவுமான வழி பிறக்கும். சாதியத்தின் இறுதி அரணாகிய அகமணமுறை ஒழியும் போதுதான் சாதி ஒழிப்பு நிறைவு பெறும்.
தமிழ்த் தேசியச் சமூகநீதிப் போராட்டத்தின் ஊடாகத்தான் ‘நாம் தமிழர்’ என்ற தமிழ்ப் பண்பாடு செழிக்க முடியும். பதிலுக்கு இந்தப் பண்பாடு அந்தப் போராட்டத்தின் வளர்ச்சிக்குத் துணைசெய்யும்.
தமிழ்த் தேசியச் சமூகநீதிப் போராட்டத்தின் ஊடாகத்தான் ‘நாம் தமிழர்’ என்ற தமிழ்ப் பண்பாடு செழிக்க முடியும். பதிலுக்கு இந்தப் பண்பாடு அந்தப் போராட்டத்தின் வளர்ச்சிக்குத் துணைசெய்யும்.
வினா: சாதியக் கட்டமைப்பை உயர்த்திப் பிடித்து அரசியல் நடத்தும் பிற்போக்குக் கட்சிகளை பெரியாரிய வழியில் எதிர்கொள்ள என்ன திட்டம் உள்ளது?
விடை: அண்மையில் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தை நீங்களும் கண்டிருக்கலாம். பெரியார் கொள்கை நடைமுறையில் சாத்தியமானது அல்ல என்று திமுக, அதிமுக, மதிமுக ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒரே குரலில் வாதிட்டார்கள். தேர்தல் அரசியல், பதவி அரசியல் அவர்களை இந்த முடிவுக்குத் தள்ளி விடுகிறது. பெரியாரே வோட்டுப் பொறுக்கிகள் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். தம் அரசியல் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் தாமே பாராட்டிய பல தலைவர்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லி இவர்கள் யாரையும் நம்ப முடியாது என்றார்.
தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தை இன்றைய நிலைமைக்கேற்ப தமிழ்த் தேசியத்துக்கும் சமூக நீதிக்குமான இருமுனைப் போராட்டமாகப் புரிந்து கொண்டு இந்தப் போராட்டத்தில் தமிழக மக்களை அணிதிரட்டுவதுதான் ஒரே வழி. பணநாயகத் தேர்தல் வழிப்பட்ட நாற்காலி அரசியல், பொய்யதிகாரப் பதவி அரசியல், வாய்ப்புவாத (சந்தர்ப்பவாத) அரசியல் இதற்குப் பயன்படாது என்ற தெளிவு தேவை.
தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தை இன்றைய நிலைமைக்கேற்ப தமிழ்த் தேசியத்துக்கும் சமூக நீதிக்குமான இருமுனைப் போராட்டமாகப் புரிந்து கொண்டு இந்தப் போராட்டத்தில் தமிழக மக்களை அணிதிரட்டுவதுதான் ஒரே வழி. பணநாயகத் தேர்தல் வழிப்பட்ட நாற்காலி அரசியல், பொய்யதிகாரப் பதவி அரசியல், வாய்ப்புவாத (சந்தர்ப்பவாத) அரசியல் இதற்குப் பயன்படாது என்ற தெளிவு தேவை.
வினா: இந்து மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாதுதானே?
விடை: நாம் அம்பேத்கரிடமே கேட்டுப் பார்க்க வேண்டும். இந்து மதத்தை ஒழிப்பது என்றால் என்ன? கோவில்களையும் கடவுள் வழிபாட்டையும் இந்துக்களின் இறைநம்பிக்கையையும் ஒழிப்பதா? இல்லை என்கிறார் அம்பேத்கர். இந்து என்ற சொல்லுக்கு மூன்று பொருள் இருப்பதாக அவர் சொல்கிறார்.
ஒன்று, இந்திய நிலப்பரப்பில் வாழும் மக்கள். கார்ல் மார்க்சு கூட இந்தப் பொருளில் இந்துக்கள் என்றார்.
ஒன்று, இந்திய நிலப்பரப்பில் வாழும் மக்கள். கார்ல் மார்க்சு கூட இந்தப் பொருளில் இந்துக்கள் என்றார்.
இரண்டு, இந்து என்னும் இறையியல். அதாவது இன்னின்ன கடவுளர்களை இன்னின்ன வடிவில் வழிபடுதல் என்பது. இந்து மதம் என்ற ஒன்று ஆதியில் இருந்ததா, அது எப்படி ஆறுமதக் கூட்டணியாக உருப்பெற்றது, இதில் ஆதிசங்கரரின் பங்கு, இது பற்றி காஞ்சிப் பெரியவர் கூறியது… எல்லாம் தனித் தலைப்பில் பேச வேண்டியவை.
மூன்று, இந்து மதத்துக்குரிய சமூகப் பொருளியல் கட்டமைப்பு, அதாவது வர்ண சாதிக் கட்டமைப்பு. இந்த மூன்றாவது பொருளில்தான் தீண்டப்படாத மக்கள் இந்துக்கள் அல்ல என்றார். அதாவது அவர்கள் நால்வர்ணக் கட்டமைப்புக்குப் புறத்தே வைக்கப்பட்டுள்ள புறச் சாதியினர், பஞ்சமர்கள். இந்தச் சமூகக் கட்டமைப்பை நியாயப்படுத்தும் கருத்தியல்தான் பார்ப்பனியம்.
சாதி ஒழிப்புக்கு இந்துச் சமூகக் கட்டமைப்பைக் கலைத்தாக வேண்டும் என்பதே சரியான புரிதல். இதற்கு மாறாக, இந்துக்களாகத் தங்களைக் கருதிக் கொண்டிருப்பவர்களின் சமய நம்பிக்கை, இறை நம்பிக்கை எல்லாவற்றையும் ஒழித்தால்தான் சாதியை ஒழிக்க முடியும் என்ற புரிதல் தவறானது. சாதி ஒழிப்புப் போராட்டத்திலிருந்து பெரும்பாலான மக்களை அயன்மைப்படுத்தக் கூடியது. சாதி ஒழிப்புப் போராட்டத்தைக் காலவரம்பின்றி ஒத்திவைக்கக் கூடியது. தேவாலயம் செல்லாத மக்களை மட்டும் வைத்துப் புரட்சி செய்வதென்றால் உருசியாவில் புரட்சியே நடந்திருக்காது. இந்துச் சமயம் என்பதற்கும் இந்துச் சமூகம் என்பதற்கும் உள்ள வேறுபாட்டில் தெளிவு தேவை.
உரை தட்டச்சு – மறத்தமிழன் கன்னியப்பன் (இளந்தமிழகம்)/ தோழர் தியாகு
தமிழ்த்தேசியவாதிகள் வைக்கும் முழக்கங்களில் ஒன்று ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்பது. நீங்கள் பெரியாரைப் படித்தவர். நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து தொடங்கி பின்னால் திராவிட முன்னேற்றக் கழகம் வரை தமிழ்த்தேசியம் தான் இதற்கு அடிப்படை. எந்த ஒரு தமிழ்த்தேசியக் கட்சியும் தி.மு.க எட்டிய அந்த வெகுஜன எல்லையை எட்டவே இல்லை. சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி, சம்பத் போன்றவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் யாருமே தமிழ்நாட்டின் வெகுமக்களை, தமிழ்த்தேசிய இனத்தை தி.மு.க. அளவுக்கு சென்று சேரவில்லை.
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து தொடங்கி பின்னால் திராவிட முன்னேற்றக் கழகம் வரை தமிழ்த்தேசியம் தான் இதற்கு அடிப்படை. எந்த ஒரு தமிழ்த்தேசியக் கட்சியும் தி.மு.க எட்டிய அந்த வெகுஜன எல்லையை எட்டவே இல்லை. சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி, சம்பத் போன்றவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் யாருமே தமிழ்நாட்டின் வெகுமக்களை, தமிழ்த்தேசிய இனத்தை தி.மு.க. அளவுக்கு சென்று சேரவில்லை.
65ல் நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் தி.மு.க.வுக்கு முக்கியப் பங்கு உண்டு. 38ல் பெரியார் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். எல்லைமீட்புப் போராட்டத்தில் பெரியார் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேவிகுளம், பீர்மேடு பறிபோவதைப் பற்றியோ, திருப்பதியை இழப்பதைப் பற்றியோ அவர் கவலைப்படவே இல்லை. அதே நேரத்தில் பொருளியல் ரீதியாக வடமாநிலத்தவர், மார்வாடிகள் இங்கு ஆதிக்கம் செய்வதைப் பற்றி பெரியாருக்கு ஒரு பார்வை இருந்தது.
திராவிடம் என்ற கருத்தியலினுடைய வரலாற்று உள்ளடக்கம் தமிழ்த்தேசியம் தான். தமிழ்த்தேசியத்தின் ஒரு உருத்திரிந்த வடிவம் தான் திராவிடம்.
அண்ணா திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தபோது பெரியார் “மொழிவழி மாநிலங்கள் அமைப்பதற்கு முன்னால் நாமும் திராவிட நாடு பற்றிப் பேசினோம். இப்போதுதான் மொழிவழி மாநிலங்கள் அமைந்து விட்டதே, இப்போது எந்த மலையாளியோ, தெலுங்கனோ தனிநாடு கேட்கிறானா? எனவே தனித்தமிழ்நாடு தான் நம் நோக்கமே தவிர, திராவிட நாடு அல்ல. இந்தச் சூழ்நிலையில் திராவிட நாடு கேட்பது ஒரு மோசடி” என்று கூறினார். இன்னொரு சமயத்தில் “நான் ஆதித்தனாருடன் இணைந்து தனித்தமிழ்நாடு கேட்டு போராடுவேன்” என்றே பெரியார் குறிப்பிட்டார்.
அண்ணாவிடம் பொதுக்குழு மாநாட்டில் கோவை செழியன் “கட்சியின் பெயரை மாற்ற வேண்டும். இங்கு திராவிட நாடு எங்கிருக்கிறது? நாம் தமிழ்நாட்டில் தானே இருக்கிறோம். எனவே தமிழர் முன்னேற்றக் கழகம் என்று வைக்க வேண்டும்” என்று கேட்கிறார். “அப்படி மாற்றினால் அதைச் சொல்லியே பெரியார் நம்மை ஒழித்துத் தள்ளிவிடுவார். அதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம்” என்று அண்ணா கூறினார்.
பின்னால் தி.மு.க.விலிருந்து வைகோ பிரிந்தபோது நான் அவரிடம் கூறினேன். “இதுதான் நல்ல சந்தர்ப்பம். இதைப் பயன்படுத்தி திராவிடம் என்ற சொல்லை ஒழித்து விட்டு தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ, மறுமலர்ச்சி தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ வையுங்கள்” என்று சொன்னேன். “அய்யோ இதை வைச்சே கலைஞர் ஒழிச்சுடுவார்” என்று பதறினார் வைகோ.
‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்தியத் தேசியமும் ஒருகட்டம் வரைக்கும் முற்போக்கானது. இந்தியத் தேசியத்தை ஆதரித்த காங்கிரஸ்காரரான சோமசுந்தர பாரதியார் தமிழ்த்தேசியம் என்ற பேச்சு வந்தபோது அதை ஆதரித்து பெரியாரோடு ஒன்றுபட்டார். ராஜாஜியை ஆதரித்த ம.பொ.சியும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை ஆதரித்தார். எனவே திராவிடம் என்ற வார்த்தையும் தமிழ்த்தேசியத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தவரை அது முற்போக்கானது தான்.
“திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம்” என்பதுதான் சரியாக இருக்க முடியும். திராவிடம் என்பது முந்தைய காலத்துக்குரிய ஒரு கருத்து. ‘அந்த சிறைக்குள்ளேயே தான் இருக்க வேண்டும். வெளியே வரக்கூடாது’ என்று சொன்னால் அது சிதைவாக மாறும்.
திராவிடம் என்ற வார்த்தை இந்தி எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, தமிழ்மண் காப்பு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பது போன்றவை தான். இதுதான் திராவிடம் என்றால் திராவிடத்தின் உள்ளடக்கம் தான் தமிழ்த்தேசியம். ஆனால் இந்த உள்ளடக்கத்தை இழந்து திராவிடம் என்ற சொல் வெறும் பதவிச்சண்டைக்கான சொல்லாக இன்று சிதைந்து சீரழிந்து கொண்டிருக்கிறது.
அதாவது நாற்காலி அரசியலில் கொள்கைகளை விட்டுவிட்டார்கள் என்று சொல்கிறீர்களா?
ஒவ்வொரு புரட்சியும் ஒரு அரசியல் புரட்சியில் இருந்துதான் தொடங்குகிறது. அரசியல் புரட்சியின் முக்கியமான கேள்வி யாருக்கு அதிகாரம் என்பது தான். அதிகாரத்தைக் கைப்பற்றாமல் சமூகத்தை மாற்ற முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றாமல் பொருளியலை மாற்ற முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்றாமல் பண்பாட்டை மாற்ற முடியாது. அதிகாரம் வேண்டும் என்று நினைப்பதில் தவறே இல்லை.
ஆனால் இவர்கள் தேடும் அதிகாரம் மேலே சொன்ன மாற்றங்களை உருவாக்குவதற்கான அதிகாரம் அல்ல. 52ல் தி.மு.க. தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த அதிகாரத்தின் மூலம் திராவிட நாடு சாத்தியமில்லை என்பதால் அவர்கள் போட்டியிடவில்லை. அதே தி.மு.க.தான் 57ல் போட்டியிடுகிறது. இப்போது வரை அது நீடிக்கிறது. இடையில் கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள் ஆசை காட்டினார்கள்; இவர்கள் பலியானார்கள்.
கட்சி தேர்தலில் நிற்காத போது தொழிற்சங்கப் போராட்டம், மொழிப்போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். நிறைய இளைஞர்களை ஈர்த்தார்கள். போராட்டங்களுக்காக மாதக்கணக்கில் சிறைத்தண்டனை அனுபவித்தார்கள். தேர்தலில் போட்டியிட்ட போது பதவிகளின் மீது மோகம் வந்தது. அந்தப் பதவிகள் தங்கள் நோக்கங்களுக்கு உதவுமா என்று பார்க்கத் தவறி விட்டார்கள். அப்படியே தங்களது குறிக்கோளையும் இழந்து விட்டார்கள். இலக்கை கைவிட்டு அமைப்பைப் பாதுகாத்தார்கள். இப்போது எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு ‘இங்க கொஞ்சம், டெல்லியில் கொஞ்சம் கிடைச்சா போதும்’ என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள்.
உண்மையான அதிகாரமில்லாத அதிகாரத்தின் மீது கொண்ட மயக்கம் இது. இவர்கள் கையில் இருக்கிற அதிகாரத்தை வைத்துக்கொண்டு இலவசங்கள் தருவதைத் தவிர எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. தேர்தலின் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது என்பதால் தான் நாங்கள் (தமிழ்த் தேசியவாதிகள்) தேர்தலைப் புறக்கணிக்கிறோம்.
தமிழ்த்தேசியத்தில் கலாச்சாரம் என்பதை எதன் அடிப்படையில் வரையறுக்குறீர்கள்? ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரமா?
பண்பாடு என்பதே ஒரு சமூகத்தை ஒன்றுபடுத்தியிருக்கிற விழுமியங்களின் தொகுப்பு. ஆதிக்கத்துக்கும் அடிமைக்குமான போராட்டம் அல்லது நீதிக்கும் அநீதிக்குமான போராட்டம் எப்படி சமூகத்தில் வேரூன்றியிருக்கிறதோ, அதேபோல் இரு பண்பாடுகளுக்கிடையேயான ஒரு போராட்டம் தான் ஒரு தேசிய இனப்பண்பாடாக மாறுகிறது. பிறப்பினால் வேற்றுமை பாராட்டுவதையும், சாதியத்தையும் நியாயப்படுத்துகிற பண்பாடு ஒருபக்கம். மற்றொரு பக்கம் இதை எதிர்த்து பிறப்பினால் வேற்றுமை இல்லை என்று சொல்கிற பண்பாடு. இந்த இரண்டும் இன்றோ, நேற்றோ முளைத்து விடவில்லை. நம்முடைய வரலாறு நெடுகிலும் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஒருபக்கம் தான் திருவள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை நீடிக்கிறது. மற்றொரு பக்கம் பார்ப்பன கருத்தியல்கள்.
முற்போக்கான தமிழ்த்தேசிய பண்பாடு என்பதன் அடையாளமாக குறள் நெறியை முன்வைக்கிறோம். குறள்நெறி என்பது சமத்துவம், பகிர்வு, அன்புடைமை என்பதை அடிப்படையாகக் கொண்டது. நிலையாமை தான் அதன் மெய்யியல். இதைத்தான் நாம் தமிழ்த்தேசிய பண்பாடு என்கிறோம்.
இது சாதீயத்திற்கு, மதவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிற ஒரு பண்பாட்டு நிலைப்பாடு. தமிழ்த்தேசிய பண்பாடு விரிவடைவதன் ஒரு பகுதிதான் சாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெறுவது. எழுத்துக்களின் வடிவங்கள், உடைகள் என எல்லாவற்றிலும் காலத்திற்கு தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாற்றங்கள் சமத்துவப் பண்பாட்டின் இழைகளாக இருக்க வேண்டும். சமத்துவப் பண்பாட்டின் மாற்றங்களுக்கு இணையாகத் தான் இந்தப் பண்பாடு வளர வேண்டும்.
பல்வேறு பண்பாடுகளும் ஒரு தமிழ்த்தேசிய பண்பாட்டோடு இணைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இணைவுகளை அங்கீகரிக்கிற ஒரு பண்பாட்டைத் தான் நாம் தமிழ்த்தேசிய பண்பாடு என்கிறோம். தமிழ் நாட்காட்டி வைத்திருப்பதால் அதையே தான் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. உலகம் முழுவதும் பயன்படுத்தும் நாட்காட்டியை நாமும் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் நம்முடைய மாதங்கள், வருடங்கள் போன்றவற்றையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரை, விளையாட்டுகள் சமூகத்தின் பொருள் உற்பத்தி முறையில் இருந்துதான் வருகின்றது. விலங்குகளோடு இரண்டு கால் விலங்குகளாக மனிதன் இருந்த நிலை மாறி கால்நடைகளை உழவுக்குப் பயன்படுத்துவது, தன்னுடைய பயணத்திற்குப் பழக்கப்படுத்துவது என மாற்றத் தொடங்கிய காலத்தில் தான் ஜல்லிக்கட்டு தொடங்கியிருக்கும். பிரபுத்துவ, சாதீய சமூகத்திற்கு முன்னதாகவே ஜல்லிக்கட்டு இங்கே இருந்து வந்திருக்கிறது.
நிலப்புரபுத்துவ சமூகத்தின் ஒரு கூறாகத் தான் ஜல்லிக்கட்டு இருந்திருக்கிறது என்ற வாதமும் வைக்கப்படுகிறது. அதாவது தன்னிடமிருந்த அடிமைகளையும், மாடுகளையும் நிலப்பிரபுக்கள் மோதவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் ஜல்லிக்கட்டு என்ற ஒரு கூற்றும் உள்ளதல்லவா?
ஒவ்வொரு பழக்கமும் அந்தந்த காலத்தின் நிகழ்வை உள்வாங்கித்தான் மாறும். ஆடு, கோழி பலியிடுவது என்பது நீண்டகாலமாக நம் மக்களின் பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இடையில் நிலப்புரபுத்துவ காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது அடிமைகள் ஆடு, கோழிகளை நிலச்சுவான்தார்கள் வீட்டில் கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்தது. தஞ்சை, திருவாரூரின் ஒரு சில பகுதிகளில் இந்தப் பழக்கம் இப்போதும் தொடர்கிறது. பொங்கல் பண்டிகையிலும் நிலப்பிரபுத்துவம் வந்து விட்டது. அதற்காக பொங்கலை நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?
சமூகத்தின் உற்பத்திப் பெருக்கமும், ஆதிக்க சக்திகளும், அதன் கருத்தியலும் தேசியப் பண்பாட்டில் கலப்பதை நாம் அடியோடு தடுத்து விட முடியாது. இதன் அடிப்படையில் தான் ஜல்லிக்கட்டையும் பார்க்க வேண்டும். இதிலிருக்கிற பிரபுத்துவத்தை ஒழிக்க வேண்டும். எல்லோரும் கலந்து கொள்ளும்படியும் பாதுகாப்பானதாகவும் அதை மாற்ற வேண்டும். நம்முடைய இயக்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கனவே இருக்கிற பழக்கம் அது, அப்படியே தொடரட்டும், காலப்போக்கில் அது மறையட்டும் என்று தான் சொல்கிறேன். அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்த் தேசியவாதிகள் கற்பு என்ற பெயரில் பெண்களை மறுபடியும் வீட்டுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ‘குஷ்பு-கற்பு’ பிரச்சினையின்போது பெண்ணியவாதிகளால் வைக்கப்பட்டது, அது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஒவ்வொரு கருத்தும் சமூகத்தில் எப்படி வந்தது, யாரைப் பாதுகாக்க வந்தது என்று பார்க்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு சமூகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் அவளைப் பாதுகாக்க கற்பை வைத்தார்கள்.
ஒவ்வொரு கருத்தும் சமூகத்தில் எப்படி வந்தது, யாரைப் பாதுகாக்க வந்தது என்று பார்க்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு சமூகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் அவளைப் பாதுகாக்க கற்பை வைத்தார்கள்.
எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய விழுமியங்களோ, கருத்துக்களோ கிடையாது. ஒவ்வொரு கருத்தும் ஒரு காலத்திற்குப் பொருந்தும்; இன்னொரு காலத்திற்குப் பொருந்தாது. கலையும் இலக்கியமும் கடவுளையும், அரசரையும் புகழ்ந்து பாடுவதற்கே என்ற நிலையில் இருந்தபோது ‘கலை கலைக்காகவே, இலக்கியம் இலக்கியத்துக்காகவே’ என்ற முழக்கம் வந்தது. அப்போது அது மிகவும் முற்போக்காகக் கருதப்பட்டது. பின்னர் அதுவும் பின்னால் தள்ளப்பட்டு ‘கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்ற கருத்து முற்போக்குக் கருத்தாக இப்போது இருக்கிறது.
இப்படித்தான் கற்பும். பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு காலகட்டத்தில் பாதுகாப்புக்கு ஒருவன் தேவை என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட கருத்துதான் அது. ஆனால் இன்று அது பெண்ணை அடிமைப்படுத்துகிற கருத்தாக மாறிவிட்டது. எனவே அதை எதிர்ப்பதைப் பற்றி எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அது ஜனநாயகத்தின் பெயரில் சமூக உறவுகளில் அராஜகத்தை நுழைப்பதாக இருக்கக் கூடாது.
குஷ்பு முன்மொழிந்த கருத்து அராஜகம். அதனால் அதை எதிர்த்தோம். அதில் ஆணாதிக்க சிந்தனை எதுவும் கிடையாது. எங்கெல்ஸ் “குடும்பம் என்ற அமைப்பில் எனக்கு உடன்பாடு கிடையாது. குடும்பம் என்ற அமைப்பே ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான். ஆண், பெண் இருவருக்கும் பாலியல் சுதந்திரம் வேண்டும். அது குடும்பங்களில் இல்லை.” என்று குறிப்பிடுவார். ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. தேசிய இனத்தின் சமூக கட்டமைப்பையே அது சீரழித்து விடும்.
ஒரு ஒழுங்கை எதிர்ப்பது என்பது இன்னொரு ஒழுங்கை கட்டமைப்பதற்காக; ஒழுங்கே இல்லாமல் எப்படியும் போகலாம் என்பதற்காக அல்ல.
தமிழ்த் தேசியவாதிகள் ஆரியமயமாகிவிட்ட சிறுதெய்வ வழிபாட்டை ஆதரிப்பது குறித்து?
ஒரு சமூகம் என்பது ஒரு தனிமனிதனோ, சில மனிதர்கள் இணைந்தோ, அரசனோ திட்டம் போட்டு உருவாக்குகிற செயல் அல்ல. ஒரு தேசியச் சமூகம் என்பது வரலாற்று வழியில் மலர்ந்து, நிலைத்து நிற்பது. இருக்கிற எதார்த்தங்களில் இருந்து தான் ஒரு இயக்கம் தோன்ற வேண்டியிருக்கிறது. சிறுதெய்வ வழிபாடு ஏன் தோன்றியது, எப்படி வளர்ந்தது என்பதெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்.
ஒரு சமூகம் என்பது ஒரு தனிமனிதனோ, சில மனிதர்கள் இணைந்தோ, அரசனோ திட்டம் போட்டு உருவாக்குகிற செயல் அல்ல. ஒரு தேசியச் சமூகம் என்பது வரலாற்று வழியில் மலர்ந்து, நிலைத்து நிற்பது. இருக்கிற எதார்த்தங்களில் இருந்து தான் ஒரு இயக்கம் தோன்ற வேண்டியிருக்கிறது. சிறுதெய்வ வழிபாடு ஏன் தோன்றியது, எப்படி வளர்ந்தது என்பதெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்.
முருக வழிபாடு எப்படித் தோன்றியது, குலத்தலைவர்கள் எப்படி தெய்வங்கள் ஆக்கப்பட்டார்கள் என்பதெல்லாம் ஆராய்ச்சிக்குரியது. இப்போதைய சூழ்நிலையில் இன்றைய அரசியல் தலைவர்கள் நாளை கடவுளாக்கப்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று வேண்டுமானால் நாம் யோசிக்கலாம். இந்த வழிபாட்டு முறைகள், அதில் வெளிப்படுகிற மெய்யியல் சிந்தனைகள், அதில் வெளிப்படுகிற போராட்டப் பதிவுகள் இதையெல்லாம் ஒரு தேசிய இனத்தினுடைய வரலாற்று ஆழங்களிலிருந்து வளர்ந்து வருபவை.
மார்க்சியம், தத்துவம் என எல்லாவற்றிலும் மாவோ தேர்ச்சி பெற்றவராய் இருந்தாலும் அவரது வெற்றிக்கு முக்கியக் காரணம் சீனாவின் வரலாற்றை மிகத்தெளிவாக அவர் புரிந்து வைத்திருந்தது தான். லெனினும் ரஷ்யாவின் வரலாற்றில் அதிக தேர்ச்சி பெற்றிருந்தார். இங்குள்ள தலைவர்களுக்கு அந்தப் புரிதல் இல்லை என்பது வருத்தமான செய்திதான்.
நம்முடைய வரலாறு என்பதை திருவள்ளுவரில் தொடங்கி முருகவழிபாடு, வள்ளலார் என எல்லாவற்றில் இருந்தும் தான் ஆரம்பிக்க வேண்டும். அதற்காக முருகனை தூக்கிக்கொண்டு ஊர்வலம் போக வேண்டும் என்று சொல்லவில்லை. சிறுதெய்வ வழிபாடு குறித்து விவாதிக்கலாம், ஆராய்ச்சி செய்யலாம் ஆனால் அதுவே சமூக மாற்றத்திற்குக் காரணமாக இருந்து விடாது.
மாவோ குறித்துப் பேசுவதால் இந்தக் கேள்வி. இங்குள்ள நக்சலைட்டுகள் நம் சமூக சூழ்நிலையை உள்வாங்காமல் செயல்படுவதாக ஏற்கனவே குறிப்பிட்டீர்கள். இப்போதைய நக்சலைட்டுகளின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
நம் இந்தியச் சமூகம் பற்றிய, தமிழ்ச்சமூகம் பற்றிய, ஆளும் வர்க்கம் பற்றிய பார்வைகள் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறாக உள்ளது. எனவே நக்சலைட்டுகள் என்ற ஒரே வார்த்தையின் கீழ் எல்லாரையும் கொண்டு வர முடியாது. இப்போதைய நக்சலைட்டுகள் மரபுவழிக்கட்சியின் பார்வையில் இருந்து தங்களை முறித்துக்கொண்டு வந்துவிடவில்லை. ஆனால் ஒரு சிலர் அந்த பார்வையை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
நம் இந்தியச் சமூகம் பற்றிய, தமிழ்ச்சமூகம் பற்றிய, ஆளும் வர்க்கம் பற்றிய பார்வைகள் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறாக உள்ளது. எனவே நக்சலைட்டுகள் என்ற ஒரே வார்த்தையின் கீழ் எல்லாரையும் கொண்டு வர முடியாது. இப்போதைய நக்சலைட்டுகள் மரபுவழிக்கட்சியின் பார்வையில் இருந்து தங்களை முறித்துக்கொண்டு வந்துவிடவில்லை. ஆனால் ஒரு சிலர் அந்த பார்வையை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
ஆரம்பத்தில் சாரு மஜூம்தார் சீனாவை அப்படியே காப்பியடித்தார். மாவோ முதலாளிகளை தரகு முதலாளிகள் என்றார். இவரும் அதே வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் சீனா ஒரு அரைக்காலனிய நாடு என்றார், சாருவும் இந்தியாவை அரைக்காலனிய நாடு என்றார். மாவோ விவசாயப்புரட்சியை கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்றார். இவரும் அதையே சொன்னார். சீனா அப்போது தொழிற்வளர்ச்சியில் பின்தங்கியிருந்தது அதனால் அங்கு தொழிற்சங்கங்கள் இல்லை. இங்கிருந்த தொழிற்சங்கங்களையும் சாரு மஜூம்தார் கலைக்கச் சொன்னார். அங்கு நாடாளுமன்றம் இல்லை, அதனால் மாவோ தேர்தலில் போட்டியிடவில்லை. இங்கு நாடாளுமன்றம் இருந்தும் இவர்கள் போட்டியிடவில்லை.
இந்தப் பார்வையில் இருந்து முழுமையாக இப்போதைய இயக்கவாதிகள் விடுபட்டு விட்டதாக எனக்குத் தோன்றவில்லை. நான் ‘சுவருக்குள் சித்திரங்கள்’ தொடர் எழுதும்போது எம்.எல். தோழர்கள் சிலர் ‘நக்சலைட்டுகள் பற்றி எழுத வேண்டாம், அது எதிர்வினையை ஏற்படுத்தி விடும்’ என்று கூறினார்கள். ‘அப்படி எதிர்வினை ஏற்பட்டால் மகிழ்ச்சிதான், ஏனெனில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும்போது, பல்லாயிரம் பேர் ஓர் இயக்கத்தை நம்பி எல்லாவற்றையும் துறந்து அந்த இயக்கத்தில் சேரும்போது அதன் தலைவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருக்கக்கூடாது, பொறுப்புணர்வோடு அந்தப் போராட்டத்தை நடத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஓர் இயக்கத்தை தவறாக வழிநடத்துபவர்களை அவசரக் குடுக்கைகள் என்று சொல்வதில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை’ எனக் கூறினேன்.
நக்சலைட்டுகள் இப்போதும் யாரையாவது திட்டுவது, சொன்னதையே சொல்வது என்றுதான் இருக்கிறார்கள். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவே இல்லை. இன்றுவரை எந்த ஆயுதப் போராட்டமும், புரட்சியும் நடந்து விடவில்லை. அதற்காக அவர்களை நான் குறைகூறவில்லை. நிஜ வாழ்க்கை அதை அங்கீகரிக்காதபோது அதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி.
சமூகத்தின் உணர்வுநிலையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருக்கும்போது, அந்த மாற்றத்தை செயல்படுத்த அரசு எந்திரம் தடையாக இருக்கும்போது ஆயுதம் உதவும். ஆனால் சமூகத்தின் உணர்வு நிலையையே மாற்றுவதற்கு ஆயுதம் உதவாது. இதுபோன்ற செயல்களை லெனின் ‘செயலற்ற தீவிரவாதம்’ என்று குறிப்பிடுவார். அந்த செயலற்ற நிலையைத்தான் இப்போதைய நக்சலைட்டுகளிடம் நான் பார்க்கிறேன்.
சமீபத்தில் தமிழ்த் தேசியவாதிகள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு விருது வழங்கி கவுரவித்தது. அதே மேடையில் மகாலிங்கம் சமஸ்கிருதத்தை ஆதரித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து…
மகாலிங்கத்திற்கு விருது கொடுத்தது மிகப்பெரிய தவறு. அதில் என் பங்கு எதுவும் இல்லை. நெடுமாறனுடைய முடிவு அது. எனக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டால் நான் அங்கு சென்றிருக்கவே கூடாது அல்லது அங்கிருந்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். சென்றபிறகு அந்த மேடையில் அழைத்தவர்களையே தாக்கிப் பேசுவது நாகரீகமாக இருக்காது. சமஸ்கிருதத்தின் முதன்மை பற்றி பொள்ளாச்சி மகாலிங்கம் பேசியதை வைகோ அந்த மேடையிலேயே மறுத்துப் பேசினார்.
மொழிக்கொள்கை குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. ஒரு மொழிக்கொள்கை தான் சரி என்றும், இருமொழிக் கொள்கையால் ஆபத்து இல்லை என்றும் இருவேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
தேசிய இனம் என்பதே ஒருமொழி அடிப்படையிலானது. எனவே தம்மொழி முதன்மை பெற வேண்டும் என்கிற போதே ஒருமொழிக்கொள்கை தான் சரி. ஆங்கிலத்தை தேவை கருதி பயன்படுத்துவதில் தவறே இல்லை. ஆனால் அதற்கு இருமொழிக் கொள்கை என்ற பெயர் எங்கிருந்து வந்தது? இருமொழிக்கொள்கை என்று வரும்போதே தமிழையும் ஆங்கிலத்தையும் சம இடத்தில் வைக்கிறோம் என்றுதானே அர்த்தம்.
காங்கிரஸ்காரர்கள் சொல்லும் மும்மொழிக்கொள்கை என்பது இந்தி ஆதிக்கம் தான். அதேபோல் இருமொழிக்கொள்கை என்பது ஆங்கில ஆதிக்கக் கொள்கைதான். அதாவது மும்மொழிக்கொள்கை என்பது இந்தி என்கிற ஒருமொழிக் கொள்கை. இருமொழிக்கொள்கை என்பது ஆங்கிலம் என்கிற ஒருமொழிக் கொள்கை.
எல்லா பாடத்திட்டங்களும் தமிழில் இல்லாத நிலையில் நாம் ஆங்கிலத்தைப் புறக்கணித்து விட்டால் தமிழ் மாணவர்கள் பின்தங்கி விடுவார்கள் என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறதே?
ஆங்கிலத்தில் இருக்கும்போது அதை அப்படியே படிப்பதில் தவறில்லை. அதை தமிழில் மாற்றுவதற்கு இங்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? பொறியியல், மருத்துவ படிப்புகள் இப்போது ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. அதை தமிழில் கொண்டு வரும்வரை அந்தக் கல்லூரிகளை மூடி விடுங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அதைத் தமிழில் கொண்டு வருவதற்கு என்ன தடை என்று தான் கேட்கிறோம்.
தமிழ்த் தேசியமே இறுதி இலக்கு என்று இருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகள் தனித்தனி அமைப்புகளாக செயல்படுவது ஏன்?
அமைப்புக்கள் என்பதே கருத்துக்களின் வெளிப்பாடு தான். சுபவீயின் வற்புறுத்தலின் பேரில் தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் முதலில் எழுந்த கேள்வியே அமைப்புகளின் குறிக்கோள் என்ன என்பது தான். நாங்கள் தேசிய விடுதலை என்றோம், பெ.மணியரசன் தன்னுரிமை என்றார். சுபவீயோ, ‘தன்னுரிமையோ, தேசிய விடுதலையோ, அல்லது வேறொன்றோ எதை வேண்டுமானாலும் குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் நெடுமாறன் தலைமையில் ஒன்றிணைந்து ஒரே இயக்கமாக செயல்பட வேண்டும்’ என்று கூறினார்.
அமைப்புக்கள் என்பதே கருத்துக்களின் வெளிப்பாடு தான். சுபவீயின் வற்புறுத்தலின் பேரில் தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் முதலில் எழுந்த கேள்வியே அமைப்புகளின் குறிக்கோள் என்ன என்பது தான். நாங்கள் தேசிய விடுதலை என்றோம், பெ.மணியரசன் தன்னுரிமை என்றார். சுபவீயோ, ‘தன்னுரிமையோ, தேசிய விடுதலையோ, அல்லது வேறொன்றோ எதை வேண்டுமானாலும் குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் நெடுமாறன் தலைமையில் ஒன்றிணைந்து ஒரே இயக்கமாக செயல்பட வேண்டும்’ என்று கூறினார்.
விவாதம் நீண்டுகொண்டே போய் இறுதியில் பொதுமுழக்கமாக ‘தமிழ்த்தேசிய இறையாண்மை’ என்பதை வைத்துக் கொள்ளலாம் என முடிவானது. முதலில் எல்லா அமைப்புகளும் இணைந்து இயங்குவது, பின்னர் அதை கூட்டமைப்பாக மாற்றி, காலப்போக்கில் ஒரே அமைப்பாக கொண்டு வந்து விடலாம் என முடிவு செய்தோம். நெடுமாறன், ‘நாம் மூன்று அமைப்புகள் மட்டும் இணைந்தால் போதாது, தமிழ்நாட்டில் நம்மைப்போல் எண்பது அமைப்புகள் உள்ளன. அனைவரும் இணைந்து இயங்கலாம்’ என்றார்.
இந்தக் கருத்தில் எனக்கு மாறுபாடு இருந்தது. ‘இந்த மூன்று அமைப்புகள் மட்டும்தான் தீவிரமாக வேலை செய்யும். மற்றவர்களிடம் அந்தத் தீவிரம் இருக்காது. எனவே தெருமுனையில் மன்றம் வைத்திருப்பவர்களை எல்லாம் நம்முடன் இணைத்துக் கொண்டால் அது அரசியல் இயக்கமாக இருக்காது’ என்று கூறினேன்.
என்னுடைய முக்கியமான கோரிக்கையாக தேர்தல் புறக்கணிப்பு இருந்தது, பெ.மணியரசனுக்கு அதில் உடன்பாடு இருந்தது. அதை நெடுமாறன் ஒத்துக்கொள்ளவில்லை. ‘நமக்கு ஆதரவான சக்திகள் போட்டியிடும்போது அதை ஆதரிக்க வேண்டும். பிற்காலத்தில் நாமே போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார். இப்படி ஒரு கருத்தை வைத்திருப்பவரோடு எப்படி ஒன்றுசேர முடியும்? பார்க்கிறவர்களுக்கு அவர் தமிழ்த்தேசிய பெருந்தலைவராக இருக்கலாம்; பத்திரிகைகள் அவருக்கு முக்கியத்துவம் தரலாம். அதற்காகவே எல்லோரையும் ஒன்று சேர்த்து விட முடியாதே!
அதே நேரத்தில் தனித்தனி கொள்கைகள் இருப்பதாலேயே இந்தி எதிர்ப்பு, தமிழ்மொழிப் பாதுகாப்பு போன்ற கோரிக்கைளுக்காக நாங்கள் ஒன்று சேர்ந்து போராடாமலும் இல்லை.
புதுவையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் எனக்கு முன்னால் பேசிய ஒரு தோழர், ‘எல்லாக் கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்’ என்று குறிப்பிட்டார். நான் பேசும்போது, ‘எதற்காக எல்லாக் கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். எல்லாக் கம்யூனிஸ்டுகளும் ஒன்று சேர்ந்து அது ஒரு சிறு குழுவாக மக்கள் மத்தியில் இருப்பதற்குப் பதிலாக, ஒரு கம்யூனிஸ்டு கட்சி வெகுமக்களைத் திரட்டி புரட்சி செய்தால் போதுமானது. அப்படித்தான் உலக வரலாற்றில் மாற்றங்கள் சாத்தியமாகியிருக்கிறது’ என்று குறிப்பிட்டேன்.
அதுபோல தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டில் நூறுபேர் கொண்ட ஒரு குழுவாக இருப்பதற்குப் பதிலாக, தமிழ்த் தேசியவாதிகளில் ஒழுங்காகச் செயல்படுகிற பத்துபேர் தமிழ்த்தேசிய சிக்கலை சரியாகப் புரிந்து கொண்டு மக்களைத் திரட்டி மாற்றம் கொண்டு வர முடியுமானால் அதுதான் முக்கியமானது. அதற்கு நீங்கள் குறிப்பிட்ட இந்த சேர்க்கை முரண்பாடாகத் தான் இருக்கும்.
இதில் எனக்கு சுபவீயோடும் முரண்பாடு இருக்கிறது. சமூகநீதி மாநாட்டில் பேசும்போது, ‘மண்டல் குழுவை நாம் ஆதரிக்கிறோம், வடநாட்டில் எதிர்க்கிறார்கள். அதை எல்லோரும் இணைந்து தான் அமல்படுத்த வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது. நமக்கு உடன்பாடு இருந்தாலும் அதை நாம் நிறைவேற்றிக் கொள்வதற்கு அனைவருக்கும் ஒரே அரசியல் அமைப்புச் சட்டம் என்ற அமைப்பு தான் தடையாக இருக்கிறது. எனவே சமூகநீதியுடன் கூடிய தனி அரசு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்று பேசினேன்.
‘விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தத் தீர்மானம் தேவையற்றது, தீர்மானத்தை உடனடியாக கைவிடவும்’ என்று சுபவீ கோரினார். மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம், தமிழ்வழிக்கல்வி, இட ஒதுக்கீடு இந்த மூன்று கோரிக்கைகளும் போதுமானது என்பது அவரது கருத்து. இப்படி கருத்து வேறுபாடுகளை வைத்துக் கொண்டு தமிழ்த்தேசியம் என்ற பெயர் இருப்பதாலேயே நாங்கள் அனைவரும் எப்படி இணைந்து இயங்க முடியும்? தமிழ்த்தேசியம் என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல, அது ஒரு அறிவியல் கண்ணோட்டம். சமூக மாற்றம் பற்றிய ஓர் அறிவியல் பார்வை. அந்த அறிவியலை எந்த ஒற்றுமைக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.
தமிழ்மொழி பாதுகாப்பு, ஈழப் பிரச்சனை போன்றவற்றின் வழியாக பி.ஜே.பி. போன்ற மதவாத இயக்கங்கள் தமிழ்த் தேசியவாதிகளோடு இணைந்து செயல்பட முயற்சிக்கிறார்கள் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை? சமீபத்தில் கூட ஈழப்பிரச்சனைக்காக நெடுமாறனும் இல.கணேசனும் இணைந்து பணியாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டு கூட எழுந்தது..
நாங்கள் பி.ஜே.பி.யோடு எந்தக் காலத்திலும் இணைந்தது கிடையாது. நெடுமாறன் இல.கணேசனோடு சேர்ந்து ஜெயலலிதாவுக்கு ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டம் கொடுத்த விழாவில் போய் பேசினார். ‘ராஜாஜியைப் போல் திறமையானவர் ஜெயலலிதா’ என்று பாராட்டிப் பேசினார். அது அவருடைய கருத்து. அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. பி.ஜே.பி. என்பது இந்திய தேசியத்தின் படுபிற்போக்கான ஒரு வடிவம். இந்துத்துவ, பார்ப்பனீய, சாதி ஆதிக்கத்தை கட்டி நிறுவுகிற ஒரு அமைப்பு. அவர்களோடு நமக்கு எந்தவிதமான அரசியல் உறவோ, அமைப்பு உறவோ இருக்க முடியாது. ஈழ விடுதலையை பி.ஜே.பி.யால் ஒருபோதும் ஆதரிக்கவே முடியாது.
நாங்கள் பி.ஜே.பி.யோடு எந்தக் காலத்திலும் இணைந்தது கிடையாது. நெடுமாறன் இல.கணேசனோடு சேர்ந்து ஜெயலலிதாவுக்கு ‘சமூகநீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டம் கொடுத்த விழாவில் போய் பேசினார். ‘ராஜாஜியைப் போல் திறமையானவர் ஜெயலலிதா’ என்று பாராட்டிப் பேசினார். அது அவருடைய கருத்து. அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. பி.ஜே.பி. என்பது இந்திய தேசியத்தின் படுபிற்போக்கான ஒரு வடிவம். இந்துத்துவ, பார்ப்பனீய, சாதி ஆதிக்கத்தை கட்டி நிறுவுகிற ஒரு அமைப்பு. அவர்களோடு நமக்கு எந்தவிதமான அரசியல் உறவோ, அமைப்பு உறவோ இருக்க முடியாது. ஈழ விடுதலையை பி.ஜே.பி.யால் ஒருபோதும் ஆதரிக்கவே முடியாது.
அதே நேரத்தில் பி.ஜே.பி.யின் பின்னால் இருக்கிற தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், தமிழர்களுக்கும் நமக்கும் எந்த உறவும் இல்லை என்றும் சொல்ல முடியாது. ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் வந்தபோது பி.ஜே.பி.யும், கம்யூனிஸ்டுகளும் இணைந்து போராடினார்கள். தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் ஒன்றிணைந்தார்கள். பி.ஜே.பி.யின் எந்த கொள்கையையும் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அதே நேரத்தில் நியாயமான கோரிக்கைக்காக நம்முடன் இணைந்து போராட வரும்போது புறக்கணிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. அதற்கு நாம் பொறுப்பேற்கவும் முடியாது. பி.ஜே.பி.யோடும் சரி, காங்கிரசோடும் சரி எங்களுக்கு எந்த உறவும் கிடையாது.
திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது?
கோரிக்கைகள், செயல்பாடுகள் அடிப்படையில் பெரியார் திராவிடர் கழகத்தோடு எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஈழப்போராட்டம், தமிழ்த்தேசிய கோரிக்கைகள் போன்றவற்றில் அவர்கள் எங்களோடு உடன்படுகிறார்கள். 65ல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தது போன்ற பெரியாரின் மொழிக்கொள்கைகளோடு நாங்கள் வேறுபடுகிறோம். அவர்களுக்கு அது தெரிந்தாலும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் தமிழ்வழிக்கல்வி, இடஒதுக்கீடு போன்ற போராட்டங்களில் அவர்கள் தீவிரமாகவே இயங்கி வருகிறார்கள்.
திராவிடர் கழகத்தோடு எங்களுக்குப் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் எங்களைத் தீவிரவாதிகளாகவே பார்க்கிறார்கள். அவர்களின் தொண்டர்களோடு நாங்கள் பேசக்கூடாது என எதிர்பார்க்கிறார்கள்.
ஈழத்தில் போராட்டம் மூலமே விடுதலை சாத்தியம் என்பது உங்களைப் போன்றவர்களின் கருத்து. அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று சிலரும், ஒருங்கிணைந்த இலங்கைதான் சரி என்று சிலரும் பேசி வருகின்றனர். இதற்கான அடிப்படை எது?
குறிப்பிட்ட மக்கள் இனத்தினுடைய பிரச்சனை அந்த மக்கள் இனத்தால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மையான ஜனநாயகம். தங்கள் கொள்கை என்ன, இந்தியாவுக்கு எது பொருந்தும் என்பதை வைத்துக்கொண்டு ஈழப்பிரச்சனையை பார்க்கக்கூடாது. தமிழீழ மக்கள் ஒன்றுபட்ட இலங்கையைத் தான் விரும்புகிறார்கள் என்று இவர்களால் மெய்ப்பிக்க முடிந்தால் அதற்கு ஆதரவாகப் போராடலாம்.
ஈழ மக்களின் வரலாறு, அவர்களின் சிக்கல்கள், நடத்திய போராட்டங்கள் எதைப் பற்றியும் பேசாமல் வெறுமனே ஒன்றுபட்ட இலங்கை என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இங்கு போனஸ் 12 சதவீதமா, 13 சதவீதமா என்று போராட்டம் நடத்தி விட்டு தங்கள் உயிருக்காகவும், உரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் மக்களைப் பார்த்து ‘பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வது எப்படி சரியாக முடியும்?
புலிகளுக்கு சரியான அரசியல் சித்தாந்தமோ, அமையப் போகிற ஈழம் குறித்த தெளிவான பார்வையோ இல்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ‘புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிற பகுதிகளில் சாதி ஆதிக்கமும், பெண்ணடிமைத்தனமும் அதிகமாக இருக்கிறது. அதுகுறித்த பார்வை அவர்களிடம் இல்லை’ என்ற கருத்தும் ஈழ எழுத்தாளர்கள் ஷோபாசக்தி போன்றவர்களால் முன்வைக்கப்படுகிறது. இதுகுறித்து?
புலிகள் வெளியிட்டிருக்கிற ஆவணங்கள், அறிக்கைகள் எதையும் படிக்காமல் மேம்போக்காக கூறும் குற்றச்சாட்டு இது. சாதி ஒழிப்புப் போராட்டத்தில், வர்க்கப் போராட்டத்தில் உண்மையான ஆர்வத்தோடு இயங்குபவர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்தில் தான் இருக்கிறார்கள். சாதி குறித்து தெளிவான பார்வை இருந்தால் அதை ஒரே நாளில் சட்டம் போட்டு தடுத்துவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
அதிகாரத்தை கைப்பற்றிய பின்பு, சாதி ஒழிப்பில் முக்கிய கவனம் செலுத்திய பின்னாலும் அது பண்பாட்டுத் தளத்தில் வெகுகாலம் நீடிக்கும். புலிகள் சாதிமறுப்பை தீவிரமாக கடைப்பிடிக்கிறார்கள். சொந்த சாதிக்குள் திருமணம் செய்வதை அமைப்புக்குள் தடை செய்திருக்கிறார்கள்.
அகநிலையில் திட்டமிட்டு அந்த அமைப்பு சாதி ஒழிப்புக்கு போராடுவது ஒருவகை, புறநிலையில் அவர்கள் நடத்தும் போராட்டமே சாதி ஒழிப்புக்கு வகை செய்வது இன்னொரு வகை. புரட்சிகரமான போராட்டம் என்பது பகைவனுக்குள் இருக்கும் நஞ்சை அழிப்பது மட்டுமல்ல, நமக்குள் இருக்கும் நஞ்சையும் அழிப்பது என்று மாவோ குறிப்பிடுவார்.
ஒரு பதுங்கு குழிக்குள் இருந்து போராடுபவன் பதுங்கு குழிக்குள் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாது. இந்தியப் படை இலங்கைக்குள் நுழைவது வரை பெண்கள் படை என்ற ஒன்று அங்கு இல்லை. காயத்திற்கு மருந்து போடுவது, சமைப்பது, உதவி செய்வது போன்றவற்றைத்தான் பெண்கள் செய்து வந்தார்கள். இந்தியப் படையிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்குத் தான் அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எல்லைத்திறப்புப் போரை பெண்கள் தான் தலைமை தாங்கி நடத்தினார்கள். அதற்கு மரியாதை தரும் விதத்தில் கிளிநொச்சியில் வெற்றிக்கொடியை விதூஷா தான் ஏற்றினார். பெண்ணை அடிமையாக நடத்துகிற இயக்கத்தினால் இதை சாதிக்க முடியுமா? ஒரு பெரிய மாற்றம் ஈழச்சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கிறது. சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் உடைந்து நொறுங்கி இருக்கிறது.
போர்த் தாக்குதலால் வீடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு குடியேறிய உயர்ஜாதி மக்களின் வீடுகளை புலிகள் தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள். அங்கிருந்த பொருட்களை குறிப்பெடுத்து, அவர்கள் என்றாவது வந்தால் திருப்பிக் கொடுப்பதற்காக பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த வீடுகளை வசிக்க இடமில்லாதவர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள்.
ஈழப்படையில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியவர்களும், இலங்கை உளவுத்துறையும் அந்த மக்களிடம் பரப்புகிற முக்கியமான செய்தியே இதுதான், ‘உங்கள் வீடுகளில் கீழ்ச்சாதியினரை கொண்டு வந்து குடியமர்த்தியுள்ளார்கள்’. எனவே விடுதலைப்புலிகள் சாதியைப் பாதுகாக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் அவதூறு தான்.
என்னைப் பொறுத்தவரை ஷோபாசக்தி போன்றவர்களெல்லாம் பைத்தியங்கள். அவர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. புலிகளுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்பவர்கள் அரசின் கைக்கூலிகளாக கூட இருக்கலாம்.
சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் குறித்துப் பேசுவதால் இந்தக் கேள்வி. சாதி, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக தீவிரமாகப் போராடியவர் பெரியார். அவரை உங்கள் அமைப்புக்கு எந்த அளவுக்கு அணுக்கமானவராகப் பார்க்கிறீர்கள்?
அவரை தமிழ்த் தேசியத்தின் தந்தை என்ற இடத்தில் தான் வைத்திருக்கிறோம். தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என்பது பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தான். ஒரு இனம் தன்னைத்தானே அடையாளம் காண்கிற போராட்டத்தின் தொடக்கமாக அது இருந்தது. அதே நேரத்தில் ஒரு தேசிய இனத்தின் பார்வையாக மட்டும் இல்லாமல் அதற்குள் இருக்கிற சாதியத்தையும் அது எதிர்த்தது.
சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பதே பார்ப்பன எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும் தான். கடைசிவரையில் அவர் அதில் உறுதியாக இருந்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்தாலும் அரசியல் இயக்கம் எதையும் அவர் கட்டவில்லை. அமைப்புக்குள் ஜனநாயகத்தன்மையை கட்டமைக்காதது ஒரு மிகப்பெரிய குறை. தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற நிலையை அவர் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத் தான் வீரமணி போன்றவர்கள் இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தெளிவான கருத்தியலோ, அறிவியல் கண்ணோட்டமோ பெரியாரிடம் இல்லாததால் தான், அவர் பெயரைச் சொல்லி ஜெயலலிதாவால் அரசியல் நடத்த முடிகிறது. இவ்வளவு குறைகள் இருந்தாலும், அந்தக் குறைகளை வரலாற்று, சமூகப் பின்னணியோடு நாம் புரிந்து கொள்கிறோம். அவரோடு நாம் நிறுத்திக்கொள்ளப் போவதும் இல்லை. பெரியார் தந்த புத்தி போதும், சொந்தப் புத்தி வேண்டாம் என்பதில் நமக்கு உடன்பாடு இல்லை. பெரியாரிடம் பக்தி எதுவும் நமக்குக் கிடையாது. அவரையும் நாம் கூர்மையாக விமர்சிக்கிறோம்.
ஆனால் நாம் விரும்பக்கூடிய சமூகநீதி தமிழ்த்தேசத்தை முன்வைத்தவர் அவர்தான். அவரிடமிருந்து தான் நாம் அதை விரிவாக்குகிறோம், உள்ளடக்கத்தை சுருக்குகிறோம், அரசியல் இயக்கமாக மாற்றுகிறோம். அந்த அர்த்தத்தில் தான் அவரை தந்தை என்கிறோம்.
அதே நேரத்தில் தந்தை, அண்ணா போன்ற பட்டப் பெயர்கள் எல்லாம் தங்களை யாரும் எதிர்த்து விடக்கூடாது என்பதற்காக திராவிட இயக்கம் வைத்துக்கொண்ட சூழ்ச்சி என்பதையும் உணர்ந்திருக்கிறோம். அண்ணா சொல்றேன், அப்பா சொல்றேன் என்றால் யாரும் எதிர்த்துப் பேசிவிட மாட்டார்கள். ஜனநாயக மறுப்புக்காக தரப்பட்ட பட்டங்கள் தான் தந்தையும், அண்ணாவும். நான் அந்தக் கோணத்தில் அவரை தந்தையாகப் பார்க்கவில்லை.
இப்போதைய சூழ்நிலையில் தமிழ்த்தேசியம் எந்த அளவுக்கு சாத்தியம்? அதன் செயல்திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன?
சாத்தியம், சாத்தியமில்லை என்ற கோணங்களில் அதை அணுகுவது தவறு. பழக்கத்தில் ஊறியவர்களாக மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுகிற வர்க்கங்கள், அரசுகள் இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதைத்தான் பிரிட்டிஷ் அரசும் செய்தது. ‘உங்களுக்கு ஆளுகிற தகுதி வரவில்லை, இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உங்களை ஆளும் பொறுப்பை சரியாக செய்யும், இதுதான் நிரந்தரம்’ என்று கூறி மக்களை நம்ப வைத்து விட்டார்கள்.
இந்தியா தான் இறுதி என்ற கருத்து இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்தின் கருத்து. ஆனால் இந்தக் கருத்தை புரட்சியாளர்களையும் நம்ப வைத்து விட்டார்கள். இந்தியா என்ற ஒன்று இல்லாமல் போவதை அவர்களால் கற்பனை செய்யவே முடியவில்லை. அதனால் தான் அன்புக்குரிய இந்தியா, பெருமைக்குரிய பாரததேசம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் ஆளும் வர்க்கத்தின் வெற்றி.
தமிழ்த் தேசியம் சாத்தியமா, இல்லையா என்பதை விட தேவையா, இல்லையா என்பதுதான் முக்கியமான கேள்வி. சாத்தியமற்றதாகத் தோன்றுகிற ஒன்று தேவையென்றால் அதை சாத்தியமுள்ளதாக மாற்றுவதற்கு போராடுவது தான் நம்முடைய வேலை. தமிழ்த்தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா, இல்லையா? அடிமைப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு விடுதலை வேண்டும். விடுதலை தேவை என்றால் சாத்தியமில்லாமல் இருக்கிற அதை சாத்தியமுள்ளதாக்குவதற்கு தேவையான உழைப்பை நாம் செலுத்த வேண்டும்.
தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்து விட்டால், அந்தத் தேவையை மக்களுக்கு உணர்த்துவதன் மூலமாக இந்தக் கருத்தியலை ஒரு பொருளியல் ஆற்றலாக நாம் மாற்ற முடியும். வெகுமக்கள் சக்தியை கொண்டு சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்.
தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்து விட்டால், அந்தத் தேவையை மக்களுக்கு உணர்த்துவதன் மூலமாக இந்தக் கருத்தியலை ஒரு பொருளியல் ஆற்றலாக நாம் மாற்ற முடியும். வெகுமக்கள் சக்தியை கொண்டு சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்.
நன்றி:கீற்று இணையம்
======================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக