புதன், 11 மார்ச், 2015

பெண்கள் தினம் கொண்டாட நாள் அல்ல போராட்ட நாள் . "மாதவிடாய் Menses" &"SilentHues " ஆவணப்படங்கள் திரையிடப்பட்டு, கலந்துரையாடலை தொகுத்துள்ளார் - கவிஞர் புதியமாதவி

மார்ச் 8 சர்வேதச உழைக்கும் பெண்கள் தினம் அன்று கம்பன் உயர் நிலைப்பள்ளியில் மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக பெண்கள் இயக்கிய இரண்டு ஆவணப்படம் கீதா இளங்கோவன் இயக்கிய "மாதவிடாய்" Menses மற்றும் நடிகை ர.ரோகினி இயக்கிய "SilentHues " சைலேண்ட் ஹுஸ் ஆவணப்படம் திரையிடல் அத்துடன் பெரியார் எழதிய "பெண் ஏன் அடிமை ஆனால்" நூல் அறிமுகம் நடந்தது.. 


மும்பையில் மகளிர்தினம் -- கவிஞர் புதியமாதவி 
------------------------------------------------------------------------------------------------------------
கடந்த மார்ச் 8 மகளிர் தினக்கொண்டாட்டம் மும்பையில்
காத்திரமான பெண்ணிய உரையாடல்களை முன்வைத்து
கொண்டாடப்பட்டதுமும்பை விழித்தெழு இளைஞர்
இயக்கம் சார்பில் மாதவிடாய் மற்றும் சைலன்ட் க்யூஸ்
(silenT hues) திரைப்படம் வெளியிடப்பட்டது.
அத்துடன் தந்தை பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?"
புத்தக அறிமுகமும் உரைய்டாலும் நடைபெற்றன.
தந்தை பெரியார் பேசிய "ஆண்மை" குறித்து "இந்தியாவின்
மகள்" என்ற பிபிசி ஆவணப்படத்தை முன்வைத்து
பேசினேன். "ஆண்மை என்ற பதமே பெண்களை இழிவுப்படுத்தும்
வகையில் உபயோகப்படுத்தப்படுகிறது" என்று சொல்லும் பெரியார்
"ஆண்மை" என்று குறிப்பிடும் ஆதிக்கமனோபாவத்தைக் குறித்த
பேச்சு எழுந்தது.

குழந்தை நட்சத்திரங்களை வைத்து குழந்தை நட்சத்திரமாக
தன் திரைவாழ்க்கையை ஆரம்பித்த நடிகை ரோகிணி
இயக்கிய SILENCE HUES  திரைப்படம் அலாதியான மவுனத்துடன்
திரையில் ஓடியது. மவுனத்தில் ஓலம்மவுனத்தின் அலறல்மவுனத்தின்
நிழல் என்று இப்படத்தை பல்வேறு பொருள்பட தமிழாக்கம் செய்யலாம்
என்றும் இப்படத்தின் த்லைப்பும் இறுதிக்காட்சியில் ஒவ்வொரு குழந்தை
நட்சத்திரத்தின் கண்களை குளொசப்பில் காட்டி இருந்தார். அவர்களின்
மொழியைத் தாண்டி அவர்களின் கண்கள் மட்டுமே உண்மைக்கு
நெருக்கமாக இருப்பதையே இக்காட்சி மிகவும் கவித்துவமாக
கொண்டு வ்ந்திருந்தது. ஆனால் இக்காட்சியின் பின்னணி இசை
இக்காட்சி அடிமனதில் ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கு ஒரு இடையூறு
போலவே இருப்பதாக உணர்ந்தேன். துணை இயக்குநராக பல திரைப்படங்களில்
பணியாற்றிக்கொண்டிருக்கும் தம்பி மதியழகன் சுப்பையா அவர்களும்
இப்படம் குறித்துப் பேசியதுடன்இம்மாதிரி திரைப்படங்களை மீண்டும்
திரையிடுவதும் பார்ப்பதும் கூட இன்னும் சில பார்த்திராத பார்க்க வேண்டிய
காட்சிகளுக்குள் இழுத்துச்செல்ல உதவியாக இருக்கும் என்றார்.
SILENT HUES  ஆவணப்படம் மீண்டும் திரையிடப்படுவதை நானும்
வரவேற்கிறேன்.

பெண்கள் தினம் என்றால் பெண்களை அழைத்து விருதுகள் கொடுத்தல்,
பொன்னாடை போர்த்துவதுபாராட்டிப்பேசுவது என்று மட்டுமே
கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் பெண்கள் தினத்திற்கு
"மாதவிடாய்" ஆவணப்படத்தை திரையிட்டது அதிர்வலைகளை
உண்டாக்கி இருந்தது.
பெண்கள் தினக்கொண்டாட்டமாம்மாதவிடாய் ஆவணப்படமாம்
என்று இச்செய்திய ஒருவிதமான தொனியுடன் மற்றவர்கள்
சொல்லிக்கொண்டிருக்க அன்றைய நிகழ்வில் கணிசமான
பெண்கள் கலந்துக் கொண்டார்கள். லெமுரியா அறக்கட்டளை
அமைப்பின் நங்கை குமணன். வெனிலாவழக்குரைஞ்ர் விஜயலட்சுமி,
ஈஸ்வர் தங்கப்பாண்டியன்பிரேமா ஸ்ரீதர் மற்றும் பலர்.
மாதவிடாய் ஆவணப்படம் திரையிடுவதற்கு முன் மாதவிடாய்
குறித்து ஒவ்வொருவரும் - குறிப்பாக ஆணகள் - தாங்கள்
அறிந்ததை ஓரிரு வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும்
என்று வேண்டுகோள் வைத்தோம். ஆண்கள் மத்தியில்
ஒரு மவுனம் இருளைப்போல கவிந்திருந்தது. ஸ்ரீதர் தானே முன்வந்து
அந்த மவுனம் கலைத்தப் பின் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைப்
பதிவு செய்தார்கள்.
>பெண்ணுக்கு மாதவிடாய் என்பது இயற்கையானது.

சளிப்பிடித்தால் மூக்கு ஒழுகுவது போலத்தான் இதுவும்.

>ஒரு பெண் கருத்தரிக்க தயாராகிவிட்டால் என்ற அறிவிப்பு தான்
மாதவிடாய்.

>இன்னும் எங்க ஊரில் சடங்கு விசேஷம் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
அப்போதெல்லாம் " நாங்களும் வயசுக்கு வந்துட்டோம்" என்று
அப்பெண்களைப் பார்த்து கேலியாகப் பேசுவோம்.

எனக்குத் திருமணம் ஆகிவிட்டதால் என் மனைவி சொல்லி
மாதவிடாய் குறித்து நான் நிறைய தெரிந்துக் கொண்டென்.

மாதவிடாய் நேரத்தில் பெண்ணுக்கு ஓய்வு தேவை.

பெண்ணுக்கு ஓய்வு தேவை தான். ஆனால் இதையே காரணம்
காட்டி பெண்களை வீட்டுக்குள் வைத்துவிடக்கூடாது.

>பெண் வயதுக்கு வந்ததைக் கொண்டாட வேண்டும்.

>இல்லைகொண்டாட வேண்டியதில்லை.

>பெண்ணை இந்நேரத்தில் தீட்டு என்று சொல்லி ஒதுக்க வேண்டியதில்லை.
நான் என் அம்மாவின் மாதவிடாய் நாட்களிலும் என் அம்மா அருகில்தான் இருப்பேன்.

இப்படியாக பல கருத்துகள் வ்ரிசையாக வந்து விழுந்தன. ஆவணப்படம்
ஆரம்பித்தது.

பெண்ணின் தாய்ப்பாலில் இருக்கும் ரத்தம்
அவள் மாதவிடாயில் வெளியாகும் போது எப்படி தீட்டாகும்?

பெண்களுக்கான தனி கழிப்பறை வசதிகள் மாதவிடாய் நேப்கினை
மாற்றுவதற்கான வசதிகளுடன் இருக்க வேண்டும். ஆனால்
பள்ளிக்கூடங்கள்கல்லூரிமருத்துவமனைநகராட்சி கழிவறைகள்,
ஏன் சட்டங்களை இயற்றும் சட்டமன்ற கட்டிடத்தில் கூட
பெண்களின் மாதவிடாய் நேப்கினை மாற்றுவதற்கான வசதிகள்
இல்லை என்று ஒவ்வொரு இடத்திலும் நிலவும் உண்மையான
நிலமையை இந்த ஆவணப்படம் தவறாமல் பதிவு செய்திருக்கிறது.

பெண்ணின் மாதவிடாய் ரத்தப்போக்கிலிருக்கும் ஸ்டெம் செல்கள்
பல நோயகளுக்கான் மருந்தாக முடியும் என்ற அறிவியலையும்
முதல் முறையாக இப்படம் பொதுவெளியில் வைத்திருக்கிறது.
மாதவிடாய் ஆவணப்படம் திரையிட்டப்பிறகும் இப்படம் குறித்த
கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்தன. இப்படத்தை இயக்கி இருக்கும்
கீதா இளங்கோவன் பாராட்டுதலுக்குரியவர்.

இப்படம் குறித்து வளரும் குறும்பட இயக்குநர் பொன் தமிழ்ச்செல்வன்
வைத்த இன்னொரு கருத்தும் மிகவும் முக்கியமான சமூகச்சிந்தனை
சார்ந்தது. பொன் தமிழ்ச்செல்வன்.. கழிவறைகளில் பெண்கள்
பயன்படுத்தும் மாதவிடாய் நேப்கினை மாற்றுவதற்கு வசதியாக
டப்பாக்கள் வைக்கப்பட வேண்டுஎன்றும் ஒவ்வொரு கழிவறையிலும்
இம்மாதிரி வசதிகள் வைக்கப்பட வேண்டும் என்றும் யோசிப்பது
பெண்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமானதோ
அதே அளவு முக்கியமானது. இக்கழிவுகளை அகற்றும் பெண்கள் சம்பந்தப
பட்ட சமூகச்சிந்தனையும் அப்பெண்கள் சுமக்கும் சாதி இழிவும்
அப்பெண்களின் சுகாதார நிலையும் என்று சற்று கவலையுடன்
தன் கருத்தைப் பகிர்ந்துக் கொண்டார்.

வழக்குரைஞர் விசயலட்சுமிவெனிலாஈஸ்வரி,நங்கை குமணன்,
ராதாகிருஷ்ணன்இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலை கழக சேர்மன் வரதராஜன்,
துணை இயக்குநர் மதியழகன் சுப்பையாஸ்ரீதர்தங்கப்பாண்டியன்,
ராஜேந்திரன்பெ. கணேசன்ஆகியோரும் மாதவிடாய் ஆவணப்படம்
குறித்த விவாதத்தில் கலந்துக் கொண்டார்கள்.

இப்படியாக முதல் முறையாக சமூகம்  சார்ந்த ஒரு விழிப்புணர்வை
முன்வைத்து இரு பெண்களின் ஆவணப்படங்களுடன் பெண்கள்
பலர் கலந்துக் கொண்ட பெண்கள் தினத்தை ஏற்பாடு செய்த
மும்பை விழித்தெழு இயக்கம் தம்பிமார்களுக்கு
என் பாராட்டுதல்கள்......கவிஞர் புதியமாதவி 


https://www.facebook.com/sritharthamizhan/media_set?set=a.966095560081445.1073741843.100000430318737&type=1&pnref=story

 ========================================================================

 MVI:-16 வது அமர்வு ... மார்ச் 8 சர்வேதச உழைக்கும் பெண்கள் தினம் அன்று கம்பன் உயர் நிலைப்பள்ளியில் மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக பெண்கள் இயக்கிய இரண்டு ஆவணப்படம் கீதா இளங்கோவன் இயக்கிய "மாதவிடாய்" Menses மற்றும் நடிகை ர.ரோகினி இயக்கிய "SilentHues " சைலேண்ட் ஹுஸ் ஆவணப்படம் திரையிடல் அத்துடன் பெரியார் எழதிய "பெண் ஏன் அடிமை ஆனால்" நூல் அறிமுகம் நடந்தது . 
மேலும் மராட்டிய மாநில ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ஆதிமூலம் தையல் இயந்திரத்தை பொருளாதாரத்தால் நலிவடைந்த ஒரு பெண்ணுக்கு இலவச உதவியாக சர்வேதச பெண்கள் தினம் அன்று வழங்கினர். நிகழ்வுக்கு பின்னர் கலந்துரையாடல் நடைபெற்றது. (பின்னர் இயக்க இணையதளத்தில் பதிவு செய்யப்படும் ).
இதில் சிறப்பு விருத்தினராக புதிய மாதவி , நங்கை குமணராசன், ஈஸ்வரி தங்கபாண்டியன், வெனிலா சுரேஷ், வழக்குரைஞர் விஜயலட்சுமிha, இந்திரா காந்தி திறந்த வழி பல் கலைக்கழக வேந்தர் வரதராஜன், சென்ட்ரல் வங்கி மேலாளர் கேசவன், மும்பை ராஜேந்திரன், பகுத்தறிவாளர் கழக ரவிச்சந்திரன், திராவிடர் கழக பெ கணேசன் மற்றும் பல இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

மேலும் koongufu மாஸ்டர் பாலன் வருகை தந்தார் ..அவர் சர்வேதச உழைக்கும் பெண்கள் தினம் அன்று பெண்கள் பாதுகாப்புக்கு kungufu பயற்சியை அளிப்பதாக முன்மொழிந்தார். பயற்சி கட்டணத்தை 40 - 50 % குறைத்து கொள்வதாக உறுதி அளித்தார் ..வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 50% கட்டணத்தை மும்பை விழித்தெழு இயக்கம் தந்து இலவசமாக பயற்சி அளிக்கும். (மும்பை பகுத்தறிவாளர் கழக ரவிச்சந்திரன் "பெண் ஏன் அடிமை ஆனால்" நூலை தமிழகத்தில் இருந்து கொண்ட வர உதவினார் ) அரங்கம் சிறியது என்பதால் 50 பேர் மட்டுமே அழைப்பது உண்டு .. 45- 50 நபர்கள் கலந்துகொண்டனர்
இந்நிகழ்வை மும்பை விழித்தெழு இயக்க தோழர்கள் ஒருங்கிணைத்தனர்.

www.vizhithezhuiyakkam.blogspot.in

email:- vizhithezhu.org@gmail.com

=============================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக