புதன், 27 ஏப்ரல், 2016

தன்மானத்தலைவர் சத்தியவாணி முத்து‬

தன்மானத்தலைவர் _சத்தியவாணி_முத்து‬ ..
பெப்ரவரி 14,1923 - நவம்பர் 11,1999
அன்னை சத்தியவாணி முத்து ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் செல்வாக்கான ஒடுக்கபட்ட மக்கள் தலைவர்.
இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், ராஜ்ய சபை உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.
குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
தமிழக அரசின் இலவச தையல் எந்திரம் வழக்கும் திட்டத்துக்கும் சத்தியவாணி முத்து பெயர் சுட்டப்பட்டுள்ளது.
முதன்முதலில் மத்திய அமைச்சரைவில் இடம் பெற்ற காங்கிரஸ் அல்லாத திராவிட கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு அரசியல்வாதி மற்றோவர் பாலா பழையனூர் .
திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையத் தொடங்கிய இவர் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்று சொந்தக் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அக்கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து விட்டது.
அன்னை சத்தியவாணி முத்து 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கபட்ட காலத்திலிருந்து அதன் உறுப்பினராக இருந்தார்.
’’அரசியலில் தி.மு.க. இயக் கத்தில் பெண்கள் ஈடுபடுவது அந்த கால கட்டத்தில் சரியா இல்லையா என்ற விவாதத்துக்கு இடையே சத்தியவாணி முத்து தி.மு.க. வில் தன்னை ஈடுபடுத்தி பெண்களுக்காக புரட்சிகர கருத்தை எடுத்துச் சொன்னார்.
1953 இல் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
1959-1968 கால கட்டத்தில் திமுகவின் கொள்கை விளக்கச் செயலாளராகப் பதவி வகித்தார்.
அன்னை என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் இருந்து 1957 இல் சுயட்சையாகவும் 1967 மற்றும் 1971 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சார்பிலும் போட்டியிட்டு மூன்றுமுறை வெற்றிபெற்றார்.
1962 இல் பெரம்பூர் தொகுதியிலும் 1977 இல் உளுந்தூர்பேட்டைத் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோற்றுப் போனார்.
இவர் 1967 முதல் 1969 வரை தமிழ்க முதல்வர் அண்ணாதுரை அமைச்சரைவில் அரிஜன நலத்துறை மற்றும் செய்திதுறை அமைச்சராகப் பதவி வகித்தார். தொடர்ந்து 1974 தமிழ்க முதல்வர் கருணாநிதியின் அமைச்சரைவில் அரிஜன நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அதை ஆண்டில் திமுகவிலிருந்து விலகினார்.
விலகிய காரணம் ..
அண்ணாதுரையின் மரணத்துக்குப்பின் தாழ்த்தப்பட்டோர் நலனில் யாரும் அக்கறை காட்டவில்லை, புதிய திமுக தலைவர் கருணாநிதி பாரபட்சம் காட்டுகிறார் என்ற குற்றசாட்டுடன் சத்தியவாணி முத்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவிலிருந்து 1974 இல் விலகினார்
இவர் 1974 இல் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்று சொந்தக் கட்சியை ஆரம்பித்தார்.
ம்பேத்கர் பெயரில் ஒரு கல்லூரி பெரம்பூரில் தொடங்கப்பட்டது. அதுவும் தனது தொகுதியான பெரம்பூரில் தான் தொடங்க வேண்டும் என்று சத்தியவாணி முத்து வாதாடி பெற்றார்.
அந்த கால கட்டத்தில் கல்லூரி தொடங்க அரசுக்கு ஓரளவு பணம் கொடுக்க வேண்டும். அந்த பொறுப்பையும் அவர் ஏற்று ஏ.எல்.சீனிவாசனிடம் 5 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுத்தந்து அம்பேத்கர் கல்லூரி உருவாக வழிவகை செய்தார்.
இந்தியாவில் அம்பேத்கர் பெயரில் உருவான முதல் கல்லூரி தமிழ்நாட்டில் தான் அதுவும் பெரம்பூரில் தான் அமைந்தது. நான் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது சத்தியவாணி முத்துவின் வற்புறுத்தல் காரணமாகத்தான் இதுவும் வந்தது.
மராட்டியத்தில் அம்பேத்கர் பல்கலைக்கழகம் உருவாக்க 12 ஆண்டுகளுக்கு முன்பே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமுலுக்கு வராததால் தலித் மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள்.
இன்று யார் யாரோ? புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை பயன் படுத்தி நாட்டில் அரசியல் நடத்துகிறார்கள். அந்த கால கட்டத்தில் அம்பேத்கர் பெயரில் . குரல் கொடுத்து அதற்கு அனுசரணையாக இருந்து போராட்டங்களை ஊக் குவித்து ஊர் ஊராக சென்று பாடுபட்டவர் சத்தியவாணிமுத்து.
அம்பேத்கருக்கு புகழ்சேர்க்க அனைத்து இடங்களிலும் பேசினார்.
தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் புதுக்கட்சி ஆரம்பிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அம்பேத்காருக்குப் பின் யாரும் தாழ்த்தப்பட்டோர்களுக்காகப் முழுமனதாகப் போராடவில்லை... நாம் புதுக்கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சியாக அமர்ந்து தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடுவோம். அவர்கள் முடிவில்லாமல் நம்மை சுரண்டுவதையும் அவமானப்படுத்துவதையும் இனியும் அனுமதிக்க முடியாது.
சென்னை புறநகர்ப் பகுதியான ஒரகடத்தில் பெற்றோரை இழந்த சிறுமியருக்கான காப்பகம் ஒன்றை நடத்தச் சிலர் முன்வந்தனர். அதன் பின்னணியில் இருந்தவர், கருணாநிதியின் அமைச்சரவையில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்தவர் சத்தியவாணி முத்து. காப்பகத்துக்குக் கனிமொழியின் பெயர் சூட்ட விரும்பினார் சத்தியவாணி முத்து. அப்போதுதான் கனிமொழி யார் என்று தெரிய வந்தது. கருணாநிதியை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் கனிமொழியின் பெயரைக் காப்பகத்திற்குச் சூட்ட சத்தியவாணி முத்து திட்டமிட்டார்
பின்னர் 1977 இல் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தனது கட்சியை இணைந்து விட்டார்.
அன்னை சத்தியவாணி முத்து ஏப்ரல் 3, 1978 முதல் ஏப்ரல் 2, 1984 வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜா சபை உறுப்பினராக இருந்தார்.
1979 இல் இந்தியப் பிரதமர் சரண் சிங்கின் அமைச்சரைவில் பதவி வகித்தார்.
இவரும் பாலா பழையனூரும் தான் முதன்முதலில் மத்திய அமைச்சரைவில் இடம் பெற்ற காங்கிரஸ் அல்லாத திராவிட கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு அரசியல்வாதிகள்.
எண்ணூரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்கு அன்னை சத்தியவாணி முத்து நகர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இலவச தையல் எந்திரம் வழக்கும் திட்டத்துக்கும் சத்தியவாணி முத்து பெயர் சுட்டப்பட்டுள்ளது.
1970-களில் சென்னை,அண்ணாநகர் கிழக்குப்பகுதியில், இன்றைய காந்திநகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக்கு அருகே காங்கிரஸ் ஆதரவாளர்கள் அதிகம் உள்ள பகுதி (புதிய ஆவடி சாலை மற்றும் அண்ணாநகர் கிழக்கும் சந்திக்கும் இடம்) மணிவர்மா காலனி என்றும், அதையொட்டிய அண்ணாநகர் கிழக்குச் சாலையில் சத்தியவாணிமுத்து காலனி ( இது தி.மு.க. சார்பானது) என்றும் இரண்டு பகுதிகள் இருந்தன. அந்தக் காலனிகளை அப்புறப்படுத்திய இடத்தில்தான் இப்போது அரசினர் மருத்துவமனை இயங்கி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக