வெள்ளி, 14 டிசம்பர், 2012

ஏப்ரல் 14 அண்ணல் பிறந்த நாளில் , அண்ணல் அம்பேத்கரின் திரைப்படம் மறுபடியும் பொதிகை தொலைக்காட்சியில் வெளியிட வேண்டும் - விழித்தெழு இளைஞர் இயக்கம்


அம்பேத்கரிய மற்றும் முற்போக்கு அமைப்புகளுக்கு ஒரு அன்பான கோரிக்கை, அண்ணலின் பிறந்த நாளில் அம்பேத்கரின்  திரைப்படம் மறுபடியும் பொதிகையில் வெளியிட கோரிக்கை வையுங்கள்  என கேட்டுக்கொள்கிறோம்

தோழர்களே வணக்கம் ,  டிசம்பர் 6, 2012 தூர்தர்ஷன் - பொதிகை தொலை காட்சியில் அண்ணல் அம்பேத்கரின்-(தமிழ் பதிப்பு ) திரைப்படம், மதியம்  3 மணிக்கு திரையிடப் பட்டது..எந்த வகை விளம்பரம் இல்லாமல்  வெளியிடப்பட்டதால் பெரும்பாண்மையான மக்களிடம் செல்லவில்லை ...ஆகையால் வருகிற ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் அன்று மறுபடியும்  பொதிகையில் வெளியிட வைக்க  வேண்டிய வேலையை வழக்கறிஞர் சத்தியச்சந்திரனும், நாங்களும் முயற்சித்து வருகிறோம். அம்பேத்கரிய மற்றும் முற்போக்கு அமைப்புகளும் எங்கள் பணியில் சேர்ந்து கொள்ள அழைக்கிறோம்.

 
அண்ணலின் திரைப்பட குறுந்தகடை  இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியிட கோரி அக்டோபர் 24 ஆம் தேதி நாக்பூரில் கையெழுத்து இயக்கம் நடத்தினோம்.இதன் தொடர்ச்சியாக  நடிகர் மம்மூட்டி மற்றும் இயக்குனர் ஜாபர் பட்டேலியிடம் இந்த கோரிக்கை தெரியப்படித்தினோம் . இதில் ஜாபர் படேலிடம் போனில்  பேசிய பொது அவர் சொன்னது நமக்கு மகிழ்ச்சியை தந்தது. அந்த செய்தி நமது அண்ணலின் திரைப்படம் அனைத்து மொழிக்களிலும் 2014 ஆண்டுக்குள் குறுந்தகடாக மற்றும் அனைத்து அரசு தொலைக்காட்சியில்  வெளியிட்ட  அரசுகள்  முயற்சி வருவதாக தெரிவித்தார்.
 
(இதுவரை  ஒன்பது  மொழில்களில் ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தமிழ் , தெலுங்கு, குஜராத்தி, ஒரியா, பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழிகளில் தயாரித்து வந்துள்ளது ஆனால் தமிழில் இதுவரை குறுந்தகடு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )  தங்களின் மேலான ஆதரவையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்..
 தொடர்புக்கு:-மும்பை தொடர்புக்கு
 து. சிரீதர்:09702481441, பொன் தமிழ் செல்வன்:09768731133,
 உ. பன்னிர் செல்வம்- 09867488167, பாண்டியன் - 9821072848
சென்னை தொடர்புக்கு
மகிழ்நன்:௦9655345412
விழித்தெழு இளைஞர்  இயக்கம் ,மும்பை & தமிழ்நாடு

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக