வியாழன், 6 டிசம்பர், 2012

விழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை discussion within peoples (not final)

தோழர்களே ....
  • விழித்தெழு இயக்க தோழர்களுக்கு மட்டுமே இந்த செய்தி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
  • விழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை ---இயக்க செயல்பாடுகள் விதிகள் :-
  • இன்றைக்கு இளைஞர்கள் நாம் உண்டு, படிப்பு உண்டு என்று இருக்க வேண்டும் என் கருதுகின்றனர்.
    ஆனால் இளைஞர்கள் தங்களுக்கு என அமைப்பு /இயக்கம் அமைத்து மக்களே பாதிக்கிற பொது பிரச்சனைக்காக போராடுவது சரியானது,இயல்பானது.
  • இங்கு (சற்று  விரிவாக) எழுதி / பதிவு செயப்பட்ட உள்ள  கருத்துக்கள்   அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்கள்.. விழித்தெழு இயக்க கருத்துக்கள்  அல்ல..விழித்தெழு இயக்க நான்கு வருடமாக மும்பையே தலைமையிடமாக கொண்டு இயக்கி வருகிறோம். பல்வேறுப்பட்ட போராட்டங்கள் - மனித சங்கலி நிகழ்ச்சிகள்,IIFA  பாலிவுட் எதிர்ப்பு போராட்டம், முல்லைபெரியார் , கூடங்குளம் மற்றும் அனைத்து அணு உலை எதிர்ப்பு. மீனவர் படுகொலை
  • மக்களை ஒருமைப்படுத்துக்கிற நிகழ்ச்சிகள் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு, கட்டுரை போட்டி, பள்ளிகளில் பெரியார் பிஞ்சு, பூவுலகு , பாடம் போன்ற பத்திரிக்கையை வழங்கிறோம், மும்பை தமிழ் கல்வி மேம்படுத்துதல்  தாராவி வளர்ச்சி திட்டம்  என்ற பெயரில் சுரண்டலை தடுக்கும் பணியே செய்து வருகிறோம் . சாதி எதிர்ப்பு- கருத்தியல் தளத்தில்  அண்ணல் அம்பேத்கர் படம் பொறித்த பனியன் அணிவது, வாச்சந்தி, பரமக்குடி கலவரத்தை அம்பலபடுத்துவது, பஞ்சமி  நிலங்கள் பற்றிய அறிதல் ,தலித் முரசு போன்ற சமூக கருத்தியல்  தளத்தில் இருக்கிற   பத்திரிக்கைகளே இளைஞர் மற்றும் பொது  மக்களிடம் சேர்ப்பது ,அம்பேத்கரியம் என்ற பெயரில்   -முக  நூலில்( face bookil ) MVI என்ற பெயரில்  குறுஞ்செய்தி அனுப்புவது , மாற்ற சமுதாய  அமைப்புகளுடன் /இளைஞர்களுடன் பெரியாரியத்தை, அம்பேத்காரியத்தை சேர்கின்ற பணிய செய்து வருவது. 
  • இது போன்ற இயக்க செயல்பாடுகளை அறியாமல்  பல்வெறு முரண்பாடுகள்/ விமர்சனைகளை இயக்க தோழர்களும்/ நட்பு இயக்கங்களும் செய்து வருகிறன.
  • இதற்கு காரணம் அடிமட்ட அளவில் இயக்க கட்டமைப்புகளை உருவாக்கவதால் வந்த விமர்சனமே. 
  • ஆகையால், அடிமட்ட அளவில் கட்டமைப்புகளை உருவாக்குவது, பிரச்சனைகளின் அடிப்படையிலான  இயக்கமாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
  • அதற்கு நான்  கீழை குறிப்பிடத்தை அனைவரும்  புரிந்து கொள்ள வேண்டும் என் நினைக்கிறேன். நாம் இயங்குவதற்கு இது மிகவும் உதவி புரியும்.(மாற்று கருத்துக்கள் அல்லது நீங்களும் இது போன்ற  கொள்கை அமைப்பு பணியில் இணையுங்கள்/ எழுதுங்கள்  )

  • திட்டமிடுவோம்! செயல்படுவோம்!
  • தத்துவம் அல்லது கருத்தியல் தான் சமூகத்தை உந்தித்தள்ளுகிறது.
  • எல்லாவற்றுக்கும் மூல முதலானது பொருளே என்று சொல்லுவது தத்துவம்/ கருத்தியல் எனப்படுகிறது. அந்த தத்துவத்தை கற்பது போராட்டங்களுக்கு அடிப்படையான தேவையாகும்.
  • தத்துவம் இல்லாமல் நடைமுறை மட்டும் பழகிக் கொண்டிருந்தால் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் திரும்பத் திரும்ப செயல்படும் எந்திரமாகத்தான் மனிதன்/நாம் இருக்க முடியும். நடைமுறையில் இணைந்திருக்காமல் வெறும் தத்துவம் மட்டும் பேசிக் கொண்டிருப்பது தனித்து நிற்க அல்லது மன நிம்மதி அற்ற நிற்க வைத்து விடும். எனவே தத்துவமும் நடைமுறையும் இணைந்து ஒன்றுக் கொன்று சார்பாக செயல்பட வேண்டும்.
  • தத்துவத்தை பயில்வதற்கு குறிப்பிட்ட முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய முயற்சி மூலம் தத்துவத்தை புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல்களை வெற்றி கொண்டு விடலாம்.
  • தத்துவம் என்பது இயற்கையை, உலகத்தை விளக்க முயற்சிப்பது ஆகும். எல்லா பிரச்சனைகளிலும் பொதுவாக பொதிந்துள்ள அம்சங்களை ஆராய்வது தத்துவம் ஆகும்.
    அம்பேத்கரியல், பெரியாரியம், மார்க்சிய தத்துவம் எல்லா பிரச்சனைகளுக்கும் விடை அளிக்கிறது.

    அம்பேத்கரியல் என்ற தத்துவம்:-
    ஒட்டுமொத்த சமூக விடுதலைக்கும், வாழ்க்கை நெறிக்குமான தலைவர் அம்பேத்கர்.

    சமுக விடுதலை :-

    "எல்லா அடக்குமுறைகளுக்கும் எதிராக மீறி எழுவது இயல்பான மனிதப் பண்பு. வரலாறு நெடுகிலும் சாதியை எதிர்த்தவர்களும், அதற்காக தமது விலை மதிப்பில்லா உயிரை ஈந்தவர்களும் இருக்கின்றனர். ஆனால், சாதி ஒழிப்பை மானுட விடுதலைக்கான தத்துவமாக மாற்றியவராக அம்பேத்கர் திகழ்கிறார். சாதிய விடுதலை என்பது, உள்ளார்ந்த பொருளில் அனைத்து (இந்திய) சமூக மக்களுக்கான விடுதலைதான் "

    மக்களுக்கான வாழ்க்கை நெறி :-

    அவருடைய வாழ்வியல் சிந்தனைகள், பொருளாதார கருத்துகள், மனித உரிமைப் பிரச்சாரங்கள், இந்து மத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு வழிமுறைகள், பவுத்த நெறி பரிந்துரைகள் ஆகியவை எல்லாம், மக்களின் வாழ்வியல் நெறிகளுக்கான சாதனம்.

    தலித் பிரச்சனை :-
  • தலித் பிரச்சனை என்பது இங்கு சரியாக புரிந்து கொள்ளப்படுவதில்லை . இதுகுறித்து அம்பேத்கர் மிகத் தெளிவாக கூறியிருக்கிறார். ‘தலித்களின் பிரச்சனை என்பது இந்த சமூகத்தோடு சேர்ந்து வாழ்வதில் தான் இருக்கிறது.’ அரசோடு பிரச்சனை இல்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் தலித்துகளாக சேரிகளில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • அவர்கள் தனிநாடு கேட்டோ, பொருளாதார வளங்களை அபகரிக்கவோ போராடவில்லை. சமூகத்தில் எல்லாத் தரப்பு மக்களோடும் இணைந்து வாழ்வதற்கே அவர்கள் போராடுகிறார்கள். இந்த சமூகத்தில் ஒரு மனிதனாக எங்களையும் மதிக்கக்கூடாதா என்று தான் அவர்கள் கேட்கிறார்கள். ஏன் அவர்கள் அப்படி வாழ்கிறார்கள் என்ற கேள்வி வந்தால் உடனடியாக நமக்கு சொல்லப்படும் எளிதான பதில் அரசியல் தான்.
  • கருத்துப்படி அரசியலை விட சமூகம் தான் இந்த இடத்தில் முதன்மையானது. சமூக, பண்பாட்டு ரீதியாக தலித் மக்கள் கீழானவர்களாக நடத்தப்படுவதால் தான் அவர்களுக்கு எந்த அரசியல் உரிமையும் வழங்கப்படவில்லை. இந்த நாட்டின் பண்பாடு, மதத்தின் அடிப்படையில் இருக்கிறது. அந்த பண்பாடு தான் அவர்களை கீழானவர்களாகப் பார்க்க வைக்கிறது.


    பெரியாரியம்:-
  • பகுத்தறிவு,சுயமரியாதை, பெண் விடுதலை முட நமிபிக்கைக் என பல நல்ல சிந்தனைகளை செயல்பாடுகளைப் பெற உதவியா அமைக்கிறது.
  • பார்பனிய ஆதிக்கம்--- சமூகம், கலாச்சார பொருளாதார, அரசியல் ஆகியவற்றை இனம் கண்டிட எதிர்த்திட பெரியாரியம் பெரிதும் உதவுகிறது...(இதுதான் விழிப்புணர்வு )
  • சாதி  வெறி, இனவேற்றுமைச்சதி, அதிகாரத்திமிர், அடக்கியாளும் குணம், முதலாளித்துவ என கட்டமைக்கப்பட்டிருக்கிற சமுகத்தை கேள்வி கேட்க முடிகிறது.
  • பிற்போக்கான  சமூதாயத்தை கேள்வி கேட்க அதன் ஏற்பாடுகளை மாற்றியமைக்க பெரியாரியம் உதவுகிறது .
    திராவிடம் :-
  • திராவிடம் என்பது கருத்தியல், கம்யுனிசம் போன்றது .
  • திராவிடர் என்னும் சொல்,  தென் இந்தியாவில்  விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகத்தையும் குறிக்கும்.
  • திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்றும் அச்சொல் திரிபடைந்தே தமிழ் என்ற சொல் உருவானதென்றும் தொடக்கத்தில் ஆய்வாளர்கள் கருதினர். பெரும்பாலும் வெளிநாட்டவரான அக்கால ஆய்வாளர்கள், சமஸ்கிருதப் பின்னணியுடனேயே திராவிட மொழி ஆராய்ச்சியில் இறங்கியவர்கள் ஆதலால், இந்த எடுத்துக்கொள்  அவர்களுக்கு இயல்பாக இருந்தது. வேறு சில ஆய்வாளர்கள், முக்கியமாகத் தமிழ் நாட்டினர், தமிழ் என்ற சொல் மருவியே திரவிட என்னும் சமஸ்கிருதச் சொல் உருவானதாக வாதிடுவர். இவ் விடயத்தில் ஒத்த கருத்து ஏற்படுவதற்கு ஏதுவாகத் தக்க சான்றுகள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை.

  • திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்த ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), எழுதிய திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages)என்னும் ஆங்கில நூல் 1856 இல் வெளியிடப்பட்ட பின்னரே இச் சொல், தற்காலப் பொருளுடன் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. மேற்படி நூலே திராவிட மொழிகளை உலகின் முக்கிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக நிலை நிறுத்தியது.
  • திராவிடம் தோன்றியது எப்போது?
    ஆரியர் -திராவிடர் என்ற வேற்றுமையை விதைத்தவர் கால்டுவெல் தான்; திராவிடம் என்ற கற்பனையான ஒரு சொல்லைப் படைத்தவரும் அவர்தான்! என்று இப்போது பார்ப்பனர் புதுக்கரடி விடுகிறார்கள். இப்படியெல்லாம் பிற்காலத்தில் பார்ப்பனர்கள் பேசுவார்கள், வெட்கமில்லாமல் பொய்யுரைப்பார்கள் என்பதை அறிந்தோ என்னவோ கால்டுவெல் பெருமகனார் தொலை நோக்குப் பார்வையோடு தமது கருத்துக்களை வெளியிட்டார்.
    திராவிடம் என்பது எனது படைப்பல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பண்டைய வடமொழி ஆசிரியர் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களேயன்றி நானில்லை என்று அறிஞர் கால்டுவெல் கம்பீரமாக நின்று உண்மையை வெளிப்படுத்துகிறார்.
    மனுஸ்மிருதியில் பத்தாவது பிரிவில் சத்திரியக் குடியினர், படிப்படியாக ஆரியப் பழக்க வழக்கங்களிலிருந்து வழுவிப் பார்ப்பனர் தொடர்பை விட்டு விலகிக் கீழ்ச் சாதியினர் ஆனார்கள். அவர்கள் பவுண்டரர்கள், ஒட்ரர் திராவிடர், காம்போசர் என்று கூறப் பட்டுள்ளது. மேற்குறித்த குடியினரில் தென்னிந்தியாவிற்குரியவர் திராவிடர் என்று குறிக்கப்பட்டவர்களேயாவர். இதனால் தென்னாட்டு மக்களைப் பொதுப்படையாகக் குறிப்பதற்குத் திராவிடம் என்ற குறியீடு எடுத் தாளப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என்றும் மகாபாரதத்திலும் திராவிடம் என்ற சொல்லாட்சி இப்பொருளிலேயே பயின்று வந்துள்ளது என்றும் டாக்டர் கால்டுவெல் விளக்கமாகத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் தம்முடைய நூலில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆதலின் கால்டுவெல் கண்காணியாரின் (பாதிரியார்) காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே திராவிடம் என்ற சொல்லாட்சி, பயன்பாட்டில் இருந்து வந்துள்ளமை புலனாகின்றது.
  • திராவிடம் மூவாயிரம் ஆண்டுத் தொன்மையுடையது. மாமன்னர் அசோகன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில் இச்சொல் தென்னாட்டு மக்களை (தமிழர்களை) குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. புகழ்வாய்ந்த ஓர் இனத்தையும், இடத்தையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் திடுமெனத் தோன்றியிருக்க முடியாது. மக்கள் வழக்காற்றில் அச்சொல் பயின்று பயின்று பண்பட்டுப் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருக்க வேண்டும்.
    கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பு தோன்றியதாகப் பார்ப்பனர் கொண்டாடும் மனுதரும சாத்திரம் திராவிட மக்களைச் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்திக் கூறுகிறது. திராவிடத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று சுட்டுகிறது. மனுதருமம் (சுலோ 44 அத்தியாயம் 5) ஆனால் மாமன்னன் அசோகன் காலத்துக் கல்வெட்டு, தென்னாட்டையும், தென்னாட்டு மக்களையும் பெருந்தன்மையோடு திராவிடம் என்ற சொல்லால் குறிக்கின்றது. மாமன்னன் அசோகன் வட இந்தியாவின் பெரும்பகுதியை தன் ஆட்சியின்கீழ் வைத்திருந்தவன். கலிங்கம் (ஒரிசா) வரைதான் அவனால் தெற்கே படையெடுத்து வர முடிந்தது. கலிங்கத்திற்குத் தெற்கில் தமிழர்கள் வலிமையோடிருப்பதையறிந்து தெற்கே வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கலிங்கப் போருக்கு முன்பே கைவிட்டவன் மாமன்னன் அசோகன். அவன் திராவிட மக்களை மதித்தவன் பேரரசன்! ஆனால் நாடோடிகளான ஆரியப் பார்ப்பனர்கள், திராவிடத்தைச் சூத்திரர் வாழும் நாடு என்று இழிவு படுத்திக் கூறியவர்கள்.
    திராவிடம் என்ற சொல் கி.பி. முதல் நூற்றாண்டில் எழுத்தாளப்பட்டுள்ள தாகவும் இச்சொல் தமிழர்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள தாகவும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான சுனித்குமார் சட்டர்ஜி குறிப்பிடுகிறார்.
  • திராவிடம் -
  • தமிழர் / அல்லாதோர்; ஆரியர் / திராவிடர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
    அரசியல் விடுதலை என்று வருகிறபோது, “தமிழ்நாடு தமிழருக்கே” என ‘தமிழர்’ அடை யாளத்தை முன் வைத்த பெரியார், சமூக விடுதலை, பண்பாட்டு விடுதலை என்று வருகிறபோது அடிமைப்படுத்தும் ஆரியப் (பார்ப்பன) பண்பாட் டில் அல்லலுறும் அனைத்து பார்ப்பனரல்லாத மக்களை மீட்க ஆரியரின் எதிர் அடையாளமாக ‘திராவிடர்’ என்ற அடையாளத்தை முன் வைத்தார்.
    ‘திராவிடர்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல என்பதை அறிந்தே பெரியார் அச்சொல்லைப் பயன்படுத்தினாரே அன்றி அறியாமல் அல்ல. ஒரு சொல்லுக்கு சமுதாயம் புரிந்து கொண்டுள்ள பொருளை மனதில் கொண்டு அதைப் பயன்படுத்தினவரேயன்றி, ‘அகராதி’யோ சங்க நூல்களையோ புரட்டிப் பொருள் பார்த்து அல்ல.
  • திராவிடர் என்ற சொல், தமிழர் என்பதை சரியாக உச்சரிக்கத் தெரியாத / முடியாத வடமொழி யாளர்களால் உண்டாக்கப்பட்டதே அந்தச் சொல் என்று கூறுகிறார்கள். படி என்பதை பிரதி எனவும், மெதுவாக என்பதை மிருதுவாக எனவும், மதங்கம் என்பதை மிருதங்கம் எனவும் உச்சரித்ததைப் போன்றே தமிழர் என்பதை திரமிளர் என்று விளக்கப்படுகிறது.
    அவ்வாறாயின், திராவிடர் என்பது தமிழர் என்பதன் திரிந்த வடிவமே. தமிழர் என்ற சொல்லின் திரிந்த வடிவத்தை எப்படி தமிழரல்லாத பிறமொழியினர் தம்மைக் குறிக்கப் பயன்படுத்துவர் என்று நாம் எதிர்பார்க்க முடியும்? இருப்பினும் ஆந்திராவில்தான் திராவிட மொழிகளின் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. மைசூரில் இயங்கும் மொழிகள் ஆய்வு மையம் திராவிட மொழிகளை ஆய்வு செய்வதாகத்தான் அறிவித்துக் கொள்கிறது.
  • இது ஒருபுறம் இருக்க, பெரியார், திராவிடர் என்ற சொல்லை பார்ப்பனரல்லாத அனைவரையும் பார்ப்பனர் ஆரியப் பண்பாட்டால் இழிவுபடுத்தப் பட்டு, அடிமைப்பட்டுக் கிடக்கிற அனைவரையும் குறிப்பதற்கும், ஆரியத்துக்கு எதிராக அணி திரட்டு வதற்கும் அடையாளச் சொல்லாய் பயன் படுத்தினாரோ அன்றி சகோதர மொழிகளைப் பேசுகிற தெலுங்கர், கன்னடர், மலையாளிகளோடு இணைவதற்கல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
    மேலும் ‘திராவிடர்’ என்ற சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும்? ‘தமிழர்’ என்று சொன்னால் போதாதா என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.
    திராவிடர் என்றால் பார்ப்பான் நுழைய மாட்டான் என்று கூறுகிறீர்களே திராவிட இயக்கமான அ.தி.மு.க.வில் ஆரிய (பார்ப்பன)ப் பெண் தானே தலைவராக உள்ளார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
    மருத்துவர் இராமதா° போன்றவர்கள் திராவிடர் என்று சொல்லைப் பயன்படுத்தவில்லையே. அதைப் பயன்படுத்தாமலேயே பா.ம.க.வில் பார்ப்பனர்கள் இல்லையே என்ற இன்னொரு வாதமும் வைக் கின்றார்கள்.
    தி.மு.க., அ.தி.மு.க. போன்றவை திராவிடர் இயக்கங்கள் இல்லை. அவை திராவிட இயக்கங்கள் மட்டுமே. ஆரிய எதிர்ப்புச் சொல்லான மக்கள் கூட்டத்தைக் குறிக்கும் திராவிடர் என்பதை கைவிட்டு விட்டு மண்ணை, நிலப் பகுதியைக் குறிக்கும் ‘திராவிடம்’ என்ற வடநாட்டு எதிர்ப்புச் சொல்லால் குறிக்கப்படும் கட்சிகள் அவை.
  • திராவிடர் என்பது தமிழர் என்ற சொல்லின் திரிந்த வடிவம் என்ற சொல்லாராய்ச்சியோடு நிறுத்திக் கொள்பவர்களிடம் நமக்கு ஒரு கேள்வி உள்ளது. மொழியடிப்படையில் பார்ப்பனரை நம்மவரே என்ற கருதச் செய்யும் போக்கு அவ்வாதத்துள் புதைந்து கிடப்பது உங்களுக்குப் புரியவில்லையா? அல்லது தெரிந்தும் யாரோ சில பார்ப்பனர் நட்புக்காக – தயவுக்காக அதை மறைக்கிறீர்களா?
    முதலாவதாக, கருப்பாயி, கருத்தம்மா என்ற தமிழ்ச் சொற்களின் வடமொழி சொற்களான சியாமளா, நீலா என்ற பெயர்களையும், கார் வண்ணன், இருளப்பன் என்று பொருள்படும் சியாமள வர்ணன், கிருஷ்ணன் என்ற பெயர்களைத் தயக்கமில்லாமல் தங்களைக் குறிக்கும் பெயர்ச் சொற்களாக பயன்படுத்தும் பார்ப்பனர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இதேபோல் தமிழர் என்ற சொல்லின் வடமொழி சொல்லாக மட்டுமே உங்களால் கூறப்படும் திராவிடர் என்ற சொல்லால் தன்னை அடையாளப்படுத்த முன் வரும் ஒரு பார்ப்பனரையாவது உங்களால் காட்ட முடியுமா? தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் பேசும் பார்ப்பனர்கள்கூட வேண்டாம், தமிழின் திரிந்த வடிவங்களான தெலுங்கு, கன்னட மொழி பேசும் ஒரு பார்ப்பனராவது தமிழின் திரிந்த வடிவமான திராவிடர் என்ற சொல்லால் தன்னைக் குறிப்பிட ஒப்புக் கொள்வாரா? எனவேதான் நாம் வீழ்த்த விரும்பும் பண்பாட்டு ஆதிக்கமான பார்ப்பனியத்தை எதிர்க்க ‘திராவிடர்’ என்ற எதிர் அடையாளத்தை ஏற்றாக வேண்டும் என்பதையாவது உணர்கிறீர்களா? இல்லையா
  •       தமிழன்
    • நமது தமிழ் அடையாளத்தை எப்படி அமைத்து கொள்வது என்பது முக்கியம். சிங்களர் அல்லது மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் வெறுப்பு மீது கோபத்தின் மீது கட்டமைப்பதா ?
    • பண்பாடு , பழைய புராணங்கள், வரலாற்று பெருமைகள் மீது ஏற்படுத்திக் கொள்வதா ?
    • தன்னை தமிழ் மகனாக/மகளாக தமிழ் கூறும் நல்லுலகின், அங்கமாக உணர்வுப்புர்வமாகப் பார்க்கிற தனது தமிழ் இனத்தின் சிறப்புக்கு, உயர்வுக்கு விடுதலைக்கு தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் உழைக்க முன்வருகிறவரே தமிழர் எனக் கொள்ளலாம் .
    • தமிழ் தேசியம்
    • ஒரு குறிப்பிட்ட தமிழ்த்தேசியம் அமைப்பு , குழு , தலைவர் அல்லது கட்சி தேர்ந்து வழங்குவதல்ல தமிழ்த்தேசியம் அடையாளம்.
    • தமிழ்தேசியம் மேலிருந்துக் கீழே  திணிக்கப்படுவதல்ல.... கீழருந்து மேலாகப் பரந்து விரிவது.
    • மதவெறி, சாதிவெறி, இனவெறி, ஆணாதிக்கம், வகுப்பு வாதம், வல்லாதிக்கம், வன்கொடுமை ஏதுமற்ற சமுத்துவ சமதாயத்தை தமிழ்த்தேசியம்  தீர்மானிக்கிறது . தமிழ்த்தேசியம் மூலமாக எதை அடைய விரும்புகிறோம் அதுதான் மிக முக்கியம்.
    • தனியொரு தமிழனுக்கு உணவில்லை எனில் ஒட்டுமொத்த தமிழினமும் கேள்வி கேட்பதுதான் அதை மாற்றி அமைப்பதுதான் தமிழ்த்தேசியம்.
    • மார்க்சியம் :
    • மனித குலத்தை அனைத்து வகையான ஒடுக்குமுரையிலிருந்தும் விடுவிக்கும் தத்துவமயே மார்க்சியம்.
    • வரலாற்றியல் பொருள் முதல் வாதக் கண்ணோட்டம், இயங்கியல் அல்லது வரலாற்று நோக்கில் பிரச்சனைகளை அணுகுதல் இது ரெண்டுமே மார்க்சியத்தின் அடிப்படை.
    • எல்லாவற்றுக்கும் மூல முதலானது பொருளே என்று சொல்லும் தத்துவம் பொருள்முதல்வாதம் எனப்படுகிறது. மார்க்சியம் பொருள்முதல்வாதத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அதைப் பயில்வது ஒரு கம்யூனிஸ்டின் போராட்டங்களுக்கு அடிப்படையான தேவையாகும்.

      தத்துவம் இல்லாமல் நடைமுறை மட்டும் பழகிக் கொண்டிருந்தால் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் திரும்பத் திரும்ப செயல்படும் எந்திரமாகத்தான் மனிதன் இருக்க முடியும். நடைமுறையில் இணைந்திருக்காமல் வெறும் தத்துவம் மட்டும் பேசிக் கொண்டிருப்பது ஏட்டுச் சுரைக்காயாகவே நின்று விடும். எனவே தத்துவமும் நடைமுறையும் இணைந்து ஒன்றுக் கொன்று சார்பாக செயல்பட வேண்டும்.

      தத்துவத்தை பயில்வதற்கு குறிப்பிட்ட முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய முயற்சி மூலம் தத்துவத்தை புரிந்து கொள்வதில் இருக்கும் சிக்கல்களை வெற்றி கொண்டு விடலாம்.

      தத்துவம் என்பது இயற்கையை, உலகத்தை விளக்க முயற்சிப்பது ஆகும். எல்லா பிரச்சனைகளிலும் பொதுவாக பொதிந்துள்ள அம்சங்களை ஆராய்வது தத்துவம் ஆகும். மார்க்சிய தத்துவம் எல்லா பிரச்சனைகளுக்கும் விடை அளிக்கிறது.

      ஆதி மனிதன் இயற்கைக்கும் பிரபஞ்சத்துக்கும் விளக்கம் தர முயற்சிக்கும் போது போதுமான தகவல்கள் அறிவு வளர்ச்சி இல்லாமையால் தோல்வியடைந்தான். மனிதனின் வாழ்க்கைக்கு அப்படி ஒரு விளக்கம் - உலகப் பார்வை - தேவைப்படுகிறது.

      அறிவியல் பூர்வமான விளக்கம் இல்லாத இடத்தில் மதம், கடவுள் நம்பிக்கைகள் வளர்ந்தன. மதங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்டு உலகை விளக்க முயற்சிக்கின்றன. அறிவியல் வளர வளர ஏற்கனவே மதத்தை நம்பி இருந்த நடைமுறைகளுக்கு அறிவியல் பூர்வமான விளக்கம் கிடைக்க ஆரம்பித்தது. இதன் மூலம் மதத்துக்கான இடம் சுருங்க வேண்டியிருந்தது.

      ஆகவே அறிவியல் பூர்வமான பொருள்முதல்வாதம் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் மதம் முதலான கருத்து முதல்வாதத்துக்கு எதிராக போராடி வளர வேண்டியிருக்கிறது.
    •  கம்யூனிசம் :
    • பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான நிலைமைகளைப் பற்றிய கோட்பாடுதான்.
    • தனி மனித சொத்துரிமையை ஒழிப்பது இதை ஒழித்தால் வறுமை, ஒழிந்துவிடும் சுரண்டல் ஒழிந்து விடும்.
    • பாட்டாளி வர்க்கம் :
    • எந்த வர்க்கம் சமூதாயத்தின் ஏதேனூமொரு, மூலதனத்திலிருந்து கிடைக்கும் லாபத்தின் மூலம் தனது வாழ்க்கைக்கான தேவைகளைப் பெறாமல் தனது உழைப்பை விற்பதன் மூலம் மட்டுமே அவையனைத்தையும் பெறுகின்றதோ அதுவே பாட்டாளி வர்க்கமாகும். 
    • பின் அரசியல் வகுப்புகள் மாதம் இருமுறை நடத்துவது .( 22 தலைப்புகள் மற்றும் தொழில் பயற்சிகள், தற்காப்பு கலைகள் கற்று கொள்வது, அதிகாரிகளுக்கு மனு எழுதுதல், குறும்படம் , ஆவணப்படம் இயக்குவது போன்ற பயற்சிகளும் நடத்த திட்டமிட்டு உள்ளேன் ) யாரோடு / எந்த அமைப்போடு சேர்ந்து இயங்குவது, ஆண்டுதோறும் எந்த எந்த நிகழ்ச்சிகளை   நடத்துவது    என்பதை நாம்  சந்திக்கும் பொது பேசுவோம் )

    • நான்கு வருடங்களாக தாராவி, மும்பையில் இயக்கி வரும் விழித்தெழு இளைஞர் இயக்கம், இங்கு இருக்கிற மக்களின் சமூக முன்னேற்றத்தில் எத்தகைய பங்கு வகித்திருக்கிறது?
      பதில் :-அம்பேத்கர்,பெரியார் அவர்கள் வாழ்க்கையில் பல வருடங்களாக இந்த சமூக மாற்றத்திற்காகப் போராடினார், அதனால் சமூகம் எந்த அளவுக்கு மாறிவிட்டது என்று கேட்டால் பெரிதாக பதில் எதுவும் கூறிவிட முடியாது. அதற்காக மாற்றம் இல்லையென்றும் கூறிவிட முடியாது. அது போலத்தான் விழித்தெழு இயக்கம்.
    • இன்றைக்கு விழித்தெழு இளைஞர் இயக்கம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறதா ? போய்க்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா?
    • பதில்:- நமக்கான நிலையான இடம் இருந்தால் பிறர் நம்மளை நோக்கி வரத் தொடங்குவார்கள் (பலர் சொல்வது போல எங்களை நோக்கி வருபவர்கள் எங்களை அவர்கள் சுயநலத்துக்கு பயன்படுத்தி கொள்வது அல்ல ). இது வலுவான சமூக மற்ற அரசியல் நிலைமையைப் பெற உதவும்.
    • விழித்தெழு இயக்கத்தின் நோக்கம் சமூக சமத்துவத்தை வளர்த்தெடுப்பதே. ஒடுக்கப்பட்டவர்காக இயங்குவது , போராடுவது (ஒடுக்கப்பட்டவர்கள் ஆகிய காஷ்மீர் மக்கள், பாலஸ்தீனம் மக்கள் , பழகுடியனர்-அசாம்,வட கிழக்கு மக்கள், தலித் மக்கள், விவசாய மற்றும் தொழிலாளர்கள், திருநங்கையனர், ஈழம் மக்கள்.இந்திய ஆதிக்கத்தால் ஒடுக்கப்படும் தமிழ் நாடு மக்களும், மும்பை தமிழ் கல்வி மேம்படுத்துதல்  தாராவி வளர்ச்சி திட்டம்  என்ற பெயரில் சுரண்டலை தடுக்கும் பணியே செய்து வருகிறோம் .)
    •  தன்னை முன்னிலைபடுத்தாத சுய விளம்பரங்களைப் புறந்தள்ளி (கருத்தியல்) கொள்கையை மட்டுமாய் முன்னிறுத்தி தன் நல மறுப்புடன் கொள்கைப் பணியாற்ற முன்வந்து உள்ளோம் . முற்போக்கான சக்திகள்/அமைப்புகளுடன் இயக்கி வருகிறோம்.
    • நம்மோடு இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது முக்கியம் அல்ல எவ்வளவு கருத்தாழம் கொண்டவர்களாகவும் தியாக குணம் படைத்தவர்களாகவும் உள்ளார்கள் என்பதே அவசியம்.
    • இங்கு (சற்று  விரிவாக) எழுதி / பதிவு செயப்பட்ட உள்ள  கருத்துக்கள்   அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்கள்.. விழித்தெழு இயக்க கருத்துக்கள்  அல்ல
      ......................திட்டமிடுவோம் !! செயல்படுவோம் !!.......................

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக