வெள்ளி, 30 ஜனவரி, 2009

முத்தை(முத்துகுமரனை) கண்டெடுப்பது தமிழர்களின் கடமை


தமிழன் அங்கு செத்து கொத்தாய் விழ இன்னும் ஏனடா?

சொரணைகெட்டு உயிருடன் இருக்கிறாய்,என்று

எங்களை கேளாமல் கேட்டிருக்கிறாய் எங்கள் முத்துகுமரா!

எங்களை உணர்வு கொள்ளச் சொல்லி

உணர்விழந்திருக்கிறாய்! உயிரிழந்திருக்கிறாய்!!


நாங்களும் என்னதான் செய்வது அடிமைகளாக

இருந்து பழகிவிட்டது எங்களுக்கு! எங்களை


மதத்தின் பெயரால் அடிமைபடுத்தி, சாதியின்

பெயரால் துண்டாடி, எங்கள் பிணத்திலும்

ஓட்டு பொறுக்கும் பிணம்திண்ணி அரசியல்வாதிகள்தானே

எங்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்! என்ன செய்வது!!


எங்கள் உணர்வுகளை/ உரிமைகளை பிடுங்கி தின்றது போதும்,

இந்த பொறுக்கிகள் உன் பிணத்திலும் ஓட்டு

பொறுக்க அனுமதிக்க மாட்டோம்.

உன் பிரிவால் எழும் கண்ணீரின் சாட்சியாக


நான் இந்தியனல்லன், என்று உரத்து சொல்கிறேன்,

என்னை மதிக்காத நாடு, என் உணர்வுகளை

கொச்சைபடுத்தும் நாடு, எனதாக இருக்க முடியாது, எனதாக இருந்ததல்ல!!


ஆங்கிலேயன் ஆண்டதால் ஆங்கிலேயன் ஆகாத நான்,

இந்து வல்லாதிக்க இந்தியன் ஆள்வாதால் மட்டும்

இந்தியன் ஆக முடியுமா?


ஆள்பவன், என்னை நான் யார் என்று தீர்மானிக்கக் கூடாது

நான்தான் தீர்மானிக்க வேண்டும் என்னை யார் ஆள்வது என்று


என்பதை நன்கு உணர்த்தி சென்றிருக்கிறாய்,

தமிழர்களுக்காக தீக்கடல் மூழ்கியிருக்கிறாய்,

முத்தை(முத்துகுமரனை) கண்டெடுப்பது தமிழர்களின் கடமை,

நான் கண்டெடுத்து விட்டேன், தமிழர்களே நீங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக