நான் தமிழ்நாட்டில் பிறந்த தமிழந்தான். ஆனால் இந்தியன் என்று சொல்ல என்மனம் மறுக்கிறது.
வடக்கே அண்டை நட்டுக்காரன் இந்தியாவுக்குள் ஒரு அடிவைத்தால்கூடஆயிரம் குண்டுகளை பொழியும் இந்தியா,
தென்கோடியிலிருக்கும் தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவைஅண்டைநாடான இலங்கைக்கு தாரைவார்த்ததை நினைக்கும்பொது,
நான் இந்தியன் என்று சொல்ல என் மனம் மறுக்கிறது.நான் தமிழன் என்றஎண்ணம் எனக்குள் வேரூன்றுகிறது.
சமாதானப்படை என்ற பெயரில் இலங்கைக்குச் சென்று தமிழர்களுக்கு இந்தியஇராணுவம் இழைத்தசொல்லொன்னா கொடுமைகளை நினைக்கும்போது,
நான் இந்தியன் என்று சொல்ல என் மனம் மறுக்கிறது.
நான் தமிழன் என்ற எண்ணம் எனக்குள் வேரூன்றுகிறது.
தமிழக மீனவர்களை தொடர்ந்து கொடுமைப் படுத்தியும்,
கொன்று குவித்தும் வரும் இலங்கை கடற்ப்படையைப் பார்த்து, வடக்கே பதிலடிகொடுப்பதுபோல் இலங்கை கடற்ப்படைக்கு பதிலடியோ,
மீனவர்களுக்கு பாதுகாப்போ தராமல் மெளனம் சாதிக்கும் இந்தியாவைநினைக்கும்போது,
நான் இந்தியன் என்று சொல்ல என் மனம் மறுக்கிறது.நான் தமிழன் என்றஎண்ணம் எனக்குள் வேரூன்றுகிறது.
அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை இராணுவத்தைபார்த்துக்கொண்டு கண்டும் காணாததுபொல் இருக்கும் இந்தியாவைநினைக்கும்போது,
நான் இந்தியன் என்று சொல்ல என் மனம் மறுக்கிறது.
நான் தமிழன் என்ற எண்ணம் எனக்குள் வேரூன்றுகிறது.
காவேரி தண்ணீரை கர்நாடகமும், கிருட்ணா* தண்ணீரை ஆந்திர மாநிலமும், பெரியாற்றுத் தண்ணீரை கேரள மாநிலமும் சக இந்திய மாநிலமானதமிழகத்துக்கு தர மறுக்கும்பொது,
நான் இந்தியன் என்று சொல்ல என் மனம் மறுக்கிறது.நான் தமிழன் என்றஎண்ணம் எனக்குள் வேரூன்றுகிறதுசாகடிக்கபடலாம் .... ஆனால் நான்தோற்க்கடிக்க படமாட்டேன்......."பொறிகக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம்!
தமிழர் பலருக்கும் ஏற்படும் பொருளாழமுள்ள ஐயப்பாடு!
பதிலளிநீக்கு