வியாழன், 13 பிப்ரவரி, 2014

தோழர் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவுதோழர் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து: ஐகோர்ட்டு உத்தரவு.
==========================================

இலங்கையில் நடைபெற்ற காமன் வெல்த் மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் திராவிடர் விடுதலை கழகத்தினரும் போராட்டம் செய்து வந்தனர் . 
அப்போது சேலத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கை நீதிபதிகள் ராஜேஷ்வரன், பி.எம்.பிரகாஷ் ஆகியோர் விசாரித்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கொளத்தூர் மணியை கைது செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து இன்று தீர்ப்பளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக