வியாழன், 13 பிப்ரவரி, 2014



















ஐ.நா வின் துரோகத்தினை அம்பலப்படுத்தும் வகையில்
ஐ. நாவிற்கு எதிரான போராட்டம், யு னி செப் அலுவலக ((Unicef, Parsi panchayat road,Andheri east) முன் நாளை 12-02-14, புதன் கிழமைகாலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம்நடைபெறுகிறது
=======================================
முருகதாசன் உயிர் நீத்து உறக்கச் சொன்ன கோரிக்கையை உயர்த்திப் பிடித்து உலகை திரும்பச் செய்ய வா... ரோசமும், மானமும் உள்ள தமிழர்களாய் ஐ.நாவின் கிரிமினல்களுக்கு நெருக்கடி கொடுப்போம்.

மே பதினேழு இயக்கம் -இன அழிப்பிற்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்- மும்பை விழித்தெழு இயக்கம் ஆகியவை ஒருங்கிணைக்க,
இவர்களுடன் ,
ததேபொக, தஓவி, திவிக, தபெதிக, மற்றும் இதர இயக்கங்களுடன் கட்சிகளாக மதிமுக,தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர், தமுமுக, எஸ்டிபிஐ, விடுதலை தமிழ்ப் புலிகள், சீக்கிய இளைஞர் இயக்கம், நியூ சோசலிஸ்ட் ஆல்டர்நேடிவ், மாணவர் இயக்கங்கள் மற்றும் ஏனைய கட்சி இயக்கங்களுடன் உலகெங்கும் முற்றுகை இடுகிறோம். (விடுபட்ட இயக்க பெயர்கள்-ஏதேனும் இருந்தால்- இணைத்துக் கொள்கிறோம். )

இனப்படுகொலைக்கு நீதி கேட்க விரும்புகின்ற தோழர்கள் அனைவரும் இணைக.. கட்சி, சாதியாக பிரிந்து நின்ற 2009 போல அல்லாமல் அனைவரும் கைகோர்ப்போம்.

பிப்ரவரி 12இல்
சென்னை - யுனிசெப் , அடையாறு , இந்திரா நகர், அம்பிகா அப்பளம் எதிரில்
பெங்களூர் - டவுன் ஹால், எம் ஜி சாலை
மும்பை -யுனிசெப் , கிழக்கு அந்தேரி, பர்சி பஞ்சாயத் சாலை,
நியூயார்க் - ஐ.நா தலைமை அலுவலகம்
சிட்னி - ஐ.நா அகதிகளுக்கான குழு , 66, கிங் சாலை,

புது தில்லியில் பிப்14இல் நிகழ்கிறது. லோதி சாலை, தில்லி.

================================
#வருகின்ற பிப்-12இல் உலகெங்கும் உள்ள ஐ.நா அலுவலகங்கள் முற்றுகை & ஆர்ப்பாட்டம் ..(பல பகுதிகளில் மே பதினேழு ஒருங்கிணைக்கிறது)
========================================
மும்பையில் .#தமிழின இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெறும் ஐ.நா அலுவலக ஆர்பாட்டத்தில் மும்பை விழித்தெழு இயக்கத்துடன் ....

#அந்தேரி தமிழ் சங்கம்;
தமிழின இளைஞர் இயக்கம், நேருநகர்,விலே பர்லே; விடுதலை சிறுத்தைகள் கட்சி, செம்பூர் பகுதி;
உலகத் தமிழர் பேரமைப்பு, மலாடு பகுதி;
மதிமுக, காட்கோபர் பகுதி;
நாம் தமிழர் கட்சி, செம்பூர் பகுதி தோழர்கள்
இணைவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்கள்....
(கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிறு கிழமை அன்று மேலே குறிப்பிட்ட பகுதியில் ஐநா அலுவலக முன் ஆர்ப்பாட்டம் ஏன் ..விளக்கம் கூட்டம் நடத்தினோம்.) மேலும் ஒய்வு பெற்ற நீதிபதி சுரேஷ், சீக்கிய இனப்படுகொலையை ஆவணப்படுத்திய தோழி com.Teena kaur : com.Varsha , Research associate, india (Focus on the Global south ) மற்றும் மனித உரிமை ஆர்வாளர்கள் பலரை அணுகிய உள்ளோம்..வர முயற்சிப்பதாக சொல்லி உள்ளனர்..




===========================================================
தமிழீழப்படுகொலையில் நேரடியாக ஐக்கிய நாடு சபை  பங்கெடுத்ததை கண்டித்து தீயிட்டு வீரமரனமடைத்த முருகதாசன் நினைவு நாள் 12/02/2014 இல் மும்பை ஐக்கிய நாடு சபை அலுவலகம் (UNICEF) முன் ஆர்ப்பாட்டம்.

2௦௦9 ஆம் ஆண்டு ஈழத்தில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்றுகுவிக்கப்பட்டனர். இந்த போரில் பொதுமக்கள் மீது சர்வேதச நாடுகளால் தடைசெய்யப்பட்ட கொத்து குண்டுகளும்,ரசாயன குண்டுகளும் பயன்படுத்தப்பட்டது.
தமிழினத்தை அழித்தொழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த போரை தடுத்து நிறுத்தி மக்களை காக்க வேண்டிய ஐக்கிய நாடு சபை தடுக்கத் தவறியது மட்டுமல்லாமல் தமிழர்களை அழிக்க துணைபோனதே இத்துயரத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம்.
ஒரு நாட்டில் போர் நடக்கும்பொழுது ஐக்கிய நாடு சபையின் பாதுகாப்பு கவன்சிலை கூட்டி போரை நிறுத்த வேண்டிய ஐக்கிய நாடு சபையின் பொதுச்செயலாளர் பான்-கீ-முன் அதை செய்யத் தவறினார். இந்த போரை கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்ட அதிகாரியான விஜய் நம்பியார் இலங்கை அரசின் போர் ஆலோசகரான சதிஸ் நம்பியாரின் உடன்பிறந்த சகோதரராவார்,எனவே இவர் போரை நிறுத்தாமல், இலங்கை அரசு இந்த போரை தொடர்ந்து நடத்துவதற்கு துணையாக செயல்பட்டார். இப்படி பல்வேறு விதங்களில் ஐக்கிய நாடு சபை இந்த போரை நிறுத்த தவறியது என்று 2012 நவம்பரில் ஐக்கிய நாடு சபையின் அதிகாரியான சார்லஸ் பெட்ரி தனது உள்ளக ஆய்வறிக்கையிலேயே தெளிவாக சொல்லியிருந்தார் .
இந்த சார்லஸ் பெட்ரி அறிக்கையை மறைக்க நடந்த பல்வேறு சதிகளை உடைத்தெறிந்து கடந்த வருடம் இதனை மக்களின் பார்வைக்கு வெளிப்படுத்தினோம். இதனடிப்படையில் ஐக்கிய நாடு சபை அதிகாரிகளின் இந்த துரோகத்தினை கண்டித்து உலகமெங்கும் உள்ள ஐக்கிய நாடு சபையின் அலுவலகங்களை சென்ற ஆண்டு (2013) இல் ஆர்பாட்டம் மற்றும் முற்றுகையிட்டோம் . இதனை தொடர்ந்து கூடிய ஐக்கிய நாடு சபையில் இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடு சபையின் செயல்பாடுகள் தோல்வி அடைந்துவிட்டது  என்று ஐக்கிய நாடு சபை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனாலும் இன்றுவரை ஐக்கிய நாடு சபையானது ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோரை இழந்து நிற்கும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த நீதியும் வழங்காமல் இலங்கை அரசிற்கு தொடர்ந்து சாதகமாக நிற்கிறது.
சமீபத்தில் ஜெர்மனியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த உயர் பொறுப்புகளிலிருந்து அதிகாரிகள் பங்குபெற்ற நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் 2௦௦9 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை தான் என்றும் அது இன்றும் தொடர்கிறது  என்றும் தீர்ப்பளித்திருக்கின்றனர் மேலும் இந்த இனப்படுகொலைக்கு இந்தியா-அமெரிக்கா-இங்கிலாந்து ஆகிய நாடுகள் துணைநின்றனர் என்றும் ஆதாரத்துடன் தீர்பளித்துள்ளனர். (நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் – எந்த அரசதிகாரத்தையும் சார்ந்திராத ஓர் உலகளாவிய கருத்து தீர்ப்பாயம் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏற்பட்ட ஐக்கிய நாடுகள் சபை என்பது அடுத்து ஒரு உலகப்போர் வராமலும், உலக அமைதி சீர்குலையாமலும் பார்த்துக் கொள்ள ஏற்படுத்தடுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் , அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் வேலையை மட்டுமே இன்று வரை அது செய்து வருகின்றது. மேலும் இது அரசுகளின் கூட்டமைப்பாகும். இது அரசுகளைச் சாராத உலக‌ நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்கள் , எழுத்தாளர்கள், பண்பாட்டு, சமூகத் தலைவர்களை உள்ளிடக்கிய ஒரு அமைப்பின் தேவையை சர்வதேச அரசியல் வெளி உருவாக்கியது. 1966-67ல் வியட்நாமில் நடந்த போர் தொடர்பாகவும்,1974-76ல் நடந்த இலத்தின் அமெரிக்காவில் சர்வாதிகாரம் தொடர்பாகவும் நடைபெற்ற இரசல் தீர்ப்பாயத்தை தனது அடிப்படையாக கொண்டு 1979ல் உருவானது நிரந்தர மக்கள் தீர்ப்பாயம். இதன் தலைமையகம் ரோமில் உள்ளது. இதுவரை 20 தீர்ப்பாயங்களை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நடத்தியுள்ளது. ஐ.நா சபை போலல்லாமல் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அரசுகளின் கையிலில்லை, மக்களே அதன் பிரதிநிதிகள், இங்கு வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற சித்தாந்தம் கிடையாது. அதுமட்டுமின்றி நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஒரு நடுநிலையான அமைப்பு, அதற்கு இதுவரை இந்த தீர்ப்பாயம் நடத்திய 20 க்கும் மேற்பட்ட விசாரணைகளே சாட்சி. இந்த 20 விசாரணைகளின் அறிக்கையை இந்த இணையதளத்தில் நீங்கள் காணலாம் .. 

http://www.internazionaleleliobasso.it/)
ஐக்கிய நாடு சபையின் விதிகளின் படி, இனப்படுகொலைக்கு உள்ளானவர்கள் தனிநாடாக பிரித்து போவதற்கான உரிமையை உறுதி செய்கிறது. இதன்படி தமிழீழம் பிரிந்து போவதற்கான பொது வாக்கெடுப்பினை உடனே நடத்தியிருக்கவேண்டும். இதனை இந்தியா-அமெரிக்கா-இங்கிலாந்தின் நிர்பந்ததால் செய்ய மறுக்கிறார்கள். இது அயோக்கியத்தனத்தின் உச்சமாகும்.
இப்படிப்பட்ட முக்கிய காலகட்டத்தில் இருக்கும் நாம் இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவுக்கு உடந்தையாக இருக்கும் ஐக்கிய நாடு சபையின் அதிகாரிகளை தண்டிக்கவும், அவர்களின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளன தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியான :
·         இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையும் ,
·         தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரியும்.


                                                                                 
போர்குற்ற விசாரணை என்பது தமிழர்களை ஏமாற்றம் செயல் என்று உலகிற்கு உரக்க சொல்வதற்கு, ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனத்திற்காகவும்  ஜெனீவாவில் யுள்ள ஐக்கிய நாடு சபை யின் வாயிலில் தீக்குளித்து வீரமரணமடைந்த முருகதாசனின் நினைவு நாளான பிப்ரவரி 12இல் நீதி கேட்டு தமிழகம் உட்பட இந்தியாவின் நகரங்களிலும், உலகமெங்கும் உள்ள ஐக்கிய நாடு சபை யின் அலுவலகங்களை முற்றுகையிடுவோம்/ஆர்பாட்டம் நடத்துவோம்.
இந்தியா- இலங்கை அமெரிக்கா-இங்கிலாந்தின் கூட்டு சதியை முறியடிப்போம்.


இக்கட்டுரை மும்பையில் இருந்து வெளிவருகிற தமிழ் இலெமுரிய மாத இதழ் தலையங்கத்தில் வந்தது (www.tamillemuriya.com)
2013 செப்டம்பர் திங்களில் நடைபெற்ற (ஐக்கிய ) அய்க்கிய நாடுகளின் அவை 68 ஆம் பொது சபைக் கூட்டத்தில் அய்.நா. செயலாளர் பான் கி மூன் இலங்கை நிலவரம் குறித்து தெரிவித்த கருத்துகள்அய்.நா. மனித உரிமைக் குழுவின் 24வது கூட்டத்தில் அதன் தலைவர் நவநீதம் பிள்ளை இலங்கை அரசு குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள் ஆகிய இரண்டும் உலகத் தமிழர்களாலும்மனித உரிமை ஆர்வலர்களாலும் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

            அய்.நா. பொதுச்சபையின் கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பான் கி மூன் இலங்கையில் அய்.நா.வின் செயல்பாடுகள் தொடர்பான உள்ளக மீளாய்வில் அய்.நாஅமைப்பு ரீதியாகத் தோல்வியைத் தழுவியுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும்இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போரை நிறுத்தவோமனித உரிமைகளைக் காக்கவோ தக்க நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும்அய்.நா.வின் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கவில்லை எனவும்அய்.நா.வின் தோல்வியை ஒரு ஒப்புதல் வாக்கு மூலமாகவே தந்துள்ளார்.

            இதே போன்று அய்.நா. மனித உரிமைக் குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளைஇலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப் பயணம் செய்து நேரில் ஆய்வு செய்துதனது வாய்மொழி மூல அறிக்கையை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்தார். பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களில் காணாமல் போனவர்கள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லைபோர் முடிந்து நான்கு ஆண்டுகள் முற்றுப்பெற்ற பின்னரும் தமிழர் பகுதிகளில் இராணுவமும்காவல் துறையினரும் குவிக்கப்பட்டுநீதித்துறை முடக்கப்பட்டுமக்களாட்சி உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் தன் பயணத்தின் போது ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த இராணுவச் சோதனை மையங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஏற்படுத்தப்பட்டதென்று தெரிவித்திருப்பதுடன்குற்றத்தைச் செய்ததாகச் சொல்லப்படும் இராணுவத் துறையே குற்றங்களை விசாரிப்பது என்பது நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை எனவும்இலங்கை அரசு எதிர் வரும் மார்ச் 2014க்கு முன்பாக இருக்கும் ஆறு மாத கால நேரத்தைப் பயன்படுத்தி முறையான விசாரணை செய்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசு இதைச் செய்ய தவறுமானால் பன்னாட்டு அமைப்புகளின் மூலம் சுயமான விசாரணைகள் மேற்கொள்வது பன்னாட்டு அமைப்புகளின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

            உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் 2009 ஆம் ஆண்டு அய்.நா. அமைப்புகளை கண்ணீருடன் கெஞ்சிய நிலையில் உணர மறுத்த உண்மைகளை தற்போது அய்.நா. ஒப்புக் கொண்டிருப்பது ஒரு ஆறுதலான விடயமாகும். 

            உலக நாடுகள் வழிகாட்டுதலுக்கு முதன்மை அமைப்பாக விளங்கும் அய்.நா. பொதுச் சபை மற்றும் அதன் உயரிய அமைப்பான அய்.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்த இந்த கருத்துகளைகருத்து தெரிவித்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள்ளாக இலங்கை அரசு மறுத்துஇவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்திருப்பதுடன்வடக்கு மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டணி முதலமைச்சர் சொல்வதனால் இலங்கை இராணுவத்தினரை வடக்குப் பகுதியில் இருந்து திரும்பப் பெற முடியாது எனவும் இலங்கை அதிபர் இராசபக்சே குறிப்பிட்டுள்ளார்.

            “வன்முறை ஒழிப்புப் போர்” என்ற போர்வையில்உலக நாடுகள் பலவற்றை தந்திரமாக தன் பக்கம் திருப்பிபோர்க் குற்றங்கள் புரிந்துஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த இராசபக்சேவின் தற்போதைய நிலைப்பாடு வியப்பிற்குரியதல்ல. இலங்கை அரசின் இந்தத் துணிச்சலுக்குக் கரணியமாக விளங்குவது அய்.நா.வின் கடந்த கால நேர்மையற்ற நடவடிக்கைகளேயாகும். 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்ற காலகட்டத்தில் அய்.நா. செயலாளர் பான் கி மூன் இலங்கை அரசின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பது போன்று அறிக்கை வெளியிட்டமைசெஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அய்.நாகண்காணிப்புக் குழுவினரை இலங்கை அரசு வெளியேற்றிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அய்.நா. மவுனம் காத்த போக்குஇலங்கை அரசால் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை அறிவிக்க மறுத்து தொடர்ந்து இனப்படுகொலை நிகழ்த்த அனுமதித்த நிலைஇனப்படுகொலை நடத்தி முடித்து வெற்றி விழா கொண்டாடிய இலங்கை அரசின் விழாவில் அய்.நா. பொதுச் செயலாளர் பங்கேற்ற அவலம், 2012 ஆம் ஆண்டு சேனல் 4 தொலைக்காட்சி காணொளிகளுக்குப் பின்பும் அமெரிக்கத் தீர்மானத்தின் மீது இலங்கை அரசே அதன் அத்துமீறல்களை விசாரித்துக் கொள்ள அனுமதித்த அய்.நா.வின் நேர்மையற்ற செயல்கள் ஆகிய அனைத்தும் இராசபக்சேவின் கயமை எண்ணங்களுக்கு உரமூட்டி உள்ளன. அதன் விளைவே இன்று இலங்கை அரசை துணிச்சலுடன் மறுக்க வைத்துள்ளன என்பது உண்மையாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கு நேரடியாகவும்மறைமுகமாகவும் அனைத்து வழிகளிலும் உதவி செய்த அமெரிக்காஇந்தியா போன்ற சில நாடுகள் கூடஉண்மைகள் வெளிவரும் நிலையில்தற்போது தன் மனசாட்சியின் உறுத்துதலினால் தெளிவாகக் கருத்துத் தெரிவிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு மவுனம் காத்து வருகின்றன.

            எதையுமே ஏற்காதஎவரையும் மதிக்காத இலங்கை அதிபரிடம் மீண்டும் மீண்டும் வேண்டுவதும்விளம்புவதும்மலைப்பாம்பின் முன் மகுடி ஊதும் மனிதனின் செயலுக்கு ஒத்ததல்லவா!

            தூய்மையும்வாய்மையும் இன்றி குருதிக் கொப்பளிக்ககொடுமையின் உச்சத்தை எட்டி இன அழிப்பு செய்த ஒரு நாட்டில் மனித உரிமைமக்களாட்சிஅமைதிபாதுகாப்புபேச்சு சுதந்திரம் போன்ற கொள்கைகளை முன்னெடுக்கும் பொது நல நாடுகளின் மாநாடு என்பதும்அதற்கு இலங்கை அரசின் இராசபக்சே தலைவராக தேர்வு செய்யப்படுவதும் எந்த வகையான நீதிஅய்.நா.வும்இந்தியாவும் இதுவரை செய்த தவறுகள் போதாதாதமிழர்களை அடக்கத் துடிக்கும்அழிக்கத் துடிக்கும்ஆதிக்க விலங்குகளிடமிருந்து இனியாவது இந்தியா விலகியிருக்க வேண்டும். இலங்கை அரசின் பொய்மை அறிவிப்புகளும்புனைவு வேடங்களும் உலக நாடுகளுக்குத் தெரிய வந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் இந்தியா நேர்மையுடன் செயல்பட வேண்டும்.

            இலங்கைத் தமிழர்களுக்காத் திட்டங்கள் என்கிறார்கள்தீர்வுகள் என்கிறார்கள்சட்டங்கள் என்கிறார்கள்ஏட்டிலே மட்டும் எல்லாமே இனிக்கிறது-இளிக்கிறது. தேசம் ஒன்று என்றும்நேசம் நன்று என்றும் சொல்வதோடு சரிசொல்பவர்கள் எவரிடமும் நேசமும் காணோம்பாசமும் காணோம். மோசமும்நாசமும்தான் இதுகாறும் மிஞ்சியுள்ளன. இந்த நய வஞ்சகத்தினையும்நாணயக் கேட்டினையும் அகற்றினாலொழிய தீர்வை நோக்கிய திசை தெரிவது கடினம்.
 உலகமெங்கும் உள்ள ஐக்கிய நாடு சபை யின் அலுவலகங்களை முற்றுகையிடுவோம்/ஆர்பாட்டம் நடத்துவோம்.
இந்தியா- இலங்கை அமெரிக்கா-இங்கிலாந்தின் கூட்டு சதியை முறியடிப்போம்.



இடம் : யுனிசெப் அலுவலகம் ,பார்சி பஞ்சாயத் ரோடு,  அந்தேரி கிழக்கு,மும்பை
நாள் :- பிப்ரவரி 12, புதன்கிழமை,காலை 9.30 மணிக்கு
மும்பை விழித்தெழு இயக்கம் /MVI -- 9702481441, 9867488167,9821072848
vizhithezhu.org@gmail.com

  


 =============================================================
press note
Mumbai Vizhithezhu Iyakkam
Add:- Dharavi cross road,Dharavi, Mumbai-40017
_______________________________________________________________________

Dear Press,


A massive genocide has taken place in Tamil Eelam (Island of Srilanka) and it still does not have its rightful attention in the international arena. If Media's role was the biggest learning from the Rwanda's tragedy, it is high time we used this Media in its highest cause, by swerving the International attention towards giving hope to another human soul.

UN - From “Complicity with Evil” to “Dancing with Devils” -
The UN Internal Review Panel Report, known as “Petrie Report” released in November 2012 has exposed the callousness of the UN and its ancillary bodies working in Sri Lanka during the end of the civil war. The report has made it clear that the massacre of tens of thousands of innocent Eelam Tamil civilians by the Sri Lankan Army could have been averted if the top UN officials had chosen to disclose the death toll at an early stage.

The report though damning of the UN bodies in general and on the incompetency of the Resident Coordinator Mr. Neil Buhne in particular, tacitly underplays the disastrous effect of the “quiet diplomacy” path of the Secretary General, implemented in “ground zero” by his then Chef de Cabinet Mr. Vijay Nambiar and Under Secretary General for Humanitarian Affairs Mr. John Holmes. And the report is dubiously silent on the appalling course of actions pursued by other UN high officials Mr. Philippe Duamelle, Country Representative of Sri Lanka, UNICEF (which supplied cricket bats and black boards instead of life saving medicine and food at the height of the war) and Mr. Amin Awad Head of UNHRC in Sri Lanka.

In fact, an independent inquiry conducted by the eminent author Julian Vigo, published in the Sri Lankan Guardian on April 2012, and has indicted the above mentioned UN officials acting in utter disregard of the suffering population, promoting their self interests and in complicity with the murderous onslaught of the Sri Lankan regime. Many of these officials have been promoted to further higher echelons of the UN hierarchy without any deliberation on their accountability.
The Human rights violation at Srilanka and the conscious ignorance of the human rights norms by UN Officials like Ban- Ki- Mon, Vijay Nambiyar and John Holmes should be investigated. The UN Public voting on the “Tamil Eelam” which is held by these people should be conducted immediately in order to provide Justice for the Tamils.

Considerable evidences have been gathered against the above mentioned UN officials and their sheer ignorance on the same. Some of the evidences are summarized below,
- The Food, Water and Medical help to the war victims are stopped by UN during the time of war which in itself is a biggest war crime. (The final materials which were sent to the war zone where cricket bats and balls instead of medical facilities)
- Withholding the exact figures of people died in the war purposefully and by doing this it encouraged the Srilankan Army to advance further (These details are withheld until today)
- The UN officials of the lower cadre in Srilanka were forced to falsely impose the war crimes and the Genocide by the Srilankan Army and the Government on the LTTE.
- UN Official Vijay Nambiyar who was sent to look in to the War status, hold peace talks and stop the war has never moved out of his guest house Press Note
- Un Official Ban- ki- Moon attending the victorious celebrations of the Srilankan Government and Army after the war.
- Ban- Ki- Moon’s planned screening of Srilankan commercial war videos produced by the Srilankan Government instead of the Channel 4 videos
- His ignorant statement saying that “Srilanka will do it’s investigate its own self and there is no need for any independent agency involvement”
- The UN officials have vested interest in the war owing to their personal connections with the Srilankan and Indian bureaucracy (Ban- ki- Moon’s son in law is the official who represented the IPKF forces and Vijay Nambiyar’s brother Sathish Nambiyar is the Srilankan Army advisor who was a mastermind behind the entire war.)
- There are also substantial evidences that show the way Ban- Ki- Moon giving considerable time to the Srilankan Government to destroy the proofs of Genocide.
Let us all raise in unison against UN who are now proclaiming that the Tamils are treated their best by the Srilankan Government, Let us bring in to light the crimes committed by these officials, let us all fight for the Justice for which more than 18 Tamils set themselves a blaze for. Let us all march to the streets demanding Justice for those numerous people who were victims of war crimes and raise our collective voices against the irresponsive Indian Government and the UNO
The report while remaining silent about the findings of the independent inquiry, has an ironic mention of the Brahimi Report (commissioned in 2000 by the then SG Mr. Kofi Annan) in its concluding remarks, which had more scathing comments to say of the UN’s failure in Rwanda. It had warned the UN of “Complicity with Evil” if it fails to identify the perpetrator from the victim.
Sadly, a decade after the warning, the UN - as the “Petrie Report itself admits, has moved a step further – from “Complicity with Evil” to “Dancing with the Devil”. In spite of knowing the obvious, that the Govt. of Sri Lanka was perpetrating a horrendous crime right in front of their own eyes, the UN officials stationed in Sri Lanka and the UN high command, failed to stand against the crime, covered the blood bath, and thrust the entire blame upon those who fought for the freedom of their brethren.
In light of a comprehensive review of UN interventions in conflicts around the globe, and witnessing it in action in close proximity in Sri Lanka, we have come to the conclusion that it is nothing short of an international bureaucracy indulged in parasitic sustenance. In deep consonance with our brethren - Eelam Tamils in Sri Lanka, let down by a heartless bureaucratic machine, we Tamils from Tamil Nadu and the Tamil diaspora, demand justice be done within the machine. We demand a transparent inquiry be conducted, on all the high officials, including the Secretary General for their role of complicity with a murderous regime, which unleashed a brutal genocide right in front of our eyes.
We the “May 17 Movement” from Tamil Nadu have initiated this struggle for justice from the UN, demanding accountability and transparency on the part of UN, challenging it to conduct a free and fair inquiry on all of its officials who were complicit with a murderous regime. We Tamils all over the world are to lay siege to the UN offices on 12 February, 2014 to remind it of its fate in the words of its own

Brahimi Report: “People everywhere are fully entitled to consider that it is their organization and as such to pass judgment on its activities and the people who serve in it”.
A seize demonstration has been planned outside the UN office in India, United States, France, Norway, Australia and United Kingdom and Malaysia on the 12th February 2014 in the memory of Martyr Murugadasan who set fire to self-outside the UN headquarters in Geneva.
We would like to bring to your kind attention that, our besieging of UN offices insisting our demands will simultaneously take place in Chennai, Tamil Nadu, in which representatives of major political parties that hold a membership of more than a million, and 40 political movements of strong ideological commitments and 12 human rights organizations will participate. The besieging of UN offices will also take place in our neighboring states of Kerala, Andhra Pradesh, Karnataka, in the capital New Delhi and in front of its head quarters in Geneva and New York. The protest will also be held at Human rights square at the French Capital, Paris and against UN office in London
UN High Officials collaboration with the Rouge State Sri lanka is a continuing affair till date and we accuse UN for collaborating with the Srilanka to dilute the Demand for independent Nation and insist a false reconciliation process that was forced upon the Tamils by Sri lanka military. Proposal for International Independent Investigation by UNSG legal advisor and UNHRC was neglected by Mr. Ban Ki Moon thus rejected justice to Tamils of Eelam. So we demand the UN to implement what was denied to the innocent Eelam Tamils. The above are noted from the report submitted by the “Panel of Experts on accountability in Sri Lanka” known as ‘Experts Panel Report” established by (UN) Secretary-General and from Petrie Report.

A panel headed by Jan Eliasson, Deputy Secretary General, prepared a report titled “Rights Up Front” which makes recommendations to UN based on its inaction in Sri Lanka. The recommendations have been constructed largely based on the complicity of Secretary General and suggests ripping off most of the critical responsibilities from Secretary General. These suggestions are a huge blow to the UN system as a whole and Secretary General in his speech in General Assembly admitted a systemic failure. At this juncture, it is the moral responsibility of the UN to initiate remedial actions to deliver justice to the victims based on their political needs and aspirations as suggested by Experts Panel Report.

Couple of months back, Permanent People’s Tribunal also gave their verdict on Eelam Tamil Genocide and a brief follows.

About Permanent People’s Tribunal(PPT)

The Permanent Peoples' Tribunal is an international opinion tribunal independent from State authorities. It examines and provides judgments relatives to violations of human rights and rights of peoples. The Tribunal was founded in Bologna (Italy), June 24, 1979, by law experts, writers and other intellectuals. It succeeded the Russell Tribunal (or International War Crimes Tribunal), which, in 1967, exposed the war crimes committed against the Vietnamese people. The Permanent Peoples' Tribunal was created out of the Lelio Basso International Foundation for the Rights and Liberation of Peoples (FILB), established in 1976 and inspired by the Universal Declaration of the Rights of Peoples at Algiers (also named the Algiers Declaration). The Permanent Peoples’ Tribunal may use International human rights law, or the Declaration on the Rights of Indigenous Peoples adopted by the United Nations.

About PPT’s verdict on Srilankan Genocide
After an assessment of evidences presented by eyewitnesses and experts, judges of the Permanent People’s Tribunal reached unanimous consensus that the Sri Lankan state was guilty of crimes of genocide against the Eezham Tamils and that the genocide is continuing even after the end of the military operations against the LTTE. Concluding the four day session with a press conference at Bremen on Tuesday, the judges also noted that the Sri Lankan military did not have capacity to commit genocide on its own and that it was supported by the UK-USA-India axis.

The Tribunal considers that the proofs established, beyond any reasonable doubt that the following acts  were committed by the Government of Sri Lanka 
(a) Killing members of the group, which includes massacres, indiscriminate shelling, the strategy of 
herding civilians into so‐called "No Fire Zones" for the purpose of massive killings, targeted assassinations of outspoken Eelam Tamil civil leaders who were capable of articulating the Sri Lankan genocide project to the outside world 
(b) Causing serious bodily or mental harm to members of the group, including acts of torture, inhumane or degrading treatment, sexual violence including rape, interrogations
combined with beatings, threats of death, and harm that damages health or causes disfigurement
or injury.
 (c) Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part, including 
* expulsions of the victims from their homes, 
* seizures of private lands, 
* declaring vast areas as military 
High Security Zone (HSZ) to facilitate the military acquisition of Tamil land 

These are the highlights from the Permanent Peoples’ Tribunal.

Above all, The United Nations failed in its mandate to protect civilians in the last months of Sri Lanka's bloody civil war, a leaked draft of a highly critical internal UN report says.

We Demand,    
1. UN to conduct referendum for Independent Sovereign Tamil Eelam, Now.
2. International Independent Investigation on Srilanka for Crime of Genocide, Crimes against Humanity & War Crimes
We will besiege UN offices wherever we live in this world and demand justice on 12th feb, 2014, the day Mr.Murugadasan self-immolated himself before the UNHRC’s HQ Geneva five years ago demanding UN to save Tamil people from racist government to which UN was a partner.


For reference:

Appendix 1: (UN Complicity - Evidences & Recordings - May17 Movement Report) as attachment 1
Appendix 2: (SCETTAG - ICC – Charge sheet) as attachment 2
Channel4 Video: http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/episode-guide
http://www.bbc.co.uk/news/world-asia-20308610

From
Mumbai Vizhithezhu Iyakkam 
Mumbai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக