புதன், 7 நவம்பர், 2012

இந்திய சமூகப்புரட்சியில் - ஜோதிபா பூலே



இந்திய சமூகப்புரட்சியில் ஜோதிபா பூலே

மகாத்மா ஜோதிபா பூலே 
(11.04.1827 --  28.11.1890)



  • ·         முதன் முதலில் பார்ப்பனீயத்திற்கெதிராக கலக்கம் செய்தவர்.
  • ·         பூலேவின் மனைவி சாவித்திரிபாய்புலே தான் இந்தியவின் முதல் பெண் ஆசிரியரும், பெண்களுக்கும் கல்வி கர்ப்பிதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ·         முதன் முதலில் மனுஸ்மிருதியை எரித்தவர்.
  • ·         இந்திய வரலாற்றில் முதன் முதலில் SC/BC மக்களுக்கு கல்விக்கூடத்தை ஏற்படுத்தி கல்வி கொடுத்தவர்.
  • ·         1848 இல் முதன் முதலாக பெண்களுக்கு கல்விக்கூடத்தை ஏற்படுத்தி பெண்கள் கல்வி கற்கும் உரிமையை நிலைநாட்டியவர்.
  • ·         முதன் முதலாக விதவை மறுமணத்தை நடத்தியவர்.
  • ·         முதன் முதலாக விதவைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், ஆதரவற்ற பெண்கள், சிறுவர்களுக்கும் காப்பகம் ஏற்படுத்தி சமூக சீர்திருத்தம் செய்தவர்.
  • ·         புரோகிதர்களின் பொய் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி, மூடநம்பிக்கையிலிருந்து மக்களை விடுவித்து பகுத்தறிவை வளர்த்து, மக்களிடம் முற்போக்கு சிந்தனையை தூண்டியவர்.
  • ·         முதன் முதலாக தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசுக்கு கோரிக்கை வைத்தவர்.
  • ·         சாதி இந்துக்கள் பொதுக்குளத்தில் நீர் எடுக்க தீண்டத்தகாதவர்களை அனுமதிக்காதபோது, தன்வீடு குளத்தில் தண்ணீர் எடுக்க அனுமதி அளித்து சமுக புறக்கணிப்புக்கு ஆளானவர்.
  • ·         பார்ப்பனிய கலாச்சாரத்திற்கு எதிராக மாற்றுக் கலாச்சாரத்தை தோற்றுவித்தவர்.
  • ·         கடவுளை வணங்க கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர் தேவைவில்லை என்று புரோகித சாதியினரின் பொய், புரட்டுகளிளிருந்து மக்கள் விடுவிக்க முயற்சி செய்தவர்.
  • ·           1873 செப்டம்பர் 24 இல்  சத்திய சோதக் சமாஜ் என இயக்கத்தை ஏற்படுத்தி பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கல்விக்கூடங்களை ஏற்படுத்துவது, புரோகிதர்களின் பொய்ப்புரட்டுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது, விதவைகளுக்கு மறுமணம் செய்துவைப்பது, புரோகிதர்களை அழைக்காமல் கருமகாரியங்களை செய்துக்கொள்ள தனிப்பயிற்சிப்பள்ளியை ஏற்படுத்தி வீட்டுக்கு ஒருவர் தன் வீட்டுக்கு கருமகாரியங்களை செய்து கொள்ள பயிற்சி அளிப்பது போன்ற புரட்சிகர செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.
  • ·         1882 இல் முதன் முதலாக ஆங்கில அரசிடம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கோரிக்கை வைத்தவர்.
  • ·         முதன் முதலாக உயர்கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று விக்டோரியா மகாராணியிடம் கோரிக்கை வைத்தவர்.
  • ·         முதன் முதலாக கட்டாயக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று போராடியவர்.
  • ·         பூலேவின் மனைவி சாவித்திரிபாய்புலே தான் இந்தியவின் முதல் பெண் ஆசிரியரும், பெண்களுக்கும் கல்வி கற்பித்தவரும் ஆவார்.
  • ·          சூத்திரர்களும், ஆதி சூத்திரர்களும் காங்கிரஸில் சேரக்கூடாது என அறிவித்தவர்.
  • ·         பூலேவின் சமூக சீர்திருத்தப் பணிகளை கண்டு ஆங்கில அரசு இவரை பாராட்டி கவுரவித்தது.
  • ·          1888ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் நாள் பெரும்பான்மை சமூகத்து மக்கள் இவருக்கு ஒரு பாராட்டு கூட்டம் நடத்தி மகாத்மா என்ற பட்டம் சூட்டினார்கள். காந்தியும் கூட உண்மையான மகாத்மா ஜோதிபாபுலேதான் என்ற கூறியிருக்கின்றார்.               பாபாசாகிப் அம்பேத்கரே தன்னுடைய தலைவராக ஜோதிபாபூலேவைத்தான் குறிப்பிடுகிறார்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக