தமிழ்க்கடல் - பகுத்தறிவு மேதை
பண்டித க, அயோத்திதாசர் (20-05-1845 To
05-05-1914)
ஆதிதிராவிடர் மகாசன சபையை
தோற்றுவித்தவர்.
பகுத்தறிவுக் கொள்கையை முதன் முதலில்
தமிழகத்தில் பரவச் செய்தவர்.
தமிழினத்தை முதன்முதலாக தேசிய இனமாக
அறிவித்தவர்.
மதத்திலுள்ள பல கட்டுக்கதைகளையும், அறுவறுக்கத்தக்க
சடங்குகளையும், மிகவும்
வன்மையாக அதுவும் ஆதாரப்பூர்வமாக கண்டித்தவர்.
பல பள்ளிகளை அமைத்தவர் . தமிழ்
மருத்துவத்தை பேணி வளத்தவர். குடிமதிப்பீட்டுக் குறிப்பில் சாதி, மதம், தவிர்த்து தமிழன் என பதிவு
செய்ய போராடியவர்.
சமுதாயத்திலிருந்து அறியாமையை நீக்கவும் , உயர்வு
- தாழ்வு மனப்பான்மையைக் கண்டித்தும், மக்களைச்
சிந்திக்க தோண்டும் வகையில் பல நூல்களை எழுதினர்.
1902 இல் தென்னிந்திய சாக்கிய சங்கத்தை
நிறுவினார்.
1907 இல் தமிழன் என்கிற பத்திரிகையைத்
துவக்கினர்.
===============================================================
இரட்டை மலை சீனிவாசன்
(07-07-1860 To 18-09-1945)
1891 இல் பறையர் மகாஜன சபையைத் தோற்றுவித்தவர் .
சமூக சீர்திருத்தவாதி, வழக்குரைஞர், பறையர்
என்ற மாத இதழை நடத்தியவர். சட்டமன்றத்தில் அவர் முன்மொழிந்த தீர்மானங்கள், மது ஒழிப்பு, ஆலய நுழைவு முதலானவை
முக்கியமானது. வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்காருடன் பங்கு பெற்று, இந்தியாவின் தீண்டாமைக்
கொடுமையை உலகிற்கு காட்டியவர்.
==========================================================
பேரறிஞர் பி .ஆர். அம்பேத்கர்
14-04-1891 To 06-12-1956
அம்பேத்கர் அமெரிக்க சென்று பொருளாதரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல்
படித்த முதல் இந்தியர். உலகப்புகழ் பெற்ற அமெரிக்க கொலம்பியா, லண்டன் கிரே இன், ஜெர்மனி போர்ன், ஆகிய மூன்று பல்கலைக்
கழுகங்களில் பயின்ற பெருமை இந்தியத் தலைவர்களில் இவர் ஒருவருக்கே உரியதாகும்.
இவர் எழதிய இந்தியாவில் சாதிகள் என்ற
கட்டுரை மிகப்பெரிய புரட்சி செய்தது. மேலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு
எதிராக போராடியது, பட்டியல்
இன மக்களுக்கு (ஓடுக்குப்பட்ட மக்களுக்கு
) தனி வாக்குரிமைக்கு போராடியது, மக்கள்
பயனடைய பியூப்பிள்ஸ் எஜெகேஷுன் சொசைட்டி என்ற பெரியதோர் கல்விக்கூடத்தை நிறுவி
உயர்நிலைப்பள்ளி, கலைக்கல்லூரி , தொழிற்கல்லூரி
போன்ற பல நிறுவனங்கள் ஏற்பட வழி செய்தார்.
1920 இல் அரசியலில் நுழைந்தார்
ஆயிரக்கணக்கான கூட்டங்கள், மாநாடுகள் வாயிலாக மக்களை
விழிப்படையச் செய்தார்.
1927 இல் சௌதார் குளத்தில் நீர் எடுக்கும்
போரடத்திலும் மற்றும் காலாராம் கோயில் நுழைவுப் போராட்டத்திலும் வெற்றி கண்டார்.
"ஒதுக்கப்பட்ட பாரதம்", "மூத்தத்
தலைவர்" போன்ற பத்திரிகைகளைத்
துவக்கினர்.
சிறுபிள்ளைகள் கல்வி, தாய்மார்களின்
மகப்பேறு கால உதவி, விவசாய
தொழிலாளர் ஊதியம் போன்றவைகளை நிறைவேற்றினார்.
விவசாய அடிமை முறையை ஒழித்தார், தீண்டாமை
ஒழிப்புக்கான சட்டங்களை கொண்டு வந்தார். தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, அவசரகால -ஓய்வுகால உதவி
போன்றவைகளுக்கு வழி வகுத்தார். இந்திய சமுதாய அரசியல் நிலைமைகளை ஆராய வந்த எல்லா
குழுக்களுக்கும் தம் ஆய்வுரைகளை வழங்கினார். பழங்குடி மக்களுக்கு அரசியல் உரிமையாக
தனிபிரிதிநிதித்துவத்தைப் பெற்றார். அரசியல் சட்டத்தை எழுதினர்.
1956 இல் 5 லட்ச மக்களை பௌத்த மார்க்கத்தை
ஏற்கச்செய்தார்.
===========================================================
மாவீரன் இம்மானுவேல் சேகரன்
9-10-1924 To 11-9-1957
தமிழகத்தில் குறிப்பாக தென்தமிழகத்தில்
ஒடுக்கப்பட்ட மக்கள் சாதியத்திற்கு எதிராக -ஒடுக்குமுறைக்கு எதிராக தன உயிரை பணயம்
வைத்துப் போராடிய வரலாற்று நாயகன்.
1942 இல் அண்ணல் அம்பேத்கர் தாய்நாட்டை
காக்க இந்திய இளைஞர்களை போரில் ஈடுபட கேட்டுக் கொண்டதற்கிணங்க ஏறானவதில்
சேர்ந்தார்.
ஒடுக்கப்பட்ட (பட்டியல் இன மக்கள் ) சாதி
இந்து வீட்டில் இழவுக்கு ஒப்பாரி பாடுவதை தடுத்து நிறுத்தினார். ஒடுக்கப்பட்ட
மக்கள் ஊர் கோயில்களில் திருவிழாக் காலங்களில் ஊழியம் செய்ய வேண்டும் என்ற
எழுதப்படாத சட்டத்தை உடைத்தெறிந்தார்.
1957 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பின்
ஏற்பட்ட கலவரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் மாவீரன் இம்மானுவேல் சேகரன் நின்று போராடிய
அவர்களை பெரும் சேதத்திலிருந்து காத்தார்.
==========================================================
எல் .சி . குருசாமி
1885
To 1966
மக்களின் தாழ்வு மனப்பான்மை நீங்க
வேண்டுமாயின், ஆதிக்குடிமக்கள்
வெளியரங்குக்கு வந்து தங்கள் தங்கள் பிறப்பினால் பெருமை அடைவதாகச் சொல்ல வேண்டும்.
கர்ம வீரர் காமராஜர்க்கு முன்பே தமிழ்
நாட்டில் தலைவர்,ராவ்சாகேப், எல்.சி. குருசாமி சட்டமன்ற்
உறுப்பினராக இருந்து பல கல்வி நிறுவனகளை நிறுவி பலர் கல்வி கற்க அடிக்கல்
நாட்டிவர்.
1921 இல் இரண்டு இரவுப்பள்ளிகளை அவர்
நிறுவினார்.
சென்னை சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில்
பகல்நேரப் பள்ளிகளையும் ஆரம்பித்தார்.
· 1921
இல் பல நூறு குடும்பங்கள் தாங்கள் வாழும் நிலத்தை உரிமையாகப் பெற அவர் வழி
கண்டார்.
· 1937
இல் நிகழ்ந்த ஆலயங்களில் துணிந்து பிரவேசித்தல் என்ற போராட்டத்துக்காக அவர் பலரைத்
திருவாங்கூருக்கு ஆழைத்துச் சென்றார். பல மாணவர் விடுதிகளை நிறுவினார்.
==============================================================
அன்னை மீனாம்பாள் சிவராஜ்
26-12-1904 To 30 -11 -1992
பழங்குடி மக்களுக்கு மாதர் தரப்பில்
கிடைத்த தாய் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள்
பல்வேறு மகளிர் போராட்டங்களில் தலைமை
ஏற்று வழி நடத்தியவர் அன்னை மீனாம்பாள் .
திராவிட
கழக தலைவர் ஈ. வெ. ராமசாமிக்கு
"பெரியார்" என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர் அன்னை மீனாம்பாள்.
சைமன் குழு வருகையை ஆதரித்து முதல் மேடை
பேச்சில் 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில்
வல்லமை பெற்றவர்.
இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக
விளங்கியவர்.
1930 இல் இருந்தே அண்ணல் அம்பேத்கரின்
பணிகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறியவர்.
இணையர் தந்தை சிவராஜுடன் இணைந்து பவுத்த
நெறியினை மக்களிடம் பரப்பினார் அன்னை மீனாம்பாள்.
டாக்டர் அம்பேத்கரின் தங்கை என செல்லமாக
அழைக்கப்பட்டவர் அன்னை மீனாம்பாள் .
சென்னை மாநகராட்சியின் துணை மேயர் ,கவுன்சிலராக 6 ஆண்டுகள், கவுரவ மாகாண நீதிபதியாக 16
ஆண்டுகள், திரைப்பட
தணிக்கை குழு உறுப்பினராக 6 ஆண்டுகள், சென்னை
மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினராக 9 ஆண்டுகள், தொழிலாளர்
ட்ரிப்யூனல் உறுப்பினர் , சென்னை
நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர், சென்னை
பல்கலைக் கழக செனட் உறுப்பினராக 13 ஆண்டுகள் , போருக்குப்பின்
புணரமைப்புக்குழு உறுப்பினர், S.P.C.A உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி
தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர்
கூட்டுறவு வங்கி இயக்குனர், அண்ணாமலை
பல்கலை கழக செனட் உறுப்பினராக 6 ஆண்டுகள் , சென்னை
கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை
அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி
நகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர்
தொழிற் கூட்டுறவு குழுத்தலைவராக 6 ஆண்டுகள், சென்னை
அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர்,
அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி
நடத்துனர், லேடி
வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் போன்ற பொறுப்புகள் வகித்து மக்கள் பணி
ஆற்றியவர்.
31 -1 -1937 இல் திருநெல்வேலில் ஆதிதிராவிடர் மாநாட்டில்
அன்னை மீனாம்பாள் பேசியது :-
" ஒற்றுமையில்லாக் குடும்பம், ஒருமிக்க கெடும் என்பார்கள்.
அதுபோல ஒரு குடும்பமோ, ஒரு
சமுதாயமோ, ஒரு
தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் ஒற்றுமை மிகவும் அவசியம். நாம் தேசத்தில்
சாதிப்பிரிவினை அறவே ஒழிய இன்னும் பல ஆண்டுகள் செல்லுமாயினும் நம் சமூகத்தினர், நாம் முன்னேற்றமடைய நாங்களும்
மனிதர்கள்தான்; எல்லா
உரிமைகளும் எங்களுக்கும் உண்டு என்று நிருபிப்பான் வேண்டி நாம் யாவரும் பிரிவினை
இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆதிதிராவிடர்களின் கடைசி
தலைவியான அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள்
=============================================================
தந்தை,(பேராசிரியர்
) என் .சிவராஜ். B.A., B.L.,Ex.MP.,Ex.Mayor
(29-9-1892 To 29-9-1964)
மக்கள் சொந்த நிலா விவசாயிகளாக மாறாத
வரையில், அவர்களுடைய அடிமைமுறை மாறாது என்ற கொள்கையே உடையவர்.
தனக்கு துணை நீதிபதி பதவி தந்ததை ஏற்காமல்
மக்கள் பணி செய்வதை உயர்வாக கருத்தியவர்.. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழக்காட
தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
மாணவர் விடுதிகள் நகரில் பல இடங்களில்
தோன்றக் காரணமாயிருந்தார்.
ஆதிதிராவிட மக்கள் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது
என்பவை மனித உரிமைக்கு துரோகமானது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட தனி
அதிகாரியினை நியமிக்க வேண்டுமென சட்ட சபையில் முழங்கியவர்
தாத்தா, இரட்டை
மலை சீனுவாசனாருடன் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் அமைத்த அகில இந்திய
தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்திற்கு (A.I.S.C.F)
1942 முதல் தலைவராக இருந்தவர்.
சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில்
கலந்துக்கொண்டு இந்திய ஏழை மக்களின் இடர்பாடுகளை விளக்கினார்.
1946 இல் மக்களின் இழிவுகளை நீக்கி
இன்னல்களை போக்க ஏதும் நடவடிக்கை எடுக்காததால் ஆங்கில அரசை எதிர்த்து அவர்கள் தந்த
திவான் பகதூர் என்ற பட்டத்தை உதறித்தள்ளினார்...இந்தியர்களையும், ஆங்கிலயேர் களையும்
தட்டிக்கேட்கும் வகையில் 1946 இல் ஜெய் பீம் என்ற ஆங்கில வார இதழை துவக்கி
நடத்தினார்.நம் பூர்வீக பவுத்த நெறியினை மக்களிடையே பரப்பினார்.
1945-46 ல் சென்னை மாநகர மேயராக பதவி
வகித்தார். அப்போது கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்படுத்தி, இலவச உணவும்
அளிக்கச்செய்தார்.
பட்டியல் இன மக்கள் சமுதாயம் முன்னேற பொதுவாக கல்வியும் குறிப்பாக
சட்ட அறிவும் இருக்க வேண்டுமென்றார்.
========================================================================
அய்யன்காளி: ஒடுக்கப்பட்ட மக்களின்
போராளி!
(28-8-1863 To 18-6-1941)
பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான
வழிமுறைகள் அந்த மக்களிடமிருந்தே உருவாகின்றன. விடுதலைக்கான சமூக இயக்கங்களின்
துவக்கம் மக்களின் பிரச்சனைகளிலிருந்தே பிறந்திருக்கிறது.
திருவிதாங்கூரில் பார்ப்பனீய
அடிமைத்தனத்திலிருந்து தலித் மக்களை மீட்ட மாபெரும் மக்கள் தலைவன் அய்யன்காளி.
28
ஆகஸ்டு 1863ல்
திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்தை அடுத்த வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி
விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்தார்.
எது மறுக்கப்பட்டதோ அந்த உரிமையை பெற தடையை
மீற எழுந்தார். அந்த எழுச்சி தான் தனியொருவனாக நடத்திய மாட்டுவண்டிப் போராட்டம்.
முதல் முறையாக அன்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை
நிலைநாட்டினார். தொடர்ந்து அந்த சாலையில் மாட்டுவண்டியின் மணிசத்தம்
கேட்டுக்கொண்டே இருந்தது.
ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும்
ஒன்றுதிரட்டி எந்த தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டதோ அதே தெருக்களின் வழியாக
புத்தன் சந்தைக்கு 'விடுதலை
ஊர்வலம்' போனார்.
ஊர்வலம் பாலராமபுரத்தில் சாலியார் தெருவை அடைந்ததும் மறைந்திருந்த ஆதிக்கசாதி
கும்பல் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்கியது. ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களது மேல்
தொடுக்கப்பட்ட தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதலை தொடுத்தனர்.
திருவிதாங்கூரின் ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் ஆயுதப்போராட்டத்தில் இருதரப்பிலும்
காயம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் காயமடைந்தனர். தளராமல் அய்யன்காளி
தலைமையில் போராடி ஆதிக்க சாதியினருக்கு பயத்தை ஏற்படுத்தினார்கள் ஒடுக்கப்பட்ட
மக்கள்.
=============================================================
பி. எம்
மதுரைப் பிள்ளை (1858 To 1913)
1880
இல் வாணிபத்தில் நன்னடத்தையும் நம்பிக்கையாளராகவும் இருந்து சொந்தமாகக் கப்பல்
துபாஷ் ஸ்டீவ்டேன் என்ற ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நிறுவனத்தை ஆரம்பித்துத்
திறமையாக நடத்தினார். இங்கிலாந்த் , ஸ்காட்லான்ட்
,வேல்ஸ்,ஜெர்மனி, டென்மார்க்,பிரான்ஸ்,நோர்வே, இத்தாலி, எகிப்த ஆகிய மேலைநாடுகளுக்கு
சுற்றுபயனத்தை அந்த காலகட்டத்திலேயே செய்தவர்.
===========================================================
டி . ஜான் ரத்தினம் (1846
To 1942)
1885
இல் "திராவிட பாண்டியன் " என்ற தமிழ்
வெளியிட்டை துவங்கித் திறமையான
வாதங்களால் மக்களை விழிப்படையச் செய்தவர்.
1892
இல் "திராவிடர் கழகம்" என்ற
அமைப்பை துவங்கினார்.
கலைக்கல்வி,
தொழிற்கல்வி ஆகியவைகளால் ஏற்படும் பொருளாதார
முன்னேற்றமே நல்ல மாற்றமாகயிருக்கும் என்று எண்ணி 1886
இல் ஒரு மாதிரி பள்ளியை நிறுவி பயனிருப்பதை அறிந்து 1892 இல் ஆண் -பெண் இருபாலரும்
படிக்க சென்னை ஆயிரம் விளக்கத்தில் பெரியதொரு கல்விக்கூடத்தை அமைத்தார் மேலும் சித்திரம், தச்சு, தையல் போன்றவைகளைக் கற்கும்
தொழிற்கல்வி கூடம் ஒன்றையும் மாணவர் விடுதியையும் 1889
இல் தோற்றுவித்தார்.
.
பழங்குடி
மக்களின் வாழ்விலும் வளத் திலும் அக்கறை
கொண்டிருந்த இவர் அவர்களை ஓரணியில் திரட்ட இணைப்புப் பாலமாக கூடுமிடம் ஒன்றை சுமார் நூறு ஏக்கர்
நிலத்தில் சமூகக் கூடம் அமைக்க
முயன்றார். பழங்குடி மக்களுள் எழுந்த
கிறிஸ்தவர் , பௌத்தர், சைவர், வைணவர் போராட்டங்களால் இது
தடைபட்டு விட்டது.
==========================================================
பி.வி.சுப்பிரமணியம் (1859 To 1936)
தமிழ் மக்களுள் இருக்கும் பிளவுகளையும் பிணக்குகளையும் ஒழிக்க
வேண்டுமானால் ஒரே பெயரின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்று எண்ணி 1922 இல் திராவிடர் -ஆதிதிராவிடர்
ஆகிய இருபெரும் வகுப்பினரையும் மாநாட்டின் வாயிலாக ஒன்று கூட்டி அறிவுரை
வழங்கினார்.
தமிழகத்தின் கோடீஸ்வரர்களில் ஒருவராவார்.
ஊறுகாய்
மன்னர் என்று பலராலும் உலகமெங்கும் புகழப்பட்டார். அவர் தம் ஊறுகாய் வகைகளை
இங்கிலாந்த் பேரரசர் குடும்பத்தினர் முதல் உலகத்தின் எல்லைப்பகுதி மக்களும் அதனை
பெரிதும் விரும்பினர்.
================================================================
வி.ஜி . வாசுதேவப்பிள்ளை (1878 To 1938)
1920
இல் பழங்குடி மரபிலே இந்தியாவிலேயே முதல்
மாநகராட்சி உறுப்பினராக ஆக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
================================================================
தாதா சாகேப்
பி.கே கெய்க்வாட் (1901 To 1971)
1901
இல் மராட்டிய மாநிலத்திலுள்ள நாசிக் மாவட்டத்தில் பிறந்தார்.
இந்திய
நாட்டிலுள்ள மக்களில் வேறுபாடு
தோன்றுவதற்கு மனுஸ்மிருதி போன்ற வேத நூல்களே
காரணம் என்பதனால் அதை
பகிரங்கமாக எரிப்பதற்கு உறுதுணையாக
நின்றவர். 1930
இல் நாசிக்கிலுள்ள காலாராம் கோயில் நூழவு
போராட்டத்தில் பெரும் பங்கு
கொண்டு சிறையேகினார்
கேரளாவிலுள்ள குருவாயூர்
கோயில் நுழைவுப் போராட்டங்களிலும் அவர் பங்கு பெற எண்ணினார். இடையில் பூனாவில்
இருக்க வேண்டியவரானார். 1938
இல் பூனா ஒப்பந்தத்தின்போது மாமேதை
அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார் .
1937
இல் செட்யூல்டு வகுப்பினருக்கு ஹரிஜன்
என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று முயற்சித்தார்கள். இப்பெயரை குஜராத் கவிஞர் ஒருவர் தன கவிதையில் முதல் முறையாக பயன்படுத்தினார்.
இதனை காந்தியடிகள் முதல்முறையாக
பயன்படுத்தினர். விளம்பரம் செய்தார் .
பம்பாய் சட்டமன்றத்தில் தலைவர் கெய்க்வாட் இதனை பலமாக எதிர்த்தார்.
ஹரிஜன்கள் கடவுளுடைய மக்களானால்
சாதி இந்துக்கள் எப்படி அவர்களுடைய எஜமானர்களாக ஆக முடியும் என்று கூறி
வெளியிறனர்.
1964 இல்
செட்யூல்டு வகுப்பினரின் தீண்டாமை , பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் முன்னேறுவதற்குரிய சாத்தியகூறுகளை
ஆராய வந்த குழுவின் துணைத்தலைவராக பங்கேற்று நாடு முழுவதிலும் சுற்றுபயணம் செய்து
விரைந்த முன்னேற்றத்திற்கு சிறப்பான திட்டங்களை
வகுக்க உறுதுணையாக இருந்தார்
.