புதன், 23 ஜனவரி, 2013

மும்பையில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்க்கல்வியில் படித்த 3 ஆயிரத்து 243 (மும்பை வாழ் தமிழ்) மாணவர்கள் படிப்பை நிறுத்தி உள்ளனர்../MVI

சிஏ தேர்வில் முதல் இடம் பிடித்த மும்பை வாழ் தமிழ் மாணவி.பிரேமா ..
(மும்பை மாணவி பிரேமாவுக்கு மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக பாராட்டுகள் .இவரே போன்று பல மாணவர்கள் உருவாக வேண்டும் ...என்பதே எங்கள் விருப்பம் ).

தமிழ் மாணவி பிரேமா போல் பல மாணவர்கள் உருவாகும் வாய்ப்பு மும்பையில்  மிக குறைவாகவே உள்ளது.. காரணம்  2007- 2008 கல்வி ஆண்டு முதல் 2010 - 2011 கல்வி ஆண்டு வரையிலும் மும்பை மாநகராட்சி பள்ளிகளில் ஆண்டுகளில் தமிழ்க்கல்வியில் படித்த  3 ஆயிரத்து 243  மாணவர்கள் படிப்பை நிறுத்தி உள்ளனர்.. இந்த கல்வி 2012 - 2013 ஆண்டிலும் ஆயிரத்து மேற்பட்ட மாணவர்கள் (மலாடு மாநகராட்சி நடத்தும் நேமானி பள்ளியில் தமிழ் வழி கல்வி ஆசிரியர்கள் இல்லை )படிப்பை நிறுத்தும் வாய்ப்பு உள்ளது .(இதனை தடுக்க வேண்டும்)

தமிழ் வழி கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த உதவி செய்ய வேண்டும் என்ற  நோக்கத்துடன் தமிழக அரசிடம் இந்த கோரிக்கையே கொண்டு  செல்ல முடியவில்லை..........வாய்ப்பு உள்ள நபர்கள், அதிகாரிகள், பத்திரிக்கைகள்   அல்லது அமைப்புகள் இதை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டுகிறோம்...........(ஏற்கனவை கடந்த ஆண்டு புதிய தலைமுறையின் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும்  அக்னிப்பார்வை  நிகழ்ச்சி மூலமாக   இந்த கோரிக்கையே எடுத்து சென்றோம் )








விழுப்புரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் பெருமாள் மும்பையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் பிரேமா சிஏ தேரவில் இந்திய அளவில் முதலிடத்தில் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக