வெள்ளி, 28 ஜனவரி, 2011

முத்துக்குமார் நினைவு நாளில்: மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக ஒரு வேண்டுகோள்

முத்துக்குமார் நினைவு நாளில்:

தன்னுடைய ஈடு இணையற்ற உயிர் தியாகத்தால் உலகெங்கும் உள்ள தமிழினத்தை தலைநிமிரச்செய்த அந்த மாவீரன் நினைவு நாளில் சாதி,மதம் அமைப்புகள் அரசியல் கட்சிகள் என்கிற எல்லா அடையாளங்களையும் கடந்து வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் பெயரே-- சென்னை கிழ்பாகம் பொது மருத்துவனைக்கு "வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் " என பெயரை வைக்கும் முயற்சியைக் எடுக்க வேண்டும்

என்று பெ.தி. க, நாம்தமிழர், மே 17, save tamil ,சமுக நீதி தமிழ்த்தேசியம் , இளம் தமிழர் பேரவை, தமிழ் புலிகள், தமிழ் நாடு மாணவர்கள் கழகம் , ம. க.இ.க, உலக மனிதாபிமானக் கழகம் ,தமிழர் தேசிய இயக்கம், FEFSI, தொழிலாளர் சிரமைப்பு இயக்கம், முத்துக்குமார் ஒருங்கிணைப்பாளர் குழு, தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் கழகம் என பல்வேறு அமைப்புகள் மற்றும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் நாடு முஸ்லிம் முன்§Éற்றக் கழகம், தமிழ்தேச பொதுவுடைமைக்கட்சி, புதிய தமிழகம் கட்சி, இம்மானுவேல் சேகர் பேரவை, பா.ம. க மற்றும் சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.

தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள்:-


௧) சோனியா காங்கிரசை வீழ்த்துவது நாட்டுக்கு நல்லது. கருணாநிதி தி.மு.க.வை வீழ்த்துவது தமிழினத்திற்கு நல்லது. இவர்கள் இருவரையும் வீழ்த்தும் பணியை தமிழநாட்டில் வாழும் மானமுள்ளவர்கள் உடனடியாக செய்யவேண்டும். வாய்ப்பை நழுவ விடக்கூடாது.

௨)தமிழக மீனவர்கள் படுகொலைச் செய்யப்படும் விவகாரம் தொடர்பான செய்திகளே,சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

௩) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழ்நாட்டில் ஆதரிக்க வேண்டும்.

௪) தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை டுரிசும் மற்றும் இலங்கை வங்கி (Bank of Ceylon – Chennai Branch No.1090 Poonamallee High Road Chennai ) அகற்ற ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

௫) தமிழ்நாட்டில் உள்ள (இலங்கை) தமிழ் அகதிகளுக்கு (சுமார் 2 லட்சம் பேர் தமிழகத்திலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர்) தற்காலிக குடியுரிமை வழங்க வேண்டும்.இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில் வீட்டிற்கு ஒருவரேனும் ஈழ நாட்டிற்கு சென்று தமது உரிமையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் அதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சியுடன் இறங்க வேண்டுமெனவும் வலியுறுத்த வேண்டும்.

௬) இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை இந்திய மத்திய, மாநில அரசுகள் அமைத்துத்தர வலியுறுத்த வேண்டும்

௭)இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சதீவை நாம் மீட்க வேண்டும்.

௮)தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை டுரிசும் மற்றும் இலங்கை வங்கி (Bank of Ceylon – Chennai Branch No.1090 Poonamallee High Road Chennai ) போன்ற இலங்கை சமந்தப்பட்ட அனைத்தையும் அகற்றாமல்
மற்றும் இலங்கை அரசை "போர்குற்றம் புரிந்த அரசு" என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
& "தமிழீழம்" தனிநாடு என தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றதா
வரைக்கும் எந்த அரசியல் கட்சிகளும் மும்பை வரவேண்டாம் என வருத்ததுடன் கேட்டுக் கொள்கிறோம்..

(குறிப்பு: அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால் பல ஆயிரம் , லட்சம் தொண்டர்கள்,
அதுவே போராட்டம் என்றால் நூறு முதல் ஐநூறு தோழர்கள்
)


மும்பையிலுள்ள, நாங்கள் தமிழக மீனவர்கள், தமிழீழ மக்கள் படுகொலைச் செய்யப்படும் விவகாரம் தொடர்பான செய்திகளே,சர்வதேச மற்றும் தமிழ் அல்லாத மக்களிடம் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட இருக்கிறோம்..

இதுவே, முத்துக்குமார் தமிழீழ போரட்டகளை கூர்மைப்படுத்த "எனது உடலையே துருப்புச்சிட்டாகப் பயன் படுத்துங்கள் என அறிவித்த அண்ணன் கு. முத்துக்குமார் 2 ம் ஆண்டு நாளில் உறுதி சபதம் ஏற்போம் ....


என்று
பெ.தி. க, நாம்தமிழர், மே 17, save tamil ,சமுக நீதி தமிழ்த்தேசியம் , இளம் தமிழர் பேரவை, தமிழ் புலிகள், தமிழ் நாடு மாணவர்கள் கழகம் , ம. க.இ.க, உலக மனிதாபிமானக் கழகம் ,தமிழர் தேசிய இயக்கம், FEFSI, தொழிலாளர் சிரமைப்பு இயக்கம், முத்துக்குமார் ஒருங்கிணைப்பாளர் குழு, தமிழ் இளைஞர் பேரவை, தமிழர் கழகம் என பல்வேறு அமைப்புகள் மற்றும் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் நாடு முஸ்லிம் முன்§Éற்றக் கழகம், தமிழ்தேச பொதுவுடைமைக்கட்சி, புதிய தமிழகம் கட்சி, இம்மானுவேல் சேகர் பேரவை, பா.ம. க மற்றும் சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமை மிகு உறவுகளுக்கு,
விழித்தெழு இயக்கம்
(உலகத் தமிழர் அனைவரும் ஒன்றிணைவோம்,
எம்மின விடியலுக்கு குரல் கொடுப்போம்)

Vizhithezhu iyakkam
மும்பை

http://vizhithezhuiyakkam. blogspot.com

http://www.warwithoutwitness. com

http://www.tamilsagainst genocide.com

http://www.srilankagenocidealbum.com

சனி, 15 ஜனவரி, 2011

அண்ணல் அம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-

திருநெல்வேலி மாவட்டம்:
அம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-
அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக தமுஎசவிற்கும் தமிழ்நாடு, தீண்டாமை ஒழிப்பு முன்னனி
திருநெல்வேலி மாவட்டம் தோழர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி











தமிழ்நாடு, தீண்டாமை ஒழிப்பு முன்னனியுடன் நான்
அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக
தமுஎசவிற்கும் மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.

அண்ணல் அம்பேத்கருக்கு முக்கியத்துவம் தரும்
இந்த மாற்றத்திற்காக தமுஎசவிற்கும் அதன் பொதுச் செயலாளர்
தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கும் வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறோம் .

13/01/2011 பகல் 11.30 மணிக்கு நடந்த இந்த படம் வெளியீட்டு விழாவில்
தமிழின உணர்வாளர்கள்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி தோழர்கள், SFI தோழர்கள் , விழித்தெழு சார்ப்பாக நான் மற்றும் தோழர் செல்வன்,பள்ளி மாணவிகள் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

புதன், 5 ஜனவரி, 2011

மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15

மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு -

திருச்சியில் கூடிய தமிழ் நாடு மாணவர் கழகத்தின் தீர்மானங்கள்
-05 01 2011

மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வைக் கண்டித்து, கல்வி நிறுவனங்கள் முன் 15 நாள் வாயில் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தவும், பிப்.15 இல் கோவையில் மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு நடத்தவும், பெரியார் திராவிடர் கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவு செய் துள்ளது. கல்வி, இடஒதுக்கீடு, கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பற்றி கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நடந்தது. இறுதியாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. 2011 - 2012 கல்வி ஆண்டிலிருந்து எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்விக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த இருப்பதைக் கண்டித்தும், கல்வியில் மாநில உரிமைகளை அடியோடு பறிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு தேசிய உயர்கல்வி ஆராய்ச்சி ஆணையம் அமைக்க உள்ளதைக் கண்டித் தும், அகில இந்திய அளவில் வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வு நடத்துவதைக் கண்டித்தும் தமிழ்நாடு தழுவிய அளவில் பள்ளி - கல்லூரிகள் முன்பு 15 நாட்களுக்கு வாயிற்கூட்டப் பரப்புரைப் பயணம் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

2.ஜனவரி 31 ஆம் நாள் சென்னை மருத்துவக்கல்லூரி (MMC) முன்பு பயணத்தைத் தொடங்கி பிப்ரவரி 14 கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் (CMC) நிறைவு செய்வது என்றும், நிறைவு நாளான பிப்ரவரி 15 அன்று கோவையில் “மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு” நடத்துவது என்றும், மார்ச்சு மாத இறுதிக்குள் ஆந்திர மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் அகில இந்திய அளவிலான “மாநிலங்களின் கல்வி உரிமை மீட்புக் கருத்தரங்கம்” நடத்துவது என்றும் முடிவு செய்யப்படு கிறது.

3.அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளை எதிர்த்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் துண்டறிக்கை, சிறு நூல், குறும்படம் ஆகியவைகளைத் தயாரித்து விநியோகிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

4.1976 ஆம் ஆண்டு மிசா காலத்தில் 42 ஆவது திருத்தச் சட்டத்தின்படி பொதுப்பட்டியலில் மத்திய அரசின் பிடியில் கல்வித்துறை சிக்கியது. அதன்பிறகு கல்வித் துறையை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மீட்பதற்கு இன்றுவரை எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கும் தமிழ்நாட்டு அரசாங்கங்களை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு. பொது நுழைவுத் தேர்வு என்ற வகையில் மருத்துவக் கல்வி யிலும், தேசிய உயர்கல்வி ஆராய்ச்சி ஆணையம் அமைப்பதன் மூலமாக அனைத்து வகையான கல்விப் பிரிவுகளிலும் தமிழ்நாட்டு தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களின் உரிமையான 69 % இடஒதுக்கீட்டு உரிமை பறிபோக இருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டித்து தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட் டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது. பிப்பிரவரி 15 அன்று கோவையில் நடைபெற உள்ள மாநில கல்வி உரிமை மீட்பு மாநாட்டில் போராட்ட நாள் அறிவிக்கப்படும்.

5.அண்ணா பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், அரசு மற்றும் தனியார் மேனிலைப் பள்ளிகளில் ஆசிரியர், பேராசிரியர், பணியாளர் தேர்வு - மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. ஆகவே, இடஒதுக்கீடு - பள்ளி, கல்லூரிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தல் - பள்ளி, கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் ஆகிய நிலைகளில் நடைபெறும் அத்து மீறல்கள் - விதிமீறல்கள் - மனித உரிமை மீறல்கள் - சமூகநீதி மீறல்கள் ஆகியவை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக புள்ளி விபரங்களைச் சேகரிப்பது என்றும், அந்தப் புள்ளி விபரங்களின் அடிப்படையில் அடுத்தகட்டமாக நீதிமன்ற நடவடிக்கைகளையும் மாணவர் - இளைஞர் போராட்டங்களையும் நடத்தி சீரழிந்து கிடக்கும் கல்வித்துறையைச் சீராக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது.

6.கல்வித்துறையைச் சீராக்கும் நடவடிக்கைகளுக்காக புள்ளி விபரங்கள் தயாரிக்கவும், கல்வி நிறுவனங்களை நேரடியாக ஆய்வு செய்யவும் ஒரு கல்வியாளர் குழுவை உருவாக்கவேண்டும் என்றும், நீதிமன்ற நடவடிக்கை களுக்காக வழக்கறிஞர் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது.