வெள்ளி, 13 மார்ச், 2009

கணக்கில் புலி!

புகழ்பெற்ற கணிதமேதை கார்ல் காஸ் ஜெர்மனியில் படித்துக் கொண்டிருக்கும்போது நடந்த நிகழ்ச்சி இது. 1 முதல் 100 முடிய உள்ள எண்களைக் காட்டி மொத்தத் தொகை எவ்வளவு என்று கணக்குப் போட வேண்டும் என்று கூறி அதற்கு 10 மணித்துளிகள் அவகாசம் தந்தார்.

30 நொடிகளில் கார்ல் காஸ் எழுந்து நின்றார். நான் சொன்ன கணக்கு உனக்கு விளங்கவில்லையா என்று கேட்டவாறு ஆசிரியர் தொடர்ந்தார்.

இல்லை, அய்யா! நான் விடையைக் கண்டுபிடித்து விட்டேன் என்றார் கார்ல்.

நீ ஒன்றும் எழுதவே தொடங்கவில்லையே! எப்படி விடையைக் கண்டுபிடித்தாய்?

ஒன்றையும் நூறையும் கூட்டினால் 101 - இரண்டையும் 99அய்யும் கூட்டினாலும் 101 - இப்படியே மூன்றையும் மூன்றாவது எண்ணுடன் (98) கூட்டினாலும் 101 - அதுபோலவே எல்லா எண்களும்! எனவே, 50 ஜோடி 101வரும். அதை 50ஆல் பெருக்கினால் 5050 வரும்! அதுதான் விடை என்றார் கார்ல் காஸ்! விளையும் பயிர் முளையிலேயே தெரிந்தது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக