சீன, ஜப்பானிய, ரஷ்ய, பிரெஞ்சு நாட்டுகாரன் இந்தி படிக்க தெரியாததற்கு வருத்தபடுவானா? ஆங்கிலம் படிக்க தெரியவில்லை என்றால் கூட வருத்தப்பட மாட்டான். ஆனால், தமிழ் நாட்டுக்காரன் இந்தி படிக்கலைன்னா, ஆங்கிலம் படிக்கலைன்னா வருத்தபடுவான், ஆனால், தமிழ் படிக்க தெரியலைன்னா மட்டும் பெருமைப்படுவான்.
நான் மும்பை வாழ் தமிழன், எனக்கு இந்தி, மராத்தி, தமிழ், ஆங்கிலம் சரளமாக பேச வரும். ஆனால், நான் தமிழில் பேசத்தான் விருப்பப்டுகிறேன். ஆனால், தமிழ் தெரியாததை எண்ணி பெருமைப்படும் சிறுமை உயிர்கள், தமிழ் உறவுகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
விருப்பம் போல், திறமையை பொறுத்து எத்தனை மொழியை வேண்டுமானாலும் ஒருவன் கற்றுக் கொள்ளலாம். தாய்மொழி தெரியாததற்கு வருத்தபடுவதை போல, வேறெந்த மொழி தெரியவில்லை என்று வருத்தப்பட தேவையில்லை. தெரியாத மொழியை தம் தேவை கருதி கற்றுக் கொள்ள வேண்டியது அவரவர் திறமைக்கு உட்பட்டதே ஒழிய வேறேதும் இல்லை.
அலுவல் காரணமாக
நேபாளம் போகும் ஒருவர், நேபாள மொழி எதிர்ப்பு போராட்டம்தான் நடக்கவில்லையே, தமிழகத்தில் நேபாளம் ஏன் கற்பிக்கபடவில்லை?
தெலுங்கு, கன்னட, மராத்தி, ஒரிய, வங்காளி, காஷ்மிரி இன்னும் பல மொழி எதிர்ப்பு போராட்டம் நடக்க வில்லையே தமிழகத்தில் ஏன் அவையெல்லாம் கற்பிக்க படவில்லை. என கேட்டால் எவ்வளவு நேர்மையாகாதோ அது போலத்தான், இந்தி ஏன் தமிழகத்தில் கற்பிக்க படவில்லை என்ற கேள்வி.
முதலில் நாம் இந்தியர்களே அல்ல, ஆங்கிலேயனிடமிருந்து விடுதலை பெற்ற இந்த நிலப்பரப்பு மீண்டும் பார்ப்பனீய பனியா கும்பலுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறது, அதை அறியாமல் நாம் தொடர்ந்து மேலோட்டமான உண்மை பேசி ஒன்றும் உதவாமல் அடிமையாக இருக்க பழகிவிட்டோம்.
இந்தியா என்ற ஒரு தேசியம் எப்படி தமிழர்கள் மீது திணிக்கப்பட்டதோ?
இந்து என்ற , பார்ப்பனீய மதம் எப்படி தமிழர்கள் மீது திணிக்கப்பட்டதோ?
அது போலத்தான் இந்தியும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது.
இந்த பண்பாட்டு படையெடுப்பை முறியடிக்க தமிழர்கள் இன்னும் தயாராகவில்லை. அல்லது சரியான புரிதல் ஏற்படவில்லை. இந்தி தெரியாதது பெரிய பிழை போல கருதுகின்றனர். இந்திக்காரன் இந்தியும், ஆங்கிலமும் கற்க, தமிழன் மட்டும் ஏன், ஆங்கிலம், இந்தி என தன் தாய்மொழியல்லாத மற்ற இரு மொழிகளை கற்க கட்டாயபடுத்தப்பட்டு, படிக்கும் வயதிலேயே சுமைதூக்கி பழக வேண்டும்.
தமிழன் தன் மொழியை அறிவியல், அறிவு ரீதியாக வளர்த்து, தம் மொழியை பிறர் கற்கும்படி செய்வதை விட்டு விட்டு மேம்போக்கான கருத்துக்களை பதிவதை தவிர்க்க வேண்டும். பதிவர்கள் இது போன்று கருத்துகளை பதிந்து தங்கள் மேதாவிதனத்தை காட்டிக் கொள்கின்றனர், உலக அனுபவத்தை பெற்றுக் கொண்டதை போன்று பீற்றிக் கொள்கின்றனர்.
எ.கா: http://nilaaavan.blogspot.com/2009/03/blog-post_30.html
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான், இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அதில் தவறு கிடையாது, அதை இந்த அரசியல் பொறுக்கிகள் தவறாக பயன்படுத்திக் கொண்டனர் அவ்வளவுதான். மொழிக்காக உயிர்விட்ட, விட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு இனத்தை சார்ந்த ஒரு இனத்தின் பெருவாரியான மக்களுக்கு மொழிக்கொள்கை உருவாகவில்லை, மொழியை குறித்த விழிப்புணர்வு இல்லை. தமிழ்படிக்க தமிழ்நாட்டில் கட்டாயமில்லை. வேண்டுமானால், தமிழ்படிக்காமலேயே கல்வி கற்கலாம்
நான் தமிழ் வெறியனல்ல, மாறாக எத்தனையோ என் நண்பர்கள் தாய்மொழி தமிழாக இருப்பதால், மும்பையில் தங்களுடைய படிப்பை மராத்தி, இந்தி சரியாக வராததால் இடையிலேயே கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது என்னுடைய சொந்த அனுபவம்.
இந்தி கற்பிக்கப் பட்டாலும் அவர்களால் ஏன் புலமை பெற இயலவில்லை?
அறிவியலை, புவியியலை, மற்ற மற்ற பாடங்களை தமிழிலேயே கற்றிருந்தால் நல்ல அறிவாளியாக இருந்திருக்கும் வாய்ப்புள்ள பிள்ளைகளும் இதே நிலையை அடைகின்றனர். இதற்கெல்லாம் காரணம் நம்மை அடமானம் வைத்த இந்த அரசியல்வாதிகள். இன்றும் நான் எடுக்கும் வகுப்புகளில் மற்ற மொழியும் சரியாக வாராது, சொந்த மொழியும் சரியாக தெரியாது விழி பிதுங்கும் மாணவர்களை பார்க்கிறேன். இவர்களின் இந்த பாதி புரிதல் எந்த வகையிலும் அறிவு வளர்ச்சி தேடலுக்கு துணை நிற்காது, முதலாலித்துவத்திற்கு அடிமைகளை மட்டுமே உருவாக்கும்.
தமிழன் தமிழ் படித்து முன்னேற, தமிழ் படித்தால் வாழ வழி செய்யும் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுங்கள். தமிழனை ஏய்த்து காலம் காலமாக ஓட்டுப் பொறுக்கி தின்ற, இன்னும் திங்க வாய்ப்பு கேட்டு வரும் அரசியல் வாதிகளை மலமடித்து விரட்டுங்கள்.
மேம்போக்கான உண்மை அபாயகரமானது- பகத்சிங்.
தமிழன் தமிழ் பேசக் கூச்சப் படுனது இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து...
பதிலளிநீக்குஅதற்கு வலையுலகத்தில் தமிழில் எழ்திக் கொண்டிருக்கும் வெளி நாட்டு வாழ் தமிழர்களே சாட்சி...
தமிழன் தமிழ் பேசக்கூச்சபடுவதில்லை,என்று வலையுலகத்தை வைத்து மட்டும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ளக்கூடாது தோழரே!
பதிலளிநீக்குவெளிநாட்டில் வாழும் தமிழர்களின் பிள்ளைகளோடு தமிழ்நாட்டு, இந்திய அடிமைப்பிள்ளைகளை குடிமக்களை ஒப்பீடு செய்யக்கூடாது.
தமிழகத் தமிழனின் தாகம் ஆங்கிலம், இந்தி.
அது தெரிந்திருப்பதுதான் பெருமை என்றும் பலர் கருதுகின்றனர். தமிழர்களின் வழக்கு மொழியில் கலந்துள்ள ஆங்கிலத்தையும், வடமொழியையும் கண்டாலே தமிழன் எவ்வளவு அக்கறையோடு இருக்கிறான் என்பது புரியும்.
ஆனால், இவையனைத்துக்கும் காரணமாக தமிழர்களை கூற இயலாது.
90 விழுக்காடு காரணம் அரசியல்வாதிகளின் கொள்ளைகள்,
10 விழுக்காடு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிற செய்தியில் உள்ளது, அதிகாரவர்க்கத்தின் இந்த சுரண்டலை எதிர்த்து போராடாமல் இருப்பது.
கல்வியை, தகுதியை பெருவாரியான உழைக்கும் மக்களின் மொழியாக தமிழை கொண்டு தீர்மானிக்காமல், மாற்றன் மொழியை கொண்டு தீர்மாட்னித்து ஏற்கனவே அந்த மொழிகளில் புலமை பெற்ற கூட்டம் கொழுத்து வளர்கிறது.
மற்றவர்கள் உழைக்கும் அடிமைகள் போல நடத்த படுகின்றனரே என்பதுதான் நம் ஆதங்கம்
வணக்கமுங்க !
பதிலளிநீக்குஉங்களுக்கு நிறைய மொழி பேசவறத சொல்லி இருக்கீங்க ! அதனால் உங்களுக்கு நன்மையா இல்லையா ?
மொழிகள் நிரைய தெரிகிறதால் நன்மைகள் தான் அதிகம்.....நிரைய பிரச்சனைக்கு அடுத்தவங்க மொழி புரியாதது தான் காரணம். தமிழ் மட்டும் படி அடுத்த மொழி வேண்டாம் சொல்றது எந்த விதத்தில் நாயம் ? ஆந்திராவில் மூணு மொழி படிக்கிறாங்க...அதனால என்ன தெலுங்கு அழிந்து போச்சா? இந்தி ஒன்னும் கீழ்தரனமான மொழி இல்லையே..அதை படிப்பதால் இந்தியாவில் 50% மக்களோட பேச முடியும்...ஆங்கிலம் படிக்கிறோம்..இந்தியாவின் தேசிய மொழி படிக்ககூடாதா.......எனக்கு இந்தி தெரியாது அதனால் என்னால் இந்தி நண்பர்களோட அதிகமா பழக முடியலை...நிரை தேசிய தலைவர்கள் பேச்சை புரிந்து கொள்ள முடியலை..இந்தி எதிர்ப்ப போராட்டம் வராமல் இருந்திருந்தால் எனக்கும் உங்கள மாதிரி இன்னோரு மொழி..இந்தியாவின் தேசிய மொழி தெரிந்திருக்கும் வருத்தபடுதிறல என்ன தவறு..நீங்க மட்டும் எனக்கு இத்தனை மொழி தெரியும்னு பெருமை பட்டுபீங்க அடுத்தவங்க வருத்தப்பட்டா..தவறா..எத்தனை மொழி படித்தாலும் தாய்மொழி தமிழை யாரும் மறக்க போவதும் இல்லை அது பற்றி போலி அச்சம் தேவைய்ல்லை
மிக சரியாக் சொல்லி இருக்கின்றீர்கள் மகிழ்நன் ... புலம் பெயர்ந்து வரும் பொது தானே நம் மொழியின் அருமையே எங்களுக்கெல்லாம் தெரியவந்தது இதன் தொன்மை மட்டுமல்ல இதை பிழையற பேசுவதே கடினம் என்பதும் இப்போது தான் நிறைய பேருக்கு தெரிய வந்திருக்கின்றது ...இது மாறும் ...மாற்றப்பட வேண்டும் ...ஏனெறால் இரண்டு மலையாளிகள் சந்தித்து கொண்டால் கண்டிப்பாக அவர்கள் மலயலதிலே பேசுவார்கள் தமிழன் மட்டும் தான் பேச மாட்டன் இது ஏன் அனுபவத்தில் கண்ட உண்மை ..சபாஷ் ...
பதிலளிநீக்குஅருமையான பதிவு !
பதிலளிநீக்குஇந்தச் சூழலில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு தலையானது.. தாய்மொழியின் மகத்துவத்தை ஊட்டுவதும் ஊக்குவிப்பதும் அவர்களின் பொறுப்பு.. மக்களின் வழிப்புணர்ச்சியே தீர்வாக அமையும்.