திங்கள், 18 ஜனவரி, 2016

தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி


தமிழர்களின் கலை தொகுப்பு --அங்கள பரமேஸ்வரி


முற்காலத்தில் மக்களிடம் நேரத்தை அறிந்துகொள்ள கைக்கடிகாரங்களோ, சுவர்க்கடிகாரங்ளோ பயன்பாட்டில் கிடையாது. பகல் நேர சூரிய ஒளி நிழலின் அளவைக்கொண்டு நேரத்தை அறிந்துகொள்வார்கள். அதிகாலையில் தங்கள் வயலுக்குப் புறப்பட வேண்டிய நேரத்தை அறிந்துகொள்ள சிற்றூர் விவசாயிகள் கீழே குறிப்பிட்ட பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்.


உடைந்த மண்பாண்டத்து ஓட்டில் சுமார் மூன்று அங்குல அளவு விட்டமுள்ள சிறு ஓட்டினைச் சில்லு என்பர். சில்லு விளையாட்டு விளையாடும் அரங்கு தரையில் சில்லால் கோடு கிழித்து அமைக்கப்படும். விளையாடும் அரங்கிலிருந்து சுமார் 10 அடி தொலைவில் ஒரு உத்திக்கோடு வரையப்படும்.

1.   உத்திக் கோட்டிலிருந்து அரங்கின் முதல் கட்டத்தில் சில்லை எறிவர். எறியும் சில்லு அரங்கக் கோட்டில் படாமல் கிடக்க வேண்டும். கோட்டில் படக்கூடாது, கோட்டில் பட்டால் அடுத்தவர் ஆடுவார்.
2.  உத்திக் கோட்டிலிருந்து நொண்டி அடித்துக்கொண்டு சென்று அரங்கில் கிடக்கும் சில்லை அதேநொண்டிக் காலால் ஒரே தவ்வில் மிதித்துப் பின்னர் அதே காலால் சிலலை அரங்கிற்கு வெளியே எத்தி, ஒரே தவ்வில் அதே நொண்டிக் காலால் மிதித்தால் பழம். பிழை நேர்ந்தால் அந்த ஆட்டப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.   எந்த ஆட்டப் பகுதியில் பிழை நேர்ந்ததோ அந்த ஆட்டப் பகுதியிலிருந்து அடுத்த ஆட்டமுறை வரும்போது ஆட்டத்தைத் தொடரலாம்.
3.   பழம் பெற்றால் அடுத்த கட்டத்தில் இதேப்போல் ஆட்டம். முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என வரிசை முறையில் சில்லு எறிந்து ஆடி முடித்தபின் மச்சு ஆட்டம்.


உத்தி கோட்டிலிருந்து அரங்கு வரையில் நொண்டி அடித்துக்கொண்டு சென்று, அரங்கின் முதல் கட்டத்தில் இரு கால்களையும் ஊன்றிக்கொண்டு நிற்பர். ஆடிய சில்லைத் தலையில் வைத்துக்கொண்டு தன் கண்களை தானே இரு கைகளாலும் பொத்திக்கொண்டு இரண்டு தப்படி வைத்ததும் சரியா, தப்பா என்று கேட்டுக்கொண்டே ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி நடந்து செல்வர். கோட்டை மிதித்திருந்தால் தப்பு, சரி என்றால் அடுத்த தப்பிகள்.
கடைசி கட்டத்தில் சரி என்றதும் தலையிலுள்ள சில்லைக்குனிந்து தரையில் போடவேண்டும். பிறகு கண்ணைக் திறந்துக்கொண்டு அந்தச் சில்லை மிதிக்க
வேண்டும். மிதிக்கும் இந்த இடத்தை மலை என்று கூறுவர். இங்கு நின்றுகொண்டு ஆனையா, பூனையா என்று கேட்டபர். மற்றவர் ஆனை என்று சொன்னால் ஆனை தன் கையால் தண்ணீரை உறிஞ்சித் தன் தலைக்கு மேல் கையை உயர்த்தி நீரை விசிறுவது போலச்சில்லை அரங்குக்கு வெளியே பின்பக்கமாக எறிந்துவிட்டுக் கட்டங்களில் நடந்துவந்து கட்டத்திலிருந்து தவ்வி மிதிக்க வேண்டும்.


சில்லை மிதித்து விட்டால் அரங்கின் ஓரத்தில் ஒரு கட்டம் போட்டு அதனைக் தன் மச்சு என்று வைத்துக்கொள்ளலாம். அடுத்த ஆட்டத்தில் நொண்டி அடித்துக்கொண்டு செல்லும்போது தன் மச்சில் தான் இரண்டு கால்களையும் ஊன்றிக்கொள்ளலாம். அதிக மச்சு கட்டியவர் வென்றவர் ஆவார்.

பூனை என்று மற்றவர் சொன்னால் குனிந்து சில்லை எறிந்து அவ்வாறே மிதிக்க வேண்டும். மேல்காலின் மேல் சில்லை வைத்துக்கொண்டு கண்ணைத்திறந்துகொண்டு நடத்தலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
விளையாட்டுக்கள், ஓரினத்தின் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துவன. விளையாட்டில் சிறுவர்,சிறுமியர், இளையோர் என எல்லா நிலையில் உள்ளோரும் ஈடுபடுகின்றனர். உடல் திறன் வளர்க்க, உள்ளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, மனம் மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டுகள் துணை புரிகின்றன.விளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிடுதலாகும். உடல், உள்ள ஆற்றல்களை வெளியிடவும், எதிர்பாராத தோல்விகளை எதிர் கொள்ளவும் மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது. விளையாட்டு வழியாகப் பட்டறிவும், போராட்டத்திற்கு விடை காணும் திறனும் பெற முடிகிறது.  

ஓடி விளையாடு பாப்பா

 ஓடி விளையாடு பாப்பா


     என்று பாரதி, விளையாட்டின் மேன்மையறிந்து அதைப் பழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்துகிறார்.

விளையாட்டுக்கள் பால் அடிப்படையிலும், தன்மை அடிப்படையிலும் பல்வேறு வகையினவாக அமைகின்றன. மகளிர் விளையாட்டுகள் அக விளையாட்டுகளாகவும், ஆடவர் விளையாட்டுகள் புற விளையாட்டுகளாகவும் உள்ளன.

பம்பரம், கிளித்தட்டு, உப்பு விளையாட்டு, கள்ளன் காவலன், கோலி, கிட்டிப்புள், காற்றாடி, பந்துவிளையாட்டு, ஒற்றையா இரட்டையா, நீச்சல் முதலியன சிறுவர் விளையாடுவன.

பூப்பறித்தல், கரகரவண்டி, தட்டாங்கல், பல்லாங்குழி, ஊஞ்சல், தாயம் என்பன சிறுமியர் விளையாடும் விளையாட்டுகள்.


வீர விளையாட்டுகளில் என்றும் பெருவிருப்பமுடையவர் பழந்தமிழர். மற்போரிடல், ஏறுதழுவுதல், வேட்டையாடுதல், மூழ்கி மணல் எடுத்தல் என்பன பழமை வாய்ந்த ஆடவர் விளையாட்டுகள். முற்காலத்தில் மற்போரில் வல்ல மல்லர், மன்னர்களால் மதிக்கப் பெற்றனர். களத்தில் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்க, தருக்கும் செருக்கும் நிரம்பிய ஆமூர் மல்லனுக்கும் வீரமூம் தீரமும் வாய்ந்த நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர வீளையாட்டைப் புறநானூறு என்னும் சங்க இலக்கிய நூல் வருணிக்கின்றது.

முல்லை நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது. முரசு அதிர, பம்பை முழங்க தொழுவிலிருந்து கொழுமைமிக்க காளைகள் ஒவ்வொன்றாக வெளியே ஓடிவரும். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்த வீரர்கள் காளையின் கொம்பைப் பிடித்து அதன் கொட்டத்தை அடக்குவர்.  வாலைப் பிடித்தல் தாழ்வு என்பது தமிழர் கொள்கை. பல்லோர் சூழ்ந்து நிற்க கிணற்றுக்குள் துடுமெனப் பாய்ந்து குதித்து மணல் எடுத்து வருதல் ஒருவகை வீர விளையாட்டாகக் கருதப்பட்டது.

பண்டைய நாளில் பெண்கள் வட்டாடுதல், அம்மானை, பந்தாடுதல், ஊஞ்சல், ஓரையாடுதல் எனப் பல விளையாட்டுகளில் இனிதே பொழுது போக்கினார்கள். கட்டம் வரைந்து நெல்லிக்காய்களை வைத்து நகர்த்தி ஆடும் ஆட்டம் வட்டாடுதலாகும். நண்டு, ஆமை ஆகியவற்றைக் கோல்கொண்டு அலைத்து ஓரையாட்டம் ஆடி மகிழ்ந்தனர். சிறுவர், சிறுதேர் உருட்டி விளையாடி மகிழ்ந்தனர். சிறுமியர் முத்துகளைக் கிளிஞ்சல்களின் உள்ளே இட்டு ஆட்டிக் களிப்புற்றனர்.
அரசர் வாழும் தலைநகரங்களில் யானைப்போர் நடைபெறுவதற்கும், அதனைக் காண்பதற்கும் தனியிடங்கள் இருந்தன. மதுரையில் திருமலை நாயக்கர் கட்டிய மண்டபம் ஆகும். இது யானைப்போர் காண்பதற்கான திடலாகும்.


காலம் செல்லச்செல்ல அதற்கேற்ப விளையாட்டுகளின் தன்மையும் போக்கும் மாறியுள்ளன. பண்டைய ஏறுதழுவுதல் விளையாட்டு இன்று சல்லிக்கட்டாகவும், மஞ்சுவிரட்டாகவும் அறியப்படுகின்றன. அன்று ஏறுதழுவியவரையே மகளிர் விரும்பி மணந்தனர். இன்று அவ்விளையாட்டானது பணமுடிப்பு, பரிசுப்பொருள்கள் பெறுதல், பலர் சேர்ந்து மாடு விரட்டல் என மாறிவிட்டது.

தமிழரின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்றாகச் சிலம்பாட்டம் வளர்ந்து வருகிறது. நிலத்திலிருந்து ஓர் ஆளின் உயரம் வரை இருக்கும் தடியைச் சுழற்றி ஆடும் ஆட்டமே சிலம்பாட்டமாகும்.
உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டான கபடிக்கு தனியிடம் கிடைத்துள்ளது. கபடி விளையாடும்போது பாடிக் கொண்டேவிளையாடிவது நம் மூதாதையர் வழக்கம். ஆனால், கபடிப் போட்டியில் பாடும் மரபு மறைந்து விட்டது.

ஊர்த்திருவிழாக்காலங்களில் வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், மஞ்சள் நீர் ஊற்றுதல் ஆகிய விளையாட்டுகளை இன்றைக்கும் சிற்றூர்களில் காணலாம்.

மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்தது    சிற்பக்கலை என்பர்.வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது.மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும்சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. தமிழ்நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலைவழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது.

கண்ணால் கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோவடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும்அதனை வடிபவன் சிற்பிஎனப்படுவான்.

கல்உலோகம்செங்கல்மரம்சுதைதந்தம்வண்ணம்கண்டசருக்கரை,மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என கூறுவர்.  
கல்லில்கருங்கல்மாக்கல்பளிங்குக்கல்சலவைக்கல் என்பனவும்உலோகங்களில் பொன்வெள்ளிவெண்கலம்செம்பும் ஏற்றனவாகக்கருதப்பட்டன


வடிவம் முழுவதையும் முன்புறம் பின்புறம் இரண்டையும் காட்டும்சிற்பங்களை முழுவடிவச் சிற்பங்கள் என்றும் வடிவத்தின் ஒருபுறம்மட்டும் காட்டும் சிற்பங்களைச் புடைப்புச் சிற்பங்கள் என்றும்வகைப்படுத்துவர்.

கோயில்களில் காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும்உற்சவச் திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள் ஆகும்.

தமிழ்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலைஇலக்கணங்கள் அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும்இவ்விருகலைகளுமே கோயில்களால் வளர்க்கப்பட்டமையால்இவை எளிதாககைவரப்பெற்றனசிற்ப வடிவங்கள் நின்றாலும், அமர்ந்தாலும் கிடந்தாலும்வேறெந்த அமைதியில் தோன்றினாலும்அவை பெரும்பாலும் ஆடற்கலைஇலக்கணத்தையொட்டி அமைந்திருப்பதைக் காணலாம்சிற்பிகள்ஆடற்கலை இலக்கணத்தை நன்கு அறிந்து தம் கலையுணர்வுகற்பனைத்திறன் கலந்து அமைப்பதால்தெய்வத் திருமேனிகள் நிறுவப்படும்இடத்துக்குத் தக்கவாறு கலையழகை மட்டுமன்றி அவ்வடிவஅமைப்புகளின் உட்கருத்தையும் உணர்த்தும் வகையில் உள்ளன.


தமிழகத்தில் பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில் சிற்பங்கள்வரலாற்றுப் புகழ் பெற்றவைபாண்டியர் கால சிற்பங்களும் தமிழகச்சிற்பங்களின் கலைத்திறனுக்குச் சான்றாய் விளங்குகின்றனதமிழகத்தில்சோழர்காலக் குடந்தை நாகேசுவரர் கோயில்தஞ்சைப் பெரிய கோயில்,கங்கை கொண்ட சோழீச்சுரம்தராசுரத்து ஐராவதேசுவரர் திருக்கோயில்ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவைஇவை சிற்பக் கலைவளர்ச்சியையும்அக்கலையில் தமிழகச் சிற்பிகள் பெற்றிருந்தபெருந்திறனையும் உலகுக்கு உணர்த்துவன.இரண்டாம் இராசராசனின் கலைப்படைப்பாய் எழுந்த ஐராவதேசுவரர்திருக்கோயில்சிற்பக்கலைச் சாதனைகளின் உச்சம் என்பர்அழகிலும்நுணுக்கத்திலும் ஆற்றலிலும் மிக உன்னத நிலையிலிருந்தே இச்சிற்பக்கலையின் எச்சமாக கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில்களிலும்நம் நாட்டு   லெம்பா பந்தாய்’ பள்ளத்தாக்கிலும் சிதைவுற்றிருக்கும்சிற்பங்களே சீரிய எடுத்துக்காட்டுகள்.
சில்லு விளையாட்டுதட்டையான சிறு சில்லை அரங்கத்தில் போட்டு, அதனைக் காலால் மிதித்து, அரங்கத்துக்கு வெளியே எத்தித்தள்ளி, அதனை மிதித்து விளையாடுவது சில்லு விளையாட்டு எனப்படும்.மச்சு ஆட்டம் விளையாட்டுக்கலை
ஓடி விளையாடு பாப்பா நீஓய்ந்திருக்கலாகாது பாப்பாஓடி விளையாடு பாப்பாகூடி விளையாடு பாப்பாஒரு குழந்தையை வையாதே பாப்பாஓடி விளையாடு பாப்பாபாலை பொழிந்து தரும் பாப்பாஅந்த பசு மிக நல்லதடி பாப்பாபாலை பொழிந்து தரும் பாப்பாஅந்த பசு மிக நல்லதடி பாப்பாவாலை குறைத்து வரும் நாய் தான்அது மனிதர்க்கு தோழனாடி பாப்பாபொய் சொல்ல கூடாது பாப்பா என்றும்புறம் சொல்லலாகாது பாப்பாபொய் சொல்ல கூடாது பாப்பாதெய்வம் நமக்கு துணை பாப்பாஒரு தீங்கு வரமாட்டாது பாப்பாகாலை எழுந்த உடன் படிப்புபின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுமாலை முழுதும் விளையாட்டு என்றுபழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பாகாலை எழுந்த உடன் படிப்புஅச்சம் தவிர்ஆன்மை தவறேல்இடைத்தல் இகழ்ச்சிஈகை திறன்பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுமுருகா முருகா முருகாவருவாய் மயில் மீதினிலேவடிவேலுடனே வருவாய்தருவாய் நலமும் தகமும் புகழும்தவமும் திறமும் தனமும் கணமும்முருகா முருகா முருகாஜாதிகள் இல்லையடி பாப்பாஜாதிகள் இல்லையடி பாப்பாகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்பாப்பா ஜாதிகள் இல்லையடி பாப்பாநீதி உயர்ந்த மதி கல்விஅன்பு நிறைய உடையவர்கள் மேலோர் பாப்பா பண்டையக்காலத்து விளையாட்டுகள்:சிற்பக்கலை
இசைக்கலைஉலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் இசை பிறந்துவிட்டதென்பர். மனிதன், தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இசையே கருவியாயிற்று. பண்டைக்காலத் தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. பண்கள், இசைக் கருவிகள், இசைக்கலைஞர்கள், இசைப்பாடல்கள் என இசை பற்றிய ஏராளமான குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன. தொல்காப்பியமும், சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும் இசை மரபுகளை வெளிப்படுத்துகின்றன. ‘நரம்பின் மறை’ என்று தொல்காப்பியர் உரைப்பதன் மூலம் இசை இலக்கணநூல் உண்டென உணரமுடிகிறது.மேலும் பாணன், பாடினி, கூத்தன், விறலி என்று இயலிசை நாடகக் கலைஞர்கள் இருந்தமையையும் அறிய முடிகிறது.தமிழர் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்புவரைக்கும் இசையே முதன்மை பெறுகிறது. தாலாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலிலிட்டுப்பாடுவது.ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று இறந்தவரைபற்றிப்பாடுவது.


ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணேஆராரிரோ ஆரிரரோமானே மரகதமே - என் கண்ணேமாசிலாக் கண்மணியே!ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணேஆராரிரோ ஆரிரரோஅப்பா வருவாரே – என் கண்ணேஆசமுத்தம் தருவாரே!ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணேஆராரிரோ ஆரிரரோமாமன் வருவாரே – என் கண்ணேமாங்கனிகள் தருவாரே!ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணேஆராரிரோ ஆரிரரோஅத்த வந்தாக்கா – என் கண்ணேஅல்லிப்பூ தருவாளே!                   என்று தாலாட்டுப்பாடல் அமைந்துள்ளது.  
நிலவோ நிலவுதவி என்ரை ராசாஎனக்குநிலவுபட்டால் ஆருதவி ........பொழுதோ போழுதுதவி என்ரை ராசாஎனக்குப் பொழுதுபட்டால் ஆருதவி ...........கொத்த வேண்டாம் வெட்ட வேண்டாம்என்ரை நீல நையினார்  நீஎனக்கொருகொள்ளி  வைச்சால் காணுமடாபார்க்க வேண்டாம் எடுக்க வேண்டாம்என்ரை நீல நையினார்  நீ எனக்குப்பால் வார்த்தால் காணுமடா .......நான் பெத்தேன் பிலாப் பழத்தைஇப்பபிச்சு வைச்சேன் சந்தியிலை .....பள்ளிக்கூடம் தூரமெண்டுஎன்ரை ராசாவைநான் பக்கத்தே வைச்சிருந்தேன்தோட்டம் தொலை தூரமெண்டுஎன்ரை ராசாவை நான்தொட்டிலிலை  வைச்சிருந்தேன்.

                                     என்று இறுதி சடங்குகளில் ஒப்பாரி அமைந்துள்ளது.  இன்றைய கருநாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே.‘பண்ணொடு தமிழொப்பாய்’ என்னும் தேவாரம், பண்ணும் தமிழும் பிரிக்க முடியாததொன்று என்று நவிலும். தமிழர், ஐவகை நிலத்திற்கும் ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தன்ர். தோற்கருவி, துளைக்கருவி எனப் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இன்புற்றனர்.குழலினிது யாழினிது என்று இசைபொழியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது. இதன்மூலம் தமிழிசை தொன்மையும் சிறப்பும் பெற்றிருந்ததனை அறியலாம்.கட்டிடக்கலைசங்க கால கட்டிடங்கள் அழியதக்க செங்கல், மரம் முதலியவற்றால் அமைக்கப்பட்டவை எனலாம். பல்லவர்கள் காலத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய குடவரைக் கோயில்களின் மூலம், ஒரு புதிய வகை சிற்பம் மற்றும் கட்டிடக்கலை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில் மலைப் பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய மண்டபங்கள் அமைக்கப்பட்டன (எடுத்துக்காட்டு மாமல்லபுரதிலுள்ள மகிஷாசுர மண்டபம்).  பின் ரதம் போன்று செதுக்கப்பட்ட ஒற்றைக்கற்கோவில்களை அமைத்தனர். அதன் பின் செதுக்கப்பட்ட கற்பாறைகளை இணைத்து கற்கோயில்களை கட்டினர். எடுத்துக்காட்டாக மாமல்லபுர கடற்கரை கொயில்,காஞ்சி சைலாச நாதர்ஆலயம் வைகுந்த பெருமாள் ஆலயம். இக்கோயில்களிலுள்ள விமானங்கள் தனி சிறப்பு வாயிந்தவை. 
தஞ்சை பெரியக்கோவில்
பல்லவ கால கட்டிடக்கலை பிற்கால சோழர் காலத்தில் மேலும் விரிவு படுத்தப்பட்டது. சோழர்கள் காலத்தில் பிரம்மாண்டமான வானளாவிய கோயில்கள் கட்டப்பட்டன. பரந்துவிரிந்த வளாகங்கள், பாதுகாப்பான உட்புற சுற்றுசுவர், சிற்பவேலைப்பாடு மிக்க அழகிய தூண்களுடன் கூடிய மண்டபங்கள் (மகா மண்டபம், அர்த்த மண்டபம், நாத்தன மண்டபம், வாத்திய மண்டபம்) கருவறை, பெரிய விமானங்கள், தளங்கள் கட்டப்பட்டன. கடவுளர்களுக்காக கருவறைகல் போன்ற கூறுகள் குறிப்பிடத்தக்கவை. தஞ்சை பிரகதீஸ்வரம்,கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற இடங்களில் காணப்படுகின்ற  கோயில்கள் சோழர் காலக் கட்டிடக்கலைக்குச் சிறந்த சான்றுகள். இக்கோயில்களில் எல்லாம் மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.
குன்றங்குடி குடவரைக்கோவில்

ஓவியக் கலைக்குச் சான்றாக சித்தன்னவாசல் குகைகள், காஞ்சி கைலாச நாதர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்கள் போன்றவைகளில் மிகச் சிறந்த ஓவியங்கள் உள்ளன. கல்லிலே சிலை வடித்தது போன்று, வெண்கலம்  போன்ற உலோகத்தாலும் சிலைகள் வார்க்கப்பட்டன. சோழர் காலத்திய வெண்கலத்தால் ஆன நடராசர் சிலை, சைவ, வைஷ்ணவ உற்சவ மூர்த்தி சிலைகள், 63 நாயன்மார்களின் சிலைகள் உலக புகழ் பெற்றவையாம். தமிழர்கள் தங்களுக்கென கணிதம், காலவியல், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினர். சங்க இலக்கியங்களில் எண், கணக்கு நாழிகை, யாமம், காதம், கோல் போன்ற அளவைகளும், இலையுதிர், இளவேனில் போன்ற கால கணக்குகளையும் காணலம். ஏலாதி, திரிகடுகம், சிறு பஞ்சமூலம் போன்ற நூல்களில் பெயர்கள் மூலம் அவர்களின் மருத்துவ அறிவை அறியலாம்.
மாமல்லவரம்

கணியன் என்பவர் வானவியல் மற்றும் ஜோதிடவியல் வல்லவராவார். தமிழ் சித்த்ர்கள் சித்த வைத்திய முறையில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் தங்கள் ஆய்வுகளையும், சிகிச்சைகளையும், மருந்து தயாரித்தலை பற்றியும் மருந்து தயாரிக்க பயன்படுத்திய மூலிகைகள் பற்றியும், தெளிவாக எழுதி வைத்துள்ளனர்.இறுதியாக தமிழர்கள், மனிதச் செயல்பாடுகளின் பல துறைகளிலும் சிறந்து விளங்கினர். அவர்களின் தத்துவம் பேரளாவிய உலகப் பார்வை கொண்டது. அவர்களது இறையியல் மூட நம்பிக்கைகளுக்கு அதிக இடமளிக்கவில்லை. சமண, பௌத்த சமயங்கள் போன்று தமிழர்களும்“தீதும் நன்றும் பிறர் தரவாரா” என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். மனிதன் தன் விதியை தானே தீர்மானிக்கிறான் என்பதில் தெளிவாக இருந்தான். இந்திய வரலாற்றில் தமிழர்களின் மரபு ஒரு புகழ் வாய்ந்த பகுதியாகும்.   
சங்க கால வீடு


பறையாட்டம்பறையாட்டம் அல்லது தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமானநடனம் ஆகும்.  பறையாட்டம் உணர்ச்சி மிக்கது மற்றும் எழுச்சி மிகுந்தது.
தப்பு அல்லது பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இதுதப்பாட்டம் அல்லது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
ஆதி மனிதன் தங்களுடைய சமூகம் ஒன்று கூடுதலுக்காகவும்,  தங்கள்குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும்விலங்குகளிடம் இருந்து தங்களைதற்காத்துக் கொள்ளவும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின்மூலம் எழும் சத்தமாகும்.
ஊர் விழாக்களில் நடைப்பெற்ற பறையாட்டம்.

ஆவேசம்மகிழ்ச்சிஉற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பிகேட்போரைஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி இந்த பறையாட்டத்திற்கு உண்டு.வரலாறு விலங்குகளைக் கொன்றுதின்று, மிஞ்சியத்தோலை எதிலாவதுகட்டிவைத்துகாய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடியஆட்டந்தான் காலப்போக்கில் கலைவடிவமாகவும்வாழ்வியல்உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாறியது.
பறை இசைக்கருவி

திருமணம்,  இறப்புசிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின்அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுகம் மற்றும்  துக்கங்களிலும் இடம்பெறும் கலையாக மாறியது.
சமூக அடிப்படை மேலோங்கிய தருணங்களில்கடினமான,  இசைக்கச்சிரமமான இசைக்கருவிகளை பிறருக்கும்இலகுவான இசைக்கருவிகளைதங்களுக்குமாக மேலாதிக்கவாதிகள் பிரித்துக் கொண்டனர்மேலும் சாதிகோட்பாடுகலை நிகழ்த்துவோரையும், தொழிலை மையப்படுதியும் சாதி பிரிக்கப்பட்டது.  அதன்படியே ஆதி திராவிட தமிழர்களின் கலையாக பறைஆட்டம் ஒதுக்கப்பட்டது.  தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்லி பலநூறுஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்கள்உரிய கல்விகிடைக்காமல்நாகரீக நீரோட்டத்தில் இணைய முடியாமல் தவித்ததருணங்களில்அவர்களின் வாழ்க்கை முறையையே காரணமாகக் கூறியநவீன சமூகம்அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தை,சாவுமேளம் என முத்திரை குத்தியது.
ஒரு கட்டத்தில் பறையடித்தல் என்பது சாதியை மையப்படுத்தும்குறியீடாகவும்அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிவிட,அச்சமூகத்தின் விடுதலை எண்ணிக்கொண்டிருந்த இளைஞர்கள்பறையடித்தலை அவமானமாக கருத தொடங்கினர்.  இவ்விதமெ பறையாட்டம் மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இறுதி சடங்குகளில் பறையாட்டம்

சிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம்பூக்குளித்தல்தீச்சட்டிஎடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு.இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவமதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர்அந்தோணியர்,ஆரோக்கியமாதாவியாகுலமாதாசந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவகோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுவதுண்டு.
சிறப்புஒவ்வொரு நிகழ்ச்சிக்கும்ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனிஅடிவகைகள் உள்ளன.
 •   சப்பரத்து அடி
 •     டப்பா அடி
 •     பாடம் அடி
 •     சினிமா அடி
 •     ஜாயிண்ட் அடி
 •     மருள் அடி
 •   சாமிச்சாட்டு அடி
 •   ஒத்தையடி
 •   மாரடிப்பு அடி
 •    வாழ்த்தடி
         என பல வகை அடிகள் உள்ளன.
இக்கலைக்கெனப் பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர்.
நேர்நின்றுஎதிர்நின்றுவளைந்து நின்று ஆடுதல்அடிவகைகளைமாற்றுதல் எனப் பார்வையாளனை ஈர்க்கத்தக்க இரசனை மிகுந்தகலையாடல்கள் இதில் உண்டு.
தஞ்சாவூர்மதுரைதிண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடுதுணைக்கருவியாகத் தவில் பயன்படுத்தப்படுகிறதுதென்மாவட்டங்களில்டிரம் பயன்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் தஞ்சாவூர்திண்டுக்கல்மதுரை மாவட்டங்களில்இக்கலைஞர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள்கோயில் சார்ந்தநிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல்பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது.
ஓவியக்கலைஎல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக்கொள்ளைகொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம். காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்தகலை ஓவியக்கலை. ஓவியம் பேசும் செய்திகள் பல, உணர்த்தும் கருத்துகளோ மிகப்பல.தமிழகத்தில் தொன்றுதொட்டு விளங்கிவந்த பாரம்பரியக் கலைகள் பல. அவற்றுள் பல, காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு அழிந்துபோயின. எஞ்சிய சில, தமிழர்களின் கலைத்திறன்களையும் கலை நுட்ப அறிவையும் உலகோர்க்கு எடுத்துகாட்டும் ஒளி விளக்குகளாகத் திகழ்கின்றன. தமிழர் வளர்ந்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது.பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துகளைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினர். தம் எண்ணத்தைச் சித்திரம் வரைந்து வெளிப்படுதினர். இவற்றை தொல்பொருள் ஆய்வுகளாலும் இலக்கியச் சான்றுகளாலும் அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் இருந்ததனைப் பரிபாடல், குறுந்தொகை செய்யுள் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.எனவே, பழங்கால மக்கள் சித்திர எழுத்துகளால் கருத்துகளைப் புலப்படுத்தினர். அவையே நாளடைவில் மொழிக்குறியீடுகளாக வளர்ந்துள்ளன.ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவைகோட்டோவியங்கள் எனப்படும்.இலக்கியங்களில் ஓவியக்கலை:தொல்காப்பியம் ”நடுகல் வணக்கம்” பற்றிக் கூறுகிறது. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது. சிற்பி, தான் செதுக்கருவிக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே, அவ்வோவியத்தைக்கொண்டு கல்லில் உருவம் அமைத்தல் மரபு. இதன்படி ஆராய்ந்து நோக்கினால் செதுக்குவதற்கு ஓவியம் துணை புரிந்தையும், ஓவியம் முன்னரே வளர்ந்திருந்ததையும் உணர முடிகின்றது.ஆடல் மகள் மாதவி, ”ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்” எனச்சிலம்பு பகர்கிறது.புறநானூற்றில், “ஓவத்தனைய இடனுடை வனப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஓப்ப வைத்து”  கவிஞர் போற்றுகிறார்.நாச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என இலக்கணம் வகுத்துள்ளார்.ஆண் ஓவியர் “சித்திராங்கதன்” என்றும் பெண் ஓவியர் “சித்திரசேனா”எனவும் பெயர் பெற்றிருந்தினர்.ஓவியக்கலை ஓவியக்கலை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் வழங்கப்படுகிறது.ஓவியக்கலைஞர் ஓவியக் கலைஞர் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.வரைகருவிகள்பல்வகைக் காட்சிகள், உருவங்கள் வரைய ஓவியர் அக்காலத்தில் பல்வகைக் கருவிகளைப் பயன்படுத்தினர்.வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயரிட்டிருந்தனர்.வரைவிடங்கள்அக்காலத்தில் ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே இடங்கள் அமைந்திருந்தன.  ஓவியங்கள் வரையப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் எனப் வழங்கப்பட்டன. அரசர் வாழும் அரண்மனை அந்தப்புரங்கள், செல்வர் வாழும் வளமனைகள், மாளிகைகள், ஆடலரங்குகள், கோவில் மண்டபங்கள், பொதுமன்றங்கள் முதலிய இடங்களில் கட்டடச் சுவர்கள், மேற்கூரைகள், தூண்களில் ஓவியங்களை வரைந்தனர். ஓவியத்தால் மக்கள் வீடுகளை அலங்கரித்தனர்.சித்தன்னவாசல் ஓவியம்மகேந்திரவர்மன் காலத்திற்குப் பின்னர்த் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரசர்கள் ஓவியகலையை வளர்த்து வந்துள்ளார்கள். பல்லவர் கால ஓவியங்கள், பனமலை, திருமலை, மாமல்லபுரக் குகைக்கோவில், மாமண்டூர், காஞ்சிக் கைலாசநாதர் கோவில் முதலிய இடங்களில் ஓவியங்கள் சிதைந்த தோற்றத்தோடு காணப்படுகின்றன. புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்க்கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றத்தகுந்தன. அங்குள்ள தாமரைத்தடாகம், ஆடல் அணங்குகள், அரசன், அரசி ஓவியங்கள் நம் கண்னைக் கவர்வன,வில்லுப்பாட்டுவில்லுப்பாட்டு (அல்லது வில்லிசைஎன்பது தமிழர்களின் கலைகளுள்ஒன்றாகும்வில்லின் துணைகொண்டுப்பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டுஎனப் பெயர் பெற்றது.
துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மைபெறுகிறதுதுணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை 
தாளம்

குடம்

உடுக்கை
உடுக்கைகுடம்தாளம்கட்டை என்பனவாகும்வில்லுப்பாட்டின் தோற்றம்வில்லுப்பாட்டின் தோற்றம் இன்றும் கண்டறிய முடியாத நிலையில் உள்ளன. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்தநேரம் அவனுக்கு உதவியது வில்லாகும்அதில் கட்டப்பட்டிருந்த மணிஓசையில் மயங்கி அதனைக்கொண்டு வில்லுப்பாட்டிசைஉருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வில்லுப்பாட்டு கச்சேரி

வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கியவில்லுப்பாட்டுகாலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுதுபோக்கிற்காகவும்குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களைசொல்வதற்கும்   பயன்பட்டது.
வில்லுப்பாட்டின் அமைப்புவில்லுப்பாட்டின் கட்டமைப்பு பெரும்பாலும் பின்வரும் ஏழு வகைகளாகவகுக்கலாம்:
காப்பு விருத்தம்இறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும்அந்த முறையில்வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறதுபெரும்பாலும்இது விருத்தமாக அமையும்.
வருபொருள் உரைத்தல்குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர்முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும்.  இது பாடலாகஅமையப்பெறும்.
குருவடி பாடுதல்தனக்கு ஆசிரியராக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாகஉதவுமாறு கோருவது குருவடி பாடுதல் எனப்படுகிறது.
அவையடக்கம்கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும்கேட்போரைச்சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது அவையடக்கம் ஆகும்பிழைநேருமிடத்துப் பொருத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதிஅமையப்பெறும்.
நாட்டு வளம்கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.
கதைக்கூறுநாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும்கதையின்தலைவன்தலைவியின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.
வாழிபாடுதல் இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும்கதை கேட்போர்கதைமாந்தர்கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாகமங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது.
இவ்வாறு தமிழர்கள் தங்களுடைய அன்றாடவாழ்வில் நடக்கும் நிகழ்வுலையும், அவர்களுடைய சுக, துக்கங்களையும் கலை என்ற வார்த்தையில் வைத்து தங்களுடைய பண்பாடு மற்றும் கலாச்சாரதையும் வளர்தனர்.நாடகக்கலைகலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும். தமிழ் மொழிஇயல்இசைநாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.  இவற்றுள்நாடகம் தொன்மையும்தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும் இயல் மற்றும் இசை கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவதுநாடகமாகும்எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடுதோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும்.
தெருக்கூத்துகளாக இருந்துமேடைநாடகங்களாக மாறிஇலக்கியநாடகங்களாக மலர்ச்சி பெற்றது.
தமிழ் நாடகம்

தமிழ்நாடகத்தின் தொன்மை
தொல்காப்பியர் ”நாடக வழக்கினும்” என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.
சிலப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது.
அகத்தியம்,குணநூல்கூத்தநூல்சயந்தம்மதிவாணர் நாடகத் தமிழர்முறுவல் போன்ற  நாடக நூல்கள் பழந்தமிழர் வழக்கில் இருந்தனஎன்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்குறிப்பிட்டுச் செல்கிறார்.
இருவகை நாடகங்கள்வேத்தியல்பொதுவியல் என நாடகங்களை இருவகையாகப் பகுக்கலாம் வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும்,பொதுவியல் என்பது மக்களுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும்.
பல்லவர் கால நாடகங்கள் நாயன்மார்களும்ஆழ்வார்களும் இசைக் கலைக்கு உயிரூட்டினர்எனினும்நாடகத்துக்கு பெரிய செல்வாக்கு ஏற்படவில்லைஇக்காலத்தில் மகேந்திரவர்ம பல்லவனின் “மத்தவிலாச பிரகசனம்“ என்ற நாடகநூல்புகழ்பெற்றிருந்ததுஇன்னிசைக்கூத்துவரலாற்றுக் கூத்து என இருவகைநாடக மரபுகளும் இக்காலத்தில் இருந்தன.
சோழர் கால நாடகங்கள் சோழர் காலத்தில் இராஜராஜனின் வெற்றிச்சிறப்பைப் பாராட்டும்இராஜராஜவிஜயம்“ நிகழ்த்தப்பட்டதுஇதில் நடித்தவர்களுக்கு “ராசராசநாடகப்பிரியன் என்று பட்டம் வழங்கினர் என்பதைக் கல்வெட்டுகள் வழிஅறியமுடிகிறது.
தமிழ் நாடக மூவர்       

பம்மல் சம்பந்தம் முதலியார்சங்கரதாசு சுவாமிகள்பரிதிமாற் கலைஞர்ஆகிய மூவரையும் தமிழ்நாடக மூவர் என்று அழைப்பது வழக்கம்.
1.பம்மல் சம்பந்தம்

            இவர் எழுதிய மொத்த நாடகங்கள் தொண்ணுற்றுமூன்று ஆகும்.இவரே தமிழ்நாடகத்தின் தந்தை என அழைகப்படுகிறார்மேலும் இவரைத்தமிழ் சேக்சுபியர் என்றும் அழைப்பர்இவர்தம் நாடகங்கள் இன்பியல்,துன்பியல்கேளிக்கைஅங்கதம்நையாண்டிபுராணிகம்வரலாறு,மொழிபெயர்ப்பு எனப் பலதரப்பட்டவையாகும்.
2.பரிதிமாற் கலைஞர்

           நாடகம் படித்தல்நடித்தல்இலக்கணம் வகுத்தல் என மூன்று பெரும்பணிகளை ஆற்றினார்நாடகவியல் என்ற தமிழ்நாடக இலக்கண நூலைஇயற்றினார்இவர் படைத்த நாடகங்களுள் ரூபாவதிகலாவதி,மானவிஜயம்சூர்ப்பனகை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
3.சங்கரதாசு சுவாமிகள்

     முறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடகவரலாறு இவரிலிருந்தேதொடங்குகிறதுஇருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையைநசிவடையாமல்க் காத்ததால் இவரைத் தமிழ்நாடகத் தலைமையாசிரியர்எனப் போற்றுவர்.  அபிமன்யு சுந்தரிஇலங்காதிலகம்கோவலன்,நல்லதங்காள்பிரகலாதன்  உள்ளிட்ட நாற்பது நாடகங்கள் இவர்படைத்தவையாகும்.

நாடகங்களின் வகை 


நாவல்களைப் போலவே தமிழ்நாடகங்களையும் புராண நாடகம்இலக்கியநாடகம்  துப்பறியும் நாடகம்வரலாற்றுநாடகம்நகைச்சுவை நாடகம்,மொழிபெயர்ப்பு நாடகம்தழுவல் நாடகம்என வகைப்பாடு செய்ய இயலும்.சான்றாக புராண நாடகங்கள்இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்நிறைய தோன்றினபிரகலாதன்ஐயப்பன்தசாவதாரம்சிறுதொண்டர்ஆகிய நாடகங்கள் அவற்றுள் குறிப்பித்தக்கனவாகும்இலக்கியநாடகங்களைப் படித்துமுடித்தவுடன் ஒரு நாடகம் பார்த்த நிறைவுகிடைக்கும்அவ்வகையில்சுந்தரம்பிள்ளையின் – மனோன்மணீயம்,பாரதிதாசனின் – பிசிராந்தையார்மறைமலையடிகளின்-அம்பிகாபதிஅமாராவதி..ஞானசம்பந்தனின் தெள்ளாறு எறிந்த நந்திமுதலிய நாடகங்கள் இலக்கி்ய நாடகங்களுள் குறிப்பித்தக்கனவாகும்.
இவ்வாறு தமிழர்களின் நாடக்கலை தமிழர்களின் மரபாக அமைந்துள்ளது.
கரகாட்டம்கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்றாகும்தலையில்கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும்கரகம் என்பது ஒரு பானைவடிவ கமண்டலத்தைக் குறிக்கும்சங்க இலக்கியங்களில் கரகாட்டம்குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளதுபல விதங்களில்அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடிசமநிலை பேணிகரகாட்டம் ஆடப்படும்.
கரகாட்டம்

கரகம் அமைக்கப்படும் முறைஅலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில்வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழேவிழாதவாறு பெண்கள் ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும்.கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம்பூக்குடம்கும்பம்செம்புநீர்க்குடம்என்ற பல அர்த்தங்கள் உண்டுகரகாட்டத்திற்கு மூன்று கிலோ எடையுள்ளசெம்பினுள் மூன்று அல்லது நான்கு கிலோ மண்ணோஅரிசியோ இட்டுஒரு ரூபா நாணயமும் வைத்து கரகச் செம்பு தயாரிக்கப்படும்செம்பின்வாய்ப் பகுதியை தேங்காயால் மூடுவதற்கென்றே கட்டைவைத்திருக்கின்றனர்.
இதன் பின் டோப்பா எனப்படும் குடையை இதன்மேல் பொருத்தி வைப்பர்.குடையின் மேலே கிளிஅன்னம்புறா போன்ற தக்கைப்பறவை உருவம்இருக்கும்தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் "சக்திக்கரகம்என்றும்தொழில்முறைக் கரகத்தை "ஆட்டக்கரகம்என்றும் சொல்வர்.தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவதுபித்தளையால்செய்யப்படுவது செம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும்.
முன்பு ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடியதை இன்று பெண்களேஆடுகின்றனர்இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம்சிறிய உடுக்கை,பெரிய உடுக்கைசத்துக்குழல்செண்டைபறை என்பனஇசைக்கப்படுகின்றன.கரகாட்ட வகைகள்    சக்தி கரகம்    -  பக்தி கலந்து கோயில்களில் ஆடப்படுவது.
   ஆட்ட கரகம்  -  பொதுமக்கள் முன் அல்லது பொது நிகழ்வுகளில்ஆடப்படுவது ஆட்ட கரகம்தெருக்கூத்து
கூத்துக்கலையின் அடையாளமாக சென்னையில் அமைக்கப்பட்ட சிலை.
தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும்இது தமிழர்களின்பழங்க்கலைகளில் ஒன்றாகும்கதை சொல்லல்நாடகம்ஆடல்பாடல்என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும்பொதுவாகஒரு தொன்மம்நாட்டார் கதைசீர்திருத்தக் கதைஅல்லது விழிப்புணர்வுக்கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும்.
 
தெருக்கூ த்து 

சிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலைபோன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்தஆடுபரப்பில்ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகியஅணிகலன்களைப் பூண்டுகட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டுநடனம்பாடல் வசனம்ஆகியவற்றால் கதைப் பொருளைக்கூத்துருவமாக்கிஇரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலைமுடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும்பார்வையாளர்கள்கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர்.
கூத்து நடைபெறும் இடம்தெருக்கூத்து நடைபெறும் இடம் களரி எனப்படும்ஊரின் புறத்தே அல்லதுகோவில் திடல்களில்அல்லது அறுவடை ஆன வயல்களின் நடுவேஇக்கூத்தானது நடைபெறும்கூத்து நடைபெறும் இடத்தை முதலில்சுத்தப்படுத்துவர்பின்பு அத்திடலில் இரு கழிகளை நட்டு அவற்றில்விளக்குகளைக் கட்டுவர்கழிகளுக்கு இடையில் உள்ள இடமே கூத்துநடைபெறும் இடமாகும்இதனை விட்டமாகக் கொண்டே மக்கள்வட்டமாகச் சுற்றி அமர்வார்கள்கழிகளுக்கு இடையாக ஓர் ஓரத்தில் ஒருஅகன்ற விசுப்பலகை போடப்பட்டிருக்கும்அதன் பின்னே தென்னங்கிடுகுகளால் அறை அமைக்கப்பட்டிருக்கும்இது கூத்தில் நடிக்கும்நடிகர்களின் ஒப்பனை அறையாகும்.
 பின்பாட்டுக் காரர்கள்கூத்திற்கு மிக இன்றியமையாத ஒன்று பின்பாட்டு ஆகும் . ஆடலும்பாடலும் இணைந்த நாட்டிய நாடகமே தெருக்கூத்துஇக்கூத்தில் பின்பாட்டுபாடுபவர்கள் இவர்களே ஆவார்கள்ஒவ்வொரு பாத்திரத்தின்தன்மைக்கேற்ப இவர்கள் பாடுவர்பாட்டின் இடையே வசனம் பேசுவதும்இவர்களேஇவர்கள் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமைமிகுந்தோராய் இருப்பர்இவர் விசுப்பலகையில் அமர்ந்துஇசைக்கருவிகளை இசைப்பர்.
 இசைக்கருவிகள்தெருக்கூத்தில் ஆர்மோனியம்மத்தளம்தாளம்முகவீணை(மோர்சிங்)முதலிய கருவிகள் பின்னனி இசைக்காகப் பயன் படுத்தப்படும்.
 கட்டியங்காரன்கட்டியங்காரன் என்பவரே கூத்தின் முக்கிய நபராவார்கூத்தினைத்தொடங்கி வைத்தல்கூத்தின் கதா பாத்திரங்களை அறிமுகம் செய்தல்,கூத்தின் இடையே சிறு சிறு பாத்திரங்களை ஏற்று நடித்தல்கூத்தின்கதையை விளக்குவதோடு இடையிடையே மக்களை மகிழ்விக்கும்விதமாக கோமாளி போல நகைச்சுவையைக் கையாளுதல்கூத்தினைமுடித்து வைத்தல் ஆகிய பணிகளையும் இவர் செய்வார்.
தெருக்கூத்து கலைஞர் 
ஆடை அணிகலண்கள் கட்டியங்காரனுடைய உடை முழுக்கால் சட்டையும் பல வண்ணங்கள்கொண்ட மேல் சட்டையும் கோமாளித் தொப்பியும் ஆகும்மற்றவர்கதைக்கு ஏற்பவும்பாத்திரத்தின் தன்மைக்கேற்பவும்உடலோடு ஒட்டியமுழுக் கால் சட்டைஅதன் மேல் குட்டைப் பாவாடை போன்ற உடையும்அணிவர்பாத்திரத்திற்கேற்ற மேல் உடையும் கட்டைகளால் ஆன மகுடம்,மார்புப் பதக்கம்தோளணிகள்(புஜகீர்த்திகள்), போன்ற அணிகளை அணிவர்.வண்ணக் காகிதங்கள்பாசிமணிகள்கண்ணாடித் துண்டுகள்போன்றவற்றால் அணிகலன்கள் அழகுபடுத்தப் பட்டிருக்கும்பெண்வேடதாரிகள் சேலையும் ரவிக்கையும் அணிந்து குறைவானஅணிகலன்களை அணிவர்.
 விதிமுறைகள்கூத்து தொடங்கும் முன் இசைக் கருவிகள் அனைத்தும் ஒருசேர ஒலிக்கும்.இதனை களரி கட்டுதல் என்பர்அதாவது கூத்து தொடங்கிவிட்டது எனஊருக்கு அறிவிக்கும் நிகழ்ச்சி இது.
 • கூத்தாடுகளத்தின் நடுவில் இருவர் வந்து வேட்டியைத்திரையாகப் பிடித்தபடி நிற்பர்கூத்தின் கதாபாத்திரங்கள்அனைவரும் முதல் முறையாக மேடையில் தோன்றுவதற்குமுன்னர்இத்திரையின் பின் நின்று பாடிய பின்பே மக்கள் முன்காட்சி தருவர்.
 • தெருக்கூத்தில் பெண்கள் நடிக்கும் வழக்கம் இல்லைஆண்களேபெண்வேடமிட்டு நடிப்பர்.
 • பல நாட்கள் தொடர்ந்து நடக்கும் கூத்துகளில்கூத்து தொடங்கிமுடியும் வரை கூத்தில் நடிப்பவர்கள் நோண்பிருப்பர்.
 இன்றைய நிலை
தெருக்கூத்தானது வெறும் பொழுது போக்காக மட்டுமன்றி கோவில்விழாவின் ஒரு பகுதியாகவும்பக்தியை பரப்பும் கருவியாகவும்அமைகின்றது.  கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில்வருகின்ற கூத்தர்களை கடவுளராக எண்ணி பார்வையாளர்கள்வணங்குவதும்இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும்.அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்துபல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின்வட மாவட்டங்களிலும் சேலம்தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரிப்பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது.தற்காலத்தில் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இடம்பெறும்இக்கூத்துக் கலை இன்றைய காலகட்டத்தில் அருகி 
வருகிறது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக