ஞாயிறு, 17 ஜனவரி, 2016

8 வது ஆண்டு சமுத்துவ பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வு 2016 -- மும்பை விழித்தெழு இயக்கம் மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக 8 வது ஆண்டு சமுத்துவ பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வு தாராவி குறுக்கு சாலை,
(தந்தை சிவராஜ் மைதானம் மற்றும் பெரியார் சதுக்கம் அருகில்) கொண்டாடப்பட்டது ..
பொங்கலிடுதல் நிகழ்ச்சியில் (ஊர் கூடி மகிழ்கிறோம்)
பல்வேறு மாநிலத்தை சேர்ந்த தமிழ் அல்லாத அமைப்பு தோழர்கள் ரமேஷ் ஜெயிச்வர், பாஸ்கர் ஷெட்டி, நந்தபள்ளி..
பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்த பிரமுகர்கள் திராவிடர் கழகம் பெ கணேசன், பகுத்தறிவாளர் கழகம் அ ரவிச்சந்திரன், தென் இந்திய ஆதி திராவிட மகா சன சபை கே வி அசோக் குமார், திருவள்ளுவர் நற்பணி இயக்கம் ந. இராதா கிருஷ்ணன்,டோம்பிவில்லி தமிழ் சங்கம் திருநாவுக்கரசு, விஜய் நற்பணி மன்றம் அழகு சுந்தரம், தமிழ் டிரைவர்கள் சங்கம் ரவிரஜினி, வழக்கறிஞர் பெ.முருகசீலன், சைமன், தேவந்திர குல வேளாளர் சங்கம் பூமிநாதன், உலக தமிழர் பேரமைப்பு நாடோடி தமிழன், அணுசக்தி நகர் தேவராஜன் மற்றும் பெரும் திரளான மக்கள் கலந்துக்கொண்டனர் ....
இந்த நிகழ்வை சிறப்பாக மும்பை விழித்தெழு இயக்க நிர்வாகிகள் மதன், பிரான்சிஸ், வேல்முருகன், கதிர், குட்டி, ரவி, மாதவன் , நித்தி, சுரேஷ் குமார்,பொன் தமிழ் செல்வன், கட்டவாராயண் ஒருங்கிணைத்தனர்.
என்ன ஒரு குறை அண்ணன் பன்னீர் செல்வம் இங்கே இல்லாதது... அவர் பெரியம்மா உடல்நிலை குறைப்பட்டால் தமிழகம் சென்றதால் ...

சிறீதர் தமிழன், தங்க பாண்டியன், ஈஸ்வரி தங்க பாண்டியன்
& பன்னீர் செல்வம்
முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள் மும்பை விழித்தெழு இயக்கம். / MVI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக