வியாழன், 5 செப்டம்பர், 2013

பட்டியல் இன மக்களுக்கென  வங்கி தொடங்கப்பட வேண்டும் -மும்பை விழித்தெழு இயக்கம்

நுண் அரசியல்
(தோழர், விவேக் கணேசன் இளந்தமிழரணி விழாவில்.. தமிழாநுண்ணரசியல் தனை செய் என்று தலைப்பில் பேசியதை பதிவு செய்கிறேன்..தோழர், விவேக் கணேசன் இளந்தமிழரணி விழாவில்.. தமிழாநுண்ணரசியல் தனை செய் என்று தலைப்பில் பேசியதை பதிவு செய்கிறேன்..
இந்த கட்டுரையே நாம் தமிழர்க்கு மட்டுமே என்று பார்க்க வேண்டாம்..ஒடுக்கப்படும் இனத்தற்கான செய்தியாக பார்க்கலாம் என கருதுகிறேன்.கட்டுரை 1
பட்டியல் இன மக்கள் இந்தியா  முழவதும் பரந்து வாழ்கிறார்கள்.
ஆதிக்கம் செய்யும்  வகுப்பால் சமூகத்தில் வாய்ப்புகளை பெற முடியமால்  புறக்கணிக்கப்படுகிறோம். நமது பழைமையான பாரம்பரியத்துக்கும், பெருமைக்குந்தகுந்த வாழ்கை வாழ  முடியாதவர்களாக இருக்கின்றோம் என்பது  பரிதாபத்துக்குரிய நிலையே
இன்றைய உலகில் பொருளின்றி  நலமுடன் வாழமுடியாது. ஊதியம் பெறும் உழைப்பே உயரும். தமிழ்நாட்டில் தலித்துகளின் (பட்டியல் இன மக்கள் ) பொருள் நிலையில் உயர்ந்து காணப்படவில்லை.தலித் மக்களில் செல்வங்களோடு இருப்பவர்கள் மிக மிகக் குறைவு.
சாதி மத வகுப்பு பிரிவினையற்ற சமுதாயம் உருவாகாத வரை பட்டியல் இனத்தின் வளர்ச்சி நடவடிக்கைக்களில் ஈடுபடுதல் மிகவும் முக்கியம் என்பதை நாம் அறிந்தே  இருக்கின்றோம்
 பெரிய ஆலைகள் எதுவும்  தலித்துகளிடம் இல்லை. சிறு மற்றும் குறுந்தொழில் வகையில் நமது பங்கு மிக மிக குறைவே. வணிகம், போக்குவரத்து, கட்டுமான துறை என்று எந்த துறைகளை எடுத்தாலும் நமது பங்கு குறைவே .
தலித் மக்களுக்கு வைப்பு நிதியமோ, கடன் வழங்கு நிதியமாக, ஒரு உலக தலித்  வங்கியோ மிக இன்றியமையாதது. இந்திய நாட்டுச் சட்டங்களின் படி   மையப் பெருவங்கி (R.B.I) யின் முன் அனுமதியுடன்தான் வங்கி தொடங்க இயலும், மூவகை வங்கிகளுக்கு உரிமம் கொடுப்பர். காசு இருந்தால் மட்டும் உயர் கல்வி என்ற சமூகச் சீரழிவு நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
பெருன்பான்மையான பட்டியல் இன மக்கள் உழவுத்தொழிலில் உள்ளதால். அனைவரும் இடஒதுக்கீட்டின் மூலம் பயன் பெற முடியாது மேலும் அனைவரும் தொழில்மயப்ப்டுத்துவதும் கடினம் எனும்ப்பட்சத்தில் நிலப்பகிர்வு நடந்த தீர வேண்டியது கட்டாயம். இழந்த (பறிகொடுத்த)  நிலமான பஞ்சமி நிலங்களை மீட்க புதிய கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இழந்த நிலங்களுக்கு பதிலாக அதே எண்ணிக்கையுள்ள நிலங்களை அரசு வழங்க வேண்டும். வருடத்திற்கு இரண்டு லட்சம் ஏக்கர் என்று கணக்கில் நிலமில்லாத தலித்களுக்கு வழங்க வேண்டும்.

தலித் மக்கள் அடிப்படைச் சமூகத் தேவைகளில் தன்னிறைவு பெற்றால் தான் பொருள் படைத்தோம் என்ற நிலை அடைவோம்.
அடிப்படை இடுபொருள்கள் துறை , பள்ளிக்கல்வி மற்றும் தொழில் நுட்பக்கல்வி துறை , அடிப்படைத்தகவல்செய்தி  துறை, வங்கிகள்,வைப்பகங்கள், நிதியங்கள், மருத்துவ துறைகளில் அதிகமான கவனம் செலுத்த வேண்டும் .
வசதி என்பது வேறு, வளர்ச்சி என்பது வேறு.” பட்டியல் இன மக்களின் வளர்ச்சிஎன்று இங்கே நாம் குறிப்பிடுவது .....கல்வி,வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றமே.
வசதி என்று பலர் கருதுவது ஒருவகையில் ஒப்பீடு சார்ந்த முடிவுதான்.மற்றப்படி வாழும் பகுதிகளில் வாழ்க்கைத்தரத்தோடு குறைந்தபட்ச அளவிலேனும் நின்றுபிடிப்பதற்குத் பட்டியல் இனமக்கள் படும்பாடு வாழ்கின்றவருக்குத்தான் தெரியும்.
பட்டியல் இன மக்களின் வணிக,தொழில் நலன்களைப் பேணவும், காக்கவும்,வளர்ந்தெடுக்க  நமக்கு நிதியமைவங்கி இருந்தல் அவசியம்.
கீழ்  தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் (2010 ஆம் ஆண்டு பெறப்பட்டது )  
commercial bank
வணிக வங்கி இந்திய குழுமச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட வேண்டும். 500-700 கோடி ரூபாய் முதலீடாகத் தேவை. பல பெரும் நிறுவனங்களும் உரிமம் பெற முயற்சி செய்து கொண்டுள்ளனர். மிகவும் முயன்று பெறலாம்.காலம் கனிய வேண்டும்.
local area bank
வட்டார வங்கி அடுத்தடுத்த மாவட்டங்கள் மூன்றில் தொடங்கலாம். முதலீடு 10-15 கோடி மற்ற மாநிலங்களிலோ அடுத்த நாடுகளிலோ கிளைத் தொடங்க முடியாது.
cooperative bank
கூட்டுறவு வங்கி முதலீடு 50 -75 லட்சம். பல வங்கிகள் ஊழலால்  நலிவு பெற்றமையால் மாநில அரசுகள் கூட இதற்கான அனுமதி தரத் தயங்குகின்றன.

Islamic Banking  (இஸ்லாமிய வங்கிமுறை)
 இஸ்லாமிய வங்கி முறை குறித்து கீற்றில் நூருல் ஆமீன் எழதியது..(keetru.com) 
மத்தியக் கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பெரும்பாலான அரபு நாடுகளில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வரும் இஸ்லாமிய வங்கிமுறை, இந்தியா மட்டுமின்றி வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார, விவசாயப் பிரச்சினைகளுக் குத் தீர்வாக இருக்கும் என்று பிரபல பொருளியல் வல்லுநர் இர்பான் ஷாகித் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரபல பொருளியல் வல்லுனர்களால் பொருளியல் தீர்வுக்கான சிறந்த மாற்று என ஒப்புக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய வங்கி முறை (Islamic Banking) என்பது வட்டியில்லா கடன் வழங்கும் வங்கி  முறையாகும். 
கடன் வாங்குபவரையும், கொடுப்பவரையும் கடனாளி, கடன்காரர் என்ற நிலையிலிருந்து முதலீட்டாளர்களாக மாற்றி இருவரின் பொருளாதார தேவைகளிலும் வங்கி தலையிட்டுத் தீர்க்கும் வங்கியல் முறை, பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த இஸ்லாமிய வங்கியல் குறித்த கருத்தரங்கில் பிரபல பொருளியல் வல்லுனர் இர்பான் ஷாகித் பேசும்போது, நமது நாட் டின் விவசாயிகளின் பிரச்சினை களைத் தீர்க்க இஸ்லாமிய வங்கி யியல் முறையே சரியான தீர்வாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2001 செப்டம்பர்11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள அரேபிய வணிகர்களின் நிதியாதாரங்கள், அல்காயிதாவுடன் தொடர்புபடுத்தப்பட்டு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து 600 பில்லியன் டாலர் மதிப்பிலான அவர்களின் முதலீடுகளை அமெரிக்கா தவிர்த்து ஏனைய ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
சேமிப்புகளுக்கும், முதலீடுகளுக்கும் வட்டி வசூலிப்பதை இஸ்லாம் தடை செய்திருப்பதால் தங்களது சேமிப்புகளும், முதலீடுகளும் பாதுகாப்பாக இருப்பதற்கு இஸ்லாமிய வங்கிகளே காரணம் என்று அரபு நாடுகளில் மட்டுமின்றி உலகெங்கும் சுமார் 75 நாடுகளில் 500க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ள இஸ்லாமிய வங்கிகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இஸ்லாமிய வங்கியியல் என்ற பெயரிருந்தாலும் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் பயன் பெறத்தக்க வங்கியியல் முறையே இஸ்லாமிய வங்கி முறையாகும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.
மாற்று வங்கியியல் (Alternative Banking), ஷரியா பைனான்ஸ் (Sharia Finance) என்றெல்லாம் அறியப்படும் இஸ்லாமிய வங்கியியல் முறையை உலகெங்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பின்பற்றி வருகின்றன.
சர்வதேச வங்கிகளான Standard Chartered, HSBC ஆகியவை தங்களின் பழைய வங்கியியல் நடைமுறையுடன் (Conventional Banking) இஸ்லாமிய வங்கியியல் முறைக்கு கடந்த ஐந்தண்டுகளுக்கு முன்பே மாறத் தொடங்கி விட்டன. 
உலகெங்குமுள்ள முதலீட்டாளர்களை ஈர்த்துள்ள இஸ்லாமிய வங்கியல் முறையை இந்தியாவில் கேரள அரசு சமீபத்தில் நடை முறைப்படுத்தியுள்ளது.  முன்னாள் மத்திய அமைச்சரும், ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருபவருமான சுப்ரமணிய சுவாமி இதற்கு எதிராகத் தொடர்ந்திருந்த வழக்கிற்கு எதிராக உச்ச நீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த பிப்ரவரி முதல் இஸ்லாமிய வங்கியியல் முறைக்கான ஆயத்த ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த இருவருடங்களாக உலகெங்கும் நிலவும் பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச வங்கிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்த போதும், இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 200% அதிகரித்தன் மூலம் தற்கால பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான சரியான மாற்றுத் தீர்வு இஸ்லாமிய வங்கியியல் முறையே என்ற கருத்து உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
- நூருல் ஆமீன் (keetru.com)

Reserve bank of India (RBI) மையப் பெருவங்கி யின் விதிகள் தளர்ந்து முதலீட்டு அளவு குறைக்கப்பட்டால் முழுச்சேவையுடைய வகை வங்கி அமைக்கலாம்.
அதுவரையிலும் பொதுவாகப் பொருள் வளர்ச்சியடைய சில இலக்குகள் நோக்கி பயணிப்போம்.
தற்போது நாம் சில மாநிலங்களை இணைத்து (தமிழ்நாடு ,மராட்டியம்) கூட்டுறவு சங்கத்தை உருவாக்கலாம் என பேசி வருகிறோம் இந்த எண்ணம் REPCO BANK யில் மேலராக முப்பது வருடம் பணிபுரிந்து தற்போது ஒய்வு பெற்றுள்ள திரு. பாலன் அவர்களை சந்தித்து பேசியபோது  நம்பிக்கை வந்தது. ஆகவே   Multi – state Co-operative society act, 2002 and the  Multi – state Co-operative societies rules,2002 கடைப்பிடித்து முன்னெடுக்க சில முயற்சிகளை தோழர்களுடன் (மும்பையில் நான், எமது அமைப்பு சாராத தோழர் பாஸ்கர்,தோழர் கஜேந்திரன், தமிழ்நாட்டில் தோழர் அமேரசன்..) ஆகியோருடன் இணைந்து  செய்து வருகிறோம்.
1.   பட்டியல் இன  மக்களின் கல்வி, தொழில் நுட்பம் அறிவு  வளரநமக்குத் தேவையான தாய் மொழிக்கல்வி, தொழில் நுட்ப ஆய்வுகள்,சட்டத்தை அறிந்து கொள்ளுதல், பணி நேர்க்காணலில் பங்கேற்பது, அதிகாரிகளை அனுக்கவது, ஆங்கிலம் மற்றும் பிற  உலக மொழிகளை மொழிப்பாடமாகக் கற்க மாவட்டங்கள் தோறும் பயற்சிக் கூடங்கள் அமைத்தல்.
2.   மாணவர்கள் /இளைஞர்கள் தேவையான நிலையில்  பள்ளி/கல்லூரி முடித்துத் தொழில்/பணி பயிற்சி  பெற உதவுதல். பன்னிரண்டு/பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் தொழில் படிப்புகள்- டிப்ளோமோ /பொறியியல் பட்டம் பெற உதவுதல்.
3.    தொழிற் பயிற்சி  பெறுவதற்கும், தொழிற்பயிற்சி திறனை மேம்படுத்தவும்  மாவட்டம் தோறும் பயற்சிக் கூடங்கள் அமைத்தல்.
4.   பட்டியல் இன மக்களின் பொருளாதார நிலை –நிலமற்றவர்கள்  ; கல்வி நிலை , இடஒதுக்கீடு பயன்பெற்றோர், பயன்பெறதவர்; தீண்டாமை/வன்கொடுமைகளுக்கு உள்ளன பகுதி;  போன்றவர்களை குறித்து ஒரு வழுவான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வுகளை தொடங்குதல்.
தலித்துகளுக்கு தலித்துகளே உதவி.....
நமக்கு நாமே உதவி..
சிந்திப்போம்.....செயல்படுவோம்!!
 கட்டுரை 2

ஒடுக்கப்படும் மக்களுக்கான நுண் அரசியல்

தோழர், விவேக் கணேசன் இளந்தமிழரணி விழாவில்.. தமிழா! நுண்ணரசியல் தனை செய் என்று தலைப்பில் பேசியதை பதிவு செய்கிறேன்..
இந்த கட்டுரையே நாம் தமிழர்க்கு மட்டுமே என்று பார்க்க வேண்டாம்..ஒடுக்கப்படும் இனத்தற்கான செய்தியாக பார்க்கலாம் என கருதுகிறேன்.
அவர் பேசியது.
தமிழர்கள் அரசியல் அனாதைகளாக உள்ளனர். இதைப் பற்றி இளந்தமிழரணி விழாவில் நான் பேச நினைத்தபோது, ஐயோ அரசியலாப் பேசப்போகிறீர்கள் என்றார்கள். பலபேர் சமூகப் பணிகளிலும் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு தொண்டாற்றி உள்ளார்கள். வெற்றி அடைந்துள்ளார்கள். அதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் தமிழர்கள் இந்த நிலையில் இருப்பதற்கு மூல காரணம், நாம் அரசியலில் ஈடுபடாததுதான். ஏன் அநாதை என்று சொல்கிறேன்? அநாதை என்றால் அப்பா அம்மா இல்லாமல் இருப்பதில்லை, அரசியலில் அனாதையாக இருக்கிறோம். காரணம் நாம் சரிவர அரசியலில் ஈடுபடாதுதான். பெரும்பாலும் மக்களிடம் அரசியல் பற்றிக் கேட்டீர்கள் என்றால் ஒரு வெறுப்பு, அய்யோ அரசியலா அரசியல்வாதியா என்று ஒதுங்குவார்கள். அரசியல்வாதி என்றால் கரை வேட்டி கட்டி, புனை பெயர் வைத்து இந்தமாதிரி இருப்பதுதான் அரசியல்.  சில அலுவலங்களில் கூட, ஐயோ இங்கு ஒரே அரசியல் என்பார்கள். இப்படி அரசியல் என்றாலே ஒரு கெட்டதாகவும் அவப் பெயரும்தான் இருக்கிறது.
படித்தவர்கள் அரசியலில் ஈடுபடாததற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் அரசியல் ஒரு சாக்கடைப்பா அதில் இறங்க எங்களுக்கு விருப்பமில்லை.என்பார்கள். ஏன் இப்படி? தமிழர்கள் போராடத் தயங்கியவர்களே கிடையாது. போராட்டத்தில் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள். தலித் மக்கள் உரிமைப் போராட்டத்தில் இப்போது தீவிரமாக இருக்கிறார்கள். மாயாவதி உத்திரப் பிரதேசத்தில் முதல்வராக இருக்கிறார். தலித்தின் முன்னோடிப் போராளியாக இருந்தவர் ஒரு தமிழர். அயோத்தி தாசர். அவரின் எழுத்துக்களை எண்ணங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததை அம்பேத்கார் படித்தார். அதனால் மிகவும் மனமாற்றம் அடைந்து புத்த மதத்தைத் தழுவினார். போராட்டங்களில் எப்போதுமே தமிழர்கள் ஈடுபட்டு உள்ளார்கள். இருந்தாலும் இன்று நாம் அரசியல் அனாதைகளாக நிற்கிறோம். ஏன்? அரசியலோடு நம் அணுகுமுறை சரியில்லை, அரசியல் என்றால் என்ன என்ற நமது கருத்துக் கணிப்பு சரியில்லை. Politics என்ற வார்த்தை கிரேக்கர்களால் உருவாக்கப்பட்டது. Polis என்றால் நகரம். அந்தக் காலத்தில் நகரங்களில் இருந்து உருவாக்கப்பட்ட- பகுதிகள் நாடாக மாறின, பிறகு நேஷனலிசம் வந்தது. ஆனால் polis  இதிலிருந்து வந்ததுதான் Politics. பொலிசில் இருந்து வளர்ந்ததுதான் Policy. அரசியலின் முழுமையான நோக்கம், ஒரு நாட்டை உருவாக்குவது எப்படி? அதைப் பாதுகாப்பது எப்படி? இதுதான். இதுதான் உண்மையான அரசியல். இந்த அரசியல் தமிழகத்தில் கிடையாது, இந்திய அளவிலும் கிடையாது. தமிழகத்தில் இப்போது சாதி அரசியல் மத அரசியல், குடும்ப அரசியல் இதுதான் இருக்கிறது. திடீரென்று மொழியைப் பற்றிப் பேசுவார்கள், ஆனால் அதன் உள்பக்கம் பார்த்தால் சாதி அரசியல்தான் இருக்கும். இதை மாற்றுவது எப்படி? இதை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் அரசியலின் மூலத்திற்குப் போக வேண்டும்.
Description: http://siragu.com/wp-content/uploads/2012/02/on-war.jpgஅரசியல் என்ற தமிழ் வார்த்தையை விட Politics என்ற ஆங்கில வார்த்தையைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன். Root of politics is policy. Policy formation தான் அரசியல். அதுதான் உண்மையான அரசியல். மேலை நாடுகளில் அரசியல்வாதியாக ஒருவர் வருகிறார் என்றால், அவர் முதலில் முன்வைப்பது Policy. இப்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் என்ன கேட்கிறார்கள், உங்கள் கொள்கை  என்ன? உங்களின் பொருளாதார, மக்களாட்சி கொள்கை என்ன என்றுதான் கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியிடமாவது கேட்டிருக்கிறார்களா? தேர்தல் அறிக்கை போடுவார்கள், திட்டங்கள் போடுவார்கள் அது வேறு. Policy என்பது வேறு. இதைத் தெரிந்துகொண்டாலே அரசியலில் நாம் முன்னேறலாம். போர் இயலின் வல்லுநர், போர் என்றால் என்ன என்ற புத்தகத்தை எழுதியவர், 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் பிறந்த Vom Kriege… “On war” என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதில் முதல் வாக்கியமே போர் என்பது அரசியலின் தொடர்ச்சிஎன்றுதான் இருக்கிறது. நீங்கள் போரில் வெல்ல வேண்டும் என்றால் அரசியலைக் கற்றுக்கொள்ள வேண்டும். அரசியலில் ஈடுபட வேண்டும். அரசியலில் நீங்கள் வென்றால்தான் போரில் வெல்ல முடியும். Tactical, Operational, Strategic, Policy இந்த நான்கு வகைகளை வகுத்தது அவர்தான். அவர் வகுத்ததைத் தான் மேலை நாடுகளில் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். ஒரு போரில் நேரிடையாக போராடுபவன் Tactical அளவில் போராடுகிறான். அவனுக்கு ஆதரவு தந்து பண பலம், ஆயுத பலம் கொடுப்பவன் Operational  .அளவில் இருக்கிறான். அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து தொடர்பை ஏற்படுத்துபவன் Strategic அளவில் இருக்கிறான். Policy யார் செய்கிறார்கள்? போராடுபவன் பாலிசியை செய்வதில்லை. மேலை நாடுகளில் பாலிசி செய்வது அரசியல்வாதிகள்தான். Diplomats, Politicians அவர்கள் தான் கொள்கைகளை வரையறுகிரார்கள்
அமெரிக்கா எப்படி பனிப்போரில் போரில் வென்றது? Policy of containment என்ற கொள்கையை  உருவாக்கியது ஒரு மேதை. அதை வைத்துதான் போர் நடத்தினார்கள். சோவியத் யூனியனோடு நேரடியாக போரில் ஈடுபடக்கூடாது, நிழற்போர் செய்யவேண்டும். நேரடியாக போரிட்டால் அமெரிக்காவிற்கு நிறைய இழப்பு ஏற்படும், ஆகையால் நிழற்போர் செய்து அவர்களை முடக்குவோம். அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து, பலவீனப்படுத்தி ஒரு மலைப்பாம்பு இரையை கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கி அதன் பிறகு கொல்லும். இப்படித்தான் அமெரிக்கா சோவியத் யூனியனை வென்றது. இதை தான் Policy of Containment என்பார்கள். இந்த பாலிசிதான் அரசியல். போராடுவது அவசியம். சிலபேர் போராடுவது தேவையில்லை என்றார்கள். அந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். போராட்டம் அவசியம். போராட்டம் வெறும் tacticalதான். போராட்டத்துக்கு மேலே Operational நிலைக்கு வரவேண்டும். அதற்கு மேல் Strategic வரவேண்டும். அதற்கும் மேலே Policy நிலை. அந்த பாலிசியை யார் செய்வது? நாம்தான் செய்ய வேண்டும். படித்தவர்கள் ஒருங்கிணைந்து நமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும். அதை ஒன்றாக சேர்த்து ஒரு கொள்கையை  உருவாக்க வேண்டும். அமெரிக்காவில் கொள்கையை உருவாக்குவது அரசாங்கம் கிடையாது. அதிபர் ஒபாமா நல்வாழ்வு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். அதை ஒபாமா உருவாக்கவில்லை, இவரின் சனநாயகக் கட்சி உருவாக்கவில்லை. அந்தக் கட்சியில் இருக்கும் யாருமே கிடையாது. இந்த சட்டம் இப்படி இருக்க வேண்டும் என்று உருவாக்கியது ஒரு Think Tank. பதினைந்து வருடங்களுக்கு முன் உருவாக்கியது. 15 வருடங்களாக பல்வேறு நிபுணர்களின் முன்வைத்து அவர்களின் கருத்துகளை உள்வாங்கி விவாதித்து அதில் திருத்தங்கள் செய்து இப்போது நிறைவேற்றி இருக்கிறார்கள்.
இந்த வேலைகளை செய்தவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. அரசுக்கு வெளியே கருத்தகம், ஆராய்ச்சி அளவில் நடந்தது  அதைச் செய்தவர்கள் நிபுணர்கள், அறிஞர்கள். சமூக ஆர்வமுடையவர்கள் இணைந்து செய்தது. இதுதான் அயல் நாட்டு கொள்கையிலும் நடக்கும். நாம் அரசியலில் ஈடுபடவேண்டும் என்றால், போராட்டம் ஒரு பக்கம்- நான் கட்சி அரசியலில் சேர விரும்பவில்லை. போராட விரும்பவில்லை என்று நீங்கள் கூறினாலும் உங்களுக்கு இந்த பாலிசி உருவாக்குவதில் பங்கு இருக்கிறது. ஏதாவது ஒரு துறையில் நீங்கள் நிபுணராக இருப்பீர்கள், அந்தத் துறையில் இருக்கின்ற தகவல்களை எடுத்து ஒரு திட்ட வரைவாக அரசாங்கத்தின் முன் வைக்க வேண்டும். இதை நீங்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டே வந்தீர்கள் என்றால் ஒரு காலகட்டத்தில் அது ஏற்றுக்கொள்ளப்படும். மேலை நாடுகளில் ஒரு முக்கியமான அமைப்பு இருக்கிறது. எந்த ஒரு வரைவும் உடனே சட்டமாக மாறாது. ஒரு வரைவும் சட்டமாக மாறுவதற்கு முக்கிய காரணம் lobby.
Description: http://siragu.com/wp-content/uploads/2012/02/k-street-sign.jpg

வாஷிங்டனில் கே தெரு என்று ஒன்று இருக்கிறது. வால் தெருவைப் போல புகழ் பெற்ற இடம். அங்கு முழுக்க முழுக்க லாபி குழுக்கள்தான் இருக்கும். ஒரு பொருளாதார நிபுணர் என்னிடம் சொன்னார்- அமெரிக்காவை வழிநடத்துவது இரண்டு தெருக்கள், ஒன்று வால் தெரு  இன்னொன்று கே தெரு  என்று. அப்போது நான் கே தெரு என்றால் என்ன என்று அவரிடம் கேட்டேன்- அவர் சொன்னார்- பணம் வருவது வால் தெருவில், ஆட்சி நடப்பது கே தெருவில் என்று. இன்று தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒரு lobby குழு இருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சிக்கும் பெருமிதத்துக்கும் உரிய செய்தி. இதே குழுமம் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்திருந்தால் இன்று ஈழப் போராட்டம் வேறுவிதமாய் போயிருக்கும். இதை நான் ஆழமாக நம்புகிறேன். இதை ஏன் நான் ஆழமாக நம்புகிறேன் என்றால் அயர்லாந்து போராளிகள் 70,80 ஆண்டுகளாக போராடினார்கள். தமிழ்ப் போராளிகளுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்- நாம் போராட்டக் குழு அமைத்த பிறகு அரசியல் அமைப்பை உருவாக்கினோம். அவர்கள் முதலில் அரசியல் அமைப்பை ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகுதான் போராட்டத்தில் இறங்கினார்கள். அதனால்தான் அவர்கள் வெற்றி அடைந்தார்கள். தமிழர்களின் தோல்விக்குக் காரணம்- நான் ஈழத் தமிழர்களை மட்டும் சொல்லவில்லை- கூடங்குளம், முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சினைகளுக்கும் மூல காரணம்- கருத்தகம், திட்ட வரைவு இதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பது இல்லை. இப்போது இருக்கும் தமிழர்களுக்கான வரைவுக் குழு பத்து வருடங்களுக்கு முன்பு தோன்றியிருந்தால், அமெரிக்காவில் மட்டுமல்ல உலக அளவில் தமிழர்களின் பிரச்சினைகளை வேறுவிதமாகப் பார்ப்பார்கள். இப்போதாவது இருக்கிறதே என்று நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். இந்த குழுவை தமிழர்கள் அனைவரும் ஆதரிக்கவேண்டும்.
அரசியலை நீங்கள் புறக்கணிக்காதீர்கள். போராட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை என்றால், கருத்தாக்கம், வரைவுக் குழு இதில் ஏதாவது ஒன்றில் இணைந்து அதைக் கோர்வையாக சேர்த்து ஊடகங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஊடங்களின் தொடர்பு என்பது மிக முக்கியம். ஊடகத் தொடர்பை நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். ஒரு பிரச்சினை என்றால் ஒரு ஊடகத்துக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். இதுவும் அரசியல்தான், ஆனால் கட்சி அரசியல் கிடையாது. சமூகத்தை, நாட்டை நிலைநிறுத்தத்தான் அரசியல். பல்வேறு கோணங்கள் மற்றும் வடிவங்களில் நாம் அரசியல் செய்ய முடியும்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக