சனி, 28 செப்டம்பர், 2013

காங்கிரசும் வேண்டாம், பிஜேபியும் வேண்டாம் .. எமது ஆதரவு 49' Oக்கு மட்டுமே ..


காங்கிரசும் வேண்டாம், பிஜேபியும் வேண்டாம் ..
எமது ஆதரவு 49' O மட்டுமே ..

( ஒரு முறை உங்கl வாக்குகளை இந்த 49' O க்கு போடலாமே ..)
===========================================
NO CONGRESS and NO BJP.

VOTE FOR REJECTION UNDER RULE - 49 O
The Supreme Court has ordered installation of a separate button for 49o to enable voters to exercise their right to reject all candidates on a secret manner without fear.

#இந்துத்துவம் ஒருபொழுதும் இந்தியத்தினை விட்டுக்கொடுக்காது #
காங்கிரசை போலவே பிஜேபியையும் புறக்கணிப்போம்.
======================================
குறிப்பாக தமிழகத்தின் வாழ்வாதார-அரசியல் உரிமைப் பிரச்சனைகளில் பாஜகவின் நிலைப்பாடு என்பது காங்கிரஸின் நிலையையே பிரதிபலித்தது.

/மூன்று தமிழர் தூக்கு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை, காவேரி தண்ணீர் பகிர்மானம், ஒகேனக்கல் குடிநீர் திட்டம், கூடங்குளம் அணு உலைப் பிரச்சனை, மீனவர் படுகொலை, கெயில் குழாய்ப் பிரச்சனை என தமிழக மக்கள் போராடும் அடிப்படைப் பிரச்சனைகளில் நரேந்திர மோடியோ, பாஜகவின் தலைமையோ தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வரவில்லை.மாறாக காங்கிரஸ் அரசின் தமிழர் விரோத நிலைப்பாட்டினையே எடுத்தது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த பாஜக ஆட்சிக் காலத்தில்தான் வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் #தமிழகமீனவர்கள் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.
இந்த வகையில் பார்த்தோமானால், தமிழகத்தில் மையப்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் வாழ்வுரிமை கோரிக்கை போராட்டங்கள் பெருமளவு இவர்களால் பின்னடைவினை சந்திக்கும்./நமது தோழமை அமைப்பான மே பதினேழ அமைப்பின் அறிக்கையும் இதை சுட்டிக்காட்டுக்கிறது.
============================================= வளர்ச்சி என்கிற முழக்கத்தின் காரணமாக நிகழும் மனித உரிமை மீறல்களையும், இனக்கொலைகளையும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட முடியாது...

சரி பிஜேபி சொல்கிற வளர்ச்சியை என்ன வென்று பாப்போம்...
தகவல் : Mohammad ali

மாநில மொத்த உற்பத்தி (SGDP)
அளவில் குஜராத் 8-வது இடத்தில் இருக்கிறது.
• வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோர் எண்ணிக்கையில் 18-வது இடத்தில் (அதாவது வறுமை ஒழிப்பில்) உள்ளது குஜராத். பின்தங்கிய ஒடிசா, குஜராத்தை விட பல படி மேலே உள்ளது.
• பெண் சிசுக்கொலை இன்னும் தொடர்கிறது. ஆண்-பெண் விகிதம் 1000-க்கு 918 என்ற அளவில் 18-வது இடத்தில் உள்ளது.
• 44% பேர் மட்டுமே காங்கிரீட் கூரையில் வாழ்கின்றனர். பிறர் மோசமான நிலையில் வாழ்கின்றனர்.
• கல்வியில் மிகப் பின்தங்கிய நிலையில் 15-வது இடத்தில் உள்ளது குஜராத்.
• தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்குவதில் 7-வது இடத்தில் உள்ளது. அதாவது 100 நாட்களுக்கு பதில் 34 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
• குழந்தை மரணத்தைத் தடுப்பதில் 18-வது இடத்திலும், மகப்பேறு கால மரணத்தைத் தடுப்பதில் 5-வது இடத்திலும் இருக்கிறது குஜராத்.
• 50% குழந்தைகள் சத்தான உணவு இன்றியும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 65% பேர் சத்துணவு இன்றியும் வாழ்கின்றனர்.
• பெண்களில் பாதி பேர் ரத்த சோகை கொண்டவர்கள். இது பற்றி கேட்டபோது, குஜராத் பெண்கள் அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறை காட்டி உணவைக் குறைத்து சாப்பிடுவதால் தான் பிரச்சினை என்று மோசடி வாதத்தை முன்வைத்தார் மோடி.
• மோடியின் ஆட்சிக் காலத்தில் வேலை வாய்ப்பு உருவாக்குவது முற்றிலும் நின்று போய் விட்டது.
• தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 4-ல் 3 பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே இதற்கு சான்று.
• சிறுபான்மையினர் குறிப்பாக இசுலாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகின்றனர். வாழ்க்கை நிலையில் பீகார் முசுலீமை விட கீழ் நிலையிலேயே உள்ளனர்.
• கிராமங்களில் 16% பேருக்கு தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தியாவின் 3-வது மிகப்பெரிய கடனாளி மாநிலமும் குஜராத்-தான்.

• சுற்றுச்சூழல் மாசு அதிகம் உள்ள 88 இந்திய நகரங்களில் 8 குஜராத்தில் உள்ளன.
=============================================
நரேந்திர மோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்
----------------------------------------

இந்தியாவின் உள்ளேயும், அண்டைப்புற நாடுகளிலும் நடைபெறும் தேசிய இன மக்கள் போராட்டங்களில் இந்தியா தலையிடும். காங்கிரஸின் அதே மக்கள் விரோதக் கொள்கை முறைகளே இலங்கை, பர்மா, நேபாளம் போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும். அதாவது தமிழீழத்தின் மீதான விரோதத்தினை இந்தியம் எந்தவகையிலும் குறைத்துக் கொள்ளப்போவதில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பெரும்பாலும் அதிகார வர்க்கத்தினால் முடிவெடுத்துச் செயல்படுத்தப்படும் பொழுது, இதை ஒரு பொழுதும் கேள்வி எழுப்பாத இந்திய-பார்ப்பனிய-இந்துத்துவம் தமிழினத்தின் மீதான விரோதத்தினை குறைத்துக் கொள்ளும் என நம்பமுடியாது.

தொடர்ச்சியாக பாஜக தலைவர்கள் வெளியிட்ட தமிழீழ எதிர்ப்பு அறிக்கைகள், நிலைப்பாடுகள், இலங்கை அரசுடன் மேற்கொள்ளும் நட்பு நடவடிக்கைகள் என்பது தமிழ்ச் சமூகத்தின் கவலைகளில் முக்கியமானது. சுப்ரமணிய சாமி போன்ற மூன்றாம்தர கொலைகாரக் குற்றவாளிகளை தன்னகத்தே, எந்த விமர்சனமின்றி இணைத்துக் கொள்ளும் ஒரு கட்சியும், அதன் தலைமையும் எந்தவிதத்திலும் நேர்மையான கட்சி கிடையாது.

பாஜகவின் மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸின் இலங்கை மீதான கொள்கையே தமது கட்சியின் கொள்கை என அறிவித்திருக்கிறார். பாஜகவின் தலைவர் லால்கிருஷ்ண அத்வானி சிங்கள மக்களுடனான தமது ஆரிய உறவின் பாசத்தினை வெளிப்படுத்துகிறார். இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தேவையில்லை எனவும், அதை தாம் ஏற்கப் போவதில்லை எனவும் பாஜகவின் ரவிசங்கர்பிரசாத் அறிவிக்கிறார். இதே போல பாராளுமன்றத்தில் இலங்கையில் நிகழ்ந்த படுகொலைகளைப் பற்றி 2011இல் பாஜக கேள்வி எழுப்பினாலும், அது ஒருபோதும் இலங்கை மீதான கொள்கை மாற்றத்தினைக் கோரவில்லை. மாறாக, தமிழீழப் பிரச்சனையைக் கொண்டு காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்கிற அரசியல் தந்திரமே காண முடிகிறது. சுஷ்மா சுவராஜ்ஜின் ’சாஞ்சி’ தொகுதிக்கு ’அன்புடன்’ அழைக்கப்பட்ட்ட ராஜபக்சேவினையும் அவருக்கு அளிக்கப்பட்ட மத்தியப் பிரதேச அரசின் மரியாதையையும் தமிழர்கள் ஒருமோதும் மறக்க மாட்டார்கள். இலங்கைக்கு அனுப்பப்பட்ட பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவானது தமிழர்களின் அரசியல் கோரிக்கையைப் பற்றியோ, அவர்கள் சந்திக்கும் இன அழிப்பினைப் பற்றியோ வாய்திறக்கவில்லை.

ஓர் இனப்படுகொலையை சந்தித்த சமூகம், காங்கிரஸின் வெளியுறவுக் கொள்கையை முன்மொழியும் எந்த ஒரு தேசிய, மாநில கட்சிகளை எந்தக் காலத்திலும் தேர்ந்தெடுக்காது என்பதை இந்திய துணைக்கண்டத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் இந்துத்துவத்தினை வரலாறு முழுவதும் எதிர்த்த ஓர் இனம், தனது நலன்களை விட்டுக்கொடுத்து போராட்டத்திலிருந்து பின்வாங்காது என்பதை இந்தியப் பேரரசு புரிந்துகொள்வது அவசியமாகிறது. சிங்கள பெளத்த பேரினவாதமும், பர்மிய பெளத்த பேரினவாதமும் இந்தியாவின் பார்ப்பன இந்துத்துவத்துடன் இணைந்து சிறுபான்மை-தேசிய இன எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாம் கவனிக்கத் தவறவில்லை. இந்த கூட்டமைவு தெற்காசிய பிராந்தியத்தின் அப்பாவி உழைக்கும் மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

இந்தியாவில் தேசிய இனச்சிக்கல் கூர்மையடையும் இந்தக் காலத்தில், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டுமென்கிற அரசியல் நெருக்கடி உண்டான இந்த நேரத்தில், இந்திய தேசியத்தினை ஒற்றை ஆற்றலாக காட்டவும், ஒன்றிணைக்கவும், தேசம் தழுவிய ஒற்றைத் தலைவர்கள் பிரச்சாரத்திற்காக தேவைப்படுகிறார்கள். அதாவது ஒரே தேசம், ஒரே இனம், ஒரே ஒரு வலிமையான கட்சி என்பதன் மூலமாக இந்திய துணைக்கண்டத்தின் பன்மைத் தன்மையை உடைப்பது இந்துத்துவ பார்ப்பனிய ஆற்றல்களுக்கு அவசியமாகிறது. இதன் மூலம் மாநிலக் கட்சிகளின் அதிகாரங்களும், மாநில அரசுகளின் அதிகாரங்களும் குறைக்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் நடைமுறையில் சாத்தியப்படுத்தப்படும். மாநிலக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி அம்மாநில அல்லது தேசிய இனமக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு தேசிய நலன் என்கிற நோக்கத்தில் பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்திய தேசிய முதலாளிகளுக்கும் ஒட்டுமொத்தமாக தேசிய இனமக்களின் சொத்துக்கள் விற்கப்படும். எனவே இந்த ஒற்றைத்தலைமை - ’ராகுல்’, ’மோடி’ - கோரிக்கையானது தேசிய இனங்களின் நலன்களை பின்னுக்குத் தள்ளும் முயற்சியே. வலிமையான ஓர் இந்தியத் தலைவர் என்பது இந்தியாவின் பல்தேசிய இனங்களுக்கு ஆபத்தானதே.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக