தமிழர்களை ஏமாற்ற
நினைக்கும் இந்தியா
எல்லாத்
தேர்தல்களிலும் காலங்காலமாக நடக்கும் இந்த அரசியல் விரச நாடகத்தை இந்த முறை பன்னாட்டு அளவில் பிரம்மாண்டமாக அரங்கேற்ற இந்திய
அரசு எடுத்து வைத்துள்ள முதல்
படிதான் ‘இலங்கைத் தமிழர்
பிரச்சினை குறித்தான நாடாளமன்றத்தில் விவாதம்.
இந்த ஒரே ஒரு நகர்த்தல் மூலம் இந்திய காங்கிரஸ் அரசு சாய்க்கத்
திட்டமிட்டிருக்கும் செயல்கள் பல!
- தமிழர்களிடம் வாக்குக் கேட்டு வருவதற்குத் தற்காலிகமாகவாவது ஒரு தகுதியைப் ஏற்படுத்திக் கொள்வது.
- உதவாத ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதன் மூலம் தன் நட்பு நாடான இலங்கையையும் தன்னையும் பன்னாட்டு அரசியல் அழுத்தத்திலிருந்து தற்காலிகமாகவாவது தற்காத்துக் கொள்வது.
- ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பன்னாட்டுக் குரல்களைக் கொஞ்ச காலத்துக்கு, குறைந்தது நாடாளுமன்றத் தேர்தல் வரைக்குமாவது முடக்கி வைப்பது.
புதுடெல்லி, மார்ச். 8-,2013
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாக இருந்தது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது. பாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சினைபற்றி நேற்று விவாதம் நடந்தது.
விவாதத்தில் பாரதீய ஜனதா மூத்த தலைவரும், வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரியுமான யஷ்வந்த் சின்கா பேசும்போது கூறியதாவது:-
இலங்கை தமிழர்களின் துயரம் என்பது நமது காலக்கட்டத்தில் நடந்துள்ள மிக மோசமான நிகழ்வு ஆகும். இலங்கையில் ராணுவ பதுங்குகுழி ஒன்றில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக்கொண்டிருந்த காட்சியும், அதன்பிறகு சிறிது நேரத்தில் அவன் சுட்டு படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சியும் அனைவரையும் உறைய வைக்கும். இலங்கையில் எப்படியான படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அந்த ஒரே படம் சொல்லும். அங்கு வன்கொடுமை, மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, போர்க்குற்றங்களும் அரங்கேறின. இதை யாரும் மறுக்க முடியாது.
இந்தியாவில் பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்ற வேளையில், 2009-ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்தகைய தாக்குதல் இலங்கை அரசின் கொள்கையாகி விட்டது. 'தேவைப்பட்டபோது இந்தியா செயல்பட தவறி விட்டது. எத்தனையோ உயிர்களை இந்தியா காப்பாற்றி இருக்க முடியும்' என்று ஐ.நா. மனித உரிமைகள் குழு கூறியுள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது, மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இந்திய அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. இலங்கைத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின்மீது இந்தியா வெறுமனே ஓட்டு போடுவதோடு நின்றுவிடக்கூடாது. அந்த தீர்மானத்தை வரைவதில், முன்னெடுத்துச்செல்வதில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். இதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசியதாவது:-
இலங்கை தமிழர் பிரச்சினையில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள் (மத்திய அரசு) எதிர்ப்பு தெரிவித்தீர்களா?
'மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும்' என்று ஜவகர்லால் நேரு கூறி இருக்கிறார். இந்த கொள்கையை மத்திய அரசு பின்பற்றத் தவறியதின் விளைவுதான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்த கதி நேர்ந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் குழப்பம் இருக்கிறது. இதை தெளிவுபடுத்துங்கள்.
(காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை முலாயம்சிங் பார்த்து) சோனியாஜி, நீங்கள் ஏன் மவுனம் காக்கிறீர்கள்? உங்களிடம் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக எடுத்த நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்கு பின்னால் அமர்ந்திருக்கிற பிரதமரையும், வெளியுறவுத்துறை மந்திரியும் கேளுங்கள். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவுதேவைதான். அதற்காக நமது சொந்த மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உரித்தான விஷயங்களை நாம் எடுத்துச்சொல்லக்கூடாது என்பதல்ல.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுக்கத்தா ராய் கூறியதாவது:-
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலை உயர்வு போன்றவற்றில் அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே நாங்கள் அரசில் இருந்து விலகினோம். நீங்கள் ஏன் (பதவியில்) ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? இலங்கை தமிழர் விவகாரத்தில் உண்மையிலேயே காங்கிரசுடன் தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும்.
லாலு பிரசாத்-பகுஜன்சமாஜ்
ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் பேசும்போது, 'இலங்கை தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தாராசிங் பேசும்போது, 'இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இந்த பிரச்சினையை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு, தலையிட வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

இதுவே சரியான தருணம், ஈழத்தில் நடந்தது ஒரு இனப் படுகொலை மற்றும் பொது சன வாக்கெடுப்பு கோரிக்கைகளை நமது பிரச்சாரத்தை முன்னெடுத்து தீர்மானமாக கொண்ட வர மற்ற மாநில தலைவர்களின் இந்த பேச்சால் கொண்டு வரலாம் .....மற்ற மாநில மக்களிடம் , தலைவர்களிடம் பிரச்சராத்தை முன்னெடுப்பும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக