புதன், 20 பிப்ரவரி, 2013

மாவீரன் பிரபாகரனின் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட படுக்கொலை.

இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சிங்கள ராணுவம் எத்தகைய கொடூரங்களை புரிந்துள்ளது என்பதற்கான சாட்சி மாவீரன் பிரபாகரனின் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன்  மீது நடத்தப்பட்ட  திட்டமிட்ட படுக்கொலை.
 (சர்வதேசத்திற்கு இலங்கையே விசாரிக்க எத்தனை சாட்சியுங்கள் வேண்டும்..! )

பல ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் இதைப்போல படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தப்படம் சாட்சியாக விளங்குகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணைய சர்வதேச அளவில் விசாரணை குழுவை அமைத்து முழுமையாக விசாரித்தால் ஒழிய உண்மைகள் வெளிவராது என தெரிவிக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீத பிள்ளையின் கோரிக்கையை,இந்த மாதம் 25 ஆம் தேதி தொடக்கி மார்ச் மாதம் 22 நடக்க இருக்கிற ஐ.நா மனித உரிமை ஆணையம் ஆதரிக்க வேண்டும் .

இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழ பகுதிகளில் சுதத்திரமான பொதுக் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை நமது கோரிக்கை.

#பொதுமக்களை காக்கும் சர்வதேச விதிமுறைகளை இலங்கைக்காக உடைத்தெறிந்த அதிகாரிகளை கொண்ட ஐ.நா சபை இதை செய்யுமா ?? #


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக