செவ்வாய், 28 ஏப்ரல், 2009

மும்பையிலும் பரவிய விடுதலை பொறி

சிங்கள ராணுவம் தமிழர்களை கொன்று குவித்து வருவதை கண்டித்து உலநாடுகள் அனைத்து அறிக்கைவிட்ட நிலையில் காங்கிரஸ் தலைமையினாலான அரசு சிங்கள கொடுங்கோலன் ராஜபக்சேவிற்கு பாராட்டு பத்திரம் அளித்து வருகிறது. ராஜே பக்சேவும் போரளிகளை இதோ ஒழித்துவிட்டேன், இன்னும் கொஞ்சம் தான் என்று ஆருடம் பார்த்து பார்த்து சொல்லிகொண்டு இருக்க, போராளிகள் தங்களில் எல்லைகளை மிகவும் பெரிய அளவில் விரிவடைந்து விட்டார்கள். ஆம் இன்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்களை போரளிகளாக போராட்டங்களின் மூலம் ராஜபக்சேவிற்கு சிம்ம சொப்பனமாக ஆரம்பித்து விட்டார்கள்.

மக்களை பிடித்துவைத்து போட்டோ எடுத்து புலிகள் பார் என்று புரளிவிடுகின்றனர். இவர்களின் புரளிகள் இன்றா நேற்றா காலங்காலமாக விடும் புரளிக்கதைகளையும் சீராக சிறப்பாக இந்திய மீடியாக்கள் எடுத்து சொல்லிவருகின்றன. ஆனால் அத்தனையும் மீறி போராளிகள் தான் தமிழர்கள் தமிழர்கள் தான் போராளிகள் என்ற உண்மை உலகெங்கும் தெரிய வருகிறது. உலகமெங்கும் போராட்டம் உண்ணாவிரதம் போன்றவை நடந்து வருகிறது

மராட்டிய மாநிலம் மும்பையில், தாராவிப் பகுதியில் சனிக்கிழமை சிங்கள கொடும்பாவி மகிந்தா ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பு போராட்டமும் இந்திய அரசின் கண்மூடித்தனத்தை கண்டித்தும் மும்பை தாராவியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தை மும்பையில் தமிழ் இளைஞர்களால் தொடங்கப் பட்டிருக்கும்

விழித்தெழு இளைஞர் இயக்கம்

இதற்கான ஏற்பாடுகளை செய்தது. இந்த போராட்டத்தில் தாராவியில் உள்ள பல தமிழர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது

தமிழ் வாழ்க!

சிங்கள அரசு ஒழிக!

கொலைகார ராஜபக்சே தமிழர்களை கொல்வதை நிறுத்து!

என்று கோசங்கள் எழுப்ப பட்டது.


முடிவில் ராஜபசேவின் படத்திற்கு செறுப்பு மாலை அணிவித்து விளக்குமாறறால் சாத்தினர். அதன் பின்பு கொடுங்கோலன் ராஜபக்சேவின் படம் எரிக்கபட்டது.


மும்பை தாராவி பகுதியில் கூட்டம் நிறைந்த அரசியல் கட்சிகள் ஊர்வலம் வரும் வேளையில் இந்த நிகழ்வு நடந்ததால் தாராவி பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

ராஜபக்சே உருவபடத்தை எரித்தற்காக இயக்க தோழர்கள் பன்னீர் செல்வம், மகிழநன்,சிரிதர், மற்றும் கதிர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர், பின்னர் பிணையில் வெளிவந்தனர், பிணையை திங்கட்கிழமை நீதிமன்றம் உறுதி செய்தது.


வியாழன், 16 ஏப்ரல், 2009

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா மும்பையில்

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவன்று, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இயக்க தோழர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பினை செய்து, சற்றொப்ப 200 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு எழுதுவதற்கான ஏடுகளும் கருவிகளும் வழங்கினர்.










புதன், 8 ஏப்ரல், 2009

அம்பேத்கர் டீ சர்ட் வெளியீட்டு விழா! மும்பையில்.......

ஈழப்பிரச்சினை முடிந்துவிட வில்லை, அது நம் தமிழர்களின் உணர்வுகளோடு கலந்த போராட்டமானாலும், நாம் எல்லோரும் தமிழர்களாக இருக்கிறோமா? என்ற சுயஆய்வாக, நாம் நம் சகோதரர்களை, தமிழர்களாக மட்டும் கருதுகிறோமா, என்ற கேள்வியை முன்வைத்து அடுத்த முன்னெடுப்பு.

எரியும் ஈழப்பிரச்சினையால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் டீ-சர்ட் மற்றும் நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை வெளியீட்டு நிகழ்வு:26-04-2008 அன்று நடைபெற இருக்கிறது. நிகழ்விடம் நாளை அறிவிக்கப்படும்.

விழித்தெழு இளைஞர் இயக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்த வரலாற்று நாயகன், ஒடுக்கப்பட்ட இனத்தின் விடிவெள்ளியாய் வழிகாட்டியாய் வாழ்ந்து மறைந்தும், மறையாமல் கொள்கை விளக்காய், இந்துத்வத்திற்கு இன்றும் சிம்ம சொப்பனமாய் விளங்கும் அம்பேத்கரின் கருத்துகள் பரவலாக சரியான முறையில் பரவ வெண்டும். அம்பேதகரை படத்தின் அளவுக்கு சுறுக்கிவிட்ட தவற்றை களைய வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கப்படும் முன்னெடுப்பு இது.

அம்பேத்கரை தலைவர் என்று ஏற்றுக் கொண்டவர்கள் அவருடைய கருத்துகளை மறுதலித்துவிட்டு, அம்பேத்கரின் படத்தை கோவில் கொடை விழாவுக்கு பயன்படுத்துவதும், இன்னும் சொல்லப்போனால் மும்பை போன்ற நகரங்களில் இந்துத்தவத்தின் பரப்புரையாக பயன்படுத்தப்படும் கணேஷ் சதுர்த்தி விழாவில் தாழ்த்தப்பட்டவர்கள் கலந்து கொள்வதோடு மட்டுமில்லாமல், தங்களை தாழ்த்திய கீழ்நிலையில் தள்ளிய இந்து மத பண்டிகையில் மதவெறியோடு, தங்களின் விடுதலைக்காக போராடிய தலைவரின் படத்தை கொச்சைப்படுத்துகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, தங்களை மேல்சாதி என்று கருதிக் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சகோதரர்கள், அறிவுலக மேதையாக விளங்கிய அம்பேத்கரை சாதீய கண்ணோட்டத்துடனே அடையாளம் காண்கின்றனர். இந்த மடமையை உடைத்தெறிய வேண்டும்.

அணி திரள்வீர்:

தொடர்புக்கு:

மகிழ்நன் : +919769137032

சிரிதர் : +919987379815

பன்னீர்செல்வம்: +919867488167

பாண்டியன் : +919821072848

புதன், 1 ஏப்ரல், 2009

இந்தியா? தேவையா?

இங்கிலாந்தில் பிறந்த ஒருவன் இந்தியா என்ற கற்பனையால் கட்டப்பட்டுள்ள நாட்டிற்கு வருகிறான். அலுவல் தொடர்பாக மூன்றாண்டுகளாக தங்கியிருந்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு. இந்தியா முழுவதும் பயணம் செய்ய வேண்டி வரும். அய்யய்யோ! எனக்கு இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள அனைத்து மொழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமே! என்ற அச்சம் அவனுக்கு வந்தால் எவ்வளவு தேவையற்றதோ, அதுபோன்றதொரு அச்சம்தான் இந்திய வல்லாதிக்கதிற்கு கட்டுப்பட்டு வாழும் அனைவரும் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்பது.

இந்தி என்பது வடநாட்டு, தென்னாட்டு பார்ப்பன சக்திகளின் சதியால் ஒரு ஓட்டு மாறுப்பாட்டால், விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொண்ட இந்திய தேசியத்தின் அலுவல் மொழியாக ஆக்கப்பட்டுவிட்டது. இந்த துரோகத்திற்கு இன்றும் தமிழனத்திற்கு துரோகம் செய்து காங்கிரசு என்னும் பேராயக் கட்சியே ஆகும்.

தமிழன் இந்தி படித்தால் என்ன?

தமிழன் இந்தி படிப்பதில் தவறில்லை. ஆனால், இந்தி யாருக்கு தேவைப்படுகிறது? வேலைதேடி வெளி வட மாநிலங்களுக்கு போகும் பொழுது தேவைப்படுகிறது. மொழி தெரியாத ஒரு இடத்தில் விழி பிதுங்குவது எல்லோருக்கும் ஏற்படுவதுதான். ஜி.யு.போப் தமிழகத்திற்கு தன்னுடைய ஆன்மீக பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு நுழையும் முன்னரே கப்பலிலேயே ஓர் தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டாராம். அதேபோல தன்னுடைய வசதிக்காக வேறு மாநிலங்களுக்கு செல்லும் பொழுது தன் திறமையைக் கொண்டு அந்த மாநில, நாட்டு வழக்கு மொழியை கற்றுக் கொள்ள வேண்டியது ஒருவருடைய தனிப்பட்ட ஆர்வத்தை பொருத்தது. அந்த நேரத்தில் மொழிக் கற்றுக் கொள்ள முடியாத இயலாமையை மறைத்துக் கொள்ள தமிழ் நாட்டில் இந்தி கற்பிக்கப் பட்டிருந்தால் நான் கிழித்தெறிந்திருப்பேன் என்று பேசுவது, தூய அயோக்கியத்தனம், கையாலாகாத்தனம். இந்தி படித்திருந்தால் பெரிய பதவிகளுக்கு வரலாம் என்றால், வசதியாக இருக்குமென்றால் வடமாநிலங்களிலிருந்து மும்பை நோக்கியோ, கோவை நோக்கியோ உழைக்க இந்தி தெரிந்த பாட்டளிகள் ஏன் வருகிறார்கள். ஆக, மொழி அல்ல இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான கூறு, மாறாக நாம் இந்த அமைப்பை மாற்ற வேண்டும். நம்மில் மேலோட்டமான, அக்கறையற்ற சிந்தனையை தூண்டும் நுகர்வு பண்பாட்டையும், முதலாளித்துவ நஞ்சையும் வேரறுக்க வேண்டும்.

இந்த மொழிப்பிரச்சனையை பற்றி பேசுவதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்சினைகள்

எதற்காக வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி போகும் சூழல் ஏற்படுகிறது?

தமிழில் படித்தால் ஏன் வேலை கிடைக்காதா?

வேற்று மாநிலங்களில் வேலை பார்க்கும், முன்னிலையில் இருக்கும் அத்தனை தமிழர்களும் இந்தியை சரளமாக தெளிவாக பேசுபவர்களா?

இந்தி தெரிந்ததால் மட்டும்தான் தமிழர்களுக்கு வடநாட்டில் வேலை கிடைத்ததா?

எதற்காக வேற்று மாநிலங்களுக்கு தமிழன் வேலைதேடி போகும் வாய்ப்பு ஏற்படுகிறது?

சாதிய வன்கொடுமை, கிராமத்தில் நிலவும் சாதிய வன்கொடுமைதான் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட சகோதரர்களை நகரத்தை நோக்கி இடம்பெயரச் செய்திருக்கிறது. கிராமத்திலிருக்கும் சாதிய அவலங்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாத ஒன்றும் உதவாத நடுத்தர வர்க்க, முதலாளித்துவ கூலிக்கூட்டத்தின் முழக்கம்தான் இந்தி ஏன் கட்டாயமாக்கப் படக்கூடாது?என்பது.

அதுமட்டும்மில்லாமல், விவசாயத்தை நம்பியிருந்த ஏராளமான குடும்பங்களை விவசாயப்புரட்சி என்று சொத்தை விதைகளை கொண்டுவந்து, நிலத்தை பாழ்படுத்தும் ரசாயன உரங்களை கொண்டுவந்த இந்த தொலைநோக்கற்ற அரசியல்வாதிகளும் காரணம். அன்று மண்ணள்ளி போட்டது காணாமல், இன்றும் மண்ணள்ளி, ஆற்று மணல் அள்ளி மேலும் விவசாயத்தை கொல்லுகின்றனர்.

ஏழை வயிற்றை கழுவ நகரத்திற்கு ஓடாமல், வேறென்ன செய்வான். அவனுடைய பிள்ளைகளையாவது அறிவாளியாக்கிவிடலாமென்றால், அவர்களுக்கும் மொழிப்பிரச்சனையோடு காத்து நிற்கிறது, இந்த இந்து தமிழ் விரோத இந்திய தேசியம்.

இது மற்ற மாநிலத்து உழைக்கும் வர்க்கத்திற்கும் பொருந்தும்.

தமிழில் படித்தால் வேலைக்கிடைக்காதா?

தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா?என்று வினவும் தோழர்களுக்கு நாம் முன்வைக்கும் கேள்வி.

இந்தி படித்தால் வேலைக் கிடைக்குமா? கிடைக்கும் என்றால்

மகாராஷ்டிராவில் இந்தி தெரிந்த, தாய் மொழி இந்தியாக கொண்ட கூட்டம் ஏன் அடிப்பட்டது.

இதில் அரசியல் இருந்தாலும், உள்ளே அடங்கியிருக்கும் உண்மை இதுதான்

இந்தி, இந்தி என்று சொல்வது, அந்தந்த மாநிலத்தின் உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கு தடைவிதிப்பது ஆகும்.

வேற்று மாநிலங்களில் வேலை பார்க்கும், முன்னிலையில் இருக்கும் அத்தனை தமிழர்களும் இந்தியை சரளமாக தெளிவாக பேசுபவர்களா?

வேற்று மாநிலத்தில் மேல்மட்டத்தில் தமிழர்கள் என்று வடநாட்டவர்களால் கருதப்படுகிறவர்கள். பார்ப்பனர்கள். அவர்களுக்கு ஓரளவுதான் இந்தி தெரியுமே தவிர முறையாக தெரியாது. அதுவும் அவர்களுக்கு தெரிந்திருக்க காரணம், அவர்களின் சமஸ்கிருத தொடர்பு.

இரண்டாம் உலகப்போரில், ஜப்பானியன் இந்தியாவிற்குள் நுழைந்து கைபற்றிவிட வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்தவுடன், ஜப்பான் மொழி கற்க தொடங்கிய தேசபகதர்கள் அல்லவா?

நம் சகோதரர்களை பொறுத்தவரை, தனிப்பட்ட அனுபவத்தில் சொல்லுகிறேன், யாரும் தெளிவான இந்தி பேசுவதில்லை. பேசினாலே இவன் தென்னாட்டுக்காரன் என்று தெரிந்துவிடும்.

ஆனால், நான் இந்தி படிச்சுருந்தா கிழிச்சிருப்பேன்னு சொல்வார்கள்

இந்தி தெரிந்ததால் மட்டும்தான் தமிழர்களுக்கு வடநாட்டில் வேலை கிடைத்ததா?



இந்தியை தாய்மொழியாக கொண்ட உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்களை, பணிக்கு அமர்த்த இங்குள்ள(மராத்தியத்தில்) உள்ள முதலாளிகள் தயங்குவார்கள். இந்தி அவனுக்கு வேலை பெற்று தருகிறதா? இல்லையே. பின் தமிழர்களுக்கு வேலை பெற்று தந்தது. அவர்களின் உழைப்பேயன்றி வேறேதும் இல்லை. தமிழன் மலேசியா, சிங்கப்பூர், அமேரிக்கா என உலகம் நாடுகள் அனைத்திலும் பரவியிருக்கிறான். அங்கு அவனுக்கு வேலை வாங்கி தந்தது இந்தி என்னும் மொழியா? அல்லது உழைப்பா?

மொழி என்பது கருத்து பரிமாற்றத்திற்கானது, மக்கள் மொழியாக இருக்கும் மொழிதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் மற்றவை, அவரவர் திறமைக்கேற்ப தேவைக்கேற்ப மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும்.

மாற்று மொழி கற்பிப்பது, பொது கருத்தாக இல்லாமல் போக வேண்டும்.

தமிழ் இன்றும் தமிழகத்து பெரும்பான்மை மக்கள் மொழியாகத்தான் இருக்கிறது, இருக்க வேண்டும். அப்படியிருக்க பெரும்பான்மை மக்கள் நலனை கருத்தில் கொண்டுதான் உரிமைக்காக போராடும் இயக்கங்கள் போராட வேண்டும். அதுதான் அடிப்படை. தமிழ் வழக்குமொழியாக இருக்கும் வீட்டில் பிறந்த ஒரு குழந்தைக்கு வேற்று மொழிக்கல்வி என்பது கூடுதல் சுமை, இதில் நல்ல அறிவுத்திறனோடு தேறும் குழந்தைகள் குறைவு. ஆனால், மொழி சரிவர வராததால் தன்னம்பிக்கை இழந்து, தன்னை பற்றிய தாழ்வு மனப்பான்மை மேலோங்கி உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் இதில் மிகுதி. இந்த கல்விமுறையில் அடிமைகள் உருவாகுவார்களேயன்றி நல்ல மனிதர்கள் அல்ல, அறிவாளிகள் அல்ல.

நான் தாராவிப்பகுதியில் வளர்ந்த தமிழன். தாராவி என்பது தமிழ்நாடு போன்றே தமிழ் பேசும் மக்கள் பரவலாக, வெகுவாக இருக்கும் இடம். சாதிய அமைப்பையும் மும்பையில் அப்படியே கட்டிக் காத்து வருகின்றனர், என்பது வருத்ததிற்குரிய குறிப்பிடத்தக்க செய்தி.

இங்குள்ள தமிழர்கள் வீட்டில் வழக்கு மொழி, ஆனால் தமிழ் வழிக்கல்வி 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே இருக்கிறது. பத்தாம் வகுப்புவரை கன்னட, குசராத்தி மொழிகளுக்கு பள்ளிக்கூட வசதி இருந்தாலும் தமிழர்களின் ஒற்றுமையின் லட்சணமும் , சாதிய வேற்றுமையும் தமிழர்களுக்கு மட்டும் தாய்மொழியில் படிக்கும் உரிமையை இன்னும் பெற்றுத் தரவில்லை.

ஆதலால், நம் பிள்ளைகள் ஆங்கில கல்வியில் படிக்க வேண்டிய கட்டாயம், ஆதலால் இயல்பாகவே, ஆங்கிலப்பாடம் என்பது கூடுதல் சுமையாகிப் போகிறது, அதோடு, இந்தி, மராத்தி மொழிகளும் சேர்ந்து கொண்டு மொழிச்சுமையையும், பாடச்சுமையையும் கூட்டி விடுகின்றன. இந்தி எதிர்ப்பு தமிழகத்தில் ஏன் நடந்தது? அது தவறு.என்று பிதற்றும் கோமாளிகளை மாற்று மொழிகளை படிக்க சிரமப்படும் குழந்தைகளின் செருப்பை பக்கம் வைத்துக் கொண்டு அந்த குழந்தைகளிடம் கேள்வி கேட்க சொல்ல வேண்டும்.

இந்தி படிக்கணுமா? வேண்டாமா? இந்தியை சேர்த்துக் கொள்ள வேண்டுமா? இல்லையா?

என்று....

பள்ளிக்கூடத்தில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் அந்த குழந்தை ஆங்கிலத்தில் கற்றுத் தரப்படும் செய்திகளை அரைகுறையாக கற்றுக் கொள்கிறது. அறிவு வளர்ச்சி தட்டுப்படாமல் வேறென்ன நடக்கும். இந்திக்கும் மராத்திக்கும் கேட்கவே வேண்டாம். அரைகுறையாக மனப்பாடம் செய்து எழுதி விடுகின்றனர். நான் தன்னார்வம் கொண்டு படித்ததால் நம் தமிழ் குழந்தைகளுக்கு இந்தியோ, மராத்தியோ கற்பிக்கும் அளவுக்கு கற்றுக் கொண்டேன். ஆனால், என்னுடன் படித்த பெரும்பாலான மாணவர்களை கேட்டுப்பாருங்கள், மராத்தி மொழியையோ, இந்தியையோ கற்பிக்க சொல்லி. பெரும்பாலானவர்களுக்கு முடியாது.

மாற்று மொழி கற்பிக்கப்பட்டது என்ன பயன் தந்தது. அறிவு வளர்ச்சியை தந்ததா?

மேம்போக்காக இது குறித்து ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளை முன்னிருத்தி வாதம் செய்கின்றனர். அவர்கள் அப்படித்தான் அடிவருடி ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். நாம் விழிப்போடு இருந்து சரியான முடிவை எடுக்க வேண்டும், கல்வி முறையை மாற்றும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா?

இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. "இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில்தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவதுதான் இந்தியின் தத்துவம். எனவேதான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு போர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும்.

இந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும், அவருடைய அய்யாவையுந்தான் குறிப்பிட வேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்ளையடிப்பது (உங்களுக்குத் தெரிந்ததுதான்); வேறு ஆட்களைக் குறிப்பிட முடியாது. தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட இருந்தது? ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது? மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது? இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா?

சூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு திராவிடன்' என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள், மறுபடி சூத்திரனாக மாற விருப்பம் கொள்வீர்களா? இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் பார்ப்பனக் கூட்டம் வட நாட்டாரின் கூலிகளாகி, அவர்களுக்கு வால்பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு, தேசிய மொழி என்ற போரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால் நம்மை, நம் நாட்டை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நாம் அதற்கு இடங்கொடுக்கலாமா?

தோழர்களே! தாய்மார்களே! திராவிடர் - ஆரியர் போராட்டம், அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறாது இருந்துவரும் இப்போராட்டம், இன்று ஒரு முடிவான கட்டத்திற்கு வந்துவிட்டது. இதை முடித்து வைப்பது நமக்குப் பெருமையுங்கூட. நமது பின் சந்ததியார் போற்றிப் புகழக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின் சந்ததியரால் எள்ளி நகையாடப்படுவோம் என்பதோடு, அவர்களின் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் நாமே காரணபூதர்களாகவும் ஆகிவிடுவோம்.

சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு


http://www.keetru.com/rebel/periyar/22.php