ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள் இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை வெறியாட்டத்தை கண்டு உள்ளம் கொதித்து கிடக்கும் மும்பை வாழ் தமிழர்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மும்பை வாழ் தமிழர்களையும் “தமிழ்சாதி” என்ற ஒருங்கிணைப்பு குழுவின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியாக மனிதச்சங்கிலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மார்ச் திங்கள் 1-ஆம் நாள் மாலை 3-6 மணி வரை நடைபெற இருக்கிறது. மாதுங்கா கிங்சர்க்கிள் தொடங்கி செம்பூர்- காட்கோபர் பஸ் டிப்போ– விக்ரோலி – காஞ்சூர் மார்க் – ஐரோலி – பாண்டூப்- தானே என பகுதி வாரியாக தமிழர்கள் கைகோர்த்து இந்த மாபெரும் மனிதச் சங்கிலியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பு பொறுப்பை விழித்தெழு இளைஞர் இயக்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழர்கள் இனவுணர்வோடும், மனிதாபிமான அடிப்படையிலும் நம் உறவுகளின் துயர் துடைக்க, தம் உள்ளக்கிடக்கைய தெரிவிக்க மாபெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ளுமாறு அனைத்து தமிழர்கள் சார்பாக விழித்தெழு இளைஞர் இயக்கம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறது.
இது குறித்த மேற்கொண்டு செய்தி வருமாறு,
ஈழத்தில் சிங்கள இனெவறி தமிழர்கள் மீதான அடக்குமுறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவிழ்த்து விட்டுள்ளது. இச்சூழலில் சாதி, மத, அரசியல் பாகுபாடுகளில் ஒற்றுமையை அடகு வைத்து விட்டு, தம் இனம் அங்கே ஈழத்தில் கொல்லப்படுவதை கண்டும் காணாமல் இருந்தது இந்த தமிழினம்.
தம் சமூகத்தை எப்படியாவது விழித்தெழ செய்ய வேண்டும் என்று உயிராயுதம் ஏந்தி, தாம் தயாரித்து வைத்திருந்த துண்டு பிரதி(அறிக்கையை) அறிவாயுதமாக விட்டுச் சென்ற தோழர். முத்துகுமார் கடைசியாக நம்மை “தமிழ்ச்சாதி”யாக ஒருங்கிணையச் செய்துள்ளார். அதன் வழியில் மும்பை வாழ் மும்பை வாழ் தமிழர்கள் மனிதச் சங்கிலியில் பெருமளவில் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். அதோடு புனே, ஔரங்கபாத, நாசிக் போன்ற மும்பையின் வெளிப்புற பகுதிகளிலிருந்தும் நம் தமிழ்ச் சகோதரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இப்போரட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்த அரசியல் தலைவர்களின் படங்களையோ, அல்லது அரசியல் கட்சிகளின் கொடிகளையோ கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். மேலும், போராட்டத்தில் எந்த தனிநபரையும், பாராட்டியோ எதிர்த்தோ குரல் எழுப்பக் கூடாது என்பதையும் விதிமுறையாக கொண்டே மனிதச் சங்கிலியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதை மறுப்பவர்கள் தயவு கூர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று போராட்டத்தின் நோக்கம் சிதைந்து விடக்கூடாது, என்ற அடிப்படையில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த செய்தியை படிக்கும் அன்பர்கள், இதையே அழைப்பாகவும், தம் பொறுப்பாகவும் கருதி தாம் கலந்து கொள்வதோடு மட்டுமின்றி, தம் தோழர்கள் மற்றும் குடும்பத்தையும் அழைத்து வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்திகழ்ச்சியை குறித்த ஆதரவை தெரிவிக்க விரும்பும் அன்பர்கள் செய்தித்தாள் அலுவலகங்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு செய்தியாகவோ, விளம்பரகமாகவோ தர முன்வரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு : 9821072848, 9867488167, 9769137032, 969255676, 9969647854, 9324380765, 9892035187.
வாழ்துக்கள் தோழர்களே,
பதிலளிநீக்குமுத்துக்குமாரின் விதை உலகம் முழுவதும் தூவப்பட்டுருப்பதை "தமிழ்ச்சாதி" நிரூபித்துள்ளது.
வளர்க நும் பணி, மலர்க தமிழீழம்
தமிழ்நாடன்