திங்கள், 23 பிப்ரவரி, 2009

மும்பையில் மனிதச்சங்கிலி(மார்ச் 1,2009)

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள் இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலை வெறியாட்டத்தை கண்டு உள்ளம் கொதித்து கிடக்கும் மும்பை வாழ் தமிழர்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மும்பை வாழ் தமிழர்களையும் தமிழ்சாதிஎன்ற ஒருங்கிணைப்பு குழுவின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியாக மனிதச்சங்கிலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மார்ச் திங்கள் 1-ஆம் நாள் மாலை 3-6 மணி வரை நடைபெற இருக்கிறது. மாதுங்கா கிங்சர்க்கிள் தொடங்கி செம்பூர்- காட்கோபர் பஸ் டிப்போவிக்ரோலி காஞ்சூர் மார்க் ஐரோலி பாண்டூப்- தானே என பகுதி வாரியாக தமிழர்கள் கைகோர்த்து இந்த மாபெரும் மனிதச் சங்கிலியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிகழ்வுக்கான ஒருங்கிணைப்பு பொறுப்பை விழித்தெழு இளைஞர் இயக்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழர்கள் இனவுணர்வோடும், மனிதாபிமான அடிப்படையிலும் நம் உறவுகளின் துயர் துடைக்க, தம் உள்ளக்கிடக்கைய தெரிவிக்க மாபெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ளுமாறு அனைத்து தமிழர்கள் சார்பாக விழித்தெழு இளைஞர் இயக்கம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறது.

இது குறித்த மேற்கொண்டு செய்தி வருமாறு,

ஈழத்தில் சிங்கள இனெவறி தமிழர்கள் மீதான அடக்குமுறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவிழ்த்து விட்டுள்ளது. இச்சூழலில் சாதி, மத, அரசியல் பாகுபாடுகளில் ஒற்றுமையை அடகு வைத்து விட்டு, தம் இனம் அங்கே ஈழத்தில் கொல்லப்படுவதை கண்டும் காணாமல் இருந்தது இந்த தமிழினம்.

தம் சமூகத்தை எப்படியாவது விழித்தெழ செய்ய வேண்டும் என்று உயிராயுதம் ஏந்தி, தாம் தயாரித்து வைத்திருந்த துண்டு பிரதி(அறிக்கையை) அறிவாயுதமாக விட்டுச் சென்ற தோழர். முத்துகுமார் கடைசியாக நம்மை தமிழ்ச்சாதியாக ஒருங்கிணையச் செய்துள்ளார். அதன் வழியில் மும்பை வாழ் மும்பை வாழ் தமிழர்கள் மனிதச் சங்கிலியில் பெருமளவில் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். அதோடு புனே, ஔரங்கபாத, நாசிக் போன்ற மும்பையின் வெளிப்புற பகுதிகளிலிருந்தும் நம் தமிழ்ச் சகோதரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இப்போரட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்த அரசியல் தலைவர்களின் படங்களையோ, அல்லது அரசியல் கட்சிகளின் கொடிகளையோ கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். மேலும், போராட்டத்தில் எந்த தனிநபரையும், பாராட்டியோ எதிர்த்தோ குரல் எழுப்பக் கூடாது என்பதையும் விதிமுறையாக கொண்டே மனிதச் சங்கிலியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதை மறுப்பவர்கள் தயவு கூர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று போராட்டத்தின் நோக்கம் சிதைந்து விடக்கூடாது, என்ற அடிப்படையில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த செய்தியை படிக்கும் அன்பர்கள், இதையே அழைப்பாகவும், தம் பொறுப்பாகவும் கருதி தாம் கலந்து கொள்வதோடு மட்டுமின்றி, தம் தோழர்கள் மற்றும் குடும்பத்தையும் அழைத்து வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்திகழ்ச்சியை குறித்த ஆதரவை தெரிவிக்க விரும்பும் அன்பர்கள் செய்தித்தாள் அலுவலகங்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு செய்தியாகவோ, விளம்பரகமாகவோ தர முன்வரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு : 9821072848, 9867488167, 9769137032, 969255676, 9969647854, 9324380765, 9892035187.

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

மும்பையில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்தும், முத்துகுமரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் கூட்டம்

நாள்: 8,சனவரி 2009





எம் இளைஞர் படை





ஒலி-ஒளிப்படமாக காண்பிக்கப்பட்ட ஈழ அவலத்தை பார்த்து கலங்கி நிற்கும் எம் உறவுகள்



குமணராசன் உரையாற்றுகிறார்

ஜெயக்காண்டீபனின் ஈழ வரலாற்றை தெளிவுபடுத்தும் உரை

மாறன் நாயகம் உரையாற்றுகிறார்
நான்


மும்பை திராவிடர் கழக தலைவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்
பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.எஸ். அன்பழகன் உரையாற்றுகிறார்
எங்கள் அமைப்பாளர் தோழர் பாண்டியன்



பெரியார் பெருந்தொண்டர் வே.சித்தார்த்தனின் ஆவேச உரை

திருவள்ளுவர் நற்பணி இயக்க தலைவர் ராதா கிருட்டிணன்




ஐயா பால்வண்ணன்


பிஜேபி தென்னிந்திய பிரிவை சார்ந்த நடேசன் அவர்கள்
மாவீரன் முத்துக்குமரன்






வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

பிரபாகரன் - ஒரு கட்சி சர்வாதிகாரமும் தி.மு.க. செயற்குழு தீர்மானமும்- பெ.மணியரசன்

தி.மு.க. தலைமைச் செயற்குழு தீர்மானம், அதை ஒட்டி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியவை அனைத்தும் அக்கட்சி, முக்காட்டை நீக்கி முழுமையாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக வீதிக்கு வருகிறது என்பதைக் காட்டுகிறது. பிரபாகரன் சர்வாதிகாரி என்றும் மற்ற தலைவர்களை அழித்துவிட்டார் என்றும் விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியாது என்றும் இந்திய அரசுக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்டவே இந்த செயற்குழு கூட்டப்பட்டது என்று தெரிகிறது. ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகச் சிங்களப்படை கொன்று குவிக்கும் இக்காலத்தில், அந்த இனப்படுகொலையைத் தடுக்க விடுதலைப்புலிகள் வீரப்போர் நடத்திக்கொண்டிருக்கும் மிக நெருக்கடியான நேரத்தில் கருணாநிதி விடுதலைப் புலிகளை இழிவுப்படுத்துகிறார்.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற ஓர் அமைப்பை உருவாக்கப் போகிறார்களாம். அதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆகியவை வேண்டுமானால் சேரலாம். அதிலும் செயலலிதா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருணாநிதி தலைமையில் சேரும் என்று எதிர்பார்க்க முடியாது. மிச்சம் காங்கிரஸ்தான். ஈழச்சிக்கலில் காங்கிரசோடு கொள்கை உடன்பாடு கொண்டுள்ளார் கருணாநிதி என்பது உறுதியாகிவிட்டது. தி.மு.க. செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், சிங்கள அரசைச் சாடியதை விட பிரபாகரனைச் சாடியதே அதிகம்.

பிரபாகரன் எப்பொழுதோ இந்து ஏட்டுக்குக் கொடுத்த செவ்வியில் தமிழ் ஈழம் கிடைத்தால் சர்வாதிகார ஆட்சி நடத்துவோம் என்று கூறியதாகக் கருணாநிதி சொல்கிறார். அது உண்மையல்ல. யுகாஸ்லாவியாவில் இருப்பது போன்ற ஒரு கட்சி ஆட்சிமுறை இருக்கும் என்றுதான் பிரபாகரன் கூறியிருந்தார். யுகாஸ்லாவியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அப்போது நடந்தது. அன்று, சோவியத் ஒன்றியத்தில் ஒரு கட்சி ஆட்சிதான் நடந்தது. இன்று சீனா, வியட்நாம், கியுபா, வடகொரியா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளில் ஒரு கட்சி ஆட்சிமுறை தான் நடக்கிறது. அவ்வாறான ஒரு கட்சி ஆட்சி முறையை ஒருவர் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் அவ்வாறான ஒரு கட்சி ஆட்சி அரசு உலகில் ஏற்கப்பட்டு, அந்நாடுகள் பல கட்சி நாடுகளுடன் நல்லுறவு கொண்டுள்ளன. அரசு அமைப்பு முறைகளில் ஒரு கட்சி ஆட்சி முறையும் ஒன்று.

யுகாஸ்லாவியத் தலைவர் டிட்டோ ஒரு கம்யுனிஸ்டாக இருந்தாலும் சோவியத் முகாமில் சேராமல் அணிசேரா நாடாக யுகாஸ்லாவியாவை வழி நடத்தினார். அது போல் தான் நிறுவ வரும்பும் தமிழீழம் சோசலிசப் பாதையைப் பின்பற்றினாலும் அது தமது மண்ணிற்கு ஏற்ற வடிவம் பெறும் என்றும், அணி சேரா நாடாக தமிழீழம் திகழும் என்றும் அப்பேட்டியில் பிரபாகரன் கூறியிருக்கிறார். இதனைக் கருணாநிதி கொச்சைப்படுத்தி, பிரபாகரன் அதிகார வெறியர் என்று காட்டவும், சர்வாதிகாரி என்று காட்டவும் திரிபு வேலைகளைச் செய்கிறார். ஒரு கட்சி ஆட்சி என்பதற்கு மாறாக ஒரு குடும்ப ஆட்சி நடக்கும் என்று பிரபாகரன் கூறியிருந்தால் கருணாநிதி மனநிறைவடைந்திருப்பாரோ என்னவோ?

யுகாஸ்லாவியா மாதிரி ஒரு கட்சி ஆட்சி என்று பிரபாகரன் சொல்லி 24 ஆண்டுகள் ஆகின்றன. அதன்பிறகு விடுதலைப்புலிகள் அமைப்பில், பல கருத்தியல் மாற்றங்கள், வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி மாற்றங்கள் காரணமாக, ஏற்கெனவே, அணியம் செய்யப்பட்டிருந்த அவர்கள் கட்சிக் கொள்கைத் திட்டத்தை வெளியிடாமல் நிறுத்திவிட்டார்கள். நிகரமை (சோசலிச)க் கண்ணோட்டத்துடன் செயல்படுகிற அமைப்புதான் விடுதலைப்புலிகள் அமைப்பு. இப்பொழுது விடுதலைப்புலிகளை டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF- அமிர்தலிங்கம்) உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் ஆதரிக்கின்றன.

விடுதலைப்புலிகளின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்த்தேசியக் கூட்டணியில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் மேற்கண்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தாம். தமிழ் ஈழத்தில் 98 விழுக்காட்டுத் தமிழர்களாலும் தமிழ்நாட்டில் 80 விழுக்காட்டுத் தமிழர்களாலும் தமிழீழத் தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர் பிரபாகரன். பல்வேறு கருத்துக் கணிப்புகளில் இது நிறுவப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பிரபாகரனோடு கருங்காலி கருணாவை சமப்படுத்திக் கருத்துக் கூறியிருக்கும் ஒன்றே, கருணாநிதியின் பகைமை உணர்ச்சியை அம்பலப்படுத்துகிறது.

மதுரையில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணனை, அதே தி.மு.க.வைச் சேர்ந்த இன்னொரு அதிகாரக் குழுவினர் கொலை செய்தபோது, கருணாநிதி சட்டப்பேரவையில் கூறியதை இங்கு நினைத்துப்பார்க்க வேண்டும். "அண்ணா காலத்திலேயே தி.மு.க.வுக்குள் கோஷ்டி சண்டையும் கொலையும் நடந்ததுண்டு. தூத்துக்குடியில் தி.மு.க.பிரமுகர் கே.வி.கே. சாமியை- தி.மு.க.வில் உள்ள இன்னொரு கோஷ்டிதான் கொலை செய்தது" என்றார். தா.கிருட்டிணன் கொலையை இவ்வாறு ஏன் இயல்பான ஒன்றாகக் காட்டினார்? அக்கொலையில் அவருடைய மகன் மு.க.அழகிரி குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

அதே மதுரையில் தினகரன் ஏட்டில் வந்த ஒரு கருத்துக் கணிப்பில் ஆத்திரமடைந்த அழகிரி கோஷ்டியினர் அந்த இதழின் அலுவலகத்தைச் சூறையாடினர். அவர்கள் மூட்டிய நெருப்பில் மூன்று ஊழியர்கள் மாண்டனர். இப்படிப்பட்ட குடும்பத் தலைவரான கருணாநிதி, ஈழ விடுதலைப்போரில் நடைபெற்ற "சகோதர யுத்தத்தை"ப் பற்றி திரும்பத் திரும்ப பேசுகிறார். இவர் எப்படி வலுவாக - இந்திய அரசிடம் போர் நிறுத்தம் கோருவார்? இவர் எப்படி ஈழத் தமிழர்களின் துயர்துடைப்பார்?

இவருடைய ஒப்புதலோடுதான் இந்திய அரசு சிங்களப்படைக்கு ஆயுதம் கொடுக்கிறது; படையாட்களை அனுப்புகிறது என்பது இதன்வழி தெரியவருகிறது. "உள்ளுர்த் துப்பு இல்லாமல் மாடு திருட்டுப் போகாது" என்பது பழமொழி. கருணாநிதி, செயலலிதா ஒப்புதல் இல்லாமல் இந்திய அரசு ஈழப்போரை நடத்தவில்லை என்பது உறுதியாகிறது.

http://www.keetru.com/literature/essays/maniarasan.php

திங்கள், 2 பிப்ரவரி, 2009

மும்பையில் முத்துகுமரனுக்கு வீரவணக்கக்கூட்டம் மற்றும் ஈழத்தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம் நாள் (08-02-2009)

அன்புத்தோழர்களே!

ஈழத்தில் தமிழர்கள இனப்படுகொலை செய்யப்படுவதை கண்டிக்க திராணியற்ற சமூகமாக நம்மை இந்த பிழைப்புவாத அரசியல் அறிவிலிகள் நம்மை ஆளாக்கி வைத்திருந்த சூழலி ல் வாராது வந்த மாமணியாய் தன்னுயிரை நீத்து உணர்விழந்து, உணர்வூட்டிய முத்துகுமரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல், நமக்கு துரோகம் இழைக்கும் இந்திய வல்லாதிக்கம் மற்றும் தமிழக அதிகார வர்க்கம், பிழைப்புவாத அரசியல் கட்சிகளை அம்பலபடுத்தும் கடமை நமக்கு உள்ளது.


ஆனால், இந்த உணர்வு அனைத்து தமிழர்களுக்கும் உள்ளதா, இந்த செய்தி அவர்களுக்கு தெரிந்திருக்கிறதா? என்றால் இல்லை. அதாவது தெரிந்த நாம் அவர்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க தவறிவிட்டோம்.

ஆதலால், இந்த தருணத்தில் வரலாறு நமக்கு இட்ட கட்டளையின்படி மும்பைவாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை அறிந்து மும்பையில் இளைஞர்களை கொண்டு தொடங்கப்பட்டுள்ள
விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பாக அனைத்து அமைப்பு, சமுதாய தோழர்கள் தாய்மார்களை ஒருங்கிணைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தமிழ் அன்பர்களின் ஒருங்கிணைப்பு தேவை.

இந்த பொதுக்கூட்டத்தின் வெற்றி அடுத்த கட்ட போராட்டத்தை தீர்மானிக்கும், தயவு கூர்ந்து தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மும்பை வாழ் நண்பர்களுக்கு செய்தியை சொல்லுங்கள். தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்

--
அன்பும் ,பகுத்தறிவுடனும்.
மகிழ்நன்.
+919769137032
தாராவி, மும்பை