வியாழன், 29 அக்டோபர், 2015

மும்பையில் முதன் முறையாக நடந்த பழந்தமிழர் உணவு திருவிழா--MVI

மும்பையில் விழித்தேழு இயக்கமும், நல்ல சோறு இயக்கமும் இனைந்து நடத்திய பாரம்பரியமான பழந்தமிழர் உணவு...
மும்பையில்  முதன்முறையாக நடைபெற்ற  பழந்தமிழர் உணவு திருவிழாவின் அனைத்து  புகைப்படங்கள் , பத்திரிக்கை செய்திகள்  இணைக்கப்படுள்ளன ...

புகைப்படங்கள் :- நிகழ்ச்சிக்கு முன் , கம்பன் உயர் நிலைப்பள்ளி மாணவிகளின் தமிழ் தாய் பாடிய புகைப்படம், குத்து விளக்கு ஏற்றும் புகைப்படம்,
 விருது   வழங்குதல் பெறுதல் புகைப்படம் ,  மருத்துவர் சிவராமன் பேசிய புகைப்படம் , உணவு விருத்தத்தின் போது,  உணவு தயாரிப்பு, நிகழ்வுக்கு பின்பு , தனிநபர்கள் மருத்துவர் சிவராமனுடன் எடுத்த அனைத்து புகைப்படம், மும்பை விழித்தெழு இயக்க தோழர்கள் மருத்துவர் சிவராமனுடன் எடுத்த அனைத்து புகைப்படம், மருத்துவர் சிவராமனுடன் கேள்வி பதில் புகைப்படம்.
பார்க்க :-  
கண்ணொளி பின்னர் youtube யில் இணைக்கப்படும்..  














































































































































































































































































திருவிழா நேற்று மும்பையில் நடந்தது..உணவு மீதான அரசியல் மற்றும் ஆளுமை , இயற்கை வேளாண்மை, வாழ்வியல் குறித்த சிறப்புரையை சித்த மருத்தவர் கு. சிவராமன் அய்யா சிறப்பாக வழங்கினர்.
இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற நிகழ்வு அறிவித்த நாள் தொடங்கிய நிகழ்வு இறுதி நிமிடம் வரை துணை நின்று உழைத்த எமது இயக்க தோழர்கள்
பிரான்சிஸ், மதன், சுரேஷ் குமார், வேல்முருகன் (இந்த நான்கு தோழர்கள் மிக கடமையாக உழைத்தார்கள் என்று சொல்வதை விட சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள் ) பாபு, காத்தவராயன், மாதவன், கதிர், ஈஸ்வரி தங்க பாண்டியன், BRIGHT GRAPHICS ராம், சங்கம் என்டேர்டைன்மென்ட் பொன் தமிழ் செல்வன் மற்றும் முத்து கிருஷ்ணன், மணி கேட்டரிங் இவர்கள் இல்லை என்றால் நிகழ்வு இல்லை ..சிறப்பாக நடந்து இருக்க வாய்ப்பே இல்லை.
தொடர்ந்து எமக்கு ஆதரவு கொடுத்து வரும் அய்யா சு.குமணராசன், அண்ணன் கராத்தே முருகன், அண்ணன் ராஜேந்திரன் சாமி,
அண்ணன் ஆ பி சுரேஷ், அண்ணன் வே. சந்திரசேகர், அய்யா எம் கே செட்டியார், அம்மா அமலா ஸ்டான்லி, அண்ணன் மாரியப்பன், மும்பை பவுல், அக்கா ஜெயாதுர்கா, தானே தமிழ் சங்கமம் , Hands to help foundation , காட்கோபர் தமிழகன், அய்யா குணா, அண்ணன் சிவராமன் அண்ணன் விவேக் ஆனந்த், அய்யா திருநாவுக்கரசு, தோழர் ரோஷன் மற்றும் தினகரன், தினதந்தி & TIMES OF INDIA - MUMBAI MIRROR , தமிழ் இலெமுரியா இவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ...
பெண்கள் 250 பேர், குழந்தைகள் 150 பேர் உட்பட 800 பேர் கலந்து கொண்டனர்.
உணவுதிருவிழாவில் அனைவருக்கும் பானகம், பீற்கன்காய் சாறு, இனிப்பு சிகப்பு அவல் பிரட்டல், வரகு பக்கோடா, பனிவரகு பால் பணியாரம், கம்பு இலை அடை, மாப்பிளைசம்பா கத்தரிக்காய் சோறு, சாமை காய்கறி பிரியாணி, வெள்ளரிகாய் தயிர் பச்சடி, குதிரைவாலி தயிர் சோறு , கதம்பக்காய் கூட்டு, கேழ்வரகு பாயாசம், முலிகை தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டன.
முடிவில் அனைவருக்கும் சிறுதானிய உணவு சமையல் குறிப்பு நூல் மற்றும் துணி பை வழங்கப்பட்டன.
இயற்கையோடு இணைவோம்... நலமாக வாழ்வோம் !!
அடுத்த நிகழ்வு சமுத்தவ பொங்கல் தை 1 - ஜன 14
ஏப்ரல் 14 இல் நடத்த முயற்சிக்கிறோம் .. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு காணும் வகையில் தொழில்நுட்ப ரீதியிலான தீர்வு காணும் கருவிகளை உருவாக்க நிபுணர்கள் கொண்டு மாணவர்களுக்கு பயற்சி அளிப்பது..பெரிய பொருட் செலவுகள் ஏதுமின்றி உருவாக்கியித்தை அறிவியல் கண்காட்சி நடத்துவது என்ன திட்ட மீட்ட உள்ளோம்..
குறிப்பாக, நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான மின் பற்றாக்குறை, மனிதன் கழிவை மனிதனை ஆள்ளுவது, பொது சுகாதாரம், மாசுக்கட்டுப் பாடு, போக்குவரத்து, உள்ளிட்டவை களுக்கான தீர்வுகளை, தங்களிடம் உள்ள சாதாரண பொருட்கள் மூலம் மிகத் துல்லிய கண்டுபிடிப்புகளாக உருவாக்க .
நிகழ்வுகளில் சரி வர செய்யாதவைகளை , தவறுகளை சில நாட்களில் விரிவாக எழதுகிறேன் இது எதிர்காலத்தில் நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக நடத்த உதவும் ..
தோழர்களே, பொதுவாகவே மக்கள் எந்த ஒரு நிகழ்வில் கலந்துக்கொன்டாலும் மிகப்படுத்தி பெரிதாக பேசுவார்கள் அதன் பரப்பு , நினைவு சில நாட்கள், ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் இருக்கும் ..நமது கடமை மக்களிடம் செய்திகளை கொண்டு செல்வது மட்டுமே பேசுவதுடன் நிற்காமல் சிந்திந்து செயல்பட அவர்களே முன்வர வேண்டும் ..
இது போன்ற நிகழ்வுகளை பலவற்றை நடத்தி உள்ளோம் சமுத்துவ பொங்கல், மனித சங்கலி போராட்டம், புரட்சியாளர் அம்பேத்கர் திரைப்பட குறுந்தகடு கொண்டுவந்தது, இலவச திரைப்பட பயற்சி பட்டறை, அரசியல் கருத்தரங்கம், தற்காப்பு கலை பயற்சி, நூல் வெளியீடு ஆவணப்பட திரையிடல் போன்றவை முடிந்த பின்னால் எப்படி இருந்தோமோ அப்படியே இருப்போம் அடுத்த நிகழ்வுக்கு நகர்வோம் ..

தோழமையுடன்
சிறீதர் தமிழன் (ஒருங்கிணைப்பாளர்)
பன்னீர் செல்வம், தங்க பாண்டியன், ஈஸ்வரி தங்க பாண்டியன்
முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள்
மும்பை விழித்தெழு இயக்கம்/ MVI
தொடர்புக்கு :- 9702481441 /9769576868/ 7738726921
www.vizhithezhuiyakkam.blogspot.in
vizhithezhu.org@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக