வியாழன், 5 பிப்ரவரி, 2015

மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக 7 ஆம் ஆண்டு சமுத்துவ பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா
மும்பையில் அதிகமான தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மிக சிறப்பாக மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக 7 ஆம் ஆண்டு சமுத்துவ பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ...சாதி மத வர்க்க அற்று பொது இடத்தில் 
(தாராவி குறுக்கு சாலையில் ) பல் வேறு இயக்க, சங்க, அமைப்பு நிர்வாகிகள் மற்றும் மக்கள் திரளுடன் கொண்டாடப்பட்டது . இது ஒரு முன்மாதிரி விழாவாக ..2009 இல் நாங்கள் மட்டுமே கொண்டாடினோம் இன்று 30 க்கு மேற்பட்ட இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது...
ஒரு நாள் சம்பிரதாய அடையாள விழாவாக இல்லாமால் அனைத்து நிகழ்வுகளில் சாதி மத வர்க்க அற்ற தமிழராக- மனிதார்களாக இருக்க போக்கும் காலத்தை நோக்கி நடைப்போடுகிறோம்
==================================================================
மும்பையில் உள்ள தமிழர்கள் 150 க்கும் மேலான வருடங்களுக்கு முன் தமிழகத்தில் இருந்து சாதி கொடுமை, வறுமை காரணமாக குடிபெயர்ந்தவர்கள். அன்று சாதி அற்ற தமிழர்களாக அனைவரும் ஒன்றாக இருந்தார்கள் வாழ்ந்தார்கள்...இன்றய மும்பை தமிழர் தலைமுறை தமிழகத்தில் இருப்பதை போல பல சாதியாக தனி தனியாக வாழ்த்து வருகிறார்கள் ...பெயருக்கு பின்னால் (surname ) அடையாளத்தை வைத்து கொண்டும்...இவர்களில் பலருக்கு சரளமாக தமிழ் பேச தெரியாது, படிக்க தெரியாது. ஆனால் தமிழர்களை பிழவுப்படுத்தும் சாதி மட்டும் இருக்குது..
ஆகையாலே இயக்கம் தொடங்கிய முதல் விழாவாக 2009 ஆம் வருடம் முதல் சாதி மத வர்க்க வேறுபாடுகள் களையும் வகையில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் பல்வேறு போராட்டம், கருத்தரங்கம், திரையிடல், நிகழ்சிகள், கருத்தியல் பிரச்சாரம் செய்து வருவதால் ஏற்படுகிற பொருளாதார நெருக்கடி மற்றும் சில தமிழ் அமைப்புகள் புறக்கணிப்பு-பத்திரிக்கைகள் புறக்கணிப்பு MVI இயக்கத்திற்கு இருந்தாலும் சமுத்துவ பொங்கல் நிகழ்வையும் & தமிழ் புத்தாண்டு விழாவை கொண்டாவதை தவிர்க்க நினைப்பது உண்டு...இருந்தும் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறோம்
இந்த விழா கடந்த திருவள்ளுவர் ஆண்டு 2046 ..தை (ஜனவரி 15) முதல் நாளில் கொண்டாடப்பட்டது.
அதன் புகைப்படம் சில,…
இவ்விழாவை தங்க பாண்டியன், பன்னீர் செல்வம், மதன், பிரான்சிஸ் , குட்டி & நண்பர்கள் , வேல்முருகன், கதிர் & நண்பர்கள் , ரவி, பொன் தமிழ் செல்வன், நித்தி, பாபு மிக சிறப்பாக ஒருங்கிணைத்தனர்...
சிறுப்பு விருத்தினராக தமிழ் இலெமுரிய ஆசிரியர் சு குமணராசன், வள்ளியூர் வீர குமார் , மும்பை அருந்ததியர் சங்கம் மோகன்,
மும்பை திராவிடர் கழகம் பெ கணேசன், தெ இ ஆதி திராவிடர் மகாஜன சங்கம் க வ அசோக் குமார், பொ . கதிரவன், ரஜினி ரசிகர் மன்ற எஸ் கே ஆதிமுலம் , தமிழ்நாடு தேவந்திர குல வேளாளர் சங்க பூமிநாதன், வழக்குரைஞர் முருகசீலன், திருவள்ளுவர் நற்பணி மன்ற ராதா கிருஷ்ணன், மும்பை பகுத்தறிவாளர்கள் கழகம் அ. ரவிச்சந்திரன்,
விஜய் ரசிகர் மன்ற மும்பை பவுல், சிட்டிசன் பாரம் எஸ் ஏ சுந்தர், கிங் மேகர் காமராஜ் தமிழ் டிரஸ்ட் எம் சி கே பொன்ராஜ், கவிஞர் முருகன், மும்பை தமிழர் நற்பணி மன்றம் இரா காந்தி போன்ற பலர் கலந்துகொண்டனர் (விரிவாக எழதப்படும் )
சமுத்துவ பொங்கல் விழா வரவு செலவு கணக்கு வெளியிடப்படும் ............மும்பை விழித்தெழு இயக்கம்/MVI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக