திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மும்பையில் ஒடுக்கப்படும் மக்களை ஒருங்கிணைக்க விரும்புகிறோம்...MVI

ஆகஸ்ட் 3 ஞாயிறு அன்று தேவந்திர குல வேளாளர் சங்கத்திடம் புரட்சியாளர் அம்பேத்கர் , மாவீரன் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் புகைப்படம் வழங்கப்பட்டது .
இரட்டை மலை சீனிவாசன்,
பண்டித அயோத்திதாசர்,
ராவ் சாகிப் எல். சி . குருசாமி
படத்தை உங்கள் அலுவலகத்தில் வைக்க இயலுமா என்று கேட்டோம். வைக்க முடியும் என்றனர் .. இதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..

தென் இந்திய ஆதி திராவிட மகா சபையில் நடைபெற்ற புதிய நிர்வாகிகளுக்கான பதவி ஏற்பு விழாவில்...
1.பண்டித க அயோத்திதாசர் .
2.இரட்டை மலை சீனிவாசனார் ,
3.பேரறிஞர் அம்பேத்கர் ,
4.பேராசிரியர் தந்தை என் .சிவராஜ் , 
5.மீனாம்பாள் சிவராஜ் ,
6.எல்.சி .குருசாமி ,
7.அய்யன்காளி
8.ஜோதிபாய் பூலே ,
9.சாவித்ரி பாய் பூலே
புகைப்படம் நேற்று கொடுக்கப்பட்டது

தென் இந்திய ஆதி திராவிட மகா சபையில் நடைபெற்ற புதிய நிர்வாகிகளுக்கான பதவி ஏற்பு விழாவில்...
1.பண்டித க அயோத்திதாசர் . 
2.இரட்டை மலை சீனிவாசனார் , 
3.பேரறிஞர் அம்பேத்கர் , 
4.பேராசிரியர் தந்தை என் .சிவராஜ் , 
5.மீனாம்பாள் சிவராஜ் , 
6.எல்.சி .குருசாமி , 
7.அய்யன்காளி
8.ஜோதிபாய் பூலே , 
9.சாவித்ரி பாய் பூலே
புகைப்படம் நேற்று கொடுக்கப்பட்டது
மும்பையில் உள்ள தென் இந்திய ஆதிதிராவிட மகா சபை , தேவந்திர குல வேளாளர் சங்கம், மும்பை அருந்ததியர் சங்கம் போன்ற சங்கங்களை ஒருங்கிணைத்து ஒரு பொது மேடையில் உழைக்கும் மக்களின் மத்தியில் ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காக உழைத்த தலைவர்களின் புகைப்படத்தை ஒவ்வொரு சங்கமும் பகிர்ந்து கொள்ள முன்முயற்சிகள் நடத்து வருகிறன.. வரும் வாரங்களில் மும்பை அருந்ததியர் சங்கத்தை சந்திக்க உள்ளோம்..(மும்பை அருந்ததியர் சங்க தலைவர் நடேசன் உடல் நிலை சரியில்லமால் இருக்கிறார்)
தலித் உட்பிரிவுகளிடம் உள்ள பகைகளை, பிரிவுகளை , இடைவெளிகளை குறைக்க ஒரு சிறு முயற்சியாகவே இவர்களிடம் தொடர்ந்து கருத்து விவாதத்தை நடத்தி வருகிறோம் .. இவர்களை ஒருங்கிணைப்பது தமிழகத்தில் மிக எளிது இல்லை என்றாலும் மும்பையில் இது சாத்தியம் ஆகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன மேலும் ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காக உழைத்த தலைவர்களை சாதியின் தலைவராக பார்க்கும் முயற்சியை தடுத்து ..சுய சாதியை வெறியை /பற்றை தடுத்து ஒட்டுமொத்தமாக ஒடுக்கப்படும் மக்களுக்கும் , அனைத்து உழைக்கும் மக்களுக்கும் போராட ஒருங்கிணைக்க முதலில் தலித் சங்கத்தை , அதன் வழியாக தலித் உழைக்கும் மக்களை அணுக்கி வருகிறோம்... பின்னர் தலித் அல்லாத உழைக்கும் மக்களை , மொழி கடந்த மக்களை ஒருங்கிணைப்போம் ..

ஒவ்வொரு பட்டியல் இன பிரிவில் உள்ள குழுக்களிடம் சுய சாதி பற்று , சுய வரலாறுகளை பேசுவது , தனக்கென தலைவர்களை முதன்மைபடுத்துவதை கொள்கையாக வைத்துள்ளனர் ..இந்த சங்கங்களிடம் விவாதம் நடத்துவது வீண் என்பது பலர் கருத்தாக இருக்கலாம் ..ஆனால் நாங்கள் குறைந்தப்பட்சம் இவர்களிடம் இருக்கின்ற இடைவெளிகளை , பகைகளை குறைத்து சாதி ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டிய அவசியத்தை , சுய சாதி பற்றை ஒழிக்க இவர்களிடம் நீண்ட நெடிய விவாதத்தை தொடங்க இருக்கிறோம்..வாருங்கள் ஆதரவாளர்களை .......
குறிப்பு : மும்பையில் இது போன்ற தலித் அல்லாத உழைக்கும் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்..மராத்திய தலித் அமைப்புகள் கூட சில தலைவர்களை ஏற்றுகொள்ள வில்லை ..இந்திய குடியரசு கட்சி யின் இந்திய தலைவராக இருந்த தந்தை என் .சிவராஜ் புகைப்படம் ..இந்திய குடியரசு கட்சியின் மாநாடுகளில் வைப்பது இல்லை ..
மும்பை விழித்தெழு இயக்கம் /MVI

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக