அனைத்து இந்தியர்களும் இந்துக்களே! இந்துத்துவாவே அனைத்து இந்தியர்களுக்குமான அடையாளம்! -- ஆர்.எஸ்.எஸ் சின் உயர் தலைவர் மோகன் பாகவத்.
மோகன் பாகவத் வெளியிட்ட அறிக்கைக்கு மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக எமது கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகிறோம். சில அடையாளத்தை அல்லது கலாச்சாரத்தை பிறர் மீது திணிப்பது என்பது தூய பாசிசமாகும்.//MVI
மோகன் பாகவத்தின் அறிக்கை, தனித்துவ பண்புகளைக் கொண்ட நமது மாபெரும் தேசத்தின் ஆட்சி அமைப்புக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்.
கலாச்சார, கருத்தியல் பரிமாற்றங்கள் நிகழ்ந்து நூற்றாண்டுகளுக்கு பிந்திய இந்தியாவே இன்று உள்ளது. ஆனால், இந்து தேசமாகவோ, ஒற்றைக்கலாச்சாரம் அல்லது மத அடையாளத்துடன் கூடிய ஒரே சீரான சமூகமாகவோ இந்தியா ஒரு போதும் இருந்ததில்லை. வரையறைப்படி 20 சதவீதத்திற்கு குறைவான மக்களே இந்துக்கள் என்று அழைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள், அவர்கள் முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள் அல்லது இதர ஏராளமான நம்பிக்கையைக் கொண்ட மக்கள் தங்களை இந்து என்றோ இந்துத்துவா என்றோ எவ்வகையிலும் அடையாளப்படுத்தியிருக்க முடியாது.
சில அடையாளத்தை அல்லது கலாச்சாரத்தை பிறர் மீது திணிப்பது என்பது தூய பாசிசமாகும்.
மேலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட நமது ஜனநாயகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாகும்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் இந்த பாசிச சிந்தனை ஏற்கனவே இந்திய சமூகத்தில் போதிய சேதத்தை விளைவித்துள்ளது.
மகாத்மா காந்தியின் படுகொலையிலிருந்து மதச் சிறுபான்மையினருக்கு எதிரான ஆயிரக்கணக்கான கலவரங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் இடிப்பு என வாழும் உதாரணங்கள் நம் முன்னால் உள்ளன. நாம் மீண்டும் இவ்வாறு நடக்க அனுமதிக்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ் இந்து சமூகத்திற்கோ மதத்திற்கோ பிரதிநிதி அல்ல என்று ஓ.எம்.ஏ.ஸலாம் அவர்கள் சுட்டிக்காட்டினார். இந்து சமூகத்தின் பெரும்பாலான மக்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தியலையும், அரசியலையும் நிராகரித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் இம்மாதிரியான அபத்தமான அறிக்கைகள் இந்து சமூகத்திற்கு இழுக்கை ஏற்படுத்தி தரும்.
நமது அமைப்புமுறையை கையகப்படுத்த முனையும் பாசிஸ்டுகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற மக்கள் விழித்தெழ வேண்டும் எனவும் ..ஜனநாயகத்தை காப்பாற்ற போராடும் அமைப்புக்கு மும்பை விழித்தெழு இயக்கம் துணை நிற்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக