செவ்வாய், 29 அக்டோபர், 2013

தீர்மானம் நிறைவேற்றப்படும் தமிழக அரசால் ஏன் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை ..எங்கே சிக்கல் இருக்கிறது ...

தயவு கூர்ந்து இக்கட்டுரை படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்..

தீர்மானம் நிறைவேற்றப்படும் தமிழக அரசால் ஏன் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை ..எங்கே சிக்கல் இருக்கிறது ...

மாநில அரசுகளுக்கு முழமையான அதிகாரம் இல்லாததால்தான் நம்மால் செயல்படுத்த முடியவில்லையா? மாநிலச் சட்டமன்றங்களினால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றால்தான் அமுலாக முடியும்.

மாநிலச் சட்டமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்காமல் நிறுத்திவைக்கும் உரிமை மாநில ஆளுநருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மாநிலச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். இதற்குக் காலவரையறை கிடையாது என்கிற சட்ட வீதி இருப்பதாக புத்தகத்தில் படித்து உள்ளேன்.. இப்படி இருக்கிற நிலைமையில் நமது போராட்டம் எதை நோக்கி இருக்க வேண்டும்.. தமிழ்நாடு தன்னுரிமை பெறுவதன் மூலமே நாம் நமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பது எனது கருத்து ..

மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும்.

புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னது போல "ஒரு அரசியலமைப்புச் சட்டம் சிறப்பானதாக இல்லை என்றாலும் ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்றால் மக்கள் கூடுதலான உரிமைகளைப் பெற்று நலமாக வாழ முடியும்.
 மக்கள் உரிமைகளை மதிக்காதவர் ஆட்சியில் இருந்தால் எவ்வளவுதான் சிறப்பான அரசியலமைப்புச்சட்டம் இருந்தாலும் மக்கள் உரிமையை இழந்து வாழ நேரிடும் என்கிற உண்மையை கடந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நாம் அனுபவித்து வருகிறோம்."

..

இந்திய நிலப்பரப்பில் வாழும் எந்தத் தேசிய இனமும் இன்று நிம்மதியாக இல்லை.உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழி இடம் பெறுவதற்கான உரிமையை இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்ட போதிலும் மைய அரசு இன்றுவரை மறுத்து வருவதைப்பார்க்கிறோம்.
தமிழ்நாடு தன்னுரிமை பெறுவதன் மூலமே நாம் நமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
தன்னுரிமை கோரிக்கைகளை முன்வைக்கும்  காலம் பிறந்துள்ளது..

இந்தியாவின் அனனத்து தேசிய இனங்களுக்கு தன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தன்னுரிமை பெற்ற தேசிய இனங்கள் தாமாக விரும்பி இணைந்த ஒன்றியமாக விளங்க வேண்டும்.

சோசலிசச் சமுதாயக் குடியரசு அமைப்பதே நமது குறிக்கோள்..


இந்த இலக்குகளை அடைவதற்கு  சாதி, மத, வர்க்க வேறுபாடுகளை அற்று ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென்று தமிழினத்தார் யாவரையும் கேட்டுக்கொள்கிறோம்..  
தன்னுரிமை பெற்ற தேசிய இனங்களின் கூட்டாட்சி நாடாக இந்தியா மாறும் போது வல்லரசுகள் ஒவ்வொரு தேசிய இன அரசையும் தனித்தனியே அணுகித் தொழில் அனுமதியைப் பெறுவதென்பது நடைமுறையில் சாத்தியமற்ற செயலாகும்..கூடங்குளம் அணுஉலை அமைத்தல், கெயில் நிறுவனம், நிய ட்ரோன் கைக்கப்படுத்தும் நிலம் போன்றவைகள் சாத்தியம் கிடையாது.
(தமிழ்) தேசிய இன அரசுக்கும், (இந்திய) ஒன்றிய அரசுக்கும் முரண்பாடு ஏற்பட்டால் தேசிய இன அரசின் இறையான்மை மீது ஒன்றிய அரசு மேலாளுமை செலுத்த முடியாது. தன்னுரிமை என்பதின் அடிப்படை இதுதான்.      


தேசிய இனங்களின் தன்னுரிமைக் கோரிக்கை அபாயகரமானது. அது தேசத்தைத் துண்டாக்கும் கோரிக்கை என பல அகில இந்தியக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. இவர்களுக்கு ஆகஸ்டுத் தீர்மானம்  1942 ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரெஸ் மாநாடு  தீர்மானம், 1945 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, 1946bஆம் ஆண்டு அறிவித்த  மௌலான அபுல் கலாம் ஆசாத் திட்டம், 1946 ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையின் குறிக்கோள் தீர்மானம், 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடுத் தீர்மானம் என கடந்த காலங்களில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் கட்சிகள் .தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன..


================================================================================================== 

தற்போதைய அரசமைப்புச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவே உள்ளன.
அவை
௧.. மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட பட்டியலில் 97 விஷயங்களும், மத்திய மாநில அரசுகளுக்குப் பொதுவான பட்டியலில் 67 விஷயங்களும் மாநில அரசுப் பட்டியலில் 66 விஷயங்களும் மட்டுமே சேர்க்கப்பட்டன.        பொதுப் பட்டியலில் ஒதுக்கப்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றி மத்திய அரசு தனியாகவும், மாநில அரசு தனியாகவும் சட்டங்கள் இயற்றுமேயானால் மத்திய அரசின் சட்டமே மேலோங்கி நிற்கும். மூன்று பட்டியலிலும் சேராத விஷயம் ஏதேனும் இருக்குமானால் அவற்றின் மீது அதிகாரம் செலுத்தும் உரிமை அதாவது எஞ்சிய அதிகாரம் (Residuary Powers) மத்திய அரசுக்கே உண்டு. அரசியல் சட்டப்படி அதிகாரப்பங்கீடு என்பது மத்திய அரசைச் சார்ந்தாகவே அமைந்து விட்டது.
௨. அமெரிக்க போன்ற கூட்டாட்சி நாடுகளில் அரசமைப்புப் சட்டத்தைத் திருத்துவது என்பது எளிதான காரியமல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தை மத்திய நாடாளுமன்றத்தில் வருகை தந்துள்ள உறுப்பினர்களில் 2/3 பெரும்பான்மை மூலம் எப்படி வேண்டுமானாலும் திருத்தலாம். மாநிலச் சட்ட மன்றங்கள், இதை அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை. அரசமைப்புச் சட்டத்தின் சில பகுதிகளுக்கான திருத்தங்களை மட்டுமே மாநிலச் சட்டமன்றங்கள் அங்கீகரிக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்திற்கு எந்தத் திருத்தத்தையும் கொண்டுவர மாநிலச் சட்டமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது.
௩. இந்திய அரசமைப்புச் சட்டப்படி மாநிலங்களுக்குத் தனியான அரசமைப்புச் சட்டத்தை வகுத்துக் கொள்ளும் அதிகாரம் கிடையாது. காஷ்மீர் மாநிலம் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இந்திய அரசியல் அமைப்பிலிருந்து மாநிலங்கள் வெளியேறிச் செல்ல முடியாது.இந்த அரசியல் அமைப்புக்கு உட்பட்டே மாநிலங்கள் இயங்க வேண்டும்.
௪. இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் எல்லா மாநிலங்களுக்கும் சம பிரிதிநிதித்துவம் என்ற கோட்பாட்டை இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை, மக்கள் தொகையின் அடிப்படையிலே மாநிலங்களுக்குப் பிரிதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
௫.அமெரிக்க போன்ற நாடுகளில் ஒவ்வொருவருக்கும் இரட்டைக் குடியரிமை உண்டு. ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரே ஒரு குடியுரிமை மட்டுமே வழங்கியுள்ளது.
௬. மற்ற கூட்டாட்சி நாடுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் மத்திய அரசினால் நேரடியாக ஆளப்படுகிற பகுதி உண்டு (Union Territories) இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்குள்ள அதிகாரங்களும் அந்தஸ்தும் இந்தப் பகுதிகளுக்குக் கிடையாது.
௭, கூட்டாட்சி நாடுகளில் அந்த நாடுகளின் அமைப்பினைத் தலைகீழாக மாற்றுவதற்குச் சட்டத்தில் இடமில்லை. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இத்தகைய மாற்றத்திற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்பிலுள்ள கூட்டாட்சி முறையைப் போர்க் காலத்திலோ அல்லது வேறு அவசர காலங்களிலோ முற்றிலுமாக மாற்றிக் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழி வகுக்கலாம். அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டால் மாநிலங்களில் பாட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ள எந்த விஷயத்தைப் பற்றியும் மத்திய நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். மாநில அரசுகளின் அதிகாரங்களில் தலையிட்டு வழிமுறைகளைக் காட்ட உத்தரவிடுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு  எந்த மாநிலத்திலாவது நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது என்று குடியரசுத்தலைவர் கருதினால், அந்த மாநிலத்தில் அவசர நிலையைப் பிரகடனம் செய்ய இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
௮. சர்வதேசக் கடமையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் நேர்ந்தால் மாநிலப் பட்டியலிலுள்ள எந்தப் பொருளைப் பற்றியும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம், மாநிலத்துறைகளில் மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிப்பு செய்யலாம்.
௯. IAS, IPS, IFS போன்ற அகில இந்திய அரசுப் பணிகளுக்கு தேர்ந்தேடுக்கப்படுபவர்களை மத்திய அரசே நியமிக்கிறது. அவர்களைப் பல மாநிலங்களுக்கு ஒதுக்குகிறது. மாநில அரசின் கீழ் அவர்கள் வேலை பார்த்தாலும் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டவர்களே. அமெரிக்க போன்ற நாடுகளில் மாநிலப் பணிகள் வேறாகவும், மத்தியப் பணிகள் வேறாகவும் உள்ளன.
௧௦. மாநில ஆளுநர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள், குடியரசுத் தலைவர் விரும்புகிற காலம் வரை அவர்கள் அந்தப் பதவியை வகிக்கலாம். ஆளுநர்கள் மத்திய அரசின் தரகர்களாகவேஇருக்கிறார்கள்.
௧௧. தேர்தல் ஆணையத்திற்குரிய அதிகாரிகளைக் குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். மாநில அரசுகளுக்குத் தேர்தல் ஆணையத்தின் நியமனத்திலோ, நிர்வாகத்திலோ எந்தவிதப் பங்குமில்லை.
௧௨. அமெரிக்க போன்ற நாடுகளில் இரட்டை நீதிமன்ற முறைகள் உள்ளன. மாநிலச் சட்டங்களை அமுல் நடத்துவதற்கு மாநில அரசு தனி நீதிமன்றங்களையும், மத்திய சட்டங்களை அமுல் நடத்த மத்திய அரசு தனி நீதிமன்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரே ஒரு உச்ச நீதிமன்றமும், அதன்கீழ் மாநில உயர்நீதிமன்றங்களும் இயங்குகின்றன.
௧௩. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின்படி ஒரு மாநிலத்தின் எல்லைகளை விரிவாக்கவோ அல்லது குறைக்கவோ மத்திய அரசினால் முடியும். மாநிலத்தின் பெயரையே மாற்றியமைக்கலாம். ஒரு மாநிலமே இல்லாமலும் செய்து விடலாம்.
௧௪. கூட்டாட்சி அமைப்பின் முக்கியமான அம்சம் நிதிப் பங்கீடாகும். மத்திய மாநில அரசுகள் சுதந்திரமாக இயங்குவதற்குத் தேவையான நிதி அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும். ஆனால் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகளுக்கு ஏற்ற நிதி வருவாய் வழிமுறைகளோ அவற்றை உருவாக்கும் அதிகாரங்களோ மாநிலங்களுக்கு இல்லை. மாநிலங்கள் நிதிக்காக மத்திய அரசிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலைமை நீடிக்கிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னது போல ஒரு அரசியலமைப்புச் சட்டம் சிறப்பானதாக இல்லை என்றாலும் ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்றால் மக்கள் கூடுதலான உரிமைகளைப் பெற்று நலமாக வாழ முடியும். மக்கள் உரிமைகளை மதிக்காதவர் ஆட்சியில் இருந்தால் எவ்வளவுதான் சிறப்பான அரசியலமைப்புச்சட்டம் இருந்தாலும் மக்கள் உரிமையை இழந்து வாழ நேரிடும் என்கிற உண்மையை கடந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நாம் அனுபவித்து வருகிறோம்.
நமது திட்டம் :-
நாட்டின் பாதுகாப்பு (Defence), போக்குவரத்து மற்றும் தொடர்புச் சாதனங்கள் (Communication) ,வெளிநாட்டுறவு (External Affairs) மற்றும் நாணய அச்சடிப்பு ஆகிய துறைகள் மத்திய அரசுக்கும் மற்ற விருப்பு அதிகாரப் பட்டியலிலுள்ள (Discretionary List) அதிகாரங்கள் அனைத்தும் மொழிவழித் தேசிய இன அரசுகளிடமே இருக்கவேண்டும்  

இந்தியாவின் அனனத்து தேசிய இனங்களுக்கு தன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தன்னுரிமை பெற்ற தேசிய இனங்கள் தாமாக விரும்பி இணைந்த ஒன்றியமாக விளங்க வேண்டும்.

சோசலிசச் சமுதாயம்/குடியரசு அமைப்பதே நமது குறிக்கோள்..


இந்த இலக்குகளை அடைவதற்கு  சாதி, மத, வர்க்க வேறுபாடுகளை அற்று ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென்று தமிழினத்தார் யாவரையும் கேட்டுக்கொள்கிறோம்..  
 


தோழமை மிக உறவுகளுக்கு
 (எனக்கான சாதி மத வர்க்க வேறுபாடுகள் அற்ற ஒரு நாடு உருவாகும் வரை நானும் அகதியே )

மும்பை விழித்தெழு இயக்கம்
.......உலகத் தமிழர் அனைவரும் ஒன்றிணைவோம்,
எம்மின விடியலுக்கு குரல் கொடுப்போம்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக