அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.
31/12/2010 : வெள்ளிக் கிழமை
மாலை 5 மணி முதல்
சைதைத்தேரடி
(சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து சற்று துõரத்தில் )
டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளிகொண்டுவர வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் சத்தியசந்திரனுக்கும் தமிழகம் முழுவதும் 100 தியேட்டர்களில் வெளியிடுவதாக அறிவித்திருக்கிற தமுஎசவிற்கும், அதை வெளியிடுவதற்காக ஆகும் செலவு தொகையில் ரூ. 6 லட்சத்தை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்ட மரியாதைக்குரிய எடிட்டர் லெனினுக்கும் –
எங்கள் விழித்தெழு/Vizhithezhu இயக்கம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுபோலவே அண்ணல் அம்பேத்கருக்கு முக்கியத்துவம் தரும் இந்த மாற்றத்திற்காக தமுஎசவிற்கும் அதன் பொதுச் செயலாளர் தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்

தமுஎச போன்ற அமைப்புகள் முயற்சி செய்தால் அம்பேத்கர் டி சர்ட் அணிவதை இன்னும் பரவலாக்க முடியும். அம்பேத்கர் டி சர்ட்டை தமுஎச சார்பாகவே கொண்டு வந்து, தனது சங்கத் தோழர்கள் அதை அணிவதை கட்டயாப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
மற்றப்படி, அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.




தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு