வியாழன், 30 டிசம்பர், 2010
விடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011
அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.
31/12/2010 : வெள்ளிக் கிழமை
மாலை 5 மணி முதல்
சைதைத்தேரடி
(சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து சற்று துõரத்தில் )
டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளிகொண்டுவர வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் சத்தியசந்திரனுக்கும் தமிழகம் முழுவதும் 100 தியேட்டர்களில் வெளியிடுவதாக அறிவித்திருக்கிற தமுஎசவிற்கும், அதை வெளியிடுவதற்காக ஆகும் செலவு தொகையில் ரூ. 6 லட்சத்தை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்ட மரியாதைக்குரிய எடிட்டர் லெனினுக்கும் –
எங்கள் விழித்தெழு/Vizhithezhu இயக்கம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுபோலவே அண்ணல் அம்பேத்கருக்கு முக்கியத்துவம் தரும் இந்த மாற்றத்திற்காக தமுஎசவிற்கும் அதன் பொதுச் செயலாளர் தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்
தமுஎச போன்ற அமைப்புகள் முயற்சி செய்தால் அம்பேத்கர் டி சர்ட் அணிவதை இன்னும் பரவலாக்க முடியும். அம்பேத்கர் டி சர்ட்டை தமுஎச சார்பாகவே கொண்டு வந்து, தனது சங்கத் தோழர்கள் அதை அணிவதை கட்டயாப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
மற்றப்படி, அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.
புதன், 29 டிசம்பர், 2010
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம்
"Business Standard" - ல் இன்று (29-12-2011) வந்த செய்தி
$450-million (Rs.3000 – 4000 crore) Mega Undersea Power Transmission link between India and Sri Lanka
http://business-standard.com/india/news/india-plans-underwater-power-line-to-sri-lanka/419973/
285 Kilometer India-Srilanka Power link which includes submarine cables over 50 கம்.
HVDC overhead lines from Madurai to the Indian coast (near Rameshwaram) (139 km), a 400 KV HVDC cable from the Indian coast to the Sri Lankan coast (39 km), a 400 KV HVDC overhead line from the Sri Lankan coast to Anuradhapura/Puttalam (125km) via Talaimannar..
Jointly implemented by Power Grid Corporation of India Ltd (PGCIL) and Ceylon Electricity Board (CEB)
Estimated cost of this venture will be Rs 3,000-4,000 crore Transmit about 1,000 Mw Implemented by 2014
“We are going to sign the MoU (Memorandum of Understanding) with the Sri Lankan side for the project in December. After this, it will take us six months to start work on the development of the project. We will complete the project within three years,” Power Grid Chairman and Managing Director S K Chaturvedi said.
Although India suffers from a power shortage and both governments are attaching top priority to the two projects, Tamil Nadu’s influence over the central government has delayed the projects.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நாம் சந்திக்கப்போகும் பாதிப்புகள்:
கடந்த சில வருடங்களாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே மின் பற்றாக்குறை இருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்கு மின்விநியோகம் செய்வதால் இந்தியா இருளில் தள்ளப்படும்
இந்தியாவில் 17சதவிகித மின் பற்றாக்குறை என்பது நிரந்தரமான பிரச்னையாக இருக்கிறது. இந்தியாவில் 30 சதவிகித மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கும்போதே இந்தப் பற்றாக்குறை இருக்கிறது. அப்படியிருக்கையில், இலங்கைக்கு ஏன் மின்சாரம் வழங்க வேண்டும்?
பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு வரை 160 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா கடல்பகுதியில் 3600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்களும், அரிய பவளப் பாறைகளும், அவற்றின் மூலமாக உருவான 21 குட்டித் தீவுகளும் உள்ளன. 1986-ம் ஆண்டு இப்பகுதியை ?தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா? என அறிவித்த தமிழக அரசு, பல்வேறு பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் கடன் வாங்கி இதனைப் பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இவையெல்லாம் என்னவாகும்?
மண்டபம் - தலைமன்னாருக்கு இடைப்பட்ட 40 கி.மீ. தூர கடல் பகுதியில் மின்சாரம் கொண்டு செல்வதற்காக கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணியால் உயிரினங்களின் வாழ்வியல் சூழல் பாதிப்பிற்குள்ளாகும். அங்குள்ள அரிய வகைத் தாவரங்களும், அரிய வகை உயிரினங்களும் அழிந்து விடும். சேதுசமுத்திரக் கால்வாய் அமைப்பதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ, அது அத்தனையும் இந்த மின்சாரத் திட்டத்திற்கும் பொருந்தும்.
மின் பகிர்மானத்தின்போது சிறிது கவனக்குறைவு நேர்ந்தாலும் அதன் விளைவுகள் அப்பகுதியிலுள்ள மீனவர்களை கடுமையாக பாதிக்கும். அப்பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படலாம். மீனவர்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
தமிழகத்தின் மின் பற்றாக்குறை மூன்றாண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இன்றைக்கு தமிழகத்துக்கு ஒரு ஆண்டுக்கு எழுபத்து ஏழாயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ, எழுபதாயிரம் மில்லியன் யூனிட்டிற்கும் குறைவு. மின் பற்றாக்குறையால் பல தொழில்கள் அழிந்துபோகும்.
தொழிற்சாலைகளும், விவசாயம் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புகளை சந்திக்கும் இதன் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் ஆபாயம் உள்ளது. இந்தியா முழுவதுமே கடுமையான மின்வெட்டு உள்ள நிலையில் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவது எந்த வகையில் நியாயம்?
கேள்வி
சேதுசமுத்திர திட்டத்தால் இராமர் பாலம் பாதிக்கப்படும் என்று சொன்னவர்கள் ராமேசுவரத்திலிருந்து தலைமன்னார் (இராமர் பாலம்) ஊடக கடலின் அடித்தளத்தில் செல்லும் மின்சாரத்தால் இராமர் பாலம் பாதிக்காதா? இதற்கு மட்டும் மத்திய அரசாங்கம் எப்படி அனுமதி கொடுத்தது.
சல்லிக்கட்டு விளையாடுவதையே காட்டுமிராண்டித்தனம் என்று சொன்ன செயராம் ரமேசு-ன் அமைச்சகம் இத்திட்டத்தால் கடல்சார் உயிரினமும், கடற்பாசிகளும் அழியும் என்று அவருக்கு தெரியாமல் போனதேன்?
இத்திட்டத்தை நிறைவேற்ற காத்திருக்கும் "கிரிட்பவர் (Power Grid Corporation of India Ltd.) " நிறுவனத்தின் தலைவர் எஸ். கே. சதுர்வேதி அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.
Power Grid Corporation of India Ltd.
Add: Plot No. 2, "Saudamini"Sector-29,
Gurgaon - 122 001Tel: 0124 - 2571800Fax: 0124 - 2571990
investors@powergridindia.com
S K Chaturvedi, Chairman & MD
skchaturvedi@powergridindia.com
R N Nayak, Director (Operations)
nayak@powergridindia.com
=====
பின்னூட்டம் (Comments) பதிவு செய்யவும்
ஹ்ட்ட்ப்ுஸ்iness-standard.com/india/news/india-plans-underwater-power-line-to-sri-lanka/419973/
http://asian-power.com/regulation/in-focus/india-sri-lanka-power-trade-starts-in-2014
http://oneclick.indiatimes.com/article/01VH6LXavkaaQ#
http://www.asiantribune.com/news/2010/09/21/sri-lanka%E2%80%99s-1000mw-trincomalee-coal-power-plant-deal-be-sealed-next-month
http://www.thinkindia.net.in/2010/12/india-plans-underwater-power-line-to-sri-lanka-.html
http://www.easteconomist.com/2010/12/india%e2%80%99s-first-undersea-power-line-to-sri-lanka/
http://www.rediff.com/business/report/india-plans-underwater-power-line-to-sri-lanka/20101229.htm
http://www.sify.com/finance/india-to-start-power-trade-with-sri-lanka-by-2014-news-news-klzbvzdhgeb.html
http://www.anhourago.in/show.aspx?l=7387709&d=502
http://www.financialexpress.com/news/powergrid-to-foray-into-us-sri-lanka/193373/
http://prosperingindianpowersector.blogspot.com/2010/11/india-to-start-power-trade-with-sri.html
http://www.sari-energy.org/PageFiles/Countries/Sri_Lanka_Energy_detail.asp
=====
நன்றி
முத்தமிழ்வேந்தன்சென்னை
17,368 farm suicides in 2009- Untouchable country
MUMBAI, December 28, 2010
17,368 farm suicides in 2009
Worst figure in six yearsAt least 17,368 Indian farmers killed themselves in 2009, the worstfigure for farm suicides in six years, according to data of theNational Crime Records Bureau (NCRB). This is an increase of 1,172over the 2008 count of 16,196. It brings the total farm suicides since1997 to 2,16,500. The share of the Big 5 States, or ‘suicide belt' —Maharashtra, Karnataka, Andhra Pradesh, Madhya Pradesh andChhattisgarh — in 2009 remained very high at 10,765, or around 62 percent of the total, though falling nearly five percentage points from2008. Maharashtra remained the worst State for farm suicides for thetenth successive year, reporting 2,872. Though that is a fall of 930,it is still 590 more than in Karnataka, second worst, which logged2,282 farm suicides.Economist K. Nagaraj, author of the biggest study on Indian farmsuicides, says, “That these numbers are rising even as the farmerpopulation shrinks, confirms the agrarian crisis is still burning.”Maharashtra has logged 44,276 farm suicides since 1997, over a fifthof the total 2,16,500.
Within the Big 5, Karnataka saw the highest increase of 545 in 2009.
Andhra Pradesh recorded 2,414 farm suicides —309 more than in 2008
Madhya Pradesh (1,395) and Chhattisgarh (1,802)saw smaller increases of 16 and 29.
Outside the Big 5, Tamil Nadu doubled its tally with 1,060, against 512 in 2008
In all, 18 of 28 States reported higher farm suicide numbers in 2009.
Some, like Jammu and Kashmir or Uttarakhand, saw a negligible rise.
Rajasthan, Kerala and Jharkhand saw increases of 55, 76 and 93. Assam and West Bengalsaw higher rises of 144 and 295.
NCRB farm data now exist for 13years.
In the first seven,.1997-2003, there were 1,13,872 farm suicides, an average of 16,267 a year. In the next six years 1,02,628farmers took their lives at an average of 17,105 a year.
This means,on average, around 47 farmers — or almost one every 30 minutes —killed themselves each day between 2004 and 2009.Lower their averageAmong the major States, only a few including Karnataka, Kerala andWest Bengal avoided the sharp rise these six years and lowered theiraverage by over 350 compared to the 1997-2003 period. In the sameperiod, the annual average of farm suicides in the Big 5 States as awhole was more than 1,650 higher than it was in 1997-2003.--------------------------------------------------------------------------------Total number of farm suicides since 1997 is 2,16,500
The share of Big 5 States remains very high at 10,765
http://www.thehindu.com/todays-paper/article996204.ece
திங்கள், 20 டிசம்பர், 2010
ஒரிஜினல் மாத்திரையும் எமனாகும்
போலி மருந்துகள் விற்பனை.. காலாவதியான மருந்துகளை பாட்டில் மாற்றிவிற்று மோசடி..’ என்று ஊரே பேசிக் கொண்டிருந்த நேரத்தில்தான்,சைலன்ட்டாக ஒரு இ-மெயில் இந்தியா முழுக்கப் பரவிக் கொண்டிருந்தது..
அதைவிட அதிர்ச்சியான தகவல்களைத் தாங்கி!உலக அளவில் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் இந்தியாவில் தங்கு தடையின்றிவிற்கப்படுகின்றன..
இதய பாதிப்பு, நுரையீரல் பாதிப்ப்பு, சிறுநீரகபாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல பக்க விளைவுகளைக் கொண்டிருப்பதால்தான்பெரும்பாலான உலக நாடுகள் அவற்றைத் தடை செய்துள்ளன!’ என்று எச்சரித்த அந்தஇ-மெயிலில் அப்படிப்பட்ட ஆபத்தான மாத்திரைகளின் பட்டியலும்தரப்பட்டிருந்தது.
அதில்தான் நம் நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சிகாத்திருந்தது.ஆம்! நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள ஆக்ஷன் 500-ல் ஆரம்பித்து, நமக்குள்இரண்டறக் கலந்து விட்ட காய்ச்சல் - தலைவலி மாத்திரைகள் பலவும்தான் அந்தப்பட்டியலில் முதல் வரிசையில் நின்றன!“
இந்த மாத்திரைகளில் நிஜமாகவே இப்படிப்பட்ட பக்க விளைவுகள் உள்ளதா?
”சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர், எம். பிரசன்னாவிடம் விளக்கம்கேட்டோம்..“ஆமாம். இந்த இ-மெயிலில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்கள் நூற்றுக்குநூறு உண்மைதான்!” என்று அதிர வைத்தவர், தன் பேச்சுக்கிடையே பிரபலமான வேறுசில வலி நிவாரணி மாத்திரைகளின் பெயர்களையும் சேர்த்தே-தான்குறிப்பிட்டார்..“சாதாரண தலைவலி, காய்ச்சலுக்காக நாம் வாங்கும் மாத்திரைகளில் ‘பெனில்-ப்ரபோனாலமைன்’, ‘அனால்ஜின்’, ‘நிமுசுலைடு’ போன்ற வேதிப்பொருட்கள்உள்ளன.
௧) ‘பெனில் ப்ரபோனாலமைன்’, நம் நரம்பு மண்டலத்தை பாதித்துபக்கவாதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
௨) ‘அனால்ஜின்’, எலும்புமஜ்ஜையின் செல் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி அதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
௩) ‘நிமுசுலைடு’, கல்லீரலையே செயலிழக்கச் செய்யக்கூடியது.இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதத்தில் இருக்கிறது மற்றமாத்திரைகளின் செயல்பாடு!
சாதாரண வயிற்று மந்தம், அஸிடிட்டிபிரச்னைக்காகத் தரப்படுகிற மாத்திரைகளில், ‘சிசாபேர்டு’ என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது இதயத் துடிப்பு சீராக இயங்குவதையே தடுக்கக் கூடியது.இவற்றில், ‘அனால்ஜின்’ என்ற வேதிப்பொருள் மட்டுமே இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருக்கிறது.
மற்றவற்றுக்கு எந்தத் தடையும் இல்லை.இப்படிப்பட்ட மருந்துகளை இப்போ தெல்லாம் பெரும்பாலான டாக்டர்கள்பரிந்துரைப்பதில்லை. எனவே, விளம்பரத்தைப் பார்த்து விட்டோ மருந்துக்கடைக்காரரின் பரிந்துரையின் பேரிலோ.. தாங்களாகவே ஏதோ ஒரு மாத்திரையைவாங்கிப் போட்டுக் கொள்ளும் போக்கை மக்கள் நிறுத்த வேண்டும். ஆனால்இது தற்காலிகத் தீர்வுதான். ஆபத்தான பக்க விளைவுகள் கொண்ட மாத்திரைகள்கடைக்கே வராமல் தடுத்தால்தான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும்!” என்றார் அவர்.“இந்தியாவில் இந்த மருந்துகளைத் தடை செய்யாததற்கு என்ன காரணம்?” என்றகேள்வியோடு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிடம் ஓடினோம்.. “ஐயையோ..இது அரசாங்கம் பேச வேண்டிய விஷயமாச்சே!” என்று வழக்கம் போல அதிகாரிகள்நழுவினார்கள்.
சமூக அக்கறையுள்ள சிலர் மட்டும் ‘பெயர் வெளியிட வேண்டாம்’என்ற வேண்டுகோளோடு பேசினார்கள்..
“மருந்துகளைத் தடை செய்ய வேண்டும் என்றால், அது ஆபத்தான மருந்து என்றுநிரூபித்தாக வேண்டும்.
ஆராய்ச்சி செய்துதான் அதை நிரூபிக்க முடியும்.அப்படிப்பட்ட ஆராய்ச்சியே இங்கே நடக்காதபோது, தடை எப்படி விதிக்கமுடியும்?” என்று கொதித்தார்கள் அவர்கள்.“இந்த மருந்துகள்தான் என்றில்லை.. நாம் அன்றாட வாழ்க்கையில் உட்கொள்ளும்நிறைய மருந்துகளை வெளிநாட்டு மருத்துவ இயக்குனரகங்கள் தடை செய்துள்ளன.எந்த மாத்திரையுமே விற்பனைக்கு வருவதற்கு முன்னால் பல கட்டங்களில் சோதனைசெய்யப்படும். பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்று அந்த சோதனைகளில்நிரூபித்துதான் அவை சந்தைக்கு வருகின்றன.ஆனால், அந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பிராக்டிகலாக பலபிரச்னைகள் எழலாம். தொடர்ந்து அந்த மருந்தை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது, அது பரிசோதனையில் காட்டாத தன் கொடூர குணத்தைக்காட்டலாம். அப்படிக் காட்டும் பட்சத்தில், ‘இந்த மருந்தால் இந்தநோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தன’ என்று வெளிநாட்டுமருத்துவர்கள் ஒரு முழுமையான ரிப்போர்ட் தயாரிக்கிறார்கள். அந்தரிப்போர்ட்டை அங்குள்ள மெடிக்கல் கவுன்ஸில் கேட்டுப் பெறுகிறது. அப்படிவரும் ரிப்போர்ட்களை அடிப்படையாக வைத்துதான் வெளிநாட்டில் ஒரு மருந்தைத்தடை செய்கிறார்கள். நம் நாட்டில் பெரும்பாலான டாக்டர்கள் இப்படியெல்லாம்ரிப்போர்ட் தயாரிப்பதே இல்லை. தயாரித்தாலும் நமது ‘ட்ரக் கன்ட்ரோல்போர்டு’ அதைக் கேட்டுப் பெறவோ ஆராய்ச்சி செய்யவோ ஆர்வம்காட்டுவதில்லை!” என்று ஆதங்கப்பட்டார்கள் அவர்கள்.இந்த விஷயத்தில் மேலும் சில அறிவியல் உண்மைகளை நமக்குப் புரிய வைத்தார்,
சென்னையிலுள்ள அன்னை வேளாங்கண்ணி ஃபார்மஸி கல்லூரியின் முதல்வர் எம்.செந்தில்குமார்..“உலக அளவில் இப்போது தடை செய்யப்பட்டுக் கொண்டிருப்பவை எல்லாம்‘காம்பினேஷன் ஆஃப் டிரக்ஸ்’தான். அதாவது, ‘பல மருந்துகளைக் கலந்து ஒரேமாத்திரையாகத் தரும் கலாசாரம் தவறு’ என்று உலகம் உணரத்துவங்கியிருக்கிறது.
ஒரு மாத்திரை, காய்ச்சல் தலைவலி இரண்டையும் போக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. காய்ச்சல் இல்லாமல் வெறும் தலை வலி மட்டும் உள்ளநோயாளியும் அதே மருந்தைப் பயன்படுத்துகிறார். தலைவலி சரியாகி விடுகிறது.ஆனால், காய்ச்சலை சரியாக்கும் வேதிப் பொருள் தேவையே இல்லாமல் அவர்உடலில் சேருகிறது. இப்படிச் சேரும் வேதிப் பொருட்கள்தான் பக்க விளைவுகளைஏற்படுத்துகின்றன.இதை உணர்ந்து இப்போதெல்லாம் வெளி நாடுகளில், காய்ச்சலுக்குத் தனியே,தலைவலிக்குத் தனியே-தான் மாத்திரைகளைப் பரிந்துரைக்-கிறார்கள்.அப்படிப்பட்ட மாத்தி-ரைகள் கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்-தாலும் அந்நாட்டுமக்கள் வாங்குகிறார்கள். ஆனால் நம் நாட்டில் கதையே வேறு! தலைவலி, ஜல-தோஷம், மூக்கடைப்பு, உடல் அசதி, காய்ச்சல்.. இப்படி எல்லா பிரச்னைகளும்ஒரே மருந்தில் குணமாகி விட வேண்டும்.. அந்த மருந்தும் விலை மலிவாக இருக்கவேண்டும் என்று நம் நாட்டு மக்கள் நினைக்கிறார்கள். டாக்டர்களும் அந்தஎதிர்பார்ப்புகளை ஈடு செய்ய வேண்டியிருக்கிறது.வேறு மருந்துகளைக் கலக்காமல் காய்ச்சலுக்கு மட்டுமான.. தலை-வலிக்குமட்டுமான மருந்துகளை உலக அளவிலான சில பெரிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.ஆனால், அவை கொஞ்சம் விலை அதிகம். அந்த மாத்திரைகளை எழுதிக் கொடுத்தால்மக்கள் அந்த டாக்டரையே புறக்கணிக்கிறார்கள். நம் மக்கள் முதலில்மருந்துகளின் இயல்பைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு நம் வியாதிஎத்தனை சீக்கிரம் குணமாகிறது என்பது முக்கியமில்லை.. வருங்காலத்தில் அதுபெரிய பிரச்னைகள் எதையும் கொண்டு வராமல் இருக்க வேண்டும் என்பதுதான்முக்கியம். இதை அனைவரும் உணர வேண்டும்!” என்றார் அவர்.சென்னையைச் சேர்ந்த சித்த வைத்தியரும், ‘பூவுலக நண்பர்கள்’ இயக்கத்தின்தலைவருமான சிவராமனிடமும் இதுபற்றிப் பேசினோம்.. “ஒவ்வொரு நாட்டுக்கும்மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இருக்கிறது. அந்தத் துறையில்அமெரிக்காவின் ‘ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன்’, நவீன மருத்துவஉலகில் அசைக்க முடியாத அளவுக்கு இயங்கி வருகிறது. அங்கு தடை செய்யப்பட்டபல மருந்துகள் நமது நாட்டில் புழக்கத்தில் இருந்து வருவதுவெட்கக்கேடானது.கேட்டால், ‘ஒவ்வொரு நாட்டுக்கும் மருந்துப் பொருட்களின் பயன்பாடுவேறுபடும்’ என்கிறார்கள். உலகம் முழுதும் இருக்கும் மனித இனம் ஒன்றுதானே?நமது நாட்டில் இருக்கக் கூடிய சில பலவீனங்களையும் மக்களின் அறியாமையையும்பயன்படுத்திக் கொண்டு, சிலர் வியாபார நோக்கத்தோடு செயல்படுகிறார்கள்.இங்கே, மருத்துவரின் சீட்டு இல்லாமல், மருந்து வாங்க முடிகிறதுபாருங்கள்.. இந்த நிலையே மிகத் தவறானது. இன்று, குறிப்பிட்ட சில தூக்கமாத்திரைகளும், மயக்க மருந்துகளும்தான் மருந்துச் சீட்டு இன்றி வாங்கமுடியாது என்ற சட்டத்தின் படி விற்கப்படுகிறது, மருந்து மாத்திரைகள்எல்லாவற்றையுமே அந்த சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான்மக்கள் தாங்களாக ஏதேனும் மாத்திரையை வாங்கிச் சாப்பிட மாட்டார்கள்.எங்கே..? ‘தலைவலியா? வாங்கிச் சாப்பிடுங்கள்..’ என்று மாத்திரைகளுக்குஊரறிய டி.வி விளம்பரமே தரப்படும் நாடு இது. இங்கே இந்தச் சட்டமெல்லாம்வருமா? வியாபாரிகளும் பணமே குறிக்கோளாக செயல்படும் மருத்துவஅதிகாரிகளும் அதை வர விடுவார்களா? தெரியவில்லை!” என்று ஆதங்கத்தோடுமுடித்தார் அவர்.ஒரிஜினல் மருந்துகளிலேயே இத்தனை தகிடுதத்தம் இருக்கா? அட சாமி!- பாரதி,பாஸ்கர்படங்கள்: சுந்தரம்,ரவிநன்றி தேவதை http://www.dhevathai.com/ActionPages/Content.aspx?bid=468&rid=38
சனி, 18 டிசம்பர், 2010
“வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்"
Trailer://www.youtube.com/watch?v=4seUW50wQpY
மும்பை-- தாராவியில்,
காமராஜர் நினைவு ஆங்கில உயர் நிலைப்பள்ளி,
90 அடி சாலை
பிற்பகல் 3.30 மணிக்கு நடந்த இந்த ஆவணப் படம் வெளியீட்டு விழாவில் தமிழின உணர்வாளர்கள் 130 அதிகமானோர் கலந்து கொண்டனர்.
புதன், 15 டிசம்பர், 2010
வெள்ளி, 3 டிசம்பர், 2010
டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் - திரைப்படம் அல்ல... ஒரு வரலாற்றுப் பாடம்!
இந்த தேசத்தின் மகத்தான மனிதரின்- காலகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையும், தன் வாழ்வையும் அர்ப்பணித்துக் கொண்டவரின்- வாழ்க்கை வரலாறு திரைப்படமாக டிசம்பர் 3ம் தேதி தமிழகத்தில் வெளியாகிறது.
டாக்டர் அம்பேத்கர்!
எளிய மனிதர்களின் வாழ்வில் விளக்கேற்றிட, ஒரு மெழுகுவர்த்தியாய் வெளிச்சம் காட்டிய போராளி அவர்.
அவர் கேட்ட கேள்விகளுக்கு இன்னமும் விடையளிக்க முடியாமல் இந்த மண்ணின் மனசாட்சி தலைகுனிந்தே நிற்கிறது.
ஊடகங்களும், ஆதிக்க சக்திகளும் இந்த திரைப்படத்தை ஒரு பொருட்டாக மதிக்காது. கூடவே ஒதுக்குவதிலும், புறக்கணிப்பதிலும் தெளிவாகவும் அக்கறையாகவும் இருக்கும்.
டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் இத்திரைப்படம் முதலில் சென்னை ஐநாக்ஸ் திரையரங்கில் ஐந்து நாட்களே காண்பிக்கப்படுகிறது. ஆல்பர்ட் திரையரங்கில் தினமும் பகல் காட்சியாக திரையிடப்படுகிறது. அபிராமி, சத்யம்,எஸ்கேப் திரையரங்குகளில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் பகல் காட்சியாக காட்டப்படுகிறது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், எடிட்டர் லெனின் அவர்களின் உதவியால், இப்படத்தின் பிரிண்ட்டை வாங்கி, தமிழகம் முழுவதும் திரையிடவும் முயற்சி செய்து வருகிறது.
நாம், நம்மால் முயன்ற அளவுக்கு நண்பர்களிடமும், நமக்குத் தெரிந்தவர்களிடமும் இத்திரைப்படம் குறித்துப் பேசுவோம். அவரது வாழ்க்கை கூறும் செய்திகளை தமிழகம் அறியச் செய்வோம்.
அதன் ஒரு பகுதியாக, இங்குள்ள இத்திரைப்படத்தின் போஸ்டரை தத்தம் வலைப்பக்கங்களில் ஒரு விட்ஜெட்டாக உருவாக்கி காட்சிக்கு வைப்போம். (code தேவைப்படுமானால்: http://www.flickr.com/photos/mathavaraj/5223653195/" title="ambedkar poster by Maathavaraj, on Flickr">http://farm6.static.flickr.com/5248/5223653195_defc7f4921_m.jpg" width="176" height="240" alt="ambedkar poster" /> )
வாருங்கள், ஊர் கூடி இக்காரியத்தைச் செய்வோம். பெரும் வணிக ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தாலும் நம் இணையவெளி அம்பேத்கருக்காக ஒன்றுகூடி நிற்கட்டும்.
தொடர்புடைய சுட்டிகள்:
1.அம்பேத்கர் விருது பெற்ற முதல்வருக்கு அம்பேத்கர் படம் பற்றி கவலையுண்டா? – மாற்று
2.பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் வேண்டுகோள்! – தீராத பக்கங்கள்
3.இந்த சினிமா வியாபாரம் அல்ல, இயக்கம்! – தீராத பக்கங்கள்
4.அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்.. – உண்மைத்தமிழன்
5.அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு - திரையரங்குகள், நேரம் மாற்றம்..! – உண்மைத்தமிழன்
6.அம்பேத்கர் படம் வெளியாகிறது – குருத்து
7.பாபாசாகேப் அம்பேத்கர் – என் இனிய தமிழ் மக்களே
"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் வெளியீடு....
05/12/2010 :
விழித்தெழு இயக்கம் சார்பாக மும்பையில்.
"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் வெளியீடு....
தமிழர் பாதுகாப்பு காட்சி ஊடகம் (Save Tamils Visual Media) தயாரித்து,
சோமீதரன் இயக்கிய “வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்" Since 10 B.C till May 2009.....
(முதன்மையான அரசியல் நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் என ஒவ்வொன்றையும் தரவுகளோடு முன்வைக்கிறது இந்த ஆவணப்படம்.....)
Trailerhttp://www.youtube.com/watch?v=4seUW50wQpY
5 டிசம்பர் வெளியீடு,
இடம்: காமராஜர் நினைவு ஆங்கில உயர் நிலைப்பள்ளி, 90 அடி சாலை தாராவி மும்பையில்.
நேரம்: பிற்பகல் 2.30 மணிக்கு
மற்றும்
உலகத் தமிழர் பேரமைப்பு சார்பாக மாவீரர் நாள் நிகழ்ச்சி 6.00 மணிக்குநடைப்பெறும்