செவ்வாய், 31 மார்ச், 2009

தமிழன் ஏன் வருத்தப்பட வேண்டும்?

சீன, ஜப்பானிய, ரஷ்ய, பிரெஞ்சு நாட்டுகாரன் இந்தி படிக்க தெரியாததற்கு வருத்தபடுவானா? ஆங்கிலம் படிக்க தெரியவில்லை என்றால் கூட வருத்தப்பட மாட்டான். ஆனால், தமிழ் நாட்டுக்காரன் இந்தி படிக்கலைன்னா, ஆங்கிலம் படிக்கலைன்னா வருத்தபடுவான், ஆனால், தமிழ் படிக்க தெரியலைன்னா மட்டும் பெருமைப்படுவான்.

நான் மும்பை வாழ் தமிழன், எனக்கு இந்தி, மராத்தி, தமிழ், ஆங்கிலம் சரளமாக பேச வரும். ஆனால், நான் தமிழில் பேசத்தான் விருப்பப்டுகிறேன். ஆனால், தமிழ் தெரியாததை எண்ணி பெருமைப்படும் சிறுமை உயிர்கள், தமிழ் உறவுகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

விருப்பம் போல், திறமையை பொறுத்து எத்தனை மொழியை வேண்டுமானாலும் ஒருவன் கற்றுக் கொள்ளலாம். தாய்மொழி தெரியாததற்கு வருத்தபடுவதை போல, வேறெந்த மொழி தெரியவில்லை என்று வருத்தப்பட தேவையில்லை. தெரியாத மொழியை தம் தேவை கருதி கற்றுக் கொள்ள வேண்டியது அவரவர் திறமைக்கு உட்பட்டதே ஒழிய வேறேதும் இல்லை.

அலுவல் காரணமாக

நேபாளம் போகும் ஒருவர், நேபாள மொழி எதிர்ப்பு போராட்டம்தான் நடக்கவில்லையே, தமிழகத்தில் நேபாளம் ஏன் கற்பிக்கபடவில்லை?

தெலுங்கு, கன்னட, மராத்தி, ஒரிய, வங்காளி, காஷ்மிரி இன்னும் பல மொழி எதிர்ப்பு போராட்டம் நடக்க வில்லையே தமிழகத்தில் ஏன் அவையெல்லாம் கற்பிக்க படவில்லை. என கேட்டால் எவ்வளவு நேர்மையாகாதோ அது போலத்தான், இந்தி ஏன் தமிழகத்தில் கற்பிக்க படவில்லை என்ற கேள்வி.

முதலில் நாம் இந்தியர்களே அல்ல, ஆங்கிலேயனிடமிருந்து விடுதலை பெற்ற இந்த நிலப்பரப்பு மீண்டும் பார்ப்பனீய பனியா கும்பலுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறது, அதை அறியாமல் நாம் தொடர்ந்து மேலோட்டமான உண்மை பேசி ஒன்றும் உதவாமல் அடிமையாக இருக்க பழகிவிட்டோம்.

இந்தியா என்ற ஒரு தேசியம் எப்படி தமிழர்கள் மீது திணிக்கப்பட்டதோ?

இந்து என்ற , பார்ப்பனீய மதம் எப்படி தமிழர்கள் மீது திணிக்கப்பட்டதோ?

அது போலத்தான் இந்தியும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது.

இந்த பண்பாட்டு படையெடுப்பை முறியடிக்க தமிழர்கள் இன்னும் தயாராகவில்லை. அல்லது சரியான புரிதல் ஏற்படவில்லை. இந்தி தெரியாதது பெரிய பிழை போல கருதுகின்றனர். இந்திக்காரன் இந்தியும், ஆங்கிலமும் கற்க, தமிழன் மட்டும் ஏன், ஆங்கிலம், இந்தி என தன் தாய்மொழியல்லாத மற்ற இரு மொழிகளை கற்க கட்டாயபடுத்தப்பட்டு, படிக்கும் வயதிலேயே சுமைதூக்கி பழக வேண்டும்.

தமிழன் தன் மொழியை அறிவியல், அறிவு ரீதியாக வளர்த்து, தம் மொழியை பிறர் கற்கும்படி செய்வதை விட்டு விட்டு மேம்போக்கான கருத்துக்களை பதிவதை தவிர்க்க வேண்டும். பதிவர்கள் இது போன்று கருத்துகளை பதிந்து தங்கள் மேதாவிதனத்தை காட்டிக் கொள்கின்றனர், உலக அனுபவத்தை பெற்றுக் கொண்டதை போன்று பீற்றிக் கொள்கின்றனர்.

எ.கா: http://nilaaavan.blogspot.com/2009/03/blog-post_30.html

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான், இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அதில் தவறு கிடையாது, அதை இந்த அரசியல் பொறுக்கிகள் தவறாக பயன்படுத்திக் கொண்டனர் அவ்வளவுதான். மொழிக்காக உயிர்விட்ட, விட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு இனத்தை சார்ந்த ஒரு இனத்தின் பெருவாரியான மக்களுக்கு மொழிக்கொள்கை உருவாகவில்லை, மொழியை குறித்த விழிப்புணர்வு இல்லை. தமிழ்படிக்க தமிழ்நாட்டில் கட்டாயமில்லை. வேண்டுமானால், தமிழ்படிக்காமலேயே கல்வி கற்கலாம்

நான் தமிழ் வெறியனல்ல, மாறாக எத்தனையோ என் நண்பர்கள் தாய்மொழி தமிழாக இருப்பதால், மும்பையில் தங்களுடைய படிப்பை மராத்தி, இந்தி சரியாக வராததால் இடையிலேயே கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது என்னுடைய சொந்த அனுபவம்.

இந்தி கற்பிக்கப் பட்டாலும் அவர்களால் ஏன் புலமை பெற இயலவில்லை?

அறிவியலை, புவியியலை, மற்ற மற்ற பாடங்களை தமிழிலேயே கற்றிருந்தால் நல்ல அறிவாளியாக இருந்திருக்கும் வாய்ப்புள்ள பிள்ளைகளும் இதே நிலையை அடைகின்றனர். இதற்கெல்லாம் காரணம் நம்மை அடமானம் வைத்த இந்த அரசியல்வாதிகள். இன்றும் நான் எடுக்கும் வகுப்புகளில் மற்ற மொழியும் சரியாக வாராது, சொந்த மொழியும் சரியாக தெரியாது விழி பிதுங்கும் மாணவர்களை பார்க்கிறேன். இவர்களின் இந்த பாதி புரிதல் எந்த வகையிலும் அறிவு வளர்ச்சி தேடலுக்கு துணை நிற்காது, முதலாலித்துவத்திற்கு அடிமைகளை மட்டுமே உருவாக்கும்.

தமிழன் தமிழ் படித்து முன்னேற, தமிழ் படித்தால் வாழ வழி செய்யும் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுங்கள். தமிழனை ஏய்த்து காலம் காலமாக ஓட்டுப் பொறுக்கி தின்ற, இன்னும் திங்க வாய்ப்பு கேட்டு வரும் அரசியல் வாதிகளை மலமடித்து விரட்டுங்கள்.

மேம்போக்கான உண்மை அபாயகரமானது- பகத்சிங்.

வெள்ளி, 13 மார்ச், 2009

கணக்கில் புலி!

புகழ்பெற்ற கணிதமேதை கார்ல் காஸ் ஜெர்மனியில் படித்துக் கொண்டிருக்கும்போது நடந்த நிகழ்ச்சி இது. 1 முதல் 100 முடிய உள்ள எண்களைக் காட்டி மொத்தத் தொகை எவ்வளவு என்று கணக்குப் போட வேண்டும் என்று கூறி அதற்கு 10 மணித்துளிகள் அவகாசம் தந்தார்.

30 நொடிகளில் கார்ல் காஸ் எழுந்து நின்றார். நான் சொன்ன கணக்கு உனக்கு விளங்கவில்லையா என்று கேட்டவாறு ஆசிரியர் தொடர்ந்தார்.

இல்லை, அய்யா! நான் விடையைக் கண்டுபிடித்து விட்டேன் என்றார் கார்ல்.

நீ ஒன்றும் எழுதவே தொடங்கவில்லையே! எப்படி விடையைக் கண்டுபிடித்தாய்?

ஒன்றையும் நூறையும் கூட்டினால் 101 - இரண்டையும் 99அய்யும் கூட்டினாலும் 101 - இப்படியே மூன்றையும் மூன்றாவது எண்ணுடன் (98) கூட்டினாலும் 101 - அதுபோலவே எல்லா எண்களும்! எனவே, 50 ஜோடி 101வரும். அதை 50ஆல் பெருக்கினால் 5050 வரும்! அதுதான் விடை என்றார் கார்ல் காஸ்! விளையும் பயிர் முளையிலேயே தெரிந்தது!

திங்கள், 2 மார்ச், 2009

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து "விழித்தெழு இளைஞர் இயக்கம்" தமிழர்களை ஒருங்கிணைத்து நடத்திய மாபெரும் மனிதச்சங்கிலி


மும்பையில் விழித்தெழு இயக்கத்தின் தோழர்களின் கடும் முயற்சியாலும், உண்மையான அரசியல் கலக்காத தமிழ் இன உணர்வாலும், சாதி மதம் கடந்து ஒட்டு மொத்த தமிழினமும் கலந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தாலும், மக்களின் உள்ளத்தில் உள்ள விருப்பத்தை சரியாக புரிந்து கொண்டதாலும் தோழர்கள் தமிழர்களை தமிழ்ச்சாதி என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர்.


அறிவிப்பு வெளியான உடனேயே, மக்களின் ஆதரவும்,எதிர்பார்ப்பும், தொலைபேசி வாயிலாகவும்,நேரடியாகவும் தெரிவிக்கப்பட்டது. பல தொண்டு நிறுவனங்களும், தன்னலம் கருதாத சமூக ஆர்வலர்களும் தங்களுடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் நீர் விநியோகம், மோர் விநியோகம் போன்ற உதவிகளை செய்வதாக கூறினர். தோழர்களும் தமிழர்களின் ஒருங்கிணைப்பு கருதி ஒப்புக் கொண்டனர். முன்னேற்பாடாக தோழர்கள் குறுஞ்செய்தி வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் விளம்பரம் செய்தனர். தன்னலமற்ற தமிழின உணர்வாளர்கள் தானாகவே முன்வந்து தங்கள் ஆதரவை செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தும், விளம்பர பதாகைகளில் விளம்பரம் செய்தும், போராட்ட ஏற்பாடு உதவி என தங்கள் ஆதரவை பதிவு செய்திருந்தனர்.


இதில் குறிப்பிடத்தக்கவர்கள் சு. குமணராசன்(தானா), சித்தார்த்தன்(தானா), ராஜேந்திரசுவாமி(செம்பூர்), தமிழ்ச்செல்வன்(சயான்),ஏ பி சுரேஷ்(செம்பூர்),எவரெஸ்ட் நகர்(கரூண்), புதியமாதவி(முலுண்ட்), பாண்டூப்(சமீரா மீரான்), கதிரவன்(தாராவி), தென்னிந்திய முஸ்லீம் சங்கம் (தாராவி), மணி டிஜிட்டல்(தாராவி), கதிரவன் (பெரியார் திக), நாடோடித்தமிழன் (உலகத்தமிழர் பேரமைப்பு), பால்வண்ணன், ராசேந்திரன் (தமிழ் காப்போம்), இளங்கோ (மும்பை தமிழ் டாட் காம்), அ கணேசன் (தமிழ் இன உணர்வாளர்), மும்பை டிரைவர் சங்கம், பசுமைத்தாயகம், மும்பையில் உள்ள பல்வேறு தமிழ்சங்கங்கள், வருத்தபடாத வாலிபர் சங்கம், விஜய் நற்பணி மன்றம், ரவிச்சந்திரன் (பகுத்தறிவாளர் கழகம்) , மாறன் நாயகம்(அம்பேத்கர் அறக்கட்டளை), அசோக் குமார்(தாராவி), சிறுத்தை செல்வராஜ், அசோக்குமார்(தாராவி), முத்துராமலிங்கம்(கல்யாண்யவாடி), விக்ரம் ரசிகர் மன்றம், ஜெரிமேரி சங்கர், சங்கர் திராவிட், சீனிவாசன்(தாராவி), நடேசன்(தாராவி) மற்றும் பெயர் சொல்லி அழைத்தால் நீண்டு கொண்டே போகும் அளவுக்கு ஆதரவளித்தன நல்ல தன்னலமற்ற தமிழ் உள்ளங்கள்.


மனிதச்சங்கிலி போராட்டம் மாதுங்கா கிங்க்ஸ் சர்க்கிள் தொடங்கி தானே வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.போராட்டம் சரியாக மதியம் 3 மணியளவில் தொடங்கியது. போரட்டத்தை ஒரு தமிழ் சிறுமி தொடங்கி வைத்தார். மக்கள் சாதி-மதம் கடந்து திரள் திரளாக இனவுணர்வோடும் மனிதாபிமானத்தோடு கலந்து கொண்டனர். இந்திய அரசே ஈழ மக்களை காப்பாற்று, ஈழ மக்களின் விடுதலை போராட்டத்தை அங்கீகரி, இலங்கை இனவெறி அரசே போரை நிறுத்து, கொல்லாதே! தமிழர்களை கொல்லாதே!! போன்ற உணர்வுப்பூர்வமான கோசங்கள் எழுப்பப்பட்டன.
25 கிமீ தொலைவுக்கு மேலாக 25,000 மேற்பட்ட எண்ணிக்கையில் நம் இனச்சகோதரர்கள் மூன்று மணி நேரம் குறுகிய அடையாளங்களை விட்டு தமிழர்களாக அணிதிரண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. சில விளம்பர பிரியர்கள் தங்கள் குறுகிய அரசியல் லாபங்களுக்காக, தற்பெருமைக்காக முயற்சி செய்தனர், மக்களே அவர்களை களத்தில் புறக்கணித்தது மிகவும் மகிழ்ச்சியளித்தது. மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த விழிப்புணர்வு மிகவும் திருப்திகரமாக இருந்ததாகவும், அதோடு இந்த போராட்டத்திற்காக இராப்பகலாக ஒருவாரத்திற்கும் மேலாக தங்களுடைய அலுவல் பணிகளுக்கும் மத்தியில் உழைத்த தோழர்கள் பாண்டியன், சிரிதர், மகிழ்நன்,தமீம் அன்சாரி, மல்லி மகேசு, மாதவன், கதிர், அன்பு, சுரேஷ், சதீஸ், சுந்தர், அரூண், ஜெபஸ்டீன், முருகன், கணேசன், கண்ணன், அசோக், பெ. கணேசன், கண்ணன் மற்றும் இன்ன பிற தோழர்கள் அனைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று விழித்தெழு இளைஞர் இயக்கத் தலைவர் உ.பன்னீர் செல்வம் கூறினார்



--
அன்பும் ,பகுத்தறிவுடனும்.
மகிழ்நன்.

செயலாளர்,

விழித்தெழு இளைஞர் இயக்கம்

+919769137032
தாராவி, மும்பை

http://periyaryouth.blogspot.com
http://makizhnan.wordpress.com
http://kayalmakizhnan.blogspot.com
http://scientifictamil.blogspot.com
http://vizhithezhuiyakkam.blogspot.com



செய்திகள் வந்த இணையங்கள்

http://hamaraphotos.com/news/national/tamil-supporters-protest-over-sri-lankan-issue-in-mumbai.ஹ்த்ம்ல்

http://www.3dsyndication.com/showarticle.aspx%3Fnid%3DDNMUM125825

http://www.thaindian.com/newsportal/india-news/tamil-supporters-protest-over-sri-lankan-issue-in-mumbai_100161399.html

http://www.littleabout.com/2009/03/01/tamil-supporters-protest-over-sri-lankan-issue-in-mumbai/

http://rtv.rtrlondon.co.uk/2009-03-01/560b9af.html

http://www.andhranews.net/India/2009/March/1-Tamil-supporters-protest-92492.asp

http://news.krify.com/print/74030.html

http://news.webindia123.com/news/articles/India/20090301/1188884.html

http://www.sibernews.com/200903022117/

http://feeds.bignewsnetwork.com/index.php?sid=472703

http://www.newstrackindia.com/newsdetails/70527

http://killingoftamilinsrilanka.blogspot.com/2009/03/20-km-human-chain-in-mumbai-to-draw.html

http://jackmyers.daylife.com/article/0eLBgNFfZw36H

http://www.tamilnewsnetwork.com/tamilnewsnetwork.com/post/2009/03/02/Tamil-supporters-protest-over-Sri-Lankan-issue-in-Mumbai.aspx


தமிழ் இணையங்களில்

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2556:-25----------&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2228&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

http://udaru.blogdrive.com/archive/937.html

http://suthumaathukal.blogspot.com/2009/03/25.html