சனி, 7 மே, 2016

தமிழக கட்சிகளின் 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கைகள் ...


திமுக , அதிமுக, பா ம க, மக்கள் நலக்கூட்டணி, நாம் தமிழர் கட்சி போன்றவைகளின் தேர்தல் அறிக்கைகளை  இணைத்து உள்ளேன்...

திமுக தேர்தல் அறிக்கை 2016 - முக்கிய அம்சங்கள்

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2,500 வழங்கப்படும். சிறு, குறு விவசாயக் கடன், மாணவர் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

பூரண மதுவிலக்கு

* தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். இதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் (டாஸ்மாக்) கலைக்கப்பட்டு, அதன்மூலம் செயல்பட்டு வரும் மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும்.

* தமிழ்நாடு மாநில ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை விற்பனை வாரியம் புதிதாக உருவாக்கப்படும். டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் இந்த புதிய வாரியத்தில் பணி வழங்கப்படும். மாவட்டந்தோறும் மது மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும்.

விவசாயத்துக்கு தனி பட்ஜெட்

* விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை.

* வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு உருவாக்கப்படும்.

* சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

* நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500 வரை உயர்த்தி வழங்கப்படும்.

* கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.3,500 ஆக உயர்த்தப்படும்.

* இயற்கை வேளாண்மைக்கு தனி பிரிவு உருவாக்கப்படும்.

* நம்மாழ்வார் பெயரில், இயற்கை வேளாண் ஆய்வு மையம் அமைக்கப்படும்.

* மன்னவனூரில் 390 ஏக்கரில் மண்டல தோட்டக்கலை ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும்.

* விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்படும்.

100 நாள் வேலை திட்ட நாட்கள் அதிகரிப்பு

* சிறு, குறு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வேட்டி, சேலையுடன் பொங்கல் பரிசு ரூ.500 ரொக்கமாக வழங்கப்படும்.

* 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்க சட்டம் இயற்றப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதுடன், கூடுதலாக 50 நாட்கள் சேர்த்து மொத்தம் 150 நாட்களுக்கு வேலை வழங்கக் கூடிய வகையில், புதிய சட்டம் உருவாக்கப்படும். புதிய மாநிலச் சட்டத்தின் அடிப்படையில், பயிர்க் காலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய வேலைகளுக்கே பயன்படுத்தப்படுவார்கள்.

* சிறு, குறு விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்கும்போது ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

லோக் ஆயுக்தா

* முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, லோக் ஆயுக்தா சட்ட அமைப்பு உருவாக்கப்படும்.

* பெரிய மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்படும்.

* நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய், நாட்டுச் சர்க்கரை விற்கப்படும்.

* கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் 360 ஏக்கரில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

* நீர் பாசனத்துறைக்கு தனி அமைச்சகம், நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும்.

* நீர்நிலைகளை சீரமைக்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ரூ.2 ஆயிரம் கோடியில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.

* சென்னை பெருநகர் வெள்ளத்தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.

மீனவர்களுக்கு வீடுகள்

* மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

* மீனவர்களை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தப்படும்.

* மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரமாக வழங்கப்படும்.

நெசவாளர்களுக்கு...

* காஞ்சியில் பட்டுப் பூங்கா அமைக்கப்படும்.

* நெசவாளர்களுக்கென்று தனியாகக் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும்.

* ஜவுளித் துறையை மேம்படுத்துவதற்குத் தனியாக ஜவுளி ஆணையம் அமைக்கப்படும்.

* நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

* கைத்தறி நெசவாளர்களுக்கு 200, விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

* சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் மானியம்.

* உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

இணையதள வசதி

* புதிய கல்வி கவுன்சில் ஏற்படுத்தப்படும்.

* கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* அனைத்து மாணவர்களுக்கும் இணையதள வசதி.

* சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் வரை கடன் மானியம்.

* 54 ஆயிரத்து 233 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை.

* முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு வேலையில் முன்னுரிமை.

* தொழில் தொடங்க 100 நாட்களில் அனுமதி.

* மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

அண்ணா உணவகம்

* ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில் 3 எல்இடி பல்புகள்.

* அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு பேறுகால விடுமுறை 9 மாதங்களாக உயர்வு.

* கருவில் இருக்கும் குழந்தைக்கும் காப்பீடு.

* திருமண உதவித்தொகை ரூ.60 ஆயிரமாக உயர்வு.

* 15 நாட்களில் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

* பேறுகால உதவி ரூ.18 ஆயிரமாக உயர்வு.

* ஏழைகளுக்கு உணவு வழங்க அறிஞர் அண்ணா உணவகம்.

* தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவை ஏற்படுத்தப்படும்.

* ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும்.

* திருவாரூர், நாகர்கோவில் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.

* வசதியற்றவர்களுக்கு அரசு செலவில் கைபேசிகள் வழங்கப்படும்.

* பொது இடங்கள் அனைத்திலும் வை-பை வசதிகள் செய்து தரப்படும்.

* உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்ற கோவை மாநகரில் சென்னையில் உள்ளது போல் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்.

இலங்கைத் தமிழர்களுக்காக..

* இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனப் படுகொலை ஆகியவை குறித்துச் சுதந்திரமானதும்,

நம்பகத் தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசை திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.

* இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. சபையின் மேற்பார்வையில், “பொது வாக்கெடுப்பு” நடத்தவும், இலங்கையில் புதிதாக உருவாக உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசை திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.

சேவை உரிமைச் சட்டம்

* பொது மக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதிச் சான்றிதழ், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச்

சான்றிதழ், ஓய்வூதியப் பலன்கள், பொது விநியோகத் திட்டங்கள் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் ஆகியவை முறையாகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்றப்படும்.

கச்சத்தீவு...

* கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக அதிகரித்து வருவதால் தமிழக மீனவர்களை பாதுகாத்திட, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

திருமண உதவித்தொகை

* ஏழை விதவைப் பெண்களின் மகள் திருமண நிதி உதவித் திட்டத்தில் தற்போது வழங்கப்படும் உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய் என்பது 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

* பட்டப்படிப்பு படித்த அல்லது பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்குத் திருமண உதவித் தொகையாகத் தற்போது வழங்கப்படும்

50 ஆயிரம் ரூபாய் என்பது 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படும்.

* கையால் மலம் அள்ளும் வழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் உருவாக்கப்படும்.

* வேலையில்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை 1000 ரூபாய் என்பது 1500 ரூபாயாக,உயர்த்தப்படும்.

சாலையோர வியாபாரிகளுக்கு கடன்

* கந்து வட்டிக் கொடுமையிலிருந்து ஏழை எளியோரைக் காப்பாற்ற சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும், தலைச்சுமைகளிலும்

காய்கறிகள், மீன் விற்பவர்கள், பூ விற்பவர்கள், பழம் விற்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள், காலணி தயாரிக்கும் தொழிலாளர்கள், தேநீர் விற்பவர்கள், பழரசம் விற்பவர்கள், இளநீர் விற்பவர்கள், பஞ்சர் தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு வாரத் தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் வகையில் வட்டியில்லாக் கடன் 2000 ரூபாய் வரையில் எளிய முறையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

* முதியோர் உதவித் தொகை 1300 ரூபாயாக உயர்வு. முதியோருக்குக் கட்டணமில்லாப் பயணச் சலுகை.

* ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் நடைபெற நடவடிக்கை.

இந்நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.⁠⁠⁠⁠
........................................................................................................................................................................................................
அதிமுக தேர்தல் அறிக்கையின் கவனிக்கத்தக்க 40 அம்சங்கள்

விவசாய கடன் தள்ளுபடி; 100 யூனிட் வரை இலவச மின்சாரம்; இலவச செல்போன், பெண்களுக்கு 50 சதவீத விலையில் இருசக்கர வாகனம் - அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச செல்போன், பணியிடங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு 50 சதவீத மானிய விலையில் இருசக்கர வாகனம், விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக் கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதனை அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்பி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

1. கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண் டிய பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

2. நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும். கரும்புக் கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும். சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் உடனுக் குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3. மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகைகள் 5,000 ரூபாயாக உயர்த்தப்படும். மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்.

4. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

5. 11, 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு மடிக் கணினியுடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதி வழங்கப்படும்.

6. ஐந்தாண்டுகளில் 5 புதிய மருத் துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.

7. கருவுற்ற தாய்மார்களுக்கு நிதியுதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

8. 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும்.

9. 5 கோடி ரூபாய் செலவில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஃபவுண்டேசன் நிறுவப்படும்

10. மதம் மாறிய ஆதி திராவிட மற்றும் பழங்குடியினரை, ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும், நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வும் நடவடிக்கை எடுக்கப்படும்.

11. பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பிற் படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

12. பொங்கல் திருநாளுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து கைத்தறி துணிகள் வாங்கிக்கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 500 ரூபாய்க்கான வெகுமதி கூப்பன் வழங்கப்படும். கைத்தறி நெச வாளர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்களாக உயர்த்தப்படும். விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்களாக உயர்த்தப்படும்.

13. தமிழ்நாட்டில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் தொகுப்பு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.

l

பெருநகரங்களில் குடிசை களில் வாழும் குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

14. சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங் களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

15. தமிழ் மொழிக்கு தொண் டாற்றுபவர்களுக்கு, தமிழ் வளர்த்த சான்றோர் பெயர்களில் புதிய விருதுகள் ஏற்படுத்தப்படும். தமிழை இந்திய ஆட்சி மொழி யாகவும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகவும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும்.

18. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைபேசி விலையின்றி வழங்கப்படும்.

19. தொடக்கப் பள்ளி குழந்தை களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்படும்.

20. ஆவின் பால் 1 லிட்டர் 25 ரூபாய் என குறைந்த விலையில் வழங்கப்படும்.

21. திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித் தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராம் 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும்.

22. திருநங்கையர் மற்றும் திருநம்பியர் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

23. களிருக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆட்டோக்கள் வாங்க மானியம் அளிக்கப்படும்.

24. உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தி, தமிழக தொழில் துறையில் முதலீடுகள் பெருக நடவடிக்கை எடுக்கப்படும்.

25. தேயிலை விலை வீழ்ச்சி அடையும்போது, சிறு தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

26. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் பழைய மகாபலிபுரம் சாலை வழியாக மாதவரம் முதல் சிறுசேரி வரை, நெற்குன்றம் முதல் கலங்கரை விளக்கம் வரை மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை உள்ள 88 கி.மீ. நீள மூன்றுவழித் தடங்களுக்கு திட்டம் செயல்படுத்தப்படும்.

27. தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக் கப்படும். தமிழ்நாட்டில் முகாம் களிலும், முகாம்களுக்கு வெளியே யும் உள்ள இலங்கைத் தமிழர் களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

28. மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எய்தப்படும்.

29. லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும்.

30. கிரானைட் கற்கள் வெட்டி யெடுத்தது தொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசுக்கு ஏற்பட்ட இழப்பு வசூலிக்கப்படும். புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும். அரசே தாது மணல் எடுத்து விற்பனை செய்யும்.

31. 7-வது ஊதியக் குழு பரிந் துரைகள் அமல்படுத்தப்பட்ட வுடன், தமிழக அரசுப் பணியாளர் களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

32. மகளிருக்கு பேறுகால விடுமுறை 9 மாதங்களாக உயர்த் தப்படும். அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.

33. வழக்கறிஞர் சேம நல நிதி ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும்.

34. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை பெறுவதற்கும், சுய தொழில் புரியவும் வழிவகை காணப்படும்.

35. தொழிற்சாலைகள் மூலம் 10 லட்சம் பேர்களுக்கு பயிற்சி கள் வழங்கப்பட்டு அந்த நிறுவனங் களிலேயே அவர்கள் வேலை பெற நடவடிக்கை எடுக்கப் படும்.

36. வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும்.

37. மகளிர் பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

38. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் நிதிச் சேவைகளை பயன்படுத்தும் வகையில் அம்மா பேங்கிங் கார்டு வழங்கப்படும்.

39. அரசு கேபிள் டிவி இணைப்பு பெற்றவர்களுக்கு இலவச செட் ஆப் பாக்ஸ் வழங்கப்படும்.

40. அனைத்து ஒன்றியங்களிலும் அம்மா இருசக்கர வாகன பழுதுபார்க்கும் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்.⁠⁠⁠⁠

..........................................................................................................................................................................................................................................
⁠⁠⁠பா.ம.க தேர்தல் அறிக்கை:
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..

திருச்சி மாநகரம் இரண்டாவது தலைநகரமாக மாற்றப்படும்

நிர்வாகம்

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் ஆண்டு தோறும் ஜனவரி மாததின் முதல் பணி நாளில் வெளியிடப்பட்டு மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் முடிவுகள் மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத் தலைநகரில் நடத்தப்படும். அதேபோல், மாவட்ட அளவிலான வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையிலான குழு சென்று ஆய்வு நடத்தும்.

அரசின் முடிவுகள் பெரும்பாலும் கருத்தொற்றுமை அடிப்படையில் எடுக்கப்படும். சட்டமுன்வரைவுகள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்கள் விரும்பும் மாற்றத்துடன் நிறைவேற்றப்படும்.

அதிகாரத்தைப் பரவலாக்கும் வகையில், தமிழகம் 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக தலைமைச் செயலாளர் நிலையிலான அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். அம் மண்டலத்தில் நிர்வாகம் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படும்.

திருச்சி மாநகரம் இரண்டாவது தலைநகரமாக மாற்றப்படும்.

தமிழ்நாட்டில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 12 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வகையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

மக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க முதலமைச்சர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும்  இலவச தொலைபேசி சேவை தொடங்கப்படும்.

சட்ட மேலவை

தமிழ்நாட்டில் சட்டமேலவை மீண்டும் ஏற்படுத்தப்படும்.

ஆண்டுக்கு நான்குமுறை சட்டப்பேரவை கூடுவதும், 100 நாட்கள் பேரவைக் கூட்டம் நடப்பதும் உறுதி செய்யப்படும். பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

நிதிநிலை தயாரிப்புக்கு முன்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கருத்துக் கேட்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும்.

நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக நடவடிக்கை திட்ட விவர அறிக்கை (Action Taken Report), தாக்க அறிக்கை (Outcome Budget), பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) ஆகியவை தாக்கல் செய்யப்படும்.

வேளாண் துறைக்கான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த தனி அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Agriculture) அமைக்கப்படும்.

காவல்துறையின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்ய நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட சுதந்திரமான  காவல் ஆணையம் (Independent Police Authority) அமைக்கப்படும்.

அனைத்து காவல் நிலையங்களிலும் படப்பதிவுக் கருவிகள் பொருத்தப்படும்.

உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்

............................................................................................................................................................................................................................................................
மக்கள் நலக்கூட்டணி 2016 தமிழக சட்டமன்ற தேர்தல் அறிக்கை

அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சமூக, பொருளாதார திட்டங்களுக்கும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கிட பல்துறை அறிஞர்கள், நிபுணர்கள் கொண்ட “நெறிமுறைக்குழு” (Ethics Committee) ஒன்று அமைக்கப்படும். அரசின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், கண்காணிப்புடன் கூடிய ஆலோசனைகளை அளிக்கவும், நெறிமுறைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

1. தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி அமைப்போம்: இதன் மூலம் தூய்மையான நல்லாட்சி அமையும்.

2. அரசுக்கு வழிகாட்டுதல் வழங்கிட பல்துறை அறிஞர்கள், நிபுணர்கள் கொண்ட நெறிமுறைக்குழு (Ethics Committee) அமைக்கப்படும். அரசின்          நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், கண்காணிப்புடன் கூடிய ஆலோசனை களை அளிக்கவும் நெறிமுறைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

3. அரசுப்பணிகள் அனைத்தையும் கிராம பஞ்சாயத்து அளவில் தொடங்கி அனைத்து அரசுத்துறைகளின் ஒப்பந்தப்பணிகள் வரை கண்காணிப்புக்கு உட்படுத்திட மக்கள் பங்கேற்புடன் கூடிய பொது கண்காணிப்புக்குழுக்கள் (Public Auditing Committee) அமைப்போம்.

4. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வருவோம். இதில் தலைமைச்செயலகம் தொடங்கி கீழ்மட்டம் வகையில் புகார்கள் விசாரிக்கப் பட்டு, தவறு இழைப்போர் தண்டிக்கப்படுவார்கள்.

5. நேர்மையான நிர்வாகம், விரைவான, தூய்மையான மக்கள் சேவையை உறுதிப்படுத்த சேவை பெறும் உரிமைச்சட்டம் கொண்டு வருவோம்.

6. முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். சசி பெருமாள் மது ஒழிப்பு இயக்கம் ஏற்படுத்தி மது ஒழிப்புக்கு தீவிர பிரச்சாரம் மேற் கொள்ளப்படும்.

7. வேளாண் உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.

8. விவசாயிகள் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

9. விவசாயம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சிக்கு தீவிர கவனம் செலுத்தப்படும்.

10. சிறு, குறுந்தொழில்கள் நலிவடையாமல் பாதுகாக்கப்படும்.

11. பெருந்தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒற்றை சாளர முறையில் அனுமதி உடனே வழங்கப்படும்.

12. கவித்துறையில் புரட்சி உருவாகும், தொடக்கக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி வழங்கப்படும்.

13. மருத்துவத்துறையில் மறுமலர்ச்சி எங்கள் நோக்கம். அரசு மருத்துவமனைகளில்  இலவச சிகிச்சை, உயர்ந்த தரத்துடன் வழங்குதல் எங்கள் குறிக்கோள்.

14. மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் அரசே ஏற்கும். இதுவரை மாணவர்கள் பெற்றுள்ள கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

15. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தேசிய வங்கிகள் அளித்த கடன்களை அரசே செலுத்தும்.

16. அ.தி.மு.க. அரசு உயர்த்திய பால்விலை, மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும். போக்குவரத்துக் கட்டண உயர்வு இருக்காது.

17. கர்ப்பிணிப் பெண்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயண அட்டை வழங்கப்படும்.

18. படித்து பட்டம் பெற்ற பெண்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

19. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு தனியான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இலவச பயண அட்டை அளிக்கப்படும்.

20. கிராமப்புறங்களில் மூத்த குடிமக்கள், மகளிர், குழந்தைகள் நலனுக்காக நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள் இயக்கப்படும்.

21. கிராமங்களிலும், நகரங்களிலும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இலவசமாக மினரல் குடிநீர் வழங்கப்படும்.

22. தமிழகம் முழுவதும் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் கடன் பெற்றுள்ளவர்களின் கடனுக்கான வட்டி மற்றும் அபராத வட்டித்தொகை தள்ளுபடி செய்யப்படும்.

23. நெசவாளர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்⁠⁠⁠⁠
....................................................................................................................................................................................................................................
நாம் தமிழர் கட்சியின் 314 பக்க தேர்தல் அறிக்கை!

seemaanநாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக நலனுக்காக மேற்கொள்ள இருக்கும் நலத்திட்டங்கள் பற்றிய அறிக்கை புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவு என்ற தலைப்பில் 314 பக்கங்கள் அடங்கிய வண்ண தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார். அதில் திருவள்ளுவர், சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர், பாரதிதாசன், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன.

வரைவு அறிக்கையில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசின் முத்திரையாக திருவள்ளுவர் படம் பொறித்த முத்திரையும், தமிழ்நாட்டு கொடியாக மீன், புலி, வில்அம்பு (சேர, சோழ பாண்டியர் கொடி) இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் 49 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வரைவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* சென்னை தலைநகராக இருப்பதால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு அனைத்துமே ஒரே இடத்தில்தான் குவிந்திருக்கிறது. இதனால் அனைத்து மக்கள் சென்னையை நோக்கியே வருகிறார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு தமிழக தலைநகரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 5 ஆக பிரிக்கப்படும். இதில் திரைகலை, துறைமுகம், கணினி தொழில்நுட்பத்தின் தலைநகராக சென்னை விளங்கும்.

செயலாண்மை வசதிக்கான தலைநகராக திருச்சியும், தொழில் வர்த்தக தலைநகராக கோவையும், மொழி கலை பண்பாட்டுக்கான தலைநகராக மதுரையும், தமிழர் மெய் இயலுக்கான தலைநகராக கன்னியாகுமரியும் விளங்கும்.

நீர்வளத்தை பெருக்க நாம் தமிழர் ஆட்சியில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நீர்நிலைகளை சுற்றி மரங்கள் நடப்படும். புதிதாக ஏரிகள் வெட்டப்பட்டு கரிகால்சோழன், ராஜராஜ சோழன், குந்தவை நாச்சியார், நம்மாழ்வார் ஆகியோர் பெயர்கள் சூட்டப்படும்.

குளிர்பான தொழிற்சாலைகளுக்காக 803 கோடி லிட்டர் தண்ணீர் செலவாகிறது. எனவே அந்த தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்படும். தூய்மையான குடிநீர் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

விவசாயம் தமிழக அரசின் பணியாக மாற்றப்படும். ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை மேலாண்மை மேற்கொள்ளப்படும். பனை பொருள் உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு பெருக்கப்படும். தொழில் சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணைகள் உருவாக்கப்படும்.

இதற்கு முந்தைய அரசுகள் தமிழர்களை இலவசத்துக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளிவிட்டனர். எனவே நாம் தமிழர் ஆட்சியில் இலவச திட்டங்கள் நிறுத்தப்படும்.

வெளிப்படையான நிர்வாகம் இருக்கும். மது, புகையிலை ஒழிக்கப்படும். போக்குவரத்து கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படும். மருத்துவத்துக்கும், கல்விக்கும் மாற்று மின் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

உழவர்கள், மீனவர்கள், வணிகர்கள் நலன்காக்கும் வகையில் திட்டங்கள் மேம்படுத்தப்படும். அமைப்பு சாரா தொழிலாளர் நலம் மேம்படுத்தப்பட்டு கட்டுமான தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 ஈழத்தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். ஈழ தமிழர்களின் நலன்காக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் அவர்கள் மீதான ‘கியூ’ பிரிவு போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் விசாரணை நீக்கப்படும். அவர்களுக்காக தனி நலவாரியம் உருவாக்கப்படும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ¼ நூற்றாண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் மாநில அரசுக்கான அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யப்படுவார்கள்.

புதிய துறைமுக கொள்கை உருவாக்கப்படும். தமிழகத்தில் சென்னை, எண்ணூர், ராயபுரம், காட்டுப்பள்ளி, நாகப்பட்டினம், திருக்குவளை, தூத்துக்குடி ஆகிய 8 இடங்களில் துறைமுகங்கள் இருக்கின்றன. இப்பகுதிகளில் கழிவுகள் தேங்காமல் கடல்வாழ் உயிரினங்கள் இயற்கையாக வாழ வழிவகை செய்யப்படும்...

 "தமிழகத்தின் தலைநகரமானது செயல்பாட்டு வசதிக்காக திருச்சிக்கு மாற்றப்படும்; சென்னையானது திரைக்கலை, துறைமுகம், கணினிநுட்பத் தலைநகராக இருக்கும்; தொழில், வர்த்தகத் தலைநகராக கோவை விளங்கும்; மொழி, கலை, பண்பாட்டுக்கான தலைநகராக மதுரையும் தமிழர் மெய்யியலுக்கான தலைநகராக கன்னியாகுமரியும் இருக்கும்," என்றார். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருப்பதால், கிராமங்களிலிருந்து சென்னைக்கு வருகிறார்கள்; இதனால் நகரம் பிதுங்கிவழிகிறது; உயிரைச் சுமந்துசெல்லும் அவசர ஊர்திகூட சரியான நேரத்துக்குச் செல்ல முடியவில்லை; இதனால் நிர்வாக வசதிக்காக கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி ஆகியவை பரவலாகச் சென்றடைய நாம் தமிழர் அரசு அமைந்தால் தலைநகரை மாற்றி அமைக்கும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 314 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில், 49 உத்தேசத் திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சில... பசுமைப் பத்தாண்டு பத்தாண்டுப் பசுமைத் திட்டம் என சுற்றுச்சூழல், கழிவு மேலாண்மை பற்றியும் சணல்நார்ச் செடி என தனியாகவும் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்துவின் மரங்களைப் பற்றிய கவிதை ஒன்றும் இந்தப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பொறியாளர் தூய்மைப் பணியில் ஈடுபடுவோரை தூய்மைப் பொறியாளர் எனக் குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை, ‘ஒரு குறிப்பிட்ட இனக் குழுவைச் சார்ந்தவர்களை மட்டும் தூய்மைப் பொறியாளராகப் பயன்படுத்திவரும் முறை தடை செய்யப்படும் என்கிறது. வனக் காவலர் வீரப்பன் சந்தனக் கடத்தல் வீரப்பனை ‘தமிழர்களின் வனக் காவலர்' எனக் குறிப்பிட்டுள்ளதுடன், 'ஐயா வீரப்பனாருக்கு நினைவகம் கட்டப்படும்'. ‘இன விடுதலைக்குத் தன்னுயிரை ஈகம்செய்த ஈகைத் தமிழன் அப்துல் ரவூஃப், வீரத் தமிழன் முத்துக்குமார், மூன்று அண்ணன்மார்களைத் தூக்குக் கயிற்றிலிருந்து காக்க தன்னுயிரை ஈகம்செய்த வீரத்தங்கை செங்கொடிக்கு தனித்தனியே நினைவகம் அமைக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக