வியாழன், 6 மார்ச், 2014

தமிழின அழிப்பில் ஐநா வை முதல் குற்றவாளி....ஐநா மீது தமிழக அரசு/மக்கள் வழக்கு தொடர வேண்டும்..மும்பை விழித்தெழு இயக்கம்


 தமிழின அழிப்பில் ஐநா வை முதல் குற்றவாளி....ஐநா மீது தமிழக அரசு/மக்கள் வழக்கு தொடர வேண்டும்..


ஐநா மனித உரிமை கூட்டத்தொடர் என்பது மேற்குலகின் நலன்களை மையமாகக் கொண்டதே
அமெரிக்காவின் தீர்மானமும். நவிபிள்ளை அம்மையாரின் அறிக்கையும் நாம்  எதிர்பார்த்த ஒன்றுதான்..


போர் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் ஆன பின்னரும் எந்த நடவடிக்கையிலும் முன்னேற்றம் ஈழமக்களுக்கு ஏற்படவில்லை.
எம்மை அழித்தொழிக்க வேண்டும் என்ற கொலைவெறியில் இருந்த இந்திய அதிகாரவர்க்கத்திற்கும் சிங்கள இனஅழிப்பு அரசுக்கும் தெளிவான பாதையை வரைந்து கொடுத்தது மேற்குலகம்தான். அதை மவுனமாக அங்கீகரித்தது ஐநா மன்றம்.  இப்போது வந்த அமெரிக்க தீர்மானம் நம்மை மறுபடியும் ஏமாற்றும் என்று அறிந்தோம் அதை நடத்துள்ளது.ஐநா மனித உரிமை கூட்டத்தொடர் என்பது மேற்குலகின் நலன்களை மையமாகக் கொண்டதே..இதை தெரிந்த போதிலும்  நடந்த தமிழ் இனஅழிப்பை கவனப்படுத்தவும் அதை சர்வேதச  மட்டத்தில் ஒரு விவாதமாக மாற்றவும் அதன் மூலம் நமது இலக்கை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள முயற்சித்து வருகிறோம் ..

இனப்படுகொலையின் முதலாவது குற்றவாளியான ஐ.நா விடமே எமக்கான நீதியை எதிர் பார்த்து நிற்கும்  நிர்க்கதியான ஒரு இனம் ஆகிய நாம் .

எந்த உலகப்போர்களின் விளைவாக ஐநா தோற்றம் பெற்றதோ அதே ஐநாவின் நீதியில் நம்பிக்கையற்ற மக்களையும் நாடுகளையும் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து ஐநாவிற்கு எதிராக போராடுவதுதான் ஒரே வழி.

இன்று ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா என்று ஐநாவின் மீது உலகளவில் பலர் நம்பிக்கையிழந்து வரும் சூழலில் ஐநாவிற்கு எதிராக அல்லது அதற்கு சமாந்தரமாக ஒரு அமைப்பு உருவாக வேண்டும் என்ற கோசங்கள் வலுத்து வருகின்றன. நாம் அந்த போராட்டத்தின் முதல் அடியை எடுத்து வைப்போம்.  எனவே தற்போது ஐநாவிற்கு எதிரான எமது போராட்டமும் எமது விடுதலையை மட்டுமல்ல ஐநாவால் வஞ்சிக்கப்பட்ட பல இனக்குழுமங்களின் விடுதலையாக இருக்கும்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை மட்டுமே  சர்வதேச சமூகம் விரும்புகிறதே ஒழிய, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கமே அதற்கு இல்லை.  போர்க்கால குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை கோரப்படும் என்று சர்வதேச சமூகம் முன்னெடுத்துவந்த பிரச்சாரங்கள் பொய்த்துப் போயிருக்கின்றன : கொழும்பில் சில தினகளுக்கு முன்  நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அமெரிக்க தீர்மானம் குறித்து  பேசியது இதை எல்லாமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய உள்ளது.


ஐநா என்பதே உலகப்போர்களின் விளைவாக தோன்றிய ஒரு அமைப்புத்தான். "நீதியும் சட்டமும் என்பது அரசின் வன்முறை,வன்முறையும் போராட்டமும் மக்களின் நீதி" என்ற தத்துவம் பொய்க்காது. எனவே போராட்டங்கள்தான் எதையும் மாற்றியமைக்கும்.

ஐநா சாசனங்களுக்கு எதிராக நாம் அழித்தொழிக்கப்பட்டதை நாம் தொடர்ந்து போராடுவதனூடாக உறுதிப்படுத்த வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கெயிட்டி மக்கள் ஐநா மீது கடந்த மாதம் நியூயோர்க் நீதிமன்றில் ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வாறான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளிலிருந்து சட்டப்படியான விலக்கு பெறும் தகுதி அதாவது (legal terms Immunity) இருப்பதாக ஐநா கூறுகிறது.

ஆனால் ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாக வழக்குத் தொடர்ந்துள்ள வழக்குரைஞர்கள் ஐநாவின் வாதத்தை முறியடிக்க முடியும் என்று கூறுகிறார்கள்

ஏன் கெயிட்டி மக்கள் தொடர்ந்து போல தமிழக மக்கள் சார்பாக ஐநாவின் மீது வழக்கும் தொடக்கலாமே .தமிழக அரசின் தீர்மானங்களுக்கும், போராட்டங்களுக்கும்  மத்திய அரசு செவிசாய்க்காததால் ஈழ  மக்களின் நலன் கருதி தமிழக அரசு கூட நேரடியாக ஒரு வழக்கை தொடரலாம்...

எனவே தமிழக அமைப்புக்கள், கட்சிகள் கருத்து வேறுபாடுகளை களைந்து இதன் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து தமிழக அரசுக்கு ஒரு அழுத்தத்தை  கொடுக்க வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறோம், மும்பை விழித்தெழு இயக்கம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக