புதன், 12 செப்டம்பர், 2012

கூடங்குளம் துப்பாக்கி சூட்டை கண்டித்தும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக மும்பையில் ஆர்ப்பாட்டம்


 கூடங்குளம் துப்பாக்கி சூட்டை  கண்டித்தும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் தாதர் ரயில் நிலையம் முன்பு (12/09/2012 ) மாலை   5 .30 மணிக்கு நடைப்பெற்றது..             

  (Condemn Brutal Police Repression on Peaceful Protestors at Koodankulam.)


பல்வேறு மராத்திய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள். அணுஉலை எதிர்ப்பு அமைப்புகள் ஆகிய KOKAN BACHAV SAMITI, BINAYAK SEN GROUP, MUKTIYAAN LOKSANSKRUTIK SANGATHANA, REPUBLICAN PANTHERS,DHARMARAJYA KAMGAR KARMACHARI MAHASANGH,KOKAN VINASHKARI PRAKALP VIRODHI SAMITI, SARVA SHRAMIK SANGATHANA, REPUBLICAN PANTHERS, JAGRUT KAMGAR MANCH, இணைந்து நாம் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு  விடுத்தோம்.


இதில் தமிழ் அமைப்புகள்  விழித்தெழு இளைஞர் இயக்கம், விடிவெள்ளி  இயக்கம், நாம் தமிழர் கட்சி, தமிழர் நலம் பேரியக்கம் ரே ரோடு - ஆதி திராவிட மகாசன சபை மற்றும் அமைப்பு சார மனித ஆர்வலர்கள், பெண்கள், TISS , என பலர் கலந்துக்கொண்டனர்.

நேற்று (12 /9 /12 ) மாலை மும்பை தாதர் ரயில் நிலையம் முன்பு  நடந்த
கூடங்குளம் துப்பாக்கி சூட்டை  கண்டித்தும் மற்றும்  கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில்   பிரபல மருத்துவர் பினாயக் சென்னும் கலந்துக்கொண்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக