சனி, 18 பிப்ரவரி, 2012

அந்தரத்தில் நிலை கொண்ட வாழ்வு ---மும்பை .....இயக்குனர் கீரா மூர்த்தி

எனக்கு(இயக்குனர்,கீரா மூர்த்தி ) மும்பை என்பது பல ஆண்டுகளாக தொடர்புடைய ஒரு நகரம் ..சிறுவயதிலிருந்து ராஜேஷ் குமார் ,சுஜாதா இன்ன பிற எழுத்தாளர்கள் எனக்கு அழகான மும்பையை ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தார்கள்..நான் திரைப்பட துறைக்கு வரும் முன்பு லாரியில் கிளினராக வேலை பார்த்த காலங்களில் வாரத்தில் இரு முறை சென்று வரும் பகுதி..அப்பொழுதெல்லாம் வேலை நிமித்தம் கடந்து ஊர் சுற்ற முடியாது..லாரி முதலாளிகளின் அடிமை..

அடுத்ததாக எமது பயணம் சென்னையில் உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு தேடி அலைந்த நாட்களில் வயிற்றை கொஞ்சம் கவனிக்க திருமண மண்டபங்களில் வேலை பார்ப்போம்..அப்படியாக ஒரு உணவு பரிமாற்ற முன்பை சென்றேன்..அப்பொழுது சுற்றிலும் முன்பையின் பார்ப்பன தமிழர்களின் கொழுத்த வாழ்க்கை கண்ணுக்கு தெரிந்தது..முன்பை வரை என்னை புரோக்கர் அழைத்து சென்றதற்கான பின்னணி ஒன்றே ஒன்றுதான்..நான் சிகப்பாக இருப்பதுதான் அது..சென்னையிலும் பிராமண திருமணம் என்றால் எனக்கு சர்வர் வேலை நிச்சயம் உண்டு..

அதன் பிறகு எனது அடுத்த பயணம் பச்சையின் பட வேலைகள் சம்மந்தமாக மகிழ்நன் அழைப்பின் பெயரில் தம்பி பொழிலனுடன் சென்றிருந்தேன் .நான் சென்றது மும்பையின் இதயம் என அழைக்கப்படும் தமிழர்கள் அதாங்க பறையர்கள் மற்றும் இன்னபிற ஒட்டுண்ணி சாதிகள் நிரம்பி நிற்கும் தாராவி ..

நான் கேட்ட கண்டடைந்த தாராவி அல்ல..அது..நாயகனில் விரவி நிற்கும் தாராவி அல்ல..பார்ப்பன மணிரத்தினத்தினால் தாராவியை காட்ட முடியாது என்பதை புரிந்து கொண்ட இடம் அது..

மும்பையின் தெருக்களில் நிரம்பி வழியும் தமிழ் சாதிகளின் பதாகைகள்..அதை தாண்டி பத்தாயிரம் பேருக்கு வெளிக்கிருக்கும் பொது இடம் பத்து..அதே போல சில லட்சம் தமிழர்களின் வெளிக்கிருக்கும் கொள்ளளவு அதிகபட்சம் நூறு அறைகள்..அவசர மும்பையில் பாதி பேர் வெளிக்கிருக்க தொடர்வண்டியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் என்கிற அவலம்..இவ்வளவையும் தாண்டி ஒரு புறா கூடல் பல நூறு புறா கூடுகளை போன்ற வீடுகள் ..ஒரு லட்சம் மின்சார இணைப்புகள் நடந்து போகும் பொழுது நம் தலையில் தட்டும் அளவுக்கு இருக்கும் அதிசயம் (கேவலம்) .ஒரு ஆள் கூட கவனமின்றி நடக்க தவறினால் மரணம் என்கிற இரும்பில் நிற்கும் படிக்கட்டுகள் ..

எப்பொழுதும் அந்த இடத்தையும் கூட கூறு போட ரௌடிகளுடன் இயங்கும் பிஜிபி,சிவா சேனா ,இன்ன பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் .. பெரும்பாலும் அடிமட்ட தொழிலில் மட்டுமே வாழ்வாதாரம் கொண்ட தமிழ் மக்கள்..நடைபாதையெங்கும் சில கோடி நட்சத்திரங்களை போல நீண்டிருக்கும் பீ கூட்டங்கள்....என மும்பை மிக அழகாகவே இருந்தது..

நான் அந்த மக்களுடன் பேசிய பொழுது இதை விட ஒரு லட்சம் மடங்கு கேவலமாக (அதாங்க அழகா மணிரத்தினம் எடுத்தது )இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் தாராவி இருந்தது..

மனசில் சொல்லொண்ணா துயரம் எம் ஈழ மக்கள் போலவே மும்பையில் எம் இன மக்கள்(பார்ப்பன மற்றும் அந்த அடிவருடி அரசியலை கையில் கொண்ட நாடார்,தேவர்களை தவிர ..இதை குறிப்பிட காரணம் சாதியின் வலிமை தான் ) சிலரை தவிர பல லட்சம் மக்களின் தின வாழ்வாதாரம் தொடர் கேள்வி குறிகள்..ஈழத்தில் இன சிங்கள ஆதிக்கம் என்றால் அதை விட மும்பையில் சாதிய ஆதிக்கம்..

அதையே சீரணிக்க முடியாமல் (குறிப்பாக தமிழகத்தில் கஷ்ட படுவதை நாம் பேத்தி கொள்வதை விட ஆயிரம் மடங்கு கேள்வி குறியுடன் வாழும் மக்கள் )நான் கிளம்பி வந்தேன்..எங்கும் நடை பயணமே உண்மையில் மக்களின் உண்மை துயரினை சந்திக்க முடியும் என்றும் நம்பினேன்..அப்படி இயலாமையில் இருந்த நான் அடுத்ததாக சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்த பொழுது இன்னும் ஒன்று புரிந்தது..

நான் பார்த்தது கேட்டது அதுதான் உச்சம் என நம்பியது என எல்லாமே பொய்..ரே ரோட்டில் வசிக்கும் எம் மக்களின் வாழ்விற்கு முன்பாக தாராவி மிக சாதாரணம்..

எழுதவோ பேசவோ கூட திராணியில்லாத பகுதி அது..இவர்களின் வாழ்வு எல்லையை எந்த ஒரு நாய் தலைவன் கூட புரிந்து கொள்ள முடியாது..கற்பனை செய்ய முடியாது..

எங்கு பார்த்தாலும் சிறு கப்பல் களுக்கான இரும்பு அடிக்கும் தொழிற்சாலை அதன் இடது பகுதியில் வீடுகள்..தொழிற்சாலைக்கும் வீட்டிருக்கும் இடையேயான தூரம் ஒரு அடி அந்த ஒரு அடியில் என் சில ஆயிரம் குழந்தைகள் மின் வெட்டும் இடத்தில் விளையாடுகிறான்..என் மனசை இரும்பாக்கிய இடம் அது..அந்த வீடுகளில் ஏழெட்டு மனிதர்கள்..காலம் காலமாக கப்பல் கட்டும் துறைமுகத்தை உருவாக்க அழைத்து இல்லை கொண்டு செல்ல பட்ட எம் தமிழர்கள் அதன் குழந்தைகள்..இங்கே சாதாரண வெல்டிங் பட்டறையின் மின்னலை கூட தாங்க முடியாத நம் கண்கள்..அங்கே பெரும் இரும்புகளுக்காக தீட்டப்படும் மின்னல்கள்..இரும்பு செதில்கள் அதன் நடுவே வாழும் குழந்தைகள்..அங்கேயும் அந்த இடத்தையும் பிடுங்க காத்திருக்கும் கழுகு மராட்டிய முதலாளிகள்..

இதை விட முக்கியமான ஒன்று..அந்த வீடுகள் எல்லாமே அந்தரத்தில் கட்டப்பட்டிருக்கின்றன..கடலில் இரும்புகளை ஏற்றி இரும்புகளின் மீது வீடு அமைத்து அதன் மீது வாழ்வை ஓட்டும் அந்த தமிழர்களை விட உலகத்தில் ஒரு தமிழனையும் பார்க்க முடியாது..கடல் உப்பில் இரும்புன்ன ஆகும்..அந்த இரும்பு சிதைந்தால் எப்படி உயிர் போகும்..அந்த உயிர் போனால் முதலாளி கழுகு அந்த இடத்தையும் ஆக்கிரமிக்கும்..

ஆனாலும் மனிதனாக பிறந்ததற்காக தமிழனாக பிறந்ததற்காக எத்தனை உயிர் மடினும் வாழ்வது என்கிற கோட்பாட்டில் வாழும் அவர்களை விட எதையும் சொல்ல எந்த தமிழனுக்கும் அருகதை அல்ல..என்னிடம் தங்கர் பச்சான் ஒன்னு சொன்னார்..முல்லை பெரியார் பத்தி கவலை படுரானுங்க..ஈழ பிரச்சனைய பத்தி பேசுறானுங்க..மூன்று தமிழர் விடுதலைக்காக இம்மாம் கூட்டம் கூடுது..ஒரு தானே ஒரு மக்களின் வாழ்வையே கேள்விக்குரியாக்குநிச்சி என் யாரும் கண்டுக்கல ..அப்படின்னு அவர் சொல்லும் பொழுது எனக்கு கோபம் வந்தது அவர் மீதும்..ஒட்டு மொத்த வசதியான சேற்றில் இறங்காத அதை போல பாவனை செய்த..அதற்க்கு வக்காலத்து வாங்குகிற அத்தனை தமிழ் தேசிய வாதிளின் மீதும் கோபம் வந்தது..தங்கரையும் சேர்த்து தான் என்..நீங்க கூட மும்பைய பார்க்கல..உங்க வசதி எங்க குறிஞ்சி இருக்குன்னு..

எல்லா விசயங்களுக்காக போராடுவதாக பாவனைதான் எல்லாரும் செய்றாங்க..என்னையும் சேர்த்து தான் ..இதுக்கு முடிவு என்ன..இந்த ஒட்டு மொத்த தமிழ் தேசிய வாதிகளின் கற்பிதங்களுக்கு யார் முடிவு கட்டுவது..இவர்களின் பின்னால் இயங்கும் வாலிபர்களின் கதி என்ன...இந்த வாலிபர்கள் திராவிடத்தின் மீது நம்பிக்கை கொண்ட போன தலைமுறைகளின் இன்றைய தமிழ் தேசிய வாரிசுகள் என்னும் பொழுது கவலை அளிக்கிறது..திராவிடத்தில் ஏமாந்த அதே தமிழன் இன்று தமிழ் தேசியத்தாலும் ஏமாறுகிறான் என்பதை வெக்கத்தோடு அறிவிக்கிறேன்..........

நன்றி,
இயக்குனர்,கீரா மூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக