புதன், 17 பிப்ரவரி, 2010

மெட்ராஸ் பறையர் ரெஜிமெண்ட்' Madras Paraiyar Regiment


 'மெட்ராஸ் பறையர்  ரெஜிமெண்ட்'  -  Madras  Paraiyar  Regiment
 மெட்ராஸ் மீட்புப் போர்.. இது மகர் ரெஜிமென்ட்  1 - 1 -1818  க்கு முன்னர் உள்ள வரலாறு.. மிக முக்கியமான வரலாறு.. மகர் ரெஜிமென்ட் யை புரட்சியாளர் அம்பேத்கர் மூலம் அறிந்தோம் .   ஆனால் 1758 ஆம் ஆண்டு  வெற்றியை வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட அந்த வீரநாளை, வரலாறை   பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆவணங்களைக் கொண்டு முதன் முதலாக மீட்டெடுத்து, அச்சிட்டு வெளியிட்டவர் அய்யா தமிழக முதல் சபாநாயகர்  சிவசண்முகம் பிள்ளை (24-2-1901 - 17 -2 -1974 )

தமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை.
அய்யா தமிழக முதல் சபாநாயகர்  சிவசண்முகம் பிள்ளை பற்றியும் அறிந்துக்கொள்ள வேண்டும் ..
மெட்ராஸ் மாகாணத்தில் , மண்ணின் மைந்தர்களான ஆதி தமிழர்  (திராவிடர்)  குடும்பத்தில், 1901 ஆம் ஆண்டு, பிப்ரவரி 24 ஆம் தேதி பிறந்தார். 
கல்வியை பெற்ற  சமூக முன்னேற்ற சிந்தனையாளரில் மிக முக்கியமானவர் .
  
அரசியல் :-

அரசியல் ஈடுபாடு கொண்ட நமது சிவ சண்முகம் பிள்ளை அய்யா. இளமையிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிவர்.
1938 ஆம் ஆண்டு, முதன் முதலாக பட்டியல் இன சமூகத்தில் இருந்து   மெட்ராஸ் மேயராக தேர்வு செய்யப்பட்டார். தலைவர் சிவசண்முகம் பிள்ளை அவர்கள். மாநகராட்சித் தந்தையாக அவர், சிறந்த முறையில் கடமையாற்றினார். அவரின் சிறப்பான அரசியல் செயல்பாடுகள் அவரை தலைவராக உயர்த்தியது.
1951 இல் மெட்ராஸ் மகாணத்தின் சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் . இதன் மூலம், 'சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதல் சட்டமன்ற அவைத் தலைவர்' என்கிற அடையாளத்தையும் அவர் பெற்றார்.
1951 முதல் 1955 வரை சிறந்த சபாநாயகராக செயல்பட்ட அவர், 1955 முதல் 1961 வரை மத்திய பணியாணையத்தின் (Union public service commission)உறுப்பினராகவும் கடமையாற்றினார். 1962 இல் இந்திய பாராளுமன்றத்தின் மேலவையான ராஜ்ய சபாவிற்கும் தேர்வு செய்யப்பட்டார்.

குடும்பம் :- .

திருமணம் இவருக்கு 36 ஆம் வயதில் நடந்தது.மனைவி சந்திர சிவசண்முகம் பிள்ளை 
  இத்தம்பதியர்க்கு முன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர்.

சமூக பணி:-
அரசியல் செயல்பாட்டில் மட்டுமல்லாமல், வரலாற்று திரட்டல்களிலும், எழுத்துப் பணியிலும் அவர் சிறந்த பணியைச் செய்திருக்கிறார்.
பிரிட்டனின் மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவப்படையில் இருந்த, மறையர்களின்  வீரவரலாற்றை ஆவணத்துடன் அச்சிலேற்றிக் கொண்டுவந்தார்.

ஆதிராவிடர்களின் வரலாற்றைக் கூறும் 'The History Of The Adi -Dravidas' எனும் நூலை இயற்றினார்.

மேலும், பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் வாழ்வையும் சிந்தனை, செயல்பாடுகளையும் சிறந்த ஆவணமாகக் கூறும், 'THE LIFE, SELECT WRITINGS AND SPEECHES OF Rao Bahadur M.C.Rajah, M.L.A (ராவ்பகதூர் எம்.சி.ராஜாவின் வாழ்வும், தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள் மற்றும் உரைகள்)' எனும் நூலை, 1930 ஆம் ஆண்டில் 'THE INDIAN PUBLISHING HOUSE' மூலம் எழுதி வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக