இன்று பெப்ரவரி 21.. உலக தாய்மொழி தினம்...தாய்மொழியை போற்றுவோம்...
போற்றவில்லை என்றால் ஒதுங்கி கொள்ளுங்கள் ..காயப்படுத்தாதீர்கள்..
தமிழுக்கு மட்டும் அல்ல, உலகத்திற்கே பொது நூல் தந்த அய்யன் திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட சாதியில் அடைக்க நினைப்பது மிக வேதனை அளிக்கிறது..
"இதற்கு சான்று அளிக்க வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன் " வீரமங்கை குயிலி, ஒவ்வையார், திருவள்ளுவர், பண்டிதர் அயோத்திதாசர், பாபா சாகிப் அம்பேத்கர் இவர்கள் யாரும் ஒரு குறிப்பிட்ட சமுகத்திற்குக்காக உழைக்கவில்லை அப்படி இருக்கையில் இவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுகத்தில் அடைக்க நினைப்பதும் எப்படி ??.. கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் அய்யன் வள்ளுவர் வரலாறை பதிவு செய்யவும்..
தெரியவில்லை என்றால்"சமூகத்தலைவர்கள் வீர வரலாறு" நூல் படிக்கவும் அல்லது எமது இணையத்தளத்தில் சென்று படிக்கவும்..
ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ திரிக்குறள், என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
முத்தமிழ் புலவர் திருவள்ளுவர் ;-
தகவல் :- பண்டிதர் அயோத்திதாசர், (செல்வம் தம்பிகள் கபாடி குழு தொகுத்த "சமூகத்தலைவர்கள் வீர வரலாறு" நூல்,
இந்த தேசம் முழுவதும் புத்தரின் மெய்யறம் பரவியிருந்த காலத்தில் அரவரத்துகள் என்றும், பிராமணர்கள் என்றும், அந்தணர்கள் என்றும் வழங்கப் பெற்றுவர்கள் ஞான குருக்களாக இருந்தனர். இவர்கள் நீங்கலாகச் "சாக்கையர்" என்றும், வள்ளுவர் என்றும், "நிமித்திகர்" என்றும் பெயர் பெற்றவர்கள் அரசர், வணிகர், வேளாளர் என்னும் முத்தொழில் செய்பவருக்கெல்லாம் கனம் குருக்களாக விளங்கினார்கள் என்று பண்டிதர் அயோத்திதாசர் கூறுகிறார். இதற்கான சான்றுகளை முனகலை திவாகரம், பிங்கலை திவாகரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய நூல்களிலிருந்து எடுத்து காட்டுகிறார். தென்னாட்டிலும் இவர்களைச் "சாக்கையர்", "வள்ளுவர்" , "நிமித்திகர்" என்றே அழைத்தனர் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள பகுதி வள்ளுவ நாடு என்றே வழங்கப்பட்டு வருகிறது.
வள்ளுவர்கள் அரசே மரபைச் சேர்ந்தவர்கள். அம்மரபின் தொன்றியவர்தாம் நாயனார் என்று பெயர் பெற்ற திருவள்ளுவர்.
இவர் வடமதுரையை ஆண்ட கச்சன் என்கிற அரசனுக்கும் உபகேசி என்னும் இராக்கிநிகும் பிறந்தவர். பன்னூல் பயின்று செந்நாப் புலவரான இவர் நாடு முழுவதும் சுற்றித் தந்து குருவான சாக்கிய முனிவரின் திரிபிடகம் என்னும் மூன்று பேத வாக்கியங்களையும், அவற்றின் உபநிடதங்களையும் அறிந்தார். பின்னர் தின்னநூருக்கு மேற்கேயிருன்த்த பௌத்த சங்கத்தில் சேர்ந்து சமணநிலை கடந்து அர ஹெத்துவாம் அந்தன நிலை அடைந்தார்.
தன குருவாகிய சாக்கிய முனைவர் (புத்தர்) அருளிய திரிபிடகம் பாலி, சம்ஸ்கிருத மொழிகளில் மட்டுமே இருப்பதால் சங்கங்களில் தங்கியுள்ள சமணர்களுக்கும், பிராமணர்களுக்கு மடுமே பயன்படுவதை அறிந்த நாயனார் என்கிற திருவள்ளுவர் , அது ஏனைய பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் தமிழ் மொழியில் திரிபிடகம் அல்லது திரிபேத வாக்கியம் என்னும் முதல் நூலின் வழி நூலகத் திருக்குறள் என்னும் நூலை படைத்தார். இதற்கான சான்றுகளை பிங்கலை நிகண்டார். நரிவேறு உத்தலையார், வெள்ளி வீதியார் ஆகியோரின் பாடல்களிலிருந்து பண்டிதர் அயோத்திதாசர் மேற்கோள் காட்டியுள்ளார். இவற்றில் புத்தரின் திரிபிடகம் என்னும் முதல் நூலை நாயனார் திருக்குறள் என்னும் வழி நூலாக படைத்தவர் எனக்
கூறப்படுகிறது.
இதில் தனது அரச மரபில் நடைமுறையிலுள்ள அரசு அமைச்சு, படை, குடி, கூழ் என்னும் உறுப்புகளையும், அரசு நீதிகளையும், அமைச்சருக்குரிய விதிகளையும் விளக்கினர். அத்துடன் ஒழுக்க சீலம், ஞானம் முதலியவற்றையும் விளக்கிப் பத்துப்பாடல்களில் பாயிரமாகப் படைத்துள்ளார். தனது குருவாகிய புத்தர் போதித்த தம்ம பிடகம், சுத்த பிடகம், விநய பிடகம் ஆகிய முப்பிடகங்களாம் மெய்யறம் (அறம்), மெய்ப்பொருள் (பொருள்), மெய்யின்பம் (இன்பம்) ஆகிய முப்பாலாக வகுத்துக்குறள் வெண்பாவால் திரிக்குறளாக படைத்தார்..இவற்றை விளக்கி தன தஹ்ந்தை கச்சராசனுகுப் படித்து காட்டினர். இத்தனைக் கேட்ட அவ்வரசன் மண் மகிழ்ந்து போனார்.. இந்நூலை படித்தறிந்த புத்த சங்கத்தார் , நாயனார் என்கிற திருவள்ளுவர் நூலுக்குச் திருவள்ளுவ மாலை அளித்தார்களாம்.
பறையர்கள் என்பவர்கள் பௌத்தர்களே ...இவர்களை சாதியில் அடைக்க இயலாது, இவர்கள் அறிவிலும் ஞானத்திலும் சிறந்த நின்றதால் மக்களால்
போற்றப்பட்டனர். இதைக்கண்டு பொறாத ஆரியர்கள் இவர்களை பறையர் -கீழ் சாதிக்காரர்கள் என்றனர்...பௌத்தர்கள் வாழும் இலங்கையை பறையர் நாடு என்று அழைத்தனர். ஆங்கிலயர்கள் வந்த போது அவர்களுக்கு தமிழ் கற்பிக்க சென்ற ஆரியர்கள் முதலி பறையர்களை ஏசிப்பேசிவிட்டுத்தான் கற்பிக்கத் தொடங்குவார்களாம். பறையர்களின் வகைகளை ஆங்கிலய ருக்கு எடுத்துக்கூறுவார்களாம்.
இதன் அடிப்படையில் தான் இராட்னர் அகராதி 332 ஆம் பக்கத்தில் 34 வது பிரிவில் 13 வகைப் பறையர்களின் பட்டியல் தரப்படுள்ளது அவை 1. வள்ளுவப்பறையர் 2. தாதப் பறையர் 3. தங்கலான் பறையர் 4. துற்சாலிப் பறையர் 5. குழிப் பறையர் 6. தீப்பறையர் 7. முரசப் பறையர் 8 அப்புப் பறையர் 9. வடுகப் பறையர் 10 ஆலியப் பறையர் 11. வழி பறையர் 12. வெட்டியார்ப் ப
றையர் 13. கோலிய ப் பறையர் என்பனவாகும்..ஆனால் ஆரியர்கள் வகைகளை அவர்கள் தெரிவிப்பது இல்லை..பிரம்மாவின் முகத்திலிருந்து வந்த ஆரியர்கள் 108 வகையினராக இருந்ததால் தங்களுக்கு இழிவு உண்டாகும் என பௌத்தர்களை மட்டுமே பாழ்ப்படுத்தி வந்தனர் ...இதை பற்றி எதையும் அறியாமல் இருப்பதை என்ன சொல்ல ... ??
பண்டித அயோத்திதாசர் 1907 இல் தான் தொடங்கிய ஒரு பைசாத் தமிழன் இதழில் திருவள்ளுவர் வரலாற்றை 17.06.1908 முதல் தொடர் கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.
....................................................................................................................................................................................................................................................
இணையதளத்தில் தேடினால் கிடைக்கும் திருவள்ளுவர் வரலாறு ...(எது உண்மை என்பதை உங்கள் அறிவுக்கே விட்டு விடுகிறேன் )
1) திருவள்ளுவரை பற்றிய இரகசியங்கள்:-
நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய் ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரை பற்றிய இரகசியங்கள் இதோ…..!!! (கீழ படிக்கவும்)
திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கை க்… குறிப்பு எழுத சான்றுகள் எதுவு மே இல்லை. அவர் மதுரையில் பிற ந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என் று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்கு ப் பிற ந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியா ளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிற ந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன் படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்து வர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம்கூட சிலர் நேரத் தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவ ம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வர லாற்று உண்மை. அவரின் குறட்பாக்களி ல் இருக்கி ன்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரி மை கொண்டாட நினைப்பார்கள் இல் லையா? அதுபோலத்தான் இது. வள்ளு வரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப் பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வ தற்கும் சான்றுகளே இல்லை.
மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இரு ந்த சங்கம் கி. மு. 300க்கும் கி.பி. 250 க்கும் இடைப்பட்டது. அப்போது தான் திருக்குறள், புலவர்கள் நடு விலே பாடி அறிமுகம் செய்யப் பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழிய ன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள் ளான். கிடைக்கின்ற செய்திகளையெல் லாம் இணைத்துப் பார்க்கின்றபோது , வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்ப தும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரை ப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்க ப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல் லாம் சான்றுகள் இருக்கிற போது, இவரை ப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.
அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள் விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய் யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தி னார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனு ம் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய் கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத் துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக் களில் உள்ளன.
இவர் சிந்தனைகள் உலகமக்கள் அனைவருக்குமே உதவும் வகை யில் இருக்கின்றன. எனவே தான் திருக் குறள் உலகப்பொதுமறை எனப்படுகிறது.
திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர் களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன் மை யான தமிழ்க்குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர் களுக்கு ம் இருந்துள்ளது என்பதை காலம் கால மாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவ மாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதை களில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்க ளுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந் துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகி றது.
சாதி, மதக்கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளு வர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘ திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:
“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று
சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறை த்து விட்டார்கள். ஆனால் வள்ளுவ ரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிக ளைச் சொல்லும் திருக்குறளை எழுதி னார் என்பதுதான் இப்பாடலின் பொரு ள். இக்கருத்துக்களையும், திருக்குற ளையும் படித்து புரிந்து கொள்ளும் போது, திருவள்ளுவர் சமூக சீர்த் திருத்த அறிஞராக மனதில் அழுத்த மாகப் பதிந்து விடுவார்.
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திரு வள்ளுவர். அறிவியல் கண்டு பிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கி த் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்தி ருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர் களுக்கு வழங்கியிருக்கிறது.
— கலை செல்வி
...................................................................................................................................................................2) திருவள்ளுவர் வரலாறு
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு
திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும், அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை இவை எதுவுமே உறுதிப்படவில்லை.
மேலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், சமண மதத்தவர் என்றும் பவுத்தர் என்றெல்லாம் கூட பொய்யானத் தகவல்களைப் பரிமாறுகின்றனர்.
வள்ளுவரின் திருக்குறள்
திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி, தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்ககின்றனர்.
ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படும் இந்நூல், மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
அறத்துப்பால் – முதல் பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
பொருட்பால் – இரண்டாவது பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.
இன்பத்துப்பால் – மூன்றாவது பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.
முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.
திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குறள் சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும், இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.
அவர் இயற்றிய வேறு நூல்கள்
திருக்குறளைத் தவிர, திருவள்ளுவர் மருத்துவம் பற்றிய இரு நூல்களான ‘ஞான வெட்டியான்’ மற்றும் ‘பஞ்ச ரத்னம்’ ஆகிய நூல்களை இயற்றியுள்ளதாகப் பலரும் தெரிவிக்கின்றனர்.
நினைவுச் சின்னங்கள்
இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.
அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.