செவ்வாய், 23 ஜூலை, 2013

ஜுலை 23 -தாமிரபரணி படுகொலை - அரச பயங்கரவாதம்


 ஜுலை 23 -









ரத்த சரித்திரம் - தாமிரபரணி படுகொலை கடந்த 14 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தவிர்க்கப்படமுடியாத தினமாக நிலைபெற்றுவிட்டது, கூலிஉயர்வு கேட்டுப் போராட்டம் நடத்திய 17 போராளிகளை காவல்துறையினர் அநியாயமாக அடித்துக்கொன்ற ஜுலை 23 தாமிரபரணி நினைவு தினம். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னன் ...சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத்தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததில் 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். 1930ல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தார். அந்த காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் புதர்காடுகளை மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளாக உருவாக்கிய பெருமை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பட்டியலின தேவேந்திர குல மக்களையே சாரும். 1948ம் ஆண்டின் இரயத்துவாரி நில ஒழிப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. ஆனால் பிபிடிசி நிறுவனமோ, அப்போதைய தமிழக காங்கிரஸ் அரசுடன் குத்தகை ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டு தனது குத்தகை காலத்தைத் 2029 வரை தொடர்ந்தது. மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக சுமார் 5000க்கும் அதிகமான தோட்டத்தொழிலாளர்கள் வேலைபார்த்து வந்தனர். தேயிலை, காஃபி, ஏலம், மிளகு போன்ற பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. 1968ம் ஆண்டில் தேயிலை பறிக்க டிராலி வண்டி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராகவும், 1978ம் ஆண்டில் தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு தினமும் காலையில் கூடுதலாக இரண்டு இட்லி கொடுக்க வேண்டும் என்றும், 1988ம் ஆண்டில், அன்றாடம் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல காலை வேளையில் கூடுதலாகப் பத்து நிமிடங்கள் தரவேண்டும் என்றும் மாஞ்சோலையில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வந்தது. 1998ம் ஆண்டில் மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 33 ரூபாய் உட்பட தினக்கூலியாக ரூபாய் 53 மட்டுமே பெற்று வந்தனர். இந்நிலையில் தென்காசி பாரளுமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க மாஞ்சோலை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமியிடம் மாஞ்சோலைப் பகுதி மக்கள் தங்கள் பிரச்சனைகளை முன்வைத்தனர். ஆண்டாண்டு காலமாக கொத்தடிமை போல நடத்தப்படும், தொழிலாளர்களின் பரிதாப நிலையயை கேட்டறிந்த டாக்டர். கிருஷ்ணசாமி தேர்தல் முடிந்தவுடன் இதற்கொரு முடிவு கட்டுவோம் என்று உறுதியளித்தார். தேர்தல் முடிவுற்ற பின்பு மாஞ்சோலை பகுதி தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் தினக்கூலியை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், அடிப்படை வேலையான 16 கிலோ தேயிலைக்கு கூடுதலாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் 5 தர வேண்டும், எஸ்டேட் பகுதியில் நிலவும் கொத்தடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 33 கோரிக்கைகள் புதிய தமிழகம் கட்சியினால் முன்வைக்கப்பட்டது. அதனை பிபிடிசி நிர்வாகம் 20.08.98க்கு முன்பாக நிறைவேற்றித்தர வேண்டும் என காலக்கெடுவும் விதிக்கப்பட்டது. பிபிடிசி நிர்வாகம், புதிய தமிழகம் கட்சியின், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளியதன் விளைவாக தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 20.08.1998 முதல் வேலைப்புறக்கணிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள். தங்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தோள் கொடுக்க மாஞ்சோலை பகுதி மக்கள் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., சி.பி.அய்., சி.பி.அய்(எம்)., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கத்தையும் கலைத்து புதிய தமிழகம் தொழிற்சங்கம் என்ற ஒரே குடையின் கீழ் அணி திரண்டனர். 03.09.1998ல் எஸ்டேட் நுழைவாயிலை இழுத்து மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஊத்து எஸ்டேட்டில் இருந்து தேயிலைத் தூள் ஏற்றிச் சென்ற தனியார் லாரி மறிக்கப்பட்டது. மறுநாள் 04.09.1998 எஸ்டேட் நிர்வாகத்தினரோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். ஆனால் அதன்பிறகு மாஞ்சோலை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் புகுந்து தாக்கினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் அடித்து இழுத்துச் சென்றனர். 127தொழிலாளர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சுமார் 6 மாத கால போராட்டத்திற்கு பின்பு ஜனவரி 1999 முதல் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினார்கள். ஆனால், எஸ்டேட் நிர்வாகமோ தற்காலிகத் தொழிலாளர்களிடம் சட்டத்திற்கு புறம்பாக வேலைநிறுத்ததில் ஈடுபட்ட உங்களை ஏன் வேலை நீக்கம் செய்யக்கூடாது? என கேள்வியெழுப்பியது. பிபிடிசி நிர்வாகம் தொழிலாளர்களுக்கு பல்வேறு சங்கடங்களை உண்டாக்கியது. தற்காலிகத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்பட்டது. இதனால் கொதித்தெழுந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் 07.06.1999 அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவரின் வீட்டை முற்றுகை இட்டனர். சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர். 451 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். தளராமல் மறுநாளும் 08.06.1999 முற்றுகையிட்ட 198 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 198 பெண்கள் உட்பட 653 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆளும் தி.மு.க. அரசோ தொடர்ந்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 47 நாட்களாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 653 தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்னிறுத்தி 23.07.1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு பகுதி மக்களுடன், தமிழ் மாநில காங்கிரஸ், அய்க்கிய ஜமாத், சி.பி.அய்., சி.பி.அய்(எம்), உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இணைந்து தாமிரபரணி நதிக்கரையில் பேரணி சென்றார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டதை பொறுக்க முடியாத ஆளும் வர்க்கம், லட்சோப லட்சம் மக்கள் தன்னெழுச்சியாக புதிய தமிழகம் என்ற கட்சியின் பின்னால் அணி திரள்வதை சகித்துக் கொள்ள முடியாத அதிகார வர்க்கம் காவல்துறையின் மூலமாக கலவரத்தை கட்டவிழ்த்து விட திட்டமிட்டது. பேரணியை வழிநடத்திவந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். க.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்க்குள் சென்று மனு கொடுப்பதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆளும் தி.மு.க.வால் திட்டமிட்டே குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வன்முறையில் இறங்கினர். தலைவர்களின் உயிருக்கும் குறைவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடினார்கள். உயிர் தப்பிக்க ஓடிய மக்கள், காவல் துறையால் தாமிரபரணி ஆற்றுப் பக்கமாக குறி வைத்து தள்ளப்பட்டனர். தாமிரபரணி நதிக்குள் குதித்தவர்களையும் விரட்டி விரட்டி அடித்தது காவல்துறை. இக்கொடுமைகளைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் அநியாயமாக அடித்தே கொலை செய்யப்பட்டனர். நீதி கேட்டுப் போராடியவர்கள் படுகொலை செய்யப்பட்ட அரச பயங்கரவாதம் அரங்கேறியது. இப்படுகொலை நடந்த சில் நாட்களில் தினக்கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது. சிறைக்கு சென்ற அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, சட்டத்துறை அமைச்சராக இருந்த ஆலடி அருணா, அப்போதைய டி.ஜி.பி.குமாரசாமி, ஐ.ஜி. விபாகர் ஷர்மா ஆகியோர் இந்தப் படுகொலையை மூடி மறைக்கத் துணை போனார்கள். அரச பயங்கரவாதத்தை, படுகொலையை கட்டவிழ்த்து விட்ட கலெக்டர் தனவேல், கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டனர். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் என்ற ஒன்றை ஒப்புக்கு அமைத்தது திமுக அரசு. பதினோரு மாத விசாரணைக்குப் பின்பு 27.06.2000 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நீதிபதி மோகன், ”பேரணிக்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர். நீரில் மூழ்கியதால் ஏற்ப்பட்ட இறப்புகள் சந்தேகத்திற்க்கு இடமின்றி விபத்து தான்” என்று மனசாட்சியின்றி, மனிதாபிமானமின்றி அறிவித்தார். அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மோகன் கமிசன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்த போது அந்த அறிக்கையை சட்டசபையிலேயே கிழித்தெறிந்து போர்குரல் எழுப்பினார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி. தனது கணவர் மாரியப்பன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக கைக்குழந்தையுடன் போராடிய ரத்தினமேரி அவரது பச்சிளம் குழந்தை விக்னேஷ் உடன் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டது இன்னமும் நம் கண்களில் நிழலாடுகின்றது. நீதி கேட்டுப் போராடியவர்கள்???...
http://sangilikumar.blogspot.in/2012/07/blog-post_29.html

சனி, 13 ஜூலை, 2013

MVI:- சாதிய ஒடுக்குமுறைக்கு நாம் செய்ய வேண்டிய எதிர்வினை..

1981-ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் என்ற நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள ஓர் சிற்றூர் இந்தியா முழுவதிலும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு ஊராக மாறிவிட்டது.

திடீரென்று அது இப்படி ஏன் பிரபலமாக்கப்பட்டது? 

அவ்வூரிலிருந்த பட்டியல் இன (தாழ்த்தப்பட்ட) சமுதாய சகோதரிகளும்சகோதரர்களும் தங்களது தன்மானத்தைக் காத்துக் கொள்ளஇந்து மதம் என்கின்ற இந்த பார்ப்பன மதத்தினை விட்டு வெளியேறி மனம் மாறினர்மதம் மாறினர்.
===================================================================

சாதிய ஒடுக்குமுறைக்கு நாம் செய்ய வேண்டிய எதிர்வினை..

நவம்பர்  7- 2012  'தர்மபுரி' சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக நாம் (திருநெல்வேலி) மீனாட்சிபுர மக்கள் பின்பற்றிய இந்து மதத்தில் இருந்து வெளியேறிய வழிமுறைகளை  பின்பற்றி இருந்தால் ...
.....................................................................................................................................................


முக்கிய குறிப்புகள் :-

( ௧)  தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும்  1300 மக்கள்தொகை கொண்ட ஒரு சிற்றூர் மீனாட்சிபுரம். அங்கே வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களே.மொத்தம் உள்ள (பட்டியல் இன சமுதாய) 300 குடும்பங்களில்  210 குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக மதம் மாறியுள்ளனர். இவர்கள்  
19-02-1981 அன்று மதம் மாறினார்கள்...

 /இஸ்லாமிய மதத்தை தெர்ந்தெடுப்பதற்கு முன்பாக மற்ற மதங்களை பற்றியும் ஆய்வு செய்ததாகவும் - புத்த மதம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லையென்றும் - இந்து மதம் போலவே கிறித்துவ மதத்தில்சாதீயம்புரையோடியிருக்கிறதாகவும் - அதனால்தான் இஸ்லாமிய மதத்தை தேர்ந்தெடுத்ததாகவும் கூறியிருக்கின்றனர் மதம் மாறிய மீனாட்சிபுர தலித்கள்.)

(௨) ஆதிக்க சக்திகளின் ஒடுக்குதல்களிலிருந்து விடுதலை பெற - எதிர்கொள்ள மீனாட்சிபுர தலித்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்டவுடனே அக்கம்பக்கத்திலுள்ள சில கிராமங்களில் சாதீய உறவுகளில் தடாலடி மாற்றம் ஏற்பட்டது..
வர்னாசிரம சிந்தனை ஆட்டம்கண்டது. டீக்கடைகளில் உள்ள இரட்டை குவளைகளில் ஒன்று மாயமாய் மறைந்தது - ஏளனமாக சாதிப்பெயரை சொல்லி அழைப்பது குறைய ஆரம்பித்தது.  'பள்ளப்பயலேஎன்றழைத்தவர்கலெல்லாம்  பாய்என்றழைக்க ஆரம்பித்தனர். தெருக்களில் நுழைய தடை விதித்தவர்கலெல்லாம் - வீடுகளுக்குள் அழைத்து விருந்து கொடுத்தனர். அது மட்டுமல்லமதம் மாறிய தலித்களால் - மதம் மாறாதா கீழ்சாதியினருக்கும் கோவிலுக்குள் நுழையும் அளவிற்கு சாதீயகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு -'சமூக அந்தஸ்த்துதரப்பட்டது.)

(௩)மதம் மாறிய தலித்களை'தீட்டு கழிக்காமல்' 'பரிகாரம் செய்யாமல்அரவணைத்துக்கொண்ட சுற்றுவட்டார முஸ்லிம்கள். (தென்காசிகடையநல்லூர்சங்கரன்கோயில்அச்சன்புதூர்வடகரை) பாரபட்சம் காட்டாமல் திருமண உறவுகள் வைத்துக்கொண்டனர். கோயிலுக்குள் நுழையவும் - தங்களுக்காக தனிக்கோயில் கட்டிக்கொள்ளவும் - சேரி வீதிகளில்  சாமிவலம் வரம் வேண்டும் என்பதற்கு மட்டுமல்லாமல் சட்டைப்போடுவதற்கு கூட போராடியவர்கள் - மதம் மாறியதும்  தொப்பி போட்டுக்கொண்டுஜமாத் தலைவராக - பள்ளிவாசல் நிர்வாக குழு உறுப்பினராக உலா வர முடிந்தது. வேதங்களை கேட்கக்கூட அருகதையற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டவர்கள்ஒலி பெருக்கி மூலம் ஐவேளையும் தொழுகை அழைப்பு (பாங்கு) விடும் அதிசயம் நடந்தது. (இவைகள் மதம் மாறிய தலித்களை இஸ்லாமியர்கள் சமமாக நடத்துகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள்.)

(௪) (மதமாற்றம் பற்றி ஆய்வு செய்த ஆறுமுகம் கமிட்டி அறிக்கையில் -  மதமாற்றத்திற்கு வளைகுடா பணமோ அல்லது  பிரியாணிபொட்டலங்களோ காரணமல்ல என்று அறிக்கை சமர்ப்பித்து வரலாற்று திரிபர்களின் கட்டுக்கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மதம்மாறிய தலித்கள் அரபு ஷேக் குகளைப்போல் - 'ஷோக்காகவாழ்கிறார்கள் என்ற ஆர்ய சமாஜத்தினரின் கூப்பாடு  கோயாபல்ஸ்வகையை சார்ந்தது என்ற 'ஹிந்து நாளேடு' மதம்மாறிய பின் தலித்களின் 'சமூக அந்தஸ்து உயர்ந்திருப்பது உண்மை' - 'பொருளதார அந்தஸ்து உயரவில்லைஎன்ற உண்மையை போட்டு உடைத்தது...)
====================================================================
சரி நாம் மீனாட்சிபுர வரலாற்றை பாப்போம்.......


கட்டுரை 1:-

மீனாட்சிபுரம் முஸ்லிம்கள் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சமூகத்திற்கு...
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80705249&format=html&edition_id=20070524


'உங்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படும்- சம அந்தஸ்துள்ள இந்துக்களாக நீங்கள் மதிக்கப்படுவீர்கள்' என்று அடல் பிஹாரி வாஜ்பாய், - மக்வானா- சுப்பிரமனிய சுவாமி - போன்ற இந்து தேசிய தலைவர்கள் தேவ (சமஸ்கிருத & ஹிந்தி) பாஷைகளில் சொன்னதையெல்லாம் - தமிழக பாஷையில் மொழி பெயர்த்து தலித்களுக்கு கூறினர். ஆர்.எஸ்.எஸ் தடாலடியாக, உயர் சாதி இந்துக்களுக்குரிய 'பூநூலை' - தலித்களுக்கு அணிவித்து அவர்களை முழு அந்தஸ்துள்ள இந்துவாக சான்றிதழ் கொடுப்பதாகவும் ஆசைக்காட்டியது....

அப்போதைய மத்திய அரசு விசாரனை கமிசன் அனுப்பி மறைமுகமாக மிரட்டியது; தமிழக அரசின் மந்திரிசபையே (எம்.ஜி.ஆரை தவிர) வருகை புரிந்து தனக்கேயுரிய பாணியில் தலித்களை கெஞ்சியும் - கொஞ்சியும் பார்த்தது. ஆனால் இவை எதற்கும் 'மசிந்து' மனம் மாறாமல் - இராகு காலம் - எம கண்டம் பார்க்காமல், 1981ல் மதம் மாறி 'அகண்டபாரதம்' காண எண்ணியவர்களின் வயிற்றில் புளியை கரைத்தவர்கள்தான் மீனாட்சி புரத்தை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித்கள்.
இந்து மதத்தை விட்டு போவதால் 'சமூக அந்தஸ்த்து' உயரப்போவதில்லை' 'சமூகம் விடுதலை பெற மதமாற்றம் சரியான மார்க்கமல்ல' என்று 'பூச்சாண்டியும்' 'அறிவுரையும்' வழங்கினர் 'சனாதான' சமூக ஆர்வலர்களும் - தலைவர்களும்.
'சமூக அந்தஸ்து' மட்டும் கோரியா தலித்கள் மதம் மாறினர்?
இல்லை. தலித் குடியிருப்பில் இல்லாத அடிப்படை தேவைகளான குடிநீர்- மின்சாரம்- சாலை வசதிகளையும் கேட்டுத்தான் மதம் மாறினர். இஸ்லாமியர்களாக மாறிய தலித்களுக்கு சமூக அந்தஸ்த்து கிடைப்பதற்கு சிறிது காலம் பிடித்தது என்னவோ உண்மைதான் ஆனால் உயர் சாதியினருக்கு மட்டுமே கிடைத்து வந்த பஸ் வசதி - மின்சாரம் - சிமென்ட் சாலை - தண்ணீர் தொட்டி போன்றவைகள் மீனாட்சிபுர மதமாற்றத்திற்கு பிறகு அக்கம்பக்கத்து தலித் கிராமங்களுக்கும் கேட்காமலே கிடைத்தது.
"ஹிந்து மதத்தில் அவர்களுக்கு தரப்படாத சமூக நீதி, இழைக்கப்பட்ட தீண்டாமை இவற்றிலிருந்து இஸ்லாம் விடுதலை அளிக்கும். இங்கு அவர்கள் எல்லோரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று சொல்லி மதம் மாற்றப்பட்ட நிகழ்வு" (வெ.சா) என்று மீனாட்சிபுர தலித்களின் மதமாற்ற முடிவை கொச்சை படுத்தியும் - ஆசைக்காட்டி அவர்களை 'மதம் மாற்றியதாக' சம்பந்தமில்லாமல் இஸ்லாமியர்களையும் சாடுகிறார்...

இஸ்லாமிய மதத்தை தெர்ந்தெடுப்பதற்கு முன்பாக மற்ற மதங்களை பற்றியும் ஆய்வு செய்ததாகவும் - புத்த மதம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லையென்றும் - இந்து மதம் போலவே கிறித்துவ மதத்தில் 'சாதீயம்' புரையோடியிருக்கிறதாகவும் - அதனால்தான் இஸ்லாமிய மதத்தை தேர்ந்தெடுத்ததாகவும் கூறியிருக்கின்றனர் மதம் மாறிய தலித்கள்.
தலித்கள் மதம் மாறுவதை 'இந்துத்வ' சக்திகள் எதிர்த்தது போலவே சில இஸ்லாமிய பெயர்தாங்கிகளும் எதிர்த்தனர்- சாதிப்பெயரை சொல்லியழைப்பதிலும் - இரட்டை குவளைகளை பயன்படுத்துவதிலும் - ஆதிக்க சாதியினரை பின்பற்றினர். நாலனாவுக்கும் - எட்டனாவுக்கும் 'புளுக்க' வேலை செய்பவனெல்லாம் தொப்பி போட்டு 'துளுக்கனாக' ஆகிவிட்டால் - என்ன செய்வதென்ற சுய நலத்தோடும்- உயர்சாதியினரின் கோபத்திற்காளகி விடுவோமென்ற பய உணர்வோடும் தலித்களை மத மாற்றம் செய்ய மறுத்தனர்.
மதம் மாற நிணைத்த தலித்கள் பாளையங்கோட்டையிலுள்ள தென் இந்திய இஷா-அத்துல் சபையை அனுகிய போது நூற்றுக்கணக்கான கேள்விகளை எதிர்கொண்டனராம், இந்து மதத்தை துறக்க காரணங்கள் என்னவென்று உலமாக்களால் வினவப்பட்டனராம் - ஆரிய சமாஜம் போல ' இந்துவாக மாறனுமா வாங்கோ - ஐந்தாயிரம் ரூபாய் தாங்கோ' ன்னு நடைபாதை கடைகாரன் போல கூவிக்கூவி அழைக்கவில்லையாம்.

ஆதிக்க சக்திகளின் ஒடுக்குதல்களிலிருந்து விடுதலை பெற - எதிர்கொள்ள மீனாட்சிபுர தலித்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொண்டவுடனே அக்கம்பக்கத்திலுள்ள சில கிராமங்களில் சாதீய உறவுகளில் தடாலடி மாற்றம் ஏற்பட்டது - வர்னாசிரம சிந்தனை ஆட்டம்கண்டது. டீக்கடைகளில் உள்ள இரட்டை குவளைகளில் ஒன்று மாயமாய் மறைந்தது - ஏளனமாக சாதிப்பெயரை சொல்லி அழைப்பது குறைய ஆரம்பித்தது. 'பள்ளப்பயலே' என்றழைத்தவர்கலெல்லாம் 'பாய்' என்றழைக்க ஆரம்பித்தனர். தெருக்களில் நுழைய தடை விதித்தவர்கலெல்லாம் - வீடுகளுக்குள் அழைத்து விருந்து கொடுத்தனர். அது மட்டுமல்ல, மதம் மாறிய தலித்களால் - மதம் மாறாதா கீழ்சாதியினருக்கும் கோவிலுக்குள் நுழையும் அளவிற்கு சாதீயகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு - 'சமூக அந்தஸ்த்து' தரப்பட்டது.

(இது சமூக அந்தஸ்தா (!) என்று வெ.சா போன்றவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.)
மதம் மாறிய தலித்களை 'தீட்டு கழிக்காமல்' 'பரிகாரம் செய்யாமல்' அரவணைத்துக்கொண்ட சுற்றுவட்டார முஸ்லிம்கள் (தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோயில், அச்சன்புதூர், வடகரை) பாரபட்சம் காட்டாமல் திருமண உறவுகள் வைத்துக்கொண்டனர். கோயிலுக்குள் நுழையவும் - தங்களுக்காக தனிக்கோயில் கட்டிக்கொள்ளவும் - சேரி வீதிகளில் 'சாமி' வலம் வரம் வேண்டும் என்பதற்கு மட்டுமல்லாமல் சட்டைப்போடுவதற்கு கூட போராடியவர்கள் - மதம் மாறியதும் 'தொப்பி போட்டுக்கொண்டு' ஜமாத் தலைவராக - பள்ளிவாசல் நிர்வாக குழு உறுப்பினராக உலா வர முடிந்தது. வேதங்களை கேட்கக்கூட அருகதையற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டவர்கள், ஒலி பெருக்கி மூலம் ஐவேளையும் தொழுகை அழைப்பு (பாங்கு) விடும் அதிசயம் நடந்தது. (இவைகள் மதம் மாறிய தலித்களை இஸ்லாமியர்கள் சமமாக நடத்துகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களாக கருத தகுதியானவைகளா என்பதை வெ.சா போன்றவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்).

முஸ்லிம்களாக மதம்மாறினால் - இருக்கின்ற இட ஒதுக்கீட்டு சலுகைகள் எல்லாம் பறிபோய்விடுமென்று தெரிந்தும் - மதமாறிய மீனாட்சிபுர தலித்களை, வளைகுடாவிலிருந்து வந்த ரூ 500- நோட்டுக்காகவும் - இஸ்லாமியர்கள் போட்ட 'பிரியானி' பொட்டலங்களுக்காகவும்தான் மதம் மாறினார்கள் என்று இந்துத்துவவாதிகள் வழக்கம்போல கொச்சைப்படுத்தினர்.
மதமாற்றம் பற்றி ஆய்வு செய்த ஆறுமுகம் கமிட்டி அறிக்கையில் - மதமாற்றத்திற்கு வளைகுடா பணமோ அல்லது 'பிரியாணி' பொட்டலங்களோ காரணமல்ல என்று அறிக்கை சமர்ப்பித்து வரலாற்று திரிபர்களின் கட்டுக்கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மதம்மாறிய தலித்கள் அரபு ஷேக் குகளைப்போல் - 'ஷோக்காக' வாழ்கிறார்கள் என்ற ஆர்ய சமாஜத்தினரின் கூப்பாடு 'கோயாபல்ஸ்' வகையை சார்ந்தது என்ற ஹிந்து நாளேடு 'மதம்மாறிய பின் தலித்களின் சமூக அந்தஸ்து உயர்ந்திருப்பது உண்மை - பொருளதார அந்தஸ்து உயரவில்லை' என்ற உண்மையை போட்டு உடைத்தது...
மீனாட்சிபுர மதமாற்றத்திலிருந்து தமிழக தலித் கிராமங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன தெரியுமா? எப்பொதெல்லாம் அவர்கள் மனிதர்களாக மதிக்கப்படவில்லையோ- அவர்களின் வசிப்பிடத்திற்கு தேவையான அடிபடை வசதிகள் மறுக்கப்படுகிறதோ - அவர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகிறதோ - அப்பொழுதெல்லாம் அவர்கள் எடுக்கும் ஆயுதமாக மாறியது 'இஸ்லாமியர்களாக மாறப் போகிறோம்" என்ற முழக்கம். முழக்கமிட்ட அடுத்த கனமே அரசு அதிகரிகளும் - IAS அதிகாரிகளும் விரைந்து வந்து வேண்டியதை செய்து கொடுத்தனர்.

இந்த ஆயுதத்தை கையிலெடுத்த திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த வடநாதம்பட்டி தலித்களும் - காஞ்சி மாவட்டத்தை சார்ந்த கூத்திரம்பாக்கம் தலித்களும் வென்றெடுத்த உரிமைகள் பல.
pirainathipurathaan@yahoo.com
http://specials.rediff.com/news/2006/sep/27sld2.htm
http://www.hinduonline.com/hindu/today/13/13310611.htm
http://www.geocities.com/indianfascism/fascism/cast_not_cash.htm
http://www.hinduonnet.com/2002/10/13/stories/2002101302190500.htm

-----------------------------------------------------------------------------------------------------------------------

கட்டுரை  2:-
மீனாட்சிபுரம் - ஒரு மீள் பார்வை!
மீனாட்சிபுரம் - ஒரு மீள் பார்வை!

இந்து மதத்தைக் காக்கப் போகிறோம் என்று வலம் வரும் இந்துத்வாவாதிகள் இந்த பதிவை ஒரு தரம் நன்கு படிக்க வேண்டும். எங்கு தவறு இருக்கிறது என்பது நாம் சொல்லாமலேயே விளங்கும். 

'நோய் முதல் நாடி' என்ற வள்ளுவரின் வாக்குக்கொப்ப பி.ஜே.பியும் ஆர்.எஸ்.எஸ் ஸூம் இந்து மதத்தில் உள்ள சாதி பாகுபாடுகளை ஒழித்து விட்டாலே இந்து மதத்தைக் காப்பாற்றி விடலாம். இந்த தேர்தலில் கிடைத்த தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்த வேண்டும். இல்லை என்றால் வெறும் லெட்டர்பேடு இயக்கமாக பி.ஜே.பி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.


முன்னுரை:- - கி.வீரமணி.


1981-ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் என்ற நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை அருகில் உள்ள ஓர் சிற்றூர் இந்தியா முழுவதிலும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒரு ஊராக மாறிவிட்டது. திடீரென்று அது இப்படி ஏன் பிரபலமாக்கப்பட்டது? அவ்வூரிலிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாய சகோதரிகளும், சகோதரர்களும் தங்களது தன்மானத்தைக் காத்துக் கொள்ள, இந்து மதம் என்கின்ற இந்த பார்ப்பன மதத்தினை விட்டு வெளியேறி மனம் மாறினர்; மதம் மாறினர்.

அவர்களை நான் அந்தப்பகுதிக்கு கழகப் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த போது, இந்தச் சமூகப்பிரச்சினையில் உள்ள உண்மைகளைக் கண்டறிய, அந்த கிராமத்திற்கே நேரில் சென்று, அங்கே மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமூக மக்களையும், மதம் மாறாத அதே சமூகத்தினைச் சேர்ந்தவர்களையும் - பல வயதுக்காரர்களையும் சந்தித்து, கேள்வி கேட்டு ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டு வந்து அதையே ஒரு சிறு நூலாக அப்படியே அவர்கள் கூறியதை எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாக்காது வெளியிட்டேன்.

இந்த சந்திப்பு நிகழ்ந்த நாள் 25-07-1981 ஆகும்!

அங்கே மொத்தம் உள்ள 300 குடும்பங்களில் 210 குடும்பங்களின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக மதம் மாறியுள்ளனர். இவர்கள் 19-02-1981 அன்று மதம் மாறினார்கள்.

இந்த ஆண்டில்(2002) ஒரியண்டல் லாங்குமென்ஸ் லிமிடெட் புத்தக கம்பெனியினரால் வெளியிடப்பட்டுள்ள "Vishwa Hindu Parishad and Indian Politics" என்ற ஓர் ஆங்கில நூல் - இதன் ஆசிரியர் "மஞ்சேரி காட்ஜு" என்ற அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் விரிவுரையாளரான ஓர் அம்மையார். இங்கிலாந்து நாட்டில் உள்ள School of Oriental and African Studies என்ற லண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பி.எச்.டி பட்ட ஆய்வினை இந்த தலைப்பில் மேற்கொண்டு செய்தார். அது தான் மேலே காட்டிய நூலாக வெளிவந்துள்ளது.
அந்நூலில் மூன்றாவது அத்தியாயத்தில், "Translation to Mass Activism" தீவிரதன்மை கொண்ட மக்கள் இயக்கமாக(வி.இ.ப) மாற்றம் என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.
In February 1981 Meenakshipuram, a village in Tirunelveli District of Tamil Nadu with a population of 1,300 almost all of whom were "Untouchables", became a centre of controversy when large-scale conversions to Islam were reported. For the VHP and its associate organizations, the Meenakshipuram conversions were not an outburst of local grievances, but "a small experience of an old conspiracy to destroy Hindus, Hinduism and Hindusthan," financed by petrodollars.
It was reported that around 1,000 of 1,250 untouchables had converted to ISLAM, a step to protest against the denial of social equality. The rules of social conduct were laid down by the high-caste Thevars, and their infringement prompted harsh retaliation. Conversions to ISLAM had taken place in 1980-81 in some adjoining areas, but they did not provoke much of an outcry from the VHP or any other HINDU outfit, this was probably because the number was not as great as in Meenakshipuram, and also because bitter intercaste relations prevented reaction on the part of higher castes. The conversions in these areas seem to have been a reaction to the social and political humiliation suffered by the untouchables at the hands of the higher castes like the Thevars.
The incident was communally interpreted by the RSS and VHP as 'an act performed by several thousand Muslims, both men and women, from the surrounding areas, who invaded the village and forced the Harijans to convert.' It seems clear, however, that the VHP could not reconcile itself to the issues which were brought to the fore by the Meenakshipuram mass conversions, despite,, the linkages it had drawn in its early years between casteism (rules of purity and pollution) and conversions. The agenda of social reform contained in the original charter had become overshadowed. The VHP's socially privileged and conservative character had much to do with this. That continued oppression by the high-caste HINDUS could lead to a point when untouchables would make a total break from the HINDU fold was something that had little place in the VHP social understanding. This understanding also denied agency to the socially depressed classes, who of their own volition, could detach from a community and join another.
It is this break that a conservative upper-caste HINDU seemed unable to bear and accept-primarily because, it can well be argued, this reveals a store of embarrassments and uncovers many unpleasant facts within HINDU society structured by Brahminical Hinduism(Raj 1993:233).The Meenakshipuram episode was widely publicized by the VHP and other organizations like the HINDU Munnani and the Arya Samaj, after which, it is reported, seven of the converts reconverted to Hinduism(Khan 1991:49). The VHP floated the Sanskriti Raksha Yojana(Programme to Protect Culture) immediately after the incident. In November and December 1982, it launched the Jana Jagrana Abhiyana(Campaign for People's Awakening) to "warn" the HINDUS about "the international conspiracy to devour Hinduism". During this campaign the VHP managed to collect some funds from the public as donations. However, apart from making monetary contributions people generally remained indifferent to the issue.
The 1980s thereafter saw the VHP preoccupied with planning and holding campaigns, conferences and processions at a regional level for "national integration". The issue of religious conversion was much hyped, and was projected as a grave threat to national security and integrity. State intervention was demanded by the VHP to supplement its efforts to check the activities of Christian missionaries.

இதன் தமிழாக்கம்:
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் 1300 மக்கள்தொகை கொண்ட ஒரு சிற்றூர் மீனாட்சிபுரம். அங்கே வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களே. அவர்களில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் 1981 பிப்ரவரியில் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதனால் ஒரு முரண்பாட்டின் மையமாக அது ஆயிற்று.

விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்தத் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்து மதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் அன அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் 1,000-த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் என அறிவிக்கப்பட்டது.

சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்னும் விதிகளை உயர்சாதியினரான தேவர்கள் வகுத்தனர்; அந்த விதிகளை மீறுதல் கடுமையான எதிர்விளைவையே உருவாக்கிற்று. 1980-81 இல் இப்பகுதியைச் சுற்றியிருந்த சில இடங்களிலும் இஸ்லாத்திற்கு மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த மதமாற்றங்கள் வி.இ.ப. அல்லது மற்ற இந்து அமைப்புகளிடமிருந்து எந்தவிதப் பெருங்கூச்சலையும் எழுப்பவில்லை.

ஏனெனில் மீனாட்சிபுர மதமாற்றங்கள் போல பெரும் எண்ணிக்கையிலான மதமாற்றங்கள் அல்ல அவை. மேலும் உயர் ஜாதியினரிடையே கசப்பு மிகுந்த (சாதிகலப்பு) உறவுகளும் உயர்சாதியினரின் எதிர்ப்பைத் தடுத்தன. தேவர் போன்ற உயர்சாதியினரிடம் தீண்டத்தகாத மக்கள் சமூக அளவிலும் அரசியல் நிலையிலும் பட்ட அவமானங்களின் எதிர்விளைவே இந்த மதமாற்றங்கள் எனத் தோன்றுகிறது.

மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் இந்த ஊர்களுக்குள் நுழைந்து, மதமாற்றத்திற்கு ஆதிதிராவிடரைக் கட்டாயப்படுத்தினர் என்பதாக இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. போன்றோர் மதக்கண்ணோட்டத்துடன் விளக்கம் அளித்தனர். கடந்த காலங்களில் இங்கு நிலவிய தூய்மை, தீட்டு போன்ற கடுமையான ஜாதி வெறித்தனத்திற்கும், இந்த மத மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்புக்கொள்ள இயலாத வி.இ.பரிசத்தினால், மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் வெளிக்கொணர்ந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்கொள்ளவோ இயலவில்லை என்றே தோன்றுகிறது.

இந்த மதமாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல்திட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.

இத்தகைய சமூகச் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்து கொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத்தினர் தாங்களாகவே இந்து மதத்திலிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.

இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத்தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக்கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது.(ராஜ்: 233)


வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளால் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது.(கான் அ991 : 49)


இந்த நிகழ்ச்சிக்குப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங்கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜக்ரண அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத்துலக சதித்திட்டத்தைப் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின் போது நன்கொடையாகப் பொதுமக்களிடமிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் முடிந்தது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பிரச்சாரக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத்துவதில் 1980-ஆம் ஆண்டுக்குப் பின் வி.இ.ப. தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதமாற்றப் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் காட்டப்பட்டது. கிறிஸ்தவ மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசின் தலையீட்டை வி.இ.ப. கோரியது.

பார்ப்பனீய ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிடுகிறது என்பதற்காகவே அவர்கள் மதமாற்றத்தை - அதுவும் சுமார் 100 கோடி மக்கள் கொண்ட நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதை ஒரு பெரும் பூகம்பமாகக் கருதி, தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, இன்று பகிரங்கமாக 'திரிசூலம்' வழங்கி, வன்முறையை வெளிப்படையான ஆயுதமாகக் கையாளுகின்றனர்.

மத்தியில் உள்ள ஆட்சி பெயரளவுக்குத் தேசிய ஜனநாயக முன்னணி என்ற 23 கட்சிகள் கூட்டணியாக முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றாலும், நடைமுறையில் அது பி.ஜே.பி. என்ற பெரிய அண்ணனின் தாக்கீது செல்லும் ஆட்சியாக நடைபெற்று வருவது உலகறிந்த உண்மையாகும்.
அக்கட்சியினர், இந்திய அரசியல் சட்டத்தினைத் தூக்கி எறிந்து விட்டு, பழைய மனுதர்மத்தையே சட்டமாக வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகத் தீர்மானம் போட்டு முழங்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

'விசுவ இந்து பரிஷத்' ஒரு கலாச்சார அமைப்புதானே, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை இணைத்து ஒரு புது உணர்ச்சியைத் தோற்றுவிப்பது தானே என்ற கருத்தில் இதில் முக்கியப் பங்கு வகித்த டாகடர் கரண்சிங் போன்ற அறிஞர்கள், இந்த பிற்போக்குத் தனத்தை - அதாவது இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமே மீண்டும் அரசியல் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அபாயகரமானது; அது மீண்டும் 2-ஆம் நூற்றாண்டுக்கு நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்பதால் அவர் அதிலிருந்து விலகி கொண்டார்(இவ்விவரங்கள் மேற்சொன்ன நூலில் 31-ஆம் பக்கத்தில் உள்ளது).

பசு பாதுகாப்பு, கணபதி ஊர்வலம், புதிய கோயில் கும்பாபிஷேகம், அனுமார் ஜெயந்தி விழாக்கள், இராமன் கோயில் கட்டும் விவகாரம் இவைகள் மூலம் தான் பாமர மக்களுக்குப் 'பக்தி போதை'யைத் தந்து இந்து மதம் என்கிற பார்ப்பன மதத்தினை வலியுறுத்த அவர்கள் முயலுகின்றனர்!.

மதம் மாறுவதற்குரிய நிர்பந்தம் ஏன் ஒடுக்கப்பட்ட மக்காளுக்கு ஏற்படுகிறது என்பதை ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், அறிவுஜீவிகள் விவாதம் செய்வது - அய்வர் யானையை வர்ணித்த கதைபோலச் செய்தாலும் - அந்த மக்களைஏ நேரில் கண்டு அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளோம்!.

நோய் நாடி, நோய் முதல் நாடுவதே உயர்ந்த சிகிச்சை முறை; நோயின் கொடுமையால் அவதியுற்று அழுகின்றவனை அடித்து மாற்ற முயற்சிப்பது பலன் தருமா? வாசகர்களே முடிவு செய்யட்டும்!.

இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ள உமர்செரீப் கூறியதாவது:-

உமர்செரீப்: இங்கே வந்த மணியன் கேட்டார், "நீங்க பெரியார் கொள்கைக்காரங்கறீங்க; இந்த மதத்திலும் சாமி கும்பிட வேண்டியது தானே இருக்கிறது? பின் ஏன் மதம் மாறினீங்கன்னு கேட்டார்." நாங்க சொன்னோம், "இந்து மதத்திலே சாதி இருக்குது. இங்க சாதி வித்தியாசம் இல்லை. எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை இருக்கலாம். ஆனல், எல்ல இடத்திலும் உன் சாதி என்னன்னு தானே கேக்கறாங்க" என்று சொன்னேன்!


ஆசிரியர்: அதுக்கு மணியன் என்ன சொன்னார்?உமர்செரீப்: அதுக்கு அவர் ஒண்ணும் சொல்லல்லே.

ஆசிரியர்: உங்களுக்கு இந்த எண்ணம் திடீர்னு தோணுச்சா? இல்ல கொஞ்ச நாளாவே இருந்ததா?20 வருடம் முன்பே
உமர்செரீப்: 20 வருஷத்துக்கு முன் எங்க தகப்பனார் அப்படி மாறணும்னு ஏற்பாடு பண்ணினார். ஆனா சில பெரியவங்கள்லாம் தடுத்து நிறுத்திட்டாங்க.இப்ப நாங்கள்லாம் படிச்சவங்க. 10, 20 பேர் செர்ந்து இதிலேயே இருப்பதா? அல்லது ஒரு 50 வருஷம் கழித்தாவது விமோசனம் உண்டா அப்படீன்னு யோசிச்சோம். இன்னும் 50 வருஷம் கழிச்சும் நமக்கு தாழ்த்தப்பட்டவங்கற முத்திரை மறையாது என்று உணர்ந்த பிறகு தான் மதம் மாற முடிவு செய்தோம்.

ஆசிரியர்: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.

ஆசிரியர்: எந்தக் காலேஜில்?உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!
உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.



ஆசிரியர்:
இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?உமர்: நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.ஏது மரியாதை?


ஆசிரியர்:
நீங்க பி.ஏ., வரைக்கும் படிச்சிருக்கீங்களே அதுக்காகவாவது கிராமத்தில் மரியாதை காட்டமாட்டார்களா?உமர்: எங்கே காட்டுறங்க? இல்லையே!


ஆசிரியர்: உங்க சாதியாரைத் தவிர, பிற சாதியார் மரியாதை காட்டறாங்களா?உமர்: எங்க காட்டறாங்க?. வெள்ள வேட்டி, வெள்ள சட்டை மோட்டுகிட்டு போனாலே, அதோ போறான் பாரு வெள்ள வேட்டி கட்டிக்கிட்டு, படிச்சுப்புட்டானாம் அப்படீன்னு கிண்டல் செய்றாங்க. டிபார்ட்மெண்டில கூட படிச்சாலும் பட்டம் பெற்றாலும் துவேஷம் தான் பண்றாங்க.

ஆசிரியர்: இங்க பொருளாதாரத்தில் எப்படி? தொழில் முறை என்ன?உமர்: இங்க பெரும்பாலும் விவசாயம் பண்றாங்க; எல்லாருக்குமே சொந்ததைடங்கள் இருக்கு.

ஆசிரியர்: நீங்க யாராவது தினக் கூலிகளாக இருக்கீங்களா?உமர்: தினக்கூலிகளும் பத்து இருபது பேர் இருக்காங்க. அவங்கலும் மதம் மாறியிருக்காங்க.துவேஷமே காரணம்

ஆசிரியர்:
 மற்ற கிராமத்திலே இருக்கிற தாழ்த்தப்பட்டவங்களை விட, குறிப்பா திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிறவங்க படிப்புத்துறையில் முன்னேறுனவங்க பொருளாதாரரீதியில் - எடுத்துக்கிட்டாலும் மற்றவங்களைவிட நல்ல நிலையில் இருக்கிறீங்க. அப்படி இருந்தும் உங்களுக்கு இந்த எண்ணம் தோண வேண்டிய அவசியமென்ன?உமர்: துவேஷம் தான் காரணம். மனித உரிமை தான் வேண்டும். படிப்பு பரவப்பரவ மக்களுக்கு பகுத்தறிவு உண்டாகுது. அப்போது இதுல இருக்கிறதனால என்ன நன்மைன்னு சிந்திக்கிறாங்க. நம்மை மனுசனா மதிக்காத சாதியில ஏன் இருக்கணும்? நம்மை மதிக்கிற மதத்துக்கு போயிடலாமேன்னு நினைக்கிறாங்க.



ஆசிரியர்: நீங்க பெரியார் கூட்டங்களையெல்லாம் கேட்டிருக்கீங்கள்ள, அந்தக் கொள்கையில் நம்பிக்கை உண்டா?உமர்: ஆமா!

ஆசிரியர்: இருந்தாலும் நீங்க இளைஞர்கள், உங்க சமுதாயத்தில் இருக்கிற பெரியவங்க என்ன நினைக்கிறாங்க? அவங்க மதம் மாற ஆதரவா இருந்தாங்களா?உமர்: நாங்க எந்தப் பெரியவங்களையும் அணுகவில்லை; எல்லாம் இளைஞர்கள் தான். ஆனா எங்க ஊர் பெரியவங்களும் மதம் மாறியிருக்காங்க.


ஆசிரியர்: இங்கு மொத்தம் எத்தனை குடும்பங்கள் மதம் மாறியிருக்கு?உமர்: மொத்தம் 300 குடும்பத்தில் 210 குடும்பங்கள் மதம் மாறியிருக்காங்க.

ஆசிரியர்: ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்?உமர்: சராசரி 5 பேரு.

ஆசிரியர்: அப்ப ஒரு ஆயிரம் பேர் இருக்கும்.
உமர்: ஆமாம்!முக்கியமானவரை மறப்பதா?


ஆசிரியர்: இப்ப சாதாரணமா தீண்டாமையினால தொந்தரவு, சுயமரியாதையில்லாம நடத்தப்படுவது, நமக்கு படிச்சும் கவுரவம் இல்லை இது மாதிரி தொந்தரவு இருக்குது.இந்து மதத்தில் தீண்டாமையெல்லாம் அனுசரிக்கிறது இல்லைன்னு சங்கராச்சாரி சொல்றாரே?. மதாச்சாரியார்கள் அப்படி சொல்லியும் நடைமுறையில் இங்க இருக்கறவங்க கடைபிடிக்கறதில்லையேன்னாலும் - நமக்கு சங்கராச்சாரி தானே முக்கியம்! அவுங்கள விட்டுட்டு எப்படி போறதுன்னு நீங்க நினைக்கலியா?உமர்: இந்து மதம்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யுது; இல்லேன்னு சொல்லல. இங்கே தாழ்த்தப்பட்டவங்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. தாழ்த்தப்பட்டவன் இந்துவா இருக்கிறதில அர்த்தமேயில்லை.ஏன்னா, அவங்க சாதி இந்துன்னு வைச்சுக்கிறாங்களே தவிர அரிஜன்என்பதை அப்படியே தான் வைச்சிருக்காங்க. அதை மாத்தலியே.அவங்க அன்னைலேயிருந்து இன்னைய வரைக்கும் ஒரு அரிஜனைஇந்துவா ஏத்துகிறதில்ல.ஆக முடியாதுஇவன் தான் அவங்களோட போயிடுறானே தவிர இவனை அவுங்க ஒத்துக்கறதில்ல. இங்கே கலவரம் நடக்குதுன்னா சாதி இந்துக்களுக்கும் அரிஜனனுக்கும் தான் சண்டைன்னு சொல்றானே தவிர இந்துக்கும் இந்துக்கும் சண்டேன்னு சொல்றதில்ல. அப்படியிருக்கும் போது எப்படி அரிஜன்இந்து ஆக முடியும்?


ஆசிரியர்: சமஸ்கிருதத்தில் சாதி இந்துக்களுக்கு வர்ணஸ்தர்கள் மற்றவர்களுக்கு ஈழவர்களையும் சேர்த்து அவர்ணஸ்தர்கள் என்று சொல்கிறார்கள். அந்த அவர்ணஸ்தர்களுக்கும் கீழே எல்லோருக்கும் கீழே கடைசியாக தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலை வைத்துள்ளனர்.இப்ப சங்கராச்சாரியார் துக்ளக் பேட்டி மற்ற செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு தலைவர்கள்லாம் வந்தாங்களே, உங்களை வந்து பாக்கலியா?உமர்: சந்திக்கலிங்க.


ஆசிரியர்: வாஜ்பேயி எல்லாம் வந்தாரே, வந்து பாக்கலியா? நியாயமாக உங்கள தானே வந்து சந்திக்க வேண்டும்?உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.
'மதம் மாறாதே' 'மதம் மாறாதே'!

'

'அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே'


அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.



ஆசிரியர்: மற்றவங்க யாரும் சந்திக்கலயா?உமர்: வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். "இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.


ஆசிரியர்: அதுக்கு என்ன சொன்னாரு?உமர்: அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, "இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு" சொல்லிட்டுப் போயிட்டார்.


......இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?



ஆசிரியர்: சரி இந்து மதத்தில் கொடுமையிருக்கிறதினாலே மதம் மாறினீர்கள். எத்தனையோ மதங்கள் இருக்க ஏன் இஸ்லாம் மதத்துக்கு மாறினீர்கள்?உமர்: இந்து மதத்தை விட்டா கிறிஸ்தவ மதம் இருக்கிறது. நாங்கள்லாம் இஸ்லாம் மதத்துக்கு மாறனும்கிறதுக்கு முன்னாடி ஒரு 50 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

..கிறிஸ்தவ மதம் மாறினால்....

ஆசிரியர்: எத்தனை வருஷத்திற்கு முன்பு?உமர்: சுமார் 20 வருஷத்திற்கு முன்னாடி, அங்க தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனாக இருக்கிறானே தவிர தாழ்த்தப்பட்டவன் நாடார் கிறிஸ்தவனுக்கு பெண் கொடுப்பதே நாடார் கிறிஸ்தவன். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனுக்குப் பெண் கொடுப்பதோ இல்லை. அங்க சாதி அப்படியே இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மதம் அப்படி இல்லை. யார் ஒருவன் அல்லாவைத் தொழுகிறானோ அவன் எல்லாமே முஸ்லிம் தான். அங்க தீண்டாதவன் என்ற வித்தியாசம் கிடையாது.
'ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!'