தினகரன் செய்தி 24/05/2010
அதன்படி விவேக் ஒபரோய், சபானா ஆஷ்மீ , அமீர் கான் போன்ற திரை பிரபலங்களை சந்தித்து தமிழர்களின் உணர்வுகளை எடுத்துரைத்தனர். ஐ ஃ பா அலுவலகத்திலும் , வட இந்திய திரைப்பட ச ங்கத்தினரிடமும் தமது கோரிக்கையை முன்வைத்தனர் , அதோடு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடந்த போராட்டத்திலும் தோழர்கள் கலந்து கொண்டனர். அமிதாபச்சன் தனது முடிவை மறு பரிசீலனை செய்வதாக சொன்னதும் விழா ஏற்பாட்டாளர்கள், சல்மான்கானை விழாவின் Brand Ambassador ஆக நியமித்தனர். நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களின் இந்த முடிவால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளான தோழர்கள் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்தி கைதானார்கள். இதில் சிறீதர், முது ராஜ் ,கண்ணன், மதன், சரவணன் உட்பட பத்து தோழர்கள் கைதாகி அன்று மாலை காவல் துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும், சல்மான்கான் திருப்திகரமான எந்த பதிலும் தராததால் , சல்மான் கான் உருவ பொம்மையை எரித்து தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் கைது செய்யப்பட்டு 2 நாட்கள் காவலில் வைத்து ஆளுக்கு 3000 வீதம் அபராதம் விதித்து, பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இதில் மா.கதிரவன், சிறீதர், செல்வகுமார், டோம்ணிக், பழனி குமார், முத்துவேல், வில்சன், ஜேம்ஸ் பொன்னையா ஆகிய 8 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
தினகரன் செய்தி 31/05/2010
தினதந்தி செய்தி 17/05/2010
இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழில் வெளிவந்த செய்தி 31/05/2010"]
பொதுநல போராட்டத்திற்கு கொள்கை தெளிவோடு இருக்கும் வெகுச்சிலரை கொண்டு இயங்கும் தமிழ் சூழலில் முரண்பாடுகளும், தனித்து விடப்படுதலும் தொடர்ந்து தோழர்கள் களத்தில் சந்திக்கும் பொழுது, மாற்று மாநிலங்களில் சொல்லவா வேண்டும். பொருளாதாரம் என்ற அற்ப காரணத்தை கொண்டு களத்தில் நிற்கும் தோழர்கள் விலகி விட கூடாது என்ற நோக்கத்தில் வழக்கில் பிணையில் வருவதற்கு செலவான தொகையை மட்டுமாவது உணர்வுள்ள தமிழர்கள் உதவர்களானால், கூலிக்காக ஓடி ஓடி உழைக்கும் வரிய சூழலிலும் உணர்வை இழக்காமல் நிற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
போராட்டங்களை குறித்து செய்தி ஊடகங்களில் வந்த செய்திகளையும், பிணை வாங்க செலுத்திய ரசீதையும் இணைத்துள்ளோம்.
இந்தி,மராத்தி,ஆங்கிலத்தில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய துண்டுபிரசுரம்-1

இந்தி,மராத்தி,ஆங்கிலத்தில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய துண்டுபிரசுரம்-1"]

பிணையில் வெளிவந்த தோழர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையின் ரசீது இணைப்பு
தமிழர் என்ற உரிமையோடு,
களத்தில் என்றும் நிற்கும் ஆவலோடு,
மும்பை தமிழ் மக்கள் கூட்டமைப்பு,
தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
மா. கதிரவன் : +919321454425
து . சிரிதர் : +919702481441
பாண்டியன் : +919821072848
வங்கி எண் :188104000024772
வங்கி பெயர் : IDBI Bank
வங்கி கிளை : Sion