பல போலி அரசியல் முகங்களை அம்பலப்படுத்திய மராத்திய மாநிலத் தமிழ்ச்சங்கத்தின் "தமிழர் எழுச்சி மாநாடு" – மும்பை, விழித்தெழு இயக்கம்
கடந்த ஏப்ரல் 14 ம் தேதி தாராவி பஸ் டிப்போ அருகிலுள்ள மனோகர் ஜோஷி கல்லூரி மைதானத்தில் மராத்திய மாநில தமிழ்ச் சங்கம் சார்பாக "தமிழர் எழுச்சி மாநாடு " என்கிற பெயரில் காங்கிரஸ் மாநாடு நடைப்பெற்றது. (இந்த மாநாடு வருகிற பாராளுமன்ற தேர்தலை குறிவைத்தே நடைப்பெற்றது என்பது தமிழ் உணர்வாளர்களின் வாதம் )
இந்த நிகழ்வில் மராத்திய மாநில முதலமைச்சர் " பிரிதிவிராஜ் சவான் " மராத்திய மாநில அமைச்சர்கள் போன்ற இன்னும் பிற முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டனர். (ஆனால் காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத கைக்வாட் , காங்கிரஸ் அமைச்சர் வர்ஷா கைக்வாட், மும்பை மேயர் சுனில் பிரபு (சிவ சேனா கட்சியே சார்ந்தவர்), தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. அழகிரி (மாநாடு தொடங்கும் வரை பலருக்கும் இவர் வருவர் என்பது தெரியாது ) போன்றவர்களை தவிர அழைக்க பட்டவர்களில் பலர் மாநாட்டில் பங்கேற்க வில்லை)
இதில் கொடுமை என்னவென்றால் இந்திய அரசு சமீபத்தில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மன்ற தீர்மானத்தையே கண்டுகொள்ளவில்லை இலங்கையில் நடந்தது இனப்படுகொலை , பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும், பொருளாதார தடை போன்ற தீர்மானத்தை ஏற்க வில்லை.இலங்கை எப்படி பொது சன வாக்கெடுப்பு நடத்தும் .ஐ.நா சபையே தான் நாம் வலியுறுத்த வேண்டும் ஆனால் இங்கே இப்படி.. அடுத்த நகைசுவை
காங்கிரஸ் எம்.பி. அழகிரி பேசுகையில் " காங்கிரஸ் கட்சி பேசுவதுபோல இவரும் இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கு சம உரிமை பெற்று தருவோம் " என தெரிவித்தார், இந்த தீர்மானத்தை முதலில் காங்கிரஸ் எம்.பி அழகிரியே ஆதரிக்கவில்லை ..
மாநாட்டில் நிறைவேற்ற ப்பற்ற தீர்மானம் மராத்திய மாநில தமிழ்ச் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய வில்லை. இந்த தீர்மானம் மூலம் இவர்கள் யார் என்பது மும்பை தமிழ் மக்களுக்கு தெரிந்து இருக்கும்..
மாநாட்டில் நிறைவேற்ற ப்பற்ற தீர்மானம் மராத்திய மாநில தமிழ்ச் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய வில்லை. இந்த தீர்மானம் மூலம் இவர்கள் யார் என்பது மும்பை தமிழ் மக்களுக்கு தெரிந்து இருக்கும்..
௧.)மும்பையில் தமிழ்நாடு பவன் அமைப்பது,
௨.)தமிழ் வழி கல்விக்கு ஆலோசனை , பிரச்சனைகளை தொடர்பாக நடவடிக்கை எடுப்பது.உயர் கல்விக்கு உதவி செய்வது , மும்பை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் பெற முயற்சி செய்வது,
௩.)காவேரி , முல்லை பெரியார் நதிநீர் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது.
௪.) ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்வது.
௫.)மராத்திய மாநில தமிழ் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்வது (ஆனால் நாம் வைத்து கோரிக்கை .மும்பையில் தமிழர்கள் யாரும் தனது பெயர்க்கு பின்னால் சாதி பெயர்களை சேர்க்க கூடாது)
௬ .)இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு ஆலோசனை வழங்குவது போன்ற தீர்மானகளை வரவேற்கிறோம். (ஆனால் மாநகராட்சி பள்ளிகள் விரைவில் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது ..இதன் மூலம் http://www.facebook.com/notes/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-3-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-243-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-/551407214883617
மும்பையில்,கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்க்கல்வியில் படித்த 3 ஆயிரத்து 243 (மும்பை வாழ் தமிழ்) மாணவர்கள் படிப்பை நிறுத்தி உள்ளனர்..மாணவர்கள் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது..இது குறித்து வலிமையான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டவில்லை.
தமிழ்நாடு பவன் அமைப்பது, சாதிச் சான்றிதழ் பெற்று தருவது, தமிழ் கல்விக்கு உதவுதல் போன்ற தீர்மானகளை வரவேற்கிறோம். அணுஉலை எதிர்ப்பு போரட்டதற்கு ஆதரவு மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் தருமபுரி கலவரம் - தமிழர்களை பிழவுப்படுத்தும் பா.ம.க தலைவர் ராமதாசு போன்ற சாதி தலிவர்களின் பேச்சுக்கு கண்டனம் போன்றவை இல்லாதது வருத்தும் அளிக்கிறது.
ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று திரு. அண்ணாமலை அவர்களை சந்தித்து நமது கோரிக்கையே முன் வைத்தோம்.
(1) ஏப்ரல் 14 அன்று மனோகர் ஜோஷி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் மும்பை தமிழர் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியை (முக்கியமாக தமிழர்களுக்கு எதிரான எந்த ஒரு அரசியல் கட்சியையும் அழைக்காதீர்கள் ) சார்ந்தவர்களை சிறுப்பு விருந்தனர்களாக அழைக்காதீர்கள்.
(2) இலங்கை தமிழர்கள் என்பதை மாற்றி ஈழத்தமிழர்கள் என்று திருத்தம் செய்யுங்கள் மேலும் பொதுசன வாக்கெடுப்பு , இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என்று தீர்மானம் கொண்டு (மராத்திய மாநில தமிழ்ச் சங்கம் சார்பாக 14 குறிக்கோள்கள் வெளியிடப்பட்டது அதில் 3 வது குறிக்கோளில் இலங்கை தமிழர்களின் உரிமை மற்றும் நல்வாழ்வுக்காக குரல் கொடுப்பது என்பதை தயவு கூர்ந்து மாற்றுங்கள்)
மேலும் சில கோரிக்கைகளை சேர்க்க வேண்டுகிறோம்.
1.தமிழர்களுக்கு ஒரு பொதுவான கட்டடம்/ஆலுவலகம் , விடுதி உருவாக வேண்டும் .(தமிழர்கள் கூட்டம் நடத்த இடம் தேடி அலைய வேண்டிய உள்ளது)
2.தமிழர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்க வழக்கறிஞர் அணி உருவாக வேண்டும்.(தமிழர்களுக்கு குரல் கொடுக்க பொதுவான வழக்கறிஞர் இல்லை )
3.மும்பையில் செயல்ப்பட இயலாத மாநகராட்சி (தமிழ்) பள்ளிகளை நாமே எடுத்து நடத்த வேண்டும்.(தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை இப்போது குறைந்து கொண்டே வருகிறது)
4.மும்பையில் தமிழர்கள் தனது பெயர்களுக்கு பின் சாதியை இணக்க கூடாது என்பன போன்ற தீர்மானகளை உங்கள் குறிக்கோள்களில் சேர்க்க வேண்டுகிறோம்...என நமது கோரிக்கைகளை வைத்தோம்.. ...
(ஏப்ரல்
2 ஆம் தேதி அன்று மும்பை, ரஜினி தலைமை ரசிகர் மன்றம் , சார்பில் நடைபெற்ற
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை (இனப்படுகொலை, பொதுசன வாக்கெடுப்பு மற்றும்
பொருளாதார தடை) ஏற்க மறுக்கும் இந்தியாவுக்கு அரசுக்கு எதிரான கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ..அதில் விழித்தெழு இயக்கம் சார்பாக சிரிதர், பொன்
தமிழ்செல்வன் , மதன் , பிரான்சிஸ் கலந்துக்கொண்டோம் . அப்போது இறுதியில்
கலந்துகொண்ட மராத்திய மாநில தமிழ்ச் சங்க, தலைவர் அண்ணாமலையிடம் ...சில
கோரிக்கையே முன் வைத்தோம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக