தந்தை என் .சிவராஜ்: வாழக்கை வரலாறு
சில முக்கிய குறிப்புகள் தந்தை சிவராஜ் குறித்து :-
- தனக்கு துணை நீதிபதி பதவி தந்ததை ஏற்காமல் மக்கள் பணி செய்வதை
உயர்வாக கருதினார்.பழங்குடி சமுதாயம் முன்னேற பொதுவாக கல்வியும் குறிப்பாக
சட்ட அறிவும் இருக்க வேண்டுமென்றார்.
- தந்தை சிவராஜ் மற்றும் மீனாம்பாள் சிவராஜ் தம்பதியர்கள், ஆதிதிராவிட
மகாஜன சபா, ஜஸ்டிஸ் கட்சி , சுயமரியாதை இயக்கம், ஆகியவற்றுடன் இணைந்து
சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு மறியல் போராட்டங்களில் தீவிரமாக
ஈடுபட்டனர்.(நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இவரை நன்கு
பயன்படுத்திக்கொண்டன )
- மாணவர் விடுதிகள் நகரில் பல இடங்களில் தோன்றக் காரணமாயிருந்தார்.
- ஆதிதிராவிட மக்கள் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது
என்பவை மனித உரிமைக்கு துரோகமானது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட
தனி அதிகாரியினை நியமிக்க வேண்டுமென சட்ட சபையில் முழங்கியவர்
- தாத்தா, இரட்டை மலை சீனுவாசனாருடன் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர்
அமைத்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்திற்கு (A.I.S.C.F) 1942
முதல் தலைவராக இருந்தவர்.
- சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் கலந்துக்கொண்டு இந்திய ஏழை மக்களின் இடர்பாடுகளை விளக்கினார்.
- 1946 இல் மக்களின் இழிவுகளை நீக்கி இன்னல்களை போக்க ஏதும் நடவடிக்கை
எடுக்காததால் ஆங்கில அரசை எதிர்த்து அவர்கள் தந்த திவான் பகதூர் என்ற
பட்டத்தை உதறித்தள்ளினார்...இந்தியர்களையும், ஆங்கிலயேர் களையும் தட்டிக்கேட்கும் வகையில் 1946 இல் ஜெய் பீம் என்ற ஆங்கில வார இதழை துவக்கி நடத்தினார்.நம் பூர்வீக பவுத்த நெறியினை மக்களிடையே பரப்பினார்.
- 1945-46 ல் சென்னை மாநகர மேயராக பதவி வகித்தார். அப்போது கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்படுத்தி, இலவச உணவும் அளிக்கச்செய்தார்.
சிந்திப்பதெல்லாம் முற்போக்காகவம் செயல்படுவதெல்லாம் மக்களின்
நன்மைக்காகவும் இருத்தலை கொள்கையாகக் கொண்டோர் தங்கள் செல்வாக்கின்
முத்திரையை மக்கள் உள்ளத்தில் ஆழ பதித்துச் செல்வார்கள்
அப்பெருமைக்குரியவர் தலைவர்
தந்தை என் .சிவராஜ் அவர்கள்.
வறுமை என்னவென்று தெரியாத நமசிவாயம் -வாசுதேவி தம்பதியருக்கு சென்னை
ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்பர் 29 ஆம் தேதி
பிறந்தார்.
கல்விப்பணி:-
4 ஆம் வகுப்பு வரை தன் வீட்டிலேயே படித்தார். பின் சென்னை ராயப்பேட்டை
வெஸ்லி பள்ளியில் அப்போது தலைமை ஆசிரியராக இருந்த டி.ஜான்ரத்தினம்
அவர்களிடம் 5 ஆம் வகுப்பு பயின்றார். தனது மெட்ரிக் படிப்பை முடித்து
வெஸ்லி கல்லூரியில் 'இண்டர்மீடியேட்' பயின்றார்.
பிறகு சென்னை மாநிலக்கல்லூரியில் B.A பட்டம் பயின்றார். இக்கல்லூரியில்
டாக்டர் இராதாக்கிருஷ்ணன் இவரின் ஆசிரியராக இருந்தது சிறப்புக்குரியது.
பின் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பினை
முடித்தார். மேலும் சட்டக் கல்லூரியில் 3 ஆண்டுகள் பேராசியராக
பணியாற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழக்காட தன்னை
அர்ப்பணித்துக்கொண்டார். தனக்கு துணை நீதிபதி பதவி தந்ததை ஏற்காமல் மக்கள்
பணி செய்வதை உயர்வாக கருதினார்.
பழங்குடி சமுதாயம் முன்னேற பொதுவாக கல்வியும் குறிப்பாக சட்ட அறிவும் இருக்க வேண்டுமென்றார்.
குடும்பம்:-
1918 ஜூலை 10 ல் தனது 26 ஆம் வயதில் அன்னை மீனாம்பாளை வாழ்க்கை இணையராக்கிக்கொண்டார்.
தம்பதிகள் ஆதிதிராவிட மகாஜன சபா, ஜஸ்டிஸ் கட்சி , சுயமரியாதை இயக்கம்,
ஆகியவற்றுடன் இணைந்து சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு மறியல் போராட்டங்களில்
தீவிரமாக ஈடுபட்டனர்.(நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இவரை நன்கு
பயன்படுத்திக்கொண்டன )
கல்யாணி, தயாசங்கர், பத்மினி, போதி சந்தர் என 4 மகவுகள் இவர்களுக்கு பிறந்தனர்.
பவுத்தத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக இருவரும் பின்பற்றினர்.
அரசியல் பணி
சென்னை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் செனட் உறுப்பினராக தந்தை திகழ்ந்தார்.
மாணவர் விடுதிகள் நகரில் பல இடங்களில் தோன்றக் காரணமாயிருந்தார்.
மக்கள் சொந்த நிலா விவசாயிகளாக மாறாத வரையில், அவர்களுடைய அடிமைமுறை மாறாது என்ற கொள்கையே உடையவர்.
அப்பொழுது மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள பெரு முதலாளிகளுக்கு சரி நிகராக பந்தயக்குதிரைகளை வைத்து போட்டிகளில் வென்று காட்டியவர்.
ஆதிதிராவிட மக்கள் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது
என்பவை மனித உரிமைக்கு துரோகமானது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட
தனி அதிகாரியினை நியமிக்க வேண்டுமென சட்ட சபையில் முழங்கியவர்.
சென்னை மாகாண தாழ்த்தப்பட்ட சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகவும், சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் துணைத் தலைவராகவும் இருந்தவர்.
தாத்தா, இரட்டை மலை சீனுவாசனாருடன் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர்
அமைத்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்திற்கு (A.I.S.C.F) 1942
முதல் தலைவராக இருந்தவர்.
சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் கலந்துக்கொண்டு இந்திய ஏழை மக்களின் இடர்பாடுகளை விளக்கினார்.
1946 இல் மக்களின் இழிவுகளை நீக்கி இன்னல்களை போக்க ஏதும் நடவடிக்கை
எடுக்காததால் ஆங்கில அரசை எதிர்த்து அவர்கள் தந்த திவான் பகதூர் என்ற
பட்டத்தை உதறித்தள்ளினார்.இந்தியர்களையும், ஆங்கிலயேர் களையும்
தட்டிக்கேட்கும் வகையில் 1946 இல் ஜெய் பீம் என்ற ஆங்கில வார இதழை துவக்கி
நடத்தினார்.
பிறகு டாக்டர் அம்பேத்கர் A.I.S.C.F ஐ கலைத்து விட்டு அகில இந்திய குடியரசுக் கட்சியை அமைத்தார்.
1956 முதல் அக்கட்சியின் தலைவராக தந்தை சிவராஜ் ஏக மனதாக நாக்பூரில்
தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிக்காலம் வரை அப்பொறுப்பினை வகித்தார்.
இந்து மதத்தினை புறக்கணித்து விட்டு , மதம் மாறினால்தான் , நாம் ஒரு தனி
இனமாக உரிமைக்குரல் எழுப்பிட முடியும்,போராட முடியும் என வலியுறுத்தினார்.
நம் பூர்வீக பவுத்த நெறியினை மக்களிடையே பரப்பினார்.
1945-46 ல் சென்னை மாநகர மேயராக பதவி வகித்தார். அப்போது கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்படுத்தி, இலவச உணவும் அளிக்கச்செய்தார்.
1944லும் 1960 லும் பாராளுமன்ற உறுப்பினரானார். அங்கு பல
செயற்குழுக்களில் பங்கேற்று நாட்டிற்கு செயல்வகை மிகுந்த திட்டங்களை
தந்தார்.
இந்திய பழங்குடி மக்களின் நன்மைக்காக போராட்ட சென்ற இந்த அன்புத் தலைவர்
1964 செப்டம்பர் 29 ஆம் நாள் அதிகாலை 5.30 மணிக்கு மாரடைப்பால் பிரிவினை அடைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக