மும்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மும்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 டிசம்பர், 2014

மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக "அழகின் சிரிப்பு" மற்றும் கருவாடு " ஆவணப்படம் சிறப்பு காட்சி யாக மாணவ மாணவிகளுக்கு திரையிடப்பட்டது.

13 வது அமர்வு.. மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக "அழகின் சிரிப்பு" மற்றும் கருவாடு " ஆவணப்படம் சிறப்பு கட்சியாக மாணவ மாணவிகளுக்கு தாராவியில் இருக்கும் OMTEX class யில் – நேற்று டிசம்பர் 14, 2014 ஞாயிறுக்கிழமை மாலை திரையிடப்பட்டது. 

இயக்குனர் வ. கௌதமன் இயக்கிய "அழகின் சிரிப்பு " ஆவணப்படம் மற்றும் வினவு தயாரித்த “கருவாடு” ஆவணப்படம் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு காட்சியாக OMTEX வகுப்பில் திரையிடப்பட்டது





13 வது அமர்வு.. மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக "அழகின் சிரிப்பு" மற்றும் கருவாடு " ஆவணப்படம் சிறப்பு காட்சி யாக மாணவ மாணவிகளுக்கு தாராவியில் இருக்கும் OMTEX class யில் – நேற்று டிசம்பர் 14, 2014 ஞாயிறுக்கிழமை மாலை திரையிடப்பட்டது. 

இயக்குனர் வ. கௌதமன் இயக்கிய "அழகின் சிரிப்பு " ஆவணப்படம் மற்றும் வினவு தயாரித்த “கருவாடு” ஆவணப்படம் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு காட்சியாக OMTEX வகுப்பில் திரையிடப்பட்டது


முடிவில் மாணவ மாணவிகளிடம் திரையிடப்பட்ட ஆவணப்படம் மற்றும் நடந்து வரும் நாட்டு நடப்புகள் குறித்து விவாதம் நடைப்பெற்றது. 40க்கு மேற்பட்ட பல்வேறு பள்ளிகளில் படிக்கும் 10 வகுப்பு மாணவர்கள் , 10 க்கு மேற்பட்ட 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

பின்னர் #தாராவி மக்கள் சந்தித்த பிரச்சனைகள், சந்திக்க இருக்கிற பிரச்சனைக்கள் குறித்தும் , வரலாறு குறித்தும், சேரி மக்கள் (சோப்பட) வாழ்க்கை - அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை குறித்து கட்டுரைகள் , ஆவணப்படம், குறும்படம் உருவாக மாணவ மாணவிகளிடம் மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக கோரிக்கை வைத்தோம் ..இதை மாணவ மாணவிகள் தயக்கம் இன்றி ஏற்றுக்கொண்டு ..ஆண்டு தேர்வு முடிந்த பின்னர் கோடை விடுமுறை நாட்களில் தயார் செய்து தருவாதாக உறுதி அளித்துள்ளனர்.
============================================================
தாராவியில் தமிழகத்து கருத்தியல்களை பேசி, பேசி பார்க்கிறோம். முற்போக்கு அரசியலை விதைக்க துடிக்கிறோம். மறுபக்கம் தமிழகத்து சாதி சங்கங்கள் அனைத்தும் இருக்கின்றன....மதவாத அமைப்புகள் ஊடுறுவியிருக்கின்றன..
இந்த நிலையில் பிற நாடுகளிலும், சென்னை குடிசைப்பகுதிகளிலும் நடப்பது போல தாராவி உழைக்கும் மக்களை வெளியேற்றினால், தற்போதுள்ள அரசியல் புரிதலில் மக்களை திரட்டவும் முடியாது.
எதிர்ப்பே தெரிவிக்க முடியாத ஜந்துக்களாக, அடிமைகளாக....
உழைத்து, உழைத்து நம் முன்னோர்கள் உருவாக்கிய தாராவியை முதலாளிகளுக்கு தாரைவார்த்துவிட்டு நிற்போம்..
ஈழம் போன்றதுதான் தாராவி...
தமிழ் உழைக்கும் மக்கள் உட்பட, மராத்திய உழைக்கும் மக்கள், வடமாநில உழைக்கும் மக்களின் உழைப்பில்தானே இன்றைய தாராவி உயிர்வாழ்கிறது..
நமது ஜீவாதாரமான தாராவியை முதலாளிகள் பறிப்பதை பார்த்துக் கொண்டிருப்பது சரியாக இருக்குமா?
என்ன செய்வது....
தாராவி மக்களுக்கு இந்த மண்ணின் வரலாற்றை கற்று தருவது...தாராவியோடு அவர்களுக்கு இருக்கும் பிணைப்பை உணர்த்துவது.. அவர்கள் உழைத்து உருவாக்கிய தாராவி மீதான அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான அரசியல் அறிவை புகட்டுவது, முன்னேற்றம் என்ற பெயரில் வரப்போகும் ஆபத்தை புரியவைப்பது என்று தெளிவான திட்டமிடல்தான் சரியாக இருக்கும்..
அப்பொழுதுதான்....நம் கொள்கைகள் மக்களிடம் செல்லும், நாமும் மக்களுக்கு நேரடியாக களத்தில் உழைக்கும் அரிய வாய்ப்பை பெறுவோம்..
----------------------------------------------------------------------------
தாராவி குறித்த வரலாற்றுணர்வை ஏற்படுத்த தொடர் நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும்....தாராவி வரலாறை அறிந்தவர்களின் வழிக்காட்டல் மற்றும் உதவியும் தேவை...

மும்பை விழித்தெழு இயக்கம்/MVI

சனி, 18 பிப்ரவரி, 2012

அந்தரத்தில் நிலை கொண்ட வாழ்வு ---மும்பை .....இயக்குனர் கீரா மூர்த்தி

எனக்கு(இயக்குனர்,கீரா மூர்த்தி ) மும்பை என்பது பல ஆண்டுகளாக தொடர்புடைய ஒரு நகரம் ..சிறுவயதிலிருந்து ராஜேஷ் குமார் ,சுஜாதா இன்ன பிற எழுத்தாளர்கள் எனக்கு அழகான மும்பையை ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தார்கள்..நான் திரைப்பட துறைக்கு வரும் முன்பு லாரியில் கிளினராக வேலை பார்த்த காலங்களில் வாரத்தில் இரு முறை சென்று வரும் பகுதி..அப்பொழுதெல்லாம் வேலை நிமித்தம் கடந்து ஊர் சுற்ற முடியாது..லாரி முதலாளிகளின் அடிமை..

அடுத்ததாக எமது பயணம் சென்னையில் உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு தேடி அலைந்த நாட்களில் வயிற்றை கொஞ்சம் கவனிக்க திருமண மண்டபங்களில் வேலை பார்ப்போம்..அப்படியாக ஒரு உணவு பரிமாற்ற முன்பை சென்றேன்..அப்பொழுது சுற்றிலும் முன்பையின் பார்ப்பன தமிழர்களின் கொழுத்த வாழ்க்கை கண்ணுக்கு தெரிந்தது..முன்பை வரை என்னை புரோக்கர் அழைத்து சென்றதற்கான பின்னணி ஒன்றே ஒன்றுதான்..நான் சிகப்பாக இருப்பதுதான் அது..சென்னையிலும் பிராமண திருமணம் என்றால் எனக்கு சர்வர் வேலை நிச்சயம் உண்டு..

அதன் பிறகு எனது அடுத்த பயணம் பச்சையின் பட வேலைகள் சம்மந்தமாக மகிழ்நன் அழைப்பின் பெயரில் தம்பி பொழிலனுடன் சென்றிருந்தேன் .நான் சென்றது மும்பையின் இதயம் என அழைக்கப்படும் தமிழர்கள் அதாங்க பறையர்கள் மற்றும் இன்னபிற ஒட்டுண்ணி சாதிகள் நிரம்பி நிற்கும் தாராவி ..

நான் கேட்ட கண்டடைந்த தாராவி அல்ல..அது..நாயகனில் விரவி நிற்கும் தாராவி அல்ல..பார்ப்பன மணிரத்தினத்தினால் தாராவியை காட்ட முடியாது என்பதை புரிந்து கொண்ட இடம் அது..

மும்பையின் தெருக்களில் நிரம்பி வழியும் தமிழ் சாதிகளின் பதாகைகள்..அதை தாண்டி பத்தாயிரம் பேருக்கு வெளிக்கிருக்கும் பொது இடம் பத்து..அதே போல சில லட்சம் தமிழர்களின் வெளிக்கிருக்கும் கொள்ளளவு அதிகபட்சம் நூறு அறைகள்..அவசர மும்பையில் பாதி பேர் வெளிக்கிருக்க தொடர்வண்டியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் என்கிற அவலம்..இவ்வளவையும் தாண்டி ஒரு புறா கூடல் பல நூறு புறா கூடுகளை போன்ற வீடுகள் ..ஒரு லட்சம் மின்சார இணைப்புகள் நடந்து போகும் பொழுது நம் தலையில் தட்டும் அளவுக்கு இருக்கும் அதிசயம் (கேவலம்) .ஒரு ஆள் கூட கவனமின்றி நடக்க தவறினால் மரணம் என்கிற இரும்பில் நிற்கும் படிக்கட்டுகள் ..

எப்பொழுதும் அந்த இடத்தையும் கூட கூறு போட ரௌடிகளுடன் இயங்கும் பிஜிபி,சிவா சேனா ,இன்ன பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் .. பெரும்பாலும் அடிமட்ட தொழிலில் மட்டுமே வாழ்வாதாரம் கொண்ட தமிழ் மக்கள்..நடைபாதையெங்கும் சில கோடி நட்சத்திரங்களை போல நீண்டிருக்கும் பீ கூட்டங்கள்....என மும்பை மிக அழகாகவே இருந்தது..

நான் அந்த மக்களுடன் பேசிய பொழுது இதை விட ஒரு லட்சம் மடங்கு கேவலமாக (அதாங்க அழகா மணிரத்தினம் எடுத்தது )இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் தாராவி இருந்தது..

மனசில் சொல்லொண்ணா துயரம் எம் ஈழ மக்கள் போலவே மும்பையில் எம் இன மக்கள்(பார்ப்பன மற்றும் அந்த அடிவருடி அரசியலை கையில் கொண்ட நாடார்,தேவர்களை தவிர ..இதை குறிப்பிட காரணம் சாதியின் வலிமை தான் ) சிலரை தவிர பல லட்சம் மக்களின் தின வாழ்வாதாரம் தொடர் கேள்வி குறிகள்..ஈழத்தில் இன சிங்கள ஆதிக்கம் என்றால் அதை விட மும்பையில் சாதிய ஆதிக்கம்..

அதையே சீரணிக்க முடியாமல் (குறிப்பாக தமிழகத்தில் கஷ்ட படுவதை நாம் பேத்தி கொள்வதை விட ஆயிரம் மடங்கு கேள்வி குறியுடன் வாழும் மக்கள் )நான் கிளம்பி வந்தேன்..எங்கும் நடை பயணமே உண்மையில் மக்களின் உண்மை துயரினை சந்திக்க முடியும் என்றும் நம்பினேன்..அப்படி இயலாமையில் இருந்த நான் அடுத்ததாக சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்த பொழுது இன்னும் ஒன்று புரிந்தது..

நான் பார்த்தது கேட்டது அதுதான் உச்சம் என நம்பியது என எல்லாமே பொய்..ரே ரோட்டில் வசிக்கும் எம் மக்களின் வாழ்விற்கு முன்பாக தாராவி மிக சாதாரணம்..

எழுதவோ பேசவோ கூட திராணியில்லாத பகுதி அது..இவர்களின் வாழ்வு எல்லையை எந்த ஒரு நாய் தலைவன் கூட புரிந்து கொள்ள முடியாது..கற்பனை செய்ய முடியாது..

எங்கு பார்த்தாலும் சிறு கப்பல் களுக்கான இரும்பு அடிக்கும் தொழிற்சாலை அதன் இடது பகுதியில் வீடுகள்..தொழிற்சாலைக்கும் வீட்டிருக்கும் இடையேயான தூரம் ஒரு அடி அந்த ஒரு அடியில் என் சில ஆயிரம் குழந்தைகள் மின் வெட்டும் இடத்தில் விளையாடுகிறான்..என் மனசை இரும்பாக்கிய இடம் அது..அந்த வீடுகளில் ஏழெட்டு மனிதர்கள்..காலம் காலமாக கப்பல் கட்டும் துறைமுகத்தை உருவாக்க அழைத்து இல்லை கொண்டு செல்ல பட்ட எம் தமிழர்கள் அதன் குழந்தைகள்..இங்கே சாதாரண வெல்டிங் பட்டறையின் மின்னலை கூட தாங்க முடியாத நம் கண்கள்..அங்கே பெரும் இரும்புகளுக்காக தீட்டப்படும் மின்னல்கள்..இரும்பு செதில்கள் அதன் நடுவே வாழும் குழந்தைகள்..அங்கேயும் அந்த இடத்தையும் பிடுங்க காத்திருக்கும் கழுகு மராட்டிய முதலாளிகள்..

இதை விட முக்கியமான ஒன்று..அந்த வீடுகள் எல்லாமே அந்தரத்தில் கட்டப்பட்டிருக்கின்றன..கடலில் இரும்புகளை ஏற்றி இரும்புகளின் மீது வீடு அமைத்து அதன் மீது வாழ்வை ஓட்டும் அந்த தமிழர்களை விட உலகத்தில் ஒரு தமிழனையும் பார்க்க முடியாது..கடல் உப்பில் இரும்புன்ன ஆகும்..அந்த இரும்பு சிதைந்தால் எப்படி உயிர் போகும்..அந்த உயிர் போனால் முதலாளி கழுகு அந்த இடத்தையும் ஆக்கிரமிக்கும்..

ஆனாலும் மனிதனாக பிறந்ததற்காக தமிழனாக பிறந்ததற்காக எத்தனை உயிர் மடினும் வாழ்வது என்கிற கோட்பாட்டில் வாழும் அவர்களை விட எதையும் சொல்ல எந்த தமிழனுக்கும் அருகதை அல்ல..என்னிடம் தங்கர் பச்சான் ஒன்னு சொன்னார்..முல்லை பெரியார் பத்தி கவலை படுரானுங்க..ஈழ பிரச்சனைய பத்தி பேசுறானுங்க..மூன்று தமிழர் விடுதலைக்காக இம்மாம் கூட்டம் கூடுது..ஒரு தானே ஒரு மக்களின் வாழ்வையே கேள்விக்குரியாக்குநிச்சி என் யாரும் கண்டுக்கல ..அப்படின்னு அவர் சொல்லும் பொழுது எனக்கு கோபம் வந்தது அவர் மீதும்..ஒட்டு மொத்த வசதியான சேற்றில் இறங்காத அதை போல பாவனை செய்த..அதற்க்கு வக்காலத்து வாங்குகிற அத்தனை தமிழ் தேசிய வாதிளின் மீதும் கோபம் வந்தது..தங்கரையும் சேர்த்து தான் என்..நீங்க கூட மும்பைய பார்க்கல..உங்க வசதி எங்க குறிஞ்சி இருக்குன்னு..

எல்லா விசயங்களுக்காக போராடுவதாக பாவனைதான் எல்லாரும் செய்றாங்க..என்னையும் சேர்த்து தான் ..இதுக்கு முடிவு என்ன..இந்த ஒட்டு மொத்த தமிழ் தேசிய வாதிகளின் கற்பிதங்களுக்கு யார் முடிவு கட்டுவது..இவர்களின் பின்னால் இயங்கும் வாலிபர்களின் கதி என்ன...இந்த வாலிபர்கள் திராவிடத்தின் மீது நம்பிக்கை கொண்ட போன தலைமுறைகளின் இன்றைய தமிழ் தேசிய வாரிசுகள் என்னும் பொழுது கவலை அளிக்கிறது..திராவிடத்தில் ஏமாந்த அதே தமிழன் இன்று தமிழ் தேசியத்தாலும் ஏமாறுகிறான் என்பதை வெக்கத்தோடு அறிவிக்கிறேன்..........

நன்றி,
இயக்குனர்,கீரா மூர்த்தி

சனி, 30 அக்டோபர், 2010

திமிரு நடிகை அசின் எதிர்ப்பு போராட்டத்தின் தொடக்கம் : மும்பை தாராவி 90 அடி சாலையில் விழித்தெழு இயக்கம் சார்பில் நடைபெற்றது .








திமிரு நடிகை அசின் எதிர்ப்பு போராட்டத்தின் தொடக்கம் : மும்பை தாராவி 90 அடி சாலையில் விழித்தெழு இயக்கம் சார்பில் நடைபெற்றது...







இலங்கை அரசோடு இணைந்த யாழ்ப்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற பலர் கண் பார்வை இழந்துள்ளனர்.
இதற்குப் பொறுப்பேற்று நடிகை அசின் பதில் சொல்ல வேண்டும் .





















இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்படவிருது வழங்கு விழா (ஐஃபா), தமிழ்த் திரைப்பட உலகம், தமிழர் இயக்கங்கள்ஆகியவற்றின் கடும் எதிர்ப்பால் படுதோல்வியில் முடிந்தது.
அதன் பிறகு இந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்தரெடிதிரைப்பட படபிடிப்பிற்காக இலங்கை சென்ற நடிகை அசின், படபிடிப்புமுடிந்ததும் இலங்கை அரசின் விருந்தினராக தங்கியிருந்தார்.
அப்போது சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவின்உதவியுடன் தமிழர் பகுதிகளில் கண் சிகிச்சை முகாம் நடத்தச் சென்றார். யாழ்ப்பாணத்திலும், முல்லைத் தீவிலும் இந்த கண் சிகிச்சை முகாம்நடைபெற்றது. இந்த முகாமில் கண் வெண்விழிப்படலத்திற்கு அறுவைசிகிச்சை நடத்தப்பட்டது.
ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சைஅளிக்கப்பட்டதாகவும், மேலும் 10 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சைஅளிக்கப்போவதாகவும் நடிகை அசின் கூறியிருந்தார்.

கண் பார்வை இழந்தவர்கள் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவேண்டும் என்றால், அரசு மருத்துவமனையில் ரூ.4,500 செலுத்த வேண்டும்என்றும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுதாக இருந்தால் ரூ.25,000 வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



அசின் நடத்திய கண் அறுவை சிகிச்சை முகாம் அவர்களின் வாழ்வைஅழித்துவிட்டது என்று குற்றம் சாற்றினார்.
போரினால் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ள மக்களை, மனிதாபிமானபோர்வையில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமினால் நடிகை அசின்அவர்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளார் என்றும், இதற்காக அவர்ஈழத் தமிழர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
அசின் நடத்திய கண் சிகிச்சை முகாம் இங்குள்ள நடிகர்கள் சிலருக்கு ஒரு கண்திறப்பாக இருக்கட்டும் .





இதற்குப் பிறகாவது சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட சூழ்ச்சிகளில் தமிழ்த்திரைப்பட நடிகர்களும், நடிகைகளும் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் .,





சிறிலங்க அரசிற்கு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறைஇருக்குமானால், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்துக்கொண்டிருக்கும் .நா. உள்ளிட்ட அமைப்புகள் அயல் நாடுகளில் இருந்துநிதியுதவி பெறுவதை ஏன் சிறிலங்க அதிபரின் இளைய சகோதரர் பசில்ராஜபக்ச தடுத்து வருகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
வன்னி முகாமில் இருந்து தங்கள் வாழ்விடங்களுக்கு மீள் குடியமர்த்தப்பட்டமக்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி அளித்தது சர்வதேச இடம்பெயர்வோர்அமைப்புதான் (International immigration organization) என்றும், இன்றுவரை சிறிலங்கஅரசு அவர்களுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை என்றும் கூறியஅயபிழைக்க வழியின்றி, கண்ணி வெடிகளை அகற்றுதல் போன்ற மிகஆபத்தான வேலைகளில் தமிழ்ப் பெண்கள் ஈடுபட்டு வருவதை வருகின்றனர் .
தமிழ்த் திரைப்பட உலகின் எதிர்ப்பை மீறி ஐஃபா விழாவில் கலந்து கொண்டஇந்தி நடிகர் நடித்துள்ள ரத்த சரித்திரம், அசின் நடித்து வெளிவரும்திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் ....

வெள்ளி, 18 ஜூன், 2010

உரிமையோடு மும்பை தமிழர்களின் வேண்டுகோள்

இலங்கையில் நடந்த ஐஃபா-இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் நடத்த பட்ட பாலிவுட் நட்சத்திர கலைநிகழ்ச்சி கடந்த சூன் திங்கள் 3-5 நாட்களில் இலங்கையில் நடந்தேறியது. இந்த நிகழ்ச்சி குறித்த முன்னறிவிப்பு வந்தவுடன் நிகழ்ச்சியின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட தமிழ் அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு எதிரான பரப்புரைகளில் வீரியத்துடன் செயல்பட தொடங்கினர். இதில் முதன்மையாக செயல்பட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் மும்பை வந்து தமிழ் அமைப்புகளுக்கு இந்நிகழ்ச்சியின் நோக்கத்தை கொஞ்சம் விரிவாக எடுத்துரைத்து , போரட்டத்தின் தேவையை விளக்கினார். அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து தமிழன் என்ற குடையின் கீழ் போராடுவது என்று முடிவாகியது. எப்பொழுதும் போல் உணர்வுள்ள இளைஞர்கள் மட்டும் களத்தில் இறங்கினர்.

தினகரன் செய்தி 24/05/2010
தினகரன்  செய்தி 24/05/2010

அதன்படி விவேக் ஒபரோய், சபானா ஆஷ்மீ , அமீர் கான் போன்ற திரை பிரபலங்களை சந்தித்து தமிழர்களின் உணர்வுகளை எடுத்துரைத்தனர். ஐ ஃ பா அலுவலகத்திலும் , வட இந்திய திரைப்பட ச ங்கத்தினரிடமும் தமது கோரிக்கையை முன்வைத்தனர் , அதோடு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக நடந்த போராட்டத்திலும் தோழர்கள் கலந்து கொண்டனர். அமிதாபச்சன் தனது முடிவை மறு பரிசீலனை செய்வதாக சொன்னதும் விழா ஏற்பாட்டாளர்கள், சல்மான்கானை விழாவின் Brand Ambassador ஆக நியமித்தனர். நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்களின் இந்த முடிவால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளான தோழர்கள் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்தி கைதானார்கள். இதில் சிறீதர், முது ராஜ் ,கண்ணன், மதன், சரவணன் உட்பட பத்து தோழர்கள் கைதாகி அன்று மாலை காவல் துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும், சல்மான்கான் திருப்திகரமான எந்த பதிலும் தராததால் , சல்மான் கான் உருவ பொம்மையை எரித்து தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் கைது செய்யப்பட்டு 2 நாட்கள் காவலில் வைத்து ஆளுக்கு 3000 வீதம் அபராதம் விதித்து, பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இதில் மா.கதிரவன், சிறீதர், செல்வகுமார், டோம்ணிக், பழனி குமார், முத்துவேல், வில்சன், ஜேம்ஸ் பொன்னையா ஆகிய 8 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினகரன் செய்தி 31/05/2010தினகரன்  செய்தி  31/05/2010

தினதந்தி செய்தி 17/05/2010தினதந்தி செய்தி 17/05/2010

இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளித‌ழில் வெளிவ‌ந்த‌ செய்தி 31/05/2010"]இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளித‌ழில் வெளிவ‌ந்த‌ செய்தி 31/05/2010

பொதுநல போராட்டத்திற்கு கொள்கை தெளிவோடு இருக்கும் வெகுச்சிலரை கொண்டு இயங்கும் தமிழ் சூழலில் முரண்பாடுகளும், தனித்து விடப்படுதலும் தொடர்ந்து தோழர்கள் களத்தில் சந்திக்கும் பொழுது, மாற்று மாநிலங்களில் சொல்லவா வேண்டும். பொருளாதாரம் என்ற அற்ப காரணத்தை கொண்டு களத்தில் நிற்கும் தோழர்கள் விலகி விட கூடாது என்ற நோக்கத்தில் வழக்கில் பிணையில் வருவதற்கு செலவான தொகையை மட்டுமாவது உணர்வுள்ள தமிழர்கள் உதவர்களானால், கூலிக்காக ஓடி ஓடி உழைக்கும் வரிய சூழலிலும் உணர்வை இழக்காமல் நிற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

போராட்டங்களை குறித்து செய்தி ஊடகங்களில் வந்த செய்திகளையும், பிணை வாங்க செலுத்திய ரசீதையும் இணைத்துள்ளோம்.

இந்தி,ம‌ராத்தி,ஆங்கில‌த்தில் பிரச்சார‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ துண்டுபிர‌சுர‌ம்-1இந்தி,ம‌ராத்தி,ஆங்கில‌த்தில் பிரச்சார‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ துண்டுபிர‌சுர‌ம்-1

இந்தி,ம‌ராத்தி,ஆங்கில‌த்தில் பிரச்சார‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ துண்டுபிர‌சுர‌ம்-1"]இந்தி,ம‌ராத்தி,ஆங்கில‌த்தில் பிரச்சார‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திய‌ துண்டுபிர‌சுர‌ம்-2

பிணையில் வெளிவ‌ந்த‌ தோழ‌ர்க‌ளிட‌ம் வ‌சூலிக்க‌ப்ப‌ட்ட தொகையின் ர‌சீது இணைப்பு

தமிழர் என்ற உரிமையோடு,
களத்தில் என்றும் நிற்கும் ஆவலோடு,

மும்பை தமிழ் மக்கள் கூட்டமைப்பு,

தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்

மா. கதிரவன் : +919321454425

து . சிரிதர் : +919702481441

பாண்டியன் : +919821072848


வங்கி எண் :188104000024772
வங்கி பெயர் : IDBI Bank
வங்கி கிளை : Sion

திங்கள், 31 மே, 2010

மும்பை போராட்டங்கள் தமிழர்கள் என்ற உணர்வோடு நடத்தப்பட்டது

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையை மறைத்து இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு, சுற்றுலாவுக்கு பொருத்தமான நாடு என்று நிறுவும் பொருட்டு இந்திய அதிகாரவர்க்கத்தின் முழு ஆதரவு மற்றும் துணையோடு, திரைப்பட விழாவை வருகிற சூன் திங்கள் இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.
அதற்கு எதிராக பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. அதே போன்று மும்பையில் விழித்தெழு இளைஞர் இயக்கத்தை சார்ந்த தோழர் சிரீதர் பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்த, சாராத தமிழர்களை ஒருங்கிணைத்து, கேட் வே ஆஃப் இந்தியா பகுதியில் பிரச்சாரம் செய்தது, திரைப்பட்த்துறையினரை சந்தித்து இலங்கை செல்லக்கூடாதென வேண்டுகோள் வைத்தனர் அதில் சபானா ஆஜ்மி, ஜாவேத் அக்தர் ஆகியோர் போகமாட்டோம் உறுதி மொழி கொடுத்தனர், அடுத்தக்கட்டமாக இலங்கைக்கு செல்லவிருக்கும் செல்லவிருக்கும் சல்மான்கானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அவரின் உருவப்படத்தை எரித்து தாராவி காவல்துறையினரால் 8 தமிழுணர்வாளர்கள் கைதாயினர்.
ஆக, மேற்கண்ட போராட்டங்கள் தமிழர்கள் என்ற உணர்வோடு நடத்தப்பட்டது. இதில் உரிமை கோருவதற்கு விழித்தெழு இளைஞர் இயக்கம் உட்பட எந்த அமைப்புக்கும் உரிமையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்
வே.சித்தார்த்தன்,
செயலாளர்,
விழித்தெழு இளைஞர் இயக்கம்.
தொடர்புள்ள இணைப்புகள்,
http://www.naamtamilar.org/beta/textnews_detail.php?id=1214

சனி, 29 மே, 2010

ஜாவேத் அக்தர், சபனா ஆஸ்மி ஆகியோர் ஐஃபா அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை

இலங்கைக்கு செல்லவில்லை என்று ஜாவேத் அக்தர், சபனா ஆஸ்மி ஆகியோர் ஐஃபா அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என்று மும்பை தமிழர்களிடம் தெரிவிப்பு......

போய் சந்தித்தவர்கள் சிரீதர், கதிரவன், முத்துராஜ்

வியாழன், 14 ஜனவரி, 2010

பொங்கல் நிகழ்வுக்கு தோழர்களின் முதல் நாள் இரவு உழைப்பு

பொங்கல் நிகழ்வுக்கு எம் இயக்கத் தோழர்களின் உறக்கமில்லா முதல் நாள் இரவு உழைப்பு மற்றும்...அன்றைய இரவில் பொங்கலுக்கான பொதுமக்களின் ஆயத்த பணிகள், விளையாட்டு........என சில படங்கள் உங்கள் பார்வைக்கு

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்