செவ்வாய், 15 ஜூலை, 2014

தலைவர்கள் அறிவோம்: கு. காமராசர் --வெங்கடேசன்

தலைவர்கள் அறிவோம்: 

கு. காமராசர்



எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் காமராசர். தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker),பெருந்தலைவர் என்ற பெருமைக்குரிய காமராசர் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு உயர்ந்தவர். வாழ்க்கைத் துணையின்றி வாழ்ந்து தமிழகத்துக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் தான் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் நலன்களுக்கு மிகப்பெரும் தொண்டாற்றியவர்.
பிறப்பு: விருதுநகர் மாவட்டம் விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் - சிவகாமி தம்பதியருக்கு 15.07.1903 ஆம் ஆண்டு பிறந்தார். முதலில் இவரின் பெயர் குலதெய்வமான காமாட்சி அம்மனின் பெயரையே சூட்டினர். இவரது தாயார் மட்டும் ராஜா என்று அழைத்து வந்தார். பின்னாளில் காமாராசு என பெயர் மாற்றம் பெற்று எல்லோராலும் அழைக்கப் பெற்றார்.
கல்வி: தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கிய காமரசார் ஆறு வயதில் தந்தை இழந்ததும் ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார்.
வாலிபத்தை அடையாத வயதில், இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னுடைய 16வது வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராக இணைத்துக் கொண்டு சுதந்திரப் போராட்டக் கனலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
சிறை வாழ்க்கை:
ராஜாஜியின் தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ.வரதராசுலு நாயுடு அவர்களின் வாதத் திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.
1940ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும்போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு விடுதலை ஆன காமராசர் நேராகச் சென்று தனது நகராட்சித் தலைவர் பதவியை துறந்தார். அப்போது பதவிக்கு நேர்மையாகவும் முழுமையாகவும் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்று கூறினார்.
மீண்டும் 1942ல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார். இம்மாதிரியான சிறை வாழ்க்கைகளின்போது சுயமாகப் படித்துத் தன் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார்.
அரசியல் குரு: மிகச்சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியுமான சத்தியமூர்த்தியை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார் காமராசர்.
1936ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சியைக் கண்டு தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் இல்லத்திற்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார்.
குடியாத்தம் தொகுதியில் சட்டப்பேரவைக்கு தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். தமிழக முதல்வராக 13.04.1954 தமிழ் புத்தாண்டு அன்று பதவியேற்றார்.
முதல்வராக பதவியேற்றதும் முதலில் சத்தியமூர்த்தியின் இல்லம் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்துவிட்டுதான் தன் பணிகளைத் தொடங்கினார்.
அமைச்சரவை:
* காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன.
* மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.
* காமராசர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி. சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த பக்தவச்சலம் இருவரையும் அமைச்சரவையில் அமைச்சர்களாக சேர்த்திருந்தார்.
ஆற்றிய பணிகள்: ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத் தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்றும் உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது.(வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலை நாட்கள் 180 லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்(IIT) தொடங்கப்பட்டது.
காமராசர் முதல்வராக பதவி வகித்த காலங்களில் தமிழகத்தின் முன்னேற்றம், மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமை அளித்து பலத் திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின்கீழ் 9 முக்கிய நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:
* கீழ் பவானித்திட்டம்
* மேட்டூர் கால்வாய்த்திட்டம்
* காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்
* மணிமுத்தாறு
* அமராவதி
* வைகை
* சாத்தனூர்
* கிருஷ்ணகிரி
* ஆரணியாறு ஆகியவையாகும்.
முக்கியப் பொதுத்துறை நிறுவனங்களும், பெருந் தொழிற்சாலைகளும்:
* பாரத மிகுமின் நிறுவனம்
* நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
* மணலி சென்னை சுததகரிப்பு நிலையம் (MRL)இதன் தற்போதைய பெயர் (CPCL)
* இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
* நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
* கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
* மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
* குந்தா மின் திட்டம்
* நெய்வேலி மற்றும் ஊட்டியில் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.
அகிலஇந்திய காங்கிரஸ் (K.PLAN): மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும்.
அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதல்வர் பதவியை (02.10.1963) துறந்து பக்தவத்சலம் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தில்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9 ஆம் தேதி அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் ஜவகர்லால் நேரு மறைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி அவர்களை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மறைவின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.
இறுதிக் காலம்: காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட
முன்னேற்றக் கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த காமராசர் இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்த வித நிலங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வாழ்க்கை பயணத்தை முடித்தார்.
நினைவுச் சின்னங்கள்: காமராசர் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சென்னை கிண்டியில் அவருக்கு பெருந்தலைவர் காமராசர் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
காமராசர் இறந்த பிறகு 1976-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சென்னை வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது..
=========================================================================
காமராஜர் பற்றி பெரியார்.. (தகவல்:- கோவி .லெனின் )

“மருந்து சாப்பிடவேண்டியது நோயாளிகள்தான்.. டாக்டர் அல்ல” -காமராஜர் பற்றி பெரியார்

காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காக மூத்த நிர்வாகிகள் அமைச்சர் பொறுப்புகளிலிருந்து விலகி, கட்சிப்பணியை கவனிக்க வேண்டும் என்பதே காமராஜ் திட்டம் (K Plan). இதனைக் கட்சித் தலைமை ஏற்றுக்கொண்டதன் விளைவாக, லால்பகதூர் சாஸ்திரி, ஜெகஜீவன்ராம், மொரார்ஜிதேசாய் உள்பட பல முதலமைச்சர்களும் மத்திய அமைச்சர்களும் பதவி விலகினர். முன்னுதாரணமாக, பெருந்தலைவர் காமராஜரும் தமிழக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பலரும் இதனைப் பாராட்டிய நேரத்தில் பெரியார் தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை.

“காமராசரைப்போல மொட்டை மரமாக நின்று, நாட்டுப்பணியையே தமது ஒரே லட்சியமாகக் கொண்டு காரியம் ஆற்றும் ஒரு சிறந்த பொதுத் தொண்டரைப் பூதக்கண்ணாடி வைத்துத் தேடினாலும்கூட வேறு எங்கும் பார்க்க முடியாது. இந்நிலையில் அவர் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவது எந்த வகையிலும் விரும்பத்தக்கதல்ல.அவருடைய இடத்தில் வேறு எவர் உட்கார்ந்தாலும் அவரைப்போல நீடிக்க முடியாது என்பதோடு, அவரைப் போன்று இன உணர்ச்சியுடன் செயலாற்றவும் முடியாது. இதைக் கல்லில் செதுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
யோசனை கூறிவிட்டு, நாமே பதவியிலிருந்தால் மற்றவர்கள் என்ன நினைக்கக்கூடும் என்று காமராசர் எண்ணக்கூடாது. நோயாளிகள் மருந்து சாப்பிட வேண்டுமேதவிர, டாக்டரே ஏன் சாப்பிட்டுக்காட்டக்கூடாது என்று யாரும் கேட்கமாட்டார்கள். இதைக் காங்கிரஸ் மேலிடத்தார் நன்கு உணரவேண்டும். ஒரு பிரச்சினையைத் தீர்க்கப்போய், புதிதாகப் பல பிரச்சினைகளை உண்டாக்கிக்கொள்வது புத்திசாலித்தனமான காரியமாகாது” (தந்தை பெரியார்- விடுதலை 10.8.1963)
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நாள் (ஜூலை 15)


==================================================
காமராஜர் பற்றி பெரியார்.. 
(தகவல்:-
"அரசியல் பேரால் பதவிக்குப் போய் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறும் நீங்கள், தமிழ்நாட்டில் காமராசரை மட்டும் ஏன் ஆதரிக்கிறீர்கள்?" என்று பெரியாரிடம் கேட்டபோது கூறினார்:
காமராசர் முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு முதல் நாள் வரைக்கும் கல்வி, உத்தியோகம் முதலிய சகலமும் பார்ப்பான் கையிலேயே இருந்து வந்தன. இன்றுதான் தமிழனுடைய நன்மையில் அக்கறை உடையதாக காங்கிரஸ் ஆகியுள்ளது. எனவே, தமிழன் கைக்கு வந்து இருக்கிறது. இதன் காரணமாகவே, காங்கிரசால் பலனும், பதவியும், வாழ்வும் பெற்ற இராஜாஜியும் மற்ற மற்றப் பார்ப்பனர்களும் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று ஓடி ஓடிப் பாடுபடுகின்றனர்.
எவ்வளவோ பாடுபட்டுப் பார்ப்பான் கையில் இருந்து வந்த காங்கிரஸ் தமிழன் கைக்கு இன்று வந்து உள்ளது. இது மீண்டும் பார்ப்பான் கைக்குப் போகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மீண்டும் பார்ப்பான் காங்கிரசாக ஆகிவிடுமேயானால் காமராசரின் காங்கிரசில் ஏற்பட்டுள்ள நன்மைகள் எல்லாம் தோசையைத் திருப்பிப் போடுவது போல் மாற்றப்பட்டுவிடும்.
கண்ணீர்த்துளியோ (தி.மு.க), கம்யூனிஸ்ட்டோ, சுதந்திராக் கட்சியோ உங்களிடத்தில் வந்து "காமராசர் ஆட்சி ஒழிய வேண்டும். நாங்கள் பதவிக்கு வந்தால் அதைச் செய்வோம் இதைச் செய்வோம்" என்று புளுகி ஓட்டுக்கு வருவார்கள். நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
இவர்களிடம் "காமராசர் ஆட்சியில் என்னப்பா ஓட்டை கண்டுவிட்டாய்? தமிழர்களின் கல்விக்கும், உத்தியோகத்திற்கும், சாதி ஒழிப்பிற்கும் நீ என்ன திட்டம் வைத்து இருக்கின்றாய்?" என்று கேட்க வேண்டும். - ('விடுதலை', 27.05.1961)


புதன், 21 மே, 2014

தலித் முரசு, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் மும்பையில் வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ளவும் ...

இது  வரை மும்பையில், மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக

தலித் முரசு, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரிக்கைக்கு  ஆண்டு  சந்தா பிரித்துள்ளோம்.....அதன் விவரம் இணைத்துள்ளோம்..


1. மாதவன் , ரே ரோடு, மும்பை -ரூ 150
2. சேகர் ஆசிரியர், (ஆதி திராவிட முன்னேற பேரவை மற்றும் ஆதி திராவிடர் சிந்தனையாளர் சங்கம்) முலுண்ட் , மும்பை -ரூ 150
3. சேகர் சுப்பையா, முலுண்ட், (ஆதி திராவிட முன்னேற பேரவை மற்றும் ஆதி திராவிடர் சிந்தனையாளர் சங்கம்)மும்பை -ரூ 150
4. பெ. கணேசன்(திராவிடர் கழகம்), மும்பை-ரூ 150
5. இறைச .ராஜேந்திரன்( தமிழ் காப்போம் மற்றும் உலக தமிழர் பேரமைப்பு) -ரூ 150
6.நெல்லை பிறந்குலம், தாராவி,மும்பை - ரூ 100
7. கிருஷ்ணா காமாட்சி, (உரிமையாளர்,kk  சேனல், மும்பை ) -ரூ 500
8. முத்து கிருஷ்ணன், மலாடு, மும்பை - ரூ 500
====================================================
மும்பை விழித்தெழு இயக்க சார்பாக ஒவ்வொரு மாதமும் தலித் முரசுக்கு    ரூ 500 அனுப்ப தொடங்கியுள்ளேன் ....
====================================================

குறிப்பு:- தோழர்களே, உங்களுக்கு  தெரிந்த  கருத்தியல் தளத்தில் ஆளுமாக வேலை செய்யும் பத்திரிக்கையை அறிமுக படுத்துங்கள் ...ஆங்கிலம் மற்றும் தமிழ் இருந்தாலும் நலம் ...


தலித் முரசு , புதிய ஜனநாயகம் ,  சிந்தனையாளன் , தமிழ் இலெமுரிய, பாசறை மலர்.. ஒவ்வொரு மாதமும் வருகிறது..இதில் தலித்து முரசுக்கு மட்டும் ஆயுள் சந்தா செலுத்தியுள்ளேன், மற்றவைகளுக்கு  ஆண்டு சந்தா  செலுத்தியுள்ளேன்.

(புதிய கலாச்சாரம்,தமிழர் எழுச்சி, RSS - sudeshi , கல்விக்கடல்  - இது இலவசமாகவே  வருகிறது. )

தமிழர் கண்ணோட்டம், பெரியார் பிஞ்சு,  பெரியார் முழக்கம், காலச்சுவடு , உயிர் மெய் , அந்திமழை, பாடம் போன்ற பத்திரிகை கடந்த ஆண்டு வரை வந்தது ..அதை புதுபிக்க வில்லை ..

இதை தவிர வேற  புதிய பத்திரிகை இருந்தால் தெரியப்படுத்துவும்...

வாய்ப்பு உள்ள தோழர்கள்

www.keetru.com

www.vinavu.com

www.pesamoli.com   படிக்கவும் .......

மும்பையில், தமிழ் கலைக்குழு

மும்பையில், #தமிழ் கலைக்குழு 


#மராத்தி, தெலுங்கு கலைக்குழுவுடன் இணைந்து தமிழ் கலைக்குழு தொடங்குவதற்கான கலந்தாய்வு கூட்டம் .. (மும்பையில் தமிழர்க்கான கலைக்குழுவை முதன் முதலாக தொடங்க முன்முயற்சி எடுக்கிறோம்)
===================================================
நாள் : மே மாதம் 24 ஆம் தேதி ,காரிக்கிழமை (சனிக்கிழமை),
நேரம்:- மாலை 6.30 மணி முதல் 9 மணி வரை.
இடம் : கம்பன் உயர் நிலைப்பள்ளி, (ONGC அருகில், சயான் ரயில் நிலையம் ). தாராவி,மும்பை
===================================================
பயிற்சி கட்டணம் கிடையாது..ஆர்வமுள்ளோர் அழைக்கவும்..

மும்பை விழித்தெழு இயக்கம்/MVI
====================================================
#குறிப்பு : மும்பை தாராவியில் தமிழர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வேண்டும்..அதற்க்கான படிப்பகங்களை உருவாக்க முன்முயற்சி நடந்து வருகிறது.

திங்கள், 19 மே, 2014

மால்கம் எக்ஸ் Malcom X


மால்கம் எக்ஸ்

மால்கம் எக்ஸ்

வெள்ளையர் இனவெறிக்கு எதிராகத் தோன்றிய கருப்பினத் தலைவரின் வாழ்க்கை வரலாறு இந்நூல். மார்ட்டின் லூதர் கிங் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் அறவழிப் போராட்டம் நமக்கு உதவாது என்று கூறினார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்றார் மார்ட்டின் லூதர் கிங். ஆனால் மால்கம் எக்ஸோ அறைந்த கையை பிடித்து முறுக்கி இரண்டு கன்னங்களில் அறை என்றார். சாத்வீக முறைப்படி கொடி பிடித்தால் அமெரிக்கா நம் தலையில் மிளகாய் அரைத்துவிடும் என்றார். மால்கம் எக்சை கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ சந்தித்திருக்கிறார். இருவருக்கும் அடிப்படை வித்தியாசங்கள் இருந்தன.

காஸ்ட்ரோ அமெரிக்க அரசியலை, காலனியாதிக்க எண்ணங்களை எதிர்த்தார். ஆனால் அமெரிக்கர்களை எதிர்க்கவில்லை. மால்கம் எக்சோ அமெரிக்கா வேறு. அமெரிக்கர்கள் வேறு என்று வேறுபடுத்தவில்லை. அவர்களின் இனவெறியை எதிர்த்தார். ஒரு நாடு செய்த தவறுக்கு அந்த நாட்டு மக்களை பழிவாங்குவது சரியல்ல என்பது காஸ்ட்ரோவின் கொள்கை.

அமெரிக்க அதிபர் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டதில் நேஷன் ஆஃப் இஸ்லாமின் எலிஜா முகமதுக்கும், மால்கம் எக்சுக்கும் கருத்து வேறு ஏற்பட்டது.

அது பெரிதாகி முற்றிப்போய் மால்கம் எக்சின் சாவில் முடிந்தது. 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று கருப்பின முஸ்லிம் இளைஞனால் பதினாறு தோட்டாக்களால், சுட்டுக் கொல்லப்பட்டார். மால்கம் எக்சின் இந்த நூல் வாசகர்களை கண்டிப்பாக ஈர்க்கும்.
=======================================================================
கறுப்பினப் போராளி மால்கம் எக்ஸ்
- அ.கரீம் 

“சமீபத்தில் நடக்கும் கொடுமைகளை ஏற்றுக்கொண்டும், நாசுக்கோடும் நடந்து கொள்பவர்கள் மனிதகுலத்தில் கோழைத்தனத்திற்கான உதாரணங்களாக அவர்களின் பெயர்கள் வரலாற்றில் பதிவாகும்’’.

Malcom X மால்கம் எக்ஸின் வரிகள் இவை: அமெரிக்காவின் அதிகார மையத்தின் நாற்காலியை நடுநடுங்க வைத்த கறுப்பின போராளி மால்கம் எக்ஸ். இவரின் வரலாற்றை எழுத்தாளர் ரவிக்குமார் எளிய மொழிநடையில் எழுதியுள்ளார். மிகவும் நேர்த்தியாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

“பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கத் தடை, பூங்காக்களில் விளையாடத் தடை, பேருந்தில் ஒன்றாக பயணிக்கத் தடை, கறுப்பர்கள் பள்ளியில் படிக்கத் தடை’’ இவையனைத்தும் நம்நாட்டில் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமையாய் தெரியும். இது இங்கு மட்டுமல்ல அமெரிக்காவில் வாழும் கறுப்பர்களின் நிலையும் இதுவே.

இப்படியான சூழலில் மால்கம் எக்ஸ் செய்தது ஒன்றும் மிகப்பெரிய காரியம் அல்ல. வெள்ளையர்கள் மனிதர்கள்தான் என சொல்வதற்கு யாரும் தேவைப்படவில்லை. ஆனால் கறுப்பர்களும் மனிதர்கள்தான் என சொல்ல ஒருவர் தேவைப்பட்டது அவர்தான் மால்கம் எக்ஸ். கறுப்பர்களும் மனிதர்கள்தான் என உரக்க சொன்னார்.

மால்கம் எக்ஸின் தந்தை ஏர்ல் லிட்டில் தாய் லூயிஸ். இந்த தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக மால்கம் எக்ஸ் பிறந்தார். ஏர்ல்லிட்டிலும் கறுப்பின மக்களின் சுதந்திரத்திற்காக போராடியவர். அவர் வாழ்ந்த காலத்தில் கறுப்பர்களின் நிலை மோசமாக இருந்தது. உதாரணமாக, “1919இல் அமெரிக்காவின் ஒமாஹா பகுதியில் வில்பிரவுன் என்ற கறுப்பர் ஒரு வெள்ளை இனப் பெண்மணியை தாக்கியதாக வந்த புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி வெள்ளையர் கூட்டம் சிறையை சூழ்ந்து கொண்டது. தீ வைத்து வன்முறையை கட்டவிழ்த்தது. சமாதானம் பேச வந்த மேயர் சுடப்பட்டார். வெள்ளையர் கூட்டம் மேலும் மேலும் அதிகரிக்க பயந்த சிறை நிர்வாகம் அக்கூட்டத்தினரிடம் அக்கருப்பரை ஒப்படைத்தது. அந்த கறுப்பரை கம்பத்தில் கட்டி சுட்டுக்கொண்டே இருந்த வெள்ளைக்கும்பல் அவன் துடிதுடித்து இறந்தவுடன் இடத்தை காலி செய்து கிளம்பியது.

இந்த சூழலில்தான் ஏர்ல் லிட்டில் கறுப்பின மக்களுக்கு போராடுவதை முழு நேர பணியாக செய்தார். கறுப்பின மக்களின் சுதந்திரத்திற்காகவே போராடியவர் வெள்ளையின வெறியர்களால் கொல்லப்பட்டார்.

1945இல் இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்பு கறுப்பின மக்கள் வேலையில்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சோபியா என்ற வெள்ளையினப் பெண் திருடுவதற்கான ஆலோசனை வழங்க, திருடி அகப்பட்டு மால்கம் எக்ஸ்க்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய வெள்ளையர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சார்லஸ் டவுனில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மசாஷ¨ட் சிறைக்கு மாற்றப்பட்டார். அந்த சிறையில் உள்ள நூலகம்தான் மால்கம் எக்ஸ் என்ற போராளி உருவாக முக்கிய காரணம். சிறையில் ஏராளமான புத்தகங்களை படித்த மால்கம் எக்ஸ், அனைத்து மதங்களைப் பற்றியும் ஆழமாக படித்தார். அவரை ஈர்த்தது இஸ்லாம் மதத்தின் கோட்பாடே. அப்பொழுது மால்கமின் சகோதரர் பில்பர்ட் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “கறுப்பினத்தவர்களுக்கான இயற்கையான மதம் ஒன்று உள்ளது எனவும், அதன் பெயர் நேஷன் ஆப் இஸ்லாம் என்றும், அதனை வழி நடத்துபவர் எலிஜா முகம்மது எனவும் குறிப்பிட்டு இருந்தார்’’.

எலிஜா முகம்மதுக்கு சிறையிலிருந்து ஒரு கடிதம் எழுதினார், அவரும் பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில் “வெள்ளையின சமூகமே கறுப்பர்களை ஒடுக்கி வைத்துள்ளது. நாம் செய்யும் சிறுசிறு குற்றங்களுக்கு தூண்டுதலே அவர்கள்தான். உண்மையான குற்றவாளிகள் வெள்ளையர்களே என குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் மால்கமை வெள்ளையினத்தவர்கள் செய்த கொடுமைகளை நினைக்க வைத்தது.

சிறையிலிருந்து 6 வருடத்திற்கு பின் வெளிவந்த மால்கம் எக்ஸ் நேஷன் ஆப் இஸ்லாத்தில் இணைந்து இஸ்லாத்தை பற்றியும், நேஷன் ஆப் இஸ்லாத்தைப் பற்றியும் பிரச்சாரம் செய்தார். அதே நேரத்தில் கறுப்பின மக்களின் அடிப்படை உரிமைக்காக கடுமையாக போராடினார்.

கறுப்பின மக்கள் படும் துயரங்களையும், கொடுமைகளையும் நேஷன் ஆப் இஸ்லாத்தின் மூலம் எல்லா இடத்திலும் பரவச் செய்தார். அவ்வமைப்பை மிகப்பெரிய ஸ்தாபனமாக உயர்த்தினார். கறுப்பின மக்களிடம் ஒப்பற்ற தலைவனாக மால்கம் எக்ஸ் உயர்ந்தார். பின்னர் ‘பெட்டி’யை திருமணம் செய்து கொண்டார். கறுப்பர்களின் சுதந்திர தாகத்தை தூண்டியதால் மால்கம் ‘இனவெறியன்’, ‘பிரிவினைவாதி’ போன்ற கடும் சொல்லால் பத்திரிகையில் எழுதப்பட்டார்.

அமெரிக்காவுக்குள் தனக்கொரு ஆதாரவாளனாக, ஒரு புரட்சியாளராக மால்கமைக் கண்டார் ஃபிடல் காஸ்ட்ரோ. இஸ்லாமின் கொள்கை மீது காஸ்ட்ரோவுக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது. ஆனால் அமெரிக்காவின் இனவெறிக் கொள்கையை கடுமையாக எதிர்க்கும் மால்கம் எக்ஸ், தனது அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைக்கு உதவும் என ஃபிடல் காஸ்ட்ரோ எண்ணினார்.

எலிஜா முகம்மது தனக்கு பிறகு தன்னுடைய வாரிசே நேஷன் ஆப் இஸ்லாத்தின் பொருப்பாளராக இருக்க வேண்டும் என எண்ணினார். அதே நேரத்தில் மால்கமின் உலகம் தழுவிய குறிப்பாக கறுப்பின மக்கள் இடத்தில் இருக்கும் செல்வாக்கு இவரை கலங்கடித்தது. சிறுசிறு மனஸ்தாபங்கள் பெரிய பள்ளமாய் உண்டாகி அவரை நேஷன் ஆப் இஸ்லாத்திலிருந்தே எலிஜா முகம்மது நீக்கினார். மேலும் மால்கம் எக்ஸை கொல்ல எலிஜா முகம்மதுவால் 5 பேர் கொண்ட குழுவும் உருவாக்கப்பட்டது.

கறுப்பின மக்கள் மால்கம் எக்ஸையே தங்களது பிரதிநிதியாக எண்ணினர். இதனால் தனி ஒரு அமைப்பை உருவாக்கினார். “முஸ்லீம் மசூதிகளின் கூட்டமைப்பு’’ என்ற அமைப்பு புதியதாக தொடங்கிய அதேநேரத்தில் “அமெரிக்க ஆப்பிரிக்க அமைப்பை’’ உருவாக்கினார். இதன்மூலம் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் கறுப்பினத்தவர்களின் மத்தியில் பாலமாக இவ்வமைப்பு விளங்கியது. தனது ஓயாத பயணத்திற்கு முட்டுக்கட்டை இட ஒருபுறம் எலிஜா முகம்மது குழுவும், மறுபுறம் அமெரிக்க உளவு நிறுவனமும் செயல்பட,

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஒரு கூட்டத்தில் பேச்சைத் தொடங்கும் முன்பே மூச்சை முடித்துக் கொண்டார். பதினாறு குண்டுகள் பாய மேடையிலேயே அக்கறுப்பின மக்களின் தன்னிகரற்ற தலைவர் சாய்ந்தான்.

மால்கம் எக்ஸ் உலக புரட்சியாளர் வரலாற்றில் அழிக்கமுடியாத அத்தியாயம் ஆவார்.
“ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள், சிந்திப்பவர்கள் அனைவரும் புரட்சியாளர்கள்தான்” என்ற மால்கம் எக்ஸின் வாசகம் அனைத்து சமூக விடுதலை போராளிக்கும் பொருந்தும். அவரின் இவ்வரலாறு பல படிப்பினைகளை கற்பிக்கும்.


=====================================================================

'மால்கம் எக்ஸ் - என் வாழ்க்கை' நூல் அறிமுகம்
ரவி

(21.10.06 அன்று பேர்ண் (சுவிஸ்) இல் நடந்த “திரைப்பட இலக்கிய விழா” நிகழ்ச்சியில் இந் நூல் அறிமுகம் செய்யப்பட்டது. இந் நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்டது இது.)

“கூவர சுவாற்ஸ்” (ஊத்தைக் கறுப்பா) என்று அவன் பேசுகிறான். நான் கறுப்பா? பார் என்ரை நிறத்தை. பிரவுண். ஆபிரிக்கர்கள்தான் கறுப்பு என்கிறேன்;. சரியான பதிலாக திருப்தியடைகிறேன். வெள்ளைக்கார நண்பன் எனக்கான சான்றிதழொன்றைத் தந்து திருப்திப்படுத்த முயற்சிக்கிறான். “அவன் கறுப்புத்தான், ஆனால் மனசு வெள்ளை” என்கிறான். திருப்திப்படுகிறேன்.

Malcom X இந்த எதிர்கொள்ளல் சரியானதா?. வெள்ளைமயப்படுத்தப்பட்ட சிந்தனையே இந்தப் பதிலில் ஊறியிருக்கிறது. அதாவது ஆணிய சிந்தனை பெண்ணிடம் ஊறியிருப்பதுபோல. இப்போ எனது பதில் இப்படியாய் வருகிறது. கூவர சுவாற்ஸ்! ...ஆம் நான் கறுப்பன்தான். உனக்கு என்ன பிரச்சினை அதிலை?. வெள்ளை மனசு!... இல்லை என்ரை மனசும் கறுப்புத்தான்... அது வெளிப்படையானது. இதை இப்படித்தான் எதிர்கொண்டாக வேண்டும் எனப்படுகிறது எனக்கு.

அன்றாடம் ஏதோவொரு வடிவில் நான் கறுப்பன் என நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் “மல்க்கம் எக்ஸ்- என் வாழ்க்கை” என்ற நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. 730 பக்கங்கள் கொண்ட இந்த நூல் எனது வாசிப்பை தீவிரப்படுத்திக் கொண்டே இருந்ததற்கு நிறவெறிமை அகலாத புகலிட வாழ்வில் எனது இருப்பு காரணமோ என எண்ணுகிறேன். சே, பனான், மார்க்கோஸ், லுமும்பா... என தத்துவவாதிகளை போராளிகளை தமிழுக்கு விலாவாரியாக அறிமுகமாக்கிக்கொண்டிருக்கும் விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது மால்கம் பற்றிய நூல். விடியல் பதிப்பகத்தின் வெளியீடுகளுடாக தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களாக வெளிப்பட்டிருப்பவர்கள் பாலச்சந்திரன், கோவிந்தசாமி ஆகியோர். இந்த நூலும் கோவிந்தசாமியால் சரளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாசிப்பை தடங்கலின்றி இழுத்துச் செல்கிறது.

நாம் காந்தியை தெரிந்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு சுபாஸ் சந்திரபோஸினை தெரிந்து வைத்துக் கொண்டதில்லை. வெள்ளையர்களுடன் சமவுரிமைக்காக குடியுரிமைக்காக அகிம்சை வழியில் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கினை அறிந்திருக்குமளவிற்கு வெள்ளைக் கருத்தியலின் எதிர்மறுப்பாளனாக கலகக்காரனாக வெளிக் கிளம்பிய மால்கம் எக்ஸ் இனை நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை. எப்போதுமே ஒரு தலைவன் ஒரு இயக்கம் என்ற பரிமாணத்துள் -அதன் பக்க பலங்களை புறந்தள்ளி- விளக்க முயலும் மனோபாவமும், தீவிர அரசியலின் போக்கை நிறுத்த மிதவாத அரசியலை முன்நிறுத்தியவர்களை அங்கீகரிக்க வைக்கும் முதலாளிய சூழ்ச்சியும் எமது புரிதல்களை மட்டுப்படுத்திவிடுகிறது.

அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நானூறு ஆண்டுகால அடிமை வாழ்வின் ஒரு கொந்தளிப்பான மனிதனாக மால்கம் எக்ஸ் வெளிக்கிளம்பினார்.

ஒரு தலைமுறைக் காலம்வரை கறுப்பு அடிமைப் பெண்களை அவர்களுடைய வெள்ளை எசமானர்கள் பாலியல் அடிமைகளாக நடத்தியதில் தமது சொந்த குடும்பப் பெயர்கள் என்னவென்று தெரியாத - மூளைச்சலவை செய்யப்பட்ட- சந்ததி உருவாகியது. இந்தக் கலப்பினத்தின்மீது வெள்ளையர்கள் தங்கள் குடும்பப் பெயர்களைத் திணித்தார்கள். அவர்களை நீக்ரோக்கள் என்ற இனப்பெயர் கொண்டு அழைக்கத் தொடங்கினார்கள். இதனால் லிற்றிள் என்ற தனது “குடும்பப் பெயரை” எக்ஸ் என்று மாற்றிக்கொண்டு மால்கம் எக்ஸ் ஆனவர். தங்களால் அறிந்துகொள்ள முடியாத தங்களுடைய ஆபிரிக்கக் குடும்பப் பெயராக எக்ஸ் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.

தலைவர்கள் என்றால் சிறுவயதிலேயே ஞானம் கொண்டவர்களாக அசாதாரண பிறவிகளாக, ஒழுக்க விழுமியங்களை சிரமேல்கொண்டு வளர்ந்தவர்களாக உருவகிக்கப்படும் வரலாறுகளை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். இந்த மனோபாவத்துடன் மால்கம் எக்ஸ் இனை படிக்கத் தொடங்கினால் புத்தகத்தை அவர் இருபது வயதை அடைவதற்கு முன்னரே மூடிவைத்துவிட வேண்டியதுதான். மாவோ கூறியதுபோல சூழ்நிலைகள் மனிதஜீவியின் உணர்வுகளை தீர்மானிக்கிறது என்பதுடன் உணர்ச்சிகளையும் தீர்மானிக்கும் என்றவாறான ஒரு குறியீடாய் மால்கம் எக்ஸ் வெளிக்கிளம்பினார். அவரது தடாலடியான பேச்சுகளும் செயலும் இதைக் காட்டுகின்றன.

நடுத்தர வர்க்கங்களிலிருந்து உருவாக்கப்பட்ட தலைவர்களின் வரலாறுகளைப் படித்து உணர்ந்த மனநிலையில் மால்கம் எக்ஸ் இனைப் புரிந்துகொள்வதில் பல இடர்ப்பாடுகள் வந்து சேரும். 20 வயது வரையான அவரது “பொறுக்கி” வாழ்வு கற்றுத் தரப்பட்ட எமது ஒழுக்க மதிப்பீடுகளுக்குக் குறுக்கே வருவன. அதேபோல் அவரது முஸ்லீம் மதமாற்றம் அல்லது மதநம்பிக்கை சோசலிச புரட்சி மதிப்பீடுகளுக்குக் குறுக்கே வருவன. மனிதர்கள் மனிதர்களாகக்கூட மதிக்கப்படாத ஒரு உளவியலில், வாழ்வாதாரம் அடிமை வேலைமுறைக்குள் முடக்கப்பட்ட ஒரு அடித்தட்டு நிலையில் களவு, போதைப்பொருள், அடிதடி, அடியாள் வேலை, கொந்தளிப்பான மனநிலை... என்றெல்லாம் நிலவியதை புரிந்துகொள்ளும் நெகிழ்வுத் தன்மைதான் மால்கம் எக்ஸ் உடன் எம்மை நெருக்கமாக இணைக்கும்.

400 ஆண்டுகால கறுப்பின அடிமைகளாக சேர்pப்புறங்களே வாழ்விடமாக ஒதுக்கப்பட, வெள்ளையின மேலாண்மையை வெள்ளைப் புத்திஜீவிகள் கருத்தியல்களை கட்டமைத்து வளர்த்தெடுத்தனர். அப்பாவி கறுப்பின மக்களும் இதற்குள் பலியாகிப் போயிருந்தனர்.

“தாங்கள் மனிதர்கள் என்பதை நினைவுபடுத்துவதற்கு வெள்ளையர்களுக்கு யாரும் தேவையில்லை. ஆனால் எங்களுக்கு அந்தத் தேவை இருக்கிறது. தன்னுடைய மக்களுக்கு மால்கம் செய்த மறுக்கமுடியாத நன்மைகளில் இதுவும் ஒன்று” என ஒஸ்லி டேவிஸ் என்ற திரைப்பட நடிகர் கூறினார்.

மால்கம் தனது சுயசரிதையை ஓய்வாக குந்தியிருந்து எழுதவில்லை. எப்போதும் கறுப்பு எதிர்மறுப்புகளுடனும் ஓய்வற்றும் இயங்கி வறுமையுடனும் போராடிய கலவரமான மனநிலைகளில் அலைக்கழிக்கப்பட்ட அவரால் இதைச் செய்திருக்கவும் முடியாது. மால்கம் எக்ஸ் இன் இந்த சுய வரலாற்றை அலெக்ஸ் ஹேலி என்ற எழுத்தாளர் பதிவுசெய்தார். மால்கம் நேரடியாகச் சொல்லியதையும் அவர் கிறுக்கி வைத்துவிட்டுச் செல்லும் துண்டுக் காகிதங்களையும் கொண்டு மால்கம் இன் கொந்தளிப்பான மனநிலையைப் புரிந்துகொண்டு அவர் இதைப் பதிவு செய்தார்.

“எந்தவொரு நபரைப் பற்றியும் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவருடைய பிறப்பிலிருந்து தொடங்கி முழு வாழ்க்கையையும் பரிசீலனை செய்ய வேண்டும். நம்முடைய அனுபவங்கள் அனைத்தும் நம்முடைய ஆளுமையில் இரண்டறக் கலந்துள்ளன. நமக்கு ஏற்படும் எந்த அனுபவமும் நம்முள் ஒரு அடிப்படைக் கூறாக மாறிவிடுகிறது” என்று கூறிய மால்கம் எந்த சுயதணிக்கையுமின்றி தனது பலவீனங்கள், தவறுகள், கருத்து மாற்றங்கள், குற்றவுணர்ச்சி உட்பட எல்லாவற்றையுமே சொல்கிறார்.

“தீவிரவாதியாக இல்லாத ஒரு கறுப்பனை நீங்கள் எனக்குக் காட்டுங்கள். மனநோய் மருத்துவரிடம் யாரை அழைத்துச் செல்வது என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்” என்றார் மால்கம். கறுப்பின மக்களுக்கென சேரிகளை உருவாக்கி பெரிய பெரிய விசயங்கள்மீது அவர்கள் ஆசைகொள்ள முடியாத அளவிற்கு ஒரு நிர்ப்பந்தமான சூழலில் வெள்ளையர்கள் அம் மக்களை வைத்திருந்தார்கள். ஒவ்வொருநாளும் உயிர் வாழ்வதே அரிதான விசயமாக இருக்கும் ஒரு சமூகத்தில் பிழைத்திருப்பதே மதிக்கப்பட வேண்டிய விசயமாக இருந்தது என்ற அவருடைய கூற்று கறுப்பின சேரிகளை படம்பிடிப்பதாகும்.

சேரியில் வாழும் கறுப்பன் வெள்ளை அதிகார அமைப்பிற்கு மரியாதை காட்டுவதில்லை. சேரி அடியாள் மனத்தளவில் எதற்கும் கட்டுப்பட்டவன் அல்ல. அவனுக்கு மதம் இல்லை. ஒழுக்கவிழுமியங்கள் குறித்து எந்தக் கருத்தும் அவனிடம் இல்லை. குடியுரிமை சார்ந்த பொறுப்புணர்வும் அவனிடம் இல்லை. அச்சம் இல்லை. எதுவும் இல்லை. அன்றாடம் வாழ வேண்டும் என்பதற்காக மற்றவர்களை ஏமாற்றியபடி அலைந்து திரிவான். மனித பலவீனங்களை ஒரு வேட்டைநாய் போல நுணுக்கமாக மோப்பமிடுகிறான். எந்த நேரத்திலும் வெறுப்பிலும் பதற்றத்திலும் ஏதேனும் ஒன்று செய்ய வேண்டும் என்ற கவலையிலுமே இருக்கிறான். எதைச் செய்தாலும் அதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறான்... என மால்கம் இச் சூழலை விரித்துக் காட்டினார். அவரின் ஆரம்பகால வாழ்க்கையும் இதற்குள் சுழன்றதுதான்.

இருபத்தியொரு வயதில் கிரிமினல் குற்றத்துக்காக அவர் பிடிபட்டு சிறைக்குச் செல்லும்வரை அவரும் வெள்ளையினக் கருத்தியலுக்குள் இசைந்து போனவர்தான். வெள்ளையர்கள் போன்று தனது தலைமுடியை நேராக்கும் ஆசைகொண்டவராகவும் அவர் இருந்தார். ஆனாலும் இனவொதுக்கலை சகித்துக்கொள்ள முடியாதவராக இருந்தார். அவர் சிறு பிராயமாக இருந்தபோது அவரது தந்தையாரை வெள்ளை இனவெறி அமைப்பான குக்கூஸ் கிளான் அமைப்பினர் அடித்து தண்டவாளத்தில் வீசி கொன்றார்கள். இவர்களின் வீட்டை தீயூட்டி கொலைசெய்ய முயற்சித்தபோது தப்பிய தந்தை எரியும் வீட்டின் முன் நின்று “நான் ஒரு மனிதன்” என்று கத்தியது மால்கத்தின் நினைவை தொல்லைப்படுத்தியது. சிறையில் “நேசன் ஒப் இஸ்லாம்” அமைப்பைச் சேர்ந்த, வாசிப்பில் அதீத கவனம் செலுத்திய ஒரு கறுப்பினத்தவரின் தொடர்பு அவருக்குக் கிடைக்கிறது. சிறையில் மால்கம் வாழ்வு திசைதிரும்புகிறது. அப்போது தனக்குத் தெரிந்த சொற்களை எண்ணினால் ஒரு சில நூற்றுக்கணக்கானதே என்றார். சிறையில் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. ஒரே வாசிப்பில் மூழ்கினார். அது அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது. சிந்திப்பதற்கு நேரம் தேவையென்றால் அதற்கு மிகச் சிறந்த இடம் கல்லூரிக்கு அடுத்தபடியாக சிறைச்சாலைதான் என்று சொன்னார்.

அமெரிக்காவிலேயே மிகக் கோபக்கார நீக்ரோ என்று வர்ணிக்கப்பட்ட மால்கம் தான் வன்முறையைத் தூண்டுபன் என்ற குற்றச்சாட்டை மறுக்கும்போது கூறுகிறார், சேரிகளின்மீது திணிக்கப்பட்டுள்ள வாழ்நிலை (வேலையின்மை, மோசமான இருப்பிடங்கள், குறைவான கல்வி, அடையாளமின்மை... என்பன) ஒரு அபாயகரமான கிரிமினல் சூழல். இந்த வெடிகுண்டு வெடிப்பதற்கு யாரும் நெருப்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னுள்ளிருந்து தானே தன்னியல்பாக எரியும் என்றார். அப்படி பற்றிப்பிடித்த ஒரு தீப்பொறியாக மால்கம் எக்ஸினை நாம் காண்கிறோம்.

எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த மால்கம் ஒரு பதினெட்டு வருட நிறவெறி எதிர்ப்பு அரசியலில் அபரிதமான வளர்ச்சியைப் பெற்றார். அடியாள் உலகுக்குத் தேவையான தன்மானம், துணிச்சல் என்ற பண்புகளையெல்லாம் தனது நிறவெறிக்கெதிரான குரலுடன் திசைதிருப்பினார். பத்திரிகையாளர்கள் அவரது பதில்கள் வெடிகுண்டுகளாக எதிர்க்கேள்விகளாக வந்துவிழுவதை எதிர்கொள்ளும் பதட்டத்துடனேயே இருப்பர். ஒரு கலவரத்தைத் தூண்டும் வல்லமையும் அதேபோல் ஒரு கலவரத்தை நிறுத்தும் வல்லமையும் கொண்ட ஒரேயொரு தலைவர் மால்கம் என்று பத்திரிகைகள் எழுதுமளவிற்கு நெருப்பாய் நடமாடினார்.

இங்கு நாம் “ஊத்தைக் கறுப்பா” என்று திட்டப்படும்போது அப்பாவித்தனமாக பதிலளிப்பவர்கள் பலர். நாங்கள் கறுப்பா இல்லையே நாங்கள் மண்நிறம் கொண்டவர்கள் என்று சொல்வர். இங்கு நிறம் இரண்டாம் பட்சமாகவே செயற்படுகிறது. வெள்ளையின கருத்தியலே (அதாவது அரசியல்) முதல்பட்சமாகிறது என்ற விடயத்தைப் புரிந்து கொள்ளாததும், அதேபோல் எமக்குள்ளேயே வெள்ளைக் கருத்தியல் செயற்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதுமாகும். வெள்ளை தவிர்ந்த எல்லாமே கறுப்பு என்ற இருமையை வெள்ளையின கருத்தாக்கம் கொண்டுள்ளது. அமெரிக்காவிலும் கறுப்பின மக்களுக்கு அடுத்தபடியாக யூதர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள் மீதும் இந்த நிறவெறி செயற்பட்டது. உதாரணமாக இரண்டாம் உலகப் போரின் போது குடியுரிமை பெற்ற ஜப்பானியர்கள்கூட முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் -வெள்ளையர்களான- யேர்மனியர்கள் சுதந்திரமாகவே விடப்பட்டார்கள். அமெரிக்காவைக் காப்பாற்றுவதற்காக என்று சொல்லி அணுகுண்டை வீச தேர்ந்தெடுத்த இடம் வெள்ளையரல்லாத உலகின் பகுதியின் மீது பாரிய பாதிப்பைச் செலுத்தியது என்கிறார் மால்கம்.

கறுப்பு, வெள்ளை என்பதற்கான அர்த்தங்களை வெஸ்ரேர்ண் அகராதியில் இப்படி எழுதிவைத்தார்கள். கறுப்பு என்றால் துன்பம், பயங்கரம், முடிவற்ற குழி, துப்பரவின்மை, மந்தம்... என்றவாறும், வெள்ளை என்றால் தூய்மை, அப்பாவித்தனம், புத்திசாதுரியம்... என்றதோடு “கறுப்பின் எதிர்ச்சொல்” என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது வெள்ளையினக் கருத்தியலைப் புரியவைப்பவை. இதிலிருந்துதான் பிளாக் டே, பிளாக்மெயில், பிளாக் கார்ட்... என்றெல்லாம் சொற்கள் உருவாக்கப்பட்டன. துக்கத்திற்கான குறியீடாக கறுப்பை தேர்ந்தெடுப்பதையும், கறுப்பு நாள், கறுப்பு ஜுலை என்ற சொற்களை நாம் பயன்படுத்துவதையும், அதேபோன்று “வெள்ளைநிற” மணப்பெண் தேடுவதையும் வெள்ளையினக் கருத்தியலின் கசடாகவே பார்க்க முடியும். இவ்வாறான வெள்ளைமயமாக்கப்பட்ட சிந்தனை பற்றி பல நடைமுறை உதாரணங்களை நாம் அன்றாடம் காணுகிறோம். அது -இனவெறி சூழலுக்குள் வாழ்ந்துகொண்டே- ஆப்பிரிக்கர்களை எம்மைவிட தாழ்ந்தவர்களாகப் பார்க்க வைக்குமளவிற்கு எம்மிடம் ஊறியிருக்கிறது.

வெள்ளையினக் கருத்தியலை எதிர்கொள்ள மூலமனிதன் பற்றிய மரபணுவியலை (ஜெனற்றிக்) கையாண்டார் மால்கம். கறுப்பு மனிதனிலிருந்து தொடங்கினால் வெள்ளை மனிதனை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் வெள்ளை மனிதனிலிருந்து தொடங்கினால் கறுப்பு மனிதனை உற்பத்தி செய்ய முடியாது. ஏனெனில் வெள்ளை மனிதனின் உயிர்மத்திலுள்ள மரபுக்கூறு இனக்கலப்பின் மூலம் ஏற்பட்ட உயிர்மத்திலிருந்து உருவான மரபுக்கூறாகும் என்ற ஒஸ்ரியா ஆள்வாளர் ஒருவரின் கூற்றைப் பயன்படுத்தினார் மால்கம்.

வரலாறு மிகப் பெருமளவில் வெள்ளைமயமாக்கப் பட்டுள்ளது என்பதற்கு இன்னொரு அசல் உதாரணத்தைக் காட்டுகிறார். யார் இந்த யேசு? எஸ்ஸெனி என்றழைக்கப்பட்ட எகிப்திய மெய்ஞ்ஞானிகளின் சகோதரக் குழுவைச் சேர்ந்தவர்தான் யேசு. அவரின் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற எகிப்திய வரலாற்று அறிஞர் பிலோ மூலம் இந்த உண்மை அறியப்பட்டிருக்கிறது. இஸ்லாம் மதத்தின் மூன்று முக்கிய தீர்க்கதரிசிகள் யேசு, முகமது, மோசஸ். ஜெரூசலத்தில் யேசுவுக்கு முஸ்லிம்கள் கோயில் கட்டினார்கள். உண்மையான யூதர்கள் வெள்ளை நிறத்தவர்களல்ல. யேசுவின் நிறத்தை வெள்ளையாக்கி நீலநிறக் கண்களை ஒளிரவிட்டது வெள்ளையினக் கருத்தியல்தான். இதனால்தான் “நான் யேசுவை நம்புகிறேன் கிறிஸ்தவத்தை அல்ல” என்று பில் கிரகாம் சொன்னார். பாடகி மடோனா யேசுவை கறுப்பு உருவமாக்கி பாடிய பாடல் கத்தோலிகர்களை எரிச்சலடைய வைத்திருந்தது இங்கு நினைவுக்கு அழைக்கக்கூடியது.

Malcom X கறுப்பு என்பது சாபம் என்றும் அவர்களுடைய இன்றைய துன்பத்துக்கு சொர்க்கத்தில் விடிவு கிடைக்கும் என்றும் போதித்து இந்த இழிநிலையைத் தொடர அனுமதித்த கிறிஸ்தவ மதத்தை கறுப்பர்கள் விட்டெறிந்து சகோதரத்துவத்தைப் பேணும் முஸ்லிம் மதத்தைத் தழுவினார் மால்கம். இனவொதுக்கலின் உளச்சிக்கலில் அகப்பட்ட கறுப்பின மக்களுக்கு இஸ்லாம் இதமான மருந்தானது. இன ஒதுக்கலின்மீதான எதிர்மறுப்பில் இஸ்லாம் இவர்களுக்கு உத்வேகம் தந்தது. முஸ்லிம் மதத்தின் புனிதராக எலிஜா முகமதுவை ஏற்றுக்கொண்டு முஸ்லிம் மதத்தைத் தழுவிய மால்கம் அவரின் போதனைகளில் திளைத்தார். பின்னர் முஸ்லிம் மதப் போதகராகவும் பத்துக்கு மேற்பட்ட மசூதிகளை அமெரிக்காவில் நிர்மாணிப்பதற்கான செயற்பாட்டாளனாகவும் மால்கம் சுழன்று திரிந்தார். மால்கம் எக்ஸ் இன் நண்பரான காசியஸ் கிளேகூட முஸ்லிம் மதத்துக்கு மாறி முகமட் அலி என பெயர் மாறினார். (வெள்ளையின குத்துச் சண்டை வீரர்களுடனான வெற்றிகளையெல்லாம் கறுப்பினத்தின் வெற்றியாக கறுப்பின மக்கள் கொண்டாடினர்)

நீக்ரோக்கள் என்றொரு இனம் உண்மையில் இல்லை. கறுப்பின மக்களை ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாக கப்பலில் ஏற்றிவந்த நாள் முதலே இந்தப் பெயர் வெள்ளையர்களால் சூட்டப்பட்டது. பத்துக் கோடிக்கும் அதிகமான கறுப்பின மக்கள் (அதாவது 1930 இன் அமெரிக்க சனத்தொகைக்கு சமமானவர்கள்) அடிமை வியாபாரத்தின்போது கொல்லப்பட்டார்கள். அதாவது பத்துக் கோடி கறுப்பர்களை பலி கொடுத்து ஒன்றரைக்கோடி கறுப்பர்களை அடிமைகளாக வைத்திருந்தார்கள். 60களில் நிலவிய இனவொதுக்கல் முறையில்கூட கல்வி வேலைவாய்ப்பு என்பவற்றில் முன்னுக்கு வராதபடி தடுக்கப்பட்டிருந்தனர். பஸ்களில் வெள்ளையர்கள் ஏறும்போது கறுப்பர்கள் எழுந்து இடம்கொடுக்க வேண்டும். இது சட்டத்தில் ஏற்கப்பட்டுமிருந்தது. இதைச் செய்ய மறுத்த ரோசா பார்க் என்ற பெண்மணி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய போராளியானார். பின்னர் இந்தப் போராட்டம் மார்ட்டின் லூதர் கிங்கினால் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட்டது.

உண்மையான அமெரிக்கனான சிவப்பிந்தியனின் பழங்குடி இனத்தை தாழ்வான இனமென்று என்றைக்கு (வெள்ளையன்) முடிவெடுத்தானோ அன்றைக்கு ஒரு இனப்படுகொலையில் பிறந்ததுதான் அமெரிக்கா. இந்த நாட்டின் கடற்கரைகளை நீக்ரோக்கள் எட்டுவதற்கு முன்னரே இனவெறுப்பு என்ற வடு காலனியச் சமூகத்தை அலங்கோலப்படுத்திவிட்டது. பண்டைய கலாச்சாரம் கொண்ட செவ்விந்திய மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டு வறுமை நிறைந்த ஒதுக்குப்புறப் பகுதிகளில் மந்தைகள்போல அவர்கள் முடக்கிவைக்கப்பட காரணமாயிருந்த வன்முறைக்கு மரியாதை தரும்படி இன்றும்கூட நமது குழந்தைகளுக்கு கற்றுத் தந்து வருகிறோம் என்று இனவெறியின் வேர்களை இழுத்துக் காட்டுகிறார் மால்கம்.

1963களில் மதம் குறித்து பேசிவந்ததை குறைத்துக் கொண்டார் அவர்;. நல்லொழுக்கம் சம்பந்தப்பட்ட விவாதத்தை தள்ளிவைத்துவிட்டு சமூகக் கோட்பாடுகளையும் நடப்புச் சம்பவங்களையும் அரசியலையுமே முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அவரது பார்வையின் விரிவு மதத்தின் எல்லையை தாண்ட வைத்தது. சேரிப்புற வாழ்வின் கறுப்பின மக்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிப்பதிலும் தங்கள் அடையாளங்களை உணர்த்துவதிலும் தன்னம்பிக்கைகளை தூக்கி நிறுத்துவதிலும் முஸ்லிம் மதம் அவர்களிடம் ஒரு வரலாற்றுக் கடமையைச் செய்தது. இருந்தும் கறுப்பின மக்களின் போராட்டத்தை மேல்நிலைக்குக் கொண்டுவருவதில் மால்கம் இதைத் தாண்ட வேண்டியிருந்தது. இதை எலிஜா முகமதுவின் “நேசன் ஒப் இஸ்லாம்” அமைப்பு சகித்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

“கொடுமைக்கு உள்ளாகிவரும் ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் தொடர்ந்து அந்தக் கொடுமையை ஏற்றுக் கொண்டு வந்தால் அது குற்றம் என்ற கருத்துக் கொண்டவன் நான். கிறிஸ்தவ தத்துவத்திற்கு இப்படித்தான் விளக்கம் தரப்படுகிறது என்றால் இதைத்தான் காந்தியம் போதிக்கிறது என்றால் அவற்றை கிரிமினல் தத்துவங்கள் என்றே அழைப்பேன்” என்ற மால்கத்தின் கூற்று அவரது அரசியல் பார்வையின் அடுத்த அடிவைப்பாகக் கருதமுடியும். அதேபோல கிறிஸ்தவத்தையும் காந்தியத்தையும் ஏற்றுக்கொண்ட மார்ட்டின் லூதர் கிங்கின் பாதையிலிருந்து வேறுபட்டதே மால்கத்தின் பார்வை என்பதை இக் கூற்று உணர்த்துவதுமாயிற்று.

மெக்கா பயணத்தின் பின் அவரது பார்வை இன்னும் விரிவடைந்தது. 1964 இல் பெய்ருத், கெய்ரோ, நைஜீரியா, கானா என்றெல்லாம் பயணம் மேற்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. சென்றவிடமெல்லாம் கிடைத்த வரவேற்பும் உற்சாகமும் அவரின் போர்க்குணத்துக்கு உரமாயின.

தானே உருவாக்கிக்கொண்ட வீண் தற்புகழ்ச்சிகளை தனக்குப் பலியானவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை என்பதைக் கண்டுகொள்ளும்போது அதிர்ச்சியில் தள்ளாடும் அளவிற்கு வெள்ளையன் தன்மீது தானே தீவிரமாக அன்பு செலுத்தி வந்தான். மறுபுறத்தில் கறுப்பின மக்கள் தாழ்வுச் சிக்கலில் அகப்பட்டுப்போய் இருந்தார்கள். இந்த இரு எதிரும் புதிருமான உளவியல் தளங்களை அடித்து நொருக்குவதில் மால்கம் தீவிரமாகச் செயற்பட்டார். இதன் சிதைவிலேயே மார்ட்ன் லூதர் கிங் முன்வைத்த சகோதரத்துவம், ஒன்றிணைவு என்பன சாத்தியப்படவும் அர்த்தப்படவும் முடியும்.

“வெள்ளையர் கறுப்பர் பழுப்பு நிறத்தவர் அல்லது சிவப்பு நிறத்தவர் என எந்தவொரு இனத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் ஒவ்வொரு மனிதனையும் மனிதனாக அங்கீகரிக்க வேண்டும். மனிதகுலத்தை ஒரு குடும்பமாகக் கருதினால் ஒன்றிணைவு குறித்தோ கலப்புத் திருமணம் குறித்தோ எந்தப் பிரச்சினையும் எழாது.” என்றார்.

கறுப்பின மக்களின் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்த வெள்ளையின சமூக சக்திகளை புறந்தள்ளியதோடு அவர்களின் பங்களிப்பு சம்பந்தமாக ஆரம்பத்தில் மால்கத்திடம் அக்கறையும் இருக்கவில்லை. அவரது பார்வைகள் விரிவடைந்த காலத்தில் அதற்காக மனம் வருந்தியதாகக் கூறப்படுகிறது. வெள்ளையின சமூக சக்திகள் தனியான அமைப்பு வடிவத்துள் நின்று அவர்களது சமூகத்துள் கறுப்பின மக்களின் நியாயப்பாடுகளை முன்வைத்து செயற்பட வேண்டும் எனவும் கறுப்பின மக்கள் தனியான அமைப்பாகவே தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் இப்போது விரும்பினார்.

பெண்கள் பற்றி அவர் சொல்லிவந்த கருத்துகள் எல்லாம் மூடத்தனமானது என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த விடயத்தில் மதம் சொன்ன கருத்துகளுக்குள், சேரிப்புற வாழ்வியலுக்குள் பெண்களை வைத்துப் பார்த்த அவர் இப்போ அதிலிருந்தும் விடுபட ஆரம்பித்தார். பெண்களையும் தனது புதிய அமைப்பில் பொறுப்புகளில் சேர்த்தார். ஆனாலும் இதுபற்றிய தெளிவான வாதங்களை இந் நூலில் எங்கும் அவர் சொல்லாதது நெருடலாகவே இருக்கிறது.

மற்றபடி ஒரு தலைமைக்குரிய பக்குவங்களை அவர் எட்டியிருந்தார் என்பதற்கு அவரது கீழ்வரும் கூற்று சாட்சியாகிறது.

“சிந்தனை மீதும் சமூகங்கள் மீதும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை நான் கடுமையாக எதிர்க்கிறேன். தன்னுடைய அறிவால் உணரும் எந்தவொரு விசயமும் அறிவுபூர்வமானது என்று நம்புவதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையுண்டு என்பதை நான் மதிக்கிறேன். இதேபோன்ற உரிமையை என் விசயத்திலும் ஒவ்வொருவரும் மதிக்கவேண்டும்.” என்றார். இக் காலப் பகுதியில் வியட்நாமின் மீது அமெரிக்கா தொடுத்த ஆக்கிரமிப்புப் போரை தீவிரமாக எதிர்த்தார். வியட்நாம் போரை எதிர்த்த முதல் தலைவர் மால்கம் என பாலச்சந்திரன் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல உள்நாட்டில் கறுப்பின மக்களை இனவொதுக்கிக் கொண்டு இராணுவத்தில் கறுப்பினத்தவரையும் சேர்த்து - அமெரிக்காவின் இறையாண்மையைக் காப்பாற்றுவது என்ற பெயரில்- தொடுத்த இந்த யுத்தத்தை அம்மணமாக்கிக் காட்டினார்.

21 பெப்ரவரி 1965. கடைசிக் காலத்தில் சதா தொலைபேசி மிரட்டலுடன் தனது மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மால்கம் எக்ஸ் கொலை செய்யப்பட்டார். மேடையில் வைத்து கொடூரமான முறையில் - அவரது உடன் மரணத்தை நிச்சயப்படுத்திக்கொள்ளும் வெறித்தனத்தோடு - கறுப்பினத்தவர் மூவர் சேர்ந்து துடிக்கத் துடிக்க பலமுறை சுட்டுச் சல்லடையாக்கினர். அவரது மூன்று குழந்தைகள், மனைவி முன்னிலையில் அவர் மரணமானார். 40 வயதை எட்டிப் பிடிக்கும் காலத்தில் அவர் வாழ்வு பறிக்கப்பட்டது. 22000 பேர் அவரது உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தினர். 21 வயதில் பூச்சியத்திலிருந்து தொடங்கிய அவரது இனவொதுக்கலுக்கு எதிரான அரசியல் முப்பத்தொன்பது வயதில் இந்தளவு அபரிதமான வளர்ச்சியைக் கண்டது வியப்பூட்டுகிறது. வீதிகள் தொடங்கி பல்கலைக் கழகங்கள் வரை ஒலித்த அந்த கலகக் குரலை மரணம் அடக்கியது.

நேசன் ஒப் இஸ்லாம் அமைப்பிலிருந்து வெளியேறியபின் “முஸ்லிம் மசூதிகள் கூட்டமைப்பு” என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். பின்னர் “ஆபிரிக்க அமெரிக்கர்களின் ஒற்றுமை அமைப்பு” (ஓ.ஏ.ஏ.யூ) என்ற அமைப்பை மதச்சார்பற்றதாக உருவாக்கினார். இது மனித உரிமைகளை அடைவதற்காக ஆக்கபூர்வமான திட்டத்தின்கீழ் ஆபிரிக்க அமெரிக்கர்களை ஒன்று திரட்டுகின்ற குறுகிய கண்ணோட்டம் இல்லாத ஓர் அமைப்பாகும் என்று அறிவித்தார். கறுப்பின மக்களது அதிகாரத்தைக் கட்டமைத்தல், கறுப்பின மக்களின் சுயமரியாதை, பொருளாராத மேம்பாடு, அரசியல் ரீதியலான அணிதிரளல்.. இவற்றுக்குக் கீழ் எல்லா அமைப்புகளும் ஒன்றுபட வேண்டும் என்று விரும்பினார்.

இந்தப் போக்கு “நேசன் ஒப் இஸ்லாம்” அமைப்பின் பகையுணர்வைச் சந்தித்தது என்பதற்கு மால்கத்தின் கொலை சம்பந்தமாக எலிஜா முகமது சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்து சாட்சியமளிப்பதோடு மனிதாபிமான அடிப்படையில் புரிந்துகொள்ளப்பட முடியாததும் ஆகும். அத்தோடு இந்தக் கூற்றானது கொலையில் நேசன் ஒப் இஸ்லாமையும் சந்தேகிக்க வைத்ததில் வியப்பில்லை.

“அவருடைய முட்டாள்தனமான போதனையே அவருக்கு மரணத்தைக் கொண்டுவந்தது. எனக்கும் உங்களுக்கும் அல்லா அனுப்பி வைத்த நல்ல விசயங்களை பைத்தியக்காரர்கள் நாசம் செய்வதை நான் அனுமதிக்கப் போவதில்லை.” என்பதே அக் கூற்று.

கைதேர்ந்த கொலைகளை செய்வதன் மூலம் அரசியல் போக்குகளைக் கட்டுப்படுத்தும் சி.ஐ.ஏ, எப்.பி.ஐ தான் இதைச் செய்தது அல்லது சூத்திரதாரியானது என்று கூறப்படுகிறது. “கறுப்பின மீட்பரின் எழுச்சியை உடனடியாக நாம் நிறுத்தவேண்டும்” என எப்பிஐ உயரதிகாரி எட்கார் கூவர் தனது கீழதிகாரி ஒருவருக்கு கடிதம் எழுதியிருந்தார் என பின்னாளில் தெரியவந்தது. மால்கம் எக்ஸ் இனைப் பற்றி எப்.பி.ஐ உளவுதெரிந்து வைத்திருந்த ஆவணங்கள் 44 ஆயிரம் பக்கங்களைக் கொண்டது. அவரது கொலையுடன்தான் இந்த ஆவணம் பூர்த்தி செய்யப்பட்டது.

பிரபலமான உளவியல் வல்லுனரான டாக்டர் கென்னத் பி கிளார்க் சொன்னார். “அவர் தேடிய மரியாதைக்குரிய ஓர் இடத்தை எட்டிப் பிடிக்கும் நேரத்தில் அவர் மரணமடைந்தது துயரமானது.”

கறுப்பின மக்களின் எழுச்சியை ஒரு அரசியல் இயக்கமாக (ஓ.ஏ.ஏ.யூ) வடிவமைக்க முற்பட்ட போக்கையே அமெரிக்க உளவுப்படை மால்கத்தின் கொலையால் தடுத்து நிறுத்தியது என பலர் நம்புகின்றனர். இறுதிக் காலங்களில் சோசலிசம் பற்றி அவர் கரிசனை கொண்டதாகவும் இந் நூலின் பிற்குறிப்பில் சக மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரன் குறிப்பிடுகிறார்.

லண்டன் பத்திரிகையாளர் கூட்டத்தில் மால்கத்தின் மரணம் கறுப்பர் இயக்கத்திற்கு ஒரு பின்னடைவு என்று சொன்ன - எழுத்தாளரும் நாடகாசிரியருமான- ஜேம்ஸ் பால்ட்வின் வெள்ளையினப் பத்திரிகையாளர்களைச் சுட்டிக் காட்டி “நீங்கள்தான் இதற்குக் காரணம்...யார் இதைச் செய்திருந்தாலும் இது உருவானது மேற்குலகின் உலைக்களமான அமெரிக்கக் குடியரசில்தான். ஆப்பிரிக்காவை ஐரோப்பா “கற்பழித்ததால்தான்” இனச்சிக்கல்கள் உருவாயின. மால்கத்தின் முடிவு அங்குதான் தொடங்கியது.” என்றார். ஆம், மனிதகுலம் இருக்கும்வரை இந்தக் குரலுக்கு அர்த்தம் இருந்துகொண்டே இருக்கும்.

வரலாறுகள் தனிமனிதர்களால் அல்லது தனி அமைப்புகளால் வடிவமைக்கப்படுவதில்லை. கறுப்பின மக்கள் மத்தியில் அங்கும் இங்குமாக பல அமைப்புகள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. மார்ட்டின் லூதர் கிங் இன் போராட்டங்களும் முனைப்பாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்தான் மால்கம் எக்ஸ் உம் களத்தில் இருந்தார். இருவருக்கும் இடையில் கொள்கையளவில் உடன்பாடு இருக்கவில்லை. ஆனாலும் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் நிலையிலும் இல்லை. மார்ட்டின் லுதார் கிங் அகிம்சாவாதி. அத்தோடு கத்தோலிக்க மதபோதகராக இருந்தவர். மால்கம் கத்தோலிக்க மதத்தை, அதன் இனவொதுக்கல் இசைவை எதிர்த்து சகோதரத்துவத்தைக் கடைப்பிடித்த முஸ்லிம் மதத்துக்கு மாறி அதன் மதபோதகராகவும் செயற்பட்டவர். கிங் வெள்ளையினத்தவரோடான சகோதரத்துவத்தைக் கோரினார். சமவுரிமையைக் கோரினார். குடியுரிமையைக் கோரினார். மால்கம் இவைகளைச் சாத்தியப்படுத்தக்கூடிய நுண் அரசியலுக்குள் ஒரு கலகக்காரனாக செயற்பட்டார். நீக்ரோக்களின் உருவாக்கம், கறுப்பு, வெள்ளை என்பதன் அரசியல், மூலமனிதன் பற்றிய ஆய்வுகளை முன்நிறுத்தியமை, சிந்தனையின் வெள்ளைமயமாக்கல் போன்றவை அடிமை மனோபாவத்தினை இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த கறுப்பின மக்களை தன்நம்பிக்கை கொண்டவர்களாகவும் சுயமரியாதை கொண்டவர்களாகவும் நிமிர்த்தியது. உரிமையைக் கேட்டுப் பெறுவது என்ற நிலையிலிருந்து அதை தாமாகவே எடுத்துக் கொள்வதற்கான போர்க்குணத்தை வழங்கியது.

மால்கம் எக்ஸ் இன் இறுதிக்கால அரசியல் போக்கு இந்த போர்க்குணங்களை உள்வாங்கி இன்னொரு பரிமாணத்தை வழங்கிவிடக்கூடிய “ஆபத்தை” அமெரிக்க உளவுப்படை சரியாகவே கணித்தது. மால்கம் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கூறினார் மார்ட்டின் லூதர் கிங். அவரும் மூன்று ஆண்டுகளுக்குப்பின் கொலை செய்யப்பட்டார். மால்கம் எக்ஸ் வளர்த்தெடுத்த போர்க்குணம் சமூக சாராம்சமாகி கிங்கின் வழிநடத்தலுக்குள் கலந்துவிடலாம் என்ற “முன்னெச்சரிக்கை” சிலவேளை கிங்கின் மரணத்தைக் கோரியிருக்கலாம். எது எப்படியோ மால்கம் கணித்திருந்ததுபோல எதிர்பார்த்ததுபோல மால்கத்தின் மரணம் முந்திக்கொண்டது.

நூல் விபரம்...

மால்கம் எக்ஸ் - என் வாழ்க்கை
மால்கம் எக்ஸ் சொல்ல எழுதியவர் : அலெக்ஸ் ஹேலி
தமிழாக்கம் : வெ.கோவிந்தசாமி
வெளியீடு : விடியல் பதிப்பகம், 11 பெரியார் நகர், மசக்காளிபாளையம் (வடக்கு) கோயம்புத்தூர் 641 015

- ரவி (ranr@bluewin.ch)



வியாழன், 3 ஏப்ரல், 2014

தமிழீழத்தை காவு கொடுக்க வந்ததே அமெரிக்க தீர்மானம் ...அமெரிக்க தீர்மானத்தினை கிழித்து எரிய வேண்டும் --மும்பை விழித்தெழு இயக்கம்

இதை முழமையாகஅறிந்துக்கொள்ள நமது தோழமை இயக்கமான மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கூறுவதை படிக்கவும் ...

 

சர்வதேச விசாரணயை யார் தடுத்தார்கள்? யார் திரித்தார்கள்?

us-resoluஅமெரிக்க தீர்மானம் என்கிற ஒன்று வராமல் இருந்திருந்தால் சர்வதேச விசாரணையை ஐ.நாவின் நிறுவனங்கள் கொண்டு வந்திருக்கும். அதற்கான அதிகாரத்தினை ஐ.நா சட்டக் குழு, மனித உரிமைக்குழு , ஐ.நாவின் துணை பொதுச் செயலாளர் ஆகியோர் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள் சர்வதேச விசாரணயை யார் தடுத்தார்கள்? யார் திரித்தார்கள்?

அமெரிக்க தீர்மானத்தினை ஆதரிக்கவேண்டும் அல்லது கடுமையான விமர்சனத்திற்குள்ளாக்கக் கூடாது என்று கூறுபவர்களிடம் திருமுருகன் காந்தி வெளிப்படையாக முன்வைக்கும் கேள்விகளை உலகத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டி வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

“பின்வரும் நிகழ்வுகளை முழுமையாக படித்துவிட்டு பின் பேசுங்கள், பொத்தாம் பொதுவான விவாதத்திற்கு நாங்கள் வரவில்லை. விவரங்கள், நிகழ்வுகள் அடிப்படையில் பேசலாம்.

1. 2009 போர் முடிந்தவுடன் மே மாதத்தில் ஐ.நாவின் மனித உரிமைக் கமிசன் சர்வதேச விசாரணையை பான் கி மூனது அதிகாரத்தின் கீழ் (விதி எண் 99) கொண்டு வரவேண்டும் எனக்கோரியது.

2. பான் கி மூனின் சட்ட வல்லுனர் குழு 2009 ஜூலையில் இதே கோரிக்கையை முன் வைத்தது.

3.இந்தக் கோரிக்கை ஐ.நாவின் விதி. இதை மறுக்க முடியாது என்பதால், சர்வதேச விசாரணையை திசை திருப்ப உள்நாட்டு விசாரணையை கோரினார் பான் கி மூன்.

4. 2010 ஜனவரி வரையில்(தனது தேர்தல் வரை) ராஜபக்சே உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்கவில்லை.

5.ஜனவரி 2010இல் டப்ளின் தீர்ப்பாயம் இனப்படுகொலைக்கான விசாரணையை கோரியது.

6.உள்நாட்டு விசாரணையை துவக்காததால் தனக்கு “என்ன நடந்தது, என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்காக” ஐ.நா நிபுணர் குழுவினை பான் கிமூன் அமைத்தார்

7.இறுதியாக உள்நாட்டு விசாரணையை ராஜபக்சே அமைத்தார்

8. 2011 ஏப்ரலில் வெளியான ஐ.நா நிபுணர் குழு அறிக்கை சர்வதேச விசாரணையை கோரியது. பான் கி மூன், மெளனம் காத்தார். (திட்டமிட்டே ஐ.நா மனித உரிமைக் கமிசன் கூட்டத் தொடருக்கு பின்பாக அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அறிக்கை 2011 மார்ச் மாதத்தில் தயாரானதாக தகவல் உண்டு. மேலும் தமிழகத்தின் தேர்தலும் கணக்கில் எடுத்துக்கொண்டே காங்கிரஸ் திமுகவிற்கு பாதகம் விளைவிக்கா வண்ணம் பார்த்துக் கொள்ளாப்பட்டது ).

9 சர்வதேச நிபுணர் குழுவின் மீது நடவடிக்கை எடுக்க பான் கி மூன் மறுத்தார், இதனால் நெருக்கடி ஏற்பட்டது. ராஜபக்சே கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு பரிந்துரைகளை அமுல்படுத்தினால் சர்வதேச விசாரணை தேவைப்படாது என்ற முடிவு முன்வைக்கப்பட்டது.

10. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவினை மனித உரிமைக் கவுன்சில் ஏற்றுகொள்ள மறுத்தது.

11. சர்வதேச விசாரணை எனும் ஐ.நாவின் விதியை நடைமுறைப் படுத்த நெருக்கடி அதிகரித்ததை கணக்கில் எடுத்துக்கொண்டு, அமெரிக்காவும்-இந்தியாவும் சேர்ந்து உள்நாட்டு விசாரணையையும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதை ஒரு தீர்மானமாக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் 2012இல் கொண்டு வந்தார்கள். இதன்படி இலங்கையின் அரசியல் சாசனப்படி தீர்வு என்பதாக உள்ளடக்கம் அமைக்கப்பட்டது. இதுவே இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. (எனவே தான் 2012இல் நல்லிணக்க ஆணையத்தினையும், இலங்கை அரசியல் சாசனத்தினையும் எரித்தோம்)

12. ராஜபக்சே உள்நாட்டு விசாரணையையும், நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளையும் அமுல்படுத்த மறுத்தார். இதனால் ஐ.நா தீர்மானம் 2012 அமுல்படுத்த முடியாமல் போனது.

13. மீண்டும் சர்வதேச விசாரணையை ஐ.நா ஆரம்பிக்க வேண்டுமென்றார் நவநீதம் அம்மையார். ஆக மீண்டும் சர்வதேச விசாரணைக்கான நெருக்கடி ஏற்பட்டது.

14 இந்த நெருக்கடியைத் தவிர்க்க மீண்டும் 2013 இல் உள்நாட்டு விசாரணை என்கிற தீர்மானத்தினை அமெரிக்க முன்வைத்தது. இதில் புலிகள் மீதான விசாரணையையும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனவும் இந்தியா சேர்த்தது. நவநீதம் அம்மையாரின் சர்வதேச பரிந்துரைகளை கணக்கில் எடுத்துக் கொள்கிறோம் என்கிற பிரிவில் இதைச் சேர்த்து செயல்திட்டத்தில் உள்நாட்டு விசாரணையை கோரியது.

15. ஆகஸ்ட் 2013இல் இலங்கை வந்த நவநீதம் அம்மையார் தனது நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரிதும் மாற்றத்தினை முன்வைத்தார். அதாவது புலிகள் பயங்கரவாதிகள் என்றார். இவ்வாறு ஒரு அமைப்பினை விசாரிக்காமல் முத்திரைகுத்துவது ஐ.நா அதிகாரிகளின் வழக்கமல்ல என்பதை நினைவு படுத்தினோம். மீள்குடியேற்றம் நிகழாமல் நிலம் ஆக்கிரமிக்கப்படுகிறது என்பதை ஆவணம் மூலமாக அம்பலப்படுத்தினோம். நவநீதம் அம்மையார் மீண்டும் சர்வதேச விசாரணையை கோரினார். 2013 தீர்மானம் தோல்வி அடைந்ததை அவரது பெப்ரவரி 2014 அறிக்கை வெளிப்படுத்தியது.

16. இதற்கு நடுவே 2012இல் ஐ.நாவின் செயல்பாடுகளை விசாரித்த சார்லஸ் பெட்ரி அறிக்கை சர்வதேச விசாரணையை கோரியது. புலிகள் மீது ஐ.நாவின் மனித உரிமைக்கமிசன் தேவையற்ற குற்றச்சாட்டுகளை நெருக்கடி காரணமாக முன்வைத்தார்கள் என்பதை அம்பலப்படுத்தியது.

17. சார்லஸ் பெட்ரி அறிக்கையின் மீது விசாரணை நடத்திய ஐ.நாவின் மிக உயர் அதிகாரி, ஜான் இலியாசன் தனது அறிக்கையை கடந்த ஜூன் 2013இல் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் மீண்டும் சர்வதேச விசாரணையை ஐ.நா தனது அதிகாரத்தின் கீழ் உடனே துவக்கவேண்டுமென்று முன்வைத்தார்.

ஆக ஐ.நாவின் விதி எண் 99ன் கீழும் அதன் அதிகாரத்தின் கீழும் தாமாகவே 2009லேயே கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டிய சர்வதேச விசாரணையை அமெரிக்காவும், இந்தியாவும் தவிர்த்தார்கள், காலதாமதப்படுத்தினார்கள்.
இலங்கை அரசின் மீதான விசாரணையை, தமிழர் தரப்பினையும் விசாரிக்க வேண்டுமென்று மாற்றி இருக்கிறார்கள்.

ஒரு தேசிய இனத்தின் மீது இனவெறியோடு நடத்தப்பட்ட தாக்குதலை, போரை மறுத்திருக்கிறது 2014 அமெரிக்க தீர்மானம், மாறாக அங்கு மதச் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாற்றி இருக்கிறார்கள்.

இதன்படி சர்வதேச விசாரணை வந்தாலும் அதை இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை போராக வரையறை செய்யமுடியாது என்பதாக பின்னாளில் மாற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் அமெரிக்காவும், இந்தியாவும் செய்திருக்கிறது.

மேலும் வடக்கு மாகாணதேர்தல் என்பது அரசியல் தீர்வினை மறுக்கும் உத்தி என்று 2013 ஆகஸ்டில் முன்வைத்தோம். ஏதோ ஒன்று கிடைக்கிறது, ஏன் எதிர்க்கிறீர்கள் என்றார்கள். ஆனால் அதே மாகாண சபைத் தேர்தலை அரசியல் தீர்வாக நவநீதம் அம்மையாரும், அமெரிக்காவும், இந்தியாவும் முன்வைக்கிறது.
மாகாண சபை முதலமைச்சரும் அமெரிக்காவின் தமிழினமறுப்பினை ஏற்றுக்கொள்கிறார். சம்பந்தன் ஈழ கோரிக்கையை கைவிட்டுவிட்டோம் என்று சென்னையில் பேட்டி கொடுக்கிறார். அமெரிக்க தீர்மானத்தினை வெளிப்படையக ஆதரிப்பவர்கள் இவற்றினை ஏன் கண்டிக்க முன்வரவில்லை.?.. கேள்வி எழுப்ப முன்வரவில்லை.?.. அன்று நாங்கள் இந்த நிலைப்படுகளை கடுமையாக எதிர்த்த பொழுது மெளனமாக் கடந்து சென்றவர்கள், இன்று அமெரிக்காவினை எதிர்க்கவேண்டும் என்கிற பொழுது பொங்குவது ஏன்?

அமெரிக்க தீர்மானம் என்கிற ஒன்று வராமல் இருந்திருந்தால் சர்வதேச விசாரணையை ஐ.நாவின் நிறுவனங்கள் கொண்டு வந்திருக்கும். அதற்கான அதிகாரத்தினை ஐ.நா சட்டக் குழு, மனித உரிமைக்குழு , ஐ.நாவின் துணை பொதுச் செயலாளர் ஆகியோர் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள் சர்வதேச விசாரணயை யார் தடுத்தார்கள்? யார் திரித்தார்கள்?
tn-student-usa
அமெரிக்க தீர்மானத்தின் பின்னனி பற்றி சொல்லி இருக்கிறோம். இப்பொழுது சொல்லுங்கள் நாங்கள் ஏன் அமெரிக்க தீர்மானத்தினை எரிக்க கூடாது. ?…

உங்களுக்கு எங்கள் கேள்வி ஒன்று தான்… புலிகள்மீதும் விசாரணை நடத்தி அவர்களது அரசியல் செயல்பாட்டினை ஒடுக்கவேண்டும் என்கிற அமெரிக்காவின் நிலைப்பாட்டினை நீங்கள் ஆதரிக்க காரணம் என்ன?

புலிகளை ஒடுக்கவேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா முதல் அம்னெஸ்டி, திமுக வரை அனைவருக்கும் அரசியல் விருப்பம் இருக்கிறது.. இந்தக் குழுவில் நீங்களும் இணைய வேண்டுமென்கிற காரணம் என்ன?”

அமெரிக்க தீர்மானத்தினை ஏன் எரிக்க வேண்டும்?.

அமெரிக்க தீர்மானம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் , ஆகவே அதை வைத்து இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்குவோம் என்கிறார்கள்…

ஆனால் அமெரிக்க தீர்மானம் அடிப்படையில்

1. தமிழினம் என்கிற ஒன்றை மறுக்கிறது.

2. நிகழ்ந்தது மதசிறுபான்மையினர் மீதான மனித உரிமை மீறல் என்கிறது

3. தமிழர் மட்டுமல்ல, சிங்களவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது.

4. இலங்கை ராணுவத்தினை மட்டுமல்ல, புலிகள் அமைப்பினை (மீளக்கட்டமைக்கும் ஆற்றல்களையும் விசாரிக்கவேண்டுமென்று மறைமுகவும்) நேரடியாகவும் கோருகிறது

புலிகளை விசாரிக்கிறோம் என்கிற பெயரில், “ போரில் எஞ்சிய புலி வீரர்களையும், தமிழீழ போர்க்கைதிகளையும், புலிகளின் அரசியல் செயல்பாட்டாளர்களையும்” விசாரிக்கச் சொல்லும் அமெரிக்க தீர்மானம் இலங்கைக்கு எதிரான தீர்மானமா? தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானமா?…

புலிகளை சர்வதேச பொறிவலைக்குள் சிக்கவைக்கும் ஒரு தீர்மானத்திற்கு எவ்வாறு எதிர்ப்பினை பதிவு செய்வது?

வெறும் 32 நாடுகளில் மட்டுமே பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட புலிகளை , 180 நாடுகளிலும் ”போர்க்குற்ற விசாரணைக்குள் இருக்கும் அமைப்பு” என்று அறிவிக்கும் தீர்மானத்தினை கொண்டு வந்த நாடு அப்பாவி நாடா?

இதுவரை எந்த ஒரு சர்வதேச அறிக்கைகளிலும், சார்லஸ்பெட்ரி, நார்வே, ஐ.நா-வல்லுனர் குழு, மனித உரிமைக்குழுக்கள் புலிகளுக்கு எதிரான ஆதாரங்களை முன்வைக்காத பொழுது,
அமெரிக்கா மட்டும் இருதரப்பினரையும் விசாரிக்கவேண்டுமென்று கோரிக்கை வைப்பதை விமரிசிக்காமல் எங்களால் எவ்வாறு கள்ள மெளனம் சாதிக்கமுடியும்?

”புலிகள் மீது பாரம் இருந்தால் தானே பயப்படுவதற்கு, புலிகளையும் விசாரிக்கட்டும் , மடியில் கணம் இருந்தால் தானே வழியில் பயம்” என்று வாதம் வைக்கிறவர்களிடம் கேட்க விரும்புகிறேன் ,

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் புலிகளை பயங்கரவாதிகள் எனசொல்லமுடியாது என்ற பின்னர் ஏன் இங்கே தடை வந்தது?..

புலிகள் மீது தகுந்த ஆதாரம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏன் தடை வந்தது?

அமெரிக்கா ஏன் ஆதாரம் இல்லாமல் தடைசெய்தது?

இவற்றினை எவ்வாறு நம்மால் தடுக்க முடிந்தது?..

இருதரப்பினரையும் விசாரிக்கவேண்டும் என்கிற அமெரிக்க தீர்மானத்தினை புலிகள் அமைப்பு ஏற்றுகொள்ளுமா? அல்லது அவர்களது அரசியல் செயல்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?..

எங்களையும் சேர்த்து விசாரியுங்கள் என்று புலிகள் கேட்டார்களா? கேட்பார்களா? …

புலிகள் மீது விசாரணையை வலிந்து திணிக்கும் எந்த ஒரு நாட்டினையும் என் ஆற்றல் அனைத்தும் கொண்டு எதிர்க்கவே செய்வேன்… ஏனெனில் அதுவே முள்ளிவாய்க்காலில் தலையில் துப்பாக்கிக் குண்டை எந்த ஒரு பணிவும், சமரசமும் காட்டாமல் வாங்கி உயிர்க் கொடை செய்த தோழர்களுக்கு நான் செய்யும் குறைந்த பட்ச மரியாதை.

திருமுருகன் காந்தி

புதன், 12 மார்ச், 2014

மும்பை விழித்தெழு இயக்கத்தின் தேர்தல் நிலைப்பாடு .. மற்றும் எமது தேர்தல் கோரிக்கை People's Agenda

மும்பை விழித்தெழு இயக்கத்தின் நாடாளுமன்ற -சட்டசபை தேர்தல் நிலைப்பாடு ..
இதுவரை நடந்த தேர்தலிலும், வருகிற தேர்தலிலும் நாங்கள் எந்த ஒரு கட்சியும் ஆதரித்தது கிடையாது..ஆதரிக்கப்போவதும் இல்லை..

(அரசியல் அதிகாரம் இருந்தால் எல்லாவற்றையும் பெற்று விடலாம் என்கிற மாய பேச்சை நாங்கள் நம்பவது இல்லை..அதை பற்றி விரிவாக அடுத்த கட்டுரையில் எழுதுகிறோம்)

ஆனாலும் தேர்தலில் மக்கள் கோரிக்கையை கொண்டு செல்ல விரும்புகிறோம் ..மும்பை  மக்களின் தேவைகளை, தமிழர்களின் தேவைகளை, சிறுபான்மையினர்,பட்டியல் இன மக்கள் போன்றவர்களின் தேவைகளை  முதன்மை படுத்துகிறோம்.

#People's Agenda..

Charter of Demand to Political party & Member of parliament ..


#Free  toilet facilities for the people especially for women.
( No latrines/toilets & safe drinking water for more than 90% for Dharavi people)

#Free reading room/library ( Plenty of unemployed or poor people living in Dharavi, library use makes better readers, higher achievers & more successful workers we want our young people/student to feel comfortable coming into their local library. Whether or not they have money in their pocket. But we (Mumbai Vizhithezhu Iyakkam /MVI) give small user fees in addition to support library)

#Free coaching centre for weaker sections (dalits,backwards and minorities) for IAS ,IPS, IRS etc exams.

#Call for an international independent investigation into the genocide against tamils in srilanka and also a referendum for
independent Tamil Eelam

#NEED (DALIT) SCHEDULED CASTE BANK. (Scheduled caster venture capital fund to support SC entrepreneurs of people dev.(special component plan & tribal sub-plan for the oppressed sections – more than 50,000 crores in central govertment. State govt & banks not releasing money to scheduled caste people developmet they misusing the money for other development like common wealth, national highway.

#Tamil bhavan in maharashtra and tamil chair in the university.

#Free health care & safe drinking water for all.

#Right to work as a fundamental right & Right to equal opportunity for education for all (from 3years to 18 years)

#Repeal of UAPA (unlawful activities prevention act) and other draconian laws.

#Release Dr. Babasaheb Ambedkar Articles &  film in all Indian languages and also name Dr.Babasaheb Ambedkar name in a Dharavi sector with fullfill of local public demand like economy,school,business and carpet area. (Latest government announcement about Dharavi sector it is against to the local people demand.)

Thanks & Regards
Mumbai Vizhitehzhu Iyakkam/MVI

வியாழன், 6 மார்ச், 2014

தமிழின அழிப்பில் ஐநா வை முதல் குற்றவாளி....ஐநா மீது தமிழக அரசு/மக்கள் வழக்கு தொடர வேண்டும்..மும்பை விழித்தெழு இயக்கம்


 தமிழின அழிப்பில் ஐநா வை முதல் குற்றவாளி....ஐநா மீது தமிழக அரசு/மக்கள் வழக்கு தொடர வேண்டும்..


ஐநா மனித உரிமை கூட்டத்தொடர் என்பது மேற்குலகின் நலன்களை மையமாகக் கொண்டதே
அமெரிக்காவின் தீர்மானமும். நவிபிள்ளை அம்மையாரின் அறிக்கையும் நாம்  எதிர்பார்த்த ஒன்றுதான்..


போர் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் ஆன பின்னரும் எந்த நடவடிக்கையிலும் முன்னேற்றம் ஈழமக்களுக்கு ஏற்படவில்லை.
எம்மை அழித்தொழிக்க வேண்டும் என்ற கொலைவெறியில் இருந்த இந்திய அதிகாரவர்க்கத்திற்கும் சிங்கள இனஅழிப்பு அரசுக்கும் தெளிவான பாதையை வரைந்து கொடுத்தது மேற்குலகம்தான். அதை மவுனமாக அங்கீகரித்தது ஐநா மன்றம்.  இப்போது வந்த அமெரிக்க தீர்மானம் நம்மை மறுபடியும் ஏமாற்றும் என்று அறிந்தோம் அதை நடத்துள்ளது.ஐநா மனித உரிமை கூட்டத்தொடர் என்பது மேற்குலகின் நலன்களை மையமாகக் கொண்டதே..இதை தெரிந்த போதிலும்  நடந்த தமிழ் இனஅழிப்பை கவனப்படுத்தவும் அதை சர்வேதச  மட்டத்தில் ஒரு விவாதமாக மாற்றவும் அதன் மூலம் நமது இலக்கை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள முயற்சித்து வருகிறோம் ..

இனப்படுகொலையின் முதலாவது குற்றவாளியான ஐ.நா விடமே எமக்கான நீதியை எதிர் பார்த்து நிற்கும்  நிர்க்கதியான ஒரு இனம் ஆகிய நாம் .

எந்த உலகப்போர்களின் விளைவாக ஐநா தோற்றம் பெற்றதோ அதே ஐநாவின் நீதியில் நம்பிக்கையற்ற மக்களையும் நாடுகளையும் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து ஐநாவிற்கு எதிராக போராடுவதுதான் ஒரே வழி.

இன்று ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா என்று ஐநாவின் மீது உலகளவில் பலர் நம்பிக்கையிழந்து வரும் சூழலில் ஐநாவிற்கு எதிராக அல்லது அதற்கு சமாந்தரமாக ஒரு அமைப்பு உருவாக வேண்டும் என்ற கோசங்கள் வலுத்து வருகின்றன. நாம் அந்த போராட்டத்தின் முதல் அடியை எடுத்து வைப்போம்.  எனவே தற்போது ஐநாவிற்கு எதிரான எமது போராட்டமும் எமது விடுதலையை மட்டுமல்ல ஐநாவால் வஞ்சிக்கப்பட்ட பல இனக்குழுமங்களின் விடுதலையாக இருக்கும்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை மட்டுமே  சர்வதேச சமூகம் விரும்புகிறதே ஒழிய, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கமே அதற்கு இல்லை.  போர்க்கால குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணை கோரப்படும் என்று சர்வதேச சமூகம் முன்னெடுத்துவந்த பிரச்சாரங்கள் பொய்த்துப் போயிருக்கின்றன : கொழும்பில் சில தினகளுக்கு முன்  நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அமெரிக்க தீர்மானம் குறித்து  பேசியது இதை எல்லாமே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய உள்ளது.


ஐநா என்பதே உலகப்போர்களின் விளைவாக தோன்றிய ஒரு அமைப்புத்தான். "நீதியும் சட்டமும் என்பது அரசின் வன்முறை,வன்முறையும் போராட்டமும் மக்களின் நீதி" என்ற தத்துவம் பொய்க்காது. எனவே போராட்டங்கள்தான் எதையும் மாற்றியமைக்கும்.

ஐநா சாசனங்களுக்கு எதிராக நாம் அழித்தொழிக்கப்பட்டதை நாம் தொடர்ந்து போராடுவதனூடாக உறுதிப்படுத்த வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கெயிட்டி மக்கள் ஐநா மீது கடந்த மாதம் நியூயோர்க் நீதிமன்றில் ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வாறான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளிலிருந்து சட்டப்படியான விலக்கு பெறும் தகுதி அதாவது (legal terms Immunity) இருப்பதாக ஐநா கூறுகிறது.

ஆனால் ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாக வழக்குத் தொடர்ந்துள்ள வழக்குரைஞர்கள் ஐநாவின் வாதத்தை முறியடிக்க முடியும் என்று கூறுகிறார்கள்

ஏன் கெயிட்டி மக்கள் தொடர்ந்து போல தமிழக மக்கள் சார்பாக ஐநாவின் மீது வழக்கும் தொடக்கலாமே .தமிழக அரசின் தீர்மானங்களுக்கும், போராட்டங்களுக்கும்  மத்திய அரசு செவிசாய்க்காததால் ஈழ  மக்களின் நலன் கருதி தமிழக அரசு கூட நேரடியாக ஒரு வழக்கை தொடரலாம்...

எனவே தமிழக அமைப்புக்கள், கட்சிகள் கருத்து வேறுபாடுகளை களைந்து இதன் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து தமிழக அரசுக்கு ஒரு அழுத்தத்தை  கொடுக்க வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறோம், மும்பை விழித்தெழு இயக்கம்