வெள்ளி, 8 மார்ச், 2013

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணையும் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும்..(மார்ச் 2013,)

அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணையும் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும்
எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது, முழு உலகமுமே கவலை கொள்ளலாம், கண்டனங்கள் தெரிவிக்கலாம், கண்ணீர் வடிக்கலாம். ஆயினும், எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது சுதந்திரத்தை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு, விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது என்பதை, நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.http://www.pathivu.com/uploads/images/2013/03/2OK_2.jpg
தமிழீழத்தின் தேசியத் தலைவர் தீர்க்கதரிசனமாகக் கூறிய வார்த்தைகளை இன்று நாம் கண்கூடாக நிதர்சனமாகக் காண்கின்றோம்.
சனல்-4 மீண்டும் ஒரு தடவை தமிழர்களின் அழிவுகளை ஜெனீவாவில் ஆதாரங்களுடன் முன்வைத்திருக்கின்றது. No fire Zone ஆவணப்படத்தைப் பார்த்த பல நாட்டுப் பிரதிநிதிகளையும் அதிலுள்ள காட்சிகள் உலுப்பியெடுத்துள்ளன. ‘இப்படியெல்லாம் கொடுமைகள் இலங்கையில் நடந்தனவா?’ என வாய்விட்டுக் கேட்குமளவிற்கு அவர்களிடம் இந்த ஆவணப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் மீதான தங்களது கரிசனையையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால், தமிழர்களுக்கு நேர்ந்த பேரழிவைப் பார்த்து அதிர்ந்தவர்களாலும், அழுதவர்களாலும் தமிழர்களுக்கு ஒரு சிறு தீர்வைத்தன்னும் அல்லது அதற்கான நீதியைப் பெற்றுத்தந்தவிட முடியுமா..?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கடந்த ஆண்டு அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் சிறீலங்காவிற்கு எதிரானதுபோன்றும், தமிழர்களுக்கு நீதியை வழங்கப்போவதுபோன்றும் பூதாகரமாகக் காண்பிக்கப்பட்டது. ஆனால், இறுதியில் கொலையாளிகளே தங்களைத் தாங்கள் விசாரித்து வெளியிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையில் வந்த முடிவை நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு ஒருவருட கால அவகாசம் வழங்குவதாகவும் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் கூறியது.
ஆனால், அதனை ஏதோ சிறீலங்காவிற்கு வரப்போகும் ஆபத்துப்போலவும், முறியடிக்க வேண்டும் என்றும் அப்போதும் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஆனால் அந்தத் தீர்மானத்தில் சொல்லப்பட்ட எதனையும் சிறீலங்கா நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்தான் தமிழின அழிப்பில் மிகத்தீவிரமாக இறங்கியது. தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, காலாச்சாரங்களைச் சீரழித்து, சிங்கள பௌத்த விகாரைகளைப் பெருக்கி தமிழர் தாயகத்தை சிங்கள தேசமாக மாற்றியமைக்கும் காரியத்தை மிகவும் வெளிப்படையாகச் செய்தது.
தமிழர்களின்ஜனநாயக வழியிலான போராட்டங்களைகழிவெண்ணை ஊற்றியும், கிறீஸ் பூதங்களை அனுப்பியும் தடுத்ததுடன், தமிழர்கள் காணாமல் போவதும், மர்ம மரணங்களும், பாலியல் வன்முறைகளும் தொடரவே செய்தன. எனினும், தீர்மானத்தைக் கொண்டுவந்த அமெரிக்காவோ, அல்லது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட .நா. மனித உரிமைகள் அமைப்போ இதனைக் கண்டுகொள்ளவும் இல்லை, தடுக்கவும் முனையவில்லை.
இந்நிலையில்தான், .நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கின்றது. இத்தீர்மானம் சிறீலங்காவை பெரும் ஆபத்துக்குள் தள்ளிவிடுவதுபோலவும், தமிழர்களுக்கு சார்பானது போலவும் பாசாங்கு செய்யப்படுகின்றது. ‘யானை வரும் என்று காத்திருந்தால், பூனை வந்ததுபோலஇம்முறை அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானமும் கடந்தமுறையைப் போல ஒரு புஸ்வானம்தான் என்பதைக் கசியும் செய்திகள் உறுதிப்படுத்தி வருகின்றன.
கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதையே இம்முறையும் குறிப்பிட்டுள்ளதுடன், ஐந்து விடயங்கள் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1) .நா. மனிதவுரிமை ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது.
2) போரின் போதான கற்கைகள் மற்றும் இனங்களின் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் ஆரோக்கியமான பரிந்துரைகளை விரைவாகச் செயற்படுத்துதல், இலங்கைத் தீவின் அனைத்துப் பிரசைகளிற்கும் நீதி, சமத்துவம், மீளிணக்கம், பொறுப்பாற்றல் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான சுயாதீன நடைமுறையை ஏற்படுத்துதல்
3) மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோரின் சுயாதீனச் செயற்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களிற்கு சிறீலங்கா உத்தியோகபூர்வமாக பதிலிறுக்க வேண்டுதல், சுதந்திரமாக கருத்துக்கூறல், தனிநபர்களின் ஒன்றுகூடுதலிற்கான உரிமை, நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள், விசாரணையற்ற கொலைகள், சிறுபான்மையினரின் விவகாரங்கள், காணமற் போதல் தொடர்பான விவகாரங்கள் மற்றும் பெண்களிற்கெதிரான வன்முறைகள் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்தல்
4) மனிதவுரிமை ஆணைக்குழு இது தொடர்பாக விடயங்களில் சிறீலங்காவிற்கு தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்குதல்.
5) மேற்கண்ட விவகாரங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்து அடுத்த மனிதவுரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் அவையின் மனிதவுரிமை ஆணையகம் சமர்ப்பித்தல்.
ஆகியனவே அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானங்கள் என்று தெரியவந்துள்ளது. அதாவது சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு ஏற்கனவே கொடுத்த அவகாசத்தை மேலும் ஓராண்டு காலம் நீடிப்பதே தற்போது வரப்போகும் தீர்மானம். இதை நிறைவேற்றத்தான் தனக்கு ஆதரவான நாடுகளை வளைத்துப்பிடிக்க அமெரிக்காவும், தங்களுக்கு ஆதரவான நாடுகளை வளைத்துப்பிடிக்க சிறீலங்காவும் கடுமையாக முயற்சிக்கின்றனவாம்.
சிறீலங்கா மனித உரிமை மீறல்களில், போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியே அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க முனைகிறது அமெரிக்கா. ஆனால், போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் சிறீலங்காவின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா .நா. சபையின் சிறீலங்காவுக்கான வதிவிடப் பிரதிப் பிரதிநிதியாக இருக்கின்றார். அந்த இராணுவத் தளபதியிடம்தான், பயங்கரவாதத்தை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது தொடர்பில் அமெரிக்கக் கடற்படையினர் பயிற்சிக் கருத்தரங்குகளை எடுக்கின்றனர்.
எனவே, தமிழர்களுக்கான நீதியையோ அல்லது நியாயத்தையோ யாருமே பெற்றுத்தந்துவிடப்போவதில்லை. தங்கள் சுய இலாபங்களுக்காகவே இந்த உலகம் சுழன்றுகொண்டிருக்கின்றது. விடுதலைப் புலிகளை அழித்தவிட்டதால் தமிழர்களின் போராட்ட குணம் அழிந்துவிடும் என்று சிங்களமும் அதற்குத் துணைபோபவர்களும் எண்ணுகின்றனர்.
ஆனால், மாடு இழைத்தாலும் கொம்பு இளைக்காது என்பதைத் தமிழ் மக்கள் புரியவைக்கவேண்டும். சோர்வின்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போராட்டங்களின் மூலமே தமிழ் மக்கள் தங்களுக்கான நீதியை மட்டுமல்ல, அதனூடாக விடுதலையையும் பெறமுடியும். எமக்கான விடுதலைக்கு நாமே போராடவேண்டும். இதனையே தமிழீழத் தேசியத் தலைவர் அன்றே தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருக்கின்றார்.

பாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சனை குறித்து விவாதம், மாநில தலைவர்களின் கருத்து..




இலங்கையில் நடந்த படுகொலைக்கு இந்தியாவும் உடந்தை: பா.ஜனதா குற்றச்சாட்டு 
 
தமிழர்களை ஏமாற்ற நினைக்கும் இந்தியா
எல்லாத் தேர்தல்களிலும் காலங்காலமாக நடக்கும் இந்த அரசியல் விரச நாடகத்தை இந்த முறை பன்னாட்டு அளவில் பிரம்மாண்டமாக அரங்கேற்ற இந்திய அரசு எடுத்து வைத்துள்ள முதல் படிதான்  இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தான நாடாளமன்றத்தில் விவாதம்.
இந்த ஒரே ஒரு நகர்த்தல் மூலம் இந்திய காங்கிரஸ் அரசு சாய்க்கத் திட்டமிட்டிருக்கும் செயல்கள்  பல!

  1. தமிழர்களிடம் வாக்குக் கேட்டு வருவதற்குத் தற்காலிகமாகவாவது ஒரு தகுதியைப் ஏற்படுத்திக் கொள்வது.
  1. உதவாத ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதன் மூலம் தன் நட்பு நாடான இலங்கையையும் தன்னையும் பன்னாட்டு அரசியல் அழுத்தத்திலிருந்து தற்காலிகமாகவாவது தற்காத்துக் கொள்வது.
  2. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பன்னாட்டுக் குரல்களைக் கொஞ்ச காலத்துக்கு, குறைந்தது நாடாளுமன்றத் தேர்தல் வரைக்குமாவது முடக்கி வைப்பது.
புதுடெல்லி, மார்ச். 8-,2013
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாக இருந்தது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது. பாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சினைபற்றி நேற்று விவாதம் நடந்தது.

விவாதத்தில் பாரதீய ஜனதா மூத்த தலைவரும், வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரியுமான யஷ்வந்த் சின்கா பேசும்போது கூறியதாவது:-

இலங்கை தமிழர்களின் துயரம் என்பது நமது காலக்கட்டத்தில் நடந்துள்ள மிக மோசமான நிகழ்வு ஆகும். இலங்கையில் ராணுவ பதுங்குகுழி ஒன்றில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக்கொண்டிருந்த காட்சியும், அதன்பிறகு சிறிது நேரத்தில் அவன் சுட்டு படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சியும் அனைவரையும் உறைய வைக்கும். இலங்கையில் எப்படியான படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அந்த ஒரே படம் சொல்லும். அங்கு வன்கொடுமை, மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, போர்க்குற்றங்களும் அரங்கேறின. இதை யாரும் மறுக்க முடியாது.

இந்தியாவில் பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்ற வேளையில், 2009-ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்தகைய தாக்குதல் இலங்கை அரசின் கொள்கையாகி விட்டது. 'தேவைப்பட்டபோது இந்தியா செயல்பட தவறி விட்டது. எத்தனையோ உயிர்களை இந்தியா காப்பாற்றி இருக்க முடியும்' என்று ஐ.நா. மனித உரிமைகள் குழு கூறியுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது, மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இந்திய அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. இலங்கைத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின்மீது இந்தியா வெறுமனே ஓட்டு போடுவதோடு நின்றுவிடக்கூடாது. அந்த தீர்மானத்தை வரைவதில், முன்னெடுத்துச்செல்வதில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். இதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசியதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினையில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள் (மத்திய அரசு) எதிர்ப்பு தெரிவித்தீர்களா?

'மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும்' என்று ஜவகர்லால் நேரு கூறி இருக்கிறார். இந்த கொள்கையை மத்திய அரசு பின்பற்றத் தவறியதின் விளைவுதான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்த கதி நேர்ந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் குழப்பம் இருக்கிறது. இதை தெளிவுபடுத்துங்கள்.

(காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை முலாயம்சிங் பார்த்து) சோனியாஜி, நீங்கள் ஏன் மவுனம் காக்கிறீர்கள்? உங்களிடம் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக எடுத்த நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்கு பின்னால் அமர்ந்திருக்கிற பிரதமரையும், வெளியுறவுத்துறை மந்திரியும் கேளுங்கள். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவுதேவைதான். அதற்காக நமது சொந்த மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உரித்தான விஷயங்களை நாம் எடுத்துச்சொல்லக்கூடாது என்பதல்ல.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுக்கத்தா ராய் கூறியதாவது:-

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலை உயர்வு போன்றவற்றில் அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே நாங்கள் அரசில் இருந்து விலகினோம். நீங்கள் ஏன் (பதவியில்) ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? இலங்கை தமிழர் விவகாரத்தில் உண்மையிலேயே காங்கிரசுடன் தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும்.

லாலு பிரசாத்-பகுஜன்சமாஜ்

ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் பேசும்போது, 'இலங்கை தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தாராசிங் பேசும்போது, 'இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இந்த பிரச்சினையை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு, தலையிட வேண்டும்' என கேட்டுக்கொண்டார். 
 
இதுவே சரியான தருணம், ஈழத்தில் நடந்தது  ஒரு  இனப் படுகொலை மற்றும்  பொது சன வாக்கெடுப்பு கோரிக்கைகளை நமது பிரச்சாரத்தை  முன்னெடுத்து தீர்மானமாக கொண்ட வர மற்ற மாநில தலைவர்களின் இந்த பேச்சால் கொண்டு வரலாம் .....மற்ற மாநில மக்களிடம் , தலைவர்களிடம் பிரச்சராத்தை முன்னெடுப்பும்

புதன், 20 பிப்ரவரி, 2013

மாவீரன் பிரபாகரனின் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட படுக்கொலை.

இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சிங்கள ராணுவம் எத்தகைய கொடூரங்களை புரிந்துள்ளது என்பதற்கான சாட்சி மாவீரன் பிரபாகரனின் 12 வயது சிறுவன் பாலச்சந்திரன்  மீது நடத்தப்பட்ட  திட்டமிட்ட படுக்கொலை.
 (சர்வதேசத்திற்கு இலங்கையே விசாரிக்க எத்தனை சாட்சியுங்கள் வேண்டும்..! )

பல ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் இதைப்போல படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தப்படம் சாட்சியாக விளங்குகிறது.
ஐ.நா மனித உரிமை ஆணைய சர்வதேச அளவில் விசாரணை குழுவை அமைத்து முழுமையாக விசாரித்தால் ஒழிய உண்மைகள் வெளிவராது என தெரிவிக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீத பிள்ளையின் கோரிக்கையை,இந்த மாதம் 25 ஆம் தேதி தொடக்கி மார்ச் மாதம் 22 நடக்க இருக்கிற ஐ.நா மனித உரிமை ஆணையம் ஆதரிக்க வேண்டும் .

இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழ பகுதிகளில் சுதத்திரமான பொதுக் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை நமது கோரிக்கை.

#பொதுமக்களை காக்கும் சர்வதேச விதிமுறைகளை இலங்கைக்காக உடைத்தெறிந்த அதிகாரிகளை கொண்ட ஐ.நா சபை இதை செய்யுமா ?? #


செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தமிழ் திரைப்படத்தின் குறுந்தகடை சென்னை மற்றும் புதுச்சேரியில் பெற இவர்களை தொடர்புக்கொள்ளுங்கள்... விழித்தெழு இளைஞர் இயக்கம்

#அண்ணல் அம்பேத்கர் (தமிழ்) திரைப்பட குறுந்தகடு#

MVI:- டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தமிழ் திரைப்படத்தின் குறுந்தகடை சென்னை மற்றும் புதுச்சேரியில்  பெற இவர்களை தொடர்புக்கொள்ளுங்கள்... /விழித்தெழு இளைஞர் இயக்கம்





















சென்னை:-

http://www.facebook.com/kayal.senthamarai?ref=ts&fref=ts
நிலவுமொழி செந்தாமரை

http://www.facebook.com/makizhnan.kayal?ref=ts&fref=ts
மகிழ்நன் பா.ம

http://www.facebook.com/joshuaisaac.tamizhmaravan?ref=ts&fref=ts
Joshua Isaac (தமிழ் மறவன்)

http://www.facebook.com/thirumurugan.gandhi?ref=ts&fref=ts
Thirumurugan Gandhi   

http://www.facebook.com/gowthamameena
Gowthama Meena

http://www.facebook.com/Vimaladhasan?ref=ts&fref=ts
விமல தாசன்

http://www.facebook.com/velicham?ref=ts&fref=ts
Velicham Manavarkal

http://www.facebook.com/lakshman.paraiyar
Lakshman Ambedkar

http://www.facebook.com/rajesh.manickam1?ref=ts&fref=ts
Rajesh Manickam
..............................................................................................................................................
http://www.facebook.com/BahujanSamajPartyTamilNadu
பகுஜன் சம்சா பார்ட்டி, தமிழ்நாடு  

http://www.facebook.com/pbkAPLF
புரட்சி பாரதம் கட்சி (Puratchi Bharatham Katchi)

http://www.facebook.com/dravidarvk?fref=ts
Dravidar Viduthalai Kazhagam

http://www.facebook.com/ciruthaigal?ref=ts&fref=ts
விடுதலை சிறுத்தைகள் 

தலித் முரசு அலுவலகம்
கீற்று ரமேஷ்
www.keetru.com
மே பதினேழு இயக்கம்
வெளிச்சம் மாணவர்கள்
அம்பேத்கர் .இன்
www.ambedkar.in

.........................................................................................................................................................
புதுச்சேரி(pondicherry)

திராவிடர் விடுதலை கழகம்
தலித் சேனா
முற்போக்கு ஜன சக்தி இயக்கம்
............................................................................................................................................................

அன்று (04-02-2013) சென்னை தி நகரில், திராவிடர் விடுதலைக் கழக நடத்திய  சாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தமிழ் திரைப்படத்தின் குறுந்தகடு எண்கள் இயக்க சார்பாக (விழித்தெழு இளைஞர் இயக்கம், மும்பை)  வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டின் மற்ற மாவட்ட தோழர்களுக்கு இவர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும்..(பெப்ரவரி 10க்குள் )

அண்ணல் அம்பேத்கரை வெறும் புத்தகங்களின் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள வேண்டி இருக்கும் சூழலில்.அண்ணலின்  திரைப்படகளை திரையிடல் வாயிலாக அண்ணலை பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்..
(அண்ணல் அம்பேத்கர் திரைப்பட குறுந்தகடை மாவட்டரிதியாக பெற்றுக்கொள்பவர்கள்.  
1.திருநெல்வேலி எம் எம் சி அம்பேத்கர்,

2.தென்காசி ரஜினி,

3.தூத்துக்குடி பிரபு,

4.வந்தவாசி பூங்குயில் டி வி ல் சிவகுமார்,

5.கோயம்புத்தூர்

 i.வழக்குரைஞர் காசி,
ii. சிவா,

6. சேலம்
i.முருகேஷ்,
ii.ரமேஷ்,
iii.செல்வா பாரதி
iv.பண்டிதர் அயோத்திதாசர் படிப்பகம்

7. தருமபுரி
i.பழனி,
ii. அம்பேத்கர் அம்பேத்,

8.தேனீ மதியவன்

9.மதுரை வினோத், கண்ணம்மா,

10.திருப்பூர் நீலவேந்தன்,

11. சென்னை
  i. தலித் முரசு
  ii. எழுத்தாளர் வே .மதிமாறன்,
iii.திராவிடர் கழகம்  .பிரின்ஸ்,
iv.விமலதாசன், அம்பேத்கர் இளைஞர் இயக்கம்
v.சென்னை விழித்தெழு இயக்கம் -- தோழர்,மகிழ்நன்,
vi.புத்தர் அறிவு உலகம்- தமிழ் மறையான்

12.அரக்கோணம் , வேலூர்
     பொன் அரசு
13.  திருவண்ணாமலை - கருணா , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

14. பெங்களூர் ரா.வினோத்,

15. பிரான்ஸ்- எழுத்தாளர், யமுனா ராஜேந்திரன்

16. கனடா – தோழர் ஈழ வேந்தன்


#மேலே குறிப்பிட நபர்களுக்கு குறுந்தகடை பிப்ரவரி முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்கிறோம் .குறிப்பிட பகுதியில் /அருகில் உள்ள தோழர்கள் .அவர்களே தொடர்பு கொள்ளுங்கள் (தொடர்பு எண் பிப்ரவரி 10க்கு  பின்னர் அறிவிப்போம்).)

மும்பையில் உள்ளவர்கள் எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் .

 
சிரிதரன்  09702481441, பன்னீர் செல்வம் 9867488167, தங்க பாண்டியன் 9821072848, பொன் தமிழ் செல்வன்  9768731133

Note:- Dr. Babasaheb Ambedkar DVD is not for sale. If anyone need Babsaheb (Tamil) Film DVD ,give us a blank DVD .we copy the film and provided/send  it to you
 (Pls contact us between 7pm to 11pm)






மேலும் தொடர்புக்கு
மும்பை, விழித்தெழு இளைஞர் இயக்கம்

சிரிதரன்  09702481441, பன்னீர் செல்வம் 9867488167, தங்க பாண்டியன் 9821072848, பொன் தமிழ் செல்வன்  9768731133